Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!?

Featured Replies

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!?

சமீப நாட்களாக கருத்துக்களத்தில் ஆண் பெண் நட்பு காதல் கலாசாரம் பண்பாடு என்று வாதாட்டமான கருத்துக்கள் நடைபெறுவதால் இக்கட்டுரையை பிரசுரிப்பது உகந்தது என்ற நோக்கோடு நம்ம பழைய உறுப்பனரான சந்திரவதனா அக்காவின் கட்டுரையை இங்கு பதிக்கின்றேன். :P

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன.

ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?

கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது பட்டிமன்றங்களும், ஒட்டுவெட்டுக்களும் பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன.

அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம். அவனுக்குத் துணை தேவையாம்.

ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது" என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள். ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். இனி அவள் இறக்கும் வரை தனிமைத் தீயில் வெந்து துடிக்க வேண்டுமாம்.

இது என்ன நியாயம்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தையோ பண்பாட்டையோ உருவாக்கியது யார்?

பெண் ஒன்று பிறந்து விட்டாலே பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்து விடவேண்டும். என்று சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் பெற்றோர்கள். தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். முக்கியமாக ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகி விடுகிறார்கள்.

ஆசை ஆசையாகப் பெண்ணைப் பெற்று விட்டு அவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் களிக்க வேண்டியவர்கள், நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு வாழ்வது போல தவிப்புடன் வாழ்கிறார்கள். வாழ வைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால், நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை.

ஏதோ - ஒரு பெண் பிறந்ததே - இன்னொருவன் கையில் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டு, அவனிடம் அடங்கி, ஒடுங்கி, அவனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் அடித்தாலும், உதைத்தாலும் அக்கம் பக்கம் தெரிய விடாது அவன் மானத்தைக் காத்து, அவனைத் தாய்மையுடனும், தோழமையுடனும் கவனித்து, பிறந்த வீட்டின் பெருமையைக் காப்பதற்கே, என்பது போல் இருக்கும் அவர்கள் செயற்பாடு.

இந்த நியதியில் எந்த மாற்றமும் ஏற்படக் கூடாது. அப்படி மாற்றம் ஏற்படுவதே ஒரு தப்பான விடயம் என்பது போலவே காலங்காலமாக எல்லாம் நடைபெற்றுக் கொண்டும் வருகின்றன. யாராவது ஒரு பெண் இந்த நிலை மாற வேண்டும் என்று குரல் கொடுத்தாலே, "அவள் கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் காலுக்குள் மிதிக்கிறாள்." என்று கூச்சலிடுகிறது எமது சமுதாயம்.

எமது பண்பாட்டின் படி "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற வரையறையான கோட்பாடு, மிகவும் போற்றப் பட வேண்டிய ஒன்றுதான். ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் போது மனதுக்கும் மகிழ்ச்சி. நிறைவு. முக்கியமாக எய்ட்ஸ் பிரச்சனை இல்லை. வேறு பாலியல் சம்பந்தமான நோய்களுக்கும் சந்தர்ப்பம் இல்லை.

ஆனால் ஆண்கள் மனைவி இருக்கையில் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டால், "ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவார்கள். பெண்கள் கண்டு கொள்ளக் கூடாது" என்கிறார்களே. இதுவும் தமிழர் பண்பாடா?

பெண்ணுக்கு மட்டும் "பொம்பிளை சிரிச்சாப் போச்சு. புகையிலை விரிச்சாப் போச்சு.......... " என்கிறார்களே.

எமது பண்பாட்டில் ஏனிந்தப் பாகுபாடு? எமது கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா? ஏனிந்தப் பாரபட்சம்?

தாலி, பொட்டு

அத்தோடு தாலி என்று இன்று விவாதிக்கப் படுகிறதே. இந்தத் தாலிக்காய் ஆதிகாலத்தில் வெறும் மஞசள் காயாகவே இருந்தது. அதாவது நாம் சமையலுக்குப் பாவிக்கும் மஞ்சள். ஏன் தெரியுமா? மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினி. இருவர் திருமண பந்தத்தில் இணையும் போது, ஒருவரில் இருக்கும் தொற்றுக் கிருமிகளோ, நோய்களோ மற்றவரை அணுகாமல் இருக்கவும், கிருமிகளைச் சாகடிக்கவுமே இந்த மஞ்சள் காய் பயன் படுத்தப் பட்டது.

இதே காரணுத்துக்காகத்தான் மணமக்களின் உடைகளிலும் மஞ்சள் பூசப்பட்டது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு அனுப்பப் படும் திருமண அழைப்பிதழுடன் நோய்க் கிருமிகள் சென்று விடாதிருக்கவே, அழைப்பிதழ் மஞ்சள் பூசி அனுப்பப் பட்டது. இதுவே நாளடைவில் மஞசள் பத்திரிகை என்ற பெயரில் வரத் தொடங்கியது. மஞ்சள் காயை, மஞ்சள் தண்ணீரில் தோய்த்தெடுத்த நூலில் கட்டித் தாலியாக அணிந்த காரணமே வேறு. ஆனால் அதுவே நாளடைவில் தங்கத்துக்கு மாறிவிட்டது.

இப்போது இங்கே வெளி நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப 30 பவுணிலும் 40, 50, 60, 70 பவுண்களில் கூடத் தாலிக் கொடி செய்து போட்டுத் திரிகிறார்கள். இதற்குப் போய் கலாச்சாரம் என்றும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். எமது கலாச்சாரம் என்ன 70 பவுணில் கொடி போடச் சொல்கிறதா?

இதே நேரத்தில் நவரத்தினங்கள், தங்கங்கள்... இவைகளுக்கு சில நோய்கள் எம்மை அணுகாமல் தடுக்கும் தன்மைகளும், சில நோய்களைத் தீர்க்கும் தன்மைகளும் உள்ளன. அத்தோடு காது குத்துதல், மூக்குக் குத்துதல் போன்றவை அக்கு பஞ்சர் ரீதியிலான நன்மைகளை எமக்குத் தருகின்றன.

இதே போலத்தான் பொட்டும். மூலிகைகள் கொண்டு செய்யப்படும் பொட்டை, நெற்றிப் பொட்டில் வைக்கும் போது அது மருத்துவ ரீதியாக உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் நன்மையையும் தருகிறது.

இப்படியான நல்ல காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட பல விடயங்கள் இப்போ தடம் மாறி, அவரவர் வசதிக்கேற்ப பல அடாவடித் தனங்கள் புகுத்தப்பட்டு, கலாச்சாரம் பண்பாடு என்பதற்கு என்ன அர்த்தங்கள் என்று தெரியாமலே பெண்கள் மேல் திணிக்கப் பட்டுள்ளன. கலாச்சாரம, பண்பாடு என்ற பெயரில் எமது பெண்கள் அடக்கப் படுகின்றனர். அடிமைப் படுத்தப் படுகின்றனர்.

முதலில் எமது கலாச்சாரத்தில், பண்பாட்டில் புகுத்தப் பட்ட அடாவடித் தனங்கள் களையப் பட்டு, தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப் பட வேண்டும்.

கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிச் சேலையுடன் செல்ல முடியுமா? அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா?

சில விடயங்கள் காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும். கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக் காக்க எம்மிடம் வேறு எத்தனையோ நல்ல விடயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக் காப்போம்.

சந்திரவதனா.

ஜேர்மனி

1999

Edited by வெண்ணிலா

ஒரு பெரிய பாதை வாகனங்களோ வேக வேக வருது...இந்தப்பக்கம் இருந்து நிறைய ஆண்கள் ..வாகனங்களுக்கூடாக பாதையைக் கடக்க ஓடுறாங்க ஒண்ணு ரெண்டு பேர் அடிபட்டு செத்திடறாங்க கண்முன்னால..

அந்த ஆண்பிள்ளைங்க ஓடிக்கடந்தாங்க நாங்களும் கடப்போம்னு சில பொண்ணுங்க வெளிக்கிட்டாங்க

பாத்தீங்கதானே எத்தனை பேர் அடிபட்டு விழுந்து கிடக்காங்க..

பாதாசாரி கடக்க கோடு போட்டு பச்சை சிவப்பு விளக்கு போட்டு

பக்கத்திலயே இடம் இருக்கு.. ஏன் அடுத்தவனைப் பார்த்து பாயணும்..

நாங்க நிதானமா முறையா கடப்போம்..

இன்னல்கள் இல்லாம நிம்மதியா சந்தோசமா பாதையைக்கடக்கலாம்...

என்ன திவ்யா போறியா போ... அடிபட்டுத்தான் சாக்போறே.. என்னு தனுஸ் களக்கா சொல்லிட்டு நான் பாட்டுக்கு..

பச்சை விளக்குக்காக காத்திருக்கேன்..

முன்மாதிரியா நல்லதை எடுத்துக்கணும்..

கெட்டத இல்ல :)

ஹலோ எக்ஸ்கியூஸ்மி... வணக்கம்!

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டும்தானா? சமீப நாட்களாக கருத்துக்களத்தில் நான் பெண்களுக்கு ஆதரவாக கதைக்கின்றேன் என்று குற்றச்சாட்டுகள் இருப்பதாலும், சிலர் நான் பெண்ணாக இருக்கலாமோ என்று சந்தேகிப்பதாலும், மற்றும் சிலர் நான் பெண்ணாக மாறத்தொடங்கியுள்ளேனா :) என்று சந்தேகிப்பதாலும், மேலும் களத்தில் உள்ள நேர்மையான ஆடவர்களின் மானம் கப்பலில் ஏறக்கூடாது என்பதற்காகவும் :P எனது எண்ணங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன்.

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லும்போது உங்கள் மனதில் தட்டுப்படுபவை எவை? எனக்கு என்னென்ன எனது உள்ளத்தில் தோன்றுகின்றது என்று சொல்லிறன் கேளுங்கோ! இரு கரங்களையும் கூப்பி தெரிவிப்போமே வணக்கம், அதுதான் முதலாவதா தெரியுது, இரண்டாவதா பெரியவர்களின் கால்களில் பணிந்து வீழ்ந்து பெறுகின்ற ஆசீர்வாதம், பிறகு, அம்மாவும், அப்பாவும் அன்புடன் சேர்ந்து அண்ணா, அக்கா, தங்கச்சி, தம்பியை, என்னை வைத்து ஓட்டுகின்ற குடும்பம் என்ற அழகிய ஒடம். அடுத்து தேனாக இனிக்கின்ற தமிழ்மொழி... இதுக்கு பிறகுதான் மிச்சம் எல்லாம்... ஆனால், ஏனோ தெரியவில்லை நீங்கள் சொல்லிற புடவை, வேட்டி, தாலி மட்டருகள் என்ர மனதில வரவில்லை பாருங்கோ.

எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா? என்று கேட்கிறீங்கள். சொல்லிறன் என்று குறைப்படக்கூடாது. நாம வாழுறது வெளிநாடு. எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் நான் இல்லை என்று தான் உந்த கேள்விக்கு பதில் சொல்லுவன். தமிழனா இருந்தா வேட்டி கட்ட வேணும், நான் கட்டிற மனிசியின்ர கழுத்தில தாலியோ அல்லது மஞ்சள் கயிரோ இருக்க வேணும், மனுசி புடவை கட்ட வேணும், மனுசி தலைமயிரை நீளமா வளர்க்கவேணும், மனுசி நடக்கேக்க தெருவில விழுந்து இருக்கிற சில்லறைக்காசுகள பொறுக்குவதற்காக தலையக் குனிஞ்சு கொண்டு நடக்க வேணும், வேறையும் ஏதோ சொல்லுவீனம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதெல்லாம் மனிசிக்கு இருக்க வேணும்.. இப்படியெல்லாம் எதிர்பார்க்கிற டைப் இல்ல பாருங்கோ நாங்கள். உள்ளம் சுத்தமா இருக்க வேணும், உள்ளத்தில அன்பு இருக்க வேணும், மிச்சம் அங்கால அறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையில நல்ல மகிழ்ச்சியா இருக்கவேணும், இதுதான் நம்மட பொலிசி.

