Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன நடக்குது இங்க?பகிர்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு...

ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை

எல்லாம் தலைகீழா நடக்குதோ?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது

புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது

புதுசு புதுசா கனக்க முளைக்குது

எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

தமிழர் பேரவை என்றோம்

உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம்

ஓங்கி குரல் கொடுப்போம் என்றோம்

தோள் கொடுத்தோம்.

வட்டுக்கோட்டை என்றோம்

தமிழீழ தனியரசு என்றோம்

வாக்குப்போட்டம்.

நாடு கடந்த அரசு என்றோம்

மதினுட்ப அரசியல் சாணக்கியம் என்றோம்

அதுக்கும் வாக்குப்போட்டம்.

இப்ப மக்களவை எண்டுகினம்

என்ன நடக்குது இங்க?

எனக்கொண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..

பேரவையை கூட்டினது உலகத்தமிழர் பேரவை

வட்டுக்கோட்டையை செய்தது தமிழீழ நலன் விரும்பிகள்

நாடு கடந்த அரசை செய்தது மதியுரைக்குழு

மக்களவையை செய்யுறது யார்?

என்ன நடக்குது இங்க?

எனக்கொண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..

மக்களவை நாடுகடந்த அரசின்ர அடித்தளம் எண்டுகினம்

ஆணிவேர் எண்டுகினம்

பக்க பலம் எண்டுகினம்

இரட்டைக்குழல் துப்பாக்கி எண்டுகினம்

நாடு கடந்த தமிழீழ அரசின் தூண் எண்டுகினம்

அடித்தளமும் ஆணிவேரும் தூணும் இல்லாமலா

நாடு கடந்த அரசு அமைத்தார்கள்?

கேக்கிறவன் கேணையன் எண்டால் கேப்பையிலும் பால் வழியும்

எண்ட பழமொழிதான் ஞாபகம் வருது....

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

பேரவை,வட்டுக்கோட்டை,நாடு கடந்த அரசு

செய்ய வேண்டிய வேலை கனக்க கிடக்கு

ஒண்டுக்கு மூண்டு கிடக்கு

பிறகேன் மக்களவை?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

மே 18 இக்கு பிறகு

கே.பி எண்டினம்

இல்லை கஸ்ரோ எண்டினம்

முதல்ல கே.பி துரோகி ஆனார்.

பிறகு கஸ்ரோ துரோகி ஆனார்.

என்ன நடக்குது இங்க?

எனக்கொண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..

சிலர் ஆய்வு செய்கினம்

சிலர் கட்டுரை எழுதுகினம்

சிலர் கவிதை எழுதுகினம்

சிலர் ஈ மெயில் அனுப்புகினம்

இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

கே.பி குறூப் எண்டு ஒண்டு

கஸ்ரோ குறூப் எண்டு ஒண்டு

இப்ப நோர்வே குறூப் எண்டு இன்னொண்டாம்!!!

"அண்ணை இருக்கிறார்.வருவார்" எண்டு இன்னொரு குறூப்.

யார் எண்டு சொல்லமாட்டம் ,காலம் வரும் வெளிப்படுவம் எண்டு இன்னொரு குறூப்.

அப்பிடியெண்டா நாங்கள் எந்தக்குறூப்?

தமிழ் மக்கள் எந்தக் குறூப்?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

ஒரு நேர உணவுக்கும் வழியில்லை

கற்பை காக்கவும் வேலியில்லை

நிம்மதியாய் படுத்துறங்கவும் பாயில்லை

நித்திரையே இல்லை

பொழுது விடியுமா என்ற ஏக்கம்

விடிந்தாலும் உயிரோடு இருப்போமா என்ற ஏக்கம்

வீடும் இல்லை, தாலியும் இல்லை,குங்குமம் இல்லை.

நிம்மதியாய் பொழுது விடிதலும் ஒரு நேர உணவும் தான் எங்கள் உறவுகளுக்கு இப்போது தமிழீழம்...!!!

