Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபியின் கடைசி நாட்கள்?

Featured Replies

கடாபியின் முக்கிய 'ஓயில்' குத நகரம் வீழ்ச்சியடைந்தது

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் முக்கியமான எண்ணெய்க் குதங்கள் இருக்கும் பிறீகா நகரம் இன்று லிபிய போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைநகர் திரிப்போலிக்கு கிறக்கே சுமார் 750 கி.மீ தொலைவில் இந்த நகரம் இருக்கிறது. மேற்கண்ட நகரத்தின் வீழ்ச்சி தமக்கு ஒரு பின்னடைவே என்று கடாபி ஆதரவுப் படைகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை இன்று திரிப்போலிக்கு 160 கி.மீ தொலைவில் உள்ள சில்ரன் நகரமும் போராளிகள் கரங்களுக்கு வந்துள்ளது. ஆனால் கடுமையான நிலக்கண்ணி வெடிகளுக்குள்ளால் முன்னேறிய காரணத்தால் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டதாக போராளிகள் தரப்பு தெரிவிக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கடாபி தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=79742

-------------------------------------------------

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்: http://www.yarl.com/...showtopic=81917

Edited by akootha

  • Replies 57
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

திரிப்பொலியை நேட்டோ உதவியுடன் அணுகிவிட்டனர்?

  • தொடங்கியவர்

போர்நிறுத்தம் கோருகிறது லிபிய அரசாங்கம்

லிபியாவில் கர்ணல் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், உடனடியாக போர்நிறுத்தம் வரவேண்டும் என்று லிபிய அரசாங்கம் கோரியுள்ளது.

சனிக்கிழமை இரவு திரிபோலி நகரின் சில பாகங்களில் கிளர்ச்சிப் படையினருக்கும் கடாஃபிக்கு விசுவாசமான படையினருக்கும் இடையே கடும் சண்டைகள் நடந்திருந்தன.

"உடனடி போர்நிறுத்தம் வேண்டும்"

இதனிடையே இன்று லிபியாவின் உள்துறை அமைச்சர் உடனடியாக போர்நிறுத்தம் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது எழுந்துள்ள நெருக்கடிக்கு யுத்தமில்லாத வழியில் தீர்வு காண முடியும் என்றும், அது சாத்தியமே என்பதை தமது அரசாங்கம் மாதக் கணக்கில் சொல்லி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால், நேட்டோவின் கரங்கள் ரத்தக் கரை படிந்தவையாக மாறியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது." என்றும் லிபிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

நேட்டோ இராணுவ உதவி வழங்கியதால்தான் கிளர்ச்சிப் படையினரால் திரிபோலிவரை முன்னேறி வர முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.

"இப்போது அவர்கள் திரிபோலிக்குள்ளும் நுழைய அனுமதிக்கப்பட்டால், அரசியல் சீர்திருத்தம் அவர்களது நோக்கமாக இருக்காது. இரத்த வெறியும், பழிவாங்கும் எண்ணமும்தான் அவர்களிடையே மேலோங்கி நிற்கும்." என்று லிபியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/global/2011/08/110821_libyaceasefire.shtml

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தம் கோருகிறது லிபிய அரசாங்கம்

மகிந்தவின் நண்பன் கடாபி, ஆறு மாதத்துக்கு முன்பே... சரணடைந்து போர் நிறுத்தம் கேட்டிருந்தால் அதனைச் செய்திருக்கலாம்.

அடுத்து வரும் சில நாட்களில், கடாபி கொல்லப்பட்டோ....., கைது செய்யப்பட்டோ, நாட்டை விட்டு ஓடியோ.... போகும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடிச்சுத் துவைங்கடா..... கடாபியை கோவணத்தோடை பார்க்க ஆசையாயிருக்கு. :D

மகிந்தவின் நண்பன் கடாபி, ஆறு மாதத்துக்கு முன்பே... சரணடைந்து போர் நிறுத்தம் கேட்டிருந்தால் அதனைச் செய்திருக்கலாம்.