எனக்கு வேட்டி பிடிச்சிருந்தா ஏதாவது கொண்டாட்ட நேரங்கள் வரேக்க வேட்டியை கட்டுவன், அதேபோல நான் கட்டுறவளுக்கு புடவை பிடிச்சிருந்தா அவள் அதை விரும்பும் நேரங்களில கட்டட்டும். மற்றும்படி எனது குடும்ப ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் இல உந்த போலி பீதாம்பரங்கள் எல்லாம் அடக்கமில்லை. மனுசன் பிறக்கேக்க அம்மணமா பிறக்கிறான். மண்டைய போட்டாப்பிறகு கையில கொண்டு போறது ஒண்டும் இல்ல. இந்த இடைவழியுக்க நின்று உடுக்கிற உடுப்புக்கும், வாழுற வாழ்க்கைக்கும் "நான் ஒரு தமிழன் ஆகவே இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனில், நான் வாழ்க்கையில் கீழ்வரும் விதிகளிற்கு கட்டுப்பட்டு நடக்கவேணும்..!" இப்படியெல்லாம் சொல்லி நேரத்தை வீணடிப்பது என்னைப் பொறுத்தவரை சுத்த முட்டாள்தனம்.

உந்த பட்டிமன்றம், தொட்டி மன்றம் எல்லாம் எங்கட வாழ்க்கையுக்க புகுந்து விளையாடுறதுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்? :angry: அவனவன் கள்ளையும், கஞ்சாவையும் அடிச்சுப்போட்டு வந்து தொலைக்காட்சியில அரட்டை அரங்கம், குறட்டை அரங்கம் என்று நடத்திக்கொண்டு இருப்பாங்கள். இவனுகள் சொல்லுறத கேட்டு உங்கள யார் குழம்பச் சொன்னது? நான் என்றால் உதுகள சும்மா பொழுதுபோக கேட்பது ஒழிய உவங்கள் சொல்லுவதை கேட்டு நம்மட வாழ்க்கையையின் எதிர்காலத்தை தீர்மானிப்பது இல்லை. எங்களுக்கு சொந்த புத்தி இருக்கு பாருங்கோ. கடவுள் ஒவ்வொருவருக்கும் வஞ்சகம் இல்லாம மூளை என்கிற ஒரு பொருளை கொடுத்து இருக்கிறார். நீங்கள் உங்கள் மூளையை பாவித்து சொந்தபுத்தியுடன், சுயநினைவுடன் இருங்கோ. அப்பிடி இருந்தால் உங்கள் காதுகளின் இருமருங்கும் லவுட் ஸ்பீக்கர போட்டு "நீங்கள் ஒரு உதவாக்கரை!" என்று அலுக்கோசுகள் அறிவித்தாலும் கூட, தொடர்ந்து உங்களால வாழ்க்கையில போராடி முன்னுக்கு வரக்கூடியதாக இருக்கும். இதுக்குத்தான் தீயவற்றை பார்க்காதே! தீயவற்றை கேட்காதே! தீயவர்களுடன் பேசாதே! என்று கூறப்படுகிது.

நாங்கள் இப்ப கையில பிளக்பெரியுகள், லப்டொப்புக்கள், ஜீ.பி.எஸ் சிஸ்டங்கள், ஐபொட்டுக்களோட திரியிற 2007ம் ஆண்டில நிக்கிறம். நீங்கள் என்னடாண்டா வெறும் நெற்றிபொட்டுக்கள பற்றி அலட்டிக்கொண்டு இருக்கிறீங்கள். எங்கட பொலிசிய சொல்லுறம் கேளுங்கோ. "என்னோட இருக்கிறது உனக்கு விருப்பமோ? சரி சேர்ந்து இரு. இல்லையோ? நடையைக்கட்டு. உனக்கு நட்டைஈடு தருவதில் எனக்கு பிரச்சனை இல்லை. இன்னொருவனை வேண்டுமானால் நீ கலியாணம் கட்டியும் கொள்ளலாம்!" இதுதான் மனுசிக்கு சொல்லக்கூடியது. நாங்கள் எல்லாத்துக்கும் ஓல்ரெடி பிரிபயார்ட்! முகாமைத்துவம் படிச்சு இருந்தா உங்களுக்கு தெரியும் அதில ரிஸ்க் மனேஜ்மண்ட் என்று ஒரு முக்கியமான பகுதி இருக்கு. வாழ்க்கையில எல்லாவிதமான நிலமைகளையும் எதிர்கொள்ள நாங்கள் எப்பவும் தயாராக இருக்கவேணும் பாருங்கோ. நாம செய்ய வேண்டியது எல்லாம் நம்மட வாழ்க்கைய பாதிக்கிற இந்த ரிஸ்க் பக்டருகளை கண்டுபிடிச்சு, அதை எப்படி கையாளுவது என்று தெரிந்துகொள்வதுதான்.

உதாரணமா, கலியாணம் கட்டினதும் முதல் வேலையா செய்ய வேண்டிய ஒரு காரியம் கணவனும், மனைவியும் மற்றவரின் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துகொள்ளுறது. நான் நாளைக்கு செத்துப்போனாலும், என்ர மனுசி அதால பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை சீரழித்துவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இப்படி செய்யப்படுகிது. நான் செத்தா மனுசிக்கு இன்சுரன்ஸ் காசு கிடைக்கும். இதமாதிரி மனுசி செத்தா எனக்கு இன்சுரன்ஸ் காசு கிடைக்கும். ஆனால், நான் செத்தாப்பிறகு வாற இன்சுரன்ஸ் காச வைத்து மனுசி மறுமணம் செய்துகொள்வாளோ என்று பயப்பிடுறது எப்படியென்றா "தானம் கொடுத்த மாட்டின்ர பல்ல பிடிச்சு பார்க்கிற மாதிரி!" என்று சொல்லலாம். என்னைப் பொறுத்தவரையில் நான் மண்டையைப் போட்டாப்பிறகு மனுசிக்கு விருப்பம் என்றால் அவள் மறுமணம் செய்து கொள்வதில் எதுவித பிரச்சனையும் இல்லை. ஆனால் நீங்கள் என்னடாண்டா மறுமணம் பற்றி ஏதேதோ சொல்லி அழூறீங்கள். சிலவேளைகளில் இந்த கட்டுரையை 1999 இல் எழுதாமல் 2007 இல் எழுதி இருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீங்கள் என்று நினைக்கிறன். :P

மற்றையது, நீங்கள் சொல்லிற மாதிரி கணவன் இறந்தபின் பெண்களை ஒதுக்கிற காலம் எல்லாம் இப்ப மலையேறிப்போச்சு. நான் அறிஞ்சு எத்தனையோ அக்காமார் கணவன் இறந்ததும் மறுமணம் செய்துள்ளார்கள். வாழ்க்கையில சந்தோசமா இருக்கிறார்கள். கணவன் இறந்துவிட்டால் மனைவி அவள் இறக்கும் வரை தனிமைத் தீயில் வெந்து துடிக்க வேண்டும் என்று கூறும் வாதம் நியாயம் இல்லைதான். ஆனால், இவ்வாறு தனிமையில் வாடுவதற்கு யார் காரணம்? நீங்கள் எப்பவும் ஸ்டெடியா, தன்னுணர்வோட, எந்தவிதமான நிலமையையும் வாழ்க்கையில சந்திக்க தயாரா இருந்தால் இப்படியான பிரச்சனைகள் வராது. ஆனால் எடுத்ததுக்கெல்லாம் கணவனுக்கு பின்னால கவர் எடுத்தீங்கள் என்றால் கணவன் இல்லாத நிலையில் உங்களால் வாழ்க்கையில் தொடர்ந்து போராடுவது முடியாத காரியமாய் போய்விடும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தையோ பண்பாட்டையோ உருவாக்கியது யார்? எல்லாம் எங்கட மனம்தான் காரணம்! மனமே வாழ்வு என்று ஒரு பொன்மொழி சொல்லிது. அறிஞ்சிருப்பீங்கள் தானே? வெளிநாடுகளில பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு நிகரா பெண் குழந்தைகள் பிறப்பதை விரும்புகின்றார்கள். ஏன் நான் கூட எனக்கு அடுத்தடுத்து பெண்பிள்ளைகள் பிறந்தால் கவலைப்படமாட்டன். இது வெளிநாடு. பெண் பிள்ளைகள் வாழ்க்கையில முன்னேற ஆயிரம் வழியிருக்கு. அதுகள் வளர்ந்திதுகள் என்றால் பதினைந்து வயதிலேயே பார்ட் டைம் வேலை செய்துகொண்டு சொந்தக்காலில நிக்கிறதுக்கு இஞ்ச வசதி இருக்கு. சீதனம் சேர்க்கவேண்டிய கவலை எல்லாம் நமக்கு இல்லை பாருங்கோ. பிள்ளையை ஒழுங்கா படிப்பித்து, வளர்த்து விட்டாலே எங்களுக்கு போதும், மிச்ச பிரச்சனைகள அது தன்ர சொந்த மூளையை பாவிச்சு சமாளித்துகொள்ளும். பிள்ளைகள் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம். இதில ஆண், பெண் என்ற வேறுபாடு பார்க்க தேவையில்லை. பெண் குழந்தைகள் பற்றி கவலைப்பட்டு எப்படி நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தவிப்புடன் வாழவேண்டி இருக்கோ அதேமாதிரி ஆண்பிள்ளைகள் பற்றியும் தவிப்புடன் வாழவேண்டி இருக்கு. ஏனென்றால் இது வெளிநாடு. எப்ப பிள்ளை என்ன செய்யும், எப்ப பிள்ளைக்கு என்ன நடக்கும் என்று சொல்ல ஏலாது.

கட்டுரையின் இறுதிப்பகுதியில் நீங்கள் புலம்புற நிறைய விசயங்களுக்கு நான் ஏற்கனவே பதில் எழுதிவிட்டன் என்று நினைக்கிறன். நீங்கள் கலியாணம் கட்டிய ஆண்கள் மனைவி இருக்கும் போது மற்றைய பெண்களுடன் கொள்ளும் கள்ளத்தொடர்புகள் பற்றி சொல்லுறீங்கள். இப்படிப்பட்ட ஆட்கள் எங்களுக்குள் இருக்கிறீனம்தான். ஆனா, அவர்களின் இந்த நம்பிக்கைத்துரோகமான, கீழ்த்தரமான செயற்பாட்டை நாங்கள் அங்கீகரிக்கிற நிலையில இல்லை என்றும், அவ்வாறு இனங்காணப்படுபவர்கள் எங்களால ஒதுக்கப்படுவார்கள் என்றும் உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புறன். இங்க எங்களால என்று நான் சொல்லுறது என்னை மட்டுமே! மற்றவர்கள் செய்யுற அநியாயங்களுக்கு நான் பாத்திரவாளியா இருக்க ஏலாது. மேலும், இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டை எங்கள் சமூகம் இந்தக்காலத்தில் அங்கீகரிக்கின்றது என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் சொன்ன பல பழமொழிகள் இப்ப செல்லாக் காசாகி விட்டது. அதாவது அவற்றிற்கு இருந்த பெறுமதி நம்மட அறிவு, நாகரீகம் வளர்ச்சியடைய கால ஓட்டத்தில் நன்றாக அழிந்துவிட்டது.

நம்மட பக்க புலம்பலயும் பொறுமையா கேட்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! வணக்கம்! :D

நிலா அக்கா வெறி சொறி என்னால பொறுமையா இருந்து இவ்வளவு வாசிக்க ஏலாது..............சோ சொல்ல வாற மாட்டரை சோட் அன்ட் சுவீட்டா சொன்னீங்க என்றா நான் சரியோ பிழையோ என்று சொல்லுறேன்

நான் அங்கால போக இங்கே வந்து ஏசுறதில்லை சொல்லிபோட்டேன்...........

