நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
அமெரிக்காவைப் பொறுத்தவரை ராணுவம், கப்பல் படை, விமானப்படை, நீர்மூழ்கிக் கப்பல் படை மற்றும் கடலோர கண்காணிப்புப் படை என்ற ஆறு பாதுகாப்புப் படைப் பிரிவுகள் உள்ளன. அவற்றுடன் தற்போது விண்வெளி பாதுகாப்புப் படையும் புதிதாக இணைந்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை யாரும் விண்வெளிப் படையை உருவாக்கியதில்லை முதல்முறையாக அமெரிக்க அதை செயல்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் போருக்கு விண்வெளியே சிறந்த களமாக இருக்கக் கூடும் என்பதால் இந்த படை உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகளில் 16,000 வீரர்களைக் கொண்ட மிகச் சிறிய படையாக இது செயல்படவுள்ளது. நாட்டின் எல்லை கண்காணிப்பு, தேசியப் பாதுகாப்பு, சர்வதேச தகவல…
-
- 2 replies
- 624 views
-
-
மகிழ்ச்சி பெருமகிழ்ச்சி, பட்ட நம்பிக்கைகள் பசுமையாய் துளிர்க்கிறதில். நாம் நட்ட வீரரின் நடுகல் சிதைவுகள் முன் அஞ்சலியாய் மீண்டும் அஞ்சாது நிமிர்கிறதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பத்திர்கையாளர் மாநாட்டின் சில பகுதிகளை ஒளிப்பரப்பில் பார்த்தேன்.. சம்பந்தர் மிகவும் நிதானமாக பேசினார். விக்னேஸ்வரனின் பேச்சிலும் பொறுப்புணர்வு தொனித்தது. பேட்டி ஆங்கில மொழி பெயர்ப்புடன் தமிழில் நடந்திருக்க வேண்டும். முதல் பேச்சையே கொழும்புத் தமிழரான சுமந்திரன் சிங்களத்தில் வளா வளா என்று பேசி சரணாகதி சாயலை ஏற்படுத்த முணைந்தமை கண்டனத்துக்குரியது. ஆனால் கொழும்பில் வாழ்ந்தபோதும் திரு விக்னேஸ்வரன் விடுதலைக்கான இராசதந்திரத்துடன் ஆனால் உறுதியாக பேசியது நம்பிக்கை தருகிறது. பேட்டிகளில்…
-
- 2 replies
- 606 views
-
-
முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில். - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களின் நண்பனாக முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக விவாதித்த அனுபவங்களில் இருந்து சில சொல்ல முன்வருகிறேன். இதனை ஆரோகியமான விவாதமாக்குவதும் பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் முஸ்லிம்களின் உரிமை. . சரியத் அடிப்படையிலான முஸ்லிம் விவாக சட்டங்கள் பற்றிய விவாதங்கள் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகளாவியும் இடம்பெறுகின்றன. சரியத் போன்ற முஸ்லிம் முன்னவர்களின் சட்டங்களை கோட்பாட்டு ரீதியாகவோ அல்லது நடைமுறையிலோ புனித நூலுக்கு இணையாகவோ தொடற்ச்சியாகவோ கருதுகிற பழமை வாதிகளுக்கும் இணையோ தொடற்ச்சியோ இல்லை என்கிற இளைய தலைமுறைக்கும் இடையிலான உள் விவாத…
-
- 2 replies
- 1.6k views
-
-
தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை மருத்துவர் போதினி சமரதுங்க 'உங்களால் தமிழ் பேச முடியாவிடில், பொதிகளைக் கட்டிக்கொண்டு கிளம்பு வேண்டியதுதான். இங்கே தமிழ் பேசாவிடில், சேவை வழங்க முடியாது' என்று சொன்னார் எம்மை வரவேற்ற மருத்துவ நிபுணர் (Consultant). யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடக்கே சேவை செய்ய விரும்பினேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைக்கு மாறாக நாட்டின் மறுமுனைக்கு கிளம்பிச் சென்றேன். ஆங்காங்கே முளைக்கும் சிறு கட்டிடங்கள்.... குண்டும் குழியுமான வீதி... பயணிக்கும் போதே, மேலெழுந்த தூசி, தோலின் மீது படிந்து, பிரவுன் நிற படிவம் ஒன்றை தந்திருந்தது. படித்து, மருத்துவ வேலைக் செய்யும் பெரும் எதிர்பார்ப்பில் வந்த எமது கன…
-
- 2 replies
- 737 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. …
-
- 2 replies
- 568 views
-
-
