Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. 
 
இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.'' இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். "இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். 
 
அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமை களையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர், "நாட்டில் மீண்டும் பிரிவினை வாத சக்திகள் தலைதூக்குகின்றன. 
 
அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். ஆகவே, சிங்கள மக்கள் வீதியில் இறங்கி 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடவேண்டும். 
 
வடமாகாண சபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். எனவே, இந்தத் தேர்தலை அரசு நடத்தக்கூடாது'' என்று தெரிவித்திருந்தார்.
 
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் நேற்று உதயனிடம் தெரிவித்தவை வருமாறு: 
 
"முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறி யுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். 
நான் சமயவாதி; அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன். ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. 
 
தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண்பழி சுமத்துகின்றது.
  
பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது. 
 
இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது. எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது; கலாசாரத்தைக் கொண்டது. 
 
எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது. 
 
எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்''  என்றார்

 

http://onlineuthayan.com/News_More.php?id=455922056123750690

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு புனர் வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறுமளவுக்கு இனவாத அமைப்புக்களின் அட்டகாசம் கூடிவிட்டது. இவர்களை பின்னால் இருந்து இயக்குவது மகிந்த, கோத்தபாய போன்ற இனவாதிகள் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உப்பில்லாத போது................ :(

(சாமிமாரும் அதே.... :( )

கூட்டமைப்புக்கு புனர் வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறுமளவுக்கு இனவாத அமைப்புக்களின் அட்டகாசம் கூடிவிட்டது. இவர்களை பின்னால் இருந்து இயக்குவது மகிந்த, கோத்தபாய போன்ற இனவாதிகள் தான்.

 

எனக்கு மகிந்தா கோத்தா பிளவின் அறிகுறியா இந்த பொது பல சேனா என்றும் சந்தேகமாக இருக்கு. கோத்தாவால் மகிந்த சித்தாந்ததிற்கு கண்டு பிடித்த மாற்றீடு போலத்தான்  இந்த புத்த பல சேனை இருக்கு போலவும் படுகிறது.

எனக்கு மகிந்தா கோத்தா பிளவின் அறிகுறியா இந்த பொது பல சேனா என்றும் சந்தேகமாக இருக்கு. கோத்தாவால் மகிந்த சித்தாந்ததிற்கு கண்டு பிடித்த மாற்றீடு போலத்தான்  இந்த புத்த பல சேனை இருக்கு போலவும் படுகிறது.

 

என்ன மல்லை இப்படிக் கேட்கின்றீர்கள்? பொதுபல சேனாவை இயக்குவதே கோத்தா தானே.

என்ன மல்லை இப்படிக் கேட்கின்றீர்கள்? பொதுபல சேனாவை இயக்குவதே கோத்தா தானே.

 

அது வரைக்கும் வெளிச்சம் தான். ஆனல் அதில் மகிந்தா பங்கு என்ன என்பதுதான் அனுமானிக்க சிக்கலானதாக இருக்கு. முஸ்லீம் அமைப்புக்களை மகிந்தா பொது பல சேனவிடம் பேசி சமரசம் செய்ய சொன்னர். தான் செய்தும் வைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இந்த ஆயரை யாழில் இருப்பவர்கள் முந்தி திட்டு,திட்டேன திட்டின ஞாபகம் இப்ப அவர் நல்லவரா,கெட்டவரா :rolleyes:

 

மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி c2b93529b1fda2327bb76f3408fc7020.jpg இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள பௌத்தர்கள் கடும் போக்கானவர்கள் அல்ல. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பௌத்தர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படையாகும்.

நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=801062058424754033

 

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

வடக்கில் திடீர் திடீர் என தோன்றும் புத்த விகாரைகள் பற்றி மகிந்தவுக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஒரு பேக்காட்டல் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
 
பள்ளிவாசல்களை இடித்து தள்ளுவது மற்றுமொரு மத சுதந்திரத்தை மறுப்பது ஆகும். 
 
மேற்கூறியவை சிங்கள இனவாதிகளால் மிக திட்டமிட்டு செயற்படுத்தப்படுகிறது.

 

நுணா: இந்தாள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். அது வேறு.

 

ஆனால் இந்தாள் தன்னை "புத்த தீவிரவாதிகளிடம்" தூரமாக்க முயல்கிறாரா அல்லது கோத்தாவிடமிருந்து தூரமாக்க முயல்கிறாரா என்பதுதான் புரியவில்லை. இந்தாள் தன்னை  புத்தத்தை காப்பாற்றிய புத்த இனத்துவேச மகாவம்ச புகழ் துட்ட கைமுனு மன்னனாகவல்லவா தம்பட்டம் அடித்துக்கொள்பவர். பின்னர் இப்போ ஏன்  அந்தப் புகழிலிருந்து back off பண்ணுகிறார்?