அப்ப வரட்டா.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலா. இதை நானும் நேற்று வாசித்தேன். சில கருத்துக்களோட எனக்கு உடன் பாடில்லை.

இருந்தாலும் கலைஞன் நீங்க சொல்லுற மாதிரி எல்லா ஆண்களும் இல்லையே. :)

பெண்ணின் மறுமணம் பத்தி சொல்லி இருந்தீங்க. இந்த கட்டுரை 1999 ஆண்டு வந்து இருக்கு. ஆனால் சந்திரவதனா சொன்ன கருத்தில் இருந்து எங்க சமுதாயம் இன்னும் மாறலை என்றுதான் நான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

நம்மட பக்க புலம்பலயும் பொறுமையா கேட்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! வணக்கம்!

கலைஞன் அண்ணா உங்கட பக்க புலம்பல் (அதுதான் உங்கள் தெளிவான கருத்து) அதை ஆறுதலாக அமைதியாக வாசித்தேன். நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

மேலும் களத்தில் உள்ள நேர்மையான ஆடவர்களின் மானம் கப்பலில் ஏறக்கூடாது என்பதற்காகவும் எனது எண்ணங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன்.

களத்தில் இருக்கும் நேர்மையான ஆடவர்களுக்காக அவர்களின் மானம் கப்பலில் ஏறக்கூடாது என்பதற்காகவும் இவ்வளவு கருத்துக்களையும் ஆறுதலாக எழுதி இருக்கின்றீர்கள். நன்றி.

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லும்போது உங்கள் மனதில் தட்டுப்படுபவை எவை? எனக்கு என்னென்ன எனது உள்ளத்தில் தோன்றுகின்றது என்று சொல்லிறன் கேளுங்கோ! இரு கரங்களையும் கூப்பி தெரிவிப்போமே வணக்கம், அதுதான் முதலாவதா தெரியுது, இரண்டாவதா பெரியவர்களின் கால்களில் பணிந்து வீழ்ந்து பெறுகின்ற ஆசீர்வாதம், பிறகு, அம்மாவும், அப்பாவும் அன்புடன் சேர்ந்து அண்ணா, அக்கா, தங்கச்சி, தம்பியை, என்னை வைத்து ஓட்டுகின்ற குடும்பம் என்ற அழகிய ஒடம். அடுத்து தேனாக இனிக்கின்ற தமிழ்மொழி... இதுக்கு பிறகுதான் மிச்சம் எல்லாம்... ஆனால், ஏனோ தெரியவில்லை நீங்கள் சொல்லிற புடவை, வேட்டி, தாலி மட்டருகள் என்ர மனதில வரவில்லை பாருங்கோ.

ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீங்கள். நன்றி ரொம்ப ரொம்ப நன்றி.

வேறையும் ஏதோ சொல்லுவீனம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதெல்லாம் மனிசிக்கு இருக்க வேணும்.. இப்படியெல்லாம் எதிர்பார்க்கிற டைப் இல்ல பாருங்கோ நாங்கள். உள்ளம் சுத்தமா இருக்க வேணும், உள்ளத்தில அன்பு இருக்க வேணும்,

இப்படி நீங்க குறிப்பிட்டு இருக்கிறீங்க. அதுவும் யாழ்கள ஆடவர்களுக்காக. ஆனால் அவர்கள் ஆண் பெண் நட்புக்குள் ஆணுக்காவது ஏதோ ஒரு மூலையில் சிறு அளவிலாவது காமம் இருக்கும் என்று வாதாடினார்களே. அப்போ உள்ளம் சுத்தமில்லாமல் இருக்கிறாங்களா?

எங்கட பொலிசிய சொல்லுறம் கேளுங்கோ. "என்னோட இருக்கிறது உனக்கு விருப்பமோ? சரி சேர்ந்து இரு. இல்லையோ? நடையைக்கட்டு. உனக்கு நட்டைஈடு தருவதில் எனக்கு பிரச்சனை இல்லை. இன்னொருவனை வேண்டுமானால் நீ கலியாணம் கட்டியும் கொள்ளலாம்!" இதுதான் மனுசிக்கு சொல்லக்கூடியது

ஆடவர்களே இப்படி ஒரு பிரச்சனை உங்கள் தங்கைக்கோ இல்லை உங்கல் மகளுக்கோ வந்தால் ............................

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தையோ பண்பாட்டையோ உருவாக்கியது யார்? எல்லாம் எங்கட மனம்தான் காரணம்! மனமே வாழ்வு என்று ஒரு பொன்மொழி சொல்லிது. அறிஞ்சிருப்பீங்கள் தானே? வெளிநாடுகளில பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு நிகரா பெண் குழந்தைகள் பிறப்பதை விரும்புகின்றார்கள். ஏன் நான் கூட எனக்கு அடுத்தடுத்து பெண்பிள்ளைகள் பிறந்தால் கவலைப்படமாட்டன். இது வெளிநாடு. பெண் பிள்ளைகள் வாழ்க்கையில முன்னேற ஆயிரம் வழியிருக்கு. அதுகள் வளர்ந்திதுகள் என்றால் பதினைந்து வயதிலேயே பார்ட் டைம் வேலை செய்துகொண்டு சொந்தக்காலில நிக்கிறதுக்கு இஞ்ச வசதி இருக்கு. சீதனம் சேர்க்கவேண்டிய கவலை எல்லாம் நமக்கு இல்லை பாருங்கோ. பிள்ளையை ஒழுங்கா படிப்பித்து, வளர்த்து விட்டாலே எங்களுக்கு போதும், மிச்ச பிரச்சனைகள அது தன்ர சொந்த மூளையை பாவிச்சு சமாளித்துகொள்ளும். பிள்ளைகள் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம். இதில ஆண், பெண் என்ற வேறுபாடு பார்க்க தேவையில்லை. பெண் குழந்தைகள் பற்றி கவலைப்பட்டு எப்படி நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தவிப்புடன் வாழவேண்டி இருக்கோ அதேமாதிரி ஆண்பிள்ளைகள் பற்றியும் தவிப்புடன் வாழவேண்டி இருக்கு. ஏனென்றால் இது வெளிநாடு. எப்ப பிள்ளை என்ன செய்யும், எப்ப பிள்ளைக்கு என்ன நடக்கும் என்று சொல்ல ஏலாது

ஏன் புலத்தில் வாழும் பெண்ணுக்கு ஒரு சட்டம் நம்ம நாட்டில் வாழும் பெண்ணுக்கு ஒரு சட்டமா? இருவரும் தமிழர் தானே. ஏன் உங்கள் புலத்தில் நடக்ககூடியது எல்லாம் நம்ம நாட்டிலும் நடக்கும். நடக்கின்றது. பார்ட் டைம் ஜொப் க்கும் போகலாம். படிக்கிறதுக்கும் நிறைய வழி இருக்கு. ஆனால் என்ன நம்ம சமூகம் தான் அதிலும் வயது போனோர்கள் தான் பெண்னை அடக்க துடிக்கின்றனர். பக்கத்து வீட்டுக்காரி முன்வீட்டுக்காரி இபப்டி நம்ம சமூகம் ஒரு பொறாமைப் பார்வையோ இல்லை கீழ்த்தரமான பார்வை பார்க்கின்றார்களே அது ஏன்? இது நம்ம நாட்டில் மட்டும்தானா? ;)

மீண்டும் ஒருமுறை உங்கள் கருத்துக்கும் பொலிசிக்கும் நன்றிகள்

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

நன்றி நிலா. இதை நானும் நேற்று வாசித்தேன். சில கருத்துக்களோட எனக்கு உடன் பாடில்லை.

இருந்தாலும் கலைஞன் நீங்க சொல்லுற மாதிரி எல்லா ஆண்களும் இல்லையே. :)

பெண்ணின் மறுமணம் பத்தி சொல்லி இருந்தீங்க. இந்த கட்டுரை 1999 ஆண்டு வந்து இருக்கு. ஆனால் சந்திரவதனா சொன்ன கருத்தில் இருந்து எங்க சமுதாயம் இன்னும் மாறலை என்றுதான் நான் நினைக்கிறேன்.

ம்ம் இன்னும் மாறல்லை தான். அதைத்தான் நானும் ஏன் என கேட்கின்றேன்? :lol: நம்ம சமுதாயம் என்பது யார்? முன்னோர்கள் எனில் இனிமேல் வளர்ந்துவரும் சமுதாயம் சிற்சில மாற்றங்களையாவது கொண்டு வரணும் என்பதே என் வேண்டுகோள். சில நண்பிகளின் வீட்டில் பார்த்திருக்கின்றேன். அவர்களின் பாட்டி தாத்தாமார் அவள் சிரிச்சால் கூட என்ன பொம்பிளைப்பிள்ளை அடக்கமாக சிரி பிள்ளை. உதென்ன மோனை உடுப்பு? தலையை இழுத்து பின்னிக் கட்டுப்பிள்ளை. இப்படி பல கருத்துக்களை சொல்லி அவளின் சுதந்திரத்தைக் கெடுக்க, அவளோ வெளில வந்து சக நண்பிகளிடம் சொல்லி வேதனைப்பட்டு .........................இப்படி அவளை ஒரு கெட்ட வழில போகிற நோக்கத்தை வகுக்க முன்வருபவர்கள் நம் சமுதாயமும் சமுதாயத்துக்கு பயந்த பெற்றோர்களுமே. :angry:

அக்கோய்! ஆ... திருப்பியும் கேள்வியா? :)

ஆண் பெண் நட்புக்குள் ஆணுக்காவது ஏதோ ஒரு மூலையில் சிறு அளவிலாவது காமம் இருக்கும் என்று யாழில் ஆடவர்கள் வாதாடினார்களா? ஐயோ, நான் அந்த பகுதியை வாசிக்கவில்லை. நட்பையும், காதலையும் பகுத்தாராய்ந்து பீ.எச்.டி செய்யும் அளவுக்கு எனக்கு மண்டையில் சரக்கு இல்லை. மன்னிக்கவும்.

பொலிசி என்றால் எல்லாருக்கும் பொதுவானது. இதில் எனது மகளுக்கு, தங்கச்சிக்கு என்று விசேட குவோட்டாக்களோ அல்லது சலுகைகளோ, தள்ளுபடிகளோ இல்லை.

"என்னோட இருக்கிறது உனக்கு விருப்பமோ? சரி சேர்ந்து இரு. இல்லையோ? நடையைக்கட்டு. உனக்கு நட்டைஈடு தருவதில் எனக்கு பிரச்சனை இல்லை. இன்னொருவனை வேண்டுமானால் நீ கலியாணம் கட்டியும் கொள்ளலாம்!" இதுதான் மனுசிக்கு சொல்லக்கூடியது...

