Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை?

23 members have voted

  1. 1. புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை?

    • மற்றவர்கள் மீது பொறாமை, எரிச்சல்
      2
    • நமது இனம் பற்றிய தாழ்வு மனப்பான்மை
      5
    • ஊரில பட்ட மனக்கசப்புக்கள்
      0
    • நம்மவர்களை நையாண்டி செய்தால் பின்விளைவுகள் ஒண்டும்வராது எண்டுற துணிச்சல்
      1
    • நம்மவர்கள் படைப்புக்களை ரசிக்கும் கலைநயம் இல்லாமல் இருப்பது
      3
    • நம்மவர்கள் ஆற்றல்கள் அற்ற வெற்றுச்சோத்திகள் எண்டுற எண்ணம்
      4
    • தனிப்பட்ட கோப, தாபங்கள்
      1
    • வேறு ஏதாவது பதில்
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

இண்டைக்கு ஒரு சின்னக் கலந்துரையாடல். அது என்ன எண்டால் புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை என்பது பற்றினது. இதுபற்றி கொஞ்சக்காலமா கதைக்கவேண்டும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது.

இப்ப பாருங்கோ வெள்ளைக்காரன் புதுமை எண்டு சொல்லிக்கொண்டு என்னத்த செய்தாலும் நம்மட ஆக்கள் வாயமூடிக்கொண்டு ஆஹா ஓஹோ எண்டு சொல்லி பாராட்டுவீனம். தமிழ்நாட்டு தமிழன் சின்னத்திரை, பெரியதிரை எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் நம்மட ஆக்கள் ஆஹா ஓஹோ எண்டு சொல்லிப் பாராட்டுவீனம். ஏன்.. மலேசியா, சிங்கப்பூரில இருக்கிற அங்கத்தைய தமிழ் ஆக்கள் பொழுதுபோக்கு எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் கூட நம்மண்ட ஆக்கள் ஆஹா ஓஹோ பலே எண்டு எல்லாம் சொல்லி பாராட்டுவீனம்.

ஆனால் பாருங்கோ...

நாம ஏதாவது வித்தியாசமா செய்தால் அல்லது படைத்தால்... உனக்கு மூளை சுகமில்ல, உனக்கு நல்லா தட்டிப்போச்சிது, நீ ஒரு சைக்கோ, நீ ஒரு லூஸ், கெதியில நல்ல ஒரு வைத்தியரா போய் பார் இப்பிடி எல்லாம் சொல்லி நம்மள நையாண்டி செய்யுறதுக்கு, நமக்கு கல்லு எறியுறதுக்கு எண்டு ஒரு கூட்டம் படுத்து இருக்கிது.

இப்படி நம்மவரை நம்மவரே ஊக்கப்படுத்தாது, காலை இழுத்து விழுத்துவதற்கான காரணங்களாக நீங்கள் எவற்றை கருதுறீங்கள் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

இப்படி நம்மவர்கள் நம்மவர்கள் மீது பாரபட்சமாக நடந்து கொள்வதற்கான காரணங்கள் எவை?

மற்றவர்கள் மீது பொறாமை, எரிச்சலாக இருக்குமோ?

நமது இனம் பற்றிய தாழ்வு மனப்பான்மை காரணமாக இருக்குமோ?

ஊரில பட்ட மனக்கசப்புக்கள் காரணமாக இருக்குமோ?

நம்மவர்களை நையாண்டி செய்தால் பின்விளைவுகள் ஒண்டும்வராது எண்டுற துணிச்சல் காரணமாக இருக்குமோ?

நம்மவர்கள் படைப்புக்களை ரசிக்கும் கலைநயம் இல்லாமல் இருப்பது காரணமாக இருக்குமோ?

நம்மவர்கள் ஆற்றல்கள் அற்ற வெற்றுச்சோத்திகள் எண்டுற எண்ணம் காரணமாக இருக்குமோ?

தனிப்பட்ட கோப, தாபங்கள் காரணமாக இருக்குமோ?

வேறு என்னவாய் இருக்கும்?

உங்கட கருத்துக்கள கொஞ்சம் சொல்லுங்கோ.

நன்றி!

  • தொடங்கியவர்

வாக்களிச்ச பெருமக்களிற்கு மிக்க நன்றிகள்..

இப்பத்தான் நினைப்பு வந்திச்சிது. நான் நினைக்கிறன் இன்னுமொரு காரணம் என்னவா இருக்கும் எண்டால்... சிலவேளைகளில் ஆக்கள இவர் எண்டு தனிப்பட தெரிஞ்சு இருக்கிறதால அப்பிடி செய்யுறீனமோ தெரியாது. இப்ப அறிமுகம் தெரியாத ஆக்கள் பற்றி ஏதாவது கதைக்கிறதுக்கும், அறிமுகமான ஆக்கள் பற்றி ஏதாச்சும் கதைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கிதுதானே. அப்ப நல்லா அறிமுகமான - அதாவது தமது சமூகத்தை சேர்ந்தவர்கள் எதையாவது வித்தியாசமாக செய்யும்போது அதை எம்மவர்கள் இயல்பாகவே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை தோன்றலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞா,

காரணம் பெரும்பாலும் 'ஒப்பீடுதான். தென்னிந்திய நாடகம்/திரைப்படங்களோடு எம்முடைய ஆக்கம், படைப்புகளை ஒப்பீடு செய்து தரத்தை நிர்ணயிப்பதுதான் இதன் முக்கிய காரணம்.

இப்ப பாருங்கோ வெள்ளைக்காரன் புதுமை எண்டு சொல்லிக்கொண்டு என்னத்த செய்தாலும் நம்மட ஆக்கள் வாயமூடிக்கொண்டு ஆஹா ஓஹோ எண்டு சொல்லி பாராட்டுவீனம். தமிழ்நாட்டு தமிழன் சின்னத்திரை, பெரியதிரை எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் நம்மட ஆக்கள் ஆஹா ஓஹோ எண்டு சொல்லிப் பாராட்டுவீனம். ஏன்.. மலேசியா, சிங்கப்பூரில இருக்கிற அங்கத்தைய தமிழ் ஆக்கள் பொழுதுபோக்கு எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் கூட நம்மண்ட ஆக்கள் ஆஹா ஓஹோ பலே எண்டு எல்லாம் சொல்லி பாராட்டுவீனம்.