கோவணத்துக்கே வழியில்லாமல் ஒட்டிய வயிறோடு உறவுகள் அங்கே......

இங்க என்ன நடக்குது?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

சிலர் ஆய்வு செய்கினம்

சிலர் கட்டுரை எழுதுகினம்

சிலர் கவிதை எழுதுகினம்

சிலர் ஈ மெயில் அனுப்புகினம்

இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?

சாதாரண அப்பாவித்தமிழர் நாங்கள்

தெளிவாக குழம்பிப்போய் இருக்கிறம்

குழம்பாமல் தெளிவா இருக்கிறவை

விளக்கமா தெளிவுபடுத்துங்கோ

எவர் வேண்டுமானாலும் பேசலாம்

என்ன வேண்டுமானலும் செய்யலாம்

எதை வேண்டுமானாலும் எழுதலாம்

என்ன நடக்குது இங்க?

எனக்கொண்டும் விளங்கயில்லை

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

இதையெல்லாம் எழுதும் அருகதையும் யோக்கியமும் தகுதியும் எங்களுக்கு இல்லைத்தான் - ஆனால் எழுதும் வல்லமை திராணி இருக்கிறது.

இதை சொல்லும் எங்களை ஒநாய் என்றும் துரோகி என்றும்

பதிவு செய்யலாம்,சொல்லலாம்.

பழகிப்போச்சு.

எல்லோரும் மக்களின் உணர்வுகளையும் எழுச்சியையும் நம்பியே வண்டி ஓட்டுகிறோம்.

உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் போது, இல்லை எழுச்சி சிதறடிக்கப்படும் போது

மக்கள் விழித்துக்கொள்ளுவர்.

அப்போது தைரியமாய் மக்களின் கேள்விகளை யார் எதிர்கொள்கிறார்களோ?

அவர்களே பிழைத்துக்கொள்வர்.

மற்றவரெல்லாம் காணாமல் போவர்.

இலட்சியம் ஒன்று,நோக்கம் ஒன்று,போகும் இடமும் ஒன்று தான் - ஆனால்

போகும் பாதைகள் தான் வேறு வேறு என்கிறார்கள்

எத்தனை நாளைக்குத்தான் இந்த செப்படி வித்தை?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

தொலைந்து போன தமிழனின் விடுதலை விதையை

பட்டப்பகலில் சூரிய ஒளியில் இலகுவாய் தேடாமல்

நட்ட நடு இரவில் ஆளுக்கொரு திசையில் குருட்டு வெளிச்சத்தில் தேடுகிறோம்.

நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கிறோம்

ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அநாதைகளாக நின்று அழுகின்றன.

என்ன நடக்குது இங்க?

எனக்கொண்டும் விளங்கயில்லை

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

ஒன்றுபட்ட தமிழினம் உருக்குலைஞ்சு போவதைப்பார்த்து

சிங்களவன் வேடிக்கை பார்த்து சிரிக்கிறான்.

எங்களின் தலைகளில் நாங்களே மண்ணை அள்ளிப்போடுவதைப் பார்த்து

எள்ளி நகையாடி எக்காளமிடுகிறான் ராஜபக்ச.!

பேரவை என்றும்,நாடுகடந்த அரசு எண்டும்,வட்டுக்கோட்டை எண்டும் உடைந்து கிடக்கிறது புலம்பெயர் தமிழினம்

விழுந்தவனை மீண்டும் ஏறி மிதிக்கவா இன்னொரு தேர்தலும்?மக்களவையும்?

முடிஞ்சா இருக்கிற வீட்டை பலப்படுத்துங்கோ

அத்திவாரம் சரியில்லை,தூணுகள் சரியில்லை எண்டு

இருக்கிற வீட்டை இடித்துவிட்டு இன்னொரு வீட்டை கட்ட வேண்டாம்.

ஏற்கனவே வீடு கட்ட நிறைய செலவு செய்தாச்சு.

