Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. லெப் கேணல் நிறோஜன் பாலசுப்பிரமணியம் கிறிஸ்ணபாலன் யாழ்மாவட்டம் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி, இவன் சாதனைகளைப் பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் எனபது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால் அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனJ எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை …

  2. இன்று கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 16ம் ஆண்டு நினைவு நாள். 1990ம் ஆண்டு இதே நாளில் மாங்குளம் முகாம் தகர்ப்பில் வீரமரணம் அடைந்த கப்டன் போர்க்கிற்கும், மற்றைய 62 மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்

  3. கொட்டும் பனியிலும்..அங்கெ பசியால் வாடும் மக்களுக்காக உலகத்தின் பார்வையை திருப்ப வேண்டும் .. கொல்லப்படும் ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று தன்னை தானே ஆகுதியாக்கிய மானமறவன் வீரத்தமிழன் முருகதாசுக்கு என் வீர வணக்கங்கள் .. அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம் என சபதமெடுப்போம் இந்நாளில் ..

  4. நெல்சன் மண்டேலா அவர்கள் தனது 94வது வயதில் மரணமடைந்துள்ளதாக செய்தியொன்று தெரிவித்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். நெல்சன் மண்டேலா Nelson Mandela 2008 இல் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999 முன்னவர் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர் பதவியில் 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999 முன்னவர் அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அரசியல் கட்சி ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பிறப்பு 18 சூலை 1918 (அகவை 94) முவெசோ, தென்னாப்பிரிக்கா வாழ்க்கைத் துணை எவெலின் மாசே (1944–1957) வின்னி மண்டேலா (1957–1996) கிராசா மாச்செல் (1998–இன்று) இருப்பிடம் ஹூஸ்டன் எஸ்…

  5. திருமலை முன்னாள் எம்.பி. துரைரெட்ணசிங்கம் காலமானார் – கொரோனா பலியெடுத்தது 1 Views திருகோணமலையின் முன்னாள் எம் பி கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் , கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனே தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு மு…

  6. சென்னை பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இவர் தனது இசைப் பயணத்தை 12 வயதில் தொடங்கினார். தொடர்ந்து 68 ஆண்டுகளாக இசைப் பணியாற்றி வந்தார். வயலின் வாசிப்பதில் மேதையான இவரிடம் சீடர்களாகச் சேர பலரும் போட்டி போடுவர். Thanks to thinathanthi

  7. தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.

  8. வணக்கம்., நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர் நீத்தார். தமிழ்ச்சமூகப்போராளி தமிழீழச்செல்வன் வாழ்நாள் குறிப்புகள்தனது தொழிற்கல்வியை முடித்து விட்டு, தனது மாமாவுடன் சாதாரணமின்பழுதுபார்ப்பு பணியாளராக அனைவருக்கும் அறிமுகமானார். அப்போதுஅவருக்கு வயது 15. படிப்படியாக பெரியாரியலை கற்றார். திராவிடர் கழகத்தில்தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு, பெரியார் திராவிடர் கழகத்தின்களப்பணியாளராக மாறினார். 2004-ல் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைமுழக்க மாநாட்டின் மிக முக்கிய பங்காளராக ப…

  9. மதுரை: தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76. சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா. தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமண…

  10. அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்!… முருகபூபதி. கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன் தமிழக – இலங்கை – புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார் முருகபூபதி. “பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்.” எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும…

    • 1 reply
    • 1.2k views
  11. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார். உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்றிரவு காலமானார். கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. தற்போது 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார். அன்னாருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப் …

  12. உயர்தர கணித பேராசான் நல்லையா மாஸ்டர் காலமானார் பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா(பிறப்பு: 01/02/1945) அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று (26.04.2022) மாலை காலமானார். இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும், கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும், நல்லையா பவானி(மாவீரர் லெப்டினன்ட் நித்திலா வீரச்…

  13. மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார் 2023-04-12 09:23:48 இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், பி.பி.சி. , வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார். கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள். அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும் தனேந்திராவின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னார…

  14. தாயகக் கடலில் இறைமையை நிலைநாட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த 5 புலிகளுக்கும் என் வீரவணக்கம் :cry: ஈழவன்

  15. 17வது ஆண்டு நினைவுநாள் 07.02.2007 2ம் லெப்டினன் றேகன் (சிவபாலன் காரைநகர்) விடிவிற்காய் புறப்பட்டவீரவேங்கையே முடிவுதான் தமிழீழம் என முன்னேறிச் சென்றனையே பொடியாகும் நொடி வாழ்வு- அதனை பொன்னாக்கி நின்றனையே விடியும் தமிழீழம் அதில் வெற்றிச் சூரியனானாயே. நண்பர்கள்,களத்தில் நிற்கும் உனது சக வீரர்கள்

  16. பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியா…

  17. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார் சென்னை, புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். டாக்டர் ச…

