விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர். வானொலி வர்ணனையால் புகழ் பெற்ற, அப்துல் ஜப்பாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி, ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, புகழ் பெற்ற அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81. சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் வானொலி வர்ணனையால் ஏராளமானோர் ஈர்க்கப்பட்டனர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், தமிழ்நாடு-கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டிக்கு வானொலியில் முதல் வர்ணனை செய்தார். 80-களில் அவரின் வர்ணனை புகழ்பெற்று திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தொலைகாட்சிகளிலும்…
-
- 8 replies
- 1.7k views
-
-
அணிகள் : ஹூஸ்ட்டன் ஆஸ்ரோஸ் மற்றும் வாசிங்கிடன் நஷனல்ஸ் முதல் நான்கு வெற்றிகளை பெரும் அணி சாம்பியனாகும் முதலாவது போட்டி , அரங்கு ஹூஸ்ட்டன்
-
- 8 replies
- 966 views
-
-
சீனாவில் இடம்பெற்ற “ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் 2019” போட்டியில் மலையக இளைஞர் மாதவன் ராஜகுமார் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். 53 வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பாங்கேற்ற நுவரெலியா கொண்டகளை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார். ஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவி செய்துவந்தனர். இந்நிலையில் தனது விடாமுயற்சியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்ட…
-
- 8 replies
- 971 views
-
-
2006 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலிய நகரான Turin இல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான ரசிகர்களுடன் பல நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்றனர். 84 நாடுகள் பங்கேற்கும் 20 தாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியான இது மாசித்திங்கள் 10 ம் திகதியில் இருந்து 26 வரை நடைபெற உள்ளது..! படங்கள் - பிபிசி.கொம்
-
- 8 replies
- 2.7k views
-
-
உண்மையான உலக சாம்பியன்கள் யார்? பொண்டிங்கின் கூற்றால் புதிய சர்ச்சை [29 - September - 2007] [Font Size - A - A - A] முதலாவது `ருவென்ரி-20' உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது பழைய கதை. இன்று தொடங்கவுள்ள ஏழு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நிஜ சாம்பியனை அடையாளம் காட்டும், என்று கூறி இந்தியாவை சீண்டிப் பார்க்கிறார் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங். இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று பெங்களூரில் நடக்கவுள்ளது. இந்திய வீரர்கள் `ருவென்ரி - 20' உலகக் கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில் உள்ளனர். இவர்கள் சொந்த மண்ணிலும் சாதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அவுஸ்தி…
-
- 8 replies
- 2.4k views
-
-
ஒலிம்பிக் குத்துச்சண்டை: அகில்குமார் போராடி வெற்றி! வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008( 18:21 IST ) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வெற்றியை இந்திய மக்களுக்கு சுதந்திர தினப் பரிசாக அளிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த இந்திய வீரர் அகில்குமார், இன்று உலக சாம்பியன் செர்ஜியை போராடி வென்றார். சற்றுமுன் நடந்து முடிந்த (இந்திய நேரப்படி மாலை 6 மணி) 54 கிலோ பான்டம்வெயிட் 2வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி வோடோப்யனோவ் உடன் மோதிய அகில்குமார் மொத்தமுள்ள 4 ரவுண்டுகளின் முடிவில் 9-9 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார். போட்டி நடுவர்களின் முடிவே வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற நிலையில், அகில்குமார் வெற்றி பெற்றதாக ந…
-
- 8 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் அடுத்த தலைவரை நியமிக்கும் முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகியிருப்பதற்கு இனவாதமே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய சிறிலங்கா அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, சிறிலங்கா அணியின் தலைவர் பதவியில் இருந்து குமார் சங்ககாரவும், அதையடுத்து அணியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து மகேல ஜெயவர்த்தனவும் விலகிக் கொண்டனர். இந்தநிலையில் புதிய அணித் தலைவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது அரவிந்த டி சில்வா தலைமையிலான சிறிலங்கா துடுப்பாட்டச் சபையின் தெரிவுக்குழுவும் பதவி விலகியது. சிறிலங்கா அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்றே தெரிவுக்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
