Jump to content

இது குடும்பப்பிரச்சினை - நீ ததலையீடாதே

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாமதி, நீங்களும் கேள்விப் பட்டுத்தான் இருக்கிறீங்கள், ஆனால் உண்மையா என்பது தெரியாமல் இப்படிச் சொல்வது ஒரு குற்றச் செயலைக் காணும் எம்மவர் முன்வந்து சாட்சி சொல்லப் பயப்படும் நிலையை உருவாக்கி விடும். காவல் துறையில் பெயர் பதிந்தாலே உங்கள் முன்னேற்றம் தடைப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல். உங்கள் பின்னணி பரிசீலிக்கப் படும் போது குற்றம் என்ன என்று தான் பார்க்கப் போகிறார்கள்-பெயரைக் கண்டவுடனே சிவப்புக் கொடி காட்டி உங்களைத் தண்டிப்பார்கள் என்பது அரை மூளை உள்ள ஒருவனுக்கே நம்பக் கஷ்டமான விடயம். அப்படி ஏதும் தவறான தரவுகள் காவல் துறையிடம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை வைத்து அது என்ன என்று அறியவும் அந்தத் தகவலை உங்கள் கோப்பில் இருந்து இல்லாமல் செய்யவும் கூடிய வசதி அமெரிக்காவில் உண்டு. கனடாவிலும் கட்டாயம் இருக்கும். இது போன்ற தவறான தகவல்களை சமூகத்தில் கசிய விட்டால், கடந்த மாதம் சீனாவில் ஒரு சிறு பாலகிக்கு நடந்தது போன்ற கொடுமைகள் நடக்க நீங்களும் காரணமாகி விடுவீர்கள்!

Posted

நீலப்பறவை,

அந்தப் பிள்ளைகள் முதலில் ஒழுங்காகப் படித்து முன்னுக்கு வரமுடியுமா? பிறகு மருத்துவத்தைப் பற்றிப் பார்க்கலாம்..!

இவரைப் பற்றிக் காவல்துறைக்கு அறிவித்தால், எடுத்த மாத்திரத்தில் இவர் சிறைக்குப் போகமாட்டார்..! இவருக்கு வழங்கப்படும் எச்சரிக்கையே இவரை வழிக்குக் கொண்டு வரலாம்..!

என்னை பொறுத்தவரை ஒரு பிள்ளைக்கு அம்மாவும் அப்பாவும் தேவை என்று தான் நான் நினைக்கிறேன். நான் சில வேளைகளில் இவர்கள் சம்பந்தமாக மொழிபெயர்பு செய்திருக்கிறேன்.எல்லாத்தையும் சொல்ல முடியாது.மொத்ததில் பிள்ளைகள் தான் பாவம்.தெருவழிய திரிகிற பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் மறுபக்கம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.தாயையோ தந்தையையோ குறை சொல்லமுடியாமல் தவிப்பவர்கள் தான் ஏராளம்.சில பிள்ளைகள் வேறு விதம் அவர்களுக்கும் மறுபக்கமுண்டு.பெண்சினேகிதர்கள்,தவறான நண்பர்கள்,அதைவிட கொடுமை தங்கள் வயதிற்கு மூத்தவர்களின் பழக்கம்.இப்படிப்பல ஆகவே பிள்ளைகள் மீதுதான் என் கரிசனை,இதை எல்லாரும் புரிந்துகொண்டால் சரி

