எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
குருவிகளுக்காக அலைபேசி வசதிகளை நிராகரித்த புலிகளின் தலைவர். அலைபேசி வசதிகள் எல்லா மக்களுக்கும் கிடைக்கப் பெற தொலைபேசி கோபுரம் ஈழத்தின் பல பகுதிகளில் நிறுவுவதற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருந்த போது அதன் பலன்களைப் பற்றி அந்த நிறுவன பிரதிநிதிகள் மிகைப்படுத்தி விளக்கிய பிறகு தலைவரிடம் “உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்” என்றனர். அலைபேசி கோபுரத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குருவிகளின் கருவை சிதைக்கும் என அறிந்திருக்கின்றேன்.நீங்கள் நிறுவும் இந்த கருவியிலும் அது போல் ஏற்ப்படுமா என வினவினார் தேசியத் தலைவர். அதற்கு அவர்கள் ஆம் இதை தவிர்க்க முடியாது.எதிர் வருங்காலங்களில் வேண்டுமானால் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்திட கருவிகள் வரலாம் என…
-
- 26 replies
- 2.8k views
-
-
நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 1, 2015. 1992 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பதற்றமான நிலையில் யாழ் குடா இருந்தது.! அந்த நேரத்தில் எதிரி யாழ் குடாவை கைப்பற்றும் முயற்சியில் முழு மூச்சாக இருந்தான். அதற்கான தயார் படுத்தலில் விரைவு பட்டிருந்தான். அதற்கு வசதியாக தீவகமும் அவனது கட்டுபாட்டில் இருந்தமையால் அந்த நடவடிக்கைக்குச் சாதகமான நிலையில் எதிரி இருந்தான். அந்த கால கட்டத்தில் சேந்தான்குளம் ஊடாக முன்னேறுவது போல புலிகளை திசை திருப்ப எதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தான். அனால், எதிரி தீவகத்திலிருந்து கடல் நீரேரி ஊடாக நவாலியில் தரையிறங்கி யாழை கைப்பற்றத் திட்டமிட்டிருந்தான். … … எதிரியின் திட்டத்தை தலைவர் முன் கூட்டியே உணர்ந்து அரியாலையில் இருந்து அராளி, ந…
-
- 10 replies
- 2.1k views
-
-
ரொம்பத்தூரம் - கே .எஸ் .தமிழ்க்கவி பெண்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமை உண்டு வேலைக்குப் போகும் உரிமை உண்டு.சில இடங்களில் உயர் பதவிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இன்னும் ஏன் பெண் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்இஅவர்களுக்கு என்னகுறை என்ற குரல் பரவலாக பேசப்படுகிறது. கையிலே விலங்கிட்டு, நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்து தான் நினைத்ததைப் பேசவும் தனது கருத்தைச் சொல்லவும் பெண்களில் எத்தனைபேருக்கு சுதந்திரம் உள்ளது? அன்றாட வாழ்க்கையில் எல்லா பெண்களாலும் தாம் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறதா? வேலை செய்யும் இடங்களில், போக்குவரத்துக்களில், வீடுகளில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளில் எத்தனை சதவீதம்…
-
- 0 replies
- 502 views
-
-
சுன்னாகம் பிரதேச நிலத்தடிநீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக நிலத்தடிநீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்துள்ளது. தூய குடிநீருக்கான செயலணியின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக விளக்கமளித்த நிபுணர்குழுவின் பிரதிநிதிகள் அதன்பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நிபுணர்குழு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ஆய்வு நோக்கத்துக்காக சுன்னாகம் மின்நிலையத்தை மையப்படுத்தி எட…
-
- 1 reply
- 377 views
-
-
பேராசிரியர் தயா சோமசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெருந்தகையீர் வணக்கம், குடிநீர் கழிவு எண்ணெயால் மாசுபடுத்தப்பட்டதால் வலிகாமம் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையின் பேசப்படாத விடயங்களையும் பாதிப்புப் பற்றி மக்களுக்கு உண்மை நிலை தெரியப்படுத்தப்படாதுள்ள நிலையையும் “வடஇலங்கையில் நடந்தேறும் பெரிய அளவிலான சூழல் இடர்” என்ற தங்கள் கட்டுரை வெளிக் கொணர்ந்தது. இக்கட்டுரை 'கொழும்பு ரெலிகிறாவ்' இலும் (colombotelegrah.com) 'பூகோள தமிழ்ச் செய்திகளிலும்' (globaltamilnews.net) முழுமையாக வெளிவந்தது. பங்குனி 9, 2015 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் தினசரியிலும் பிரசுரமாகியிருந்தது. வலிகாமம் பகுதி மக்களில் அனேகர் கிணற்று நீரை மாசுபடுத்திவரும் கழிவு எண்ணெய் பா…