பருந்தாகுது ஊர்க்குருவி; யாழ்ப்பாண அணிக்காக விளையாடும் விஜாஸ்காந்த்! லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் 11வது போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய விஜயகாந்த விஜாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார். 2001ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி பிறந்த விஜாஸ்காந்த் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சிறந்த வலது கை சுழல் பந்து வீச்சாளராவார். இந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த் விஜாஸ்காந்த், திசர பெரேரா தலைமையிலான யாழ்ப…
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கை அணியில் மீண்டும் சனத் [19 - May - 2008] இலங்கை அணியில் சனத் ஜெயசூரியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 38 வயதான ஜெயசூரியா இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவதையடுத்து ஜெயசூரியா மீண்டும் இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் 24 ஆம் திகதி பாகிஸ்தானில் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டி தொடங்குகிறது. thinakural.co…
-
- 8 replies
- 2.3k views
-
-
விமான டிக்கெட் எடுத்து வரலாம்... ஜாமீனில் வந்து உலக கோப்பையில் விளையாடும் வீரரை தெரியுமா? டாக்கா: உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி…
-
- 8 replies
- 1.3k views
-
-
-
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d'Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார். பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் இத்தாலியின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை முந்திக்கொண்டு இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் மட்டுமே 91 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் நடந்த வைபவத்தில் மெஸ்ஸியே விருதுக்குரியவர் என்பது அறிவிக்கப்பட்டது. பல்லோன் தோர் விருதை தொடர்ந்து நான்கு முறை வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையைய…
-
- 8 replies
- 663 views
-
-
வணக்கம் எல்லோருக்கும் ! பலருக்கு இது முகத்தைச் சுளிக்க வைக்கலாம், சிலருக்கு மகிழ்வாக இருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்ததை எழுதும் உரிமை எனக்கிருக்கிறதென்று நான் நம்புவதால் இதை எழுதுகிறேன். இன்றைய கிரிக்கெட் உலகில் பல வீரர்களைப் பார்க்கிறோம். எதிரணிப் பந்துவீச்சைத் துவசம் செய்து தனது அணியை வெற்றியை நோக்கிக் கொண்டுபோகும் தனிமனித செயல்களை அவ்வப்போது காண்கிறோம். அந்த துடுப்பாட்டக்காரர் மைதானத்திற்குள் நுழைந்தாலே ரசிகர்கள் கூச்சலிடுவதும், வர்ணனையாளர்கள் உசாராகிவிடுவதும், களத்தடுப்பாளர்களும், பந்து வீச்சாளர்களும் கலக்கமடைவதும் நடக்கிறது. இப்படியான ஒப்பற்ற வீரர்கள் ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியாவின் டேவிட் வோர…
-
- 8 replies
- 839 views
-
-
ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372617
-
- 8 replies
- 802 views
- 1 follower
-
-
4 பந்துகளில் 3 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்காவை மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் டெஸ்ட் அறிமுக போட்டியிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: ஏ.எஃப்.பி. சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கல் அறிமுகம் கண்ட முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப் படுத்தப்பட்ட…
-
- 8 replies
- 920 views
-
-
யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். புதனன்று நடைபெற்ற 15 வயத…
-
- 8 replies
- 1.9k views
-
-
பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச் செய்பாடானது கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. http://www.virakesari.lk/article/31697
-
- 8 replies
- 1.1k views
-
-
இந்திய ரி 20 அணி - அரையிறுதி தோல்விக்கு பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறலாம் By RAJEEBAN 11 NOV, 2022 | 12:36 PM இந்திய ரி20 அணி அடுத்த இரண்டு வருடங்களில் பாரிய மாற்றங்களை சந்திக்கும் ரோகித் சர்மா விராட்கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் ஓய்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மா விராட்கோலி அஸ்வின் போன்றவர்கள் மெல்ல மெல்ல அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்களை மேற்கோள்காட் டிதகவல்கள் வெளியாகியுள்ளன. தினேஸ் கார்த்திக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ரி20 போட்டிகளில் தங்களின் இறுதி போட்டிகளை விளையாடியுள்ளனர் பி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டார…
