Jump to content

அவனும்...நானும்....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

இது ஒரு கதை அல்ல...நடந்த சம்பவங்களின் தொகுப்பே.....

அந்த காலத்தில்- 80 களில், 5 வகுப்பு கொலர்ஷிப் இப்பமாதிரி, பேப்பர்ல படம் எல்லாம் போட்டு, "எங்கட பாடசாலையில் இருந்து 302 பேர் தோற்றி அதில் 4 யாழ்பாணத்தின் முதல் பத்து இடத்தில வந்திருக்கினம், 87.3 பேர் சித்தியடைந்திருக்கினம், இன்னும் 33.21 பேர் தசம் 33 மார்க்கால பெயல் விட்டிருக்கினம்", அவைகளை நாங்கள் வாழ்த்துகிறோம், அவர்கள் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்த்துகிறோம் என்று வராதகாலம், நானும் எனது "சக்சவிவ்" பிள்ளை பிராக்காட்டல், பிராக்கு பார்த்தல் கோர்ஸ் எல்லாம் முடித்து, அந்த காலத்தில் கொலஷிபிக்கு பெயர் போன டீச்சரிடம், ஒருமாதமோ, இரண்டு மாதமோ இருக்கையில் சேர்ந்தேன், ஐந்தாவது ஆளாய்....

யார் யார் எனக்கு முன்னம்...அவரிடம் படித்தவர்கள் என்றால்,

ஒரு பெடியன்; அவன் நான் நினைக்கிறன் நெடுன்தீவோ, புங்குடு தீவோ தெரியவில்லை, இருந்த சொத்து பத்தெல்லாம் வித்துப்போட்டு, நகரந்தில் இருக்க வேண்டும்/ முன்னேற வேண்டும் என்று எங்கள் அருகில் இருந்தவர்கள். அவரது தந்தையார் நான் நினைக்றேன் "சங்கக்கடை மானேசர்" போன்ற பென்சன் இல்லாத, வரும்படி குறைந்த தொழில். படிப்பதை தவிர, தந்தையார் பகுதி நேரமாக செய்த மரக்கறிகளையும் விற்க வேண்டும்..பிரயாசை ஆன பெடியன்..எதோ ஒரு இனம் புரியாத "கப்" -Gap - இருந்தது...தமிழ் கட்டுரை பாடமாகுவதில் ஒரு எச்பெர்ட். "கல்வியா செல்வமா, நிலையானது" என்றால், அந்த காலத்தில் இருந்த "உயர் கல்விப்பிதிப்பகத்தின் " ஐந்தாம் வகுப்பு மாதிரி வினாவிடை பகுதியில் உள்ள கட்டுரை எல்லாம் தலை கரணம்" ...எப்ப பார்த்தாலும் வகுப்புக்கு பிந்தித்தான் வருவார்- பெரும்பாலும் வீட்டு வேலை காரணமாக..அவருக்கு A என்று வைப்பம்...

மற்றவரும் ஒரு பெடியன்தான்-B; பெரிதாக குடும்ப "பாக் கிரௌண்ட் " தெரியாது...தகப்பன் லொறி முதலாளியோ/ லொறி ஓடினவரோ/ வெளிநாட்டில் இருந்தவரோ--கொஞ்சம் வசதியான பெடியன்..5 பேருக்குள்ளும் கருபென்டாலும் கொஞ்சம் குளு குளு என்று இருந்த பெடியன்..படிப்பு - பெரிசா சொல்லகூடிய மாதிரி இல்லை - ஆகக்குறைந்தது எங்கடை லெவல் தானும் இல்லை என்று சொல்லுங்கோவன் - குறிப்பு இவர் பழைய விளையாட்டு பொறுப்பாளரின் மருமகன்/பெறாமகன்-

ஒரு பெண்-C; அந்தக்காலந்திலேயே, ஒரு பத்து பதினோரு வயதிலேயே குத்து விளக்கு பெண் என்பதற்கு உதாரணமாக இருந்த பெண்...இப்பவும் அழகான பெண்தான்.. எதோ எனக்கு ஒரு விதமான ஈடுபாடும் இல்லை- காரணத்தை இதில் சொல்ல விரும்பவில்லை- அப்படியான நிலைமைகள் உங்களுக்கும் இருந்திருக்கும்...