-
- 1 reply
- 643 views
-
-
யாழ் நிலத்தடி நீர் பாதுகாப்பு - ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாகுதல் அவசியம் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1. சுன்ணாக நிலத்தடி நீர் விசேடமாக பெரோலிய கழிவுகளாலும் பொதுவாக ஏனைய யாழ்குடா நாட்டு பகுதிகள்போல விவசாய ரசாயனங்களாலும் மனிதக் கழிவுகளாலும் மாசுபட்டுள்ளது. எனவே ஒருங்கினைந்த யாழ் நிலதடி நீர் பாதுகாப்பு செயல் திட்டத்தின் அவசர கவனிப்புகுரிய ஒரு பகுதியாகவே சுன்ணாகம் பெரோலிய மாசு கழைதல் பிரச்சினையை நோக்க வேண்டும். ஏனைய இடங்களிலும் குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வலி வடக்கில் சீமெந்து தொழிறசாலை மற்றும் இராணுவ முகாம் போன்றவர்றின் எண்ணைக் சேமிப்பு சார்ந்தும் இத்தகைய நிலத்தடி நீர் பெற்றோலிய பாதிப்புக்குள்ளான வட்டாரங்கள் உருவாகி இருக்க வாய்ப்புள்ளாது. யாழ் முழுவதிலும் நிலத்தடி நீர் …
-
- 2 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணத்துத் தமிழரின் தனித்துவமான பண்பாட்டுக்குறிகாட்டிகள் பலவாகும். அவற்றுள் தெருமூடிமடங்களும் ஒருவகையினதாகும். எம்மூதாதையரது மிகநீண்ட கால்நடைப்பயணங்களின் போதும், வண்டிப்பாரங்களின் இராப்பயணங்களின் போதும் இத்தெருமூடிமடங்கள் இளைப்பாறும் மையங்களாகவும், பசிநீக்கும் இராச்சிற்றுண்டி விடுதிகளாகவும், திருடர் தொல்லையிலிருந்து பயணிகளைக் காக்கும் காவலரண்களாகவும் தொழிற்பட்டிருந்தமையினைக் காண்கின்றோம். கடல்முகப்புத்தளங்களை மிகவும் நெருக்கமாகக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தீபகற்பத்தில் இத்தெருமூடிமடங்கள் அமைக்கப்பட்டதற்கான காரண-காரிய அடிப்படைகள் பல எம்மூதாதையரினால் வகுக்கப்பட்டிருந்தன. பாய்மரம் செலுத்தி திரைகடலோடி, பொருட்களை ஈட்டி வந்த திராவிடப்பெருங்குடி மக்களுக்கு கடல்முகப்புத்தளங்களி…
-
- 0 replies
- 866 views
-
-
https://www.youtube.com/watch?v=cDXjjiLiuKk#t=1876
-
- 13 replies
- 2.5k views
-
-
உலகமே வியந்து நோக்கும் வண்ணம் நேர்த்தியாக கட்டியெழுப்பப்பட்ட தமிழீழப் பெண்களின் வாழ்வு இன்று சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகிறது. தமிழீழப்பகுதியில் வாழ்கின்ற தமிழ்ப் பெண்கள் மட்டுமன்றி இலங்கைத் தீவெங்கும் வாழ்கின்ற தமிழ்ப் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்கள் பண்பாட்டுச்சீர்கேடுகள் கட்டாயக்கருகலைப்புகள் எனத் துயரங்களைத் தாங்கி நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள. தமிழீழப் பிரதேசத்தில் சிங்கள இராணுவம் பாடசாலைக்கு செல்லும் தமிழ் சிறுமிகளை கடத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள்போரின் போது தனது கணவன்மார்களை இழந்து குடும்ப சுமைகளை அவர்களே பொறுப்பேற்று நடத்த வ…
-
- 0 replies
- 470 views
-
-
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். …
-
- 22 replies
- 6.5k views
-
-
கடத்தப்பட்டவர்களின் உறவுகளும், துயர் வழிந்த கண்ணீரும். கோ.நாதன்:- 29 டிசம்பர் 2013 கடத்தல்,காணாமல் போகும் சம்பவங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாட்டில் கடத்தல்கள் இல்லை. யாரும் காணாமல் போகவில்லை என்று சொல்வதிற்கில்லை அது தொடர்ந்து ஒரு நிழல் போல நடந்து கொண்டு தான் இருக்கின்றது.கடத்தல்காரர்களின் நாடகம் பல கோணங்களில் பல வடிவங்களில் அரங்கேற்றப்பட்டுத் தான் இருக்கிறது . கடத்தல்காரர்களால் கடத்தல்,காணாமல் என்பது போர்க்காலங்களில் ஒரு மாயத்தோற்றத்தில் யுத்த சந்தேக நபர்களை கடத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் போராளிகளையும்,தமிழர்களையும் மட்டுமின்றி மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் சுட்டி…