Posted

நிலாமதி, நீங்களும் கேள்விப் பட்டுத்தான் இருக்கிறீங்கள், ஆனால் உண்மையா என்பது தெரியாமல் இப்படிச் சொல்வது ஒரு குற்றச் செயலைக் காணும் எம்மவர் முன்வந்து சாட்சி சொல்லப் பயப்படும் நிலையை உருவாக்கி விடும். காவல் துறையில் பெயர் பதிந்தாலே உங்கள் முன்னேற்றம் தடைப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல். உங்கள் பின்னணி பரிசீலிக்கப் படும் போது குற்றம் என்ன என்று தான் பார்க்கப் போகிறார்கள்-பெயரைக் கண்டவுடனே சிவப்புக் கொடி காட்டி உங்களைத் தண்டிப்பார்கள் என்பது அரை மூளை உள்ள ஒருவனுக்கே நம்பக் கஷ்டமான விடயம். அப்படி ஏதும் தவறான தரவுகள் காவல் துறையிடம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை வைத்து அது என்ன என்று அறியவும் அந்தத் தகவலை உங்கள் கோப்பில் இருந்து இல்லாமல் செய்யவும் கூடிய வசதி அமெரிக்காவில் உண்டு. கனடாவிலும் கட்டாயம் இருக்கும். இது போன்ற தவறான தகவல்களை சமூகத்தில் கசிய விட்டால், கடந்த மாதம் சீனாவில் ஒரு சிறு பாலகிக்கு நடந்தது போன்ற கொடுமைகள் நடக்க நீங்களும் காரணமாகி விடுவீர்கள்!

மொன்றியலில் சில வருடங்களுக்கு முன்பு இரு தமிழர்கள் அதிலொருவர் மற்றவரை கத்தியால் குத்தி விட்டார்.இதை என்னுடன் வேலை செய்பவர் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்.அவர் லெபனான் நாட்டை சேர்ந்த மாணவன்:பொலீசுக்கு தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.இவர் சாட்சி சொன்னார். நாலு வருடங்களாக நீதி மன்றில் வழக்கு நடந்தது.எத்தனைமுறை விரிவுரைக்கு போகாமல் இருந்திருப்பார்?எத்தனை நாள் வேலைக்கு வராமல் இருந்திருப்பார். படிப்பையும் பணத்தையும் கடைசியாக வேலையையும் இழந்து விட்டார்.கடைசி தருணத்தில் இரு தமிழர்களும் ஒற்றுமையாகிவிட்டனர்.குத்து வேண்டியவர் என்னை குத்தியவர் இவர் இல்லை என்று பல்டி அடித்துவிட்டார்.கடைசியில் பாதிக்கபட்டது அந்த மாணவன் தான். நீதிபதி அந்த மாணவனை பொய் சாட்சி சொல்லி பொலீசாரினதும் நீதிமன்றினதும் நேரங்களை வீணடித்ததாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். நீங்கள் எல்லாரும் இவ் உலகில் தானே இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூடுதலாக எங்கட தமிழ் ஆட்கள் இப்படித் தான்...விலக்குப் பிடிக்கப் போறவர்களும்,சாட்சி சொல்லப் போறவர்களும் தான் பாவம்

Posted

மொன்றியலில் சில வருடங்களுக்கு முன்பு இரு தமிழர்கள் அதிலொருவர் மற்றவரை கத்தியால் குத்தி விட்டார்.இதை என்னுடன் வேலை செய்பவர் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்.அவர் லெபனான் நாட்டை சேர்ந்த மாணவன்:பொலீசுக்கு தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.இவர் சாட்சி சொன்னார். நாலு வருடங்களாக நீதி மன்றில் வழக்கு நடந்தது.எத்தனைமுறை விரிவுரைக்கு போகாமல் இருந்திருப்பார்?எத்தனை நாள் வேலைக்கு வராமல் இருந்திருப்பார். படிப்பையும் பணத்தையும் கடைசியாக வேலையையும் இழந்து விட்டார்.கடைசி தருணத்தில் இரு தமிழர்களும் ஒற்றுமையாகிவிட்டனர்.குத்து வேண்டியவர் என்னை குத்தியவர் இவர் இல்லை என்று பல்டி அடித்துவிட்டார்.கடைசியில் பாதிக்கபட்டது அந்த மாணவன் தான். நீதிபதி அந்த மாணவனை பொய் சாட்சி சொல்லி பொலீசாரினதும் நீதிமன்றினதும் நேரங்களை வீணடித்ததாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். நீங்கள் எல்லாரும் இவ் உலகில் தானே இருக்கிறீர்கள்?

நீலப்பறவை..

