Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு

Featured Replies

சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு

சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லை. தற்காப்பு ஆயுதங்களையே வழங்கவுள்ளோம் என எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த கடற்ரோந்தே சிறந்த வழிமுறை என நினைக்கிறேன். தமிழக மீனவர்கள் கடல்லெல்லையைத் தாண்டி அத்துமீறி உள்நுழைந்தாலும் அவர்களை சுடவேண்டாம் என இலங்கை அரசிடம் வலியுத்தியுள்ளோம். இதற்கு இலங்கை அரசும் இணங்கியுள்ளது எனவும் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப அந்த SLR உம் SMG யும் கொண்டலையப் போறாங்களா.. சிங்கள ஆமி..! :blink::blink:

இவங்கள் தீரந்த மாட்டாங்கள்...

கொலைகாரக்கூட்டம்.. :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களிடம் உள்ள உக்கிபோகும் நிலையில் உள்ள ஆயுதங்களை சிறீலங்காவிற்கு தள்ளிவிடுவதென முடிவு செய்துள்ளோம் என்டதை தான் இப்படி குழப்பமா சொல்லி இருக்கினம்.

...

சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லை. தற்காப்பு ஆயுதங்களையே வழங்கவுள்ளோம் என எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

...

ஆயுதங்களில் தற்காப்பு ஆயுதங்கள் தாக்குதல் ஆயுதங்கள் என்று இரு பிரிவுகள் இருப்பது நாராயணன் சொல்லித்தான் தெரிந்தது.

அவ்வாயுதங்கள் எவை என்பதையும் நாராயணனே சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

தற்காப்பு ஆயுதங்கள் என்றால் கேடையம், மார்புக் கவசம் போன்றவையா ?

  • தொடங்கியவர்

எப்படியோ கொடுப்பதில் பெரும்பகுதி புலிகளிடம் வரப்போகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

messing.jpg

இந்திய வழங்கவுள்ள அதி நவீன ஆயுதம்!

இவையள் எப்படி தான் ஆயுதம் வழங்கினாலும் குரங்கின்ர கையில புமாலை கொடுத்த மாதிரி தான்!

இந்த செய்தி ஒன்றும் ஆச்சர்யபடுவதர்கில்லை

யார் என்ன தடை போட்டாலும் தமிழீழம் மலர்வது நிச்சயம்!

அது காலத்தின் கட்டளை.

எந்த வல்லரசும் எந்த வல்லூறும் காலத்தின் கட்டளைக்கு தலைவணங்கி தான் ஆகவேண்டும்.

Edited by vettri-vel

ஆயுதங்களில் தற்காப்பு ஆயுதங்கள் தாக்குதல் ஆயுதங்கள் என்று இரு பிரிவுகள் இருப்பது நாராயணன் சொல்லித்தான் தெரிந்தது.

அவ்வாயுதங்கள் எவை என்பதையும் நாராயணனே சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

தற்காப்பு ஆயுதங்கள் என்றால் கேடையம், மார்புக் கவசம் போன்றவையா ?

லிசானின் கருத்தோடு உடன்படுகிறேன். மேலதிகமாகவும் ஒரு கேள்வி கேட்க விருப்பம். "திரு ராசபாட்சா" இன்றைய "அல்சா சீரா" செவ்வியில் சொல்கிரார் புலிகளை தோற்கடிக்க மேற்கு நாடுகளை நம்பி பிரயோசினமில்லை, அயல் நாடு இந்தியாதான் உத விடமுடியும் என்று.

அதே சமயம், நாராயண அண்ணன் மூன்று முக்கிய விடயங்களை சொல்கிறார். ஒன்று, உங்களை தற்காத்து கொள்ள மட்டுமே ஆயுதங்கள் தர முடியும். இரண்டாவதாக "தற்காப்பு ஆயுதங்களோ வலிந்த தாகுதல் ஆயுதங்களோ வேறு எந்த நாடுகளிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டாம். மூன்றாவதாக "தமிழக மீனவர்கள் கடல்லெல்லையைத் தாண்டி அத்துமீறி உள்நுழைந்தாலும் அவர்களை சுடவேண்டாம்" என்று.

