Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரவி விட்ட புற்றுநோய்??????? ......

Featured Replies

breastcancer1.jpg

பரவி விட்ட புற்றுநோய் ----

..... கண்ணால் காண்பதும் பொய்யாம்????

.......... காதால் கேட்பதும் பொய்யாம்????

.............. மட்டுமல்ல ....

.................. தீர விசாரித்து அறிவதும் பொய்யாம்????

இங்கே இதனை கிறுக்கி கொட்ட வேண்டுமா?? இதனால் உனக்கு என்ன ஆகப்போகிறது?? ஏற்கனவே தேவையற்ற பிரட்சனைகள்?? நீ அரசியல்வாதியா?? இல்லை ஊடகவியலாளனா?? அவைகளுக்கு மேல் யாழை கொண்டு செல்பவனுக்கும் தேவையற்ற பிரட்சனைகளை ஏற்படுத்தப் போகிறாயா?? ... பல கேள்விகள் ... கடந்த சில வாரங்களாக விடை தெரியாமல் எழுந்து கொண்டிருக்க ... எழுதுவோம் இல்லை வேண்டாம் என்று குழம்பி கொண்டிருக்க ...

... 25 வருடங்களுக்கு மேலாக வாணளாவ எழுந்து நின்ற விருட்சமோ சரிந்து விட்டது ... இன்று அவ்விருட்சத்தின் வேர்களில் இருந்துதான் நாம் முளைத்திருக்கிறோம் என சொல்லிக் கொண்டு, ஒவ்வொரு கோசங்களை எழுப்பிக் கொண்டு ... நாமும் வளர்ந்து விருட்சமாக போகிறோம் என பல செடிகள் ... ஆனால் எமக்கோ, அச்செடிகள், அவ்வேரிலிருந்துதான் வந்தவைகளோ?? அல்லது எஞ்சியிருக்கும் வேர்களையும் அழிக்க வளர்கப்படுகின்றவைகளோ??? என்று புரியாமல் குழம்பி போயிருக்கிறோம்!!!! ... எம்மை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல போகிறோம் என்றவர்களே எல்லாவற்றையும் அவன் காலில் கொட்டி சரணாகதி அடைந்து விட்டார்கள்!!! இன்று எஞ்சியிருப்பவர்கள்ளும் குழி பறிப்புகள்/முதுகில் குத்தல்களுக்கு மேல் களை எது? பயிர் எது? ... எந்தப் புற்றில் எந்தப் பாம்பு?????? என்று தெரியாமல்/ஆராயாமல்/கண்டு பிடிக்காமல் ... ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை எனும் பெயரில் ...

... வேண்டாம் .... சந்தேகங்கள் தீராமல்? கேள்விகளுக்கு பதில்கள் இல்லாமல்?? ... எல்லாவற்றுக்கும் மேலாக எம்மை நாமே புடம் போடாமல் ... ஒற்றுமை எனும் இன்று எமக்கு உணர்வுபூர்வமாக தெரியும் அச்சொல் .. எம்மை அழிக்கவே நாமே எதிரிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியாகவே முடியும்!!

...

... சிலவாரங்களுக்கு முன் தொலைபேசி அழைப்பொன்று, எடுத்தால் ... கேள்விப்பட்டனீங்களோ, இந்த முறை லண்டனில் மாவீரர்நாள் இரண்டாம் (இந்த கிறுக்கல்களே இதனை மையமாக கொண்டுதான் ...)?!?!..

... கூறிக்கொண்டு போகும் போது ... நெஞ்சு கனத்தது ... அப்போ கைத்தொலைபேசியும் அழைத்தது ... சரியடா பின்பு கதைக்கிறேன் என்று கூறிக்கொண்டு கைத்தொலைபேசியை எடுத்தால் .. என்ன இன்னும் வெளிக்கிடவில்லையோ??? ஐந்து மணிக்கு கூட்டமாம், பிந்தி விடுவோம் அல்லோ??? ... சரி இப்ப வெளிக்கிடுகிறேன் ... என்ன அன்று அருகில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிங்கள பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் இரு தலைவர்கள் வருகிறார்களாம் ... என்றுமே கூட்டமைப்பின் ஆதரவாளன் இல்லை!! ஆனால் இன்றோ, அங்கு அவர்கள் அங்கு இருக்க வேண்டும்/செயற்பட வேண்டும், அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும், அவர்களும் இல்லையேல் எம் மக்களின் குரல்கள் அங்கு இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும் என்ற ஆதங்கம்!!