-
- 1 reply
- 2.6k views
-
-
சுற்று சூழல் பேரழிவு பாரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வலிகாமத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வலிகாமத்தில் வாழும் 261,897 எண்ணிக்கையிலான மக்கள், தங்கள் நிலத்தடி நீர் எண்ணையால் மாசாகிக் கொண்டிருப்பதாக மெதுவாக உணர்ந்து வருகின்றனர். மின் மின்பிறப்பாக்க நிலையத்தை சுற்றியுள்ள 1.5km விட்டமான பிரதேசத்தில் 2013 – 2014 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளின் படி, பெருமளவிலான கிணறுகள் ( அண்ணளவாக 73%) எண்ணையால் மாசுபட்டு இருக்கின்றது. அதாவது ஏற்புடையதான அளவிலும் இது (1 mg/ L எண்ணெய்) மிதை மிஞ்சி உள்ளது. இதன் பின்னர் அந்த பகுதி மக்களின் அவதானிப்புக்களின் படி 4km விட்டத்திற்கு எண்ணெய் மாசு நிலத்தடி நீரில் பரவியிருப்பது புலனாகியிரு…
-
- 0 replies
- 982 views
-
-
அவை காடுகளல்ல… | 360 டிகிரி கோணத்தில் இடம்பெயர் முகாம், அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி, மக்கள் வாழ்ந்த இடம் இலங்கை அரசால் காடுகள் எனக் கூறப்படும் சம்பூர் மக்களின் நிலத்தில் காணப்படும் பொம்மை ஒன்று. “இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும் சேர்ந்தவர்கள்ன்ட முடிவு.” “மோடி வருவதனால தொடர்ந்து மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம். சிலவேளை மோடி அடிக்கல் நாட்டுவதாக இருந்தால் அன்றைய தினம் பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் முடிவுசெய்திருக்கிறோம்.” தாங்கள் வாக்களித்து தெரிவுசெய்த ‘மாற்றம்’ அரசின் மீதும், இதுவரை கா…
-
- 0 replies
- 641 views
-
-
அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்) யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும் இந்த ட்யூஷன்களுக்கே உண்டு. வேலாயுதம் அவர்களால் நடத்தப…
-
- 0 replies
- 854 views
-
-
ஒவ்வொரு பாடலிலும்… (யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுக் கூடங்கள்) (யாழ்ப்பாண வாழ்வியல் 90கள்) “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஓர் அழகானபாடலினை என்னவளே திரைப்படத்திற்காக எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுத உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். சற்று நினைத்துப்பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்விற்காக பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்துபோன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம்சரமாக ஒன்றுடன்ஒன்று தொடுத்து வருவதை காணமுடியும். …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் நடந்த பாலியல் வன்முறைகளின் சாட்சியங்கள்... 8fc349503f6878fcee18db59d5ae6f81
-
- 0 replies
- 677 views
-
-
என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது. தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சே…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. - ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரிய…
-
- 27 replies
- 4.7k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு என்ற 'மரகத் தீவு' - Emerald Island:- எமது வரலாற்றோடு பல வழிகளிலும் தொடர்புபட்ட இப் பசுந்தீவினை நம்மில் பலர் இன்னுமே அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமே! இதனை பார்த்துவிட்டு உங்களின் பெறுமதியான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களென நம்புகின்றோம்....... நன்றி... ஆவணப் படக் குழுவினர்... http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116930/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 578 views
-
-