தமிழகத்தில் பித்துக்குளி அரசியல்! அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, அதில் ஒவ்வொன்றாக செய்ய வேண்டிய செயல்களை வரிசைப் படுத்தி அதனை எல்லாக் கட்சிகளும் தொடர்ந்து பின்பற்றி, வலியுறுத்தி, நடத்திக் காட்ட வேண்டியதுதான் இன்றைக்குத் தேவை. இவ்வளவு நாள் திடீர்-ஞானாம்பிகை செய்த அடாவடியால் ஈழ விதயங்களைப் பேசுவதற்கே அஞ்சிக் கிடந்த தமிழகம் - தற்போதைய மெல்லிய மாற்றத்தால் குறைந்த பக்கம் பேசத் தொடங்கியிருக்கிறது. தேவைக்கேற்றபடி திருப்பிக்கொள்ள ஏதுவாகத்தான் அம்மையார் அளந்து விட்டிருக்கிறார் அறிக்கை. அதனை அரசியல் நோக்கர்கள் உணராமல் இல்லை. ஆயினும் வலமா போனாலும் சரி இடமா போனாலும் சரி கடிக்காமல் போனால் போதும் என்ற நிலையிலேயே தமிழகம்இருக்கிறது. தி.மு.க ஆட்சியிலே "தமிழகத்தில் இருந…
-
- 2 replies
- 1k views
-
-
`சர்வதேச கடல் சட்டம் அனுமதிக்கும் அந்தப் பகுதியிலும் தங்களின் கப்பல் செல்லும்’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு சீன கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்துள்ள நிலையில் இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு வலுப்பெற்று வருகிறது என்றும் இதனால் பதற்றம் அதிகரிக்கும் என்பதும் ராணுவ ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ’யூ.எஸ்.எஸ் அமெரிக்கா’ மற்றும் யு.எஸ்.எஸ் பங்கர் ஹில் ஆகிய போர் கப்பல்கள், மலேசியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதே நேரத்தில் சீனக் கப்பல் ஒன்றும் அந்தப் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலைகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா மற்றும் ஆஸ்திரேலியப் போர் கப்பல்களும் அருகாமையில் …
-
- 2 replies
- 898 views
-
-
சமய மாற்றம் பிழையா? எல்லா சமயங்களும் சமனா? தமிழருக்கென்று ஒரு சமயமா? S. Ratnajeevan H. Hoole on October 25, 2021 Photo, Myadvo அண்மையில் சிவசேனையைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ சமயத்துக்கு நெறிமுறையற்ற மதமாற்றம் செய்ய தூண்டப்படுகிறார்ளென்றும், அதை நிறுத்தவேண்டும் என்றும் பத்திரிகைகளில் 23.09.2021 அளவில் ஒரு கட்டுரையை எழுதி (உதாரணம் காலைக்கதிர் தமிழ்வின், ஈழநாடு), அதை ஒரு அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார். அந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அந்த முறைப்பாட்டை ஒரு குற்றச்சாட்டாய்க் கருதி நடவடிக்கைகள் அவர் ஆரம்பித்து விட்டார். இலங்கையிலே நெறிமுறையற்ற மதமாற்றத்தில் அதிகம் ஈடுபடுபடுபவர்…
-
- 2 replies
- 576 views
-
-
இந்தியா வல்லரசாக வேண்டாம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு ஸ்ரீலங்கன் சொன்னார் பொறுத்திருந்து பாருங்கள் அமெரிக்கா ரஷ்யாவிற்கு அடுத்தப் படியாக உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை வரப்போகிறது என்று சொன்னார் அது அவரது ஆசை எதிர்பார்ப்பு அதில் தவறு இருப்பதாக அதீத கற்பனை இருப்பதாக யாரும் சொல்ல முடியாது என் நாடு முன்னேறி விடும் என்று நான் நினைப்பது எந்த வகையில் தவறாகும். இன்று நம் நாட்டில் பலரும் உலகின் அடுத்த வல்லரசு இந்தியாதான் என்று உரக்கப் பேசி வருகிறார்கள் இதை கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது எங்கெல்லாம் மனித உரிமைகள் மீரப்படுகிறதோ எங்கெல்லாம் அப்பாவி ஜனங்கள் கொடுமை படுத்தப் படுகிறார்களோ அங்கெல்லாம் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கும் அராஜ…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார். அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார். இதுக…
-
- 2 replies
- 522 views
-
-