இப்படி சொன்னதற்கு காரணம், மனுசிக்கு என்னுடன் வாழ்வது விருப்பமில்லையென்றால் நான் தொடர்ந்தும் அவளுடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை என்பதால்தான். இருமனம் இணைந்தது தான் திருமணம் என்று சொல்வார்கள். திருமணம் மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த குடும்ப வாழ்க்கையே இருமனம் இணைந்துதான் இருக்க வேண்டும். கணவன் மனதில் ஒன்றையும், மனைவி மனதில் வேறொன்றையும் வைத்திருக்கும் போது எப்படி ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடாத்த முடியும்? வேறு வேறு எண்ணங்களில் இருக்கும் கணவன், மனைவி ஒன்றாக இருக்கும் போது குடும்பத்தில் பிணக்குகள்தான் வரும். எனவே, இறுதியில் வீட்டுக்கு போலிஸ் வந்து பிரச்சனையை நாற்சந்திக்கு இழுக்கும்முன் நாமாக விலகிக்கொள்வது புத்திசாலித்தனமானது. இதன் மூலம் வழக்கறிஞருக்கு கொடுக்கும் பணத்தையாவது ஆகக்குறைந்தது காப்பாற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நீங்கள் இப்படி உங்கள் தங்கச்சிக்கு அல்லது மகளுக்கு ஒன்று நடந்தால் இப்படி சொல்வீர்களா என்று கேட்டீர்கள். இவ்வாறு நீங்கள் கேட்டதற்கான காரணம் உங்கள் மனதின் அடியில் கணவன் துணையின்றி ஒரு பெண் வாழமுடியாது அல்லது கணவன் பிரிந்துபோனால் அவளது எஞ்சிய எதிர்கால வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என்ற பயம் இருந்ததே காரணம் என நினைக்கின்றேன். இது மிகவும் தவறானது. நாம் பிறக்கும்போது சோடிகளாகவா பிறந்தோம்? இல்லையே! தனித்தனியாகத்தான் பிறந்தோம். அப்படியானால், பிறந்ததில் இருந்து நாம் கலியாணம் கட்டும்வரை சோடியின்றி தனியாக வாழும் வாழ்க்கை அர்த்தம் இல்லாத ஒன்றா? கலியாணம் கட்டினால் பிறகுதான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறதா? இல்லையே!

மன்னிக்கவும். புலத்தில் வாழும் பெண்ணுக்கும் தாயகத்தில் வாழும் பெண்ணுக்கும் சட்டம் அடிப்படையில் ஒரே மாதிரியானதே! ஆனால், புலத்தில் உள்ளவனின் அறிவு முதிர்ச்சி மற்றும் அனுபவங்கள், தாயகத்தில் இருப்பவர் களினுடையவற்றில் இருந்து பல்வேறு வகைகளில் வேறுபாடானது. நான் இங்கிருந்து சொல்லும் பொலிசியை தாயகத்தில் வாழும் ஒரு ஆடவன் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதேபோல தாயகத்தில் இருந்து ஒருவன் சொல்லும் லைப் பொலிசியை இங்கு வாழும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனெனில் அங்கும், இங்கும் எமது வாழ்க்கைக் கோலங்கள் முற்றிலும் வேறானது. வாழ்க்கையை புலத்திலும், தாயகத்திலும் எம்மால் ஒரே மாதிரியாக தரிசிக்க முடியாது. நீங்கள் கேட்ட மிகுதிக் கேள்விகளிற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு என்னுடையது அல்ல. அது தாயகத்தில் வாழும் ஆடவர்களுடையது. நன்றி! வணக்கம்! :lol:

  • தொடங்கியவர்

நீங்கள் இப்படி உங்கள் தங்கச்சிக்கு அல்லது மகளுக்கு ஒன்று நடந்தால் இப்படி சொல்வீர்களா என்று கேட்டீர்கள். இவ்வாறு நீங்கள் கேட்டதற்கான காரணம் உங்கள் மனதின் அடியில் கணவன் துணையின்றி ஒரு பெண் வாழமுடியாது அல்லது கணவன் பிரிந்துபோனால் அவளது எஞ்சிய எதிர்கால வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என்ற பயம் இருந்ததே காரணம் என நினைக்கின்றேன். இது மிகவும் தவறானது.

ஒருகாலத்திலும் இப்படியாக நான் நினைக்கவே மாட்டேன். தனிய வாழ என்னால் முடியும் என்பது தான் என்னுடைய வாதாட்டம். யாருக்கும் அடங்கி வாழப்போவதுமில்லை. அதற்கு நான் ஒன்றும் ககயாலாகாதவளுமில்லை. என் ககயே எனக்குதவி. என் சொந்தக்காலில் என்னால் நிற்க முடியும். கால் இல்லையெனில் கூட ஊன்றுகோல் என்னனத் தாங்கும். அதற்காக இன்னொருவன் தான் எனக்கு துணையாவான் அவனின் உழைப்பே என்னைக் காக்கும் என்று நினைச்சதுமில்லல. நினைக்கப்போவதுமில்லை. நான் யாருக்கும் பயப்பட்டதுமில்லை யாருடைய கருத்தையும் கேட்டதுமில்லை. எனக்கு எது சரியாகுதோ அதை நான் செய்யணும். இதுதான் என் பொலிசி.

ஆனால் நான் கேட்க வந்தது என்னவெனில் தற்போதைய நம்ம பாழாய்ப்போன சமுதாயம் என்ன சொல்லுது என்றால் பெண் என்பவள் கணவனுக்கு அடங்கிப் போகணும். கணவன் எப்படியானவன் என்றாலும் நீதான் பிள்லை அனுசரித்துப்போகணும் அவனோ சீதனக்கொடுமை செய்தால் கூட அவன் கேட்பதைக் கொடுத்து என்றாலும் அவனோடு வாழப்பார் பிள்ளை. நீ இபப்டி புருசனை விட்டு கண்னைக்கசக்கிட்டு வந்து இருந்தால் மற்றவங்க என்ன நினைப்பாங்க ........................ இபப்டி பல கேள்விகள் கருத்துக்களை வைச்சிருக்கும் நம் சமூகம் பற்றி கேட்க வந்தேன். மாறி நீங்கள் சொன்னதற்காக உங்கள் சகோதரிக்கோ இல்லை பிள்ளைக்கோ என்று கேட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கற்பை" ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்" என்றுதான் சொன்னார் பாரதி. நீதிகள் இருவருக்கும் பொது தான் இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் ஆண் தவறினால் காலம் அவனைக் காட்டிக்கொடுப்பதில்லை பெண் தவறினால் இயற்கை காட்டிக்கொடுத்துவிடும்.

இயற்கையின் ஐம்பூதங்களையும் பெண்ணுக்குத்தான் ஒப்பிடுகின்றார்கள் ஏன் இயற்கை கூட அன்னை என்றுதான் விளிக்கப்படுகின்றது!

பெண்ணுக்கு மட்டுமே 'தாய்மை' என்ற உயரிய அரிய ஒப்பற்ற பதவி அளிக்கப்பட்டிருக்கின்றது.

பெண்மை நிலை தவறினால் அந்த வீடே குட்டிச்சுவராகிவிடும். ! அதனால்தான் பெண்மைக்கென்று சில விதிகள், கடமைகள், கடப்பாடுகள், கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற

கவிதை அந்தாதியில துணைப்படைக்கு போறதற்கும் துணை வேணும் என்று சொல்லுறாங்க அப்புறமா 15 நிமிடம் கழித்து இங்க வந்து எனக்கு துணையே தேவையில்லை நான் யாரையும் நம்பி வாழுற ஆள் இல்லை என்னால தனியாக எல்லாமே செய்யமுடியும் என்று சொல்லுறாங்க என்னப்பா நிமிடத்துக்கு நிமிடம் ஒவ்வொரு விதமான மனநிலையா? மாற்றங்களா? கவிதை கற்பனை, கவிதைக்கு பொய்யழகு என்று சொல்லி விட்டு தப்பிக்க முடியாது மனதில உள்ளது தான் கவிதையாக வெளிவரும். :)

Edited by யாழ்வினோ

கவிதை அந்தாதியில துணைப்படைக்கு போறதற்கும் துணை வேணும் என்று சொல்லுறாங்க அப்புறமா 15 நிமிடம் கழித்து இங்க வந்து எனக்கு துணையே தேவையில்லை நான் யாரையும் நம்பி வாழுற ஆள் இல்லை என்னால தனியாக எல்லாமே செய்யமுடியும் என்று சொல்லுறாங்க என்னப்பா நிமிடத்துக்கு நிமிடம் ஒவ்வொரு விதமான மனநிலையா? மாற்றங்களா? கவிதை கற்பனை, கவிதைக்கு பொய்யழகு என்று சொல்லி விட்டு விட முடியாது மனதில உள்ளது தான் கவிதையாக வெளிவரும். :)

இப்டி நீங்க எல்லா இடத்திலயும் போய் பார்க்ககூடாது.. சரியில்லத்தானே.. :lol:

  • தொடங்கியவர்

கவிதை அந்தாதியில துணைப்படைக்கு போறதற்கும் துணை வேணும் என்று சொல்லுறாங்க அப்புறமா 15 நிமிடம் கழித்து இங்க வந்து எனக்கு துணையே தேவையில்லை நான் யாரையும் நம்பி வாழுற ஆள் இல்லை என்னால தனியாக எல்லாமே செய்யமுடியும் என்று சொல்லுறாங்க என்னப்பா நிமிடத்துக்கு நிமிடம் ஒவ்வொரு விதமான மனநிலையா? மாற்றங்களா? கவிதை கற்பனை, கவிதைக்கு பொய்யழகு என்று சொல்லி விட்டு தப்பிக்க முடியாது மனதில உள்ளது தான் கவிதையாக வெளிவரும். :lol:

அது சும்மா கவிதை. மனசில் உள்லதுதான் கவிதையாக வரும். இது சும்மா எழுதினது அதுதான் 5 வரில முடிஞ்சிட்டு. :)

ஆஹா .... இண்டைக்கு யாழில் நிறைய விவாதங்கள் நடக்குது போல.......... தொடருங்கோ பிறகு நானும் வாரன் :)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

இதே காரணுத்துக்காகத்தான் மணமக்களின் உடைகளிலும் மஞ்சள் பூசப்பட்டது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு அனுப்பப் படும் திருமண அழைப்பிதழுடன் நோய்க் கிருமிகள் சென்று விடாதிருக்கவே, அழைப்பிதழ் மஞ்சள் பூசி அனுப்பப் பட்டது. இதுவே நாளடைவில் மஞசள் பத்திரிகை என்ற பெயரில் வரத் தொடங்கியது. மஞ்சள் காயை, மஞ்சள் தண்ணீரில் தோய்த்தெடுத்த நூலில் கட்டித் தாலியாக அணிந்த காரணமே வேறு. ஆனால் அதுவே நாளடைவில் தங்கத்துக்கு மாறிவிட்டது.

சந்திரவதனா இப்படிச் சொல்கின்றார். ஆனால் பெண்விடுதலைப் போராளிகள் தாலி அடிமைச் சின்னம் என்றும், பெண்களை அடிமையாக்குவதற்குத் தான் தாலி கட்டப்பட்டது என்றும் வாதிடுகின்றார்களே!

அதுவும் தாலியைத் தூக்கி எறிந்தால் எல்லா சமூகவிடுதலையும் கிடைத்திடுமாம் என்கின்றார்கள். ஆனால் சந்திரவதனாவின் கருத்தைப் படிக்க் குழப்பமாகக் கிடக்கு.

பெண்களுக்கு மட்டும் தான் கலாச்சார அடையாளம் என்றில்லை. ஆண்களை விடப் பெண்கள் தான் அதில் சிரத்தை எடுத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்க என்பதில் சமூகம் இன்றைய காலத்தில் தடை விதிக்கவில்லை. புலத்தில் பலர் அவ்வாறு நடக்கவும் தடைப்பட்டுள்ளார்கள்.

கலாச்சாரமும், பண்பாடும் பெண்ணுக்கு மட்டுமில்லை!ஆணுக்கும் உண்டு தான்.

அது வெளிநாடோ, நம்ம ஊரோ எங்கும் ஆண்களையும் சமூகம் தவறான கண்ணோடு நோக்கும் சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கு.

" அவன் ஒரு..விடுகாலி, பொம்பிளை பொறுக்கி"

இதுகளெல்லாம் ஆண்களை சொல்லும் வசனங்கள். ஏன் நாங்களே பேசி இருப்போம். சும்மா ஒருவர் நம்மை பார்த்தாலே நம்ம முகம் எவ்ளோ கோணலா போகும்?

அது அவர் நம்மை பார்த்தாரா இல்லை பக்கத்தில் இருக்கும் குழந்தையை பார்த்தாரா? யாருக்கும் தெரியாது. அதுக்காக ஆண்கள் தப்பாக பார்ப்பதே இல்லை, தப்புக்கள் பண்ணுவதே இல்லை என்று வாதாட நான் வரவில்லை :P ஆனால் ஆண்களுக்கும் பாதிப்பு நிறையவே உண்டு!