சரி தான் முரளி..! தமிழ் நாட்டு தமிழன் அடிப்பது நமக்கு கூத்தாகப்பட்டதும், சிங்கப்பூர், மலேசியாவில் அடிப்பது கோமாளித்தனமாகவும் தெரியும் நம்மவர்களுக்கு, நம்மவர்களில் சிலர் செய்வது "வெட்டிப்படைப்பாக" தெரிவது ஆச்சரியம் இல்லை.

இதையெல்லாம் பார்த்தால் நாம் முன்னுக்கு வர ஏலாது..! நமக்கு நாம் செய்வது சரி என்று பட்டால் செய்வதுதான் சரி..! கல்லெறிபவனுக்கு கல்லெறிய மட்டும்தான் தெரியும்..!

  • தொடங்கியவர்

கலைஞா,

காரணம் பெரும்பாலும் 'ஒப்பீடுதான். தென்னிந்திய நாடகம்/திரைப்படங்களோடு எம்முடைய ஆக்கம், படைப்புகளை ஒப்பீடு செய்து தரத்தை நிர்ணயிப்பதுதான் இதன் முக்கிய காரணம்.

ஓம் தமிழ்தங்கை... இப்ப விஜய், சூரியா, மாதவன், ஜெயம்ரவி அவன் இவன் எண்டு உவேள் எப்பிடியான கூத்துக்கள் செய்தாலும் அத நம்மண்ட ஆக்கள் வாயமூடிக்கொண்டு இருந்து நல்லா ரசிச்சு பார்க்கிறீனம். நாம எதையாச்சும் எழுதினாலே குளிசை போடுறது பற்றி கதைக்கிறீனம்.

சரி தான் முரளி..! தமிழ் நாட்டு தமிழன் அடிப்பது நமக்கு கூத்தாகப்பட்டதும், சிங்கப்பூர், மலேசியாவில் அடிப்பது கோமாளித்தனமாகவும் தெரியும் நம்மவர்களுக்கு, நம்மவர்களில் சிலர் செய்வது "வெட்டிப்படைப்பாக" தெரிவது ஆச்சரியம் இல்லை.

இதையெல்லாம் பார்த்தால் நாம் முன்னுக்கு வர ஏலாது..! நமக்கு நாம் செய்வது சரி என்று பட்டால் செய்வதுதான் சரி..! கல்லெறிபவனுக்கு கல்லெறிய மட்டும்தான் தெரியும்..!

ஓம் லீ... மற்றவன் செய்யேக்க பொழுதுபோக்கா தெரியும். அதயே நாம செய்யேக்க வெட்டிப்படைப்பாக அல்லது லூசுத்தனமாக தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி உங்கள் ஆதங்கம் புலத்தில் வாழ்பவர்கள் குறைந்த அனுபவங்களோடும் குறைந்த வசதிகளோடும் உருவாக்கும் படைப்புகளில் குறை கண்டுபிடிக்க கூடாதென்று. அப்படித்தானே?

மேலோட்டமாக பார்த்தால் சரியாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் புலத்திலுள்ளவர்கள் இவற்றை பெறமுடியாதவர்களாகவா இருக்கின்றார்கள்?

நிச்சயமாக இல்லை. எனக்குத் தெரிய கனடாவை பொறுத்தவரையில் சினிமா பற்றி முறையாக கல்வி கற்கக்கூடிய வசதிகளும் தேவையான சாதனங்களும் இங்கே உள்ளன. ஆனால் இங்கு படம் எடுப்பவர்கள் எல்லாவற்றையும் முறையாக பயின்றுவிட்டா எடுக்கிறார்கள்?

ஆகவே புலத்தில் உள்ளவர்களின் படைப்புக்களை அனுதாபத்தின் அடிப்படையில் ஆதரிக்கமுடியாது.

மக்களின் மனதில் இடம்பிடிக்க செய்யவேண்டியது படைப்பாளிகளின் கடமையே தவிர மக்களின் கடமை அல்ல.

  • தொடங்கியவர்

நான் படைப்புக்கள், ஆக்கங்கள் எண்டு சொல்லிறது சினிமா பற்றியவை மட்டும் இல்ல காட்டாறு. எழுத்தையும்தான் சொல்லிறன்.

அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் வாயையாவது மூடிக்கொண்டு இருக்கலாமே எண்டு சொல்லிறன். அவ்வளவுதான்.

மற்றவனை சைக்கோ, லூசன் எண்டு சொல்லிறத எல்லாம் விமர்சனமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒரு படைப்பாளியப் பார்த்து அவன் எப்படியான படைப்பாளியாக இருக்கட்டும்.. நீ வைத்தியரிடம் போய் உன்ன பரிசோதித்து கொள்ளு எண்டு சொல்லிறத இல்லாட்டு உனக்கு மூளை தட்டிப்போச்சிது எண்டு சொல்லிறத எல்லாம் ஒரு விமர்சனமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இதுகளப்பற்றித்தான் நான் இப்ப கதைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எம்மவர்களின் படைப்புகள் மீது எம்மவர்கள் பலருக்கு நம்பிக்கை குறைவு. எம்மவர்களின் தொலைக்காட்சியினை ஒருமுறையும் பார்க்காது சன்,ஜெயா தொலைக்காட்சிக்கு பின்னே செல்பவர்கள் அதிகமாக இருக்கிறார். தென்னிந்தியாவில் திரைப்படம்,சின்னத்திரையில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். எடுத்த வீச்சில் எம்மவர்களின் தொலைக்காட்சி முன்னிலைக்கு வர முடியாது. அதற்கு அவர்களுக்கு அதிக பணம் தேவை. அதற்கு நாங்கள் தான் ஆதரவு குடுக்க வேண்டும். ஆனால் எம்மவர்களில் பலர் எம்மை அடையாளப்படுத்தாத , தமிழைக் கொலை செய்யும், பீடி கடத்துபவர்களையும் புலி என்று பொய்ச் செய்திகளைத் தரும் சன்,ஜெயாத் தொலைக்காட்சிக்கே ஆதரவு தருகிறார்கள். ஆனால் எம்மவர்களில் சிலர் எமது தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு தந்ததினால் தான் 'படலைக்குப் படலை' போன்ற சிறந்த எம்மவர்களின் படைப்புக்கள் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