மற்றது நான்-D ...ஒரு குட்டி ஊர் பள்ளிகுடத்தில் படித்தேன், மற்ற 4 பேரும் படித்தது டோம் போஸ்கோ எனப்படும் "st John " போஸ்கோ, போய் சேர்ந்தது அம்மா அப்பாவின் விருப்பத்தால், அதற்கு மேல், நான் படித்த, எனக்கு படிப்பித்த " அக்காமாரின் ரேகோம்மொண்டசன்" என்றால் தான் மிகப் பொருத்தம். கிடத்தட்ட 4 - 5 பேரை பார்த்தாயிற்று 5 வகுப்புக்குள்...ஒரே ஒரு ரேகோம்மதாசன் ( recommendation ) நல்ல பெடியன், நல்ல படிப்பார் , ஆனால் சரியான குழப்படி, வேற ஆரும் "கொன்றோல்" பண்ணகூடிய ஆக்களிடம் அனுப்பினால் நல்லது.

மற்றது அவன்-E,

எனக்கும் அவனை எங்கோ பார்த்த ஞாபகம், நான் படித்த நேர்சரியில் தான் அவனும் படித்தாலோ தெரியவில்லை- அதைவிட நாங்கள் இருந்தது ஒன்றும் டொரோண்டோ டவுன் டவுன் இல்லைத்தானே, ஆளாய் ஆள் காணாமல், சந்திக்காமல் இருக்க. எதோ ஒரு பிடிப்பு இருந்தது இருவருக்கும், அகக் குறைந்தது அந்த பெண்ணை சைடு அடிப்பதில் தன்னும்.- முதலே சொன்ன மாதிரி அதுதான் எங்களை கொஞ்சம் பிரிந்ததும் வைத்தது- எனக்கு எதோ பெரிதாக விருப்பம் இல்லை அந்த சிறுமியை சைடு அடிக்க- மற்றது சைடு அடிக்கிறது என்றால் என்ன? 10 வயசு பெடியளுக்கு..நான் நினைக்கிறன் சும்மா பார்த்தால் சரி என்று..வேற ஒண்டும் செய்ய வில்லை..எக்ஸாம் டென்ஷன் பாருங்கோ..நான் சேர்ந்ததே ஒரு 2 மாதம் இருக்கேக்க தான்.

அதைவிட பெரிய காரணம் - அவனோடு நெருங்கி பழக நாங்கள் இரண்டு பேரும் முதலில் வகுப்புக்கு போவோம்..அந்த A எப்பவும் கடைசி தானே..மற்றாக்கள் பிந்தி பிந்தி வருவினம். நானோ ஒரு நல்ல பிள்ளை பேர் வாங்க தலையால( சும்மா கதைக்காக எழுதினது ) நடந்த காலம்..அவனுடைய பெற்றோர் என்ன தொழில் என்று தெரியவில்லை, அவனும் ஒரு வசதியான இடத்து பிள்ளையே.

இப்படி எல்லாம் ஸ்பெசல் வகுப்பு படித்தும், ஐந்து பேருக்கும் கொலர்ஷிப் வந்தது "கையோட கம்மரிசா", பிறகு இந்துகல்லூரி சோதினையும் எடுத்தோம்..திருப்பவும் "புறக் கம்மாரிஸ்" வந்தது. பிறகு ஆள் ஆள் சொல்லிக்கொண்டு திரிந்தது, எனக்கு 2 மார்க்சால கிடைக்கவில்லை, உனக்கு 2.31 கிடைக்கவில்லை என்று.

மிகுதி அடுத்த வாரம் .........