தவறான கண் நோக்கால் நின்று போன ஆண்களின் திருமணமூம் உண்டு..இல்லை வேணாம் எண்டு சொல்லப்பட்ட ஆணும் உண்டு!

ஆனால் பெண்களுக்கு கூட பாதிப்பு வருவது என்னவோ தமிழ்தங்கை அக்கா :D சொன்னது போல இயற்கையே! நம்ம கலாச்சாரத்தில் பெண்களை கூட மதிக்கிறார்கள்..சில நேரம் மிதிக்கிறதும் உண்டு. பெண்களிடம் கூட எதிர்பார்க்கிறார்கள்..பெண்கள

?? இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதனால் தான் போல.

எங்கப்பா அடிக்கடி சொல்லுவார் குடும்பத்தில் அப்பா சரியில்லை என்றால் கஷ்டம் தான் ஆனால் குடும்பம் சீர் குலைந்து போகாது..ஆனால் அம்மா சரியில்லை என்றால்..குடும்பம் சீர் குலைந்து போகும் என்று.

இதுதான் விசயம்!

அப்புறம் இந்த வயசு போன ஆண்டிக்கள், அம்மம்மாக்கள்,பாட்டிக்கள், அவர்கள் கதைப்பது அது அவர்களின் மனோ நிலை!!! நாங்கள் பெண்களை இப்படி அடக்க கூடாது என்று இப்போ சொல்லுறோம். அவர்களின் காலத்தில் அப்படி அவர்களுக்கு அடக்குமுறையை எதிர்க்க தெரியவில்லை. சொல்லி காட்ட முடியவில்லை. ஏன் அவர்கள் அடக்கப்படுகிறார்கள் என்றே அவர்களுக்கு தெரியவில்லை. உண்மையில் அவர்கள் தான் பாவம். அப்படி வாழ்ந்தவர்களின் மனோநிலை அப்படித்தான் இருக்கும்.அது அவர்கள் தப்பில்லை.

பெண்கள் கலாச்சாரத்தால் ஒடுக்கப்படாமல் இருக்க வேண்டுமே தவிர. கலாச்சாரத்தை விட்டு ஓட கூடாது!

நம்ம அம்மா,அம்மம்மா காலத்தில் அவர்களுக்கு ஆண் நண்பர்கள் இருந்தார்களா? இப்போதைய பெண்களுக்கு இருக்கார்கள் தானே...அதுவும் தொட்டுப் பேசும் அளவுக்கு நட்பு!

அக் காலத்தில் அப்படி வாழ்ந்து என்ன அவர்கள் வாழ்க்கை சிறக்கவில்லையா? இப்போ நம்மை எல்லாம் வளர்க்கவில்லையா? இங்க இப்பிடி இருந்து எழுத காரணமே அவங்க தானே? அவர்கள் என்ன கொஞ்சம் கலாச்சாரத்தில் ஊறிட்டாங்க..வேறென்ன தப்பு? அப்படி வாழ்ந்து அவர்கள் கெட்டு போனார்கள் என்றில்லையே.இன்னும் சொல்ல போனால் கஷ்டப்பட்டும் (அதுவும் ்கூட பெண்கள் தான் பெண்களள அடக்குவதும்) குடும்பம், பிள்ளைகள் வாழ்க்கை சிறக்கணும் என்று பொறுமையா இருந்தவர்களும் உண்டு. அவர்கள் கணவன் வேணாம்..தனியா வாழ்வேன் என்று இருக்க வெளிக்கிட்டிருந்தால் நாம இப்படி கதைத்துக்கொண்டு இருக்க முடியாது. அதில் அவர்களின் பொறுமையை தான் பார்க்க வேண்டும். அதற்கு நிகர் என்ன இருக்கு?

இப்போ நட்பென்று , காதலென்று ஆண்களோடு, பெண்களும் ஒன்றாக சென்று எத்தனை பிரச்சனைகள். எத்தனை கவலைகள். எத்தனை பெண்களின் வாழ்க்கை கஷ்டமா போய்க்கிட்டிருக்கு சொல்லுங்கள்? உண்மையை சொல்ல போனால் 14 வயசு தமிழ்பெண் கருத்தடை மாத்திரை வாங்க வீட்டுக்கு தெரியாமல் பார்மசி வரும் காலம் இது!!!!!! :):lol:

இதுதான் பெண்களின் சுதந்திரம் என்றால்..அந்த சுதந்திரம் என்னை பொறுத்த வரையில் தேவை இல்லை.

நாங்கள் பெண் என்றால் அதுவும் தமிழ் பெண் என்றால்..அதற்குரிய அர்த்தத்தோடு வாழ வேண்டும். அடக்கப்பட வும்கூடாது. அடக்கவும் கூடாது.

கலாச்சாரம் எதுக்கு இருக்கு.. வாழ்க்கை கட்டுக்கோப்பா அழகா இருக்க தானே? அது சிலவேளைகளில் தவறாக அடக்கு முறைகளுக்கு பயன் படுத்தப்படுகின்றதே ஒழிய மற்றும்படி அதில் ஒரு தப்பும் இல்லை.

கணவன் பிடிக்கவில்லை..அவர் செய்வது பிழை! நான் தனியா போவன் எண்டு போனால்..

நம்ம கலாச்சாரத்துக்கும் இங்க ஒல்லாந்து கலாச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்??

நம் கலாச்சாரத்தை (ஒடுக்குமுறையை இல்லை) ஒரு கணவனும், ஒரு மனைவியும் ஒன்றாக புரிந்துணர்வோடு வாழ்வதை பார்த்து அவர்கள் வியக்கிறாங்க..பெருமை படுறாங்க..அப்படி இருக்க நாம எதுக்கு அவை போல ஆகணும்?

நம்ம வாழ்க்கையை அழகா வைத்திருக்க தான் இந்த நட்பு,காதல்,குடும்பம்,கலாச்ச?ரம் எல்லாமே இருக்கு.

நட்பு அது எதுக்கு இருக்கு..புரிந்துணர்வா இருக்க தானே?

காதல் ஏன் இருக்கு..அன்போட வாழ தானே?

அது போல

கலச்சாரம் ஏன் இருக்கு.. நம்ம வாழ்க்கை ஒழுங்கா இருக்க தானே

நட்பிலயும்..ஏமாற்று வேலைகள் நடக்குது..

காதலிலும் நிறையவே நடக்குது..

கலாச்சாரத்தில்..ஒடுக்குமுறை..

அப்படி இருக்கவே நட்பும், காதலும் புனிதம் என்றால்..

கலாச்சாரம் மட்டும் என்ன இல்லையா?

...........................

நாங்கள் இதற்காக வாதாடுவதை விட ..ஒடுக்குகிறார்கள்.. பேசுகிறார்கள் என்று 5 பக்கம் கதைப்பதை விட..

பிற்காலத்தில் நாங்கள்..நம் சந்ததியினரை அடக்கு முறை என்று அவர்களை கொல்லாமலும்..அடக்காமலும் இருக்க தெரிஞ்சு கொள்ளணும்! அதே நேரம் நம்ம கலாச்சாரத்தையும் சொல்லி கொடுக்கணும்.

இப்போ அம்மா,அப்பா நம்ம நட்பை தப்பா பார்த்துட்டார்கள் என்று கவலைப்படுறம். பிற்காலத்தில் நாமும் ஒரு அப்பா,அம்மாவாக ஆனதும்..நாங்கள் ஆசையாக பெற்று வளர்த்த பிள்ளை ஒரு ஆணோட..கை கோர்த்துக்கிட்டு நடந்து வந்தாலோ, இல்லை ஆணோடு டிஸ்கோ போனாலோ.. நம்ம நெஞ்சிலும் ஒரு மின்னல் அடிக்கத்தான் செய்யும். அது இயற்கை. அதில் கொஞ்சம் கலாச்சாரமும், கொஞ்சம் பிள்ளையின் வாழ்க்கையை பற்றிய கவலையுமே இருக்குமே தவிர ஒடுக்குமுறை இருக்கவே இருக்காது.....................

ஐயோ களைப்பா இருக்கு..போய் ஒரு டீ குடிக்க போறன்.. :P

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் சம்பாதிப்பார்கள்.. பெண்கள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பரிவுடன் பாசத்துடனும் கவனிப்பார்கள்.

ஆண்கள் தங்கள் ஊர்களையும், நாட்டையும் பாதுகாப்பார்கள்.. பெண்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இறுக்கமாகப் பேணிப் பாதுகாப்பார்கள்...

இப்படித்தானே ஆதிகாலத்தில் இருந்து நடைபெறுகின்றது.. எனவே தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காக்க தமிழ்ப் பெண்கள், தமிழ் ஆண்கள் வகுத்த நெறிகளைப் பின்பற்றி "குடும்ப விளக்கு"ப் போன்று வாழ்வதே நல்லது! :)

ஒருகாலத்திலும் இப்படியாக நான் நினைக்கவே மாட்டேன். தனிய வாழ என்னால் முடியும் என்பது தான் என்னுடைய வாதாட்டம். யாருக்கும் அடங்கி வாழப்போவதுமில்லை. அதற்கு நான் ஒன்றும் ககயாலாகாதவளுமில்லை. என் ககயே எனக்குதவி. என் சொந்தக்காலில் என்னால் நிற்க முடியும். கால் இல்லையெனில் கூட ஊன்றுகோல் என்னனத் தாங்கும். அதற்காக இன்னொருவன் தான் எனக்கு துணையாவான் அவனின் உழைப்பே என்னைக் காக்கும் என்று நினைச்சதுமில்லல. நினைக்கப்போவதுமில்லை. நான் யாருக்கும் பயப்பட்டதுமில்லை யாருடைய கருத்தையும் கேட்டதுமில்லை. எனக்கு எது சரியாகுதோ அதை நான் செய்யணும். இதுதான் என் பொலிசி.

நிலா நீங்க நல்ல தைரியமான பெண்தான் போல! :P

ஹும் இதெல்லாம் வாயால் சொல்லலாம் ஆனால் நம்ம வாழ்க்கைக்கு சரிவராது.கல்யாணம் கட்டிட்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் " நீ சொல்லுறத நான் கேக்கனுமா" இப்படி நினைச்சு தங்களின் கோவத்தால் ,பொறுமையில்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியா கஸ்டப்படுறது.! எவ்வளவு நாள் தனிய கஸ்டமில்லாமல் வாழலாம் ? கணவரைப் பிரிஞ்சு பிள்ளைகளோடு தனிய வாழும் போது சந்தோசம் வருமா ? அதையே "சரி கணவர்தானே சொன்னார்" அதை கேட்பதில் தப்பில்லை எண்டு எடுத்து புரிந்து வாழ்ந்தோமானால் குடும்பம் ஒற்றுமையாக இருக்குமல்லவா ? அதேமாதிரி ஆண்களும் புரிந்து நடந்துக்கனும்.இதைத்தான் நம்ம கலாச்சாரமும் நமக்கு சொல்லுது.போற இடத்தில் புரிஞ்சு பொறுமையா நடந்துக்கச்சொல்லி என்று நினைக்கிறன்!