தரிசனம் (அவுஸ்திரெலியா), சிகரம் தொலைக்காட்சி போன்றவற்றுக்கு ஆரம்பத்தில் ஒரு சிலரே ஆதரவு அளித்தனர். ஆனால் இப்பொழுது சன் தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் மெல்ல மெல்ல தரிசனத்துக்கு மாறுகிற நிலமை சிட்னியில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆணிவேர் என்ர படம் ஜரோப்பா,கனடா போன்ற நாடுகளில் அதிக வசூலுடன் ஒட்யது. ஆனால் சிட்னித் தமிழர்களில் பலர் ஆணிவேர் பார்க்காது ரெண்டு என்ற தென்னிந்தியப் படத்தினைப் பார்க்கச் சென்றார்கள். பார்க்கச் சென்றவர்களிடம் ஆணிவேர் பார்க்கும் படி சொல்ல' உந்தப் படம் எங்கட ஆக்கள் தானே எடுத்தவை. தொழில் நுட்பம் சரியாக இருக்காது' என்று புறக்கணித்தார்கள். அப்படத்தினைப் பார்க்காமல் எப்படி எங்கட படம் சரியில்லாமல் இருக்கும் என்று நினைக்கலாம்?. ஆனால் பார்த்தவர்கள் நல்லபடம் என்று சொல்ல அட பார்க்காமல் விட்டு விட்டோமே என்று பிறகு அவர்களில் சிலர் கதைத்தினைக் காதில் கேட்டிருந்தேன்.

ஆனால் சிட்னியில் தாயகத்தில் உள்ள அறக்கட்டளை நிலையங்களில் வசிக்கும் எம்மவர்களுக்கு உதவி புரிவதற்காக வருட வருடம் 'லாவிங்கோ லாவிங்' என்ற சிட்னியில் நடைபெறும் அவலங்களைத் தரும் எம்மவர்களின் நகைச்சுவை நாடகங்கள் என்றால் எப்பொழுதும் மண்டபம் நிறைந்து வழியும். பலர் நுளைவுச்சீட்டினைக் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்வார்கள். தென்னிந்திய நகைச்சுவை நடிகர்களின் 'அசத்தப் போவது யாரு?' என்ற நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்வினை நடாத்தினவர்களுக்கு 40000 வெள்ளிகளுக்கு மேல நட்டம். ஆனால் எம்மவர்களின்' லாவிங்கோ லாவிங்' இம்முறை 2 முறை சிட்னியில் மேடை ஏற்றியும் பலருக்கு நுளைவுச்சீட்டுக் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்வதினைப் பார்க்க, சிட்னி வாழ் தமிழர்களின் 'லாவிங்கோ லாவிங்கை' எந்தத் தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சியினாலும் சிட்னியில் முறியடிக்க முடியாது என்பதினை அடித்துச் சொல்லலாம்.

எம்மவர்களின் படைப்புக்களை நாம் ஆதரவு தரவேண்டும். நிச்சயம் அவர்கள் சாதனை படைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் படைப்புக்களின் நயத்தை உணரும் உணர்வியக்கத்தை அதிகம் கொண்டிருப்பதில்லை. இதுதான் உண்மைக் காரணம்.

அடுத்தது.. எதிர் விமர்சனத்தைக் கண்டு தம்மைத் தாமே தாழ்த்தி உணரும் படைப்பாளிகளும் எம்மவர் மத்தியில் உண்டு. தமிழகம் இதற்கு எதிர்மாறு..!

உதாரணம்:

ஏரம்பு மாஸ்டர்: என்ன சோதி என்ர கதை ஒன்று இன்று பேப்பரில இருக்கு பார்த்தியே..?!

சோதி: பார்த்தன் மாஸ்டர்.

ஏரம்பு: எப்படி இருக்குது கதை.

சோதி: பறுவாயில்லை. டாக்டர் கோணல்துரை எழுதின ஒரு கதையும் இருந்திச்சுது மாஸ்டர்.

ஏரம்பு: அவரும் நல்ல படைப்பாளி தான்.

சோதி: அவர் தான் டாக்டராச்சே. அப்ப நல்லா எழுதுவார் தானே. நாலு படிச்ச மனிசன் நாலு பேரை அறிஞ்ச மனிசன் எழுதும் தானே.

ஏரம்பு: (தனக்குள்) அப்ப நான்..??! என்னைப் பற்றி இவன் என்ன சொல்வானோ..?!

சோதி: என்ன மாஸ்டர் ஜோசிக்கிறியள்.

ஏரம்பு: ஒன்றுமில்லையடாப்பா.. டாக்டர் கோணல்துரையின் கதையில என்ன விசேசம் உனக்குப் பிடிச்சிருக்கும் என்று யோசிக்கிறன்.

சோதி: அதில அவர் சோதி என்று என்ர பெயரை எழுதி இருக்கிறார் மாஸ்ரர்.

ஏரம்பு: வாயடைத்துப் போய்...... மெளனமாகி.. அலுவல் ஒன்றிருக்கு.. வாரேண்டாப்பா.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னிந்தியப் படைப்புக்களை கோமாளித்தனமானெதன்று சொல்லும் நீங்கள், எம்மவரின் படைப்புக்கள் பல அதைத்தழுவி அதே பாணியில் இருப்பதை ஏன் உணரவில்லை? அப்படியே ஈயடிச்சான் கொப்பியாக அன்னநடை நடக்கப்போய் தன்னடையும் கெட்டதாக எம்மவர் ஆடும் கூத்துக்களைப் பார்க்கிறோமே.

