Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. எனது மாமா முறையான கவிஞர் இ.முருகையனைப்பற்றிய சிறிய இரைமீட்டல் *********************************************************** யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் , யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமா…

  2. பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த ரமேஷ் எனும் ஈழத் தமிழர் சர்வதேச இசையில் சாதனை படைத்துள்ளார். அண்மையில் இவர் உருவாக்கிய பாடல் வீடியோ மிக பிரபலமடைய பல இசை பதிவுசெய்யும் நிறுவனங்கள் இவரை நாடி வருகின்ற போதிலும், பல தமிழ்க் கலைஞர்களை இணைத்து எஸ்,எம்,இ என்ற தனிப்பெயரில் தனி record label ஐ உருவாக்கியுள்ளார், பாடல் வெளியாகியதிலிருந்து இதுவரை யூடியூப்பில் 18000 ஹிட்டுகளை பெற்றுள்ளது. அப்பாடல் இதோ http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/1774-ramesh-every-time

    • 4 replies
    • 1.5k views
  3. திருமாவளவன். ஈழத்தின் வளம்பொருந்திய வருத்தலைவிளான் (வலிவடக்கு தெல்லிப்பளை) கிராமத்தின் மண்வாசனையோடுயுத்தம் கனடாவுக்கு தூக்கியெறிந்த ஒரு ஆளுமை. இடதுசாரித்துவ பின்னணியுடன் ஒரு நாடகக் கலைஞனாக கிராமத்தோடு இயைந்திருந்த அவரை கவிஞனாக்கியது புலப்பெயர்வு வாழ்க்கை. பனிவயல் உழவு, இருள்யாழி, அஃதே இரவு அஃதே பகல், முதுவேனில் பதிகம் என்ற நான்கு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், பத்தி எழுத்துகள், அரங்குசார் நிகழ்வுகள் எனத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். இவரின் இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ் அருணோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழையமாணவர். புலம்பெயர் வாழ்வின் துயரப்பொழிவினை ஊடுகடத்தும் கவிதைகள் அதிகம் இருந்தாலும் அவை மெல…

  4. நம்நாட்டு இசைக் கலைஞரான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் பத்மஸ்ரீ ஹரிஹரனோடு இணைந்து பாடியுள்ள 'அவள் ஒரு மெல்லிய பூங்காற்று.." என்ற பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்பாடலை கவிஞர் பா.விஜய் எழுதியுள்ளார். டாக்டர் ஸ்ரீரங்கநாதன் மற்றும் கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் புதல்வரான சாரங்கன் சிறந்த இசைக் கலைஞராகவும் பாடகராகவும் திகழ்கிறார். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=m0wPjWGCakY http://www.virakesari.lk/article/cinnews.php?vid=103

    • 4 replies
    • 1.2k views
  5. குறிப்பு: யாரையும் சேறு பூசும் நோக்கில் இதை நான் இங்கு இணைக்கவில்லை. சினிமா உலகில் இது எல்லாம் சகஜமே. மதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி வெளிவந்திருந்தது. அந்த செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்தான் இந்த கடிதத்தை எழுதத் தூண்டியது. இதிலென்ன அரசியல் இருக்கிறதென்று மற்றவர்களுக்கு தோன்றலாம். ஒரு கவிஞர் எந்த இசையமைப்பாளரோடும் பாடல் எழுதலாம் ஆனால் நீங்கள் யுவனோடு சேருவதை மட்டும் பூதாகரமான செய்தியாக்கியிருப்பதில்தான் இருக்கிறது உங்களி…

  6. இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:- சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து… பகுதி -1 25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும்,கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும்,சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ், பாரிஸ் ஆகிய நாடுகளிலும் யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. …

  7. உலகப்புகழ் பெற்ற Jazz piano வித்தகர் Oscar Peterson நேற்று சிறுநீரகம் செயலிழந்து தனது 82வது வயதில் கனடாவில் காலமானார்.

