Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள்.

Featured Replies

மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள்.

http://www.yarl.com/...413#entry782329

----------------------------------------------------------------------------------------------------------

இங்கு எந்த திரியை பார்த்தாலும் இளையராஜாவின் ஆட்சி தான். அது தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கென புது திரி தொடங்கி விட்டேன்.

எனக்கு இளையராஜாவின் முன்னைய பாடல்கள் பிடித்திருந்தாலும் நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை. கேட்டால் கொஞ்ச நாளில் மறந்து விடும் பாடல்கள் என்று ஏளனம் செய்வோரும் ரசிக்கும்படி நான் பாடல்களை இணைக்கவுள்ளேன்....

நான் இணைத்த ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

http://www.yarl.com/...howtopic=101278

இங்கு நான் விரும்பும் பாடல்களை மட்டும் இணைக்கவுள்ளேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். கருத்துகள் கூறுவதென்றால் கூறலாம். அதற்கு தடையில்லை.

நன்றி...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: காதல் ரோஜாவே

படம்: ரோஜா

Edited by துளசி

  • Replies 99
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் காதல்.. :D எனக்கு ரகுமானின் பாடல்களும் பிடிக்கும்.. :D But those are few and far between..! :lol:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் காதல்.. :D எனக்கு ரகுமானின் பாடல்களும் பிடிக்கும்.. :D But those are few and far between..! :lol:

நன்றி இசை அண்ணா. இசை சம்பந்தமாக தொடங்கும் போது ஒரு இசையே(உங்கட பெயரை சொன்னான் :D) வந்து வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி......

  • தொடங்கியவர்

பாடல்: சின்ன சின்ன ஆசை

படம்: ரோஜா

http://www.youtube.com/watch?v=xtx5iY8xg9g

Edited by துளசி

  • தொடங்கியவர்

பாடல்: புது வெள்ளை மழை

படம்: ரோஜா

http://www.youtube.com/watch?v=zpuf9iS2Lv4&feature=player_embedded

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்

எனக்கும் A R ரஹ்மானின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்..... அதுவும் அவர் ரிதம் பகுதியில் காட்டும் சில வித்தைகள் என்னை மிகவும் கவர்ந்தவை....

உதாரணம் மின்சாரக்கனவு படத்தில் வரும் ''மானாமதுரை மாமரக்கிழையிலே'' எனும் பாடலில் சரணத்துக்கு பிறகு வரும் ஒரு பகுதியில் Drums, தபிலா, மேள்ம் அது இது என்று எல்லா வாத்தியங்களையும் போட்டு ஒரு அடி அடிப்பார்...சும்மா சூப்பராய் இருக்கும்...காதலன் படத்திலும் பிரபுதேவா, வடிவேலு வரும் ஒரு பாடலிலும் அப்படி ஒரு இடத்தில் வரும்..கேட்கவே உடம்பெல்லாம் வேகம் கொண்டுவிடும்...

அப்பிடி கன வித்தைகள் காட்டும் வல்லுனர் அவர்...

முன்பு ஆனந்தவிகடனில் எங்கேயோ வாசித்த ஞாபகம்..... இளயராஜாவையும், A R ரஹ்மானின் இசையையும் ஒப்பிடும்படி யாரோ கேட்ட கேள்விக்கு இருந்த பதிலில் இளையராஜாவின் இசை இயற்கை போன்றது சில நேரம் கொதிக்கும் வெய்யிலாக, சில நேரம் உடலை வருடும் தென்றலாக, சிலவேளை மனதைக் குளிர்விக்கம் சாரலாக, கடும் புயலாக, கடும் குளிராக அப்படியென்று இயற்கையின் அனைத்து அற்புதங்களையும் காட்டும் சிலவேளை அதிகம் எதிர்பார்த்திருக்க புஸ்வாணமாயும் போய்விடும் என்றார்கள்

ரஹ்மானின் இசை செயற்கை ஒளி பொன்றது.....நகரங்களை ஒளிர்விக்கும் பலபல வர்ணங்களாய் பல பல வாணவேடிக்கையாய் மனதை மகிழ்விக்கும் என்றார்கள்....

