அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
#தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நி…
-
- 1 reply
- 1.4k views
-
-
உலகில் விமானப்படைக் கொண்ட ஒரே இயக்கம் களமிறங்கியது, ‘வான்புலி’ப் படை விடுதலைப்புலிகளின் விமானப்படை ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கி விட்டது. மார்ச் 26, 2007 - தமிழின வரலாற்றில், நீங்கா இடம்பெற்ற நாளாகும். உலகிலேயே எந்த ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலை இயக்கமும் விமானப்படையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் மட்டுமே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே தரைப்படையும், கடல்படையும் தம்மிடம் கொண்டுள்ள விடுதலைப்புலிகள் இப்போது ‘வான்புலி’களையும் களத்தில் இறங்கியிருப்பது சிங்களப் பேரினவாத ஆட்சியை நிலை குலையச் செய்து விட்டது. உலகமும், வியந்து பார்க்கிறது. வன்னியிலிருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு போர் விமானங்கள், கொழும்பிலிருந்து 23 கிலோ மீட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தென்னிலங்கை அரசுக்கு தேன்னிலவு அமெரிக்காவுடனா, அல்லது இந்தியாவுடன்தானா ? சில வாரங்களாகச் சேது சமுத்திரத்திட்டம் பற்றி, பலர் பேசுவதையும், எழுதுவதையும் வாசகர் எல்லோரும் அறிந்ததே. பல ஊடகங்களும், ஆய்வு அமைப்புக்களும்;, சேது சமுத்திர திட்டத்தின் வரலாறு பற்றியும்@ பௌதீக, சூழல், காலநிலை மாற்றங்கள் பற்றியும்;@ மற்றும் பொருளாதார, அரசியல் தாக்கங்கள் பற்றியும் பலவித, ஆய்வுகளையும,; கட்டுரைகளையும் எழுதியுள்ளன, நடாத்தியுள்ளன. அதுமட்டுமல்ல. அறிஞர்கள் என்று சொல்லப்படுவர்கள் பலரும், கருத்தரங்குகளை நடாத்தியும், 'சுஎஸ்" (ளுரநண) கால்வாய் போன்ற கடல் இணைப்புத் திட்டங்களோடு இதை ஒப்பிட்டும், எதிர் காலத்தில் தமிழ்த் தேசம் அனுபவிக்கப்போகும் அனுகூலங்கள் பற்றியும் எதிர்கூறல்களையும் செய்…
-
- 2 replies
- 1.4k views
-
-
நடுக்கடலில் நாதியற்று ஒரு இனம் – எஸ்.ஜே.பிரசாத் (சிறப்பு கட்டுரை) 2015 ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை போட்டார்கள் ஆனால் எங்கு போவது… தெரியாது! ஒரு இனம்… நடுக்கடலில் நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. யாரும் அவர்களை கவனிப்பதாக இல்லை… அவர்களை ரோஹிங்யாக்கள் என்கிறார்கள். ஆம்… மியன்மாரில் ஒரு இனத்துக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தக் கூட்டம் படகுகள் ஏறி புறப்பட்டது… ஆனால் எங்கு போவதென்று அவர்களுக்கு தெரியாது. எங்கேயாவது போவோம் தப்ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம் February 11, 2024 — டி.பி.எஸ்.ஜெயராஜ் — கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார். தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட…
-
-
- 8 replies
- 1.4k views
-
-
மூக்குடைபட்ட ‘எழுக தமிழ்’ கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, மு.ப. 11:48 தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஆறு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (16) ‘எழுக தமிழ்’ நிகழ்வு நடத்தப்பட்டு இருக்கிறது. மூன்றாவது தடவையாக, நடந்திருக்கிறது இந்த நிகழ்வு. தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பங்காளியாக இருந்த, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதல் இரண்டு தடவைகளும், இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில், முதுகெலும்பாக இருந்தது. அப்போது, ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தமக்கு எதிரான பேரணியாகப் பார்த்து, அதைத் தோற்கடிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்றது. ஆனால், இந்தமுறை நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. …
-
- 5 replies
- 1.4k views
-
-
ஜே.வி.பி.யும் தேசிய இனப்பிரச்சினையும் வீரகத்தி தனபாலசிங்கம் (எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர்) ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி)யின் கொள்கை பரப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு ஆங்கில தினசரியொன்றுக்கு அளித்திருந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அவரது கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தன. அதுவும் குறிப்பாக அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் இக்கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாகின்றன. இனப்பிரச்சினைக்கான காரணங்கள் …
