Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அவலத்தை அரசியலாக்குதல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன. ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறி, தம்மை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இத்தகைய சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த அரசியல்வாதிகள் விளைகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், தம்மை கடினமான சூழ்நிலைகளை கையாளும் திறன் கொண்ட, திறமையான தலைவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு…

  2. http://www.kaakam.com/?p=1814 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ விடுதலை, தமிழின விடுதலை, தமிழினவெழுச்சி போன்ற சொற்களே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துவனவாக அரசியல் அரங்கில் இடைவிடாது ஒலிக்கப்பட்டு வந்தன. தமிழிய சிந்தனைத்தளத்தில் செயலாற்றும் முனைப்புக்கொண்ட புரட்சிகரமானோர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை, தமிழ்த்தேசிய மீட்சி போன்ற சொல்லாடல்கள் வெகுமக்களிடத்தில் ப…

  3. மனித உரிமையென்றால் என்ன என்பதை தெற்கின் அரசியல்வாதிகள் அறிவார்களா? “இலங்கையில் சிங்கள பௌத்தவாதிகளிற்கும், பல உணர்ச்சிவாத தமிழ் மக்களிற்கும், விஷேடமாக பல புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிற்கும் மனித உரிமை என்பது ஒரு பொழுதுபோக்கான அல்லது சந்தர்ப்பவாத விடயம். இவர்கள் மனித உரிமையின் அடிப்படை தந்துவத்தையோ அல்லது அதன் நடைமுறைகளை அறிந்தவர்கள் அல்ல. இவற்றை ஒர் ஒழுங்கான முறையில் படித்து அறிந்துகொள்ள விரும்பியவர்களும் அல்ல. ஆனால், வெளி உலகிற்கு தம்மை ஓர் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக தங்களை தாமே சுய விளம்பரபடுத்தவதில் இவர்கள் தவறவில்லை.” மூத்த அரசியல் ஆய்வாளர் ச.வி. கிருபாகரன் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளா…

  4. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைப் பற்றி பல நினைவுரைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இனமதபேதமற்ற முறையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல வெளிவந்துள்ளன. வெளிவராத சிலவற்றை அவரின் இன்றைய 73 ஆவது பிறந்த தினத்தில் வெளிப்படுத்துவது எமது நன்றிக்கடனாகும். தலைநகரில் அடக்கப்பட்ட ஒரு தமிழ்க்குரல் (ஜனவரி 14 2000) தலைநகரில் தமிழர்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த ஒரு தன்மானத் தமிழனின் உயிர் சதிசெய்து பறிக்கப்பட்டது. சர்வதேசம் எங்கும் அடிக்கடி பறந்து சிங்கள அரசின் தமிழர் படுகொலைகளையும் இனப்படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அம்பலப்படுத்தி வந்த ஒரு தேசப் பற்றாளன் சதிகாரர்களால் அழிக்கப்பட்டுவிட்டான். இந்தப் படுகொலையானது கொழும்புத் தலைநகரில் தமிழருக்காக ஆதரவுக்குரல் எழுப்பக் கூடாது …

  5. நலத்திட்டம் இலவசமா ? - சுப. சோமசுந்தரம் 'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ : வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பார…

  6. இன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகால திட்டமிட்ட தமிழ்த் தேசிய இனங்களின் மீதான அடக்குமுறை என்பது இன்று மேலும் ஒரு புதிய வடிவை எடுத்துள்ளது. இன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதச் சிந்தனைக்கு எதிரானதும், குறுந்தேசியவாத கோட்ப்பாடிற்கு எதிரானதுமான தத்துவார்த்தத் தளத்திலான போராட்டங்கள் அவசியமாகிறது.சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பண்பியல்புகள் குறித்த புரிதல்களின் ஊடாகவே அதனை எதிர்கொள்வது குறித்த முடிபுகளுக்கு முன்வர முடியும். சிங்கள பௌத்தம…

  7. இன்றைய உக்ரைன் …! அமெரிக்க இராஜதந்திரத் தோல்வி! February 26, 2022 ஜோபைடனின் இராஜதந்திர தோல்வியும்…! புட்டினின் தற்காப்பு இராணுவ நகர்வுகளும்…..!! — அழகு குணசீலன் — அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஜோபைடன் போன்ற மிகப்பலவீனமான தலைமைத்துவம் ஒன்றை அமெரிக்க மக்கள் இது வரை கண்டதில்லை . அவரின் அரசியல், உடல் முதுமைக்கும் அப்பால் அவர் மிகவும் பலவீனமான அரசியல் தலைமையாகவே தன்னை அறிமுகம் செய்துவருகிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க – நேட்டோ கூட்டணிப்படைகளை வெளியேற்றிய போது இந்த பலவீனம் மேலும் வெளிப்பட்டது. சி.ஐ.ஏ. அனைத்து ஆரூடங்களையும், கணிப்புக்களையும் தலிபான்கள் தப்புக்கணக்கு என்று நிரூபித்தார்கள். இறுதியில் மிகப்பெரிய மனித அவலத்தை ஏற்…