சிந்துவாசினி பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை BBC/DEBALIN ROY Image caption சஞ்சாலி `வரலாற்றில் முதன்முதலாக எரிக்கப்பட்ட பெண் யார்? எனக்குத் தெரியாது ஆனால் கடைசியாக எரிக்கப்பட்ட பெண்ணாக யாராக இருப்பார் என்பது தான் என்னுடைய கவலை கடைசியாக எரிக்கப்பட்டது யாராக இருக்கும்?' - சஞ்சாலியின் தாயார் அனிதாவின் அழுகுரலைக் கேட்டபோது, ராமசங்கர் `வித்ரோஹி'யின் வரிகள் என் மனதில் தோன்றின…
-
- 2 replies
- 929 views
-
-
இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்! அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அ…
-
- 2 replies
- 645 views
-
-
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள…
-
- 2 replies
- 957 views
-
-
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான சி.வரதராஜன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய செவ்வி
-
- 2 replies
- 645 views
-
-
யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன் December 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 மில்லியன் ரூபார் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, யாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 07.12.2018 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டினை எதிர் தரப்பு எதிர்…
-
- 2 replies
- 507 views
-
-
குதிரை இறைச்சி முடிந்து கழுதை இறைச்சிக்கு போனது கதை ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் தயாரித்து முடித்த உணவுப்பொருட்களின் பெட்டிகளில் மாட்டிறைச்சிக்கு பதில் குதிரை இறைச்சி கலக்கப்பட்ட செய்தி கடந்த சிலநாட்களாக முக்கிய இடம் பெற்றிருந்தது. குதிரை மட்டுமல்ல கழுதை இறைச்சியும் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை பிரிட்டனில் இருந்து வெளிவரும் இன்டிப்பென்டன்ட் இன்றய காலைச் செய்தியில் வெளியிட்டுள்ளது. கழுதை இறைச்சி பெரும்பாலும் பிரான்சில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறிய பத்திரிகை கழுதை குதிரை போன்றன இறைச்சியடிக்கப்பட்ட கதையையும் அம்பலப்படுத்தியுள்ளது. ருமேனியா நாட்டின் வீதிகளில் குதிரைகளை இனி ஓட முடியாது என்று அந்த நாட்டின் அரசு சட்டம் போட்டுள்ளது, அதைத் தொடர்ந்து…
-
- 2 replies
- 693 views
-
-
Vaakai Livetv இன் புகைப்படம் ஒன்றை Vavi Sanபகிர்ந்துள்ளார். சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாகச் சில கனேடியத் தமிழ் பாடகர்கள்! வாகை TV 26.08.2013 http://www.livestream.com/vaakai வெளிநாடுகளில் தமிழின உணர்வாளர்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் வகையில் இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதென்பது ஒன்றும் புதியதில்லை. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதென்பதைக் கண்டறிதல் கடினம்தான் என்பது உண்மை. எனினும், மக்கள் தம் முன் நடக்கும் நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளில் பங்கு பற்றுவோரையும் கூர்ந்து அவதானித்து தமது சொந்தப் பகுத்தறிவின் துணைகொண்டு ஆராயும் போது இதைக் கண்டறிதல் சற்று இலகுவாகிவிடும். தமிழ் நாட்டிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று…
-
- 2 replies
- 785 views
-
-
சீனாவில் கொவிட் – 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது. சீனாவில் அண்மைய வாரங்களில் உள்நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் அதன் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு விமானங்கள் நிறைய மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும், முகக்கவசங்களையும், க…
-
- 2 replies
- 532 views
-
-
ஒரு அமைப்பு சர்வதேச விதிமுறைகளை மீறின என்ற காரணத்தால் அதே விதிகளை பின்பற்றுவோம் என உலக சாசனங்களில் கையெழுதிட்ட நாடுகள் செய்யலாமா?? செய்தால் அவர்களும் பயங்கரவாதிகள் தானே?? அவர்களுக்கு என்ன தண்டனை? யார் தண்டனையை பெற்றுக்கொடுப்பது??