எல்லோருக்கும் இயற்கை மனதைக் கவரும் தருணங்க்களும் செயற்கை மனதை மகிழ்விக்கும்

தருணங்களும் ஏராளம்...

நீங்கள் இணைத்த பாடல்களும் எனது திரியில் வரும்... நான் இளையராஜாவின் ரசிகனாய் இருந்தாலும் எனது மனதைக் கவர்ந்த அத்தனை இசையமைப்பாளர்களின் இசையையும் இணத்துக்கொண்டிருக்கிறேன்....

நன்றிகள்

  • தொடங்கியவர்

நன்றி இளங்கவி அண்ணா உங்கள் கருத்துக்கு.... எனக்கும் அந்த பாடலில் நீங்கள் குறிப்பிடும் இடம் பிடிக்கும்.

ரகுமானின் இசையில் பாடல் வரி பிடிக்காவிட்டாலும்...... பாடலின் இசை பிடிக்காவிட்டாலும்........ பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியவற்றுக்கிடையில் அல்லது சரணத்தின் பின் வரும் ஒரு இசை நிச்சயம் அனைவரையும் கொள்ளை கொள்ளும்படி அமையும்.... அது அவரின் தனி சிறப்பு...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: உயிரே உயிரே

படம்: bombay

பாடல்: கண்ணாளனே

படம்: bombay

[media=]http://www.youtube.com/watch?v=de0KR_DxL2k&feature=my_liked_videos&list=LLqa0QDe63Idp7SeOXi_SzAQ

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

A.R.R இன் பாடல்கள் அருமை.

* தலைப்புக்கு ஏற்ப பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

A.R.R இன் பாடல்கள் அருமை.

*தலைப்புக்கு ஏற்ப பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் இணைப்பிற்கு நன்றி. இத்திரியில் நான் மட்டும் பாடல்களை இணைக்கவிருப்பதாக மேலே கூறியுள்ளேன். இணைத்தவை இருக்கட்டும் பரவாயில்லை.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இணைப்பிற்கு நன்றி. இத்திரியில் நான் மட்டும் பாடல்களை இணைக்கவிருப்பதாக மேலே கூறியுள்ளேன். இணைத்தவை இருக்கட்டும் பரவாயில்லை.

சாறி.. சாறி.. நான் அதைக் கவனிக்கவில்லை..! நான் தவறுதலாக இணைத்த பாடல்களை நீக்கிவிட்டேன். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளையராஐ◌ாவின் ரசிகன்.

ஆனால் ரகுமானின் முதல்படத்திலிருந்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.

தமிழனாக பெருமைப்படும் இசையமைப்பாளன்.

இன்றும் அதே தொடர்கிறது.

நன்றி பதிவுக்கு கவிதை.

  • தொடங்கியவர்

பாடல்: அந்த அரபிக்கடலோரம்

படம்: bombay

http://www.youtube.com/watch?v=TuQxcHez0Sg&feature=player_embedded

நான் இளையராஜாவின் ரசிகன்.

ஆனால் ரகுமானின் முதல்படத்திலிருந்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.

தமிழனாக பெருமைப்படும் இசையமைப்பாளன்.

இன்றும் அதே தொடர்கிறது.

நன்றி பதிவுக்கு கவிதை.

நன்றி உங்கள் கருத்துக்கு.... ஆனால் நான் கவிதை இல்லை காதல்.

