Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முஸ்லிம்கள் மீதான பல்கோண ‘நெருக்குதல்கள்’ மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:40 Comments - 0 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள், பல வழிகளிலும் அதிகரித்திருக்கின்றன. முஸ்லிம் பெயர்தாங்கிகள்தான், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றாலும்கூட, நிஜத்தில், இத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்துக்கே பெரும் சிக்கல்கள் நிறைந்த நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீது, இன்னுமொரு கட்ட ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும், அதற்கு நியாயம் கற்பிப்பதற்குமான ஒரு களச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஒரு குழுவினர் செய்த, வரலாற்றுத் தவறான பயங்கரவாத நடவடிக்கையைக் காரணமாகக் கூறி, 2…

  2. மீண்டுமொரு சதி, குழி பறிப்பு முருகானந்தம் தவம் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் முக்கியஸ்தரும் தமிழ் தேசியப்பற்றாளருமான சிவஞானம் சிறீதரனை வெளியேற்றி விட வேண்டும் என பல்வேறு சதி நடவடிக்கைகளில் இறங்கிய தமிழரசுக்கட்சியின் முக்கிய சில கறுப்பு ஆடுகள் அதில் தோல்வி கண்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடக்கூடாதென மீண்டும் குழிபறிப்புக்களில் இறங்கி அதிலும் தோல்வி கண்டும் அடங்காது தற்போது அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள சிறீதரனை அதிலிருந்தாவது அகற்றி ஆறுதல் வெற்றியையாவது பெற்று விட வேண்டுமென நினைத்து மீண்டுமொரு சதி, குழி பறிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த தமிழரசுக் கட்சியின் சில முக்கிய கறுப்பு ஆடுகளின் சதியின் …

  3. தமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி? தெய்வீகன் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம், வழமை போன்று சம்பிரதாயபூர்மான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும், ஒப்புக்கு ஓங்கி ஒலித்துவிட்டு மௌனித்து விட்டார்கள். யாழ்ப்பாணத்துக்கு வந்த பான் கீ மூன், நூலகக் கட்டடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசினார். பிறகு முதலமைச்சர் குழுவினரையும் சந்தித்தார். இந்த இரு பகுதியினரையும் தமிழர் தரப்பாக முன்வைத்து நடைபெற்று முடிந்த சந்திப்பினையும் இவர்களது எதிர்கால சந்திப்புக்கள் குறித்தும் ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். …

  4. அர­சியல் தீர்வு விட­யத்தில் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு என்ன? முஸ்­லிம்­களின் எதிர்­காலம் குறித்­து­ மு­தலில் அச்­ச­மூ­கத்தில் உள்ள சிவில் அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள் சிந்­திக்க வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தைப் பற்றி சிந்­திக்­காது அமைப்பு, கட்சி, தொழில் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்குள் தமது நட­வ­டிக்­கை­களை சுருக்கிக் கொண்டு செயற்­ப­டு­வது முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்கி விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்­டி­யுள்­ளது. தற்­போது முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்கு தம்மால் முடிந்த காரி­யத்தை செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், அர­சியல் கட்­சி­க…

  5. சர்வதேச உறவுநிலை குறித்து அதிகமாகப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், அதனை இயக்கும் சக்திகளாக பாதுகாப்பும் பொருளாதாரமும் இருக்கின்றது என்பதனை மறந்துவிட முடியாது. நாடுகளுக்கிடையிலான உறவுநிலை என்பதனை, நாட்டின் அதிகார உச்சநிலையில் இருப்பவர்களுக்கிடையிலான உறவாக பார்க்கும் பழக்கம் அண்மைக்காலமாக பெருகிவருவதை காண்கிறோம். உதாரணமாக கமலேஷ் சர்மா, விஜய் நம்பியார் போன்றோர் ஓர் அதிகாரமையத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் நபர்களாக இருப்பதை, அவர்களின் செயற்பாடுகளால் பாதிப்புறும் ஈழத்தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கமலேஷ் சர்மா மீது கனடா அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டூ, விஜய் நம்பியார் மீது யுத்தம் முடிவுற்றதும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமர்சனங்கள் என்பன, சர்வதேச உறவில் சிற…

  6. இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர் பி.ஏ.காதர் - 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாட…

  7. " என்னுடைய பெளத்த மதம் எப்படிப் பொறுமை காக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றது. என்னுடைய இராணுவத் தளபதியை கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டு படுகொலை செய்ய முயற்சித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை மேற்கொண்ட போதும் நாம் பேச்சுக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். " இவ்வாறு சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை. இலங்கையின் சர்வ வல்லமையுடன் ஆட்சி பீடத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே தான். இவரைப் போலவே சிங்களவர்களில் அனைத்து மட்டத்தினருமே பெளத்த மேலாண்மை என்ற பொய்மையான மாயைக்குள் மூழ்கிப் போயிருக்கின்றார்கள். சிங்கள இனத்திலிருந்து பெளத்தம் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெளத்தம் என்பது இல்லாமல் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை என்பது தான் உண்மை. …

