Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஓவல் மைதானத்தில் சிங்களர்வகளுக்கும், தமிழருக்கும் இடையே மோதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் சிங்கள துடுப்பாட்ட அணிவரும் போது 2010,2012,2013 மைதானத்துக்குள் சென்று அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தந்திருக்கிறேன். 2010, 2012 அனுபவங்களை எனது வலைப்பதிவு, யாழிலும் பதிந்திருக்கிறேன். 2013ல் மைதானத்துக்கு வெளியே சிங்கள நாட்டின் துடுப்பாட்டத்தினை தடைசெய்யவேண்டும் என்று நடைபெற்ற பல கவனயீர்ப்பு நிகழ்வுகளில் சிட்னியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டேன். இலண்டனை விட அதிகளவு சிங்களவர்கள் வாழும் நாடு அவுஸ்திரெலியா. நாங்கள் காவல் துறை, நியூசவூத் வேல்ஸ் துடுப்பாட்டவாரியம் ஆகியவற்றின் அனுமதி பெற்று அமைதி முறையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. பல அவுஸ்திரெலியர்களும் கவனயீர்ப்பில் கலந்து கொள்வார்கள். இதனால் சிங்களவர்களினால் தமிழர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. இதனை இலண்டனிலும் பின்பற்றலாம் தானே. எனக்குத் தெரிந்த இலண்டனில் வசிக்கும் விடுதலைப்புலிகள், தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள் இலண்டன் ஓவலில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சிங்கள துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தெரிவித்து துடுப்பாட்டம் பார்த்ததினை( சிங்களத்து தேசிய கொடியுடன்)தங்களது முக நூலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

உங்களுக்கே தெரிந்திருக்குது லண்டனில் இருக்கும் புலி ஆதாரவாளர்கள்,தேசிய ஆதாரவாளர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஆனால் லண்டனில் இருப்பவர்களுக்கு தெரியாது என்று சொல்வது தான் வேடிக்கை

நன்றி கரும்பு ,உங்களது அதே கருத்துதான் எனதும் .அவுஸ் -ஸ்ரீ லங்கா மாட்ச் பத்து பேருக்கு மேல் இருந்து பார்த்தோம். ஒருவரை தவிர அனைவரும் ஸ்ரீ லங்கா ஆதரவுதான் .

அதே போல மைதானத்திற்கு  வெளியில் தமிழர்களை அடித்த போது தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பது போல் அந்த சிங்களவர்களை உதைக்க வேண்டும் போலிருந்தது .

நானும்  இலங்கை  எப்போதும் வெல்லவேண்டும் என்று நினைப்பேன் எங்களுக்கும் சம உரிமை தந்திருந்தால்.  நாங்கள் எவ்வளவு தூரம் விளையாட்டை விரும்பினாலும் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுக்க வேணும். இது நல்ல முயற்சி. தென்ஆபிரிக்காவை நிறவெறியை கைவிடும் மட்டும் தடை செய்திருந்தார்கள்.  இருந்தாலும் தமிழர்கள் அடி வேண்ட விரும்பதா உங்கள் உணர்வு மகிழ்ச்சி அழிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு கொடுத்ததுமில்லை; கொடுக்கப் போவதுமில்லை. காலங்காலமாகவே இந்திய அணிக்கே ஆதரவு கொடுத்து வருகின்றேன் :)

எனினும் இலவசமாக ரிக்கற்றுகள் கிடைத்ததால் ஒவல் மைதானத்தில் நடந்த கிரிக்கற் போட்டியை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியிருந்தது.ரயிலில் பயணம் செய்து Vauxhall station ஊடாக சென்றதால் Oval tube station பக்கமாக உள்ள நுழைவுப் பகுதியில் நடந்த விடயங்களைப் பற்றி வீடு திரும்பும் வரை அறிந்திருக்கவில்லை.

மைதானத்தில் பெருமளவு சிங்களவர்கள், ஓரளவு தமிழ், முஸ்லிம்களும் வந்திருந்தனர். அவுஸ்திரேலியா அணியின் ஆதரவாளர்கள் குறைவாகவே காணப்பட்டனர். எனவே வந்திருந்தவர்கள் எல்லோரும் இலங்கை அணியின் ஆதரவாளர்கள் போன்ற தோற்றப்பாடு இருந்தாலும், வந்திருந்த தமிழர்களில் பலர் அவுஸ்திரேலிய அணிக்கே ஆதரவாக இருந்தனர். ஆனால் வெளிப்படையாக 4, 6, out மட்டைகளைக் காட்டி அவுஸ்திரேலியா அணிக்கு ஆதரவைக் கொடுப்பதற்கு தயங்கிய மாதிரி இருந்தது. எனினும் நான் வெளிப்படையாகவே அவுஸ்திரேலியா அணிக்கு ஆதவை காட்டியிருந்தேன். பக்கத்தில் இருந்து கூச்சல் போட்ட சிங்களவர்களுக்கு நான் தமிழன் என்பது தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் சண்டைக்கு வரவில்லை.

