Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழகம் முழுவதும் உணர்வை ஏற்படுத்தி உள்ளோம்" தோல்வி இல்லை - தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்

Student%20tamilnadu_CI.jpg

உண்ணா விரதப் போலாட்டத்தை கைவிடவில்லை, கைவிடுவதற்காக நிர்பந்திக்கப்பட்னர் என்று தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினர் சுகிர் லஷ்மன் தெரிவித்தார். 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில்  தங்கள் போராட்டம் எப்படி நிறுத்தப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்க இன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு  ஒன்றை நடத்தினர்.

சுகிர் லஷ்மன் மேலும் குறிப்பிடுகையில்:

ஒரு சில தீயசக்திகளும் பங்கரவாதச் சக்திகளும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி மாணவர்களின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையை போட்டுள்ளனர். இதைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர் இயக்கத்தை நிறுத்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டனர். 

நாங்கள் உண்ணா விரதத்தைதான் கைவிடுகின்றோம். எங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இது எங்கள் போராட்டத்தின் முதற்படி.  இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் உணர்வை நாங்கள் ஒருமகப்படுத்தி உள்ளோம்.  இப்பொழுது அது ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவி வருகிறது. 

எங்களது தமிழீ மாணவர் கூட்டமைப்பு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும். அடுத்த போராட்டம் குறித்து கூட்டமைப்பில் உள்ள கல்லூரிகளுடன் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் விரைவில் அது தொடர்பில் அறிவிப்போம் 

டேசோவுக்கு ஆதரவு உண்டா என்று கேட்ட பொழுது:

டெசோ அமைப்பு அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கின்றது. அமெரிக்கத் தீரடமானம் ஒன்றினைந்த இலங்கையை ஆதரிக்கின்றது. ஒன்றினைந்த இலங்கை தமிழீழ விடுதலைக்கு மாறானது. நாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றோம். 

தனி ஈழ விடுதலையே எங்கள் நோக்கம். யார் எல்லாம் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் தமிழீழத்தை எதிர்கின்றார்கள். தமிழீழத்தின் துரோகிகள். டெசோவுக்கும் ஆதரவில்லை. அரசியலுக்கும் ஆதரவில்லை என்று  தெரிவித்தார். 

உண்ணா விரத மேடைக்கு வந்த டெசோ அமைப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையே மாணவரகளின் போராட்டத்தினை ஒடுக்கியமைக்கு பின்னணி என்றும் கூறப்படுகிறது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89528/language/ta-IN/article.aspx

  • Replies 59
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெ ளிவான கருத்துக்கள்.. நன்றி தம்பிகளே..

உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்கள் என்பதை தெளிவாக சொல்ல முடியாத அளவிற்கு மாணவர்களை சூழ்ந்துள்ள அழுத்தம் என்ன? அந்த பயங்கரவாத சக்திகள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்கள் என்பதை தெளிவாக சொல்ல முடியாத அளவிற்கு மாணவர்களை சூழ்ந்துள்ள அழுத்தம் என்ன? அந்த பயங்கரவாத சக்திகள் யார்?

குண்டுக்கட்டா தூக்கிக்கொண்டுபோய் சேலைன் ஏற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்கள்..! இது தெரியாதா?

அதை நேரடியாக சொல்ல முடியாத ஒரு அழுத்தத்துக்குள்தான் மாணவர்கள் இருக்கிறார்கள்.

உண்ணாவிரதத்தை ஏன் கைவிட்டார்கள் என்பதை தெளிவாக சொல்ல முடியாத அளவிற்கு மாணவர்களை சூழ்ந்துள்ள அழுத்தம் என்ன? அந்த பயங்கரவாத சக்திகள் யார்?

உண்ணா விரத மேடைக்கு வந்த டெசோ அமைப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு

எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையே

மாணவரகளின் போராட்டத்தினை ஒடுக்கியமைக்கு பின்னணி என்றும் கூறப்படுகிறது.