  8. மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன் October 27, 2023 மயிலத்தமடு, மாதவனை பிரச்சினை இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் இதற்கு ஏதோ ஒரு தீா்வைக் கொடுக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சிங்களத் தரப்பினரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் அரசாங்கம் கவனமாகவுள்ளது. மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநா் அநுருத்த யஹம்பத் இப்போதும் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றாா். பிக்குகள் மற்றும் சிங்களத் தரப்பினரின் பின்னணியில் அவா் செயற்படுகின்றாா். அதனால்தான் ஜனாதிபதியின் உத்தரவுகள் எதுவ…

  9. புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பாகப் பரப்பப்படும் புரளிகளை நம்ப வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------------------------------------------------------------- ”மீண்டும் வன்முறையை ஏற்படுத்த. பாதாளக் குழுவினரின் ஆதரவைப் பெற புலம் பெயர் தமிழர்கள் முயற்ச்சி” என புதிய புரளி ஒன்று கிளப்பப் படுகிரது. நான் அறிந்தவரைக்கும் இது உள்நோக்கமுள்ள பொய்ப் பிரசாரமாகும். . இது உண்மையான கதையல்ல. புலம் பெயர் தமிழ் சக்திகளில் பெரும்பாலானவர்கள் சர்வதேச நாடுகளில் முக்கிய பொறுப்புகளிலும் அரசியல் தலைமைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச வரண்முறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்பட முழு உரிமையும் கொண்டுள்ளவர்கள்.. அவர்கள்ளில் பலர் பாலத்தீனிய அகதிகள்போல போர்குற்றங்களால் நேரட…

  10. எப்போது கைவிடுவார் சம்பந்தன்? Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 07 வியாழக்கிழமை, மு.ப. 02:08 இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு என்ற கட்டத்தை நெருங்கிக் கொண்டுவரும் நேரத்தில், இக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்கிய பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனையே சேரும். அவர் மீதான விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும், தமிழ் மக்களை வழிநடத்தி, ஓரணியில் வைத்திருந்தார் என்று உறுதியாகக் கூறமுடியும். சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம், நேற்று முன்தினம் (05) ஆகும். அவருடைய உடல்நிலை தொடர்பான கேள்விகள், அவ்வப்போது எழுந்துவருவதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால், தன்னாலியன்றளவு…

  11. புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 07:11 - 0 - 1 ஜனாதிபதித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ராஜபக்‌ஷர்கள், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வெளியேறும் வரையில் தாம் வைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு அப்பாலான நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையையும் மீண்டும் அடைந்துகொள்ளலாம் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. ராஜபக்‌ஷர்களைத் தோற்கடித்து வெளியேற்றியதும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கில், ரணில் - மைத்…

  12. கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சி கூட்டிணைவு: அபத்தங்களும் ஆபத்துகளும் யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், பொதுவேலைத்திட்டத்தின் கீழ் பத்து அரசியல் கட்சிகள் இணைவது தொடர்பான கூட்டமென்று இடம்பெற்றிருந்தது. இதில் பங்குகொண்ட கட்சிகளில், வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திவரும் பிரதான அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாகும். இது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குகொண்டிருந்தார். அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவை ஆதரித்து பேசியிருந்த போதும், உடன்பாட்டில் யையெழுத்திடவில்லை. கிடைக்கும் தகவல்களின்படி, கூட்டமைப்பின்…

  13. சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்! - நக்கீரன் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள - பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று …

  14. தோற்றுப்போன பேரவை: ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ வடக்கு மாகாண அரசியலில் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தின் போது, அதைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு நடுநிலைத் தரப்பு முன்வராதா என்ற ஏக்கம் தமிழ் மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றிய முரண்பாடுகள், வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்தாகவும் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைப்பதாகவும் அமையும் அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இத்தகைய சந்தர்ப்பத்தில், இரண்டு தரப்புகளையும் அழைத்துப் பேசி, இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடுநிலையான- இரண்டு தரப்பு மீதும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய சக்தி ஒன்றின் தேவை உணரப்பட்டது…

