அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தானாகவே பொறியில் சிக்கிய கருணா அம்மான் பல காலமாக, எவராலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராக இருந்த முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரே நாளில் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்குப் போய்விட்டார். அவர், மீண்டும் செய்தியின் மய்யப் பொருளாக மாறியதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் காலத்தைப் பற்றி அவர் வெளியிட்ட ஒரு கருத்துதான். ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 - 3,000 படையினரைக் கொன்றதாகத் தற்புகழ் தேடிக்கொள்ள முயன்ற விவகாரமே, அவருக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள், சர்ச்சைகளுக்குக் காரணம். இங்கு கருணா வெளியிட்ட தகவல்களும் தவறு; அதனை நியாயப்படுத்தி அவர் கூறுகின்ற கருத்துகளும் தவறு. அதுபோல, அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளிலும் …
-
- 0 replies
- 443 views
-
-
அரசியலில் பொய்கள் ? - யதீந்திரா சர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர், சர்வதேச அரசியலில் தலைவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை விபரிக்கும் வகையில் ஒரு நூலை எழுதியிருந்தார். அந்த நூலின் பெயர் தலைவர்கள் ஏன் பொய் சொல்லுகின்றனர் : சர்வதேச அரசியலில் பொய்கள் பற்றிய உண்மை (Why leaders lie : the truth about lying in international politics) இந்த நூல் பிரதானமாக அமெரிக்க தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே விடயங்களை ஆராய்கின்றது. ஆனால் இந்த நூலின் உள்ளடக்கம் அனைத்து நாட்டுச் சூழலுக்கும் பொருந்தக் கூடியது. அவர் பொய்களை வகைப்படுத்தியிருக்கின்றார். அதவாது நாட்டின் நலன்களுக்காக கூறப்படும் பொய்களும் இருக்கின்றன. வெறும் சுயநலன்களுக்கா…
-
- 0 replies
- 388 views
-
-
றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது. மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இதுதொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்த…
-
- 1 reply
- 725 views
-
-
தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்? வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு - கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூ…
-
- 0 replies
- 468 views
-
-
911 இன் இரகசிய வரலாறு http://www.youtube.com/watch?v=mhtzWcaZx5A http://www.youtube.com/watch?v=s1ZHUl_PT2M
-
- 0 replies
- 814 views
-
-
தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன். ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up country Tamils, The Vanishing people?” என்ற கட்டுரையாகும். இந்த கட்டுரை புது டெல்லியில் செயற்படும் Observer Research Foundation (ORF) என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக் கட்டு…
-
- 0 replies
- 686 views
-
-
முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்…
-
- 14 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் ஏற்கோம் கடந்த காலத்தைப்போல் ஏமாறவும் மாட்டோம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இன்றைய ஆட்சியாளர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய அனுசரணையுடன் பெற்றே தீருவோம். எவ்வகை சூழ்நிலையிலும் கடந்த காலங்கள் போல் நாம் ஏமாறப்போவதுமில்லை. இதேவேளை தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சமகால அரசியல் போக்கு குறித்தும் அரசியல் தீர்வின் முன்னேற்றம் குறித்தும் பொது மக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் கட்சியின் உ…
-
- 1 reply
- 320 views
-
-
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..) அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமா…
-
- 0 replies
- 790 views
-
-
இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம் 19 Views ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. …
-
- 0 replies
- 367 views
-
-
சமஸ் எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
K.P. அண்ணனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எமக்கு ஏற்பட்டு பாரிய பின்னடைவைத் தொடர்ந்து எங்களை மீட்க நல்லதொரு மீட்பன் வரமாட்டாரோ என்ற ஏக்கத்தில் இருக்கும் பல இலட்சம் ஈழத் தமிழ் உறவுகளில் ஒருவனாய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சிங்கள அரசு இன அழிப்பை ஆணவத்துடன் செய்து முடித்தபின் சொல்லொணாத் துயரத்தில் இருந்த எமக்கு அந்த இறுதிநாட்களில் வன்னியில் நடந்தேறியவற்றை பக்குவமாகச் எடுத்துரைத்து உண்மைகளை உணர்ந்து ஏற்று அடுத்தது என்ன என்று சிந்திக்கவும் வைத்தீர்கள். தொடர்ந்து வந்த உங்கள் அறிக்கைகளில் உலகத்தமிழர் அனைவரிடமிருந்தும் துறைசார் அறிஞரிடமிருந்தும் ஆக்கபு}ர்வமான கருத்துக்களையும் செயல்திட்டங்களையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினீர்கள். பாரிய பின்னடைவுகள் தந்த பாடங…
-
- 7 replies
- 1.1k views
-
-
முழு அடைப்புப் போராட்டம் : உணர்வுகளின் பிரதிபலிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற வுகள் விடுத்த அழைப்பின் பேரில்- தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் கடந்த வாரம் வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை முற்றாகவே செயலிழக்கச் செய்திருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய ஓர் அரச எதிர்ப்பு செயற்பாடாக இந்த முழு அடைப்பு போராட்டம் இடம்பெற்றிருக்கிறது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இதுபோன்ற ஓரிரண்டு போராட்டங்கள் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெற்றிருக்கின்ற போதிலு…
-
- 0 replies
- 616 views
-
-
போரில் வாழ்வை தொலைத்தவர்களும் தொலையாத போர் வடுக்களும் - காரை துர்க்கா இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட, தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது. போரில் தமிழ் மக்கள் சந்தித்த, மேலும் அதன் தொடர்ச்சியாக தற்போதும் அனுபவிக்கின்ற வேதனைகள், வார்த்தைகளில் வடிக்க முடியாதவை; பெரும் கறைகள் படிந்தவை. கொடிய யுத்தத்தில் தம் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் வாழ்வை இழந்தவர்களாகவே, நடைப்பிணங்களாக நம் தேசத்தில் ஊசலாடுகின்றனர்; உலாவருகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதலால் தமது கணவனைப் பறிகொடுத்த, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பெண்கள் அன்றாட வாழ்வாத…
-
- 0 replies
- 457 views
-
-
ஆறுமாதத்தில் நடந்த அதிரடி மாற்றம்! இடையில் நடந்தது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோத அணுகுமுறைகள் ஏற்படுத்தும் பாரதூரமான அரசியல் விளைவுகளை மக்களே முகம் கொடுக்க நேர்கிறது.
