எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
Thanks http://potteakadai.blogspot.com/ ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள். கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம் தாய்நாடு... முல்லைத்தீவு, செல்வபுரம்
-
- 2 replies
- 481 views
-
-
-
- 1 reply
- 421 views
-
-
http://www.eelampress.com/files/video/sira...ppu_paarvai.wmv பதிவு இணையத்தில் இருந்து...! உலக போர் நிலைப்பாடுகள்.. தமிழர் தரப்புக்கான செய்திகள் ஆயுவுகள் எண்று அமர்களப்படுத்தி இருக்கிறார்கள்... புலம்பெயர்மக்களுக்கு முக்கியமான செய்தியா ஒண்றையும் சொல்லி உள்ளார்கள்... உலக நியதிக்கு ஏற்ப பாதையை வளைத்து செல்லலாமே தவிர இலக்கு என்பதை இடமாற்றி செல்ல வேண்டியதில்லை...!
-
- 6 replies
- 2k views
-
-
சுந்தர் அண்ணா, சுந்தர் அண்ணா பூனகரியை பிறப்பிடமாக கொண்டிருந்தவர், தொலைத்தொடர்பு திணைக்கள களஞ்சியப்பொறுப்பாளர். எந்நேரமும் புன்னைகையோடுதான் பிறரிடம் பேசுவார். 1983 - 1986 காலப்பகுதியில் சுந்தர் அண்ணாவின் வீடும் மோட்டார்சைக்கிளும் தளபதி கிட்டு உட்பட்டு சகல பொறுப்பாளர்களினாலும் பாவிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் சுந்தர் ஒரு சயனைட் கட்டாத சயனைட் கட்டியிராத ஒரு விடுதலைப்போராளியாகவே இருந்தார். 1986 ஏப்பிரல் மாதமளவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால் இயக்கவேலைகளில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்து வந்தாலும் பழைய தொடர்பில் வந்தோர்க்கு தேவையான உதவிகளை செய்து வந்தவரை அமைதி காக்க வந்த இந்தியப்படை கைது செய்து கோழைத்தனமாக கைகளை பின்னால் கட்டி சுட்டுக்கொலை செய்தது. சுந்தர் அண்ணா உங்களை…
-
- 3 replies
- 1.5k views
-
-
தேசியத் தலைவரின் சிறப்பு உரையினையும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்வையிட - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 19:31 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 16.00 - 22.00 மணிவரை ஆசியாவில் மட்டும் பார்வையிடலாம். PAS 12 at 45.0°E Freq - 11506 v Sr - 2894 Fec - 3/4 http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1
-
- 20 replies
- 5.6k views
-
-
சிங்கள பிரயாணிகளிடம் வடக்கு சிங்கள பௌத்தர்களது தான் என்றும் இப்படி பல பிரதேசங்களை தாம் அடையாம் கண்டு மீள அவற்றை கட்டி எழுப்பியுள்ளோம் என்றும் கூறும் கடற்படயினன். கடற்படைதான் அதனை கட்டி பிக்குமாரின்றி பராமரித்துவருவதாகவும் கூறும் இவர். வரலாற்று ரீதியில் வடக்கு எப்படி சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும் காலப்போக்கில் பௌத்த அடையாளங்களை முற்றிலும் தமிழர் அழித்துள்ளனர் என்றும் பிரயாணிகளுக்கு விரிவுரை நிகழ்த்துகிறார். பிரபாகரன் இருந்திருந்தால் சிங்களவர்களுக்கு இப்படி யாத்திரை வந்து தமது மதக் கடமைகளை செய்ய இயலாது போயிருக்கும் என்கிறார். https://www.facebook.com/video/video.php?v=10152839065631934&set=vb.151742781933&type=2&theater
-
- 1 reply
- 722 views
-
-
"மூன்று நூற்றாண்டுகள் சென்றன ஆயினும் அம்மா அம்மா உன்னுடைய மென்கழுற்றில் இன்னும் விலங்கு இன்னும் விலங்கு" 1985 இல் யாழ் பல்கலைக் கழக மாணவரின் "எங்கள் மண்ணும் இந்த நாட்களும் " என்ற கவிதா நிகழ்வு யாழ் குடா மண்ணின் பட்டி தொட்டியெங்கும் , அவர்களின் "மண் சுமந்த மேனியர்" நாடகத்துடன் மேடை ஏற்றப்பட்ட பொழுது அதனை முண்டியடித்துப் பார்த்தவர் பலர்.பார்க்காதவர் வெகு சிலரே. "இன்னும் எம் மக்களின் குருதி குருதி மண்ணை நனைக்கும்" செய்திகள் இன்றும் வரும்பொழுது- கவிஞர் சேரனின் காலத்தால் அழியாத அன்றைய அற்புத வரிகள் தாம் நினைவுக்கு வரும். இலங்கைத் தீவை ஆண்ட ஐரோப்பியர்களான போத்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆண்…