-
- 8 replies
- 338 views
- 1 follower
-
-
ராஹுல் திராவிட் – முடி துறந்த டெஸ்ட் சக்ரவர்த்தி சந்திரசேகரன் கிருஷ்ணன் உலகமே ராஹுல் திராவிடிலிருந்து சச்சினுக்குத் தாவிய பின்னர் திராவிடைப் பற்றி மீண்டும் பேசுகிறோம். அவசரகதியில் பல்லாயிரக்கணக்கான மைல் நீளமுள்ள சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் 5 அடிக்கு 5 அடி கேண்வாஸில் அரைமணி நேரமாய் ஒரே ஒரு கோடு வரைந்துக் கொண்டிருப்பவனை பைத்தியம் என்றுதான் சொல்லவேண்டும், வெள்ளையடிப்பதற்கும் ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால். அப்படிப் பலரின் விமர்சனங்களையும் வாங்கிக்கொண்டு பொறுமையாக வரைந்து முடித்து, ஓவியத்தை ஒரு அழியாச்சின்னமாக விட்டுச் சென்று இருக்கிறார் திராவிட். கிரிக்கெட்டே வண்ணமயமான ஒரு கோலாகலமாக ம…
-
- 8 replies
- 977 views
-
-
இறுதி போட்டியில் முழு கவனம்: ஜெர்மனி வீரர் குளோஸ் ரியோஜெனீரோ, ஜூலை.11– உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி வருகிற 13–ந்தேதி நடக்கிறது. இதில் 3 முறை சாம்பியன் ஜெர்மனி, 2 முறை சாம்பியன் அர்ஜென்டினா மோதுகின்றன. இறுதி ஆட்டம் குறித்து ஜெர்மனியின் முன்னணி வீரர் குளோஸ் கூறியதாவது:– பிரேசிலுக்கு எதிராக அரைஇறுதி போட்டியை மிகவும் ரசித்து விளையாடினோம். அதில் அபார வெற்றி பெற்றோம். ஆனால் அதையே நினைத்து கொண்டிருக்கவில்லை. 24 மணி நேரத்தில் மறந்து விட்டோம். தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராக இறுதிப்போட்டி மீதே முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதில் எங்களது திறன்களை காட்ட வேண்டியது அவசியம். உலக கோப்பையில் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்த பெருமையாக உள்ளது. இருந்தபோ…
-
- 8 replies
- 884 views
-
-
சிறந்த கால்பந்து வீரர் யார்? ரொனால்டோவை விட மெஸ்சி சிறந்த கால்பந்து வீரரெனத் தெரிவிக்கப்படுகிறது. கால்பந்து அரங்கில் முன்னணி வீரர்களாக வலம் வருபவர்கள் கிறிஸ்ரியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்), லியோனல் மெஸ்சி (ஆர்ஜென்ரினா), உலகின் தலை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை இருவரும் மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர். ஆனால் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ரொனால்டோவை விட மெஸ்சிக்கு தான் வரவேற்பு அதிகம் உள்ளது. இதற்கு காரணம் மைதானத்துக்கு வெளியே ரொனால்டோவின் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் தான். இது குறித்து பார்சிலோனா கிளப் அணி வீரரான டேனி ஆல்வ்ஸ் (பிரேசில்) கூறுகையில், "கிறிஸ்ரியானோ ரொனால்டோ திறமைமிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்தல்லை. ஆனால் இதன் அடி…
-
- 8 replies
- 1.9k views
-
-
இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி அமெரிக்காவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளன. இவ்விரு போட்டிகளும் புளோரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்டர்டேல் நகரிலுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30) மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதற்கு இச்சுற்றுப்போட்டி உதவி…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கை அணியின் தலைவராக இரு வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய மஹேல ஜெயவர்த்தன இரண்டாவதும் இறுதியுமான தடவையாகத் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார். இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னதாக மஹேல தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் தலைமையிலிருந்தும் விலகுவதாக இந்த இரண்டாம் முறை தலைமைப் பதவியை ஏற்கும்போதே மஹேல அறிவித்திருந்தார். தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலிலிருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும்…
-
- 8 replies
- 907 views
-
-
இன்றைய ஒரு நாள் தொடர் ஆட்டத்திலும் நியூசிலாந்திடம் நடப்பு உலக சம்பியன்கள் மண் கவ்வியுள்ளார்கள். இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 347 ஓட்டங்கள் குவித்திருந்தது. மனம் தளராத நியூசிலாந்து அணி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 49.3 ஓவர்களினல் 350 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஜானா
-
- 8 replies
- 1.6k views
-
-
ஒலிம்பிக்: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா-வரலாறும் படைத்தார் பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார். …
-
- 8 replies
- 2.4k views
-