புரிந்துணர்வு, பொறுமை இல்லாட்டி குடும்பத்தில மட்டுமில்ல நண்பர்களோட, ஆசிரியர்களோட, வேலைத்தளத்தில எதிலுமே நிரந்தரமாகயிருக்கமுடியாது. அதேநேரத்தில, குட்டக் குட்டக் குனிஞ்சு போறதும், தன்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் தனக்குள்ள புதைச்சுவைப்பதும் தவறானது.:)

இந்த பொறுமை , புரிந்துணர்வு இல்லாமல் தான் இங்க வெள்ளையர்கள் ஒரு ஆளுடன் ஒன்றாக வாழாமல் பிரிஞ்சு 3-4 கல்யாணம் கட்டி இருக்கினம் ! ஆனால் அவங்க இரண்டு மூண்டு கல்யாணம் கட்டுவினம் (எல்லாரும் இல்லை) வயது போன நேரத்தில் பார்க்கனும் அவையளை , ஒருவருக்கொருவர் உதவியா கைகளை கோர்த்தபடி நடந்து வருவினம் . பார்க்கவே அழகாயிருக்கும். அதவிட அவையள் வீட்டிலும் அப்படித்தான். தங்கட வேலைகளை செய்து கொண்டு கோபப்படாமல் சிரிச்சுக் கொண்டு இருப்பினம். (இப்படி நம்மட ஆக்கள் கூட இருக்காயினம் வயது போன நேரத்தில் )அவர்களில் வாழ்வு வேறு நமது வாழ்வு வேற..!

யாரும் யாரையும் அடக்க வேணாம் அடங்கிப் போகவும் வேணாம். நமது வேலைகளை நாம் ஒழுங்கா செய்தால் ஏன் மற்றவர் நம்மை அடக்க போகினம். :lol:

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையது நீங்கள் சொல்லிற மாதிரி கணவன் இறந்தபின் பெண்களை ஒதுக்கிற காலம் எல்லாம் இப்ப மலையேறிப்போச்சு. நான் அறிஞ்சு எத்தனையோ அக்காமார் கணவன் இறந்ததும் மறுமணம் செய்துள்ளார்கள். வாழ்க்கையில சந்தோசமா இருக்கிறார்கள்.

கலைஞன் எவ்வளவு தத்துவமாக அதாவது நவீனமயமான நடைமுறைக்கு உகந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்

இந்த கோவலன்,கண்ணகி என்ற சரித்திரக்கதைகள் தான் எங்கள் சமுதாயம் பின் நோக்கிச் செல்வதிற்கும்,, வாழ்விழந்த பெண்கள் மறுமணம் செய்வதிற்கும்,தலைநிமிர்ந்து நடப்பதிற்கும் இடையூறாக இருக்கின்றன.

வெண்ணிலா தனது தனிப்பட்ட கருத்தைக் கூறியிருந்தார்.

எல்லாப்பெண்களினாலும் அப்படியிருக்கக்கூடிய மனப்பக்குவம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இந்தக் கலாச்சாரம், பண்பாடுகளை நாம் குறைகூறுவதைவிட பெண்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும்.

நீங்களே உங்கள் வாழ்க்கையைப் பற்றி தீர்மானிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இந்த சமுதாயம் எண்டிறதே ஒரு வகையில பிரமைதான் பாருங்கோ. அதாவது அப்பிடி, இப்படி பொருத்தமில்லாத பல கேள்விகளை எங்களிடம் கேட்டு அல்லது அறிவுரைகளை தந்து எம்மை ஏதாவது வகையில் தொடர்ந்து குழப்பிக்கொண்டே இருக்கப்பார்க்கும். கலியாணம் கட்டாமல் இருந்தால் "எப்ப கலியாணம்? எப்ப கலியாணம் கட்டப் போறாய்?" என்று கேட்டு தொந்தரவு தந்து கொண்டிருக்கும். கலியாணம் கட்டிவிட்டால் "இன்னும் பிள்ளை இல்லையே? எப்ப பிள்ளையை பெறப்போறாய்?" என்று கேட்டுக்கொண்டு இருக்கும். பிள்ளை வளர்ந்ததும் "இன்னும் பிள்ளைக்கு கலியாணம் கட்டி வைக்கேலையே? எப்ப பிள்ளைக்கு கலியாணம் செய்து வைக்கப்போறாய்?" இப்படி கேட்டுக்கொண்டு இருக்கும். அதாவது, தொடர்ந்து ஏதாவது சொல்லி எங்களுக்கு பிளட்டில பிரசரை எப்பவும் ஏத்திக்கொண்டே இருக்கும். ஏன் கலியாணம் கட்டாமல் வாழுறது வாழ்க்கை இல்லையே? இல்லாட்டி பிள்ளைகள் இல்லாமல் வாழுறது வாழ்க்கை இல்லையே? இந்த வகையிலதான் நீங்களும் சொன்ன, சமுதாயம் மனைவிக்கு (பெண்ணுக்கு கூறுகின்ற) சொல்லிற அறிவுரைகளும் அடங்கும். அதாவது "வாய மூடிக்கொண்டு புருசன் சொல்லிறத கேட்டு, அவனுக்கு கட்டுப்பட்டு நட! புருசன் என்ன செய்தாலும் நீ தான் அனுசரிச்சுப் போகவேணும்... "இப்படி நிறைய இருக்கு!

நான் திருப்பியும் சொல்லுவன்... இதை விதண்டாவாதத்திற்காக கூறவில்லை. எனக்கு மிக நெருகமானவர்களின் வாழ்வில் நடைபெற்ற வாழ்க்கை அனுபவங்களை வைத்து சொல்லுறன். அதாவது, நீங்கள் கலியாணம் கட்டினாப்பிறகு, எப்பவும் புருசனுக்கு முன்னுக்கும், பின்னுக்கும் நின்று அவனிலேயே முழு விசயத்துக்கும் தங்கி நின்றால் இரண்டு விதமான பிரச்சனை வரப்பார்க்கும்.

1. ஒன்று புருசன் நல்லவனாக இருந்தால், அவன் தற்செயலாக செத்துப்போனான் என்றால், உங்களை இடைவழியில் விட்டுப் பிரிந்துவிட்டான் என்றால் தொடர்ந்து உங்களால் வெற்றிகரமாக வாழ்வது மிகவும் கஸ்டமாக இருக்கும். பிறகு உங்கட கண்ணைக் கட்டி ஏதோ திக்குத் தெரியாத காட்டில கொண்டுவந்து விட்ட மாதிரி இருக்கும்.

2. இரண்டாவது புருசன் கூடாதவனாக இருப்பான் என்றால், நீங்கள் எந்த விசயத்திலும் உங்கள் நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்கு புருசனில் தங்கியிருக்கும் பட்சத்தில், அவன் உங்களுக்கு செய்கின்ற அக்கிரமங்களை, தரும் துன்பங்களை உங்களால் விலத்திக் கொள்ள முடியாமல் இருக்கும். நிறைய ஆடவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் மனிசியை முன்னேற விடமாட்டார்கள். "கார் ஓடிப் பழகப்போறன்!" என்று மனுசி கேட்டால், நான் இருக்கிறன் தானே, "உனக்கு ஏன் உந்த கார் ஓட்டம்? ரோட்டில போய் அடிபடப் போறியே?" இப்படி கேட்பார்கள். நான் ஏதாவது படிக்கப் போறன் என்று கேட்டால் "இவ்வளவு காலமும் நீ படிச்சு கிழிச்சது காணும், பேசாம வீட்டு அலுவல்களக் கவனி!" இப்படி சொல்வார்கள். "நானு வேலைக்கு போகப்போறன்!" என்று மனைவி சொன்னால், "நான் ஒராள் வீட்டில உழைச்சா காணும்! நீ பேசாமல் வீட்டில இருந்து பிள்ளையை ஒழுங்கா வளக்கிற வழியப் பார்!" இப்படி சொல்வார்கள்.

இஞ்ச பிரச்சனை என்னவென்றால், புருசன் கீழ்த்தரமான வேலைகளில ஈடுபடும் போது, மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் போது, மனைவியை போட்டு வாட்டி வதைக்கும் போது, மனைவியின் வாழ்க்கையை சீரழிக்கும் போது... அந்த நிலமையிலும் கூட மனைவியால் புருசனை விட்டுப் பிரிவது.. தன்பாட்டில வாழ்வது முடியாத காரியமாய் போய்விடும். ஏன் என்றால் அவளுக்கு புருசனை விட்டால் வெளி உலகில் ஒன்றுமே தெரியாமல் இருக்கும். பக்கத்தில இருக்கிற கடைக்கு போய் ஒரு சாமான் வாங்கி வருவதற்கே அவளுக்கு முடியாமல் இருக்கும். ஏனென்றால், பாசை தெரிஞ்சு இருக்காது, இல்லாவிட்டால் எப்படி கடைக்கு போவது என்று தெரிந்து இருக்காது. பல ஆண்கள் தமது மனைவிகளை கட்டுப்படுத்தி வைப்பதற்காக, அவளை திருமணம் செய்ததும், வக்கிர மனதுடன், மனைவி தன்கால்களில் சொந்தமாக நிற்க முடியாதவாறான நிலமையை திட்டமிட்டு உருவாக்குகின்றார்கள். இதனாலேயே, புருசன் இனியில்லையென்ற கூடாதவனாக இருந்தாலும், எவ்வளவு சித்திரவதைகள் செய்தாலும், மனைவி அவனை விட்டு பிரியமுடியாமல் "புருசனே கண்கண்ட தெய்வம்!" என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு மிகவும் நரகமான ஒரு வாழ்க்கையை வேறு வழியின்றி வாழ வேண்டியுள்ளது.

எனவே, பெண்களாகிய நீங்கள் செய்யக்கூடியவை என்னவென்றால்...

1. கலியாணம் கட்ட முன்: நான் கலியாணம் கட்டினதும், எனது புருசன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் தானே!, ஆகவே நான் இனி படிக்க தேவையில்லை! வேலை செய்ய தேவையில்லை! கார் ஓடத்தெரிந்திருக்க தேவையில்லை! ஆங்கிலத்தில் கதைக்க தெரிந்திருக்க தேவையில்லை! எனது காலில சுயமா நிற்கத் தேவையில்லை! இவ்வாறு நினைக்காமல்.. தொடர்ச்சியாக உங்கள் அறிவையும், ஆற்றல்களையும் பெருக்கிக்கொண்டு, எந்த நேரத்திலும் வாழ்க்கையில் எவ்விதமான நிலமையையும் தனியாக நின்று சமாளிக்கும் வகையில் உங்களை பலம் மிக்க ஒருவராக வளர்த்தெடுக்க வேண்டும்.

2. கலியாணம் கட்டிய பின்: கற்றல் நடவடிக்கைகளிற்கு முழுக்கு போடக்கூடாது. இப்போது Distance Learning - தொலை கல்வி வசதிகள் நிறையவே இருக்கின்றன. எனவே, வெளியில் போய் கற்றல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது நடைமுறையில் சாத்தியமாக இருக்காவிட்டால், வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ள வசதிகள் இருக்கின்றது. இதேபோல், ஒரு சிறிய பார்ட் டைம் ஜொப் - பகுதி நேர வேலையாவது - அதாவது கிழமையில் ஆகக்குறைந்தது சுமார் ஆறு மணித்தியாலங்கள் எங்காவது போய் வேலை செய்ய முயற்சிக்க வேணும். வேலை செய்வது என்பது வெறும் காசுக்காக அல்ல. நீங்கள் வேலை செய்யும் போது உங்களுக்கு பல்வேறு விதமா அனுபவங்கள் கிடைக்கின்றன. உங்கள் அறிவு வளர்கின்றது. ஆற்றல் பெருகுகின்றது. புருசன் லட்சம், லட்சமாக உழைக்கிறார் தானே, ஆகவே நான் உழைக்க தேவையில்லை என்று நினைப்பது தவறானது.