-
- 1 reply
- 1.4k views
-
-
'மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் -1' இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை. இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேல…
-
- 0 replies
- 1.4k views
-
-
பின்லாந்தின் கதை.. பின்லாந்து மீது என் கவனம் முதலில் ஈர்க்கப் பட்டது 90 களில் ஈழத்தமிழ் எழுத்தாளரான உதயணன் அவர்களால் பின்லாந்தின் கலேவலா என்ற காவியம் தமிழுக்கு முதன் முதலாக மொழி பெயர்க்கப் பட்ட செய்தியைப் பார்த்த போது தான். சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே, இரு பெரும் குண்டர்களின் நடுவே நெருக்குவாரப் பட்டு பஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கும் பயணி போல இருக்கும் ஒரு ஸ்கண்டினேவிய தேசமாக பின்லாந்து இருக்கிறது. மேற்கில் சுவீடன், மற்றும் பொத்னியா வளைகுடா வடக்கில் கொஞ்சம் நோர்வேயின் நிலப்பகுதியோடு பரன்ற்ஸ் கடல் பகுதி கிழக்கில் இராட்சத ரஷ்யா, தெற்கில் பால்ரிக் கடல் என்று உலக வரலாற்றில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தில் இருக்கும் பின்லாந்தின் கதை தனி…
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கையை நடத்துகிறது இராணுவம் 1958 ஜுன் மாதம் 3ம் தேதி இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவின் வாயிலிருந்து ஒரு உண்மை வெளிவந்தது. 1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டம் வந்தபின் தமிழ்ப் பிரதேசமெங்கும் கொந்தளிப்பில் இருந்தது. 1936-ல் பண்டாரநாயகாவுக்கு கூட்டாட்சிக் கொள்கை பற்றி தெளிவான கருத்து இருந்தது. கூட்டாட்சி அமைப்பு பற்றி அப்போது அவரின் பேச்சுக்களும் எழுத்துக்களும்தான் இப்போது தமிழ் அரசியல்வாதிகள் கூட்டாட்சிக் கோருவதற்குக் காரணம் என்று தமிழ்த் தலைவர்களில் ஒருவரான வி.நவரத்தினம் சுட்டிக் காட்டினார். S_W_R_D_Bandaranayaka”அச்சமயத்தில் அது எனது கருத்தாக இருந்தது. இப்போது 1956-ம் ஆண்டுத் தேர்தலில் மக்களின் ஆணையை நிறைவேற்ற வேண்டுமே” பண்டாரநாயகா பதில் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள் மட்டக்களப்பு மாநகர கழிவகற்றல் முகாமைத்துவமும் திருப்பெருந்துறை கிராமத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் - ஒரு நேரடி றிப்போர்ட் “....... கொக்கட்டி மரத்துக்குக் கீழே முனிவர் ஒருவர் தவமிருந்தவராம். முனிவருக்கு யாரோ தீங்கு செய்ததாகவும், அந்த முனிவர சாபக்கேடால ‘கோதாவாரி’ என்று சொல்கின்ற அம்மைநோய் வந்து, கனக்கப்பேர் செத்து, குடிக்கத்தண்ணி இல்லாமல் ஆக்கப்பட்டு, எல்லாரும் திருவெந்தியன் மேடு, கல்லடித்தெரு, சிங்களவாடி- போய் குடியேறினதாக சரித்திரம் இருக்கிறது”. “இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு, மூன்று தினப் பூசையும் இல்லாமல் திருப்பெரும்துறை என்ற கிராமமே காடாகிப் போயிற்று; இதற்குரிய ஆதாரம் இ…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசும்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தங்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் மெய்மறந்திருந்த காலத்தில் சம்பந்தனுக்கு இந்தியாவின் நினைவு எழவில்லை. கடந்த ஜந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியில் கிட்டத்தட்ட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே சம்பந்தனும் அவரது சகாக்களும் மறந்;திருந்தனர். புதுடில்லிக்குச் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! 1956: (10) – என்.சரவணன் Bharati பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் …
-
- 1 reply
- 1.4k views
-
-
https://vettivel.medium.com/tamil-diaspora-representation-303feb9dd664 பன்னிரண்டு வருடத்தின் பின் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் நிலையும் தமிழரின் பிரதிநிதிகள் யார் எனும் கேள்விக்கு விடை காண்பதுவும் இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரையில் வெளி தரவுகளை அறிய கட்டுரையில் உள்ள இணைப்புகளை அழுத்தவும். புலம் பெயர் தமிழ் அமைப்புகளில் எவை பிரதிநிதிகள் தகுதி இழந்தவை என்பதையும் எப்படியான பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் தேவையானது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது. September 22, 2021 அன்று ஐநாவில் 76ம் அமர்வில் சிறிலங்கா தாம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மறுப்பதாக அறிவித்திருந்தது. இது வரை பல ஆயிரம் சாட்சியங்கள் இருந்தும் ஒரு சிறிலங்க…