இந்த விடயத்தில் தமிழர்கள் யார் என்பதை லெபனான் மாணவர் புரிந்து கொண்டிருப்பார்..! :lol:

சரி விடயத்திற்கு வருவோம்..! கத்திக்குத்து என்பது கிரிமினல் வழக்கு..! அதற்கு கண்கண்ட சாட்சியை நம்பியது காவல்துறையின் பொறுப்பற்ற செயல்..! விஞ்ஞானத்தை நம்பியிருக்க வேண்டும்..!

இந்த மாணவனும் தேவையில்லாமல் அகப்பட்டுக் கொண்டார்..! வழக்கு இழுபடுகிறது என்று தெரிந்ததுமே, ஒரு வழக்கறிஞரை நியமித்திருக்கலாம் (செலவு) அல்லது எழுதிக்கொடுத்துவிட்டு ஒதுங்கியிருக்கலாம்..!

ஆனால் உங்களுக்கு இந்த விவகாரங்களில் அனுபவம் அதிகம் போல் தெரிகிறது..! அவற்றையும் உள்வாங்கிக் கொள்கிறேன்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொன்றியலில் சில வருடங்களுக்கு முன்பு இரு தமிழர்கள் அதிலொருவர் மற்றவரை கத்தியால் குத்தி விட்டார்.இதை என்னுடன் வேலை செய்பவர் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்.அவர் லெபனான் நாட்டை சேர்ந்த மாணவன்:பொலீசுக்கு தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.இவர் சாட்சி சொன்னார். நாலு வருடங்களாக நீதி மன்றில் வழக்கு நடந்தது.எத்தனைமுறை விரிவுரைக்கு போகாமல் இருந்திருப்பார்?எத்தனை நாள் வேலைக்கு வராமல் இருந்திருப்பார். படிப்பையும் பணத்தையும் கடைசியாக வேலையையும் இழந்து விட்டார்.கடைசி தருணத்தில் இரு தமிழர்களும் ஒற்றுமையாகிவிட்டனர்.குத்து வேண்டியவர் என்னை குத்தியவர் இவர் இல்லை என்று பல்டி அடித்துவிட்டார்.கடைசியில் பாதிக்கபட்டது அந்த மாணவன் தான். நீதிபதி அந்த மாணவனை பொய் சாட்சி சொல்லி பொலீசாரினதும் நீதிமன்றினதும் நேரங்களை வீணடித்ததாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். நீங்கள் எல்லாரும் இவ் உலகில் தானே இருக்கிறீர்கள்?

நாங்கள் இருக்கிற உலகம் இருக்கட்டும். இப்ப உங்கள் அறிவுரை என்ன? ஒருவன் கொலை செய்யப் படுவதை பார்க்கும் ஒருவர் தடுக்கவும் போகக் கூடாது (இது பல சமயம் காவல் துறையே சொல்லும் நியாயமான அறிவுரை தான்!-ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்). காவல் துறைக்கும் தகவல் சொல்லக் கூடாது, தகவல் சொன்னால் தொழில், படிப்பு நேரம் வழக்கில் விரயமாகும் என்பதால் பேசாமல் திரும்பிக் கொண்டு போய் விட வேண்டும். ஒரு உயிரைக் காப்பாற்றக் கூடிய வாய்ப்பை இழந்து விட்டு நிம்மதியாக உண்டு உறங்கி மிகுதி நாட்களைக் களிக்க வேண்டும். இதுவா நீங்கள் உங்கள் அடுத்த சந்ததிக்கும் சொல்லி வளர்க்கும் அறிவுரை? நீங்கள் மொழிபெயர்ப்பாளராக இருக்கலாம், ஆனால் உங்கள் கருத்துக்கள் ஒரு பொறுப்புள்ள பிரஜையின் கருத்துகள் போல இல்லை.அப்பாவும் அம்மாவும் பிள்ளைக்கு அவசியம் என்ற கருத்தும் ஒரு சாரமும் அற்றது. "நல்ல" அப்பாவும் அம்மாவும் குழந்தைக்குத் தேவை என்பது தான் சரியான கருத்து என நான் நினைக்கிறேன். அனேகமாக எல்லா ஆண்களுக்கும் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்ய முடியும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் நல்ல தகப்பனாக இருக்க முடிவதில்லை (விசுகு கண்ட அந்த ஆண் போல). இப்படியான நிலைகளில் அந்த தகப்பனால் என்ன தான் பிள்ளைக்கு நல்லது செய்ய இயலும் என்கிறீர்கள்? இப்படியான தறுதலைகளை குடும்பத்திலிருந்து சட்ட ரீதியாக அகற்றி விட்டால் பிள்ளைகளுக்கும் பெண்ணுக்கும் நல்லது என்பது பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட ஒரு உண்மை.