தயவுசெய்து இவற்றின் ஆழ அகலம் புரிந்தவர்கள் அறிந்தவர்கள் குழம்பிப் போயிருக்கும் என்போன்றோர்களை தெளிய வைப்பீர்கள?

நன்றி. - சின்னப்புள்ளி

இந்தியா இலங்கையை தனது அரவணைப்புக்குள் வைத்திருக்கவும் வேண்டும். விடுதலைப்புலிகளைப் பலமான நிலையிலும் வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான் இந்த ஆயுத உதவி. விடுதலைப்புலிகளால் நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்படும் என்பதை இந்தியா நன்கறியும். அவ்வாறு தெரிந்து கொண்டே ஆயுதம் வழங்குகின்றதென்றால் அதன் அர்த்தத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் .

ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்காது ராடர் உள்ளிட்ட சாதனங்களை மட்டுமே வழங்கும்

இலங்கைக்கு யுத்த ஆயுதங்களை இந்தியா ஒரு போதும் வழங்காது; ஆனால், தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும் ராடர் உள்ளிட்ட சாதனங்களை மட்டும் இந்தியா இலங்கைக்கு வழங்கும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார். நேற்று காலை தமிழகம் வந்த எம்.கே. நாராயணன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியினை சந்தித்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே நாராயணன் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக்கடற்படையினால் தாக்கப்படுவது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனையடுத்தே நேற்று தமிழகத்துக்கு விஜயம் செய்த எம்.கே. நாராயணன் மீண்டும் தமிழகமுதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கருணாநிதியுடனான சந்திப்பினையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த எம்.கே.நாராயணன் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குலை தடுக்க இந்திய கடற்படையும் கடலோரக் காவற்படையும் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் ரோந்துப்பணிகள் மேற்கொள்வது குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன்.

தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துரையாடினேன். இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையினதும் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் ரோந்து மேற்கொள்வது குறித்து விவாதித்தோம். தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளோம்.

இந்திய கடற்படை இலங்கைக் கடற்படையுடன் கூட்டு சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடாது. ஆனால் இருதரப்பும் ஒருங்கிணைந்த ரோந்துப்பணியை மேற்கொள்ள முடியும்.

இலங்கைக்கு யுத்த ஆயுதங்களை இந்தியா ஒரு போதும் வழங்காது. ஆனால், தாக்குதலைத் தடுக்க பயன்படும் ரேடார் உள்ளிட்ட சாதனங்களை மட்டுமே இந்தியா இலங்கைக்கு வழங்கும் என்றார்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்து புலிகளிடம் விமானங்களை தாக்கியழிக்கும் ஏவுகணைகளையும் ரேடார் கருவிகளையும் இந்தியா வழங்க வேண்டுமென கோரியிருந்தார். இந்தியா ஆயுத உதவிகளை வழங்காவிடின் வேறு நாடுகளின் உதவியினை நாட வேண்டிவரும் என்றும் தெரிவித்திருந்தார்.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க வேண்டாம்: சிறிலங்காவுக்கு இந்தியா அறிவுரை

சிறிலங்கா தனது ஆயுதத் தேவைகளுக்கு எம்மிடமே வரவேண்டும், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை அணுகக்கூடாது என இந்தியா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாம் இந்த பிராந்தியத்தில் மிகவும் பலம் பொருந்தியவர்கள், சிறிலங்கா அரசு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் செல்வதனை நாம் விரும்பவில்லை. எந்த தேவை எனினும் சிறிலங்கா அரசு எம்மிடமே வரவேண்டும். எனினும் தாக்குதல் வலிமையுள்ள ஆயுதங்களை இந்தியா சிறிலங்கா அரசுக்கு வழங்காது.