அடுத்து வரும் சில நாட்களில், கடாபி கொல்லப்பட்டோ....., கைது செய்யப்பட்டோ, நாட்டை விட்டு ஓடியோ.... போகும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடிச்சுத் துவைங்கடா..... கடாபியை கோவணத்தோடை பார்க்க ஆசையாயிருக்கு. :D

சிறி அண்ண, பின்லேடனுக்கு நடந்தது போல் கடாபிக்கும் நடக்கலாம்... அதாவது, கடலுக்கடியில் கலைக் கட்டி அடக்கம் பண்ணிவிட்டோம் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண, பின்லேடனுக்கு நடந்தது போல் கடாபிக்கும் நடக்கலாம்... அதாவது, கடலுக்கடியில் கலைக் கட்டி அடக்கம் பண்ணிவிட்டோம் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. :rolleyes:

கல்லைக் கட்டி கடலில் போட்டால் உடம்பு முழுமையாக இருக்கும் குட்டி.

புரட்சியாளர் கைகளில் அம்பிட்டால்....பீஸ்,பீஸாக்கிப் போடுவாங்கள். :icon_mrgreen:

Edited by தமிழ் சிறி

கல்லைக் கடலில் போட்டால் உடம்பு முழுமையாக இருக்கும் குட்டி.

புரட்சியாளர் கைகளில் அம்பிட்டால்....பீஸ்,பீஸாக்கிப் போடுவாங்கள். :icon_mrgreen:

அமெரிக்கா அப்படி அறிவித்தலும் கடாபியை கடலுக்கடியில் தான் அடக்கம் பண்ண வேணும் என்று இல்லை...சிறி அண்ண :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அப்படி அறிவித்தலும் கடாபியை கடலுக்கடியில் தான் அடக்கம் பண்ண வேணும் என்று இல்லை...சிறி அண்ண :lol:

லிபிய மண்ணில் அடக்கம் பண்ண புரட்சியாளர்கள், சம்மதிப்பார்களா... குட்டி.

வாற மாதம் கடாபி ஆட்சிக்கு வந்து, 42 வருடங்களாகின்றது. அதுக்குள்ளை, ஆளை அமத்த வேணும். :icon_idea:

மகிந்தவின் நெருங்கிய நண்பனின் நாட்கள்....?

லிபிய மண்ணில் அடக்கம் பண்ண புரட்சியாளர்கள், சம்மதிப்பார்களா... குட்டி.

வாற மாதம் கடாபி ஆட்சிக்கு வந்து, 42 வருடங்களாகின்றது. அதுக்குள்ளை, ஆளை அமத்த வேணும். :icon_idea:

அடக்கம் பண்ணுறாங்களோ இல்லையோ, ஆனால் ஆளை அமைத்த வேணும், அப்பத்தான் கடாபியின் தோஸ்த்துகளுக்கு ஒரு பாடமாக அமையும் :icon_idea:

  • தொடங்கியவர்

கடாபியி ஒரு மகன் விடுதலையாளர்களின் கையில்

  • தொடங்கியவர்

-- திரிப்போலிக்குள் புகுந்துள்ள கிளர்ச்சியாளர்கள் சிறிய எதிர்ப்பையே சந்தித்தனர்.

-- ஒபாமா பதவியை விட்டு இறங்க வேண்டுகோள்.

-- இன்னும் சில மணித்தியாலங்கள் இல்லை நாட்களில் வருட கடாபி ஆட்சி முடிவுக்கு வரும் என நம்பப்படுகின்றது.

-- ஆனால் அதன் பின்னர் நிலைமை என்னவாகும் என்ற பயம் உள்ளது.

Beyond Tripoli’s Cheering, Fears of What’s Next

http://www.nytimes.com/2011/08/22/world/africa/22scene.html

UK Prime Minister David Cameron

It is clear from the scenes we are witnessing in Tripoli that the end is near for Gaddafi.

He has committed appalling crimes against the people of Libya and he must go now to avoid any further suffering for his own people.

Office of French President Nicolas Sarkozy

As the outcome is no longer in doubt, the president of the republic urges Col Gaddafi to spare his people pointless suffering by renouncing without delay what little powers he retains.

Nato Secretary General Anders Fogh Rasmussen

The Libyan people have suffered tremendously under Gaddafi's rule for over four decades. Now they have a chance for a new beginning.

Now is the time for all threats against civilians to stop, as the United Nations Security Council demanded. Now is the time to create a new Libya - a state based on freedom, not fear; democracy, not dictatorship; the will of the many, not the whims of a few.