... அங்கு சென்றால், ஐந்து மணிக்கு கூட்டமென்றார்கள் .. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஐந்து மணிக்கு வெளியில் நின்றோம் .. அக்கூட்ட ஒருங்கமைப்பாளர்களையும் காணோம் .... கொஞ்சம் கொஞ்சமாக சிலர் வந்து கொண்டிருந்தார்கள் ... ஆச்சரியமாக இருந்தது .. நாம் தேடித்திரிந்த ஒற்றுமை ஏற்பட்டு விட்டதா???? .... பல முன்னால் புலிகளின் செயற்பாட்டாளர்கள், பல புலிகளின் ஆதரவு அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள்/தலைவர்கள் என கூறுவோர், மாற்றுக்கருத்து தலைவர்கள்/மாமணிகள், தமிழ் பேசும் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகள் என எல்லோரும் ..... அவர்களுடன் எங்கே எம்மக்களின் அவல வாழ்வுக்கு ஏதாவது வழி பிறக்காதா, ஏதாவது நல்லது சொல்வார்களா என்ற அங்கலாய்ப்புடன் சில பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் !!!!

... அங்கு வந்திருந்தவர்களிடையே சில இளைஞர்கள் ... எங்கேயோ இவர்களை பார்த்த ஞாபகம்??? குழம்பிக் கொண்டிருக்க ... பக்கத்தில் நின்றிருந்தவரோ சொன்னார் ... நாம் பிழையான இடத்துக்கு வந்து விட்டோம், ஏதோ பிரட்சனை நடக்கப் போகுது, உதில் நிற்பவர்கள் தான் அண்மையில் மில்ரன் கீன்ஸ் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழர் விளையாட்டுப்போட்டியை குழப்பியவர்கள்!!!. நாம் இங்கிருந்து விலகிப்போவது நல்லது, என்று கூறி அங்கிருந்து அகன்றார்!! ... நாமோ வந்து விட்டோம், மனம் கேட்டவில்லை ... பேசாமல் இருந்து பார்த்து விட்டு போவோம்! ...

... மண்டபத்தினுள் நுளைந்தால் ... மீண்டும் பேராச்சரியம் ... அவ்விளைஞர்கள் மஞ்சல் நிற அங்கிகள் போட்டு சுற்றி வர பாதுகாப்புக் கடமையில் ....!!!!!!!!!!!?????????? ...

... யார் அந்த இளைஞர்கள்??????? ...

... தேடலுடன் ... தொடரும் ....

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அவர்கள் யாரென நாங்கள் தெரிந்து கொள்வோம்

  • தொடங்கியவர்

... அக்கூட்டத்துக்கு வெளியே ஐந்து மணிக்கே வந்து காத்திருத சிலர் கதைத்துக் கொண்டிருந்தனர் ... இருந்து பாருங்கள், இக்கூட்டம் ஆரம்பிக்க ஏழு மணியாகும்!!! அங்கு கேள்விகள் கேட்க என்று பெரும் சந்தர்ப்பம் ஒருவருக்கும் வழங்கப்பட மாட்டாது!! கூட்டம் ஒன்பது மணிக்கு முடிந்திட வேண்டும், இவைகளுக்கு நேரம் பற்றாக்குறை என்று சொல்லுவார்கள்!!! ... கேட்டுக் கொண்டு உள் நுளைந்தால் ... அங்கு GTV நிர்வாகி, அங்கு வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் ... அவ்வரவேற்பு மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு அமோகமாக கிடைத்ததும், தமிழ்த்தேசியவாதிகள் என்போர் பெரிதாக கண்டு கொள்ளப்படாமல் இருந்ததையும் அவதானிக்க முடுந்தது!!