ராடார்கள் தற்பாதுகாப்பு சாதனங்கள், எனவே தான் நாம் அவற்றை சிறிலங்கா அரசுக்கு வழங்கினோம். கடற்றொழிலளார்களின் பாதுகாப்பு கருதியே நாம் கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம்.

கடற்றொழிலாளர்கள், தமது வாழ்க்கைக்கான தொழிலுக்கு செல்பவர்கள். எனவே அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாம் என நாம் சிறிலங்கா கடற்படைக்கு கூறியுள்ளோம். அவர்களும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மாட்டோம் என எமக்கு உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.

எங்கு மீன்கள் உள்ளதோ அங்கு கடற்றொழிலாளர்கள் செல்லலாம். எல்லைகளை தாண்டாதவாறு அவர்களை தடுப்பது என்பது அதிகமானது. எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் வானூர்திகளை கொண்டிருப்பதற்கு நாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றார் அவர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka can approach India for arms needs: Narayanan

National Security Advisor M.K. Narayanan Thursday said Sri Lanka, facing frequent air attacks from Tamil rebels, should not approach Pakistan or China for weapons though he added that India cannot supply 'offensive military equipment'.

'It is high time that Sri Lanka understood that India is the big power in the region and ought to refrain from going to Pakistan or China for weapons, as we are prepared to accommodate them within the framework of our foreign policy,' Narayanan told reporters after a 45-minute meeting with Tamil Nadu Chief Minister M. Karunanidhi here.

'But it should be clear to Colombo that we cannot supply completely offensive military equipment. We are, however, willing to look at other options like better radars and tracking ordnance to (meet) the Sri Lankan government's defence needs in the light of repeated air attacks by the LTTE (Liberation Tigers of Tamil Eelam).'

Commenting on the repeated firing from the Sri Lankan Nay on Indian fishermen in the Palk Straits, he said: 'Our people naturally expect a good catch. Sometimes they indeed cross the international maritime boundary unwittingly.

'For something as minor as that, the Lankan Navy firing on our fishermen will no longer be tolerated. I have conveyed this personally on telephone to senior officials in Colombo,' Narayanan disclosed.

The official ruled out a unified command for the Lankan Navy and the Indian Coast guard, but indicated that the Indian government was willing to look at proposals for 'coordinated patrolling'.

Talking about his meeting with Karunanidhi, Narayanan pointed out: 'We discussed the security scenario and the problems faced by the Tamil Nadu fishermen.

'The chief minister was apprised of the centre's view of strengthening the defence of our coastline in the south with special emphasis on the Tuticorin port and its hinterland,' he added.

http://www.indiaenews.com/india/20070531/54235.htm

------------------

Come to us for weapons: Narayanan to Lanka

Objecting strongly to indications from Sri Lanka that it would shop for weapons in China or Pakistan for its war against the Tamil Tigers, National Security Adviser M K Narayanan today said the Island Nation should approach only India “whatever its requirements”. But India would not provide any ‘offensive’ weaponry and the assistance would only be confined to ‘defensive capabilities,’ he added hastily.

Emerging from a 45-minute meeting with Chief Minister M Karunanidhi here, Narayanan said: “It is quite clear we are the big power in the region. Whatever their requirements, they should come to us. We will give what is necessary.” However, he declined to elaborate on how India would meet Sri Lanka’s military needs when it took the stand that it was against providing ‘offensive’ capabilities.

Narayanan’s remarks are significant as it comes in the wake of reports that Sri Lanka had indicated that it would have to approach China and Pakistan for arms, if India was unable to provide them. As for the Tigers having acquired air-strike capability, Narayanan said: “We are not in favour of a group labeled as a terrorist organisation having air capability.”

On the opposition by some pro-LTTE parties in Tamil Nadu like the MDMK and PMK to any form of assistance to Sri Lanka, Narayanan said the radars, that India provided to Sri Lanka, can only be seen as ‘defensive capabilities.’