அப்ப அவையும் குப்பைகள் என்றுதானே கருதப்படும்?

நையாண்டி மேளம், படலைக்குப் படலை போன்றவை எங்கள் பாணியிலேயே எங்கள் தனித்துவத்தோடு அமைந்தவை. அவை வெற்றியும் பெற்றிருக்கின்றன. கந்தப்பு சொன்னது போல எம்மவரின் நகைச்சுவை நாடகங்கள் (இதற்கு முன்பும் வேறு பல நாடகங்களும் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு பெரு வெற்றியைப் பெற்றிருந்தன) வெற்றி பெறுகின்றன. அவை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

எந்தப்படைப்பு நையாண்டி பண்ணப்பட்டது என்று விவரங்களைத் தந்தால் இது தொடர்பில் அவரவர் தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். பொதுவாகச் சொல்வது பயனளிக்காது. ஏனெனில் உண்மையிலேயே நையாண்டி பண்ணப்படவேண்டிய (அல்லது புறக்கணிக்கப்பட வேண்டிய) காரியங்கள் எம்மவரிடம் நிறம்பவே நடக்கின்றன.

புத்தகங்கள் பற்றிக் கதைப்பதானாலும் கதைக்கலாம்.

குறிப்பிட்டவொரு பிரசுர நிலையத்துக்கு நீங்கள் சிலநூறு டொலர்களை விட்டெறிந்தால் யாரும் புத்தகம் போட முடியும். புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் அவர்கள் மிகச்சாதுரியமாக நிறையச் சுரண்டுகிறார்கள். (இதற்குள், தாம் தமிழை வாழவைக்க உயிரைக்கொடுத்து உழைப்பதாக பீலாவும் விடுவார்கள், இவர்களுக்கு சும்மாவே நன்கொடையாகக் காசள்ளிவீசவும் புலத்திலே சில கேணயர்கள் இருக்கிறார்கள்). இவ்வழியால் வரும் புத்தகங்களின் தரம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. எழுத்து என்பதைவிட்டுப் பார்த்தாற்கூட அட்டைப்பட வடிவமைப்பு, புத்தக வடிவமைப்பு, தாளின் தரம், அச்சுப்பதிப்பின் தரம், எழுத்துப்பிழை/இலக்கணப்பிழை என்று எல்லாமே சிக்கலாகவே இருக்கிறது. (வன்னியில் யுத்த காலத்திலேயே மிக அழகிய முறையில் அச்சுப்பதிப்புக்கள் சில வந்துள்ளன).

கொடுத்த காசுக்கு ஒழுங்காக, தரமாக புத்தங்களைத் தருகிறார்களா என்பது தொடர்பில் 'எழுத்தாளர்'களுக்கு அக்கறையில்லை.

படைப்பு குறிப்பிட்ட தரத்துக்காவது உள்ளதா என்பது தொடர்பில் பதிப்பாளர்களுக்கும் அக்கறை தேவையில்லை.

இப்படி நிறையச் சொல்லலாம்.

முடிவாக, இது ஒருவழியாக மட்டும் அணுகும் சிக்கலன்று.

சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வது ஒரு குறையென்றால், நிசமாகவே காரசாரமாக விமர்சிக்க வேண்டிய 'தரத்துடன்' பல படைப்புக்கள் தான்தோன்றித்தனமாக வெளிவருகின்றன என்பதும் உண்மை. விமர்சனங்களை ஆக்கபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை எத்தனைபேருக்கு உள்ளதென்பது அடுத்த கேள்வி.

கலை இரசனை தொடர்பில் எம்மக்களின் அணுகுமுறை மீதும் உரையாட வேண்டும்.

ஈழ ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக சீமானின் 'தம்பி' படத்தை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள், வர்த்தக ரீதியில் கொள்ளையாக அள்ளியும் கொடுப்பார்கள். (ஆனால் ராஜேந்தரின் வீராச்சாமியை ஏன் எம்மக்கள் கண்டுகொள்ளவில்லையென்பது பெரிய ஆராய்ச்சிக்குரிய கேள்வி). தலைப்பிலே யாழ்ப்பாணம் என்பதைப் போட்ட காரணத்துக்காக (அதுவே அப்பட்டமான வியாபாரத் தந்திரம் என்பது என் கருத்து) ராமேஸ்வரம் படத்தை, அதன் தகுதிக்கு மீறி பப்பாவில் ஏற்றுவார்கள்.

  • தொடங்கியவர்

ஆ... இந்திய சஞ்சிகைகளில வராத குப்பைகளையா நாம போடுறம்? இந்திய தமிழ்நாட்டு சஞ்சிகைகளில எப்படியான குப்பைகள் வருது, அவற்றுக்கு எப்படியான வரவேற்பு நம்மவர் மத்தியில இருக்கிது எண்டு நான் சொல்லித்தெரியவேண்டியதில்ல. அவங்கள் குப்பை தள்ளும்போது வாயப்பொத்திக்கொண்டு ரசிச்சு வாசிக்கிற ஆக்கள் நாம குப்பை தள்ளும்போது தங்களது பூங்கதவை, ஐ மீன் (I mean) அவர்களது பொன்னான வாயை திறந்து நாற்றம் அடிப்பதற்கான காரணம் என்ன?

முதலாவது காசு அல்ல இஞ்ச விசயம். காசு இல்லாமல் ஓசியில பார்க்கிறதுக்கே நம்மவர்கள் ஆ ஊ எண்டு ஏதேதோ சொல்லிறீனம். அதத்தான் கேட்கிறம்.

