Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெந்தயக் கீரை ரொட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெந்தய கீரை: நீங்களை வீட்டில் முளைக்க வைக்கலாம் சின்ன பொட் இல், ஒர் மாதத்தில் அறுவடைக்கு ரெடி, வெந்தயத்தை ஊற போட்டு விதைத்தால் விரைவில் வளரும்.

வெந்தய கீரையில் பல கறிகள் செய்யலாம் & நல்ல சத்தான உணவு

இது வெந்தயம் மாதிரி கயர்ப்பா இருக்காது, நல்ல ருசி, சிறுவர்கள் & கர்ப்பினி பெண்களுக்கு நல்லது

தேவையான பொருட்கள் :

கீரை- ஒரு கட்டு

மைதா மாவு - ஒரு கோப்பை

கோதுமைமாவு- முக்கால் கோப்பை

கடலைமாவு- கால் கோப்பை

மிளகாய்த்தூள்- அரைத்தேக்கரண்டி

சீரகம்- அரைத்தேக்கரண்டி

மஞ்சத்துள்- கால்த்தேக்கரண்டி

உப்பு- காலத் தேக்கரண்டி

எண்ணெய்- கால்க்கோப்பை

செய்முறை :

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைக்கவும்.

மாவு வகைகளை ஒன்றாக கலந்து அதில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பைச் சேர்த்து ஜல்லடையில் ஜலித்து வைக்கவும்.

பின்பு அதில் சீரகம் மற்றும் கீரையைப் போட்டு கலந்து,

சிறிது சிறிதாக நீரை தெளித்து பிசையவும்.

சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

பின்பு அதை சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி மெல்லியதாக தேய்க்கவும்

பின்பு சூடான தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும்.

ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு சுட்டெடுக்கவும்.

சுவையான வெந்தய கீரை ரொட்டி தயார்.

Note:

methi20roti20038.jpg

Uploaded with ImageShack.us

நன்றி :http://www.manoharimandram.com/index.php?option=com_k2&view=item&id=215&Itemid=11&lang=ta

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், இணைப்புக்கு நன்றி. வெந்தயக்கீரை மேற்கு நாடுகளில் எடுக்க முடியுமா??.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார், இணைப்புக்கு நன்றி. வெந்தயக்கீரை மேற்கு நாடுகளில் எடுக்க முடியுமா??.

ஆமாம் நுணாவிலன், இங்கு விற்கிறவர்கள் fresh (WoolWorth) ஆக,

அல்லது குளிருட்டிய கீரைகள் வாங்கலாம் எந்த இந்தியன் கடைகளிலும், வீட்டில் வளர்த்தால் இன்னும் நல்லது. கீழே உள்ள பெயர்களை பாவித்து கேட்டால் தருவார்கள்

Fenugreek: Latin for "Greek hay" was originally cultivated as a fodder for cattle. It is used both as a herb (fresh / dried leaves) and as a spice (seeds). Fenugreek belongs to the legume family (Fabaceae - the family covering lentils, peas and beans).

India (particularly Rajasthan) is the largest producer of fenugreek in the world. In most Indian languages, fenugreek is known by the same name ' Methi" / (Menthi : Sanskrit)

(Venthiyam : Tamil).

Culinary Uses of fenugeek leaves : Fresh leaves are used across India like any other edible green. They are cooked into a huge array of curries. Dried leaves ( Kasuri Methi) are especially flavourful and a few pinches can be added to almost any north Indian curry, turning them into methi curries.

Medicinal Uses: Fenugreek is one of the world's oldest medicinal herbs. Cooked leaves are rich in iron and help prevent anemia. A paste of leaves can be used as tan external ointment to treat swelling, pain or burns. The paste is also used as a hair vitalizer, when rubbed into the scalp before taking a bath. The same paste can be used as a face pack and is believed to revitalize skin, keeping it fresh and young.

Buying Fenugreek leaves :

1. Choose fresh looking leaves without discolouration, holes etc. Avoid wilted leaves.

2. Early morning / late evening are usually the best time to buy them in India as the fresh leaves get delivered to cities twice a day.

3. Wash leaves well to remove dirt and soil sticking to them. Add them to a colander and wash them under running water

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு உடையார்,

இங்கு லண்டனில் பெரும்பாலான கடைகளில் வெந்தயக்கீரை கிடைக்கும் நானும் செய்து பாக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், இணைப்புக்கு நன்றி. வெந்தயக்கீரை மேற்கு நாடுகளில் எடுக்க முடியுமா??.

இந்தியக்காரர் மெதிக்[methi] கீரை என்று சொல்லுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், இணைப்புக்கு நன்றி. வெந்தயக்கீரை மேற்கு நாடுகளில் எடுக்க முடியுமா??.

ஓம் நுணா அண்ணா கனடாவில் எல்லாம் வெந்தயக் கீரை வாங்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய்...யா............ஒ கனடால வாங்கலாமா? அப்ப சரி வாங்கிட்டா போச்சு.........