Narayanan’s discussions with Karunanidhi focused on the safety of Tamil Nadu fishermen, killed or attacked at sea, mostly when they crossed the International Maritime Boundary Line with Sri Lanka in the Palk Bay. Karunanidhi had raised the issue during his meeting with PM Manmohan Singh mentioning the March incident when 12 Indian fishermen were abducted by the ‘Sea Tigers’ and subsequently released and the five killed by the LTTE off Kanyakumari coast.

http://www.indianexpress.com/story/32383.html

No need to procure weapons from China, Pakistan: India tells Sri Lanka

By ANI

Thursday May 31, 07:47 PM

Chennai, May 31 (ANI): Advising Sri Lanka not to procure weapons from Pakistan and China to fight Tamil rebels, India on Thursday assured the island nation that New Delhi would look after their weapon requirements.

National Security Advisor M.K. Narayanan told reporters in Chennai that New Delhi would favourably consider any request for military hardware from Colombo.

"We are the big power in this region, let us make that very clear. We strongly believe that whatever requirements the Sri Lankan government have, they should come to us and we will give them what we think is necessary. We do not favour them going to China or Pakistan or any other country," Narayanan said after meeting Tamil Nadu Chief Minister M. Karunanidhi.

On Sri Lankan navy firing at Indian fishermen, Narayanan said they were free to cast their nets in the Palk Strait without any fear.

"I think we have got an understanding and I myself have talked to all authorities in Sri Lanka that they should be no firing. They have promised us that, so the question of preventing our fishermen from going across is asking too much from our fishermen," Narayanan added.

Several Indian fishermen have died in firing from Sri Lankan coast guards, who suspect them of LTTE rebels smuggling weapons to the island nation.

Narayanan, however, denied any joint patrolling with Sri Lankan navy to prevent such instances or monitor rebel movements.

"We have problems with joint patrolling. I said we are always ready for coordinated patrolling. Some of it is already taking place," he said.

The separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE), or Tamil Tigers, have been at war for more than two decades with the government, which has rested for years almost entirely in the hands of the Sinhalese majority, who account for around 75 percent of the population.

Local dailies reported that Sri Lanka was seeking military help from Pakistan and China to upgrade its air defence in the wake of Tamil Tigers acquiring air capabilities.

Sri Lankan has been seeking Indian support to fight LTTE growing capabilities. But India insists that it would only provide defensive weapons, like radars to Sri Lanka but no offensive weapons. (ANI)

http://in.news.yahoo.com/070531/139/6gi1d.html

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ கொடுப்பதில் பெரும்பகுதி புலிகளிடம் வரப்போகிறது

ஒவ்வொரு ஆயுதமீட்பின் போதும் பல போராளிகளின் தியாகத்தினால் தான் அது சாத்தியமாகின்றது. அதற்கு ஒவ்வொரு போரளியும் நிறையக் கஸ்டப்படுகின்றான்.

இந்தியா தமிழர்களை ஏமாளிகள் என்றும், தமிழர்கள் இந்தியாவை விட்டு, தூர நாடுகளை ஏற்கமாட்டோம் என்று நினைப்பதால் தான் இப்படிச் சிங்கள அரசுக்கு உதவி செய்கின்றது.

பாகிஸ்தானும், சீனாவும் உதவி செய்யக் கூடாது என்பதற்காக இலங்கைக்கு உதவுவதாகச் சொல்லுகின்ற நாராயணன், தமிழர்களும் இவ்வாறு பிறநாடுகளோடு அரவணைப்புச் செய்தால் அதற்குப் பதிலாக தமிழர்களுக்கும் ஆயுதம் வழங்குவரா?