எல்லாருமே தப்பு தப்பா புரிந்து கொள்கிறார்களே..... :( எனக்கு தான் கண்ணில் பிழையோ என்று டவுட்டே வந்திட்டுது.... :lol::D

Edited by காதல்

இளையராஜாவின் பாடல்கள் அதிகம் பிடிக்கும் என்றாலும், ரகுமானின் பாடல்களும் பிடிக்கும். தாளங்களுக்கு நிறைய கருவிகளைப் பாவிப்பார். இணைத்த பாடல்களில் 'காதல் ரோஜாவே', 'புது வெள்ளை மழை', உயிரே உயிரே, பாடல்கள் பிடிக்கும். காலப்போக்கில் இசையமைப்பாளர்களுக்கு வரும் 'தேய்மானம்' ரகுமானிற்கும் வந்துவிட்டது என நினைக்கிறேன். 'ஜெய் ஹோ' பாடல் நன்றாக இருந்தது. அவரது ஹிந்திப் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

ஒருவரின் இசைக்கு மாத்திரம் இரசிகனாக இருப்பதில்லை. இரண்டு மூன்று படங்களிற்கு மாத்திரமே இசையமைத்து அதிகம் புகழடையாத இசையமைப்பாளர்களும் அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார்கள்.

பி.கு.

உங்கள் பெயரைச் விளித்து எழுத பெரிய கஷ்டமாக் கிடக்கு. :lol:

  • தொடங்கியவர்

ஜெய் ஹோ' பாடல் நன்றாக இருந்தது. அவரது ஹிந்திப் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

நன்றி தப்பிலி அண்ணா, உங்கள் கருத்திற்கு..... ரகுமானின் ஜெய்ஹோ பாடலுக்கு பின் இப்பொழுது rockstar பட பாடல்கள் பிரபலமாகி விட்டது.... அதிலிருந்து எனக்கு பிடித்த ஒரு பாடலை இங்கு உங்களுக்காக இணைக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மொழி: ஹிந்தி

பாடல்: Aur ho

படம்: rockstar

http://www.youtube.com/watch?v=bevvOxpE5gs&feature=player_embedded

Edited by காதல்

  • தொடங்கியவர்

பாடல்: கண்ணுக்கு மையழகு

படம்: புதிய முகம்

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளையராஐ◌ாவின் ரசிகன்.

ஆனால் ரகுமானின் முதல்படத்திலிருந்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.

தமிழனாக பெருமைப்படும் இசையமைப்பாளன்.

இன்றும் அதே தொடர்கிறது.

நன்றி பதிவுக்கு கவிதை.

இந்த சந்தேகம் எனக்கும் இருக்குது அவர் எத்தனை பேரில் வந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்சுடுவமில்ல :lol:

  • தொடங்கியவர்

பாடல்: பூப்பூக்கும் ஓசை

படம்: மின்சாரக்கனவு

பாடல்: மானாமதுரை மாமர கிளையிலே

படம்: மின்சாரக்கனவு

பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே

படம்: மின்சாரக்கனவு

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு ஏற்ப பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Edited by விசுகு

இந்த சந்தேகம் எனக்கும் இருக்குது அவர் எத்தனை பேரில் வந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்சுடுவமில்ல :lol:

"யாழில் நான் கவிதை என்ற பெயரில் மட்டுமே வருவேன்" என்பதனை ஒரு கவிதையிலேயே சொல்லிவிட்டேன் ரதியக்கா!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99838&#entry742157

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும் உள்ளன. எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத்தட்டமாட்டா. :)

இளைய தலைமுறைக்கு ARR நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தவர்... அந்த ARR ஐ நம்பி தனது படத்தில் வாய்ப்புக் கொடுத்த மணிரதினத்திற்குத் தான் இந்த விசயத்தில் நன்றி சொல்லவேணும்.

நீங்கள் இணைத்திருக்கும் பாடல்கள் எல்லாமே நன்றாக உள்ளது..

-திருடா திருடா படத்தில் சந்திரலேகா என்ற பாடலில் கிழக்கு மேற்கு இசைகள் இரண்டுமே ஒன்றாக சேர்ந்தது படைத்திருக்கிறார்..

-இந்தியன் படத்தில் பச்சைகிளிகள் தோளோடு என்ற மெலோடியும் எப்பவும் சலிக்காமல் கேட்கலாம்..