    • 3 replies
    • 2.6k views
  8. Started by anni lingam,

    1985 களில் யாழ் குடாவின் எல்லாப் பாகங்களிலும் அரங்கேறிய மக்களின் எதிரிகள் எனும் வீதி நாடகம் யாரால் ஏற்றப் பட்டது.அவர்கள் எங்கு இருக்கிறார்கள். ஏனெனில் என் மிகச் சிறிய வயதில் நான் பார்த்து வியந்தவற்றில் அவர்களின் நாடகம் ஆடும் முறை இன்று வரை என் கண்களில் உள்ளது.

  9. "வெட்டப்பட்ட நகங்களை விடுத்து விரல்களைப்பாதுகாப்போம்" நிந்தவூர்ஷிப்லி-தீபச்செல்வன் :சந்திப்பு ஈழத்தின் தென்கிழக்கு நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்கிறார். இதுவரை 3 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். 2002 இல் சொட்டும் மலர்கள் 2006இல் "விடியலின் விலாசம்" 2008 இல் "நிழல் தேடும் கால்கள்".2007 இல் "தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவசியம்" என்ற ஆய்வு தேசிய சமாதான பேரவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிறந்த ஆய்வுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

    • 3 replies
    • 2k views
  10. (படம்: ஆர். ஜெய்குமார்) உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன? காமம் என்றால் பிணம்கூட எழுந்து கொள்ளும் என்கிறார் பர்த்ருஹரி. காமத்தை விடவும் தீவிரமானது பசி. ஆக, பிற உயிர்களின் பசி ஆற்றுவதே எல்லையற்ற மகிழ்ச்சி. மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது? அச்சம் அறிந்ததில்லை. ஆனாலும் சிறை அச்சம் தருகிறது; காரணம், அங்கே ஏர் கண்டிஷனர் இருக்காதாம். நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை? பிரெஞ்சு எழுத்தாளர் மார்க்கி தெ சாத். ஒரு பிரபுவாக சுகபோகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர் தன்னையும், தன் வாழ்க்கையையும் பரிசோதனைக் களமாக்கி ஏராளமான பக்கங்களை எழுதினார். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்? தற்பெருமை அடித்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதை மிகவும் விரும…

  11. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார். இந்த சிறு வயதிலேயே இவருக்கு இருக்கும் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிக்காவிடம் கொடுத்துள்ளார். சூர்யாவுடனான சந்திப்பின் பிறகு ஜெசிக்கா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியு…

    • 3 replies
    • 1.2k views
  12. மோகன் ஆட்ஸ் வல்வையின் ஒரு சகாப்தம்…..! 1970 களில் வல்வெட்டித்துறையில் கையெழுத்துச் சஞ்சிகையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதில் தனது ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் வல்வை சனசமுக சேவா நிலையத்தின் வெளியீடாக சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட “அலை ஒளி” கையெழுத்துச் சஞ்சிகையும்இஅதன்பின்னர் அப்போதைய செயற் குழுவின் ஒத்துழைப்பின்மை காரணமாக அதனை நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளான நிலையில் திரு.சு.சக்திவடிவேல் அவர்கள் தனது சொந்த முயற்சியினால் “அருவி” என்ற அழகிய பல வர்ண கையெழுத்துச் சஞ்சிகையை உருவாக்கி வாசகர்களை ஊக்குவிப் பதற்காக அதனை கணபதி படிப்பக நிர்வாகிகளின் ஆதரவினால்இ தொடர்ச்சியாக சுமார் இரண்டு வருடங்கள் வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தில் வாசகர்…

    • 3 replies
    • 1.8k views
  13. இந்திய தேசம் துறந்த கலைஞன் : எம்.எப். ஹுசைன் - ஒரு வாழ்க்கைக் குறிப்பு - மோனிகா “இந்தியாவின் பிக்காஸோ” என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை ஈட்டியிருந்தாலும், இந்தியாவில் மரணத்தை எதிர்கொள்ளவோ, இந்திய மண்ணில் புதைக்கப்படவோ சாத்தியமாகவில்லை என்பது தேசிய அவமானத்திற்குரிய ஒரு விஷயம். நாஜிக்களின் காலத்தில் வால்டர் பெஞ்சமின், ஜார்ஜ் கிராஸ்ச், பெர்டோல்ட் பிரெக்ட் உட்பட்ட பல கலைஞர்களும், அறிஞர்களும் ஜெர்மனியைவிட்டு வெளியேற நேர்ந்ததை நாம் அறிவோம். பங்களாதேசத்தைவிடுத்து தஸ்லிமா நசுரீனும் வெளியேற்றப்பட்டு வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம். மத சகிப்புத்தன்மை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவிலும் ஒரு கலைஞன் நா…

