வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
-
"நிலவே என்னிடம்"~ கீபோர்ட் இன்னிசை விருந்தில் லண்டன் மாநகரில் என்னுடன் இணைந்து தபலா இசைத்து மகிழ்வித்த இளம் நல்கலைஞன்,ஜனன் சத்தியேந்திரன்!~மற்றும் நமது கலையுலக நண்பர்'ஆறுமுகம் ரவீந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
-
- 5 replies
- 936 views
-
-
இருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு… இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும் அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல். இதனை எழுதும்போது கூட…. சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான் ஆரம்பிக்கிறேன் இதனை. நினைவு தெரிந்த நாளிலிருந்து…. “…திரை இசை இத்தோடு முடிந்தது. மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு….” என்பதோடு என் வீட்டு வானொலியின் கழுத்து திருகப்பட்டு விடும். ஹம்சத்வதனியோ..கல்யாணியோ.. கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ… அணுவளவும் அறிந்ததில்லை நான். உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன். ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான். உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன். ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான். உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன…
-
- 0 replies
- 886 views
-
-
சூரியனோடு பேசுதல் இன்று காலை கனடாவி வாழும் கவிஞன் திருமாவளவனுடன் முகநூலுல் அளவளாவியபோது நேற்று உங்கள் கவிதை தொகுப்பு சூரியனோடு பேசுதல் கேட்டு செல்லத்துரை வந்தான். மீண்டும் அந்த தொகுப்பை வசித்தேன் என்றார். 29 வருடங்களுக்குப்பிறகு எனது முதல் தொகுப்பு இப்பவும் வாசிக்கப்படுகிறது என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நமக்கென்றொரு புல்வெளி எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. அது 1986ல் நான் கோவையில் தலைமறைவாய் இருந்தபோது என் பாதுகாப்புக் கருதி அவசரம் அவசரமாக அட்டைப் படமாக என் போட்டோவுடன்வெளியிடப் பட்ட தொகுப்பு. அதனை தோழர் ஜமுனா ராஜேந்திரனும் நண்பர்களும் வெளியிட்டார்கள். அது என் சுயபாதுகாப்புக்கான சரியான திட்டமிடலாக அமைந்தது. அது உமாமகேஸ்வரனோடு முரண்பாடுகள் முற்றி இரு…
-
- 2 replies
- 1k views
-
-
efc439d418dd0dd2db7f7b8cf4310a3a காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார். https://scontent-ord.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11038472_359598487572200_4554499654009845864_n.jpg?oh=7b6f75b48ca7a174fe9b999f55a9bfc1&oe=55C71C28
-
- 1 reply
- 928 views
-
-
வைரமுத்துவும் மாயச்சூழலும் வா. மணிகண்டன் புகழ் ஒரு மாயச் சூழல். இழுத்துக் கொண்டேயிருக்கும். யாராவது நம்மைக் கவனிக்கத் தொடங்கும் போதே ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். அதன் பிறகு அந்தப் புகழ் இன்னமும் பரவ வேண்டும் என மனம் விரும்புகிறது. அதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். அந்த வெளிச்சம் ஒரு போதை. போதை குறையும் போதெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதையெல்லாம் செய்ய வேண்டும் என கணக்குப் போட்டு அதன்படி காய்களை நகர்த்துகிறோம். மீண்டும் தாங்கிப்பிடித்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் ஒரு படி கீழே இறங்கவும் தயங்குவதில்லை. ஒரு படி இரண்டு படிகளாகி இரண்டு படிகள் என்பது மூன்று படிகளாகி எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கும் போதுதான் சந்தி சிரிக்கிறது. நமது பு…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஜெயகாந்தன் அஞ்சலி - ஆலமர்ந்த ஆசிரியன் ஜெயமோகன் 1991இல் நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்கள். நானும் சென்னை நண்பர்கள் சிலரும் ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். மடம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மூன்றாவது மாடிக்கொட்டகையில் ஜெயகாந்தன் வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே நால்வர் காத்திருந்தனர். சாம்பல் படிந்த பழைய நீண்ட மேஜைக்கு முன் ஜெகெ அமரும் பழைய மரநாற்காலி. அதில் அவரது பிரதிநிதி போல ஒரு பழைய துண்டு கிடந்தது. அவர் முந்தையநாள் போட்டுவிட்டு போனது. அங்கிருந்தவர்கள் அவரது இன்மையையே ஓர் இருப்பாக உணர்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் அமர்ந்துகொண்டோம். எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளவோ பேசவோ தோன்றவில்லை. ஜெயகாந்தன் மட்டும்தான் அங்கே முக்கியம…