ஜஸ்ரின்,

லெபனான் மாணவர் என்று எழுதியிருருக்கிறார்..! மாணவர் விசாவில் வந்து படிப்பவராக இருக்கலாம்..! காவல்துறையின் கண்டிப்பான அழைப்புகளுக்கெல்லாம் வளைந்து கொடுத்திருப்பார்..! படிப்பும் பணமும் வீணாகியிருக்கும்..! :unsure:

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரும் அவரது மனைவியும் 3 பிள்ளைகளும் ஒன்றாக சந்தோசமாக செல்வதை சில நாட்களுக்கு முன் என் மக்கள் கண்டு

அதை உடன் எனக்கு அறிவித்தனர்.

சந்தோசமாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் தானே.

Posted

இன்று தான் கவனித்தேன் விசுகு அண்ணா. உங்கள் தலையீடு இல்லாவிட்டால் ஒரு குடும்பத்தின் வழி தடுமாறிப்போயிருக்கலாம். உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி உறவுகளே

போன கிழமை நடந்த ஒரு விடயம். அதையும் இங்கு பதிகின்றேன்.

எனது 2வது மகனுடன் (வயது 17) இரவு 11 க்கு பின் வேலை முடிந்து வீடு நோக்கி காரில் போய்க்கெகாண்டிருந்தேன். நாங்கள் நண்பர்கள்போல் சிரித்து பகிடிவிட்டு பழகுவோம். அதேபோல் அன்றும் சிரித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தபோது அவனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறும் செய்தி வந்தது. அதைப்பார்த்ததும் அவனது முகம் மாறியதை அவதானித்தேன். நான் தொடர்ந்து பகிடி விட்டபோதும் அவரால் அதற்கு பதிலோ சிரிப்பையோ தரமுடிடியவில்லை. என்னடா என்று கேட்டேன். ஒன்றுமில்லையப்பா என்றான். சிறிது நேரம் கழித்து மீண்டும் நான் என்னப்பு ஏதாவது பிரச்சினை?. இல்லையப்பா. தொலைபேசியில் ஏதாவது கெட்ட தகவல் உனது நண்பிகள் எவராவது ஏதாவது எழுதினார்களா? என மீண்டும் நான் பகிடிவிட. அவரது முகம் இறுகுவதைக்கண்டேன்.

கொஞ்சம் நானும் மாறி குறும் செய்தியில் என்ன வந்தது? என்றேன். எனது நண்பன்(பிரெஞ்சுக்காறன்) ஒருவன் தாய் தகப்பனுடன் கோவித்துக்கொண்டு வெளியில் வந்து றோட்டில் நிற்கிறார் என்றான். எங்கே அவரது வீடு? என்று நான் கேட்க எங்களது வீட்டுக்கு பக்கத்தில் தான் என்றான்.

சரி அவருக்கும் பெற்றோருக்கும் என்ன பிரச்சினை? என்று கேட்டேன்

அவரை 3 வருடங்களுக்கு முன் அவரது பெற்றோர் அவரை கத்தோலிக்க பாடசாலையில் சேர்த்துவிட்டனர். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. அன்றிலிருந்து அவர்களுக்குள் பிரச்சினை.