  14. நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை! வணக்கம் உறவுகளே !! மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில் சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து விட்டு ரசிப்பேன் சின்னவயதில்! அப்போது இருந்து சந்தனமேடை ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் . இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன். வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது. அப்போது நான் பார்…

    • 3 replies
    • 930 views
  15. ஆத்தாதவன் செயல் July 10, 2019 ஷோபாசக்தி ‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல்’ என்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பழமொழி. கூத்தாடுபவர்களைக் கீழிறக்கி ஏளனமாக மதிப்பிடும் யாழ் சாதியச் சமூகத்தின் குறைப் பார்வையை இப்பழமொழி அறிவிக்கிறது. யாழில் கூத்துகளும் இசை நாடகங்களும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மீனவச் சாதியினரும் தலித்துகளுமே இந்தக் கலைகளைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள் . நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு ‘காக்கை வன்னியன்’ வேடம். அறிமுகக் காட்சியில் ‘ஈழமாமணி நாடு ஆளும் மன்னவ…

  16. இராவணனுக்கும் வரலாறு இருக்கு.. வாசுதேவன் நாயர் விகடனில் மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதியுள்ள மிக அற்புதமான கட்டுரை: பாலக்காடு மாவட்டத்தில் கூடலூரில் ஒரு எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது. வீடு எனக்குத் தடையில்லாத சுதந்திரம் தந்தது. மலையாள இலக்கியத்தில் வள்ளத்தோளும், செங்கம் புழாவும், எஸ்கே.பொற்றே காட்டின் எழுத்துக்களையும் நான் அப்பவே படிச்சுட்டேன். எட்டாவது படிக்கும் போது கதை, கவிதை, கட்டுரை என மூணு எழுதி வெவ்வேறு பெயர்களில் பத்திரிகைக்கு அனுப்பிச்சேன். மூணுமே பிரச்சுரம் ஆச்சு. எல்லோரும் ஆச்சர்யமாக பாத்தாங்க. விக்டோரியா கல்லூரியில் பிஎஸ்ஸி முடிச்சுட்டு, ஒரு டுடோரியலில் டீச்சரா இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அப்புறம் மாத்ரூ பூமி…

    • 3 replies
    • 2.6k views
  17. ‘விடை பெறுவது நடராஜ, சிவம், இந்தக் கம்பீரமான குரலைக் கேட்காத, சட்டென அடையாளம் காணாத இலங்கைத் தமிழனே இருக்க முடியாது. அவ்வளவுக்கு ஆழமான தனித்துவமான, ஆழமான, ‘பேஸ்’ குரல் அவருடையது. நேரில் பார்த்தால் குரலைப் போலத்தான் இளமையாக, தோற்றத்திலும் பேச்சிலுமாகத் தெரிகிறார் நடராஜ சிவம். இவர் குரல் வளம் கொண்ட அறிவிப்பாளர், வானொலித்துறை சார்ந்தவர் மட்டுமல்ல; நடிகர், கலைஞர் எனப்பல்வேறு முகங்கள் இவருடையது. இவர் இறுதியாக நடித்த காதல் கடிதம் திரைப்படம் தற்போது ஒளித்தட்டாக வந்திருக்கிறது. அதில் இவரது பண்பட்ட நடிப்பைக் காணலாம். 40 வருடங்களுக்கும் மேற்பட்ட வானொலி அனுபவங்களைக் கொண்டிருக்கும் இவர்தான் சூரியனின் உதயத்துக்கும் அது உச்சிக்கு போவதற்கும் பின்புலமாக நின்றவர். அது அஸ்தமிக்கலாம் என்றி…