இக்கூட்டமானது ... லண்டன் பகுதியொன்றில் சைவ ஆலயம் எனும் பெயரில் லிமிட்டெட் கொம்பனி ஒன்றை நடாத்தும் வர்த்தக பெருந்தகையின் அனுசரனையுடன் தான் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டாலும், GTV நிர்வாகியே எல்லாமாக அங்கு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். யார் யார் எந்த இருக்கையில் இருத்தல் வேண்டும்! எப்போது கூட்டம் ஆரம்பிக்க வேண்டும்!! எப்போது இடைவேளை விடப்பட வேண்டும்! எப்போது கூட்டம் நிறுத்தப்பட வேண்டும்! ... போன்ற எல்லாமே GTV நிர்வாகியின் சைகையிலேயே நடந்தேறியது!!

... சரி விடயத்துக்கு வருவோம் ... என்ன ஆச்சரியம் என்றால் ... அங்கு மஞ்சல் நிற சட்டைகள் போட்டபடி காவலுக்கு நின்ற காவல் தெய்வங்களின் நடமாட்டங்கள்/செயற்பாடுகளையும் இந்த GTV நிர்வாகியே டைரக்டும் செய்த வண்ணமாக இருந்தார்!!!!

... கூட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டு வெளியேறுகையில், அவர்கள் தொடர்பாக .... ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? என்று பல விடைகள் தெரியாத கேள்விகள் ...

* அன்று காவலுக்கு ஏன் அந்த இளைஞர்கள் வந்தார்கள்?

* அவர்களுக்கும் கூட்டமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா?

* அவர்களுக்கும் GTV நிர்வாகத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

* இவ்விளைஞர்கள் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படுகிறார்களா?

* இவர்களை பிழையான வழியில் சிலர் செயற்படுத்த முனைகிறார்களா?

* இவர்கள் பிழையான கைகளுக்குள் வீழ்ந்து விட்டனரா?

... குழம்பியபடி சிலர் அங்கு முனுமுனுத்ததை காணக்கூடியதாக இருந்தது!! ...

... வெளியே வந்து, அங்கு நின்றிருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினரிடம், உங்கள் பாதுக்காப்பில் கவலையீனமாக இருந்து விடாதீர்கள், உங்களைத்தான் அங்கு சிங்களம் குறி வைத்திருக்கிறது, உங்கள் பாதுகாப்பில் அவதானமாக இருக்கும் அதேநேரம், அங்குள்ள மக்களின் அவலங்களை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள் ... என மனதில் எழுந்ததை கூறி விட்டு நகர, ஓர் நண்பர் இடை மறித்தார்/கூறினார் ... நானும் சில வாரங்களுக்கு முன்னுக்கு. இங்கு அருகே இருக்கும் பி.ரி.எப் காரியாலத்தில் ஓர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன், அங்கு இதே இளைஞர்கள் வாயிற்கதவை திறந்து மூடியபடி இருந்தார்கள், என்றார் ... ஆச்சரியம்!!! ... பி.ரி.எப்பினுள்ளும் இவர்களா?????????

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலுடன் கிளம்பியிருக்கும் பூதங்கள் ... புலமெங்கும் இவ்விளைஞர்களையும் உள்வாங்கி ... !!!!!!!!!!

... இல்லையாம் ... இந்தப்பூதங்கள் முள்ளிவாய்க்காலுக்கு முன்னமே புலமெங்கும் வந்தோ/தோன்றியோ விட்டனவாம் ... நாமோ/எம்மை வழிநடத்திய புலத்து வீராதி வீரத்தலைவர்கள் நித்திரையில் இருந்து விட்டோம்!!! ... தங்களுக்குள் என்று ஒரு வட்டத்தை போட்டு ... ஒரு பாரிய அழிவிற்குப்பின்னரும் ... நிதிகள், அரசியல் செயற்பாடுகள் ... எல்லாவற்றிலும் வெளிப்படைத்தனமையை கடைப்பிடிக்க தவறிய சந்தர்ப்பத்தை பாவித்து இப்பூதங்கள் கிளப்பப்பட்டு இருக்கின்றது!!!