நம்மவரிட்ட காசு எதிர்பார்த்து ஏதாவது படைப்பு செய்யுற நேரம் பழனியில போய் மொட்டை போட்டுக்கொள்ளலாம் சாமியோவ்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ... இந்திய சஞ்சிகைகளில வராத குப்பைகளையா நாம போடுறம்? இந்திய தமிழ்நாட்டு சஞ்சிகைகளில எப்படியான குப்பைகள் வருது, அவற்றுக்கு எப்படியான வரவேற்பு நம்மவர் மத்தியில இருக்கிது எண்டு நான் சொல்லித்தெரியவேண்டியதில்ல. அவங்கள் குப்பை தள்ளும்போது வாயப்பொத்திக்கொண்டு ரசிச்சு வாசிக்கிற ஆக்கள் நாம குப்பை தள்ளும்போது தங்களது பூங்கதவை, ஐ மீன் (I mean) அவர்களது பொன்னான வாயை திறந்து நாற்றம் அடிப்பதற்கான காரணம் என்ன?

முதலாவது காசு அல்ல இஞ்ச விசயம். காசு இல்லாமல் ஓசியில பார்க்கிறதுக்கே நம்மவர்கள் ஆ ஊ எண்டு ஏதேதோ சொல்லிறீனம். அதத்தான் கேட்கிறம்.

நம்மவரிட்ட காசு எதிர்பார்த்து ஏதாவது படைப்பு செய்யுற நேரம் பழனியில போய் மொட்டை போட்டுக்கொள்ளலாம் சாமியோவ்!

அததான் நாங்களும் சொல்கிறோம் முரளி....அவர்கள் குப்பை கொட்டினால் அத விட நாத்தம் பிடிச்ச குப்பையை ஏன் நம்மவர்கள் கொட்ட வேண்டும். நம்மவர்களுடையது என்பதற்காக எல்லாவற்றைய்யும் பாரட்ட சொல்கின்றீர்களா....குப்பையில் நல்ல குப்பையை பார்க்கும்/வாசிக்கும் உரிமை ரசிகருக்கு இல்லையா....

நானும் ஒரு 7/8 வருடங்களூக்கு முன் நம்மவர்களின் மாற்று சினிமா என்று ஒரு படம் தியேட்டரில் பார்த்தேன்.....அதே சண்டை[அது பரவாயில்லை....இத சகிக்க முடியவில்லை] அதே 5 பாட்டு[ அதே....] அதே வில்லன்.....எல்லாமும் அதே.....

அன்றிலிருந்து நம்மவர்களி படம் என்றால் தியேட்டர் பக்க்கமே போவதில்லை.....

அதயே கொப்பி பண்ணுவதென்றால் எதற்கு நம்மவர்களூக்கு சினிமா....எத பாராட்ட சொல்கின்றீர்கள்.......

ஆனால் சமீபத்தில் வந்த நம்மவர்கள் படங்கள் மண் மற்றும்...... அது வேறு.....

அது போலதான் படலைக்கு படலை போன்ற மிக சொற்பமான நம்மவர் தொலைக்காட்சி தொடர்களும் நிகழ்ச்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.....ஆக நல்லவற்றை நம்மவர் அடுத்தவர் என்று பாராமல் எல்லோரும் ஆதரிக்கின்றார்கள்......

நம்மவர்கள் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும்...[வேறு வார்த்தைகளில் சொல்ல விரும்பவில்லை]ஆதரிக்க சொல்கின்றீர்களா?

என்னங்க ஞாயம் இது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பெறுத்த வரையில் எம்மவர்களின் திறமையில் குறையேதும் எப்தோதும் இல்லை, ஆனால் தென்னிந்திய படைப்புக்களின் தாக்கத்தை உள்வாங்கி அதனை அவர்களினது சொந்த படைப்புக்களில் திணிப்பதால் "நம்மவர்களுக்கே " உரித்தான பாணி, பாங்கு அந்த ஆக்கத்திலே இல்லாமலே போய்விடுகிறது.

வெற்றி பெற்ற எம்மவர் ஆக்கங்கள் எப்போதும் நம்மவர் பாணியிலே தான் அமைய பெற்றவையாக இருக்கும்

உதாரணமாக: படலைக்கு படலை, நையாண்டி மேளம், laughingங்கோ laughing.... இப்படி பல

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாத் தரிசனம் தொலைக்காட்சியினூடாக சில எம்மவர்களின் (கனடா வாழ் தமிழர்களின்) திரைப்படப் பாடல்களை பார்த்திருக்கிறேன். பெரும்பாலானவை தென்னிந்தியத்திரைப்படப் பாடல்களின் சாயலில் எடுத்துக்கிறார்கள். திரைப்படங்களும் தென்னிந்திய திரைப்படங்களின் சாயலைப் போல எடுக்க முயற்சிக்கிறார்கள். இதனாலே இப்படங்கள் தோல்வி பெருகின்றன. ஆனால் ஒரிரு படங்கள் விதி விலக்கு (தமிழச்சி - இப்படம் கனடா வாழ் குழு மோதலை மையப் படுத்தி எடுக்கப்பட்டது).

ஆனால் வன்னியில் எடுக்கும் படங்கள் நம்மவர் பாணியில் எடுக்கப் படுவதினால் எல்லோரையும் கவரக்கூடியதாக இருக்கிறது (உ+ம் - உறங்காத கண்மணிகள், குருதிச்சின்னங்கள்).

சஞ்சிகைகள் என்று பார்க்கும் போது கனடாவில் இருந்து வரும் ரிசியின் பரபரப்பு ,பரபரப்பு ஜேர்னல் கனடாவைத் தாண்டி ஜரோப்பா ,சிட்னியில் பல வாசகர்களைக் கவர்ந்து கொள்வதினால் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். ஆனால் சிட்னியில் வரும் எம்மவர்களின் உதயசூரியன் சஞ்சிகை, தமிழ் நாட்டு சஞ்சிகைகளின் சாயலில் வருவதினால் ஒரு சிலரைத் தவிர பலரை இச்சஞ்சிகை கவர்வதில்லை.