நேரடி ரிப்போர்ட் ஜெரா நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது காலம். என் அயல்வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்த பட்டாசுச் சத்தங்கள் உழவர் திருநாளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. மிகுந்த கோலாகலத்துடன் சூரியனை வரவேற்றுக்கொண்டிருந்தனர் மக்கள். நான் பேஸ்புக்கில் கடும்பிசி. அப்போதுதான், 077705……. என்று ஆரம்பிக்கும் என் தொலைபேசியில் பதிவிடப்படாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு. பிறகென்ன வாழ்த்துச்சொல்ல தொடங்கீட்டாங்கள், நினைத்துக்கொண்டே, “ஹலோ”.. “நான் மாலினி, நினைவிருக்கா உங்களுக்கு”.. “எந்த மாலினி……….” என்று வசனத்தை இழுத்துக் கொண்டிருந்த இடைவெளியில் அந்தக் குரலை இதற்கு முதல் எங்கே கேட்டேன் என்பதை நினைவுக்குள் கொண்டுவர முயற்சித்தேன். “ஆ என்னோட பள்ளிக்கூடத்தில படிச்ச மாலினி தானே“ – முயற்சி…
-
- 2 replies
- 582 views
-
-
பார்வதி், பார்வதிப் பிள்ளை, பார்வதி அம்மா, அண்ணையின் அம்மா, அன்னை, இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது. 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மா…
-
- 3 replies
- 482 views
-
-
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன். அவர்களின…
-
- 8 replies
- 858 views
-
-
(சிறப்புத்தொடர் – களத்திலிருந்து ஜெரா) இலங்கையின் வரலாறு மங்கலாகத் தெரிய தொடங்கிய காலத்திலிருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் கொடிய போர் எதற்கானதெனில், நிலத்துக்கானது. ஆனால் அந்த முற்றுப் புள்ளியிலிருந்து ஆரம்பமாகியது இன்னொரு போர். இது நிலத்துக்கானதல்ல. அதனையும் தாண்டியது. அன்று கொல்லும் போரை மீறி எழுந்த நின்று கொல்லும் போர் இது. ஆம், தமிழர் வாழும் பகுதிகளில் இயற்கை நிலைகள் மீது வைக்கப்பட்டிருக்கிறது குறி. நீண்ட போர்ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்ற நிலத்தில் அள்ள அள்ளக் குறையும் இயற்கை வளங்கள் மனிதக் கை படாமலேயே இருந்தன. அதில் மணல் முதன்மையானது. அபிவிருத்திக்கான சூழலை உருவாக்குவதில் மணலின் பங்கு ப…
-
- 0 replies
- 636 views
-
-
விசேட ஆக்கம் ஜெரா) “நீங்களும் மரண சான்றிதழ் கொண்டு வந்தீங்களெண்டால் உங்களைக் கொன்றுபோட்டிடுவம்”, என மிரட்டி வழியனுப்புதல் தருகிறார் 20 வயதைத் தொடும் சகோதரி. “செத்துப்போகத் துணிஞ்சிற்றன்,” தன் வாழ்வின் இறுதிமுடிவை அறிவித்து வழியனுப்பிவைக்கிறார் ஒரு தாய். இந்த வசனங்களின் முடிவுபோலவே போராடிக் களைத்துப் போன அவர்களின் முகங்களிலும் மிஞ்சியிருப்பது கோபமும், விரக்தியும்தான். “2008 ஆம் ஆண்டு என்ர மகன என்ர கண்ணுக்கு முன்னாலதான் பறிகொடுத்தன். எட்டு ஆமிக்காரர், 4 பீல்ட் பைக்ல வந்து பிடிச்சவங்கள். யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னுக்குள்ள இடத்தில கூலி வேலைதான் செய்துகொண்டிருந்தவன். நான் மதியம்போல சாப்பாடு கொண்டுபோயிருந்தன். சாப்பாட்ட குடுத்திட்டு, பிஸ்கட் வாங்க முன்னுக்குள்ள கடை…
-
- 1 reply
- 783 views
-
-
அண்மையில் இலங்கை சென்று வந்தவரின் பார்வையில் இருந்து தமிழரின் இந்த பிடிவாதம் - தமிழர் பகுதி முழுவதையும் சிங்களவர் கலந்த பகுதியாக மாற்றும். இன்னும் 10 - 15 ஆண்டுகளுக்குள் அந்த மாற்றத்தை அனுபவிக்க வேண்டி வரும். நான் வடக்கு பகுதிகளில் பயணித்த போது பார்த்த பல விடயங்களில் இருந்து அதைச் சொல்கிறேன். இராணுவத்தில் இருந்த பலர் தமிழ் பெண்களை மணம் செய்து வாழ்கிறார்கள். அங்கே தமிழ் ஆண்களின் விகிதாசாரம் குறைவாக காண முடிகிறது. புலத்தில் இருந்து மணமுடிக்கப் போவோர் கூட அழகான - இளம் பெண்களையே திருமணம் செய்து விட்டு வருகிறார்கள். (அழைத்து வருவது பின்னர்தானே!) அங்கே ஏகப்பட்ட பெண்கள் விதவைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு யாரும் வாழ்வு கொடுக்க முன் வருவதும் இல்லை. அவர்கள் வாழ்…
-
- 2 replies
- 1.4k views
-