யார் இந்த இளைஞர்கள் ...???????

* நாம் முள்ளிவாய்க்காலில் இறுதி வரை தேசிய தலைமையுடன் நின்றோம்!!

* புலத்தில் கடந்த காலங்களாக நடைபெற்ற நிதி மோசடிகளை சீர் செய்ய வந்திருக்கிறோம்!!

* நாம் ஒற்றுமை எனும் தாரக மந்திரத்தோடு அனைவரையும் அரவணைத்து செல்லவுள்ளோம்!!!

... போன்ற கோஷங்களுடன்!!!!!!!!!!!!!!!!!!!!!! ...

* இன்று தலைவருக்கு அஞ்சலி செய்யத்துடிக்கும், தலைமை மேல் மாறா பற்றுக்கொண்ட இவ்வீரர்கள், இறுதி மட்டும் தலைமையுடன் நின்றவர்களாயின், ஏன் அந்த தலைமையை உங்களால் காக்க முடியவில்லை??

* இறுதி மட்டும் தலைமையுடன் நின்ற நீங்கள், தலைவர் கொல்லப்பட்டவராயின், நீங்கள் எவ்வாறு தப்பினீர்கள்? உங்களுடன் ஏன் தலைவரை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியவில்லை?

... அதற்கு மேல் ... இந்த இளைஞர்களில் பலர் அண்மையில் ஐரோப்பா எங்கும் கொண்டு வரப்பட்டவர்கள்!! ... அவர்கள் இங்கு வந்த சில காலங்களுக்கு உள்ளேயே ஐரோப்பிய தேசமெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நடமாடித்திரிகின்றனராம்!! ...

* இவர்கள் கடவுப்பத்திரங்களுடனா நாடுகளுக்குள் பயணிக்கிறார்கள்?

* இவர்கள் இந்நாடுகளுக்கு அகதி அந்தஸ்து கோரி வந்தவர்களாயின், இவர்களுக்கு குறித்த காலத்துக்கு உள்ளேயே கடவுப்பத்திரங்களை விநியோகித்தவர்கள் யார்?

* இவர்கள் புலிகளின் களத்தில் நின்ற போராளிகள் தாமென கூறுகிறார்களாம், அப்படியாயின் இவர்களை இவ்வைரோப்பிய தேசங்கள் இவர்களின் அகதி அந்தஸ்தை ஏற்று அரசியல் செய்ய அனுமதித்து இருக்கின்றனவா?

* .......

... எதை எதையெல்லாம் ... முள்ளிவாய்க்காலுக்கு பின் நாம் எதிர்பார்த்தோமோ .. அதை அதையெல்லாம் கோஷங்களாக வைத்து ... புலத்தில் செயற்பட்ட முன்னைய கும்பலின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்டோர் / யுத்த நிறுத்த காலத்தில் புலமெங்கும் தோன்றிய தேசியத்தின் தலைவர்களாம் / விலைபோன புலிகளின் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ... வீசிய வலையில் .... எல்லாவற்றுக்கும் விசிலடித்து பழகிவிட்ட நாங்கள் / எங்கே இப்போராட்டத்தை அழிய விடாது யார் முன் கொண்டு செல்லப்போகிறார்கள் என்ற அங்காலாய்ப்புடன் காத்திருந்தோர் / நம் எதிர்கால வாழ்வுக்காக மண்ணோடு மண்ணாக போனோரின் கனவுகள் நிறைவேறாதா என்ற ஆதங்கத்தோடு வாழும் பலர் ... இலகுவாக வீழ்த்தப்படுகிறோம்!!!

... இவர்களின் பின்னணிகள் ..???? ... தேடுவோம் ...