பித்தன் சொல்வது போல நம்மவர் பாணியில் வரும் படைப்புக்கள் பெரும்பாலும் வெற்றி பெருகின்றன. தென்னிந்தியப் பாணியில் வரும் எம்மவர்களின் படைப்புக்கள் படு தோல்வியடைகின்றன.

எம்மவர் படைப்புக்கள் அவை எழுத்தாக இருந்தாலும் சரி தொலைக்காட்சி, வானொலி சார் படைப்புக்களாக இருந்தாலும் சரி அவை எமது தனித்துவமான நடையில் இருக்கும் போது பெரும்பாலும் ரசிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் வந்துள்ளன. அதுவே இந்திய பாணியை அப்படியே பிரதி பண்ணப்படும் போது அந்த குறிப்பிட்ட நிகச்சிகளின் தரத்துடன் இல்லாத போது கேலிக்குரியதாவதும், இயல்பு. உதாரணத்துக்கு கனடாவில் இருந்து வெளிவந்த சில திரைப் படங்கள் அப்படியே தென்னிந்திய திரைப்படங்களை அடியொற்றி வந்த தாக அறிந்திருந்தேன். ஆனால் எவற்றையும் பார்த்ததில்லை. எதுவும் எமக்குரிய தனித்துவமில்லாது அடுத்தவரினை பார்த்து பிரதிபண்ணும் போது மூல பிரதியிலும் சிறப்பாக பிரமாண்டமாக இல்லாதவிடத்து இரசிகர்களிடம் எடுபடாது. மேலும் கேலிக்கு உள்ளாவதையும் தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னிந்தித்தனத்துக்கு அடிமையாதல் பற்றி புலம்பெயர்ந்தோர் மீது எனக்குக் கடுமையான கோபம் இருந்தது. ஆனால் இப்போது குறைந்துள்ளது.

ஆனானப்பட்ட வன்னியே (விடுதலைப்புலிகள் என்றும் வாசிக்கலாம்) தென்னிந்தியத் தனத்தோடு சமரசம் செய்து மசாலா தூவும்போது புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

அண்மையில் வன்னியிலிருந்து வந்த பாடல்களைப் பாருங்கள். கடைசித் திரைப்படமான விடுதலை மூச்சையும் பாருங்கள்.

இதெல்லாம் சமாதானக் கால சாபங்கள் என்று ஒதுக்கிவிடலாம். பழைய மிடுக்கு மீண்டும் வருகிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்

சரி அப்ப உங்கள் எல்லார் கண்ணுக்கும் படலைக்கு படலையும், நையாண்டி மேளமும், லாபுங்கோ லாபுங்கோவும் தான் நம்மவர் செய்யுற சரியான படைப்புக்களா தெரியுது. இதுகளுக்கு மாத்திரம்தான் கல்லெறிய மாட்டம் மிச்சம் எல்லாத்துக்கும் கல்லெறிவம் எண்டு சொல்லுறீங்கள். அப்பிடித்தானே? உங்கட பார்வையில இதுகள் தவிர மிச்ச படைப்பாளிகள் எல்லாம் சைக்கோ? :D

சரி அப்ப உங்கள் எல்லார் கண்ணுக்கும் படலைக்கு படலையும், நையாண்டி மேளமும், லாபுங்கோ லாபுங்கோவும் தான் நம்மவர் செய்யுற சரியான படைப்புக்களா தெரியுது. இதுகளுக்கு மாத்திரம்தான் கல்லெறிய மாட்டம் மிச்சம் எல்லாத்துக்கும் கல்லெறிவம் எண்டு சொல்லுறீங்கள். அப்பிடித்தானே? உங்கட பார்வையில இதுகள் தவிர மிச்ச படைப்பாளிகள் எல்லாம் சைக்கோ? :D

முரளி நான் யாரையும் சைக்கோ என்று சொல்லவில்லை. ஆனால் இந்திய/ வெறு படைப்புக்களை போல பிரதி பண்ணும் (ஈயடிச்சான் கொப்பி) போது அவை அந்த நிகழ்ச்சிகள்/ படைப்புக்களிலும் தரமாக அல்லது பிரமண்டமாக இருந்தால் தான் வெற்றிபெற முடியும். ஆனால் எமது தனித்திவத்துடன் இருக்கும் படைப்புக்கள் பிரமாண்டம் இல்லாவிட்டாலும் அவை ரசிக்கப்படும் என்றே சொல்லியிருந்தேன்.

மற்றும்படி நான் எந்த படைப்புக்கும் கல்லெறிவதில்லை. பிடிக்காவிட்டால் அதை பார்ப்பதை தவிர்த்துக்கொள்வேன்.

சொல்ல போனால் ஈழத்தில் இருந்த போது செவ்வரத்தம் பூ, உறங்காத கண்மணிகள் என பல தரமான தனித்துவமான குறும்படங்கள்/ திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அவை எனது மனதை பாத்தித்த/ கவர்ந்த அளவுக்கு இந்திய சினிமா சாயலை ஒட்டி எடுக்கப்பட்ட ஆணிவேர் என்னை கவரவில்லை. அத்துடன் ஆணிவேரை திரை அரங்கில் பார்த்த போது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எவ்வளவோ வசதியற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட செவ்வரத்தம் பூ, உறங்காத கண்மணிகளில் இருந்த நேர்த்தி இந்த படத்தில் இல்லாதது பொல் இருந்தது. அதே போன்றே விடுதலை மூச்சு முன்னோட்டத்தை பார்த்த போதும் இருந்தது. ஆனால் படத்தை முழுமையாக பார்க்க கிடைக்கவில்லை.பார்த்த பின் தான் எனது முழுமையான உணர்வை சொல்ல முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி நான் யாரையும் சைக்கோ என்று சொல்லவில்லை. ஆனால் இந்திய/ வெறு படைப்புக்களை போல பிரதி பண்ணும் (ஈயடிச்சான் கொப்பி) போது அவை அந்த நிகழ்ச்சிகள்/ படைப்புக்களிலும் தரமாக அல்லது பிரமண்டமாக இருந்தால் தான் வெற்றிபெற முடியும். ஆனால் எமது தனித்திவத்துடன் இருக்கும் படைப்புக்கள் பிரமாண்டம் இல்லாவிட்டாலும் அவை ரசிக்கப்படும் என்றே சொல்லியிருந்தேன். .