எப்படி கிருபன் ஒரு பக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடக்குது என்று தெரிஞ்சும் இன்னொரு பக்கத்தால போய் மட்ச் பார்க்க எப்படி மனசு வந்தது?...யாழில் இவ்வளவு சண்டை நடக்குது என்று தெரிந்தும் இங்கு வந்து எழுத எவ்வளவு தைரியம் உங்களுக்கு வேண்டும்.
 
இதே ரதி,அர்ஜீன் போய் மட்ச் பார்த்திருக்கோணும் யாழ் கள உறவுகள் பிரிச்சு மேய்ந்திருப்பினம்
  • கருத்துக்கள உறவுகள்

டொராண்டோ மாதிரி இடத்திற்கு முதலில் சிங்களவன் வரவேண்டுமே!

ஒரு இலட்சம் சிங்கள கூலிகள் வேண்டி கட்டி செத்தவீட்டுக்கே காசில்லாமல் நொந்ததையும் மறக்ககூடாது.

சிங்களவனை அடித்து துரத்திறது இருக்கட்டும் கனடாவில் தானே எத்தனையோ லட்சம் தமிழர்கள் இருக்கினம் அப்படி இருந்தும் உங்களாலே ஏன் புலியின்ட தடையை எதிர்த்து போராட முடியல்ல? அப்ப என்ன செய்து கொண்டு இருந்தனீங்கள் நித்திரை கொண்டனீங்களா :unsure:

இப்பதான் லண்டன் அடங்கி கிடக்கு... மீளவும் தயவு செய்து உசுப்பேத்தி விட்டு கத்திகள் கோடாலிகள் எண்டு வெளிக்கிட்டு கடைசியிலை பொம்பிளை பிரச்சினை, மட்டை பிரச்சினை, கடன் பிரச்சினைக்கு எல்லாம் எங்கடையள் எங்கடயளை போடும் அளவிலை வந்து நிக்கும்...

இளம் பெடியள் செய்ய நிறைய வேறை விதமான வேலைகள் கிடக்கு... அதை நோக்கி வளிகாட்டுங்கோ புண்ணியமா போகும்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கிரிக்கெட் தெரிந்த நாளிலிருந்து இலங்கையணிக்குத்தான் ஆதரவு கொடுத்து வருகிறேன். 80 களின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணியை எனக்குப் பிடிப்பதில்லை. இந்த  வெறுப்பு 1987 இல் இன்னும் அதிகமாகியது. 90களின் இறுதியில் மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் எனது வருடத்தில்  படித்த சுமார் 60 தமிழ் மானவர்களில் என்னையும் இன்னும் ஓரிருவரையும் தவிர மற்றைய அனைவருமே இந்திய அபிமானிகள்.அதனால் நாங்கள் மாறி மாறி தர்க்கிப்போம். 1996 உல்கக் கிண்ண போட்டியை நான் இன்னும் மறக்கவில்லை. பல்கலைக்கழக மண்டபத்தில் இறுதிப்போட்டியை எனது சிங்கள நண்பர்களுடன் இருந்து சந்தோஷமாகப் பார்த்தேன். அதைப் பார்த்த எனது தமிழ் நண்பர்கள் நீ சிங்களவனா அல்லது தமிழனா என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது என்றுகூடச் சொன்னார்கள். அதுபற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. இன்றுவரை சிங்கள அணி விளையாடும் போட்டிகளை தொலைக்காட்சியிலோ அல்லது இணையதிலோ பார்த்து வருகிறேன்.

ஆனால், அவர்களை ஆதரிக்க வேண்டும் என்கிற எண்ணம் இப்போது குறைந்து வருகிறது. அரவிந்த, அர்ஜுன, மஹாநாம, ஜயசூரிய , களுவித்தாரன என்று பல நடசத்திர வீரர்களைக் கொண்டிருந்த அனறைய உலக்கிண்ண அணிக்கு நான் கொடுத்த ஆதரவுபோல இப்போது இருக்கும் அணிக்கு நான் கொடுக்கவில்லை. அதேபோல் அவர்கள் தோற்கும்போது நான் இப்போது ஏமாற்றம் அடைவதுமில்லை. நான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியது சிங்கள அனியைப் பார்த்த பின்புதான் என்பதால் அவர்களின் விளையாட்டை ரசிக்கிறேன். இன்றுவரைக்கும் இந்தியாவும் சிங்களவர்களும் விளையாடினால் எனது ஆதரவு சிங்களவர்களுக்குத்தான். 