    • 5 replies
    • 1k views
  8. பிரிக்க முடியாத ஈழம் தீபச்செல்வன் தமிழீழம் சாத்தியமற்றது என்று Ôதி இந்துÕ நாளிதழின் ஆசிரியர் ராம் தனது பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஈழ மக்களின் போராட்டத்திற்கு எதிராக அவ்வாறு தெரிவித்தமைக்கு எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஈழத் தமிழர்களுக்கு தான் விரோதமானவர் அல்ல என்று சொல்லும் ராம் விடுதலைப் புலிகளையே தான் விமர்சிப்பதாகக் கூறுகிறார். ஆனால் தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலமும் இனப்படுகொலையாளியான ராஜபக்சேவின் நண்பனாக இருந்துகொண்டு ஈழ இனப்படுகொலை விடயத்தில் அவரையே விசாரணை செய்ய வேண்டும் என்பதும் ஈழத் தமிழருக்கு விரோதமானதே. தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலம் ஈழத் தமிழர்களின் அறுபது வருடகால போராட்டம்மீது தனது விரோத ந…

  9. ஜனநாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்டு வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் அரச துணைராணுவக்குழு தாம் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று கூறிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுவரும் ஈ பி டி பி துணைராணுவக் குழுவினரின் இன்னொரு அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. நடந்த அக்கிரமத்தினைத் தடுக்க துணைராணுவக் குழுவின் தலைமையும் பொலீஸாரும் முயல்வது அப்பட்டமாகத் தெரியும் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. இருவாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கண்ணபுரம் பகுதியில் புறாக்களை வளர்க்கும் இரு வீடுகளுக்கிடையே நடந்த சம்பவம் ஒன்றில், ஒரு வீட்டினரால் வளர்க்கப்பட்ட சில புறாக்கள் இரண்டாவது வீட்டில்ப் போய் தங்க ஆரம்பித்திருக்கின்றன. இதனையடுத்து இ…

  10. உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம் Bharati November 17, 2020 உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம்2020-11-17T21:29:13+05:30Breaking news, அரசியல் களம் LinkedInFacebookMore கலாநிதி தேவநேசன் நேசையா 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியிலும் பரந்தளவு விளைவுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுக்குள் ஆபிரிக்க அமெரிக்க மக்கள், முஸ்லிம் சனத்தொகை, அண்மைக்காலத்தில் லத்தீன் அமெரிக்க மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து வந்த குடியேற்றவாசிகளுக்கு நிச்சயமாக பயன்தரும். ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் கீழ் இருந்ததை விடவும் கூடுதலான அள…

  11. கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 27 நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ. ஜனாதிபதியிடம் இருந்து நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்து, சுனில் ரத்நாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று (26) விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா பீதிக்கு மத்தியில், நாடு கலங்கிப் போயிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த முடிவை எடுத்திருக்கிறா…

    • 3 replies
    • 1k views
  12. சீனாவின் புதிய போர்முறைக் கோட்டுபாடுகளின் விளைவு என்ன? – கேணல் ஆர் ஹரிஹரன் கேணல் ஆர் ஹரிஹரன் நவம்பர் மாதம் முதல் வாரம் நடந்த, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்திய செயற்குழுவின் ஐந்தாவது ப்ளீனரி கூட்டத்தில், பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர்ப்படைகளின் நவீன மயமாக்குதலை துரிதப்படுத்தி, ஒருங்கிணைந்த வளமான நாட்டை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கடந்த நவம்பர் 7ந் தேதி, சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளை “ஒருங்கிணைந்த சீன மக்கள் விடுதலைப் படையின் போர்முறைகள்; ஓர் வரைவடிவு” என்ற பெயரில் சீனப் படைகளில் செயலாக்கத்தில் கொண்டு வந்தது. அதைப் பற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் நவம்பர் 13ந…

  13. தமிழர்களின் பொருளாதார மீட்சி என்.கே. அஷோக்பரன் twitter:@nkashokbharan தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை வலுப்படுத்தக்கூடிய எந்தத் திட்டங்களோ தூரநோக்கோ கூட, தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது என்ற குற்றச்சாட்டை, என்னுடைய பத்தியிலும் மற்றைய தளங்களிலும் முன்வைத்திருக்கிறேன். அண்மையில், இதைப் பற்றிய கேள்வியொன்றை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனிடம் முன்வைத்த போது, “இந்தக் குறையொன்று, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளது” என்ப…