  18. எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் பத்திரிகையுலகில் நுழைந்தார். தமிழில் உள்ள பிரபலப் பத்திரிகைகளில் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதை 1961ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் பத்திரிகையுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயண…

  19. தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு. சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான். மேலும், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறி…

  20. அஞ்சலி: ஆ. வேலுப்பிள்ளை (1936 - 2015) உறுதிகொண்ட நெஞ்சினர் எம்.ஏ. நுஃமான் தமிழறிஞர், பேராசிரியர் வேலுப்பிள்ளை இன்று நம்முடன் இல்லை. நவம்பர் முதலாம் தேதி அவர் காலமானார் என்ற செய்தியை அவரது மாணவர்களும் தமிழியல் ஆய்வாளர்களும் கவலையோடு எதிர்கொண்டனர். அவர் நெடுநாள் நோய்ப்படுக்கையில் இருக்கவில்லை. அமெரிக்காவில் சன் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள தனது வீட்டில் குளியலறையில் விழுந்ததனால் ஏற்பட்ட தலைக்காயம் அவரது மரணத்துக்குக் காரணம் எனத் தமிழ்நெற் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தவகையில் அது எதிர்பாராத திடீர் மரணம்தான். இறக்கும்போது அவருக்கு வயது 79. இன்னும் சில ஆண்டுகளாவது அவர் …

  21. தமிழீழ விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளில் ஒருவரான பல்லவன், அமுதாப் ஆகியோரின் புகைப்படங்கள் எங்கு எடுக்கலாம் அல்லது தங்களிடம் இருந்தால் தந்து உதவுங்கள்,

    • 1 reply
    • 1.1k views
  22. குட்டிமணியின் பாரியார் மரணத்திற்கு டெலோ இரங்கல் தெரிவித்தது! டெலோவின் அப்போதைய தலைவர் குட்டமணியின் பாரியார் மனைவி மரணச் செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் என டெலோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (05) விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயற்பட்டவர் குட்டிமணி. அவரின் பாரியார் இராசரூபராணியின் இயற்கை எய்திய துயரச் செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம். இவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும், கண்ண…

  23. சிறந்த நடிகனுக்குரிய இலக்கணம் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி 1928 அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். புராணக் கதைகளாலும் பாடல்களாலும் மட்டுமே நிரப்பப்பட்ட தமிழ் சினிமா சிவாஜி வந்த பிறகே புதுத் தோற்றம் கொண்டது எனலாம். நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், நம் குழுமத்தில் வெளியிட்ட மலர் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின் சில பகுதிகளை இங்கே உங்களுக்கு ஃப்ளாஷ்பேக் பொக்கேவாகத் தருகிறோம். * இதுவரைக்கும் உங்களுக்கு கிடைத்த விருதுகளிலேயே நீங்கள் பெரிதாக மதிக்கும் விருது எது? "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக கெய்ரோவில் (Afro-Asian Film Festival) அளிக்கப்பட்ட விருதைத்தான் நான் இன்றும் பெரிதாக மத…

    • 0 replies
    • 1.1k views
  24. உணர்ச்சிக் கவிஞர் காசியாணந்தன் அவரகளினால் இயற்றப்பட்டு, நேற்றைய தினம் காலமான உயர் திரு. ஜீவன் ஜோசப் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட பாடல் இது. 70களில் இலங்கை முழுவதும் மட்டக்களப்பின் பெருமையை பறைசாற்றி ஒலித்த பாடல் இது. காலமான ஜீவன் சேர் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. மட்டக்களப்பின் ஒரு மிகப் பெரிய அடையாளத்தை நாம் இழந்துவிட்டுள்ளோம். நன்றி.நிராஜ் டேவிட்

  25. மண்ணைவிட்டு விண்ணுற்ற வண்ணையெனும் மலரவனே வண்ணமலர்ப் பொன்னடியில் வெண்மலரை வைப்பதற்கு எண்ணரிய புண்ணியனே அம்மலரும் வாடுமெனக் கண்ணனைய எம்நெஞ்சைக் காணிக்கை ஆக்குகின்றோம் இந்துமா கடலின் முத்தாய் இலங்கிடு ஈழநாட்டில் சுந்தர வடிவுகொண்டே சுதந்திர தாகம் மேலாய் செந்தமிழ் வீரத்தோடு சிறந்திடு யாழ் மண்மீது விந்தை கொண்டிலங்கு மெங்கள் விழுமிய வண்ணைநகர் சரித்திரம் பலவுங் காட்டி செந்நெறி ஒழுகிநின்று பாரினில் கற்றோர்போற்ற பகர்பெரும் அறிஞனான அண்ணனாம் வண்ணையாரை அடியேனு மறிந்தவாறு கண்ணீரைச் சொரிந்துநின்று கழிவிரக்கச் சொன்மாலை சாற்றுதற்குப் பேறுபெற்று உலகமே மதித்த நின்னை கொண்ட நன்றிக் கடன் கூட்டுவிக்க வண்டுதாச் சொன்மலர்கள் கொண்டு ஆக்குகிறேன் நான் மனையறப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.