-
- 1 reply
- 691 views
-
-
சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? நிலாந்தன். March 27, 2022 சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும். ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பி…
-
- 0 replies
- 697 views
-
-
ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது. அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை எழுதத் தூண்டின. முதலாவது, ஆர்ஜென்டீனாவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், குற்றவாளிகளுக்கு விடுப்பு அளித்தமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இளவயது மற்றும் வயதுமுதிர்ந்த பெண்கள் வீதிகளில…
-
- 0 replies
- 378 views
-
-
துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல் மீராபாரதி தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று பல்வேறு தளங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருப்பதுடன் பின்தங்கிய நிலையிலும் உள்ளார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ் நிலை மற்றும் மனநிலை என்பன மிகவும் பாதிப்படைந்து கவலைக்கிடமாகவும் நம்பிக்கையிழந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச சமூகங்கள் மற்றும் இந்திய சிறிலங்கா அரசாங்கங்கள் இம் மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்களிக்கின்ற எந்தவிதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் இம் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளும் புலம் பெ…
-
- 74 replies
- 5.9k views
-
-
ரட்ணஜீவன் கூலும், தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும் : ரகுமான் ஜான் ஒவ்வொரு கலாச்சாரமும், அது எந்த சூழலில் உருப்பெற்றதோ, எப்படிப்பட்ட சூழலில் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த சமூகச் சூழலில் வைத்துத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். வேற்று ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தமது சமூகத்தில் காணப்படும் கலாச்சார பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறொரு சமூகத்தின் கலாச்சாரத்தை மதிப்பிடுவது, அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் கலாச்சாரங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிப்பது அபத்தமானது. இந்த விதமான மதிப்பீடுகள் வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் ‘அதிகாரப் படிநிலைவரிசையை’ (Hierarchial Order) கற்பிப்பதற்கும், அந்த கற்பிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தை இன்ன…
-
- 2 replies
- 1.1k views
-
-
Published By: VISHNU 04 SEP, 2023 | 08:41 PM ஹரிகரன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்று சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், வடக்கில் விரிவான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது அவர் அரசியல், பொருளாதார, சமூக, மத விவகாரங்களில் மாத்திரமன்றி, பாதுகாப்பு விவகாரங்களிலும் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார். யாழ்ப்பாணப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சிக்குச் சென்ற அவர், அங்கு இலங்கை இராணுவத்தின் முதலாவது கோர்ப்ஸ் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமுனுகமவைத் சந்தித்திருந்தார்.…
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 953 views
-
-
கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு — சிறிதரன், விக்னேஸ்வரன் குழுவினர் கடந்த வாரம் டில்லிக்குச் சென்றிருந்தமை எந்த நிகழ்ச்சி நிரல்? அதாவது ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளை அழைத்து கடந்த ஜனவரி மாதம் டில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. 2021 இல் பழநெடுமாறன் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் 2” என்ற மாநாட்டை நடத்தி மோடிக் கடிதம் அனுப்பினார். ஆகவே இச் சந்திப்புகள், மாநாடுகளின் தொடர்ச்சியாகவா அல்லது பிரித்தாளும் உத்தியா? அ.நிக்ஸன்- ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அ…
-
- 0 replies
- 300 views
-
-
ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன். ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ்க் கட்சிகள் துடிப்பாக உழைப்பதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தது குத்துவிளக்கு கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரம்மச்சந்திரன். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் சில மாதங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார். அதன் பின் அவரும் இணைந்திருக்கும் குத்து விளக்கு கூட்டணி, மன்னாரில் நடந்த கட்சிகளின் கூட்டத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று அறிவித்தது. அதற்கு ஆதரவாக விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு பொது தமிழ் வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். இதே காலப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன…
-
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம்-துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயர்மாற்றம் தொடர்பான எதுசரி எதுபிழை?
-
- 1 reply
- 614 views
-
-
'பாலை' மறவராவோம் தமிழீழம் பெறுவோம் [ கீற்று ] - [ Jan 06, 2012 15:10:05 GMT ] தமிழ் சினிமாவின் ஆராம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே. தமிழ்த்திரையை கிராமத்து மனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்க…
-
- 0 replies
- 716 views
-