Posted

தொடருங்கள் வொல்கனோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிறகு;

இந்த கொலஷிப் ஆரவாரம் எல்லாம் முடிந்தாப் பிறகு, ஆள் ஆள் ஒவ்றொரு பக்கத்தால் போய்விடோம். நம்ம A முதலில் வன்னிக்கு குடிபெர்யர்ந்தார், நீண்ட கால திட்டத்தில்-குறைந்த புள்ளிகளில் பல்கலை போவதற்காய்.ஏனையோர், அருகில் இருந்த பழமைவாய்ந்த,-யாரும் கவனிப்பார் அற்று இருந்த- பாடசாலையில் சேர்ந்தார்கள். அந்த காலத்தில், கோட்டை செல்லடி காரணமாக, சனம் கூடுதனால மட்டும் கிட்டவுள்ள பாடசாலைகளில் சேர்ந்து படிப்பதுதான் வழமை. இதனால் அந்த ஊர பள்ளிகூடத்திர்ற்கும் திடீர் மார்க்கெட் வந்தது. அட்மிசன் காசு, டொனேசன் என்றெல்லாம் கேக்க தொடங்கிவிடார்கள். பாடசாலையும் நல்ல திருத்தம்.

இந்த நேரத்தில் தான், புதிதாக, நீண்ட காலத்திற்கு பிறகு, கிரிகெட் தொடங்கினார்கள். முதல் இரண்டு ஒரு வருடம், வேற வேற பள்ளிகூடத்தில் இருந்து ஒ எல் பெயில் விட்டவர்களையும் சேர்த்து, ஒரு 15 பேரைப்பிடித்து, மத்திய மகா வித்தியாலய கிரிக்கெட் அணி என்று ஒரு அணியை தொடங்கினார்கள். உலகத்தில் உலகத்தில் உள்ள எல்லா அணிகள் இடமும் இன்னிங்க்ஸ் ஆல், தோற்பது என்றால், அந்த பள்ளிக்கூடம்தான்.

பிறகு 2 -3 வருடம் கழித்து, எனது கொலசிப் நண்பர்கள், B உம் E உம், 19 வயதுக்குட்பட அணியில் இடம் எடுத்தார்கள். அதிலே, B கெட்டிக்காரன், அந்தகாலத்திலேயே SWING இருந்த ஒரு போலர், அதே போல, E ஒரு மிகச்சிறந்த பந்து பிடிப்பாளர், நல்ல வேகபந்து வீச்சாளர், அதை விட இன்னும் எனக்கு தெரிய 2 பேர், அணியில் இணைந்தார்கள். போட்டிகளின் முடிவுகள் ஏதும் மாறவில்லை, ஆனால், அவர்கள் அந்த வயசிலேயே (14 வயதில்) யாழ்பாணத்தில் குறிபிட்டு சொல்லகூடிய வீரர்களாக வந்தார்கள். அவர்களது 15 வயது அணி மிகச் சவாலான அணியாக மாறியது. (அவர்கள் 15 வயதுக்கு உட்பட்ட, அணிக்காக விளையாடியபோது )

இந்த நேரத்தில்தான், பெடியள் டியூஷன் டியூஷன்ஆக, இயக்கத்திற்கு போற காலம் வந்தது, நான் படித்த டியூஷன் இருந்து 2 - 3 செட் கழண்டவுடன், அம்மா சொல்லிப்போட்டா, மகனே நீ படிச்சது காணும், வீட்டில இருந்து படி என்று. E இனது நிலைமை வலு மோசம், அவருடைய டியூஷன் வாத்தியாரே இயகத்திர்ற்கு போய்விடார்.. டியூஷன் உம் இழுத்து மூடியாச்சி...