-
- 0 replies
- 758 views
-
-
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதை களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராம கிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. இவரது சமீபத்திய நாவல் ‘சஞ்சாரம்’. நாவல், சிறுகதை, சினிமா, பத்திரிகை எழுத்து எனப் பல முகங்களைக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனிடம் ‘தி இந்து’ சித்திரை மலருக்காக நடத்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது இன்றுள்ள சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்… தமிழுக்கென ஒரு கதை சொல்லும் முறை இருக்கிறது. தமிழில் உள்ள அளவுக்கு வேறு…
-
- 0 replies
- 649 views
-
-
-
இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விரிவாக பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம் இந்த கருத்தை முன்வைத்தார். தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த மற்றும் எடுத்துவரும் அரசியல் கட்சிகளானாலும் சரி, ஆயுதக்குழுக்களானாலும் சரி, பெண்ணை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே கடந்தகாலத…
-
- 4 replies
- 844 views
-
-
“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை” -திருமாவளவன் நேர்காணல் & எழுத்து: கருணாகரன் இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை அனுசரிக்க வேண்டும் என்ற அவசியத்தைப் புறந்தள்ளியவை. ‘கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் எப்படி இடைவெ…
-
- 1 reply
- 2k views
-
-
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார். இந்த சிறு வயதிலேயே இவருக்கு இருக்கும் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிக்காவிடம் கொடுத்துள்ளார். சூர்யாவுடனான சந்திப்பின் பிறகு ஜெசிக்கா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியு…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜெஸ்ஸிகா ‘‘நம்முடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் பெற்றோர், ‘போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசை இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்கலாமா?’ என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பமாகத்தான் இதைக் கருதுகிறேன். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி இங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெஸ்ஸிகா. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியான இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 4’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள…
-
- 10 replies
- 1.8k views
-
-
விடிகாலை என்று கூட சொல்ல முடியாது ஒன்று அல்லது இரண்டு மணிக்கு என் கைப்பேசி சிணுங்குகின்றது. அடுத்த பக்கத்திலிருந்து அழைப்பது ஸ்ரீதர் என்று தெரிந்துவிடும் ஏனென்றால் இந்த இரண்டும் கெட்ட நேரத்தில் தொலைபேசி எடுப்பது அவராகத்தான் இருக்கும் என்பது என்அசைக்க முடியாத நம்பிக்கை.கைப்பேசியை எடுத்தால் ''டேய் கவிஞா தூங்குறியா? தூங்கப்போறியா? அல்லது என் போனுக்கு காத்திருக்கியா?" என அடுத்தடுத்து கேள்வியை கேட்டு விட்டு சிரித்துக்கொண்டிருப்பார்.நானும் இல்லை உடுப்பு துவைக்கப்போறேன்''என சொல்ல ''உனக்கு உடுப்பு துவைக்க நேரங்காலமே கிடையாதா? என என்னை கலாய்ப்பார். அந்த கலகலப்புக்கு பின் இலக்கியம் பேச ஆரம்பிப்போம்.அன்று தான் வாசித்த ஏதேனும் ஒரு நூ…
-
- 0 replies
- 1.8k views
-
-