அத்திவாரம் போடுறம் எண்டும்,தூணுகள் கட்டுறம் எண்டும்

இருக்கிற வீட்டை உடைக்க வேண்டாம்?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

அண்ணை இருக்கிறார் எண்ட ஒரு துளி நம்பிக்கை இருந்தது

இப்ப அதுவும் இல்லை..!!!

புலம்பெயர் தேசத்து பிச்சல்களும் புடுங்கல்களும்தான் இந்த நம்பிக்கையீனத்துக்கு காரணம்.

கழுத்தறுப்புகளும்,காட்டிக்கொடுத்தல்களும்,பழிவாங்கல்களும் அண்ணையின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்றன.!

கிண்டி கிழறப்பட்ட துயிலும் இல்ல எலும்புக்கூடுகளின் நடுவே...!!!

வீரமரணம் அடைந்த தீபன் அண்ணை,விதுசா அக்கா,துர்க்கா அக்கா,சாள்ஸ் அன்டனி,சொர்ணம் அண்ணையின் சாம்பல்களுக்கு நடுவே...!!!

அண்ணையையும் தேடுகிறோம்......

விம்மி வெடிக்கும் நெஞ்சோடு...

குருதி வடியும் கண்களோடு...

ஆனால் அண்ணை உயிரோடுதான் இருக்கிறார்

எங்களின் வீடுகளின் சுவர்களில் கம்பீரமாக படமாக....!!!!

கேள்வி கேட்பவர்களையெல்லாம் துரோகிகள் ஆக்கும்

குறூப்பிடம் எங்களின் பெயர்களையும் பரிந்துரையுங்கள்

ஏற்கனவே நாங்கள் துரோகிகள் - இனிமேல்

இதையெல்லாம் எழுதிய பின் லெப்டினன் கேணல் துரோகிகள்

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

சிலர் ஆய்வு செய்கினம்

சிலர் கட்டுரை எழுதுகினம்

சிலர் கவிதை எழுதுகினம்

சிலர் ஈ மெயில் அனுப்புகினம்

இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?

என்ன நடக்குது இங்க?

எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...

யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

நன்றி : முகநூல்

Edited by விடலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கவிதைக்கு எழுதப்பட்ட பின்னூட்டமொன்று முக நூலிலிருந்து

சில கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. நானும், நீங்களும் ஏன் பக்கத்திலுள்ள நண்பனாலும் பதிலளிக்க முடியாது.

இலங்கையின் மக்கள் தொகையில் 30 வீதத்துக்கும் குறைவாக இருந்து கொண்டு 1940களில் 50:50 கேட்டது யார் தப்பு?

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி, தனிச் சிங்களச் சட்டம் என்ற பாதிப்புக்களுக்கு முறையாக பேசி தீர்வு காணாது, உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த இளைஞர்களை வன்முறை போராட்டத்துக்கு தள்ளியது யார் தப்பு?

இந்த பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியினால் வடக்கு- கிழக்கில், யாழ்ப்பாணத்தைத் தவிர மற்ற மாவட்டங்கள் எதுவும் அதிகம் பாதிக்கப்படவில்லை. மாறாக கிளிநொச்சி, திருகோணமலை, வன்னி மாவட்டங்கள் பயனையேபெற்றன. அவர்களையெல்லாம் இனம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி பலிவாங்கியது யார் தப்பு?

விடுதலை, சுதந்திரம், தனிநாடு என்ற கோசங்களை இந்தியாவின் போலி தெம்பூட்டல்களைக் கேட்டு முன்னெடுத்தது யார் தப்பு?

இந்தியாவின் சுயரூபம் வெளிப்பட்டபோதும், அவர்களை தொடர்ந்தும் ஆபத்பாண்டவர்களாக நம்பியது யார் தப்பு?

கல்வி, பொருளாதாரம், தொழில் வளங்கள் என்று சிந்திக்க வேண்டிய இளைஞ சமூகத்தை தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக வன்முறைக் கலாசாரத்துக்குள் தள்ளிவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியது யார் தப்பு?