-படையப்பாவில் மிசாரப் பூவே பாடலும் ஆரமபத்தில் கர்னாடக சங்கீத ஸ்டைலில் ஆரம்பித்து இடையிடையே மேற்கத்தைய இசையையும் சேர்த்து மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார்.

-தீண்டாய் மெய் தீண்டாய் பாடலும் ஒரு தனி அழகு..

  • தொடங்கியவர்

இந்த சந்தேகம் எனக்கும் இருக்குது அவர் எத்தனை பேரில் வந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்சுடுவமில்ல

ரதி அக்கா, நான் வேற கவிதை அண்ணா வேற.... உங்களை போட்டு குழப்பி கொள்ளாதையுங்கோ.... ஒரு நாள் என்னை யாரோ ஒரு அக்கா என்று சொல்றீங்கள். இன்னொரு நாள் நான் ஒரு ஆண் என்கிறீர்கள், இப்ப கவிதை அண்ணா தான் நான் என்கிறீர்கள்...... :(

"யாழில் நான் கவிதை என்ற பெயரில் மட்டுமே வருவேன்" என்பதனை ஒரு கவிதையிலேயே சொல்லிவிட்டேன் ரதியக்கா!

http://www.yarl.com/...38

உங்களைப்போன்ற ஒரு பெரிய கவிஞருடன் ஒழுங்காக கவிதை எழுத தெரியாத என்னை ஒப்பிட்டு விட்டாரே... :(

என்னிடம் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும் உள்ளன. எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத்தட்டமாட்டா. :)

அப்ப என்னை போல் தான் நீங்கள்... என்னிடமும் எல்லா பாடல்களும் உள்ளன....mp3 வடிவில்... :)

இளைய தலைமுறைக்கு ARR நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தவர்...

நிச்சயமாக... அதிகளவில் புதிய பாடகர்களை (ஸ்ரேயா கோஷல், சின்மயி அடங்கலாக) அறிமுகப்படுத்தியவரும் இவரே...

இப்பொழுதும் "3" பட புதுமுக இசையமைப்பாளர் அனிருத்திற்கும் தனது recording room ஐ வழங்கி உதவி செய்தார். அப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்ட பிறகு அனைத்துப்பாடல்களும் நன்றாக இருப்பதாக பாராட்டியிருக்கிறார். வேறு ஒரு இசையமைப்பாளரும் பாராட்டவில்லை.

நீங்கள் கூறிய பாடல்கள் எனக்கும் பிடித்தவை. :)

Edited by காதல்

  • தொடங்கியவர்

பாடல்: தொட தொட மலர்ந்ததென்ன

படம்: இந்திரா..

பாடல்: நறுமுகையே நறுமுகையே

படம்: இருவர்

Edited by காதல்

உங்கள் விருப்ப திரி என்பதால் என் விருப்பத்தை இணைக்க விரும்பவில்லை.

எனக்கு ரஹ்மானின் ஜென்டில்மேன் படத்தில் என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் பாடலும்

ரிதம் படத்தில் காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் பாடலும் அதிகம் பிடிக்கும்.

இவை எனக்கு மட்டுமல்ல என் மனைவிக்கும் அதிகம் பிடித்த பாடல்கள்.

இந்திரா படத்தில் பெண் குரலில் நிலா காக்கிறது நிதம் தேய்கிறது பாடல் மிகவும் ரசனைக்குரியது

Edited by பகலவன்

  • தொடங்கியவர்

இப்பொழுது ஆரம்ப பாடல்களை இணைத்துக்கொண்டிருக்கிறேன் பகலவன் அண்ணா. எனவே மற்றைய பாடல்களை பின் நாட்களில் இணைக்கிறேன்... நிலா காய்கிறது பாடல் உங்களுக்காக இப்பொழுது....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: நிலா காய்கிறது

படம்: இந்திரா.

http://www.youtube.com/watch?v=cu-2yxYL06w&feature=player_embedded

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.