இந்த மாணவர்களின் உணர்வு போற்றுதலுக்கு உரியது. இவர்கள் செய்வதில் நூறில் ஒரு பங்கு கூட ஈழத் தமிழர்களாகிய நாங்கள் செய்வது இல்லை. இதன் பின்னணியில் நிறைய விடயங்களை பேசுவதற்கு நான் தயங்குகிறேன். ஆயினும் ஈழத் தமிழர்கள் இந்திய, தமிழ்நாட்டு அரசியலை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதிக எதிர்பார்ப்புகள் கூடாது என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்.

எனது அருமை மாணவர்களுக்காக,

40 வருடம் கழித்து நசுக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம் துளிர்க்கிறது.. மாணவர்களின் தியாகத்தில் அதிகாரம் வளர்த்து , பின்பு மாணவர் இயக்கங்களை உடைத்து சிதைத்த கூட்டத்தின் முகத்தில் கறியை பூசிய நிகழ்வு நம் கண் முன் நடக்கிறது... எனது மாணவர் பருவத்தில் முயற்சி செய்து முடியாது போனதை, இப்போது செய்யப்படுவதைக் காணும் போது மகிழ்ச்சியால் மனம் நிறைகிறது... இந்தப் பாடல் உங்களுக்காக...

போராட்டம் ஒரு விழாவினைப் போன்றது....
 
போராட்டத்தினை ஆடிப்பாடி, கொண்டாடி,
வென்றிடுவோம் விடுதலையினை.

Revolution is an historical event. Participate it. Celebrate it.
----------------------------------------------------------------------
Get Up, Stand Up, stand up for your right

Get Up, Stand Up, don't give up the fight ....(Repeat)

முகநூல் - திருமுருகன் காந்தி

நன்றிகள்

இந்த மாணவர்களின் உணர்வு போற்றுதலுக்கு உரியது. இவர்கள் செய்வதில் நூறில் ஒரு பங்கு கூட ஈழத் தமிழர்களாகிய நாங்கள் செய்வது இல்லை. இதன் பின்னணியில் நிறைய விடயங்களை பேசுவதற்கு நான் தயங்குகிறேன். ஆயினும் ஈழத் தமிழர்கள் இந்திய, தமிழ்நாட்டு அரசியலை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதிக எதிர்பார்ப்புகள் கூடாது என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்.

பல ஆய்வுகள் செய்து களைத்துவிட்டீர்கள், கொஞ்ச காலம் ஓய்வு எடுக்கலாம்தானே

தமிழின தமிழக தலைவர்கள் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்த/வரும்  காரணத்தால் தான் பல இலட்சம் ஈழ மக்களை டெல்லி அழிக்க முடிந்தது.

பல நூறு தமிழர்கள் கடலில் கொல்லப்பட்ட வண்ணம் உள்ளனர்.

எட்டு கோடி மக்கள் இருந்தும் ஏன் இப்படி நடக்கின்றது?

மக்கள் வரிப்பணத்தில் இருந்து வரும் பலத்தை வைத்தே ஊடகங்கள், மது, இலவசங்கள் என அடிமைகளாயும்;

அதே வரிப்பணத்தில் உள்ள காவல்துறை, புலனாய்வு துறையை வைத்து மக்களை அடக்கவும் பாவிக்கின்றது இந்த அரசியல்வாதிகள்.

இந்த நிலைமையை மாற்றகூடியவர்கள் மாணவர்களே.

அன்றைக்கு ஆய்வுகள் செய்து சொன்ன பொழுதும் யாரும் கேட்கவில்லை. பதிலாக யாரோ எழுதியதை என் மீது சுமத்தினார்கள். அல்லது மேலும் கீழும் வாசிக்காது நடுவால் எடுத்து வந்து வியாக்கியானம் செய்தார்கள். அன்றைக்கு நேரடியாக எழுத முடியாமல், சுற்றி வளைத்து சொன்னதனால் புரியாமல் போயிருக்குமோ என்பதனால், இன்றைக்கு சற்று வெளிப்படையாக பேச முயற்சிக்கிறேன்.

ஆனால் ஓய்வெடு என்கிறீர்கள். நான் ஓய்வெடுத்தால் உங்களுக்கு யார் உண்மைகளை சொல்வார்கள்? மன்னிக்கவும்! என்னால் ஓய்வெடுக்க முடியாது! நீங்கள் நம்பிக் கெடுவதையும் காலத்திற்கு பார்த்துக் கொண்டிருக்க முடியாது! அரசியல் ராஜதந்திரம் தெரியாமல் எதிரிகளை அதிகரிக்கும் முட்டாள்தனத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது!