பூகோள, பிராந்திய அரசியல் நகர்வுகளை சரியாக உள்வாங்காமல் தொடர்ந்தும் தனி ஈழம் என்று கோசமிட்டு வந்தது யார் தப்பு?

அதற்காக பதின்ம வயதுகளின் ஆரம்பத்திலேயே சிறுவர்களை படையில் சேர்த்தது யார் தப்பு?

அதனைத் தடுக்க முடியாமல் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது யார் தப்பு?

தன்னுடைய பலத்தினை சுயமதிப்பு செய்யாமல் பெரியண்ணன்மாரின் கைப்பிள்ளையாக செயற்பட்டது யார் தப்பு?

சாதகமான தருணங்களைக் கூடா சரியாக கையாளமல் வரட்டு பிடிவாதம் பிடித்தது யார் தப்பு?

உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத தேசத்திலிருந்து அளவு கணக்கின்றி நிதி வழங்கி வன்முறையை ஊக்குவித்தது யார் தப்பு?

வன்முறைப் போராட்டக்காரர்கள் சமாதானத்துக்கு வந்து சமஷ்டி ரீதியிலான அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்த போதும், அவர்களை உசுப்பேத்தி தனிநாடு கோர வைத்தது யார் தப்பு?

இந்த உசுப்பேத்தல்களினால் அந்த வன்முறை போராட்ட இயக்கமே முற்றுமுழுதாக அழியக்காரனமாக இருந்தது யார் தப்பு?

வன்னியில் கொத்துக்கொத்தாக குண்டுகள் வீசப்பட்டு மக்கள் கொல்லப்பட்ட போது, தனி ஈழமே மூச்சு என்று மூக்குச் சொறிந்தது யார் தப்பு?

தங்களை தக்கவைப்பதற்கு சொந்த உறவுகளையே பலிகடவாக்கியது யார் தப்பு?

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நிலைமைகள் தெரியாமல் தொடர்ந்தும் போலி வேடம் போடும் குள்ள நரிகளை விட்டு வைத்தது யார் தப்பு?

அல்லது தங்களை பெரிய ராஜதந்திரிகள் என்று சொல்லிக்கொள்ளும் புலம்பெயர் கல்விச் சமூகம் தங்களை சுயமதிப்பு செய்யாதது யார் தப்பு?

நாடு கடந்த ஈழம், மக்கள் பேரவை…. மண்ணாங்கட்டி என்று பஞ்சம் பிழைக்க வியாபாரம் நடத்துவது யார் தப்பு?

இன்னும் இன்னும் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் உண்மையான, சுயபுத்தியுடன் பதிலளியுங்கள் நீங்கள் கேட்ட கேள்விகள் இல்லாமலேயே போகும். அப்பொழுது உங்களுக்கும் புரியும் எல்லாமே நாங்கள் விட்ட பிழையென்று.

(தமிழ்ப்பொடியன், இந்தப் பதில்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்குரியதே)

  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. நானும், நீங்களும் ஏன் பக்கத்திலுள்ள நண்பனாலும் பதிலளிக்க முடியாது.

இலங்கையின் மக்கள் தொகையில் 30 வீதத்துக்கும் குறைவாக இருந்து கொண்டு 1940களில் 50:50 கேட்டது யார் தப்பு?

50:50 என்றால் அப்படி என்ன கேட்டார்கள்? நாட்டில் தீவில் 50% நிலத்தைக் கேட்டார்களா? அரசியல் உரிமைகளில் 50% ஐத்தானே கேட்டார்கள்? இது தவறா? :)

சனத்தொகை அடிப்படையில்தான் உரிமைகள் என்றால் அது என்ன ஜனநாயகம்? கனடாவில் 1%க்கு குறைவானவர்களாக தமிழர்கள் உள்ளார்கள் என்றால் அவர்களுக்கு 1%க்கும் குறைவான உரிமைகள்தான் கிடைக்குமா? :)

யாராவது இந்த 50-50 ஐ கொஞ்சம் விளங்கப்படுத்தினால் நல்லது.