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள் :- எஸ் எம் வரதராஜன் " ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணியை முன்னாடு.." என்று தாயகம் முதல் புலம்பெயர் தேசம் எங்கும் மேடைகளில் கம்பீரமாக ஆரம்பித்த அந்தக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது! நான் மட்டுமல்ல எனது வயதைச் சேர்ந்தவர்கள் பாடசாலை நாட்களில் வில்லிசையை இரசிக்கக் காரணமானவர் சின்னமணி. எண்கள் பாடசாலை நாட்களில் கோவில் திருவிழாக்களின் பொழுது நாதஸ்வரக் கச்சேரி தொடங்கிச் சிலநிமிடங்களில் உறங்கும் நாம் மேளச் சமா விறுவிறு ப்பாயிருந்தால் எழும்புவது வழக்கம். அல்லது சின்னமணி வந்தால் தான் உஷா ருடன் எழும்பியிருப்போம். எனது காலத்தில் நாம் ஒ…
-
- 2 replies
- 1.1k views
-
-
முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள் லெனின் மதிவானம் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் முக்கியமானவர்களில் ஒருவர் கே. கணேஷ் (1920-2004). முற்போக்கு எழுத்தாளர்களுள் சிரேஸ்டர் என வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர். பல்துறை சார்ந்த ஆற்றலும் பயிற்சியும், சிருஸ்டிகர ஆற்றலும் பெற்றவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களுள் கணேஷ்க்குத் தனியிடமுண்டு. இருப்பினும் அன்னாரின் பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் மதிப்பீடுகள் மிகவும் அருந்தலாகவே உள்ளன. அவ்வாறு வெளிவந்த மதிப்பீடுகள் கூட அறிமுகக் குறிப்புகளாகவே உள்ளன. இது ஒரு புறநிலைப்பட்ட உண்மை. எனினும் முற்போக்கு இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பை உணரத் தொடங்கியிருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்! ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்! ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு. குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே அன்பு! குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே இதயம்! குழந்தைகள் சொல்கின்றன: கடவுளுக்கு நன்றி கூறித் துதிப்போம்! குழந்தைகள் சொல்கின்றன: ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு. … நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான் (ஒரே இதயம்தான்) தனது சொந்த நம்பிக்கைகளைக் காத்துக்கொள்ள உலகையே காயப்படுத்திய நம்பிக்கையிழந்த பாவிக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கிறதா? … ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு ஆதியில் இருந்ததுபோலவே (ஒரே அன்புதான்!) இறுதியில் வருவதைப் போலவும்தான் (ஒரே இதயம்தான்!). சரிதானே! கடவுளுக்கு நன்றி…
-
- 1 reply
- 795 views
-
-
வாய் தவறிச் செல்லும் வார்த்தைகள் யோ. கர்ணன் கவிஞர் காசியானந்தனை தெரியாத தமிழர்கள் இந்தப் பூமிப்பந்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? அவரது பாடல்கள் மிக நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தும். அவரது பாடல்களினால் உணர்வு நரம்புகள் முறுக்கேறியபடி குளிர்தேசங்களில் எண்ணற்ற இளரத்தங்கள் இன்றும் கொதித்துக்கொண்டுமிருக்கலாம். காசியானந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஆரம்பத்தில் நான் மிகத் தீவிரமாக நம்பியிருந்தேன். ஒரு கையில் துப்பாக்கியும், மறு கையில் பேனாவும் உள்ளதாகவெல்லாம் அப்பாவியாக கற்பனை பண்ணிய காலங்களும் உண்டு. காசியண்ணை என்ற பெயரை உச்சரித்ததும் கண்கலங்கிய பல போராளிகளைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சமயத்திலும், காசியானந்தன் இயக்கமா, எங்கிர…
-
- 9 replies
- 1.4k views
-
-
காடோடி, உலகின் மிகப் பெரிய ஆதிக் காடுகளில் ஒன்றான போர்னியோ காட்டின் அழிவை, காட்டழிப்பின் அரசியலை அழுத்தமான குரலில் சொல்லும் நாவல். இந்த நாவலைப் படித்து முடிப்பவர்கள் ஒரே ஒரு மரத்தை வெட்ட நினைத்தாலும், அவர்களுடைய மனசு வலிக்கும். இந்நாவலை எழுதியுள்ள நன்னிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்ட இவருடைய முதல் நாவல் இது. கவிதை மொழியும் கதைக்கான கூறுகளும் கூடிவந்த புதுமையான சூழலியல் எழுத்து இவருடையது. மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படும் மறைநீர் (Virtual water) போன்ற சூழலியல் கருத்தாக்கங்களை பரவலாக்கியவர். காட்டழிப்பைப் பற்…