    • 11 replies
    • 1k views
  14. இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை ; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி - 1 இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வுநிலை புல­னாய்வு நிபு­ணரும் தெற்­கா­சி­யாவில் பயங்­க­ர­வாதம் மற்றும் கிளர்ச்­சி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் நீண்ட அனு­பவம் வாய்ந்த வர்­களுள் ஒரு­வரும் எழுத்­தா­ள­ரு­மான கேர்ணல் ஆர்.ஹரி­க­ரனை சென்­னையில் உள்ள அவ­ரு­டைய இல்­லத்தில் சந்­தித்­த­போது, இலங்கை தீவில் காணப்­ப­டு­கின்ற வல்­லா­திக்க நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டிகள், பூகோள அர­சியல் நிலை­மைகள், இந்­திய அமை­திப்­ப­டையின் செயற்­பா­டுகள்,இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அவர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் முழு­…

  15. ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான் இடம்பெறும், அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார். ஆனால், ரணில் எவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்? இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செல்வதென்று முடிவெடுத்த போது தெற்கில் எழுந்த முதல் கேள்வி விடுதலைப் புலிகளை தோற்கடித்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கவா போகின்றீர்கள் என்பதே! இன்றைய நிலையில் இ…

    • 0 replies
    • 1k views
  16. தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன் ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான …

  17. இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­பட்ட திருத்­தங்களில் முக்­கி­ய­மா­ன­தாக, படையினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்டு நிரா­கரிப்பும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான எதிர்ப்பும் அமைந்­தி­ருக்­கி­றது இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அ…

  18. கிழக்கிலங்கை சமுதாய முரண்பாடுகளும் மூலகாரணங்களும் - சுல்பிகா இஸ்மாயில் கிழக்கிலங்கை சமுதாய முரண்பாட்டுப்பின்னணி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள், முரண்பாடுகள், மோதல்கள் போன்றன வௌ;வேறு சமூகக் குழுவினரால் வேறுபட்ட வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முரண்படுகின்ற சமுதாயப் பல்வகைமைகள், பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்கமும் அடக்குமுறையும், வரலாற்றுரீதியான இனவெறுப்பும் ஓரங்கட்டலும், பயங்கரவாதமும் அதன்பாற்பட்ட வன்முறைகளும், இனத்துவக் குரோதங்களும் இனஅழிப்பும், உயர்வர்க்க அதிகார துஷ்பிரயோகங்களும் முரண்பாடுகளும், அரசியல் முகாமைத்துவப் பிழைகள் எனப் பலவாறான அடையாளப்படுத்துதல்கள் உண்டு. இவை, ஒவ்வொரு சமூகக்குழுவினரதும் அனுபவத்திலிருந்து வரும் துயரப்பார்வைகள், நம்…

  19. இலங்கை ஒற்றையாட்சி அரசை திருப்திப்படுத்த அச்சாப்பிள்ளை அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் மாவீர்களுக்குத் தீபம் ஏற்றியதை மறந்துவிட்ட முன்னணியின் அரசியல் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத்…

  20. ஆசியாவின் வல்லமை மிக்க கடற்படைகள் என்று பார்க்கும் போது சீனா ஐந்தாம் இடத்திலும் தென் கொரியா முதலாம் இடத்திலும் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும். ஆனால் இதைச் சொல்பவர் James Holmes என்பவர். James Holmes is professor of strategy at the Naval War College and senior fellow at the University of Georgia School of Public and International Affairs. James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும் வலிமை மிக்கது. கடற்படைகளின் செயற்படு திறனை வைத்துக் கொண்டு பேராசிரியர் James Holmes …

    • 2 replies
    • 1k views
  21. இனியும் தமிழர்கள் தங்கள் தலைமைகளை நம்புவதில் பலனில்லை-பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தமிழ் சகோதரர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளமை பெரும் கவலைக்குரிய விடயமாகும் என்று பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கிழக்கில் நுண்கடன் திட்டங்கள் அப்பாவித் தமிழர்களை தற்கொலை வரை தள்ளிச் செல்லும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் சமீபத்திய நிகழ்வ…

  22. கைவிடப்பட்ட கதை? - வீ.தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக்கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்டமுடியாதநிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இத்தடவை ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளினால் முன்வைக்கப்படக்கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான பிரசாரப்பொருளாக இருந்த ' நிறைவேற்று அதிகார ஜனாத…

  23. இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும் Editorial / 2019 மே 13 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 ஜனகன் முத்துகுமார் சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டி, அவ்வாறாக அழிக்கும் நோக்கத்துடன் கட்டவிழ்க்கப்படுகின்ற வன்முறை என விளிக்கின்றன. இனப்படுகொலை தொடர்பான எண்ணக்கரு முதல் முதலில் 1944 இல் ராபியேல் லெம்கின் Axis Rule in Occupied Europe எனும் நூலில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இது இரண்டாம் உலகப்போரின் போதான ஹோலோகாஸ்ட் (Holocaust) இனப்படுகொலையை சித்தரிக்க பயன்பட்டிருந்தது. லெம்கின் இனப்படுகொலையை தனத…

  24. இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:38 Comments - 0 “நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்? அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்? ‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.