மாணவர்கள் போராட்டம் குறித்து எழுத்தாளர் ஞானி...

60களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக, திக சார்பு ஊடகங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன. இன்றைக்கு புதிய தலைமுறை மட்டுமே இதைப் பேசுகிறது. பலம் வாய்ந்த ஊடகங்கள் ஒப்புக்கு சப்பாணியாகவே இதைப் பற்றி கதைக்கின்றன. நல்ல வேளையாக தகவற் தொடர்பு வளர்ந்தது. முகநூல் போன்றவைகளின் பாவனைக்கு வந்தன. இல்லையென்றால் இது யாரும் கவனிக்காமல் செய்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றைக்கு ஆய்வுகள் செய்து சொன்ன பொழுதும் யாரும் கேட்கவில்லை. பதிலாக யாரோ எழுதியதை என் மீது சுமத்தினார்கள். அல்லது மேலும் கீழும் வாசிக்காது நடுவால் எடுத்து வந்து வியாக்கியானம் செய்தார்கள். அன்றைக்கு நேரடியாக எழுத முடியாமல், சுற்றி வளைத்து சொன்னதனால் புரியாமல் போயிருக்குமோ என்பதனால், இன்றைக்கு சற்று வெளிப்படையாக பேச முயற்சிக்கிறேன்.

ஆனால் ஓய்வெடு என்கிறீர்கள். நான் ஓய்வெடுத்தால் உங்களுக்கு யார் உண்மைகளை சொல்வார்கள்? மன்னிக்கவும்! என்னால் ஓய்வெடுக்க முடியாது! நீங்கள் நம்பிக் கெடுவதையும் காலத்திற்கு பார்த்துக் கொண்டிருக்க முடியாது! அரசியல் ராஜதந்திரம் தெரியாமல் எதிரிகளை அதிகரிக்கும் முட்டாள்தனத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது!

எது அண்ண உள்ளவிட்டு அடிக்கிரது பற்றி சொல்லுறியளோ, இல்லாட்டீ தேள்வடிவ தாக்குதல் பற்றிய ஆராச்சிய  சொல்லுறியளோ, எதையும் தெளிவா சொன்னாதானே எங்களுக்கு வசதியா இருக்கும்.

எது அண்ண உள்ளவிட்டு அடிக்கிரது பற்றி சொல்லுறியளோ, இல்லாட்டீ தேள்வடிவ தாக்குதல் பற்றிய ஆராச்சிய  சொல்லுறியளோ, எதையும் தெளிவா சொன்னாதானே எங்களுக்கு வசதியா இருக்கும்.

கிழக்கில  'ட' வடிவுலும் வன்னியில் 'ப' வடிவிலும் கொழும்பில் ' பு' வடிவிலும்  அடிப்பார்கள் என நினைத்து எழுதப்பட்டது.

ஆனால் சர்வதேசம் 'பா'யங்கரவாதம் வடிவில்  அடித்து விட்டார்கள்.

அகுத பதிந்த ஒரு ஒளிப்பதிவு கருணாநிதி தனது, ஜெயலலிதாவுக்கு எதிரான போராட்டங்களை மாணவர் மீது திணிக்க முற்பட்டதால் ஏற்பட்ட போட்டிதான் மாணவர் போராட்டம் குழப்பட்டத்தற்கான காரணமாக புதிய தலைமுறை கூறுகிறது. இது ஜெயா டிவி அல்ல என்பது கவனிக்கப் படவேண்டும். இந்த ஒரே ஒரு டிவியின் ஒளிப்பேழைகளைத்தாம் நாம் இதுவரை மாணவர் போராட்டத்தைபற்றி அறிவதற்கு பார்க்ககூடியத்தாக இருக்கிறது.