-
- 0 replies
- 2k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையின் சட்டரீதியான அந்தஸ்தை அடையாளப்படுத்திக் காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு 2002ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மை தொடர்பில் இருந்த சர்ச்சைக்கு அவ்வுடன் படிக்கையின் பலத்தை ஒப்புக்கொண்ட அடிப்படையில் சமீபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களையும் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உடன்படிக்கை நிஜமாகவே வலிதானது என்றும், அதன் 5 வருட இருப்புக்குப்…
-
- 0 replies
- 648 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டப்பட்டது. கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேர…
-
- 12 replies
- 7.7k views
-
-
இந்த கரும்புலி மறவரின் புகைப் படத்தை சிறு வயதிலே பார்த்து இருக்கிறேன் , நான் நினைத்தேன் இவர் எம் தேசத்தில் பிறந்து வளந்தார் என்று , தமிழ் நாட்டில் பிறந்து எம் போராட்டத்துக்கு நேரம் பார்த்து உயிர் தியாகம் செய்த இந்த கரும்புலி மறவனுக்கு( வீர வணக்கம் 🙏 😓 )
-
- 3 replies
- 2.3k views
- 1 follower
-
-
மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா. adminOctober 10, 2025 பாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் ஐந்து மாணவர்கள் வரை காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை பாடசாலை, பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகள் என ஓடிக்கொண்டே உள்ளனர். வீட்டுக்கு வந்தும் பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சிகள், கற்றல் நடவடிக்கைகள் என்று ஓய்வே இல்லாத ஒரு இயந்திரத்தை போல இயங்கிக் கொண்டே உள்ளனர். ஜாடி, கபடி, எல்லே, கிட்டி புல்லு, பல்லாங்குழி, எவடம் எவடம் புலியடி, கெத்தி போன்ற பல விளையாட்டுகளே இப்போது மறைந்து போன நிலையில், ஜாடி என்றால் என்ன? கபடி என்றால் என்ன? என்று வாய்மொழி ரீதியாக ஆய்வு செய்யும் புதிய தலை…
-
- 1 reply
- 409 views
-
-
1989 : 1990 : 1991 : 1992 : 1993 : 1994 : 1995 : 1996 : 1997 : 1998 : 1999 :
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் இன அழிப்பு பொது மக்களின் பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவத்தினரின் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அல்லல் படுகின்றனர். தினமும் மக்களின் இறப்பு அதிகரித்துகொண்டிருகிறது. விலங்கினங்கள் அழிக்கபடுவதை தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவை தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இலங்கையில் என்றுமில்லாதவாறு பட்டாசுகளும் இலங்கை தேசிய கொடியும் விற்பனை ஆகி உள்ளது, இவை எல்லாம் தமிழினம் அழிக்கபடுவதை கொண்டாடுவதற்காக சிங்கள மக்களால் உபயோகிக்கப்படுகிறது. பிணம் தின்னும் கழுக…
-
- 3 replies
- 3.9k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 104 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று காலை 5:30 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3:30 நிமிடம…
-
- 0 replies
- 965 views
-
-
மாவீரர் நினைவுகள் - கேணல் கிட்டு, திலீபன் என நிஜமான நாயகர்கள் இருந்த காலமது..! - ஜூட் பிரகாஷ் எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்சிய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை இயக்கம் ம…
-
- 0 replies
- 911 views
-
-
