அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
கோத்தாவின் தலைவலி துமிந்த சில்வா என்பவன் தூள் (போதைப்பொருள்) கோஸ்ட்டி தலைவன். செய்த கொலைக்காக மரண தண்டனை பெற்று சிறையில் இருந்த போதும், தனது தூள் ராஜ்யத்தினை சிறையில் இருந்தே நடத்திக் கொண்டு இருந்தான். பாதுகாப்பு செயலாளராக, கோத்தா இருந்த போது, அவருடன் மிக பெரும் உறவினை வைத்து இருந்தான். தான், விடுதலை செய்யப்படுவேன் என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. மாறாக எனது தந்தை, பிரேமச்சந்திரா, மகிந்தாவின் வலது கையாக இருந்தார். சந்திரிக்கா, மகிந்தவினை முன்னிலைப்படுத்த மறுத்த போது, ஒரு ஜனநாயக வாதியாக, தேவையான அரசியல் செய்து, அவர் பிரதமர் ஆகவும், பின்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டி இடவும் பெரும் ஒத்தாசை செய்தார். அப்படி செயல் பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்ட போது…
-
- 5 replies
- 957 views
-
-
நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக? நிலாந்தன்… புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார்…….. ‘நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது’ என்று. அந்த கேலிச் சித்திரத்தில் ஒரு கூட்டம் எதற்காகவோ ஆளுக்காள் பிச்சுப்பிடுங்கிக் கொண்டு நிற்பார்கள். ஒரு பிச்சைக்காரர் தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் கேட்பார் அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்கவர் சொல்வார் எங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காக அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள் என்று. இக்கேலிச்ச…
-
- 1 reply
- 957 views
-
-
சமஷ்டியும் இரத்த ஆறும் - சத்ரியன் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடும் கட்சிகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான், இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் வழக்கம் போலவே, வடக்கு- கிழக்கு இணைந்த, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசியல் தீர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே தமிழர் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு, அதனை அடைவதற்காக பாடுபடப் போவதாகவும், அதற்கு மக்களின் ஆணையைத் தருமாறும் கேட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணைகளை மீறிவிட்டது- ஒற்றையாட்சித் தீர்வுக்கு உடன்பட்டு விட்…
-
- 0 replies
- 957 views
-
-
ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’ Editorial / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:13 Comments - 0 -க. அகரன் ‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய காலத்தில் வழங்கப்படும் பட்சத்திலேயே, அதற்கான பெறுமதியும் தீர்வும் தர்மத்துக்கும், நியாயத்துக்கும் அதற்கும் மேலாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கும் ஏற்புடையதாக இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளக விசாரணைகளின் ஊடான சாதாரண வழக்குகளும் சரி, பாரிய வழக்குகளுக்கும் சரி, கால நீடிப்பின் பின்னரே, தீர்ப்புக் கிடைக்கின்ற நிலை காணப்படுகின்றது. அது, இலங்கை நீதிச்சேவையின் பலவீனமான, இறுக்கமற்ற தன்மையில்…
-
- 0 replies
- 957 views
-
-
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குலில் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம்? – நிராஜ் டேவிட் by admin June 30, 2013 இந்தத் தலைப்பு எம்மில் பலருக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கலாம். சிலருக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு செய்தி சில மேற்குலக ஊடகங்களிலும், பயங்கரவாதம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளிலும் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்படிட்டிருந்ததை நாம் மறுத்துவிட முடியாது. 1993ம் ஆண்டு பெப்ரவறி மாதம் 26ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்த உலக வர்த்தகமையமான இரட்டைக் கோபுரத்தைக் குறிவைத்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். (2001 செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத்தின் மீது மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 956 views
-
-
விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும் கே. சஞ்சயன் / முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது. அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன. அதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்த…
-
- 2 replies
- 956 views
-
-
தமிழர்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவென்று யாரும்கேட்டால் ஒரே சொல்லில் பதில் தர முடியும் ‘மறதி’ என்று. உங்களில் யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பறவாயில்லை. அதுதான் மாற்றப்பட முடியாத உண்மை. எங்களை யார் ஏறிமித்தார்களோ!, எங்களை யார் இரத்த சகதியாக மாற்றினார்களோ!, எங்கள் பிள்ளைகளை யார் உயிர்பிடுங்கி வீசினார்களோ! அவர்களையும், அந்தச் சம்பவங்களையும் கூட நாம் மறந்துபோயிருக்கின்றோம். இந்த நிலை நீடித்தால் நிச்சயமாக 60 வருடமல்ல 6 ஆயிரம் வருடங்கள் சென்றாலும் தமிழன் அடக்கப்பட்ட இனமாகவே இருப்பான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களிடம் இந்த மறதியிருப்பதால் தான் என்னுடைய சுயம்பற்றி சிந்திக்க முடியவில்லை, எங்களைக் கொன்று புதைத்தவனை பழிவாங்கும் எண்ணம் எமக்கு…
-
- 0 replies
- 956 views
-
-
மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி? தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும். அதிலும் குறிப்பா…
-
- 0 replies
- 955 views
-
-
பிள்ளையார் கல்யாணமா? பொருளாதாரமா ? தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களின் பின்னணியிலும், அதற்குப் பின்னரான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் ஜேவிபியின் கை மேலோங்கி வருவது பரவலாகத் தெரிகிறது.அண்மைக் காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று கொழும்பில் உள்ள தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார்.தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது.அதைவைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு பிரதான கட்சியாக மேலெழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சிங்களம் மற்றும் தமிழ் அவதானிகளில் ஒரு பகுதியினர் மத்தியில் உ…
-
- 0 replies
- 955 views
-
-
[size=4]ஆய்வாளர்கள் உதவுவார்கள் என நம்பும் ஆய்வுகூடத் தவளைகள் நாம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-09-21 09:48:59| யாழ்ப்பாணம்][/size] [size=1] [size=4]வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் இலங்கைக்கும் வடபகுதிக்கும் அடிக்கடி விஜயம் செய்கின்றனர். போருக்குப் பின்பாக, வெளிநாட்டு இராஜ தந் திரிகளின் இலங்கைக்கான விஜயமும் வடபகு திக்கான வருகையும் பல தடவைகள் இடம்பெற் றுள்ளன. [/size][/size] [size=1] [size=4]வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வருகையின் நோக்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ் வாதாரங்கள் பற்றி அறிந்துகொள்வது என்ப தாக இருந்தால், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அவர்களால் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்ல…
-
- 1 reply
- 955 views
-
-
-
- 0 replies
- 955 views
-
-
சீனாவை மகிழ்விக்கும் ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு. ஆனால், ஒரு நாட்டை ஆளும் கட்சியொன்றைக் கௌரவப்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டில் நாணயக் குற்றி வெளியிடப்படுவது ஆச்சரியமானது. ஏனெனில், இராஜதந்திர உறவு அல்லது, வெளிநாட்டு உறவு என்பது, அரசுகளுக்கு இடையிலான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. கட…
-
- 5 replies
- 954 views
-
-
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர். சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது. லசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளி…
-
- 0 replies
- 954 views
-
-
நேற்று -இன்று -நாளை!! நேற்று -இன்று -நாளை!! 1 – நேற்று முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களை அடக்கி ஆண்டவர்கள், சித்திரவதை செய்தவர்கள், தமிழ்த் தலைவர்களைக் கொன்று புதைத்தவர்கள், பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் என்பவற்றை மறுத்தவர்கள், பாசிச ஆட்சி நடத்தியவர்கள் தொலைந்து அழிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என முகநூலிலும், சமூக வலைத்தளங்களிலும் கொக்கரித்து ஆனந்தக்கூத்தாடுகிறார்கள் சிலர். அந்த அழிவை நடத்திய மகிந்த …
-
- 0 replies
- 953 views
-
-
-
- 3 replies
- 953 views
-
-
-