கலியாணம் கட்டியதும் மனைவியை அடக்குவதற்கு புருசன் பாவிக்கும் மிகப்பெரிய வலிமையான ஆயுதம் - "பிள்ளைகள்!".. எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை காரணம் காட்ட வேண்டியது. பிள்ளைகளின் வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்கு நீ இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவது.. பிள்ளையை ஒழுங்காக வளர்ப்பதும், வீட்டில் சமைப்பது, வீட்டை துப்பரவாக வைத்திருப்பன மட்டுமே நீ செய்ய வேண்டிய வேலை என்று கூறுவது... அதாவது, மொத்தத்தில் பிள்ளைகள் மூலம் மனைவியை அடக்கி ஆள்வது! ஏன் பிள்ளையை வளர்ப்பதில் கணவனுக்கு பங்கு இல்லையோ? வீட்டை துப்பரவாக வைத்து இருப்பதில் கணவனுக்கு பங்கு இல்லையோ? வேலை செய்யாமல் வீட்டில் நிற்கும் காலங்களில் கணவன் பிள்ளைகளையும், வீட்டையும் கவனித்து கொண்டால், மனைவி தொடர்ந்தும் வாழ்க்கையில் தனது அறிவை, ஆற்றல்களை, வெளியுலக அனுபவங்களை பெருக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

நான் இந்த விடயங்களை உங்களில் சும்மா பரிசோதனை செய்வதற்காக இங்கு எழுதவில்லை. பலரது வாழ்வில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள், பிரச்சனைகள் என்பனவற்றின் அடிப்படையில், சில சிக்கல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்ற வகையில் கூறுகின்றேன்.

சரி, இனி சகியின்ர பிரச்சனைக்கு வருவம். :P

ஆ.... என்னது? பொம்பிளைகளை நாங்கள் தலை நிமிர்ந்து பார்க்ககூடாதா? உங்களை உற்றுப்பார்த்தால் நம்மள பார்த்து "விடுகாலி! பொம்பிளை பொறுக்கி!" என்றெல்லாம் சொல்லுவீங்களோ? அப்ப இப்பிடி செய்யுங்கோ. உந்த முஸ்லீம் பெண்டுகள் போடுறமாதிரி தலையில இருந்து கால் வரைக்கும் உங்கட உடம்பை முழுசா மறைக்கிற, கறுப்புத்துணியில தைத்த அங்கியை போட்டுகொண்டு திரியுங்கோ. அப்படி செய்தால் உங்களை எங்களால் பார்க்க முடியாது. இல்லாவிட்டால், நாங்கள் உங்களை உற்றுப் பார்ப்பது உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், நாங்கள் உங்களை பார்க்கும் சமயத்தில் நீங்கள் எங்களுக்கு விரலை தூக்கி காட்டலாம்! (கோவிக்ககூடாது..)

நாங்கள் கவனிக்காத நேரங்களில் எத்தனை பெண்கள் எம்மை களவாக பார்க்கிறார்கள்! (ஏன் பார்க்கிறீனம், எங்கட அழகை இரசிக்கிறீனமோ என்ற விசயம் தெரியாது...) நாங்கள் எங்களை நைசாக ஒளிஞ்சு நின்று பார்க்கிற பெண்களை "ஆம்பிளை பொறுக்கி!" என்று சொல்லுறமா? இல்லையே! அப்படியென்றால், அடுத்த தடவை உங்களை பார்க்கும்போது நீங்கள் அறியாதவகையில் உங்களை நாங்கள் களவாகப் பார்த்தால் எங்களை ராமனாக மதிப்பீங்களோ? பொம்பிளைகளை உற்றுப் பார்ப்பவன் பொறுக்கி என்ற கருத்தில் நமக்கு எதுவித உடன்பாடும் இல்லை.

"கணவன் பிடிக்கவில்லை..அவர் செய்வது பிழை! நான் தனியா போவன் எண்டு போனால்.. நம்ம கலாச்சாரத்துக்கும் இங்க ஒல்லாந்து கலாச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்கிறீங்கள். ஏன் நிங்கள் எதையும் வித்தியாசமாகத் தான் செய்வீங்களோ? இல்லாட்டி மற்றவர்கள் மாதிரி இல்லாமல் வித்தியாசமான ஆளாக வாழ்வதை விரும்புறீங்களோ? இல்லாட்டி தமிழர் என்பவர்கள் எப்பவும் மற்றைய இனத்தவர்களில் இருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டுமோ? அதெப்படி பாருங்கோ நீங்கள் சொல்லுறமாதிரி கேவலமாக வாழ்ந்த ஒல்லாந்தரால் இந்த உலகத்தையே ஒரு காலத்தில ஆட்டிப்படைக்க முடிந்தது? ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்று பண்பாடு, கலாச்சாரத்துடன் கட்டுப்பாடாக வாழ்ந்த இந்திய நாடு அடிமையாக இருந்தது? கலியாணம் கட்டியதில் இருந்து பிரியாது இறக்கும்வரை அன்பாக ஒன்றாக வாழ்ந்த, ஆயிரமாயிரம் ஒல்லாந்தர்கள் இருக்கவில்லையா? தற்போது இல்லையா? தமிழ் பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு சும்மா நாங்கள் இப்படி வெள்ளைகாரனை மட்டம் தட்டுவதன் மூலம் எம்மை சிறுமைப்படுத்திக் கொள்கின்றோமேயொழிய, வேறு பிரயோசனமாக இதில் நாம் ஒன்றும் செய்யவில்லை. எதெற்கெடுத்தாலும், வெள்ளைக்காரனின் வாழ்க்கையை பார்த்து நக்கல் அடிப்பது கையாளாகாத எம்மவர்களிற்கு கைவந்த கலை. எந்த ஒரு இனத்தின் பண்பாட்டையோ அல்லது கலாச்சாரத்தையோ மற்றைய ஒரு இனத்தினது பண்பாடு, கலாச்சாரத்தை விட உசத்தியானது என்று சொல்ல முடியாது பாருங்கோ. ஒவ்வொருவனுக்கும், தனது இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, தனது இனம் வாழுகின்ற முறையே சரியானதாகவும், சிறந்ததாகவும் தெரியும். நீங்கள் இப்படி சொல்லுறீங்கள், ஆனால், ஒரு ஒல்லாந்தவன் உங்களை, உங்கள் வாழ்க்கை முறையை பார்த்து எவ்வளவு கைகொட்டி, கெக்கட்டம் போட்டு சிரிப்பான் என்று உங்களுக்கு தெரியுமா? நான் இவற்றை பல்வேறு இன மக்களுடன் பழகிய அனுபவத்தில் இருந்து எழுதுகின்றேன். எம்மில் உள்ள ஒரு சில விசயங்களை அவர்கள் பாராட்டினாலும், நாங்கள் செய்கின்ற பல விசயங்களை பார்த்து அவர்கள் சிரிக்கின்றார்கள். ஆனால், உங்களை பார்த்து மட்டும் என்னடாவென்றால், பெருமைப்படுறாங்களோ? இதை நான் உங்களை கிண்டல் செய்வதற்காக எழுதவில்லை. நீங்கள் மற்றவனை பார்ப்பது மாதிரி, மற்றவன் எப்படி உங்களை பார்க்கிறான் என்ற விசயத்தையும் கொஞ்சம் சரியாக அறிஞ்சு வச்சு இருங்கோ.

பிறகு எங்கட சோக்கிரட்டீஸ் என்ன சொல்லுறார் என்றால், ஆண்கள் சம்பாதிப்பார்களாம்! பெண்கள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பரிவுடனும் பாசத்துடனும் கவனிப்பார்களாம்! உந்த கே.ஆர்.விஜயாவும் சிவாஜியும் நடிக்கிற படங்களில வாற மாதிரி! :lol:

ஆண்கள் தங்கள் ஊர்களையும், நாட்டையும் பாதுகாப்பார்களாம்! பெண்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இறுக்கமாகப் பேணிப் பாதுகாப்பார்களாம்! இப்படித்தான் ஆதிகாலத்தில இருந்து நடக்கிதாம்! என்றபடியால், தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காக்க தமிழ்ப் பெண்கள், தமிழ் ஆண்கள் வகுத்த நெறிகளைப் பின்பற்றி "குடும்ப விளக்கு!" போன்று வாழ்வதே நல்லதாம்! ஹிஹி! :P நீங்கள் இஞ்ச ஜோக் அடிக்கிறீங்களா அல்லாட்டி சீரியசா சொல்லுறீங்களா என்று எனக்கு விளங்கவில்லை.

அண்ணே, ஆதிகாலத்தில மனுசன் சட்டை போடாமல் நிர்வாணமாக திரிந்தான். ஆனால், நீங்கள் இப்ப உடுப்பு போட்டு கொண்டு திரியுறீங்கள்! ஏன் ஆதிகால மனிதன் வாழ்ந்த மாதிரியே இப்பவும் திரியலாமே? உடம்புக்கு நல்லா காத்தும் பிடிக்கும்! சுகமாகவும் இருக்கும்! நீங்கள் பகிடிக்கு சொன்னீங்களோ இல்லாட்டி உண்மையா சொன்னீங்களோ எனக்கு தெரியாது. ஆனால், இப்படி பீ.பி யை கிளறுற மாதிரி வம்புத்தனத்துடன் ஆண்கள் பொறுப்பற்ற முறையில் எழுதபடியால்தான் சில படித்த பெண்கள் தவறான முடிவுகளை எடுத்து தமிழ் கலாச்சாரத்தில இருந்து முற்றிலும் விலகி போகிதுகள். ஏனுங்கோ, தமிழீழத்தில் இப்ப என்ன நடக்கிது என்று உங்களுக்கு தெரியதோ? தமிழீழத்தில நடைபெறுகின்ற போராட்டங்களை பார்த்தபின்புமா உங்களால் இப்படி எழுதக்கூடியதாக இருக்கின்றது? அப்படியென்றால், இந்த ஜென்மத்திற்கு நீங்கள் திருந்தப் போவதில்லை... (பெண்கள் சம்மந்தமான உங்கள் பார்வையில்...)

தமிழீழத்தில எத்தனை ஆயிரம் பெண்கள் தமது உயிர்களை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்துள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? அதேநேரத்தில், எத்தனை ஆயிரம் ஆண்கள் - என்னையும், உங்களையும் போல் - கோழைகளாக வெடிச்சத்தங்களிற்கு பயந்து நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தோம் என்று உங்களுக்கு தெரியாதா?அதென்னங்கோ குடும்ப விளக்கு? கொஞ்சம் விளக்கமாக சொல்ல இயலுமோ? பெண்கள் குடும்ப விளக்குகள் போல வாழ வேண்டும் என்றால், ஆண்கள் என்னமாதிரியுங்கோ வாழவேணும்? "வெடிகுண்டு மாதிரி வாழவேண்டும்!" என்று சொல்லலாமோ? இல்லாவிடின், "குடும்ப விளக்கை அணைக்கின்ற சூறாவளி காற்று மாதிரி வாழவேண்டும்!" என சொல்வது பொருத்தமாக இருக்குமோ? ஆண், பெண் இருவரும் சேர்ந்ததே குடும்பம். ஆணுக்கு குடும்பத்தில் உள்ள உரிமை, சுதந்திரம் பெண்ணிற்கும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நவீன உலகம் போகிற இந்த போக்கில, தினம் தினம் நடக்கிற காலமாற்றங்களில தாக்குப் பிடிக்க முடியாத எங்கள் தமிழ் குடும்பங்கள் அழிவது ஒன்றுதான்... டார்வின் சொன்னமாதிரி "செத்து மடிதல்!" இதுதான் மிஞ்சும்!

அனி, மனைவி கணவனுடன் பொறுமையாக இருக்கவேண்டும். ஆனால், எவ்வளவு தூரம் பொறுமயாக இருக்கவேண்டும்? ஒருத்தி தனது புருசன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளான் என்று அறிந்தால் அவளால் தொடர்ந்து பொறுமையாக இருக்க முடியுமா? இல்லாவிட்டால், புருசன் குடித்துவிட்டு வந்து தினமும் மனைவியை அடித்து சித்திரவதை செய்தால் அவளால் பொறுமையாக இருக்க முடியுமா? பிரிவு என்று வரும்போது பிள்ளைகளும் இருந்தா நிலமை இன்னும் சிக்கலானதுதான். தாய், தந்தை பிரிவின் காரணமாக கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே! இப்படியான பிள்ளைகளே, அவை சரியான முறையில் வளர்க்கப்படாததன் காரணத்தால் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றன.