மற்றும்படி சிங்களவன் என்னத்தை சொல்லித்திரியிறானோ அதையேதான் பின்னூட்டமாக காவித்திரிந்திருக்கிறார் அந்த ஒருவர். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

50:50 என்றால் அப்படி என்ன கேட்டார்கள்? நாட்டில் தீவில் 50% நிலத்தைக் கேட்டார்களா? அரசியல் உரிமைகளில் 50% ஐத்தானே கேட்டார்கள்? இது தவறா? :)

சனத்தொகை அடிப்படையில்தான் உரிமைகள் என்றால் அது என்ன ஜனநாயகம்? கனடாவில் 1%க்கு குறைவானவர்களாக தமிழர்கள் உள்ளார்கள் என்றால் அவர்களுக்கு 1%க்கும் குறைவான உரிமைகள்தான் கிடைக்குமா? :)

யாராவது இந்த 50-50 ஐ கொஞ்சம் விளங்கப்படுத்தினால் நல்லது.

மற்றும்படி சிங்களவன் என்னத்தை சொல்லித்திரியிறானோ அதையேதான் பின்னூட்டமாக காவித்திரிந்திருக்கிறார் அந்த ஒருவர். :wub:

சும்மா அசத்திட்டியள் இசை

சும்மா அசத்திட்டியள் இசை

ஆனால் அவையள் வெளிநாட்டில வந்து 1% வீதத்திலும் குறைவாக இருந்தாலும் சகல உரிமையும் வேணும் என்று குரல் கொடுப்பினம் ஆனால் சிங்களவன் மட்டும் என்ன செய்தாலும் அது சரி என்று வாதிடவருவினம் உவையளை திருத்த ஏலாது

  • கருத்துக்கள உறவுகள்

சோல்பரிக் குழு இலங்கையின் அரசியல் யாப்பைத் திருத்தி எழுதும் பொழுது திரு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இலங்கையில் இருக்கும் சகல சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதுகாக்கப் படுவதற்காக 50:50 என்ற பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை முன் வைத்தார்.

சிங்களவர் 100 பா.உ.க்களைக் கொண்டிருந்தால் ஏனைய சகல சிறுபான்மை இனத்தவர்களும் 100 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனால் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொண்டு வரும் சட்டங்களை தடுக்கலாம் என்று வாதிட்டார்.

ஆனால் அவரது கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

இது எனக்குத் தெரிந்த வரைக்கும்

வாத்தியார்

..........................

முஹமட் அலி ஜின்னாஹ் பாகிஸ்தானை பிரித்துத்தரும்படி கேட்ட அதே வேளையில் எங்கள் அதிகம் படித்த ஜி ஜி பொன்னம்பலம் 50௦-50 கேட்டார். இந்த அர்த்தம் இல்லா தீர்விற்காக நிறைய வாதாடினார். இதற்கு சோல்பரி ஆணைக்குழு ஒத்துக்கொள்ளவில்லை. தனி நாடு கேட்டிருக்கலாம் அல்லது அந்நியர் வரும் முன்பு இருந்தது போல (கொழும்பு இராஜ்ஜியம், கண்டி இராஜ்ஜியம், யாழப்பாண இராஜ்ஜியம்) நாட்டை பிரித்து விடும்படி கேட்டிருக்கலாம் இல்லை ஒரு தமிழர்களுக்கான ஒரு அர்த்தமுள்ள தீர்வை கேட்டிருக்கலாம். 1948 ம் ஆண்டிற்கு பின்னான தமிழர்களின் போராட்டமும் அழிவும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்க?

நிறையச்சனத்தின் கேள்வி இது

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கேள்வி கேட்பது சுலபம்

கேள்வியை கேட்பதை விடுத்து பதிலைத்தேடுவோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.