(மன்னிக்கவும் தமிழில் இதை மொழி பெயர்க்க முடியவில்ல. யாரவது முடிந்தால் செய்யுங்கள்.) Tamils Funding the Tamil Genocide Several Tamils have taken to the streets to protest against the Tamil genocide taking place in Sri Lanka. By UN account over 2500 people have been killed and over 7,000 people have been injured. The actual figure might be lot higher. Over 200,000 people have lost their home and all their belonging and are moving around as animals. Tamil expatriates are looking at ways to stop this. One of the place they have missed looking is into their own kitchen. The Srilankan government has spent over 1.6 Billion for this war. It is on its knees with IMF…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது. அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும் ஆதரவாக பொதுவாகக் குரல்கொடுத்து உன்னத மனிதாபிம…
-
- 0 replies
- 901 views
-
-
நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! – நவீனன் 37 Views (சென்றவாரத் தொடர்ச்சி) பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல் என்று பனடோலைப் போட்டுவிட்டு எனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். நாளாக நாளாக குறையவில்லை. என்னைப் பார்த்த பரதன் அண்ணா என்ன நவீனத்தார் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு சரியில்லையோ என்று கேட்டார். காய்ச்சல் போலிருக்கிறது என்றேன். வா ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்றார். இ…
-
- 0 replies
- 491 views
-
-
/////////அவசரம் அவசியம் படிக்கவும் பகிரவும் ///////// கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள் இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும். தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும். இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி த…
-
- 0 replies
- 1.4k views
-
-
புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து " இவன் தந்தை எந்நோற்றான் கொல் ' என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார் . தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார் . மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் . சிங்கள இராணுவம் , சிறப்பு அதிரடிப்படை , சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார் . அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும் . தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனி…
-
- 6 replies
- 570 views
-
-
இலங்கைக் கோட்டகள் பற்றிய தகவல்களை இணைப்பினூடாகக் காணலாம். குறிப்பாக யாழ் இராச்சிய காலத்து எச்சங்கள் தொடர்பாக யாராவது அறிந்திருக்கிறீர்களா? கீழுள்ள படத்தில் விபரங்களைக் காணலாம்.
-
- 0 replies
- 979 views
-
-
-
யாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு..! யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டது. நூலகத்தை சிங்கள காடையர்கள் எரித்த போது சாட்சியமாக இருந்த முதன்மை நூலகர் ரூபா நடராஜா தமது அனுபவங்களை தொகுத்து எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் கலாசார அடையாளமான தொன்மையின் சின்னமாக விளங்கியது யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம் அது.1933-ம் ஆண்டு முதல் மெது மெதுவாக உருவாக்கப்பட்டு தென்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=2] [size=4]பிரிட்டிஷார் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில் நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியத் தாவரங்கள் பற்றிய, குறிப்பாக கேரள தாவரங்கள் பற்றிய, தகவல்களைத் தொகுத்து ஹோர்டஸ் மலபாரிகஸ் என்ற 12 வால்யூம்கள் கொண்ட மிகப் பெரிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இந்தியத் தாவரங்கள் பற்றிய அந்தத் தகவல் திரட்டை உருவாக்க நான்கு இந்தியர்கள் பெரிதும் உதவினார்கள். அதில் மூவர் பிராமணர். ஒருவர் சூத்திர (ஈழவ) பிரிவைச் சேர்ந்தவரும் ஆயுர்வேதத்தில் சிறந்தவருமான அச்சுதன…
-
- 0 replies
- 905 views
-