நல்லையன் உங்களின் இக்கருத்துகள் 100 விகிதம் உண்மை இது தெரியாமல் பலர் தாங்கள் குழம்பியது இல்லாமல் பலரையும் குழப்புகின்றனர். சந்திப்பு என்ற போர்வையில் சனிக்கிழமைகளில் ஆடும் சீவாசும் நனையுது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர் அவர்களை குழப்ப பலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் அதின் ஒரு அங்கமாக இதுபோன்ற நிகழ்வுகள் அமையலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

வந்த கூட்டமைப்பு உறுப்பினரில் ஒருவர் சுமந்திரனா??. இவர் மிக குறுகிய காலத்தில் சம்பந்தருக்கு நெருக்கமாக வந்த சம்பந்தரின் வலது கையாம்.

கூட்டமைப்பும் , றோவும் சேர்ந்து புலம்பெயர்ந்த மக்களின் கட்டமைப்பின் சொற்களை கேட்காமல் தமது சொற்படி ஆட வைக்க முயற்சிக்கிறார்கள்.சம்பந்தரின் செவ்வியில் இதனை காணக்கூடியதாக இருந்தது.அதாவது கூட்டமைப்பின் சொற்களை புலம்பெயர் கட்டமைப்புக்கள், மக்கள் கேட்க வேண்டும்.

றோ "விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதில் வல்லவர்கள்" என்பது தெரிந்ததே.

மஞ்சள் காவி தரித்தவர்கள் றோவின் பணம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம். ஜி.ரி.வி இவர்களுக்கு லண்டனில் பாலம் அமைத்து கொடுக்க உதவலாம்.

ஒரு சிறு உய்த்தறிவு.

  • கருத்துக்கள உறவுகள்

வந்த கூட்டமைப்பு உறுப்பினரில் ஒருவர் சுமந்திரனா??. இவர் மிக குறுகிய காலத்தில் சம்பந்தருக்கு நெருக்கமாக வந்த சம்பந்தரின் வலது கையாம்.

கூட்டமைப்பும் , றோவும் சேர்ந்து புலம்பெயர்ந்த மக்களின் கட்டமைப்பின் சொற்களை கேட்காமல் தமது சொற்படி ஆட வைக்க முயற்சிக்கிறார்கள்.சம்பந்தரின் செவ்வியில் இதனை காணக்கூடியதாக இருந்தது.அதாவது கூட்டமைப்பின் சொற்களை புலம்பெயர் கட்டமைப்புக்கள், மக்கள் கேட்க வேண்டும்.

றோ "விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதில் வல்லவர்கள்" என்பது தெரிந்ததே.

மஞ்சள் காவி தரித்தவர்கள் றோவின் பணம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம். ஜி.ரி.வி இவர்களுக்கு லண்டனில் பாலம் அமைத்து கொடுக்க உதவலாம்.

ஒரு சிறு உய்த்தறிவு.

சுமந்திரன் சம்மந்தரின் வழர்ப்பு பிள்ளையாமே ...................? :icon_idea:

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்

வந்த கூட்டமைப்பு உறுப்பினரில் ஒருவர் சுமந்திரனா??.

... சுமத்திரன் வந்தது முன்பு ... தற்போது வந்தது மாவையும், சிறிதரனும்!

... அங்கு வந்திருந்தவர்களிடையே சில இளைஞர்கள் ... எங்கேயோ இவர்களை பார்த்த ஞாபகம்??? குழம்பிக் கொண்டிருக்க ... பக்கத்தில் நின்றிருந்தவரோ சொன்னார் ... நாம் பிழையான இடத்துக்கு வந்து விட்டோம், ஏதோ பிரட்சனை நடக்கப் போகுது, உதில் நிற்பவர்கள் தான் அண்மையில் மில்ரன் கீன்ஸ் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழர் விளையாட்டுப்போட்டியை குழப்பியவர்கள்!!!. நாம் இங்கிருந்து விலகிப்போவது நல்லது, என்று கூறி அங்கிருந்து அகன்றார்!! ... நாமோ வந்து விட்டோம், மனம் கேட்டவில்லை ... பேசாமல் இருந்து பார்த்து விட்டு போவோம்! ...