சரியடாப்பா. பெற்றவர்கள் பிள்ளையின் நன்மைக்குத்தானே எதையும் செய்வர். அவர் படிப்பை முடித்துக்கெகாண்டு வெளியில் வரவேண்டியதுதானே? இது நான்.

இல்லையப்பா

அந்தப்பாடசாலையில் படிப்பைவிட மதத்துக்கும் அதனுடைய போதனைகளுக்குமே இ முதலிடமும் நேரமும் ஒதுக்கப்படுகிறது.

சரி

அவர் பல்லைக்கடித்துக்கொண்டு படிப்பை முடிக்கலாம்தானே. இது நான்.

அப்பா அது அவனால்முடியாது. அவன் சாத்தானை வணங்குபவன்.

என்னடா இது. ஏன் அவன் சாத்தானை இந்த வயதில் வணங்கணும். பெற்றோர் கண்டிப்பதிலும் அர்த்தம் இருக்குத்தானே. இது நான்.

இங்கு இவனைப்போல் பலபேர் இருக்கினம் சாத்தானை வணங்குவோர்.

சரி

சாத்தானை வணங்குபவர்களின் பழக்கவழக்கம் என்ன?

இவனது பழக்கவழக்கம் எப்படி? இது நான்.

திறமான பிள்ளையப்பா. நல்லவன். என்னுடன் 3 வருடத்துக்கு முன்பு படித்தும் இன்றுவரை எங்கள் நட்பைத்தொடரவிரும்பும் ஒரு நல்லல நண்பனப்பா.. அத்துடன் எனக்கு மட்டும்தான் குறும் செய்தி அனுப்பியுள்ளதாக எழுதியுள்ளானப்பா.

சரி

அவனுக்கு 18 வயது கூட இன்னும்ஆகவில்லை. இது பெற்றோர் பிள்ளை பிரச்சினை. நாளைக்கு அவர்கள் ஒன்றாகிவிடுவார்கள். அவனை நான் பேசினால் அவனது பெற்றோருக்கு பிடிக்காது. பெற்றோரை நான் பேசினாலும்அவனுக்கு அது பிடிக்காது. பெற்றோர் பிள்ளை உறவு என்பதுஅப்படித்தான்.

ஆனால் இரவு மழையும் பெய்கிறது. அதனால் அவன் எங்கு போகவேணும் என்று நினைக்கின்றானோ அங்கு கொண்டு போய்விடுகின்றேன். அவனைக்கேள் இது நான்.

தயங்கியபடி

அப்பா என்னை கொஞ்ச நேரம் அவனோடு பொழுதைக்கழிக்க விடுவீர்களா?

நான் கொஞ்ச நேரம் அவனோடு பேசிவிட்டு அதன்பின்னர் அவனது முடிவை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.

சரி போ.

ஆனால் இரவு அதிகநேரம் வெளியில் மினக்கெடக்கூடாது.

சாப்பிட்டாரோ தெரியாது அவருக்கு சாப்பாடு வாங்கிக்கொடு என பொக்கற்றுக்குள் கை வைக்கின்றேன். என்னிடம் காசு இருக்கப்பா.

வீட்டுக்கு ஒரு கிலோமீற்றர் இருக்குமிடத்தில் இறக்கிவிட்டு வீடடுக்கு வருகின்றேன். ஒரு மணித்தியாலத்தால் வீடு வருகின்றார்.

என்ன நடந்தது? இது நான்

அவர் பெற்றோரிடமே போய்விட்டார்.

நான் நல்ல முடிவு நன்றியடா.

Posted

சரியான நேரத்தில் சரியான வேலை செய்துள்ளீர்கள். அந்தப் பையனுக்கு உரிய நேரத்தில் தனது பிரச்னையை பகிர ஒரு நண்பன் கிடைத்திரா விட்டால் வழி தவறிப் போயிருக்கக் கூடும். அத்துடன் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மனக்கசப்புக் கூடியிருக்கும். மகனை நல்லபடியாக வளர்த்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி தபபிலி

உண்மைதான் எனக்கும் அப்படியோரு சந்தோசம் வந்தது அப்போது.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.