பிராந்திய நலன் என்று சொன்னபடி தமிழர்களை அழிக்க செய்கின்ற உதவிகளை நியாயப்படுத்துகின்றவர்களின

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இந்தியா கொடுத்த ஆயூதங்கள் புலிகளின் கைகளுக்கு போய் விட்டது. இனிக்குடுப்பவையும் போகப்போகிறது. தூயவன் சொன்னதுபோல அவை போராளிகள் தியாகத்தினால், உயிர்களினால் புலிகளுக்கு கிடைத்தது.

pj32lq5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Fri Jun 1 5:38:24 EEST 2007

பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுத உதவி கேட்பதா? இந்தியாவிடமல்லவா அதனை இலங்கை கேட்க வேண்டும்! பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன்

இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானிட மிருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ ஆயுத உதவி கேட்பதை இந்தியா விரும்பவில்லை. அவர்களுக்கு ஆயுதங்கள் தேவைப் பட்டால் இந்தியாவைத்தான் அணுக வேண் டும். அழிவுதரும் ஆயுதங்கள் தவிர்ந்த பாதுகாப்புக்கான ஆயுதங்களை இந்தியா வழங்கும்.

இப்படிக் கூறியுள்ளார் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்.

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை நேற்றுச் சென்னையில் சந்தித்துப் பேசிய பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செய்தியாளர்களிடம் இப்படிக் கூறினார்.

தமிழக முதல்வருடன் 50 நிமிடங்கள் அவர் கலந்தரையாடினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தவையாவது:

* முதல்வரைச் சந்தித்து இந்தியக் கட லோரப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு பற்றி யும், மீனவர்களின் பாதுகாப்பு பற்றியும் பேசினோம். தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள், அதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினோம். தமிழக கடலோரப் பகுதியில் துõத்துக்குடி போன்ற மாவட்டங் களில் பாதுகாப்பை பலப்படுத்துவதன் அவ சியத்தை வலியுறுத்தினேன். தமிழக மீன வர்களுக்கு எந்தளவு பாதுகாப்பு அளிக்க முடியுமோ அந்தளவு பாதுகாப்பு வழங்கு வது உறுதி செய்யப்படும்.

* ஒரே தலைமையின் கீழ் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வந்துள்ளன. இவ்விடயத்தில் கவனம் செலுத்து வோம். இலங்கை கடற்படையுடன் சேர்ந்து கூட்டு ரோந்து மேற்கொள்ளப்படமாட் டாது.

* டில்லியில் சிலர் கூட்டு ரோந்துப் பணி குறித்து கேள்விகளை எழுப்பினர். "கூட்டு ரோந்து சரியல்ல; ஒருங்கிணைந்த பாது காப்பு கொடுக்கலாம்' என்று கூறினேன். ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் செயல் படுவதில் பிரச்னைகள் ஏற்படுமா என்பது பற்றி கடற்படை அதிகாரிகளுடன் ஆலோ சிக்க உள்ளேன்.

* மீனவர்களுக்கு எங்கு மீன்கள் கிடைக் கிறதோ, அங்கு தங்களது வாழ்வாதாரத்தை நோக்கிச் செல்கின்றனர். சர்வதேச எல் லையை கடக்க விடாமல் அவர்களை தடுப் பது சரியல்ல.

* "மரியா' கப்பல் விவகாரம் தானே. விடு தலைப் புலிகள் அமைப்பின் கடல் புலி களால் தாக்கப்பட்டு தான் தமிழக மீனவர் கள் உயிரிழந்தனர். இலங்கை கடற்படை யினர் சுடவில்லை. மேலும், மீனவர்களை சுடமாட்டோம் என இலங்கை கடற்படை யினர் தெரிவித்துள்ளனர்.

* எந்த பயங்கரவாத இயக்கமும் விமானப் படை வைத்திருப்பதை ஆதரிக்க முடியாது. வான்வெளி தாக்குதல் அதிகரிப்பதை நாம் எப்போதும் விரும்ப மாட்டோம்.

* இந்த பிராந்தியத்தில் பல மிக்க நாடு இந் தியா தான். சீனா, பாகிஸ் தான் நாடுகளின் உதவிகளை இலங்கை அரசு கோரக் கூடாது. அவர்களுக்கு என்ன தேவையோ இந்தியா விடம் தான் கேட்க வேண்டும். இலங் கைக்கு எந்தவிதமான உதவி தேவை என் பதை அறிந்து செயற்படுவோம்.