... மண்டபத்தினுள் நுளைந்தால் ... மீண்டும் பேராச்சரியம் ... அவ்விளைஞர்கள் மஞ்சல் நிற அங்கிகள் போட்டு சுற்றி வர பாதுகாப்புக் கடமையில் ....!!!!!!!!!!!?????????? ...

... யார் அந்த இளைஞர்கள்??????? ...

... தேடலுடன் ... தொடரும் ....

http://www.northampt...years_1_3028605

Edited by சுந்தரம்

  • தொடங்கியவர்

புலத்தில் மாவீரர் நாளை குழப்புவோம்!!!!!?????........

... தொலைபேசியில் ... அண்ணா GTV பார்த்தனீங்களோ? அங்கு BTFகாரர்கள் இந்தமுறை ... கடந்த காலங்களில் விட்ட தவறுகளை சீர்செய்து மாவீரர்தினம் லண்டனில் கொண்டாடப் போகிறார்களாம்!!! ...

..... என்ன தவறாம்??

... இதுவரை காலமும் கணக்கு காட்டவில்லையாம் , இந்தமுறை காட்டப் போகிறார்களாம்!!!!!!?????? ... ஆக்ரோஷமான கோஷம் ... கேட்காதவர்கள் கேட்க / பார்க்காதவர்கள் பார்க்க / விழாதவர்கள் பாய்ந்து விழும் ... அற்புதமான கோஷம்!!!

... தொடர்ந்தார் ..அண்ணா, உந்த கணக்கு சீர் செய்யப் போகிறவர்களில் சில தலைவர்கள் உட்பட பல தொண்டர்கள் கடந்த காலங்களில் வசூலில் ஈடுபட்டவர்கள் தானாம், .....

* வணங்கியமண் விட்டவர்களும்,

* காத்தடிக்குது / மழையடிக்குது என்று புனர்வாழ்வுக்கு பெற்றவர்களும்,

* இலவச மருத்துவம் செய்ய போகிறோம் என்றவர்களும்,

* இறுதி யுத்தத்துக்கு தலைக்கு ஆயிரம் அறவிட்டவர்களில் சிலரும் அடங்குகிறார்கள் தானாம்,

... ஆனால் இப்ப இவர்கள் புனர்வாழ்வு பெற்று வந்து விட்டார்களாம் ... சீர் திருத்தப் போகிறார்களாம்!!!??? ....

.....

... போராட்ட ஆரமப காலங்களில், புலம்பெயர் தேசங்களில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளை குழப்ப சிங்களம் தலை கீழாக நின்றது! ... மாற்றுக்கருத்து மாணிக்கங்களை இறக்கி விட்டு .... எல்லா எதிப்பாட்டமும் போட்டும் ... அவியவில்லை ... போடப்போடத்தான் சனமும் சமுத்திரமாக திரண்டது ..... ஒட்டு ஓணானுகளை கொண்டிழுத்த பழைய பாணியை விட்டு .. குழப்பலாம் என்ற சொல்லுக்கு ஒத்த கருத்தை தேந்தெடுத்தது .... சேம்சைட் விளையாடியே கோல் அடிக்கலாம் என்ற நிலை எடுத்ததன் விளைவுகளே ........................ இந்தக் கோஷங்கள்!

... முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின், எங்கள் ... கனவுகள் கலைந்தபோது எம்மில் பலரின் கோபங்கள் விடுதலைப் புலிகள் மீதும், அவர்களின் இலக்கற்ற அனைத்துலக செயலகம் மீதும் பாய்ந்தது! அது எதிர்பார்ப்புகள் அழிவுகளில் செனறு ஏமாற்றமாகி விரக்தியின் உச்சத்தில் வெளிவந்தவை ... அது மனித இயல்பின் அடிப்படையில்! ... அதையே தணலாக்கி நெருப்பாக்க ... எண்ணை ஊற்றி .... ... ....