ஆனால் இது தவறென்று எனக்குத் தெரிகிறது. ஒருபுறம் எமது தேசிய விடுதலையை ஆதரித்துக்கொண்டு, மறுபுறம் அந்த விடுதலையைத் தரமறுத்து இன்றுவரை எம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு விளையாட்டு அணியை ஆதரிப்பது சரியென்று படவில்லை எனக்கு. சிங்களவர்கள் தொடர்ந்து செய்துவரும் இனவழிப்பு என்னை மேலும் மேலும் சிங்கள அணியிலிருந்து அந்நியப்படுத்தும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கிருபன் ஒரு பக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடக்குது என்று தெரிஞ்சும் இன்னொரு பக்கத்தால போய் மட்ச் பார்க்க எப்படி மனசு வந்தது?...யாழில் இவ்வளவு சண்டை நடக்குது என்று தெரிந்தும் இங்கு வந்து எழுத எவ்வளவு தைரியம் உங்களுக்கு வேண்டும்.

இதே ரதி,அர்ஜீன் போய் மட்ச் பார்த்திருக்கோணும் யாழ் கள உறவுகள் பிரிச்சு மேய்ந்திருப்பினம்

மட்சுக்குப் போனதை யாழில் சொன்னால் இரகசியமாக இணக்க அரசியல் செய்வதாக யாரும் நினைக்கப்போவதில்லை! சொல்லாவிட்டால்தான் அப்படி நினைப்பார்கள்.

ஓவல் மைதானத்திற்கு போய் மட்ச் பார்க்க ஓசியில் கிடைத்த சந்தர்ப்பத்தை விட முடியுமா?

அங்கு போய் சிறிலங்கா அணிக்கு ஆதரவு காட்டியிருந்தால்தானே பிரச்சினை.

சிறிலங்கா அணிக்கு ஆதரவாக அவர்களது கொடியுடனும் உடுப்புக்களுடனும் வந்தவர்களை சினேகபூர்வமாகப் பார்க்கமுடியவில்லை, புன்னகைக்க முடியவில்லை. மாறாக சிறிலங்கா அணி தோற்று அவர்கள் மனம் வாடவேண்டும் என்ற உணர்வே இருந்தது, ஆனால் அவுஸ்திரேலியா அணி அதற்கு உதவவில்லை!!

போட்டியில் வென்றபோது சிங்களவர்கள் குதூகலித்தது, முள்ளிவாய்க்காலில் புலிகளை வென்றபோது அவர்கள் மகிழ்ந்து கொண்டாடியதை நினைவுக்குக் கொண்டு வந்ததால் அங்கு தொடர்ந்தும் நிற்க முடியவில்லை.

அர்ஜுனும் ரதியும் அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சிறிலங்கா அணிக்கு ஆதரவாகக் கதைத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறிலங்கா அணிக்கு ஆதரவளித்த நண்பர்களுடன் சண்டை பிடித்த அனுபவம் நிறைய இருக்கின்றது!

நன்றி கரும்பு ,உங்களது அதே கருத்துதான் எனதும் .அவுஸ் -ஸ்ரீ லங்கா மாட்ச் பத்து பேருக்கு மேல் இருந்து பார்த்தோம். ஒருவரை தவிர அனைவரும் ஸ்ரீ லங்கா ஆதரவுதான் .

அதே போல மைதானத்திற்கு  வெளியில் தமிழர்களை அடித்த போது தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பது போல் அந்த சிங்களவர்களை உதைக்க வேண்டும் போலிருந்தது .

முன்பு சிறுவயதில் நான் இருந்தபோது(ரஞ்சன் மடுகல்ல, அசந்தா டீ மெல் விளையாடிய காலத்தில்) இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்தது. 1984 சொச்சம் என்று நினைக்கின்றேன். அதில் இலங்கை நடுவர்கள் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு பல பிரச்சனைகள் தோன்றின. ஓர் தடவை கவாஸ்கர் தவறாக தன்னை நடுவர் ஆட்டமிழக்க செய்ததனால் மட்டையை தூக்கியெறிந்துவிட்டு சென்றார். இவ்வாறே சேர்டன் சர்மாவும் செய்தார். அது 12 அங்குலம் கறுப்பு, வெள்ளை திரை தொலைக்காட்சியில் ரூபவாஹினியூடாய் நேரடி ஒளிபரப்பை பார்த்த காலம். அப்போதெல்லாம் இந்திய அணிமீதே எப்போதும் விருப்பம் இருந்தது.