-
- 2 replies
- 673 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 08:25.48 AM GMT +05:30 ] சமீபத்தில் இந்து மதவாதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். கமலகாசன் நடித்து வெளிவந்துள்ள ‘மன்மதன் அம்பு’ திரைப் படத்தில் பெண்கள் நோன்பு இருப்பதில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தும் பாடல் ஒன்று அத்திரைப்படத்தில் இருக்கிறதாம் - அதை அகற்றக் கோரி வழக்கு. இப்போது கமலகாசனும் பாடலை எதிர்ப்புக்குப் பணிந்து நீக்கி விட்டார். மதவாதிகள் என்றாலே மக்களுக்கு தெளிவு வந்துவிடக் கூடாது என்ற விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். அதிலும் இந்து மதத்திலுள்ள பார்ப்பன உயர்சாதிக்காரர் களும், மார்வாடிகளும், வியாபாரிகளும் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் மக்களுக்கு உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
விடுப்பு மூலை: விக்கியும் கம்பவாருதியும் நந்தி முனி வன்னியப்பு வேட்டியை லோன்றியில் மினுக்கக் கொடுத்துவிட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பேப்பர் மாமா அந்தப் பக்கமாக வந்தார். பேப்பர் மாமா பல பத்திரிகைகளில் றிப்போட்டராக இருக்கிறார். ஒரு பழுத்த ஊடகவியலாளர். அப்புவைக் கண்டதும் அவர் சைக்கிளை நிறுத்தினார். பேப்பர் மாமா: என்னப்பு உதில குந்திக்கொண்டிருக்கிறியள்? அப்பு: வேட்டியை அயர்ன் பண்ண வந்தனான். பேப்பர் மாமா: வீட்டில பேரப்பிள்ளையள் அயர்ன் பண்ணாதே? அப்பு: செய்யலாம் தான். ஆனா கறன்ற் பில் எகிறுதே. ஒவ்வொரு 30 யுனிற்றுக்குப் பிறகு கறன்ற் பில் ரொக்கற்றைப் போல ஏறுதே? அதைவிட இஞ்ச அயர்ன் பண்ணலாம். பேப்பர் மாமா: அதுவும் சரிதான்... வேற என்னப்பு புதினம்? …
-
- 2 replies
- 603 views
-
-
புகைப்படங்களில் குளறுபடி. இலங்கை அரச, பாதுகாப்பு துறையினர் அவர்களுக்கு வந்த புலனாய்வு தகவல்களை சீரியஸ் ஆக எடுக்காமல் கோட்டை விட்டார்கள் என்று பார்த்தால், தேடப்படும் நபர்கள் குறித்த புகைப்படங்களில் பெரும் தவறினை விட்டு உள்ளனர். அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் படம் எவ்வாறு, (அவரது சரியான பெயருடன்) இந்த தேடப்படுவோர் பட்டியலுக்கு இடையே வந்தது என்று புரியவில்லை. எழுத்தாளரான இந்த பெண், முகநூலில் காட்டமாக மறுப்பு தெரிவிக்க, இலங்கை பாதுகாப்பு துறை மன்னிப்பு தெரிவித்துள்ளது. இது இன்னுமொரு குழப்பத்துக்கு வித்துட்டுள்ளது. இந்த கொலையாளிகளின் தலைவன், முகம் மறைக்காமல் படங்களில் தோன்றுகிறான் . வன்மமாக வீடியோவில் பேசுகிறான். இவன் உயிருட…
-
- 2 replies
- 871 views
-
-
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில், தமது இரண்டாவது பிள்ளையை பெத்து, டாக்ஸியில் வீடு திரும்பி இருக்கின்றனர் தம்பதியினர். வழக்கம் போல, ஒரு வயதான மூத்த பிள்ளையினை இறங்க்கிக்கொண்டு, புது குழந்தையினை மறந்து விட்டு இறங்கிப் போய் விட்டனர். காசை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார் டாக்ஸி டிரைவர், பின்னாள் நல்ல நித்திரையில் இருந்த தனது பயணி குறித்து தெரியாமல். வீட்டினுள் சென்ற பின்னர் தான் எங்கே குழந்தை என பதறி அடித்துக் கொண்டு தேட, அம்மா எடுத்ததாக அப்பாவும், அப்பா எடுத்ததாக அம்மாவும் நினைத்து விட்டு விட்டது தெரிந்து, அப்பாக்காரர் தெருவில் இறங்கி காரின் பின்னால் கத்தியவாறே ஓடி இருக்கிறார். இவர் ஓடி, காரை பிடிக்க முடியுமா. கூடி விட்ட அயலவர்கள் போலீசாரை அழைத்தனர். …
-
- 2 replies
- 564 views
-
-
சுவிஸைப் போன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு சமஷ்டி வேண்டும் - அரசியல் விவகார அதிகாரி! சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 09:18 சுவிஸில் 26 மாநிலங்களும் சுயமாக அதிகாரங்களைக் கொண்டு தாமே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதேபோன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அவை தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதே பொருத்தமானது. இத்தகைய ஆட்சி முறையை கொண்டுவர சகல இனங்களும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே இந்த நாட்டுக்கு நாம் தெரிவித்து வருகின்றோம். சுவிஸ் நாட்டின் அரசியல் விவகார அமைச்சைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி அதிகாரி தமினானோ சுடே தமாத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 672 views
-