மிகச்சரியான கருத்து.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னிந்தித்தனத்துக்கு அடிமையாதல் பற்றி புலம்பெயர்ந்தோர் மீது எனக்குக் கடுமையான கோபம் இருந்தது. ஆனால் இப்போது குறைந்துள்ளது.

ஆனானப்பட்ட வன்னியே (விடுதலைப்புலிகள் என்றும் வாசிக்கலாம்) தென்னிந்தியத் தனத்தோடு சமரசம் செய்து மசாலா தூவும்போது புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

அண்மையில் வன்னியிலிருந்து வந்த பாடல்களைப் பாருங்கள். கடைசித் திரைப்படமான விடுதலை மூச்சையும் பாருங்கள்.

இதெல்லாம் சமாதானக் கால சாபங்கள் என்று ஒதுக்கிவிடலாம். பழைய மிடுக்கு மீண்டும் வருகிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

நல்லவன் விடுதலை மூச்சு புலத்திலுள்ளவர்கள் தாயகதில் சென்று சின்ன சின்ன பாத்திரங்களில் தாயக கலைஞர்களை நடிக்கவிட்டு, முக்கியமான பாத்திரங்களில் (புலிகளாக) தாங்கள் நடித்திருக்கிறார்கள்.

கடைசி சண்டை விஜயகாந் படத்தை விஞ்சி விட்டது. ஸ்டையில் தான் அவர்களின் முக்கிய அம்சமாக இருந்தது.

விடுதலை புலிகளால் முற்றுமுழுதாக தயாரிக்கப்படும் படங்களில் வரும் மோதல் காட்சிகளை பாருங்கள் வித்தியாசம் புரியும்.

ஆனாலும் விடுதலை மூச்சில் பாராட்டப்படத் தக்க சில விடயங்கள் இருக்கின்றன.

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்

ஹொலிவூட்டை ஈயடிச்சான் கொப்பி எண்டு அடிக்கிற தமிழ் சினிமாவை உங்களால ரசிக்கமுடியும் எண்டால் தமிழ்சினிமாவை ஈயடிச்சான் கொப்பி எண்டு இன்னொருத்தன் செய்யேக்க ஏன் அத ரசிக்க ஏலாது? சரி ரசனை உங்கட சுதந்திரம். கல்லெறிவதும் உங்கட சுதந்திரமோ?

நம்மவர்கள் எனப்படுகின்ற ஒரே காரணத்துக்காக நம்மவர்கள் பலவிதமான பாரபட்சங்கள் காட்டுவதை நான் பார்க்கின்றேன்.

இஞ்ச யாராவது படைப்பாளிகள் வந்து தங்கட கருத்தை கொஞ்சம் எடுத்துவிட்டால் நல்லா இருக்கும்.

அண்ணோய் சாத்திரி அண்ணை நீங்கள் கொஞ்சம் இதுபற்றி சொல்லலாம் தானே? யாழில ஆக்கங்கள் செய்யுற மற்ற ஆக்களும் இதுபற்றி என்ன நினைக்கிறீனம் எண்டு சொன்னால் நல்லா இருக்கும்.

Edited by முரளி

நம்மவர்கள் எனப்படுகின்ற ஒரே காரணத்துக்காக நம்மவர்கள் பலவிதமான பாரபட்சங்கள் காட்டுவதை நான் பார்க்கின்றேன்.

நம்மவர்கள் என்பதற்காக நம்மவர்கள்பாரபட்சம் காட்டுகிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்

ஒருமுறை நம்மவரான சிறந்த நடிகரும் டைரக்டருமான ரவி அச்சுதனுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது நம்மவர்களது படைப்பிற்கு நம்மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைப்பதில்லையே அது ஏன் என்று கேட்டேன்

அதற்கு அவர் சொன்ன பதில்

நம்மக்களை குறை கூறாதீர்கள் நல்ல தரமான படைப்புக்களை நாங்கள் கொடுத்தால் நம்மக்கள் பெரிய ஆதரவை தருவார்கள் என்றார்

முரளி இததிலிருந்து என்ன தெரிகிறது சம்மவர்கள் தரமானதை ஏற்றுக்கொள்வார்கள் பாராட்டுவார்கள் என்பது தெரிகிறது

முரளி ஒப்பீடு என்பது ஒத்த இரண்டை தான் சொல்ல முடியும். கொலிவூட்டை பிரதி பண்ணும் தமிழ் சினிமா என்று சொன்னாலும் 100 % ஈயடிச்சான் கொப்பியாக இருக்குமா என்பது சந்தேகம் தான். தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் தமிழக கதாநாயகர்களுக்கும் எற்றவாறு பல வெட்டு கொத்துகள் செய்து தான் படம் வெளிவரும். அத்துடன் பெரும்பாலான தமிழ் (புலம்பெயர் தமிழ் இளையவர்களை விடுங்கள்) மக்களால் கொலிவூட் படங்கள் பார்க்கபடுவதுமில்லை. அதனால் அவற்றை ஒப்பிடவும் முடியாது 100% இயடிச்சான் பிரதியாக இருந்தாலும்.

ஏன் ஒரு உதாரணத்துக்கு தமிழில் வெளிவந்த சந்திரமுகி எனும் ரஜனியின் படத்தின் மூலம் மணிச்சித்திர தாழு என்ற மலையாளபடம் அங்கிருந்து இருந்து தமிழுக்கு வந்தது. அதே போன்று தலுன்கிற்கும் போனது. மூன்று படங்களையும் பார்த்தீர்கள் என்றால் அந்தந்த மக்கள், கதாநாயகர்களுக்கு ஏற்ப பல மாற்றங்கள் இருக்கும்.