தாக்குதலுக்கான ஆயுதங்களை இலங் கைக்கு இந்தியா வழங்காது. இலங்கைக்கு ரடார்கள் வழங்குவதை இங்குள்ள அரசி யல் தலைவர்கள் சிலர் எதிர்க்கின்றனரே? ரடார்கள் பாதுகாப்புக்கான கருவி தான். தாக்குதல் நடத்த பயன்படுவதில்லை. எனவே தான் அவற்றை இலங்கை அரசுக்கு வழங் குகிறோம். இவ்வாறு நாராயணன் கூறி னார்.

uthayan

சிறிலங்காவுக்கு இரகசிய ஆயுத விநியோகம்: இராணுவத் தளபாடங்களுடன் இந்திய வானூர்தி

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 14:15 ஈழம்] [ந.ரகுராம்]

இந்தியாவுக்குச் சென்ற சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கைக்கு இணங்க, சில இராணுவத் தளபாடங்கள் அடங்கிய இந்திய வானூர்தி ஒன்று கொழும்புக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அப்பொருட்களை வழங்கிவிட்டுச் சென்றிருப்பதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தலைநகர் புதுடில்லி சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அங்கு இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தா, இராணுவத் தளபதி ஜெனரல் ஜே.ஜே.சிங் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடந்த மூன்று நாட்களாக பேச்சு நடத்திய பின்னர் நேற்று முன்னாள் காலை நாடு திரும்பியிருந்தார்.

புதுடில்லியின் இந்திய உயர்தரப்போடு கோத்தபாய ராஜபக்ச நடத்திய பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளால் தற்போது சிறிலங்கா அரச படைகளுக்குப் புதிதாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக உரையாடி உள்ளார். அப்போது அவற்றறைச் சமாளிப்பதற்குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள், இராணுவ உதவிகள் மற்றும் பாக்கு நீரிணையில் இந்திய சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுரோந்து ஆகியவை குறித்த கோரிக்கைகளையும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய வான்படையின் ஏ.என்-32 ரக வானூர்தி இரகசியப் பயணம் ஒன்றைக் கொழும்புக்கு மேற்கொண்டு சில இராணுவத் தளபாடங்களை வழங்கிவிட்டுத் திரும்பியிருப்பதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா ஏற்கனவே சிறிலங்காவிற்கு பரந்த அளவிலான இராணுவத் தளபாட உதவிகளை வழங்கி வருகின்றது. தாழப்பறக்கும் வானூர்திகளைக் கண்டுபிடிப்பதற்கு ஏற்கனவே இரண்டு ராடார் கருவிகளை வழங்கியிருந்தது. தற்போது மேலும் புதிதாக இரு ராடார் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளதாம்.

http://www.eelampage.com/?cn=31991

ஒவ்வொரு ஆயுதமீட்பின் போதும் பல போராளிகளின் தியாகத்தினால் தான் அது சாத்தியமாகின்றது. அதற்கு ஒவ்வொரு போரளியும் நிறையக் கஸ்டப்படுகின்றான்.

இந்தியா தமிழர்களை ஏமாளிகள் என்றும், தமிழர்கள் இந்தியாவை விட்டு, தூர நாடுகளை ஏற்கமாட்டோம் என்று நினைப்பதால் தான் இப்படிச் சிங்கள அரசுக்கு உதவி செய்கின்றது.

பாகிஸ்தானும், சீனாவும் உதவி செய்யக் கூடாது என்பதற்காக இலங்கைக்கு உதவுவதாகச் சொல்லுகின்ற நாராயணன், தமிழர்களும் இவ்வாறு பிறநாடுகளோடு அரவணைப்புச் செய்தால் அதற்குப் பதிலாக தமிழர்களுக்கும் ஆயுதம் வழங்குவரா?