Edited by மல்லையூரான்

உங்களுக்கு யார், யார், என்ன, என்ன எழுதினார்கள் என்பதே தெரியவில்லை. நான் பெயரைப் பார்க்காமல் ஒரு கட்டுரையை படித்து, அது யார் எழுதியது என்று பெரும்பாலும் சரியாக சொல்லிவிடுவேன். மனிதர்களுக்கு வண்ணங்களின் வித்தியாசம் நிச்சயம் தெரிந்திருக்கும். பகுத்தறிவு என்பது மனிதர்களுக்கு இருக்கிறது அல்லவா?

"மௌனம் கலைகிறது! மாணவர்களின் போராட்டத்தால் தினறும் தமிழ் நாடு"
====================

இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.

இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது.

தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள் மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.

அந்த வேளையில், இந்திய – இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.

* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லூர் வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது.

அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது.

ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள்.

இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி.

வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.

இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

முகநூல்

600171_321373124631731_1991584938_n.jpg

தமிழ் நாடு மாணவர்களின் போரட்டதற்கு அதரவு தேடி மும்பையிலுள்ள முக்கிய கல்லூரி மாணவர்களிடம் நமது கோரிக்கையான "பொது வாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு" என்பதை முன் வைத்து பேசி வருகிறோம்...

429706_578885182135820_251864171_n.jpg

480831_506653532705696_912679004_n.jpg

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் , ராஜபக்சே , சு.சாமி கொடும்பாவி எரித்து போராட்டம் !

554938_10200691273982511_1938477573_n.jp

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்: போராட்டம் தொடரும் என அறிவிப்பு

11dstud.jpg

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக கோயம்பேட்டில் 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரின் உண்ணாவிரதம் திங்கள்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

இலங்கைத் தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

திருக்குறள் திலீபன் (18), பிரிட்டோ (20), அந்தோனி ஜாஜி (20), பார்வைதாசன் (20), பால் கென்னத் (20), மணி (19), சண்முக பிரியன் (19), லியோ ஸ்டாலின் (20) ஆகிய 8 பேர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டடத்தில் மார்ச் 8-ம் தேதி இரவில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் 8 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு போராட்டம் நடத்திய மாணவர்களையும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாணவர்களும் தங்கள் உண்ணாவிரதத்தை  தொடர்ந்தனர். அவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்ப்பட்டது. வேறு எதையும் சாப்பிட மறுத்துவிட்டனர்.

லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் மாணவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியில் வந்த அவர் கூறும்போது, உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு வேறு வழிகளில் போராடுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் வாபஸ்: இந்த நிலையில் லயோலா கல்லூரி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களைச் சந்தித்தனர்.

உங்கள் போராட்டம் நியாயமானது என்றாலும் அதற்கு உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல எனவும், வேறு வகையான அறப்போர் நடத்துங்கள் என கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து உண்ணாவிரதத்தை மாணவர்கள் கைவிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதத்தை கைவிட்டாலும் தங்களது போராட்டம் வேறு வழியில் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

http://dinamani.com/tamilnadu/article1497802.ece

போராட்டத்தை தொடங்கியிருக்கும் ராமநாதபுரம் மாணவர்கள்...

581910_10151821013249128_1479306301_n.jp

‘Police forcibly took away the fasting students’

There were about 120 of us at the venue, where eight Loyola College students had been fasting since last three days in support of their 9-point charter of demands that includes demand for an international inquiry into the war crimes of Sri Lanka and a UN referendum on Eelam.

Most protesters were students from Loyola. I am a former student of Loyola from the 2008 batch and I had gone to express my solidarity with the fasting students.

Few students from other colleges were also present at the venue. We were sitting in small groups and discussing on taking the struggle forward.

At about 2 am, there was some commotion near the main gate. Students started running towards the gate. We found some policemen were trying to forcibly enter the premises. Soon, about 70 policemen entered the venue and resorted to a mild lathicharge against those standing near the gate.

When the policemen moved towards the fasting students, the other protesters formed a protective ring around them. But police managed to break the cordon and forcibly took them away.

http://www.theweekendleader.com/Causes/1543/student-power.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.   வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

போராட்டத்தில் குதித்த திருச்சியில் ஜோசப் கல்லூரி மாணவர்கள் "

480632_349943881776197_1717493652_n.jpg

313801_349943811776204_1731763565_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.