மலையாளபடத்தில் இருந்த இயல்புதன்மை தமிழ் சந்திரமுகியில் இருக்காது.

இது மலையாளம்

இது தமிழ்

அதே போன்றே கதபறையும் போள் என்ற மம்முட்டி ஒரு சில காட்சிகளிலேயே நடித்த மலையாள வெற்றிப்படம் இப்போது குசேலன் என்ற பெயரில் ரஜனி மம்முட்டியின் பாத்திரத்தில் நடிக்க வரவிருக்கிறது. அது வந்த பின் இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள் எந்தளவு மாறுதல் இருக்கும் ரஜனி ரசிகர்களுக்காக சில காட்சிகள் உட்புகுத்தபட்டு இருக்கும். மலையாளபடத்தில் மம்முட்டி மட்டும் தான் பிரதான பிரபலமான நடிகர். ஆனால் தமிழில் கமல் மற்றும் முன்னணீ கதானாயகர்களும் பாடல் காட்சியில் தோன்றுவார்கள் என செய்திகள் வந்திருக்கிறன. இது உதாரணத்துக்கு மட்டுமே.

மற்றும்படி தரமாக எந்த மடைப்பு வந்தாலும் அதை ரசிப்பதற்கு யாரும் பின் நிற்கமாட்டர்கள் என்பதே என் கருத்து.

  • தொடங்கியவர்

நன்றி குளக்காட்டான் உங்கள் கருத்துக்களுக்கு, கருத்துக்கள் சொன்ன மற்றவர்களுக்கும் கறுப்பன், நல்லவன், நெடுக்காலபோவான், சிவா அண்ணை, தமிழ்தங்கை, லீ.. பித்தன்.. மற்றும் அனைவருக்கும் நன்றி!

நான் யாழில எழுதுவது மற்றும் ஒரு சில பாடல்கள் தவிர வேறு ஒரு ஆக்கங்களும் தமிழில் செய்யவில்லை. எதிர்காலத்தில் வசதிகள் வரும்போது நிச்சயம் நாடகங்கள், குறும்படங்கள், மற்றும் பாடல்கள் இவை செய்வேன். இவற்றை செய்யும்போது உங்கள் கருத்துக்களையும் கவனத்தில் கொள்கின்றேன்.

நான் சினிமா பற்றி ஆரம்பத்தில ஒன்றும் குறிப்பிடவில்லை. ஆனால் இங்கு உள்ள பெரும்பாலானோர் சினிமாவை மையப்படுத்தி கருத்து சொல்லி இருக்கிறீங்கள்.

யாழில எதையோ எழுதித் தள்ளுபவன் எனும் வகையில எனது எண்ணங்களை சொன்னன். மற்றைய, எழுதுற, படைப்புக்கள் செய்யுற ஆக்கள் கருத்து சொன்னால் தான் அவேண்ட பிரச்சனைகள் விளங்கும்.

கருத்துக்கள் சொன்ன காட்டாறு, கந்தப்புவிற்கும் மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி

புலத்தில் வாழும் நம்மவர்களின் படைப்புகள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை என்று கேட்டீருக்கிறீர்கள். எதிர்காலக் கலைஞர்களை வளப்படுத்துவதற்கான ஒரு அபிப்பிராயத்தை மாத்திரமே இங்கு பதிவு செய்கிறேன்.

முதலில் ஒரு கலைஞன் என்பவன் தன்னை கலைத்துறைக்குள் முழுமையாக செலுத்திக் கொண்டவனாக இருக்கவேண்டும். ( கலைஞன் என்பது ஒரு படைப்பாளியாக, ஒரு நடிகனாக , ஒரு இசைஞனாக இப்படி ஏதாவது ஒன்றில் அல்லது பலகலை சார்ந்த விடயங்களில் ஆர்வம் உள்ளவனாக இருத்தல் அவசியம்)

எந்த ஒரு படைப்பாளியும் எடுத்தவுடன் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடுவான் என்று எதிர்பார்க்கமுடியாது.

இங்கு கலைத்துறையில் ஆர்வமுள்ள பலரை அறிந்திருக்கிறேன். வசதியுள்ள ஒருசிலர் செய்யும் ஆரோக்கியமற்ற, சரியான நேர்த்தியாக அமைக்கப்படாத படைப்புகள் சலிப்பைக் கொடுத்து முகஞ்சுழிக்க வைக்கும் நிலை பொதுவாக புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களுக்குள் தாராளமாகவே இருக்கிறது.

கலைத்துறையில் எத்துறையாயினும் சரி அது நடனம், நாடகம், இசை, குறும்படம், எழுத்து என்று எங்கு நின்றாலும் முழுமையான பயிற்சியோ, ஆற்றலோ இல்லாமல் மக்கள் பார்வைக்கு வருமாயின் அது நிச்சயமாக கேலிக்கு உள்ளாகும் என்பது தவிர்க்கமுடியாது. ஏனெனில் ரசிப்பவர்கள் எல்லோரும் கலைஞர்கள் அல்ல இவர்கள் வளரும் கலைஞர்கள்தானே என்று கண்டு கொள்ளாமல் விடுவதற்கு.

அடுத்து எத்தகைய படைப்பைத் தருகிறோமோ அத்தகைய படைப்பிற்கு நாங்கள் எடுக்கும் தளம் பொருத்தமில்லாமல் இருக்கும் போதும், கலைஞர்கள் பொருத்தமில்லாமல் இருக்கும் போதும், பின்னணி தொடர்பில்லாமல் இருக்கும் போதும், வார்த்தைப் பிரயோகங்கள் இயல்பாக இல்லாதபோதும் அப்படைப்பு மக்கள் மனதை கவர முடியாமல் போகிறது. அது பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைக்கும். அதனாலும் அப்படைப்பு கேலிக்குள்ளாகும்.

இப்போது இங்கு சிலவற்றைத் தந்துள்ளேன் முரளி தேவைப்பட்டால் இன்னும் ஆரோக்கியமான விடயங்களை தொடர்ந்து எழுதுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.