மிகுதி நாளை;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் நினைக்கிறன், 89 களில், இந்தியன் ஆமி இருக்கிற காலத்தில், இன்னுமொரு டியூஷன் இல் மீள சந்தித்தோம், B , D , E , எங்களது நடை உடை பாவனைகள் பெரிதும் மாறி விட்டிருந்தது. எங்களது தேவைகளும் மாறி விட்டிருந்தது. என்னைதக்க வைப்பதற்காய் நான் நிறைய படிக்கிற வேலை/வேஷம் இருந்தது, அதே போல, அவனுக்கும் அடிக்கடி கிரிக்கட் பயிற்சி, போட்டிகள் என்று திரிந்தான். நான் நினைக்கிறன் B இரண்டு தடவைகள் அணிக்கு தலைமை தங்கியிருக்க வேண்டும். E ஒரு பிரித்து பார்க்க முடியாத அணியின் அங்கத்தவர் ஆனார். இதனால் எங்களில் உறவுகளும் பழையது போல் இருந்ததுஅல்ல. காய் பாய் சொல்லுவதுடன் மட்டும் நின்றது போல...

பிள்ளை பிடிகாரர் பிள்ளைகளை பிடிக்க தொடங்கினவுடன், திரும்பவும் டியூஷன் அன்ஆபீசியால் ஆக மூடப்பட்டது. திரும்ப டியூஷன் தொடங்க B யும் இல்ல E இல்லை. B எங்கோ வெளிநாடு சென்று விட்டார், E இயகத்திர்ற்கு போய்விட்டார்- அவர் போன காலம் எனக்கு சரியாக ஞாபகம் இல்லாமல் இருக்கிறது, சில காலம் திரும்பவும் டியூஷன் வந்து விட்டுத்தான் போனவரோ தெரியாது- போய் சில காலத்திலேயே, புதிதாக தொடங்கின "பசிலன்" குறுப்பில் சேர்ந்து விட்டார்/ தெரிந்து எடுத்தார்களோ தெரியாது ~ 6 அடி உயரம் இருப்பார்/ நல்ல திடகாத்திரமான இளைஞன்.

;;;;;;;;;;;;;;;;காலங்கள் சிலது மாறி எழுதியிருக்கலாம்....மன்னிக்கவும்;;;;;;;;;;;;;;

சேர்ந்து சில நாளிலேயே, காயப்பட்டு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள், போய் பார்த்த போது, மெலிந்து, அழமான பார்வையுடன், வாய் முழுக்க தையல் உடன், முன் பற்கள் இல்லாமல் இருந்தார். சிரித்து கதைத்து கொண்டு இருந்தார், "பசிலன்" கொண்டு பலாலி அடித்த போது, முதலே வெடித்தாலோ அல்லது எங்கேயோ பாட்டு திரும்பி வந்ததாலோ, இவர்கள் இருந்த இடத்திலேயே அது வெடித்து விட்டது என்று சொன்னார். எங்களோடு கதைத்த நேரம் தவிர எதோ வாசித்து கொண்டு இருந்ததும் ஞாபகம் இருக்கு...

பிறகு இன்னும் சில காலத்துக்கு பிறகு, நான் நினைக்கிறன், ஆனையிறவு சண்டையிலும் காயப்பட்டு, - எங்கே காயம் என்று ஞாபம் இல்லை, ஆனால் வாய் மட்டும் கிழவிகளினது போல், ஒடுங்கி இருந்தது..பழைய காயத்தால், பற்களும் இல்லாமல்...

பிறகு சில நாட்களின் பின்பு, விசேட பதிப்பு பேப்பர் ஒன்று வந்தது, கப்பல் மூழ்கடிப்பு என, அதில் இருந்த கரும்புலி,....அவன்தான்

  • 1 month later...
Posted

தமிழர்கள் ஒருவிதத்தில் மட்டும் கொடுத்துவைத்தவர்கள்..! எங்கள் இனத்தில் இவர்போல் கடவுளர்கள் அதிகம்..!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கோ வொல்கனோ நானும் வாசிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

[size=4]எனக்கு அவரை தெரியும்.அவருக்கு கப்டன் நிலையும்[/size][size=1]

[size=4]கொடுத்திருந்தார்கள்.நல்ல உள்ளம் .[/size][/size]

[size=1]

[size=4]தொடருங்கள் [/size]

[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.