That transition must come peacefully. It must come now. And it must be led and defined by the Libyan people.

http://www.bbc.co.uk/news/world-africa-14611277

  • தொடங்கியவர்

வீழ்ந்தது லிபியாவின் திரிபோலி: கடாபியின் மகன்மார் கைது

42 ஆண்டுகால ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து லிபியாவின் பல நகரங்களையும் கேணல் கடாபியின் எதிர்பாளர்கள் கைப்பற்றி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை கேணல் கடாபி மறைந்திருக்கும் முக்கிய பகுதி எனக் கருதப்படும் திரிபோலியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கேணல் கடாபியின் படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் பாரிய சண்டை நிலவியதன் பின்னர் திரிபோலி எதிர்ப்பாளர்களின் கைவசமாகியுள்ளது. இந்நிலையில் கேணல் கடாபியின் மகன்களான சைப் அல் இல்ஸாம் மற்றும் சாதி ஆகியோரும் எதிர்ப்பாளர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கேணல் கடாபியின் நிலைபற்றி இதுவரை எந்த செய்திகளும் வெளிவரவில்லை.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/26718-2011-08-22-03-42-31.html

  • தொடங்கியவர்

கடாபியின் மூன்று மகன்மார்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அவர் வாரிசான சாயிப் இஸ்லாம் கடாபி, கடாபியின் வாரிசு என கருதப்பட்டவர்.

இவரின் கைதை உறுதி செய்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இவரை தன்னிடம் ஒப்படைக்கும் படி கேட்க உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கடாபிக்கு ஆதரவு கொடுக்க தயார் என்ற மகிந்த எங்கே

  • தொடங்கியவர்

வாசஸ்தலத்தைச் சூழ மோதல்; 24 மணித்தியாலங்களில் 1300 பேர் பலி

நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலிலிருந்து ஏற்பட்ட மோதல்களில் 1300 பேர் பலியானதாகவும் சுமார் 5000 பேர் காயமடைந்தாகவும் லிபிய தகவல் துறை அமைச்சர் மௌஸா இப்ராஹிம் செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

தலைநகர் திரிபோலியில் இன்னும் 15-20 சதவீதமான பகுதிகளில் கடாபியின் ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கிளர்ச்சிப் படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடாபியின் பாப் அல் அஸீஸீயா மாளிகையிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை வெளிவந்த இராணுவத் தாங்கிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடாபியின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி படைகள் தலைநகர் திரிபோலியில் முன்னேறி வரும் நிலையில் திரிபோலியின் பச்சை சதுக்கப் பகுதியில் நேற்றிரவு மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.அச்சதுக்கத்தில் கடாபியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பச்சை நிறத்திலான லிபிய தேசியக் கொடியை கிளர்ச்சியாளர்கள் கிழித்தெறிந்தனர். இப்பகுதியில் முன்னர் கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சிப் படைகளின் முன்னேற்றத்தை மேற்கு நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கடாபிக்கு எதிரான உத்வேகம் இன்றிரவு இன்றிரவு திருப்புமுனையை அடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 'ஒரு கொடுங்கோலனின் பிடியிலிருந்து திரிபோலி நழுவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் அந்நாட்டு தேசிய பாதுபாப்புச் சபைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக தனது விடுமுறையை சுருக்கிக்கொண்டு லண்டனுக்குத் திரும்பினார். கடாபியின் முடிவு நெருங்கிவிட்டது தெளிவாகியுள்ளது கமெரோன் கூறினார்.

கேணல் கடாபி கடந்த மே மாதத்திற்குமுன் பகிரங்கமாக தென்படவில்லை. எனினும் நேற்று ஞாயிறு இரவும் அவர் வானொலி மூலம் உரையாற்றினார். கிளர்ச்சியாளர்களிடமிருந்து திரிபோலியை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்துமாறு நகர மக்களை அவர் கோரியுள்ளார். கடாபியின் கட்டுப்பாட்டில் அவருக்கு விசுவாசமான சுமர் 65,000 படையினர் இருப்பதாக லிபிய தகவல்துறை அமைச்சர் மௌஸா இப்ராஹிம் கூறியுள்ளார். ஆனால் படையினர் சிலர் கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்துள்ளனர்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/26742--24-1300-.html

சதாம் உஷைனைப் கொன்ரதைப் போல் இஸ்லாமிய பண்டிகை தினத்தன்று இவரும் கொல்லப்படலாம்,

  • கருத்துக்கள உறவுகள்

கடாபிக்கு ஆதரவு கொடுக்க தயார் என்ற மகிந்த எங்கே

அவருக்கே வழியை காணோம் அப்படியிக்கையில் எப்படி .....?