 

சிங்கள புத்தமத விசுவாசிகள் எம்மை போலவே சகுனங்கள் ,'premonition' போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களின் புனித நாளான வெசாக் அன்று புனித பூமியான தலதா மாளிகையில், அங்கு வாழ்ந்த புனித துறவியான புத்தபிக்கு தீக்குளித்தை கூட பார தூரமாகத்தான் எடுப்பார்கள். நிச்சயமாக இது புத்த விசுவாசிகளுக்கு புத்த பல சேனை மீது திடுப்திடுப்பான எச்சரிக்கையைத்தான் கொண்டுவரும்.  தமக்குத்தான் இந்த பொது பல சேனை தீவைக்கிறார்களா அல்லது நாட்டுக்கே வைக்கிறார்களா என்றுதான் பயப்பட போகிறார்கள். அநுமான் வைத்த தீயிக்கு பிறகு அடுத்த தீயா இது என்று எண்ணித்தான் அவலப்படப்போகிறார்கள்.

 

இதை, மகிந்த தன்னிடம் இருந்து பதவியை பறிக்க, இவ்வளவு றேஞ்சில் கோத்தா தயார்ப் படுத்துகிறாரா என்று நினைத்தா இப்படி பேசுகிரார் என்று சந்தேகிக்கிறேன். புலிகளிடமிருந்து புத்த சமய நாட்டை காப்பாற்றிவிட்டதாக டமாரம் அடித்த மகிந்தா இனி புத்த பிக்குகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதாக  டமாமாரம் அடிக்க முடியாமல் தடுமாறுகிறார் என்பதை தனது பேச்சில் "சில அரசு சார்பற்ற நிறுவனங்கள்" என்பது மூலம் காட்டுகிறார். இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக அகிலம் முழுவதும் கிளைகள் திறக்கின்றன என்பது மட்டும் அல்ல, அம்பாந்தோட்டையில் மகிந்த பணத்தை விரயமாக்கியதை தாம் மகிந்தாவின் ஆலோசகர்களாக இருந்திருந்தால் தடுத்திருப்போம் என்கிறது. கோத்தா அரசில் இல்லாதா  பாதுகாப்பு அதிகாரியே. அம்பாந்தோட்டையில் காசை கரியாக்கிய வாண வேடிக்கைகள் அவரின் ஆலோசனைகள் அல்ல. கோத்தா பணம் கட்டும் சூது, மிக் பிளெணும், பெல் கெலிகோப்டர்களுமே. மகிந்தாவின் பொருளாதார மந்திரி பசிலே.  அவர் பணம் கட்டிய சூதுதான் அம்பாந்தோட்டை விமான நிலையம்.

Edited by மல்லையூரான்

\\தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை\\

 

 

 

ஒரு மதத்தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு இவர் உதாரணமாய் இருக்கிறார் ................எனனில் உண்மையை பேசுகிறார் .........

  • கருத்துக்கள உறவுகள்

\\தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை\\

 

 

 

ஒரு மதத்தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு இவர் உதாரணமாய் இருக்கிறார் ................எனனில் உண்மையை பேசுகிறார் .........

 

 

அநேகமான கத்தோலிக்க மத குருமார் இது போன்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்கள் தமிழ்சூரியன்.

வீதத்தில் ஒப்பிடும் போது

சைவசமயத்தவரைவிட அதிகம்.

அதே நேரம் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் முக்கிய  காலங்களில் பேசிய  பேச்சுக்களும் பிரான்சில் வந்திருந்தபோது கொடுத்த பேட்டியும் ...........???

வேண்டாம்

இனி  நல்லது நடக்கட்டும்

வரவேற்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடுச் செபமாலை மாதாவே..

அநேகமான கத்தோலிக்க மத குருமார் இது போன்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்கள் தமிழ்சூரியன்.

வீதத்தில் ஒப்பிடும் போது

சைவசமயத்தவரைவிட அதிகம்.

அதே நேரம் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் முக்கிய  காலங்களில் பேசிய  பேச்சுக்களும் பிரான்சில் வந்திருந்தபோது கொடுத்த பேட்டியும் ...........???

வேண்டாம்

இனி  நல்லது நடக்கட்டும்

வரவேற்போம்

விசுகு  அண்ணா எனக்கு நடந்த விடயம்  தெரியும் ..............நானும் ஓர் கத்தோலிக்கன் .....எனக்கு பிடிக்காதவர்கள் கத்தோலிக்க மதகுருமார் ................தமிழ்நாட்டு கத்தோலிக்க   மதகுருமார்கள் இதற்கு விதிவிலக்கு ..............ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கும் இயேசுவை அவரின் பணிவை ,கீழ்ப்படிதலை ,ஒடுக்கப்பட்டோர் விடுதலையை ,பிரதிபலிப்பவர்கள் இந்த தமிழ்நாட்டு சுவாமிகள் ............

 

.எங்கள் தமிழீழ சுவாமிகள் தமக்கென்றொரு வட்டம் ,பட்டம் போட்டு வாழ்வதையே பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன் ................

 

ஆனால் மாண்புமிகு மைக்கல் ஜோசப் அடிககள் அவர்களை இதற்குள் நான் சேர்த்தால் என்னை விட சாவான பாவி இந்த உலகில் இருக்கமுடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.