    • 3 replies
    • 1.3k views
  18. "நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி வாடும் வயிற்றை என்ன செய்ய காற்றையள்ளித் தின்று விட்டு கையலம்பத் தண்ணீர் தேட...... பக்கத்திலே குழந்தை வந்து பசித்து நிற்குமே...- அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே.......... அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே.........." நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் …

    • 3 replies
    • 3.4k views
  19. அகவை தொண்ணூற்றி மூன்றில் டொமினிக் ஜீவா June 27, 2020 -கனடாவில் இருந்து எஸ்.பத்மநாதன் டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். “மல்லிகை” எனும் மாசிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். கம்யூனிஸ்ட் கட் சியின் மிக உன்னதமான பிரமுகரானதுடன், இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் பரிசினை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அப்பரிசினைப் பெற்ற பெருமைக்குரிய படைப்பாளி. அத்துடன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடு…

    • 3 replies
    • 1.5k views
  20. ‘ஆடுகள’த்தில் ஆடிய கவிஞர் ஜெயபாலன் தீபச்செல்வன் ‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி அடையாளப்படுத்தக்கூடிய பாத்திரம் ஒன்றில் ஜெயபாலன் நடித்திருக்கிறார் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. யார் இந்தப் பேட்டைக்காரன் என்கிற ஜெயபாலன் என்பதை ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974ஆம் ஆண்டில் அங்கம் வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். முதலாம் வருடத்திலேயே போ…

    • 3 replies
    • 1.8k views
  21. தமிழீழக்குயில் -- பார்வதி சிவபாதம் தமிழீழக்குயில் - பார்வதி சிவபாதம் வலைப்பதிவு செய்யத் தொடங்கிய போதே இதை எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன். எழுதத் தொடங்கிய சில நாட்களில் திருகோணமலை பற்றிய பதிவை எழுதத் தொடங்கி, அது தொடராக நீண்டதால் இந்தப்பதிவு தாமதமாயிற்று. ஆயினும் இதைப்போல் வேறு சில பதிவுகளும் எழுதுகின்ற எண்ணம் உண்டு. அதற்கான காரணம், எங்கள் கலைஞர்கள் குறித்த ஒர் அக்கறை அல்லது பெருமிதம் எனக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபலமான இளம் கர்நாடக இசைவித்தகி ஒருவரை, வானொலி நிகழ்சிக்காகச் செவ்விகண்டு கொண்டிருந்தேன். அப்போது, இலங்கைக்கலைஞர்கள் பற்றிய கருத்தாடல் வந்தபோது, இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர்கள் சிலர் பற்றி நான் குறிப்பிட்டேன். அந்தச் சந்தர…

    • 3 replies
    • 2.9k views
  22. அன்பான உறவுகளே இன்று ஒட்டுமொத்த தமிழினமும் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கும் நாள் . துயர வடுக்களோடு துன்பமான கணங்களோடு வாழ்ந்து வரும் நாம் சில காலங்களுக்கு முன் எம் உறவுகளாகிய முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரையும் நீதியை மறைத்து தூக்கிலிடப்போகும் செய்தி வெந்த புண்ணில் வேலாய் பாய துவண்டு நின்றோம் .ஆனால் நீதியை காக்க இறைவன் மனித வடிவில் வருவான் என்ற உண்மைக்கமைய ,வைக்கோ ஐயா மற்றும் எம் தொப்பிழ்கொடிகளின் முயற்சியால் நிரபராதி என்னும் உண்மையோடு விடுதலை செய்யப்பட உள்ளார்கள் ...............இறைவனுக்கு நன்றி . மேலும் இன்னுமொரு முக்கியமான விடயத்தை இங்கே குறிப்பிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் .....உண்மையில் முகப்புத்தகம் மூலம் கலையூடாக எனக்கு அறிமுகமாகிய கலை வெறி கொண்ட அற்புத…

  23. எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம் விக்கி 1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் …

    • 3 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.