Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக பா. நடேசன்

Featured Replies

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 09:50 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக தமிழீழக் காவல்துறை பொறுப்பு வகித்து வரும் பா. நடேசனை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார்.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அறிவித்துள்ளார்.

-Puthinam-

"ஆறுகள் பின்நோக்கி நகர்வதில்லை" என்று ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் கூறியது போல் இழப்புகள் போராட்டத்தை தடுத்துவிடுவதில்லை மாறாக புது மூச்சுடன் வேகமெடுக்கும். அவ்வாறான ஒரு புது மூச்சாகவும் புது வேகத்துடனும் புலம் பெயர் உறவுகளாகிய நாம் போராட்டத்துக்கு தோழ்கொடுப்பதே பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு செலுத்தும் இதயபூர்வ அஞ்சலியாக அமையும்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

"ஆறுகள் பின்நோக்கி நகர்வதில்லை" என்று ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் கூறியது போல் இழப்புகள் போராட்டத்தை தடுத்துவிடுவதில்லை மாறாக புது மூச்சுடன் வேகமெடுக்கும்.

போர்க்களத்தில் இழப்புக்கள் பெரிய தளபதிக்கும் வரும் நேற்றுப் பயிற்சி பெற்று வெளியேறின போராளிக்கும் வரும். அதை கண்டு துவண்டு போனா போராட முடியாது. விழ விழ முன்னோக்கிப் போறதுதான் வீரனுக்கு தேவை வெற்றிக்கு வழி வகுக்கும்..! எதிரியை சிதறடிக்கும்..! எமது கலக்கமே எதிரிக்கு ஊக்கம்.. அதைப் புலம்பெயர்ந்தவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்..! :icon_idea:

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்று சங்கர் அண்ணாவின் இளப்பின் பின் தமிழீழ வான் படை பரிணமித்தது.இன்று தமிழ்செல்வன் அண்ணாவின் இழப்பின் பின் தமிழீழம் பரிணமிக்க வேண்டும்.இதற்கு எல்லா தமிழ்மக்களும் இனவாத சிங்கள அரசின் ஈன செயல்களை ஒரு சவாலாக எடுக்க வேண்டும்.

ஒற்றுமையாகச் செயல்பட்டு ஈழம் காணுவோம்!!!

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பதவி வகித்து வரும் பா.நடேசனை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் நியமித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தலைவர் தனது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டார். பொலிஸ் மாமாவும் தமிழ் செல்வன் போல் அமைதியாக விசயங்களை பண்பாக செய்யக்கூடியவர். நோர்வேக்கு பேச்சுவார்த்தை குழுவில் தமிழ்செல்வனுடன் வந்த போது நோர்வே தமிழ் மக்கள் சந்தித்து பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. தமிழ்செல்வன் அண்ணாவின் மறைவு என்பது நிரப்ப முடியாத ஒன்று. ஆனால் எதிரி இப்போதும் அருகில் தான் நிற்கின்றான். இதனால் மனமிரங்கோ, அல்லது தனது கொலைவெறியையோ அவன் நிறுத்தப் போவதில்லை.

நாங்கள் சோர்ந்து போகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிரி பலமடைகின்றான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களின் கண்ணீரையும், அனுதாபங்களையும் தலைவரின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெறுமனே அனுதாபம் சொல்வதோடு எங்களின் பணி முடியாது.தலைவரோடு சேர்ந்து அடுத்த கட்டத்திற்கு நாங்கள் நகருவதே, தமிழ்செல்வன் அண்ணாவின் சிந்தனைக்கும், தியாகத்திற்கும் நாங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.

Edited by தூயவன்

Nadesan appointed new Political Head of the LTTE

[TamilNet, Friday, 02 November 2007, 16:10 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) leader V. Pirapaharan has appointed P. Nadesan as the new Political Head following the demise of Brigadier S.P. Thamilchelvan, according to Irasiah Ilanthiryan, LTTE's military spokesman.

Mr Nadesan, who is currently in charge of Tamileelam Police, will be in charge of the two departments from now on, Ilanthirayan said.

The LTTE spokesman described the aerial attack by the Sri Lanka Air Force on Thamilchelvan's residence, a cowardly assassination.

TamilNet

"ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத பலமோ அல்ல: அசைக்கமுடியாத மனவுறுதியும், வீரமும், விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்"

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து.....

Edited by Jamuna

தலைவரின் தெரிவு சரியாகவே இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.