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி உடையார்.

இன்று சிறிய சட்டியில் வெந்தயத்தை முளைக்க வைக்கப் போகின்றேன்.

குளிர் தொடங்க முதல், முளைக்க வைத்தால் நல்லது.

இரவில் வெந்தயத்தை ஊறப் போட்டு, காலையில் வெந்தயத் தண்ணியை குடித்து கொஞ்சம் வெந்தயத்தையும் மென்று சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள். சில நாட்களில் மீதமுள்ள வெந்தயத்தில் முளை வரும். அதனை ஒரு சிறிய சட்டியில் நட்டால், சில கிழமைகளில் வெந்தயக் கீரை தயார். இதனை சுண்டல் செய்து சாப்பிடலாம். கோழிக் கறிக்குப் போட்டுச் சமைத்தாலும் நன்றாக இருக்கும். இந்தியக் கடைகளிலும் 'மெத்தி' இல்லை 2 ,3 கட்டு ஒரு பவுண்டுக்கு விற்கிறார்கள்.

வெந்தயக்கீரையை வரை செய்தும் சாப்பிடலாம். சற்று கயர்ப்புச் சுவையுடன் அகத்திகீரை போல் இருக்கும்.

தப்பிலி, இப்படியா... இருக்கும் வெந்தய இலை. இங்கு கடைகளில் நான் காணவில்லை.

fenugreek.jpgfenugreek-what-are-fenugreek-health-benefitsc-fenugreek-medicinal-values-health-information-of-fenugreek-health-benefits-of-fenugreek.jpg

தப்பிலி அண்ணாவைத் தான் கேள்வி கேட்டுள்ளீர்கள் இருந்தாலும் பதில் தெரிந்தவர்கள் சொல்வதில் தப்பில்லைத் தானே...உங்கள் கேள்விக்கு உரிய பதில்...ஆம். பொதுவாக சைனீஸ் சுப்பர்மார்க்கட கடைகளில் கிடைக்கும்..

நன்றி யாயினி,கிட்டத்தட்ட இதே..... இலை வடிவமைப்புடன் Feld salat ஒரு சலாட் இலை எல்லா மரக்கறி விற்கும் கடைகளிலும் கிடைக்கும். அது தான் எனக்கு சந்தேகமாக இருந்தது.

BIO19.jpg

நன்றி யாயினி.

தப்பிலி, இப்படியா... இருக்கும் வெந்தய இலை. இங்கு கடைகளில் நான் காணவில்லை.

fenugreek.jpgfenugreek-what-are-fenugreek-health-benefitsc-fenugreek-medicinal-values-health-information-of-fenugreek-health-benefits-of-fenugreek.jpg

இதுதான் இலை.

பச்சை இலையாக (சலட்) ஆகச் சாப்பிட்டுப் பார்க்கவில்லை. ('Feldsalat')

போனசாக ஒரு நற் செய்தி

வெந்தயக் கீரையை (fenugreek) ஜேர்மன் இல் மொழிபெயர்க்க தேடிப் பார்த்த பொழுது கிடைத்தது.

http://gardenofeaden.blogspot.com/2011/06/improve-your-sex-life-with-fenugreek.html

உடையார் இணைப்பிற்கு நன்றி பார்க்க நன்றாக உள்ளது, அது சரி ஏன் மூன்று விதமான மாவுகளைச் சேர்க்க வேணும்? ஒரு மாவில (சப்பாத்தி மாவில) மட்டும் செய்ய ஏலாதா? :unsure:

இணையத்தில் தேடிய போது கிடைத்தது...

இன்னொரு முறையில் வெந்தய கீரை ரொட்டி செய்முறை:

http://nisahomey.blo...eek-leaves.html

வெந்தயக் கீரையும் உருளைக் கிழங்குக் கறி செய்முறை:

http://nisahomey.blo...eek-leaves.html

நன்றி யாயினி.

இதுதான் இலை.

பச்சை இலையாக (சலட்) ஆகச் சாப்பிட்டுப் பார்க்கவில்லை. ('Feldsalat')

போனசாக ஒரு நற் செய்தி

வெந்தயக் கீரையை (fenugreek) ஜேர்மன் இல் மொழிபெயர்க்க தேடிப் பார்த்த பொழுது கிடைத்தது.

http://gardenofeaden...-fenugreek.html

^_^ இனி வெந்தயக் கீரையத் தேடி கடை, கடையாய் ஏறி இறங்கப் போயினம் யாழ் கள உறவுகள்...

  • கருத்துக்கள உறவுகள்

மைதா மாவு - ஒரு கோப்பை

கோதுமைமாவு- முக்கால் கோப்பை

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

மைதா மா- தவிடு முழுமையாகத் அகற்றப்பட்ட மா என்று நினைக்கிறன்

கோதுமை மா- தவிடு முழுமையாக அகற்றப்படாத மா, (சப்பாத்தி மா) இலகுவில் செமிபாடு அடையக் கூடியது என்று நினைக்கிறன்.