மகிந்தவின் நெருங்கிய நண்பனின் நாட்கள்....?

இவனுடன் சேர்ந்தாலே அவங்களுக்கும் தரித்திரம் பிடிச்ச மாதிரித்தானே.

அடுத்த இலக்கு ஈரான்>>>>>>????????????? ஈரானை அடக்க சொல்லி சவுதி அமெரிக்காவுக்கு நெருக்குதல்.

- லிபியாவில் அல்கைதாவின் கவனத்தை திருப்பி விட்டு ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பாதுகாப்பாக அமெரிக்க எடுக்குமா?

இந்த வெற்றியில் ஈரான் மீது கை வைக்க படுமா?

ஈரானை விடவும் ஒரு முக்கிய நாட்டின் மீது அமெரிக்காவின் கண் இருக்கு அது எந்த நாடு?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இலக்கு ஈரான்>>>>>>????????????? ஈரானை அடக்க சொல்லி சவுதி அமெரிக்காவுக்கு நெருக்குதல்.

- லிபியாவில் அல்கைதாவின் கவனத்தை திருப்பி விட்டு ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பாதுகாப்பாக அமெரிக்க எடுக்குமா?

இந்த வெற்றியில் ஈரான் மீது கை வைக்க படுமா?

ஈரானை விடவும் ஒரு முக்கிய நாட்டின் மீது அமெரிக்காவின் கண் இருக்கு அது எந்த நாடு?

வட கொரியா. அனால் அது அவ்வளவு சுலபமாக அமையாது இந்த விடயம் அமெரிக்காவுக்கும் தெரியும் ............ :lol:

  • தொடங்கியவர்

எப்படி வீழ்ந்தது திரிப்போலி 3 மாதம் விசேட பயிற்சி

லிபியத் தலைநகர் திரிப்போலியை கைப்பற்றுவதற்கான விசேட பயிற்சிகள் போராளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளன என்று நியூயோர்க் ரைம்ஸ் தொவிக்கிறது.

பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல நாடுகள் போராளிகளுக்கான விசேட பயிற்சிகள், அதி நவீன ஆயுதங்கள் போன்றவற்றை வழங்கி தாக்குதலை தூண்டி விட்டுள்ளன. இந்தப் பயிற்சி நடைபெற மறுபுறம் மேலைத்தேய ஊடகங்கள் கவனத்தை திசை திருப்பும் செய்திகளை வெளியிட்டுள்ளன. போராளிகளால் திரிப்போலியை கைப்பற்ற இயலாது என்று அவை கதையளந்து வந்தன.

அதேநேரம் யாரும் எதிர் பாராத வேகத்தில் கடாபி வீழ்ச்சியடைய நேட்டோ நாடுகள் வழங்கிய உதவியே காரணம் என்று போராளிகள் நன்றி கூறினார்கள். நன்கு பயிற்றப்பட்ட போராளிகள் திரிப்போலியில் உறங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

போராளிகள் ஸாவியா நகரில் இருந்து திரிப்போலியைத் தொட்டதுதான் தாமதம் நாலாபக்கங்களில் இருந்தும் புதிய அதிரடித் தாக்குதல்கள் ஆரம்பிக்க கடாபியின் படைகள் கொலகொலத்துவிட்டன. கடாபியின் மகன்கூட தப்பியோட முடியாதபடி மாட்டிக் கொண்டார். ஆயுதக் கொள்கலங்கள் நாட்டில் இருந்த ஏரி வழியாக இரகசியமாகக் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நன்கு திட்டமிடப்பட்ட பாரிய இராணுவ மூளைகள் இந்த வெற்றிக்குப் பின்னால் தொழிற்பட்டுள்ளன. ஏறத்தாழ ஓர் அதிரடித்தாக்குதலில் கடாபி சரிக்கப்பட்டிருக்கிறார்.

http://www.alaikal.com/news/?p=79990

  • தொடங்கியவர்

கடாபி தற்கொலை செய்யமாட்டார் அரசியல் தஞ்சம் கோரலாம்

தோல்வியின் கடைசிப் படிக்கு வந்துவிட்ட கேணல் கடாபி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விகள் மேலைத்தேய ஊடகங்களில் பரவலாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.