  15. சர்ச்சைக்குரிய உரை மீண்டும் ஆட்சிக்கு மகிந்த ராசபக்ச - கருணா |

  16. ஜெனீவா தீர்மானம் ஏற்கப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா சொல்லப்போவது என்ன? 1983 ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் அண்டு முள்ளிவாய்க்கால் அவலம் வரை எத்தனை கண்டனங்கள் அழுத்தங்கள். அத்தனையும் சலித்துப்போய்விட்டன. பொதுநலவாய நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும்போது இனப்பிரச்சினைத் தீவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் இந்தியாவும் கூறுகின்றது. ஏன் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்காத அமெரிக்காவும் எதிர்பார்க்கின்றது. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த கண்டனங்கள் அழுத்தங்கள் போன்றவற்றை 1983ஆம் ஆண்டில் இருந்து காண்கின்றனர். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது எத்தனை கண்டனங்கள் எழுந்தன. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கூட இலங்கை நிலைமை விவாதிக்க…

  17. முற்போக்கின் தோல்வி ஏன்? -1 ஜெ, காந்தியம் இன்று உரையை அதிகாலையில் கேட்டேன் மீண்டும். உலகச்சிந்தனை போக்கு முதல் அது இந்தியாவுக்கு வந்தது வரை ஒரு வரலாற்று சித்திரத்தையும் அளித்த உரை. கேட்கும்போது தோன்றியதும், பதில் தெரியாததுமான கேள்வி இது. சிந்தனையும் சமூகமும் முன்னேதானே செல்லும்? தன் எல்லா போதாமைகளுடனும் இடதுசாரிச் சிந்தனை உலகை நல்ல விஷயங்களை நோக்கித்தானே முன்னகர்த்தியது? நம் காலத்தில் நாம் மேலும் முன்னல்லவா நகரவேண்டும்? ஜனநாயகம் உள்ள தேசங்களில் மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதை வாக்குகள் மூலமாவது அறிய இயல்கிறது, பிரிட்டனின் ஐரோப்பிய துண்டிப்பு, டிரம்ப் வெற்றி, இங்கே சமூகம் மோதியை தேர்தெடுத்தது எல்லாமே உலகம் வலதுசாரி கருத்தியலையும் தேசியவாதத்தையும் …

  18. இந்தியா வேண்டும் ஆனால் 13ஐ அனுமதிக்க முடியாது | திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம(ததேமமு)

  19. பிரசுரித்தவர்: admin September 7, 2011 “…………………………………தம்மைப் பொறியில் சிக்கவைக்க மேற்குலகம் முனைகிறது என்பது அரசுக்கு வெளிச்சமாகி விட்டது. இந்தநிலையில் தான், சீனா, ரஸ்யாவின் துணையுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா- நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்குப் பறக்கிறார். அதுமட்டுமன்றி வழக்கத்தை விட வலுவானதொரு அணியை ஜெனிவாவுக்கு இந்த முறை அனுப்பப் போகிறது அரசாங்கம். இதற்கு முன்னர் அதிகாரிகளை நம்பிக் களமிறங்கிய அரசாங்கம், இந்த முறை அமைச்சர்களையே முற்றுமுழுதாக களமிறக்கத் தீர்மா…

  20. இறந்தவர்களை நினைவுகூர்தல் நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பி.யின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும்போது அவர் சொன்னார், 'ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்டபின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலமை மாறத் தொடங்கியது. 90 களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வந்த ஆண்டுகளில் நிலமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால் இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்கள…

    • 1 reply
    • 829 views
  21. ஈ.சரவணபவனின் செவ்வி

  22. "பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் (1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.) மார்கரெட் தாட்சர் தனது பிரதமர் பதவிக் காலம் முழுவதும், செல்வந்தர்களின் மீட்பராகவே இருந்தார். ஆனால், பொது மக்களுக்கு முன்னால், மிகவும் எளிமையானவராக காட்டிக் கொண்டார். தொலைக்காட்சி காமெராவுக்கு முன்னால், பொது இடங்களில் குப்பை…

  23. நலத்திட்டம் இலவசமா ? - சுப. சோமசுந்தரம் 'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ : வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பார…

  24. கண்டி கலவரத்தின் பின்னணி என்ன? கலவரங்களை வழிநடத்தியது யார்? #Groundreport இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கண்டி கலவரங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற கலவரங்கள் தொடரக்கூடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகிறது. இந்தக் கலவரம் எப்படித் துவங்கியது, பின்னணி என்ன? கண்டியின்…

  25. எரித்திரியா தேசிய விடுதலை ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற புராதன கருவிகளேந்தி போரிட்ட எத்தியோப்பியர்களிடம் தோல்வியுற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த சரித்திர உண்மையை நம்பித் தான் ஆக வேண்டும். இப்போதே உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அன்று இந்த செய்தி ஐரோப்பாவில் எத்தகைய அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கும்? ஐரோப்பியர்கள் அந்த காலனியப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.