உண்மையில் 1996 உலகப்போட்டியின் பின்னரே இலங்கை அணி மீது கவனம் செலுத்தி (வீரர்களின் பெயரை நினைவில் வைத்து முக அடையாளங்களை இனங்காணக்கூடியவாறு அறிவை வளர்த்துக்கொண்டேன்). இப்போது ஏதாவது குறிப்பிட்ட அணியைவிட நன்றாக விளையாடும் வீரர்கள் மீதே அதிக ஈடுபாடு உள்ளது.

பொழுதுபோகாத நேரங்களில் கிரிக் இன்போ தளத்திற்கு சென்று தனி வீரர்களின் சுயவிபரக்கோவையை அலசி ஆராய்ந்து புள்ளிவிபரங்களை அறிவதில் அதிக ஆர்வம் உள்ளது. எந்தவொரு அணியைச்சேர்ந்த எந்தவொரு வீரர் எந்தவொரு வீரர் நன்றாக விளையாடினாலும், அவரது சுயவிரக்கோவையில் புள்ளிவிபரக்கணக்கில் அபரிமிதமான சாதனை காணப்பட்டால் குறிப்பிட்ட வீரர் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடவேண்டும் என்று எதிர்பார்ப்பேன் (உதாரணமாக மிக உயர்ந்த சராசரி ஓட்ட எண்ணிக்கை, மிகக்குறைந்த பந்துகளில் விக்கெற்றுக்களை கைப்பற்றும் வீதம் போன்றவை...). முன்புடன் ஒப்பிடும்போது அண்மைக்காலங்களில் குறிப்பிட்ட நாட்டு அணிகளின் திறமைகளை மட்டுக்கட்டுவது சற்று கடினமாகிவிட்டது. எனவே எனது ஆர்வம் அதிகளவில் தனித்தனி வீரர்களின் திறமைகளை அறிவதிலேயே கூடுதலாக உள்ளது.

நேற்று தென்னாபிரிக்காவின் படுதோல்வி ஆச்சரியமாகவே உள்ளது. இங்கிலாந்து வெற்றிக்கிண்ணத்தை தனதாக்குமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மழை வந்து குழப்பாட்டிக்கு இந்தியாவுக்கு நல்ல சாத்து விழவேணும். செத்தாலும் இந்தியாவுக்கு ஆதரவு குடுக்க மாட்டன்.

1001059_477326695669695_1682898750_n.jpg
அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்லும் நல்ல மனம் படைத்த (முட்டாள்) உள்ளங்களே இதையும் கொஞ்சம் பாருங்களன்...
  •  
  • கருத்துக்கள உறவுகள்

1001059_477326695669695_1682898750_n.jpg
அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்லும் நல்ல மனம் படைத்த (முட்டாள்) உள்ளங்களே இதையும் கொஞ்சம் பாருங்களன்...

நீங்கள் என்னவென்றாலும் எழுதிக்கொள்ளுங்கோ

நாங்கள்

பத்தினிக்கும்

விபச்சாரிக்கும் நடுவில தான் நிற்பம்

விற்பம்

செயற்படுவம்............

புரிஞ்சா புரிஞ்சு கொள்ளுங்கோ

இல்லாவிட்டாலும் அது தான் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

மட்சுக்குப் போனதை யாழில் சொன்னால் இரகசியமாக இணக்க அரசியல் செய்வதாக யாரும் நினைக்கப்போவதில்லை! சொல்லாவிட்டால்தான் அப்படி நினைப்பார்கள்.

ஓவல் மைதானத்திற்கு போய் மட்ச் பார்க்க ஓசியில் கிடைத்த சந்தர்ப்பத்தை விட முடியுமா?

அங்கு போய் சிறிலங்கா அணிக்கு ஆதரவு காட்டியிருந்தால்தானே பிரச்சினை.

சிறிலங்கா அணிக்கு ஆதரவாக அவர்களது கொடியுடனும் உடுப்புக்களுடனும் வந்தவர்களை சினேகபூர்வமாகப் பார்க்கமுடியவில்லை, புன்னகைக்க முடியவில்லை. மாறாக சிறிலங்கா அணி தோற்று அவர்கள் மனம் வாடவேண்டும் என்ற உணர்வே இருந்தது, ஆனால் அவுஸ்திரேலியா அணி அதற்கு உதவவில்லை!!