தற்போது இவர் ஹிட்லர் கடைசிகாலத்தில் பங்கரில் இருந்ததைப் போன்ற அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எல்லாவற்றையும் ஆறு மாத காலத்தில் பறி கொடுத்து அரிச்சந்திரன் போல மயானத்திற்கு வந்துள்ளார். ஆகவே ஹிட்லர் போல மனைவியுடன் தற்கொலை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஆய்வாளர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். வெனிசியூலா, சிம்பாப்பே, துருக்கி ஆகிய நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு முயற்சி எடுப்பார்.

சர்வாதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை பெற்று எஞ்சிய காலத்தை வாழ்ந்து முடிக்கவே முயற்சிப்பார் என்று ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தாலும் மேற்கண்ட நாடுகள் அவரை சர்வதேச நீதிமன்றுக்கு ஒப்படைக்காமல் வைத்திருக்க முடியாது.

அதேவேனை ருமேனிய சர்வாதிகாரி கயோசிஸ் தானாக சரணடைந்து 1989 ம் ஆண்டு விசாரணையை சந்தித்து மரணமடைந்தது போல ஒரு முடிவை அவர் சந்திக்க நேரிடும என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல திரிப்போலி எரியும்போது பிடில் வாசிக்கக் கூடிய கோமாளித்தனமான மூளையுடைவர் கடாபி. அவர் சாகுமளவிற்கு போக மாட்டார். அச்சத்தினால் மற்றவர்களை கொல்லும் உளவியல் நோயாளியான கடாபி தான் தற்கொலை மூலம் மரணமடைய அச்சமடையும் சர்வாதிகாரிகளின் வரிசையிலேயே வருகிறார் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=80001

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலிற்கு பின்னால் கிளர்ச்சிக்காரர்களிற்கான பயிற்சி ஆயுதம் வழிநடத்தல்களில் பிரான்சின் உளவுத்துறைக்கு பெரிய பங்கு உண்டு. தாங்குதல்கள் தொடங்கியதுமே இந்தத் தடைவை திரிப்போலி வீழ்ந்துவிடும் என பிரான்ஸ் ஊடகங்களில் செய்திகள் வெளிவரத்தொடங்கி விட்டிருந்தது.அதனை பிரான்சின் வெளிநாட்டமைச்சரும் உறுதி செய்திருந்தார்.

  • தொடங்கியவர்

உலகிலேயே அதி சிறந்த மசகு எண்ணெயை லிபியா கொண்டுள்ளது. அதாவது குறைந்த செலவில் சுத்திகரிக்கப்பட்டு பாவனை செய்யக்கூடியது. இந்த மசகு எண்ணெயை மேற்கு ஐரோப்பா குறிவைத்துள்ளது. அதைவிட நிலவாயுவும் உள்ளது. சீனாவே இதில் நட்டமடைந்துள்ளது, கடாபியுடன் வளர்த்த உறவு போய்விட்டது.

இந்த வளங்களை இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளே அதிகளவில் 'அனுபவிக்கும்' என கூறப்படுகின்றது.

அதேவேளை ஏற்கனவே பல இனக்குழுமங்களை கொண்ட லிபியாவில் யார் எண்ணெய் குதங்களை கட்டுப்படுத்துவது என்ற போட்டி தொடங்கிவிட்டது. இதனால் மேற்குலகம் இன்னும் சில நாட்களில் லிபியாவில் 'அமைதியை' தேடி பல நகர்வுகளை மேற்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இலக்கு ஈரான்>>>>>>????????????? ஈரானை அடக்க சொல்லி சவுதி அமெரிக்காவுக்கு நெருக்குதல்.

- லிபியாவில் அல்கைதாவின் கவனத்தை திருப்பி விட்டு ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பாதுகாப்பாக அமெரிக்க எடுக்குமா?

இந்த வெற்றியில் ஈரான் மீது கை வைக்க படுமா?

ஈரானை விடவும் ஒரு முக்கிய நாட்டின் மீது அமெரிக்காவின் கண் இருக்கு அது எந்த நாடு?

அடுத்தது சிரியா. அவர்கள் தான் கணக்காக முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.ஈரான்,வடகொரியாவுடன் இராஜதந்திரப்போர் செய்யத்தான் மேற்குலகம் விரும்பும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.