-
- 0 replies
- 1k views
-
-
தனிநாயகம் அடிகளார் & நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கு கிருஷ்ண பிரபு லயோலா கல்லூரியும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு என்ற முழுநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. அதனை முன்னிட்டுப் பல்வேறு அமர்வுகளில், தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழிக்கு ஆற்றிய அரும்பணிகளைக் குறிப்பிட்டுக் கல்விப்புலத்தில் இயங்கும் ஆய்வாளர்கள் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். “தனது முப்பதாவது வயதில் தமிழ் படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழ்மொழியின் செழுமைக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்ப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் தனிநாயகம் அடிகளார் பணிகளைச் சுட்டும் ஆளுமைச் சித்தி…
-
- 0 replies
- 957 views
-
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்பட…
-
-
- 19 replies
- 3.7k views
- 2 followers
-
-
எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை - யோ. கர்ணனுடனான நேர்காணல் இணையத்தின் மூலம் எனக்கு அறிமுகமான யோ கர்ணனை இந்த வருடத்தின் ஆரம்பகாலப் பகுதியில் நான் தாயகம் சென்ற பொழுது நேரிடையாகவே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான இவர், நேரடி சந்திப்பின் பின்பு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவராகிவிட்டார். இங்கிருந்து வெளியாகும் ஆக்காட்டி சஞ்சிகைக்கு ஓர் நேர்காணல் ஒன்று தரமுடியுமா ??என்று நான் கேட்ட பொழுது ,உங்களுக்கு இல்லாத நேர்காணலா என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். மின்னஞ்சல் மூலம், நான் அவரிடம் நடத்திய நேர்காணல். நேசமுடன் கோமகன் ************************************** யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது * மே 2012 தொறான்ரோ பயணத்தையொட்டி கனடா சுயாதீனத் திரைப்படக் கழகத்தின் செயல்பாட்டாளரான ரதன் என்னுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடலின் பதிவு * கடந்த பல வருடங்களாக ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றீர்கள். ஒரு சக தமிழன் என்பதற்கு அப்பால் உங்களைத் தூண்டியவை என்ன? குழந்தைப் பருவத்திலிருந்தே எனது வாழ்க்கைப் பின்னணி என்பது பல்கலாச்சார-பல்மத-பல்சாதியச் சூழலால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. எனது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். எனது தாய் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. எனது தாய்தான் எமது குடும்பத்தின் ஆதாரம். ஒரு குடும்பமாக நாங்கள் தெருவுக்கு வராமல் இருந்ததற்கு அவரது கடுமையான உழைப்ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் "வேலணை வாழ் வித்தகரே' என உயர்திரு சாலை இலந்திரயன் வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள் என் இளமைக் காலத்திலிருந்து இன்றும் ஒலிப்பதுண்டு... ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். நாம் அவர்பின் திரிந்து உதவி செய்ததும் இன்னும் நினைவுகளில் நிழலாடுகின்றன. சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும்…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன் ஈழத் தமிழ் இலக்கியத்தினதும் திறனாய்வினதும் அடையாளமாகக் கருதப்படுபவர் கைலாசபதி. மார்க்சியப் பார்வையில் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஒரு புறத்தில் சைவ சமய மரபுக்குள் முடங்கியும், மறுபுறத்தில் சாதிய அடையாளங்களுக்குள் அழைத்தும் வரப்பட்டுக்கொண்டுமிருந்த தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு மரபை அறிமுகப்படுத்தியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தர். கைலசபதி தொடர்பான குறித்துக்காட்டத்தக்க அறிமுகம் தென்னிந்தியவிலிருந்து கிடைப்பதற்கு இக்கட்டுரை துணை புரிகிறது. முனைவர் இளங்கோவனின் அறிமுகக் கட்டுரை தமிழ் இளைய சமூகத்திற்குக் கைலாசபதியை மீள அறிமுகம் செய்கிறது. கைலாசபதியின…
-
- 0 replies
- 895 views
-