(வெள்ளை மாவை தமிழ் நாட்டில் 'மைதா மா' என்று சொல்லுவார்கள், அதையையே ஊரில் 'கோதுமை மா' என்பார்கள்... அது தான் குழப்பம் என்று நினைக்கிறன்... :rolleyes:)

^_^ இனி வெந்தயக் கீரையத் தேடி கடை, கடையாய் ஏறி இறங்கப் போயினம் யாழ் கள உறவுகள்...

இருபத்தைந்து வீத தள்ளுபடி உண்டாம். :rolleyes:

சுய தொழிலாகவே ஆரம்பிக்கலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதே... இலையை இங்கு,

கீரைக்கட்டு மாதிரி.. பிடியாக விற்பதில்லை.

இலையை மட்டும் கிராம் கணக்கில் பக்கற் பண்ணி விற்பார்கள்.

ஒவ்வொரு வைத்தியரும், அதனை உணவில் சேர்க்கும் படி, பரிந்துரை செய்வார்கள்.

எங்கடை, வெந்தயந்துக்கு இவ்வளவு மவுசா..., உடம்பே... ஃபுல்லரிக்குது.

இருபத்தைந்து வீத தள்ளுபடி உண்டாம். :rolleyes:

சுய தொழிலாகவே ஆரம்பிக்கலாம். :icon_idea:

ஒரு பெட்டியைக் கண்ட உடனே பாத்தி வெட்டி பயிரிடுகிற நீங்களா இதை விட்டு வைக்கப் போறீங்க தப்பிலி? ^_^

இப்பவே பயிர் செய்ய விதை வாங்கியாச்சா? இல்லை இலை, குளையளை வாங்கி குசினிக்க கட்டித் தொங்க விட்டு இருகிறீங்களா?? :lol::D

இதே... இலையை இங்கு,

கீரைக்கட்டு மாதிரி.. பிடியாக விற்பதில்லை.

இலையை மட்டும் கிராம் கணக்கில் பக்கற் பண்ணி விற்பார்கள்.

ஒவ்வொரு வைத்தியரும், அதனை உணவில் சேர்க்கும் படி, பரிந்துரை செய்வார்கள்.

எங்கடை, வெந்தயந்துக்கு இவ்வளவு மவுசா..., உடம்பே... ஃபுல்லரிக்குது.

வெந்தயக் கீரையை முருங்கை இலை சுண்டல் மாதிரி ஒரு சுறாத் துண்டு அல்லது ஒரு மீன் துண்டு போட்டு செய்தால் அந்த மாதிரி இருக்கும்... :wub:

அப்படி செய்ய முடியாட்டி, கொத்தமல்லி தண்ணீர்ல கற்பூரவள்ளி இலையைப் போடுறது போல, ஒரு இல்லை போட்டு குடிச்சு பாருங்கோ... :lol:

ஒரு பெட்டியைக் கண்ட உடனே பாத்தி வெட்டி பயிரிடுகிற நீங்களா இதை விட்டு வைக்கப் போறீங்க தப்பிலி? ^_^

இப்பவே பயிர் செய்ய விதை வாங்கியாச்சா? இல்லை இலை, குளையளை வாங்கி குசினிக்க கட்டித் தொங்க விட்டு இருகிறீங்களா?? :lol::D

முன்பு வெந்தயக் கீரை நிறையப் பயிரிட்டேன். ஒரே சாப்பிட்டு அலுத்து நிற்பாட்டி விட்டேன். இதன் மகத்துவம் தெரியாமல் போய் விட்டது. இனி சலட்டிற்கும் வெந்தயக் கீரைதான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த வெந்தயக் கீரை வறையை 6 மாதத்திற்கு முன் ஒரு அன்ரி வீட்டில் சாப்பிட்டேன் அதன் பிறகு அதன் சுவை பிடித்து விட்டது ஆனால் இதை ஊரில் சாப்பிட்ட ஞாபகம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே வெளில சாப்பிட்டிட்டு இருந்தா எப்ப சமைக்க பழகிறது?

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெந்தயக்கீரையை வரை செய்தும் சாப்பிடலாம். சற்று கயர்ப்புச் சுவையுடன் அகத்திகீரை போல் இருக்கும்.

நேற்று கடைக்குப் போன போது.... வறை செய்யும் ஆசையில் இரண்டு பக்கற் வெந்தயக்கீரை வாங்கி விட்டேன். இங்கு வந்து பதிவைப் பார்த்தால்.... வறை செய்யும் செய்முறையை காணவில்லை. ஆருக்காவது வெந்தயக் கீரை வறை செய்யும் முறை தெரிந்தால்... கீரை வாட முதல் செய்முறையை இணைத்து விடுங்கள் ப்ளீஸ்.a43a.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.