- 0 replies
- 953 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்…
-
-
- 7 replies
- 952 views
- 1 follower
-
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்?- நிலாந்தன். adminOctober 13, 2024 கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சி…
-
-
- 10 replies
- 952 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
-
- 9 replies
- 952 views
-
-
அமெரிக்க, இந்தியப் பெருங்கவனம் இலங்கை நோக்கி எப்போது திரும்பும்? தத்தர் சர்வதேச அரசியலில் தன் சொந்தக் கால்களில் நிற்கும் அரசென்று எதுவுமில்லை. இன்றைய ஒற்றை மைய உலக அரசியலில் அமெரிக்கா அதிக வல்லமை வாய்ந்த அரசாக இருக்கின்றபோதிலும், அது தனக்காக கூட்டாளிகளைக் கொண்டிருப்பதிலும் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களைக் கையாள்வதிலுமே தனது முதன்மையைப் பேணுகின்றது. அமெரிக்காவுக்கு உடனடிச் சவால் மத்திய கிழக்கு எனப்படும் மேற்கு ஆசியப் பகுதியாகும். அதனது இரண்டாவது சவால் சீனாவாகும். மூன்றாவது நிலையிலேயே ரஷ்யா காணப்படுகின்றது. ரஷ்யாவின் ராணுவ பலம் அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடியதாக இருந்தாலும் அது அரசியல் பொருளாதார நிலையில் சர்வதேச ரீதியில் பலயீனமானதாக உள்ளது. அமெரிக்கா தன்னுடைய எதிர…
-
- 4 replies
- 951 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் தன்னைத் தொடர்புகொண்டு தன் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டதாகப் புதுக்கதை விட்டுள்ளார் கேபி. இவர் கூறுபவற்றை மறுக்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைமையின் இப்போதைய நிலை இல்லாமையினால் தான் நினைத்ததை எல்லாம் கூறலாம் என்கிற காரணத்தினால் நம்ப முடியாத கருத்துக்களைக் கூறி தமிழீழ விடுதலையின் மகிமையைக் குறைக்கும் செயலில்ஈ டுபட்டிருக்கிறார் கே.பி. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் தான் புலம்பெயர் இடத்திலிருந்து கடினமாகப் பணியாற்றி எப்படியாவது விடுதலைப் புலித் தலைமையைக் காப்பாற்றி விடலாம் என்று முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார் கே.பி. கருணா, கே.பி.இ பிள்ளையான் போன்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறு…
-
- 4 replies
- 951 views
-
-
ஐயரின் ஈழப்போராட்டத்தில்எனதுபதிவுகள் – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று! தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு…… ஈழப் விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர்உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில்நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப்போராட்டம் மீளாய்வை நோ…
-
- 1 reply
- 951 views
-
-
-
- 5 replies
- 951 views
-
-
பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2 முதல் உலகப்போர் நடைபெற்ற வருடங்கள் என்றால் 1914 முதல் 1918 வரை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் உலகப் போரை இப்படி ஒரு காலகட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் போரின் காலகட்டம் குறித்து மாறுபடுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட கணக்கு 1939 முதல் 1945 வரை என்றாலும், சிலருடைய கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் 1939 அல்ல 1931. சீனா மீது ஜப்பான் தாக்குதல் தொடுத்த ஆண்டு அது. 1931 தொடங்கி 1939 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், கலகங்கள், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருடன் நேரடியாக தொ…
-
- 1 reply
- 951 views
-
-
[size=4]நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இலங்கையில் சர்வதிகாரிகளை உருவாக்கவே பயன்பட்டு வந்திருப்பதை இப்போது தான் தென்னிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.[/size] [size=2] [size=4]இத்தகைய சர்வதிகார ஜனாதிபதி உருவாவதற்கான அரசியல் யாப்பை எழுதி அரங்கேற்றிய கட்சியைச் சேர்ந்தவர்களே இன்று பொதுக்கூட்டு அமைத்துக் கொண்டு ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி எனும் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் மூலம் நடைமுறைப்படுத்தினார். [/size][/size] [size=2] [size=4]1972 மே 22 இல் இந்த யாப்பு அறிமுகமானது. 1970 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை ஆசனங்களால்…
-
- 0 replies
- 951 views
-