பிராந்திய நலன் என்று சொன்னபடி தமிழர்களை அழிக்க செய்கின்ற உதவிகளை நியாயப்படுத்துகின்றவர்களின

இந்தியா இலங்கையை தனது அரவணைப்புக்குள் வைத்திருக்கவும் வேண்டும். விடுதலைப்புலிகளைப் பலமான நிலையிலும் வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான் இந்த ஆயுத உதவி. விடுதலைப்புலிகளால் நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்படும் என்பதை இந்தியா நன்கறியும். அவ்வாறு தெரிந்து கொண்டே ஆயுதம் வழங்குகின்றதென்றால் அதன் அர்த்தத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் .

முள்ளை முள்ளாள்தானே எடுக்கவேண்டும், இலங்கை அரசும் விடுதலைபுலிகளுடம் சேர்ந்து கொண்டுதானே இந்திய ராணுவத்தை எதிர்த்தார்கள், அதற்க்கு எதிர்வினையை எப்போது அனுபவிப்பது, அதற்க்கான நேரம் வந்துவிட்டது.

முள்ளை முள்ளாள்தானே எடுக்கவேண்டும், இலங்கை அரசும் விடுதலைபுலிகளுடம் சேர்ந்து கொண்டுதானே இந்திய ராணுவத்தை எதிர்த்தார்கள், அதற்க்கு எதிர்வினையை எப்போது அனுபவிப்பது, அதற்க்கான நேரம் வந்துவிட்டது.

ஆமாம்! முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அப்படி முள்ளை முள்ளால் எடுக்கும் காலங்களில் ஐயோ இது பயங்கரவாதம் என்று ஊரை கூட்டி ஒப்பாரி வைக்க கூடாது.

சிறிலங்காவுக்கு இரகசிய ஆயுத விநியோகம்: இராணுவத் தளபாடங்களுடன் இந்திய வானூர்தி

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 14:15 ஈழம்] [ந.ரகுராம்]

இந்தியாவுக்குச் சென்ற சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கைக்கு இணங்க, சில இராணுவத் தளபாடங்கள் அடங்கிய இந்திய வானூர்தி ஒன்று கொழும்புக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அப்பொருட்களை வழங்கிவிட்டுச் சென்றிருப்பதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தலைநகர் புதுடில்லி சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அங்கு இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தா, இராணுவத் தளபதி ஜெனரல் ஜே.ஜே.சிங் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடந்த மூன்று நாட்களாக பேச்சு நடத்திய பின்னர் நேற்று முன்னாள் காலை நாடு திரும்பியிருந்தார்.

புதுடில்லியின் இந்திய உயர்தரப்போடு கோத்தபாய ராஜபக்ச நடத்திய பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளால் தற்போது சிறிலங்கா அரச படைகளுக்குப் புதிதாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக உரையாடி உள்ளார். அப்போது அவற்றறைச் சமாளிப்பதற்குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள், இராணுவ உதவிகள் மற்றும் பாக்கு நீரிணையில் இந்திய சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுரோந்து ஆகியவை குறித்த கோரிக்கைகளையும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய வான்படையின் ஏ.என்-32 ரக வானூர்தி இரகசியப் பயணம் ஒன்றைக் கொழும்புக்கு மேற்கொண்டு சில இராணுவத் தளபாடங்களை வழங்கிவிட்டுத் திரும்பியிருப்பதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா ஏற்கனவே சிறிலங்காவிற்கு பரந்த அளவிலான இராணுவத் தளபாட உதவிகளை வழங்கி வருகின்றது. தாழப்பறக்கும் வானூர்திகளைக் கண்டுபிடிப்பதற்கு ஏற்கனவே இரண்டு ராடார் கருவிகளை வழங்கியிருந்தது. தற்போது மேலும் புதிதாக இரு ராடார் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளதாம்

http://www.eelampage.com/?cn=31991

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அறிவிப்பால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு

http://www.thinakkural.com/news/2007/6/2/i...s_page28214.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.