போட்டியில் வென்றபோது சிங்களவர்கள் குதூகலித்தது, முள்ளிவாய்க்காலில் புலிகளை வென்றபோது அவர்கள் மகிழ்ந்து கொண்டாடியதை நினைவுக்குக் கொண்டு வந்ததால் அங்கு தொடர்ந்தும் நிற்க முடியவில்லை.

அர்ஜுனும் ரதியும் அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சிறிலங்கா அணிக்கு ஆதரவாகக் கதைத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறிலங்கா அணிக்கு ஆதரவளித்த நண்பர்களுடன் சண்டை பிடித்த அனுபவம் நிறைய இருக்கின்றது!

நீங்கள் சொன்னது எனக்கு இப்பத் தான் புரியுது.மைதானத்தின் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நாங்கள் மட்ச் பார்க்க போகலாம் பிரச்சனை இல்லை ஆனால் இலங்கைக்கு ஆதரவு கொடுக்க கூடாது.அதே மாதிரி யாராவது போய் என்ன ஆர்ப்பாட்டம் என்டாலும் செய்யட்டும் ஆனால் நாங்கள் மட்டும் வீட்டில இருந்து கொண்டு இலங்கையணிக்கு ஆதரவு கொடுக்காமல் மட்ச் பார்க்கலாம்.அது பிழையில்லை அப்படித் தானே கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மழை வந்து குழப்பாட்டிக்கு இந்தியாவுக்கு நல்ல சாத்து விழவேணும். செத்தாலும் இந்தியாவுக்கு ஆதரவு குடுக்க மாட்டன்.

நான் எதிர்பார்த்தவாறே சிறிலங்கா அணி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்திருக்கின்றது. அதை நேரே நின்று பார்த்துக் கூச்சல்போட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது எனக்கு இப்பத் தான் புரியுது.மைதானத்தின் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நாங்கள் மட்ச் பார்க்க போகலாம் பிரச்சனை இல்லை ஆனால் இலங்கைக்கு ஆதரவு கொடுக்க கூடாது.அதே மாதிரி யாராவது போய் என்ன ஆர்ப்பாட்டம் என்டாலும் செய்யட்டும் ஆனால் நாங்கள் மட்டும் வீட்டில இருந்து கொண்டு இலங்கையணிக்கு ஆதரவு கொடுக்காமல் மட்ச் பார்க்கலாம்.அது பிழையில்லை அப்படித் தானே கிருபன்

ஆர்ப்பாட்டம், கவனயீர்ப்பு செய்வது எல்லாம் மிகவும் தேவையானதுதான். ஆனாலும் முன்னரைப் போன்று இப்படியான நிகழ்வுகளுக்குப் போவதில்லை என்பது உண்மைதான்.

மட்ச் பார்க்கப் போனதைப் பற்றி எனக்கு எந்தவித குற்றவுணர்வும் இல்லை. இன்னும் நிறையத் தமிழர்கள் வந்து சிறிலங்கா அணிக்கு எதிராக உள்ளேயும் கூச்சல் போட்டிருந்தால் அது மேலும் கவனத்தைப் பெற்றிருக்கும்.

வீட்டில் இருந்துகொண்டு மட்ச் பார்ப்பது ஒவ்வொரினதும் தனிப்பட்ட விருப்பம். ஒருவருக்கு எந்தத் துறையில் ஈடுபாடு உள்ளதோ, அதில் அவர் கட்டாயம் ஆர்வம் கொண்டிருப்பார். அதை யாரும் தடுக்கமுடியாது. அதே போன்று அரசியல் சம்பந்தமான விடயங்களிலும் எவரையும் கட்டாயப்படுத்தி எதுவும் செய்யமுடியாது.

ஒருவர் எந்த அணிக்கு ஆதரவு கொடுக்கிறது என்பதும் அவர் வீட்டில் இருந்து மட்ச் பார்ப்பதா அல்லது மைதானத்திற்குள் போய் மட்ச் பார்ப்பது என்பதும் அவரவர் விருப்பம் தான் ஆனால் நாங்கள் தமிழர்கள் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாமல் மட்ச் பார்க்க போய் அவுஸ் அடிக்கும் நேரம் எல்லாம் அவுசை உற்சாகப்படுத்தினால் நீங்கள் அவுசை ஆதரிக்கும் கிரிக்கெட் ரசிகராகவும் இருக்கலாம் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.