கடைசியா இன்னொரு விசயத்தையும் சொல்லவேணும். மற்றாக்கள பார்த்து பொறாமைப்படுற குணம் எங்கட சனத்திற்கு நிறையவே இருக்கு. பொறாமைப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் சிலதுகள் என்னவென்றால் கணவன் மனைவியை திட்டமிட்டு பிரிச்சு போடுங்கள். விவாகரத்துக்களை ஊக்குவிக்கின்ற சனங்களும் நிறைய இருக்கு. அதாவது, குடும்பங்களை சேர்த்து வைக்கிற ஆட்களை விட குடும்பங்களுக்க சண்டைகளை உருவாக்கி, குடும்பங்களை பிரித்துவைக்கிற ஆட்கள்தான் எங்களுக்க நிறையப்பேர் இருக்கிறீனம்! பெரும்பாலும் குடும்பங்களில் பிரச்சனைகள் தோன்றுவதற்கு அல்லது, பிரச்சனைகள் ஊதிப் பெருப்பதற்கு மூன்றாவது மனிதர்களே (நண்பர்கள், உறவினர்கள்..)காரணமாக இருப்பாங்கள். என்றபடியால், வெளியார் எங்கட வாழ்க்கையுக்க வந்து புகுந்து விளையாடி, குடும்பத்தை சின்னா பின்னமாக்காதவாறு நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். வெளியார் சொல்வதை நம்புவதை விட முதலில் தனது துணை சொல்வதையே கணவன்/ மனைவி நம்பவேண்டும். வெளியார் வாய்க்கு வந்தபடி என்னவோ எல்லாம் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு புருசனும், மனுசியும் சண்டைபிடிக்க தேவையில்லை.

உதாரணத்திற்கு இப்படி சொல்லலாம். கணவனும், மனைவியும் சந்தோசமா இருப்பீனம். அந்தநேரத்தில, கணவன்ர நண்பன் என்னசெய்வான் என்றால் சும்மா முசுப்பாத்திக்கு இல்லாவிட்டால் பொறாமையில் "என்ன நீதான் வீட்டில சமையலில இருந்து எல்லா வேலையும் செய்யுறீயாம்! மனுசிக்கு அடங்கி பெட்டிப் பாம்பா இருக்கிறியாம்!" இப்படி சொல்லுவான். இதைக்கேட்ட கணவன் யோசிக்கத்தொடங்கி, சிறிதுகாலத்தில் மனநிலை மாற.. மனைவியுடன் வீண் தகராறுகளிற்கு போவான்.. கடைசியில குடும்பம் பிரியும்....

கணவனும் மனைவியும் அன்புடன் இனிமையாக வாழ்வதை பொறுக்க முடியாமல் மனதினுள் புகைந்து, அவர்களை பிரிக்கின்ற அல்லது அவர்களது குடும்ப வாழ்க்கையை குழப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் எங்கட இனத்துக்கு ஒரு சாபக்கேடு!

நன்றி! வணக்கம்! :D

ஆ.... என்னது? பொம்பிளைகளை நாங்கள் தலை நிமிர்ந்து பார்க்ககூடாதா? உங்களை உற்றுப்பார்த்தால் நம்மள பார்த்து "விடுகாலி! பொம்பிளை பொறுக்கி!" என்றெல்லாம் சொல்லுவீங்களோ?

கலாச்சாரமும், பண்பாடும் பெண்ணுக்கு மட்டுமில்லை!ஆணுக்கும் உண்டு தான்.

அது வெளிநாடோ, நம்ம ஊரோ எங்கும் ஆண்களையும் சமூகம் தவறான கண்ணோடு நோக்கும் சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கு.

தலைப்புக்குரிய விடையே இது!

ஆண்களுக்கும் கலாச்சாரம் இருக்கு..அதனால அவர்களுக்கும் பாதிப்பிருக்கு என்று சொன்னேன்.

விடுகாலி அப்படி என்று சொல்வதை ஒரு உதாரணமாகவே சொன்னேன்.

ஏன் நிங்கள் எதையும் வித்தியாசமாகத் தான் செய்வீங்களோ? இல்லாட்டி மற்றவர்கள் மாதிரி இல்லாமல் வித்தியாசமான ஆளாக வாழ்வதை விரும்புறீங்களோ? இல்லாட்டி தமிழர் என்பவர்கள் எப்பவும் மற்றைய இனத்தவர்களில் இருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டுமோ?

அப்படி இல்லை..சொல்லுக்கு ஒரு வாழ்க்கை..நிஜத்தில் ஒரு வாழ்க்கை வாழாமல்..என் வாழ்க்கையை வாழ தான் நினைக்கிறேன். அதுக்காக நான் ஒடுக்கப்படல. ஒடுக்க போறதுமில்ல..

நீங்கள் சொன்னது போல என் கணவன் இன்னொரு பெண்ணோடு போனால் நான் விட்டுட்டு போய்க்கிட்டே தான் இருப்பேன். ஆனால் அதுக்காக புரட்சிப்பெண் என்று சின்னதுக்கும் விட்டுட்டு போக மாட்டன். பொறுமை எல்லாத்துக்கும் வேணும் மாப்பு.

அதெப்படி பாருங்கோ நீங்கள் சொல்லுறமாதிரி கேவலமாக வாழ்ந்த ஒல்லாந்தரால் இந்த உலகத்தையே ஒரு காலத்தில ஆட்டிப்படைக்க முடிந்தது?

கேவலமாக என்றவில்லை. வித்தியாசம் என்றே சொன்னேன். நீங்கள் சொன்னது போல நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்தவர் அவர்களிலும் இருக்கிறார்கள். தேவையில்லாத காரணத்துக்காக இடையில் விட்டு போனவர் நம்மிலும் இருக்கிறார்கள்.

அதுசரி மாப்பு..அவர்கள் நாட்டை ஆண்டது கலாச்சாரத்தை கொண்டா? இல்லை படை பலத்தைக்கொண்டா? :P

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறகு எங்கட சோக்கிரட்டீஸ் என்ன சொல்லுறார் என்றால், ஆண்கள் சம்பாதிப்பார்களாம்! பெண்கள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பரிவுடனும் பாசத்துடனும் கவனிப்பார்களாம்! உந்த கே.ஆர்.விஜயாவும் சிவாஜியும் நடிக்கிற படங்களில வாற மாதிரி!

ஆண்கள் தங்கள் ஊர்களையும், நாட்டையும் பாதுகாப்பார்களாம்! பெண்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இறுக்கமாகப் பேணிப் பாதுகாப்பார்களாம்! இப்படித்தான் ஆதிகாலத்தில இருந்து நடக்கிதாம்! என்றபடியால், தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காக்க தமிழ்ப் பெண்கள், தமிழ் ஆண்கள் வகுத்த நெறிகளைப் பின்பற்றி "குடும்ப விளக்கு!" போன்று வாழ்வதே நல்லதாம்! ஹிஹி! நீங்கள் இஞ்ச ஜோக் அடிக்கிறீங்களா அல்லாட்டி சீரியசா சொல்லுறீங்களா என்று எனக்கு விளங்கவில்லை.

எங்கட கிருபனண்ணா சொன்னாரெண்டால் அதுக்கு நெடுக்காலயும் குறுக்காலயும் அர்த்தமிருக்கும்............................ :P :P

கவிதை அந்தாதியில துணைப்படைக்கு போறதற்கும் துணை வேணும் என்று சொல்லுறாங்க அப்புறமா 15 நிமிடம் கழித்து இங்க வந்து எனக்கு துணையே தேவையில்லை நான் யாரையும் நம்பி வாழுற ஆள் இல்லை என்னால தனியாக எல்லாமே செய்யமுடியும் என்று சொல்லுறாங்க என்னப்பா நிமிடத்துக்கு நிமிடம் ஒவ்வொரு விதமான மனநிலையா? மாற்றங்களா? கவிதை கற்பனை, கவிதைக்கு பொய்யழகு என்று சொல்லி விட்டு தப்பிக்க முடியாது மனதில உள்ளது தான் கவிதையாக வெளிவரும். :lol:

ஆனாலும் நீங்கள் இப்படி உண்மையை போட்டு உடைத்து ஒரு வெண்ணிலவை மூன்றாம் பிறை ஆக்க கூடாது. அந்தாதியில் எழுதுவது களத்தின் வேறுபக்கங்களில் சிந்தாது சிதறாது என்று நிலா நினைத்ததோ என்னவோ :D:D:D

Edited by vettri-vel

ஒருகாலத்திலும் இப்படியாக நான் நினைக்கவே மாட்டேன். தனிய வாழ என்னால் முடியும் என்பது தான் என்னுடைய வாதாட்டம். யாருக்கும் அடங்கி வாழப்போவதுமில்லை. அதற்கு நான் ஒன்றும் ககயாலாகாதவளுமில்லை. என் ககயே எனக்குதவி. என் சொந்தக்காலில் என்னால் நிற்க முடியும். கால் இல்லையெனில் கூட ஊன்றுகோல் என்னனத் தாங்கும். அதற்காக இன்னொருவன் தான் எனக்கு துணையாவான் அவனின் உழைப்பே என்னைக் காக்கும் என்று நினைச்சதுமில்லல. நினைக்கப்போவதுமில்லை. நான் யாருக்கும் பயப்பட்டதுமில்லை யாருடைய கருத்தையும் கேட்டதுமில்லை. எனக்கு எது சரியாகுதோ அதை நான் செய்யணும். இதுதான் என் பொலிசி.

நிலா அக்கா உங்க பொலிசி நல்லா இருக்கு கீப் இட் அப்....................நிலா அக்கா மாதிரி 2பேர் நாட்டுக்கு இருந்தா இந்த தலையங்கமும் தேவயில்லை மாப்பியும் இவ்வளவு கஷ்டபட்டு எழுதியும் இருக்க தேவையில்லை.............சரி இப்ப நான் மாட்டருக்கு வாரென்............உந்த கலாச்சாரம் என்பது கட்டாயம் தேவை தானா.............???

:lol::D

  • தொடங்கியவர்

ஆனாலும் நீங்கள் இப்படி உண்மையை போட்டு உடைத்து ஒரு வெண்ணிலவை மூன்றாம் பிறை ஆக்க கூடாது. அந்தாதியில் எழுதவது களத்தின் வேறுபக்கங்களில் சிந்தாது சிதறாது என்று நிலா நினைத்ததோ என்னவோ :D:D:D
:P ஹாய் வெற்றி வேல் எப்படித்தான் நிலவு மூன்றாம்பிறையாகினாலும் மீண்டும் பெளர்ணமி ஆகும்தானே.

துணையாக நீ வருவாயெனில்

துணைப்படையில் இணைந்து

துரோகியை அழித்தொழிக்க

துவக்கு ஏந்த நான் தயார்

வருவாயா நீயும்?

இக்கவியில் எனக்குத்துணையாக வரச்சொல்லவில்லை கடைசிக்காலம் வரைக்கும். ஜஸ்ட் நான் இணையப்போகிறேன் நீயும் வருவியா என கேட்டேன் பா. ஐயோ ;) அங்கை இருக்கிறதை இங்கை எல்லாம் கொண்டு வராதீங்க பா. எனக்கு எல்லாத்துக்கும் விளக்கம் சொல்ல முடியல்லை. கை நோகுது. :P

நிலா அக்கா உங்க பொலிசி நல்லா இருக்கு கீப் இட் அப்....................நிலா அக்கா மாதிரி 2பேர் நாட்டுக்கு இருந்தா இந்த தலையங்கமும் தேவயில்லை மாப்பியும் இவ்வளவு கஷ்டபட்டு எழுதியும் இருக்க தேவையில்லை.............சரி இப்ப நான் மாட்டருக்கு வாரென்............உந்த கலாச்சாரம் என்பது கட்டாயம் தேவை தானா.............??? :lol::D

:D கலாச்சாரம் தேவைதான். ஆனாலும் ஆக கூடிய கட்டுப்பாடுகள் தேவையில்லல. :P

Edited by வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.