-
- 13 replies
- 1.4k views
-
-
‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:40 மூன்றாவது ‘எழுக தமிழ்’ப் பேரணி, திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ‘எழுக தமிழ்’ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை மக்களின் பங்கேற்பு என்பது, கணிசமாகக் குறைந்திருக்கின்றது. ஓர் அரசியல் கட்சி, தன்னுடைய கூட்டங்களுக்குத் தொண்டர்களைத் திரட்டுவதற்கும், எழுச்சிப் போராட்டங்களில் மக்களைப் பங்கேற்க வைப்பதற்கும் இடையில், நிறைய வித்தியாசங்கள் உண்டு. அரசியல் கட்சியின் தொண்டர்களுக்கு, கட்சி நலன் மாத்திரமல்ல, தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த சுயநல விடயங்களும் முக்கியம் பெறும். அதன்சார்பில், கட்சிக் கூட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் துரோகங்கள் ஈழத்தமிழர்களுக்கு நன்றாகப்புரியும். இப்ப சீனாவைக்காட்டி தமிழர்களைப்ப் பேய்க்காட்ட வேண்டாம். இந்தியாவின் தவறான வெளியுறவுக்கொள்கையின் தோல்வியே இன்றைய சீனாவின் சுற்றிவளைப்பு. புலிகள் இருந்தவரையில் இலங்கை இந்தியக்கடற்பரப்பில் சீனாவே,அமெரிக்காவோ யாரும் உள்நுழைய முடியவில்லை. புலிகளை அழித்து தனக்குத்தானே மண்ணை அள்ளிப்போட்டது.இந்தியா. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் தோல்வி இந்தயாவைச்சுற்றியுள்ள நாடுகளை இந்தியாவுக்கு பகைநாடுகளாக்கி வைத்திருக்கின்றன.இந்தியா வேடம் பேட வேண்டாம். இநதியாவின் வெளியுறவுக்கொள்கையை மற்றாகக் கலைத்து மலைiயாளிகளை வெளியேற்றி தமிழர்களை வெளியுறவுத்துறைக்கு புதுஇரத்தம் பாய்ச்ச வேண்டும்.
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
அகதி தஞ்சம் கோரும் இலங்கை தமிழர்கள் தஞ்சம் மறுக்கப்பட்டும் பயண வழியில் சிக்கியும் அவதியுறும் தமிழ் அகதிகளின் அவலம் ‘வீரகேசரி’ வாசகர்களுக்காக விசேடமாக எழுதப்பட்ட இந்த ஆய்வில், தஞ்சம் கோரும் நோக்குடன் புறப்பட்டு, வேண்டிய நாட்டிற்குப் போய்ச்சேர முடியாமல் இடை வழிகளில் சிக்குண்டு அவலத்தில் வாழும் பல ஆயிரம் தமிழ் அகதிகள் பற்றியும் பல நாடுகளில் அகதி தஞ்சம் கோரி மறுக்கப்பட்ட நிலையிலும் வாழும் தமிழர்கள் நிலை பற்றியும் சர்வதேச சட்டங்களின்படி எவ்வாறு தஞ்சம் கோருவது என்பது பற்றியும் இலங்கைத் தமிழ் அகதிகள் தற்போது தஞ்சம் கோரிச்செல்லும் முக்கிய நாடான அவுஸ்திரேலியா பற்றியும் மற்றைய நாடுகளில் தஞ்சம் பற்றியும், …
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=4]பிரபாகரன் மானத்தை இழந்து உயிரைக்காக்கும் ஒருவரல்ல..[/size] [size=4]நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்கெய்ம் பீ.பீ.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் முடிவுகள் மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.[/size] [size=4]போரில் தோல்வி என்று அறிந்த பின்னரும் அதைச் சந்திப்பதே சரியான வழி என்று முடிவு செய்த காரணத்தால் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு அவர் காரணமாகிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.[/size] [size=4]அத்துடன் மட்டும் நிற்கவில்லை பிரபாகரனுக்கும், பொட்டு அம்மானுக்கும் பொது மன்னிப்பு இல்லை, மற்றைய அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும், அனைவருடைய புகைப்படங்களும் எடுக்கப்பட்டு சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்படுவர்.[/size] …
-
- 15 replies
- 1.4k views
-
-
பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளே விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் திறனை முன்னர் கொண்டிருந்தன, 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா ஆரம்பித்த இந்தத் தி;ட்டத்தைத் தொடர்ந்து, 1960 களில் ரஸ்யாவும் செயற்கைக்கேளை சுட்டு வீழ்த்தும் பரிசோத…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனிதம் தொலைந்த தருணங்கள் Pathivu Toolbar ©2005thamizmanam.com ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன். வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சி…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி விட்டது. ஐந்தாண்டுகளிற்கு முன்னர் இலங்கை இணை அனுசரணை வழங்கும் போது உயர்ந்த எங்கள் நெற்றிப் புருவங்கள், இன்று அதே ஜெனிவா முன்றலில் வைத்து ஐநா தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சண்டித்தனமாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததோடு ஓய்வு நிலைக்கு வந்து விட்டன. தமிழர்களிற்கு தாங்கள் பெரிய கெட்டிக்காரன்கள் என்று இருக்கும் மிதப்பு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழர்களின் இந்த மிதப்பில் சிங்களவர்களை மடையனாக பார்த்த, பார்க்கும் மனநிலையும் கலந்தே இருக்கிறது. எங்கட கெட்ட காலம், இந்தக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
எம்மை மிரட்டினால் விடுதலைப் புலிகளைப் பற்றி அதிகமாகப் பேசுவோம்: வைகோ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாது என எங்களை மிரட்டினால் அதிகமாப் பேசுவோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.திமு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் தமிழீழத்துக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு எமது ஆதரவு என்றும் தொடரும். அவர்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதனால் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாது என எங்களை மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாகப் பேசுவோம். மரண பூமியான இலங்கையில் போராடும் விடுதலைப் புலிகஇளை ஆதரி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழப் போராட்டம் – அழித்தவர்கள் யார் : அஜித் ஒடுக்குமுறையும் வன்மமும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அவற்றிகு எதிராக மக்கள் போராடுகிறார்கள். மக்களின் போராட்டங்கள் அரசியல்ரீதியாகத் திட்டமிடப்படும் போது மக்கள் இயக்கங்களாக வளர்ச்சியடைகின்றன. மக்கள் இயக்கங்கள் மீதான அரச பயங்கர வாதம் எதிர்கொள்ளப்படும் போக்கில் தலைமறைவு இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்ததின் பின்னான காலகட்டம் முழுவதிலும் விடுதலை இயக்கங்களை அரசுகளும் ஏகபோகங்களும் உருவாக்கிக் கொள்வதும் இறுதியில் இரத்த வெள்ளத்தில் மனிதப்பிணங்களை காண்பிப்பதும் பொதுவான நிகழ்ச்சிப் போக்கக அமைந்தது. மக்களையும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்…
-
- 6 replies
- 1.4k views
-
-
[size=6]ரோமாக்கள் - அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு[/size] [size=5]நந்தின் அரங்கன் [/size] அண்மையில் வந்த ஒரு சொல்வனம் இதழில் அ.முத்துலிங்கம் குறித்து வெங்கட் சாமிநாதன் கட்டுரையொன்று எழுதியிருந்தார், “ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்”. அதில் வெங்கட் சாமிநாதன், “தமிழும் அழிந்துதான் போகும். ஒரு சில மில்லியன் பேரே பேசும் மால்டீஷ், (மால்டா), திவேஹி (மாலத்தீவு), ஐஸ்லாண்டிக் (ஐஸ்லாந்து) இவையெல்லாம் அழியாது. ஆனால் தனக்கென ஒரு நாடு இல்லாத தமிழ் அழிந்துவிடும்” என்று சொல்லும் இராக்கியை மேற்கோள் காட்டுகிறார் (’சுவருடன் பேசும் மனிதர்’ என்ற அ.முத்துலிங்கம் எழுதிய சிறுகதை). அ.முத்துலிங்கமோ, வெங்கட் சாமிநாதனோ ஒவ்வொரு மொழிக்கும் ஒரு நிலப்பரப்பு இருப்பதென்பது ச…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடக்குகிழக்கை இணைப்பது திராவிடதேசமொன்றிற்கு வழிவகுக்கும் என்பதை இந்தியா உணரவேண்டும்- சரத்வீரசேகர 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கு இந்தியாவிற்கு எந்ததார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கைநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 13 வது திருத்தம் இந்திய இலங்கை உடன்படிக்கையின் வெளிப்பாடு என அர்த்தப்படுத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றாததன் காரணமாகஉடன்படிக்கை குறித்த இந்தியாவின் பங்களிப்பு பற்றி கேள்விகள் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார் 13வது திருத்தம் இலங்கையின் உள்விவகாரம் என்பதை புறக்கணித்துவி;ட்டு இந்தியபிரதமர் எங்கள் பிரதமரிடம் …
-
- 8 replies
- 1.4k views
-