.... யுத்த நிறுத்த காலங்களில் இங்கு புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தகராக திரிந்த முன்னால் போராளிகள் சிலர் ... இன்று, இன்றைய தமிழ் தேசியத்தின் தலைவராக சிங்களத்தின் பாதுகாப்பில் வாழ்பவரின் வலது/இடது கரங்கள் ... முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு முடிவடைவதற்கு முன்னமே , இங்கு மாவீரர் நாளை குழப்ப வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று செயற்பட தொடங்கினார்கள், என்ன என்றால்? ... கிட்டத்தட்ட அதே கோஷம்!!!!!!!!!! .... காசுக்கு தானடாப்பா உந்த மாவீரர் நாளை வைக்கிறாங்கள் ... இனி விடக்குடாது!!!!! ...

* துண்டுப்பிரசுரம் அடித்து விடப்போகிறோம்,

* பொது இடத்தில் .... லண்டனில் உள்ள பார்க் ஒன்றில் ... நினைவு கோரப் போகிறோம்,

* கிழக்கு மாவீரர்களை தனியே நினைவு கோரப் போகிறோம்,

..... இப்படி அவர்கள் நுனிக்காலில் ஓடித்திரிய ... ஏககாலத்தில் கேணல் ராமையும் ... காட்டுக்குள் இருந்து பறவைகளின் ஓசையுடன் கொண்டு வந்து இறக்கினார்கள், ...... கொண்டு வந்த வேகத்திலேயே அது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று போட்டுது!!!

... என்ன ... உந்த புதுப்புது திருப்பங்களுடைய எப்பிசோட்டுகளுக்கு கதை/வசனம்/டைரக்சனும் ... புத்தம் புதிய இரண்டெழுத்து தேசியத்தலைவர் என்கிறார்கள்!!!! ... தயாரிப்பு மட்டும் சிங்களவனாம்!!!!

... உதன் கிளைமாக்ஸ் தான் இப்ப நடக்கத் தொடங்கியிருக்குது ....

உதில் கதாநாயகர்கள், நடிகர்கள், உப நடிகர்கள்:, தொழில்நுட்ப கலைஞர்களை தேடி அறிமுகப்படுத்த வேண்டாமா?????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 2 எழுத்து யாருப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 2 எழுத்து யாருப்பா....

கே.பி தான் . வேறு யாராக இருக்க முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து இரண்டரை வருடங்களாகியும், இதுவரை புனர்வாழ்வைப் பெற்று சமூகத்தோடு இணைந்து கொள்ளாமல் தொடர்ந்தும் உறண்டிக்கொண்டிருக்கும் நெல்லையனைத் தகுந்த புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் யாராவது சேர்த்துவிடுமாறு தயை கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன். :icon_mrgreen:

நெல்லை ................... இது ஒண்ணும் நீங்க தேசபற்றில ...குமுறுறமாதிரி தெரியல!

இது மாவீரர் வாரம் நெருங்கிவரும் நாள்...

இந்த நேரத்திலயாவது,, குப்பைகள மாறி மாறி கிண்டுற ,,, கேணதனமான வேலைகளவிட்டு.......

அட்லீஸ்ட்............ ஒருவாரமாவது,, மெளனமாக இரு(க்க)ந்து ,,,அந்த ஆத்மாக்களை கெளரவபடுத்துவோம்!

கூட்டமும் மேடையும் .,,, தேவையே இல்ல... , அவர்களை கெளரவப்படுத்த,,, ஒரு மெழுகுதிரி போதும்!!

  • தொடங்கியவர்

நெல்லை ................... இது ஒண்ணும் நீங்க தேசபற்றில ...குமுறுறமாதிரி தெரியல!

தல..வர், நான் மட்டுமல்ல, ... உங்கு ஒருதருமே தே...ப என்பது மணத்துக்கும் இல்லை! ... எங்கே/எப்படி விற்கலாம் என காத்துக் கொண்டிருக்கிறோம்!!... இங்கு ஒரு குமுறலும் இல்லை, நாட்டின் நடப்புகளை இங்கு கொட்டுகிறோம் ... மலியும் ... சந்தைக்கும் வரும் ... என்ன அதற்கு முன் எல்லாம் .... ....!!???

  • தொடங்கியவர்

நெல்லை ...................

இது மாவீரர் வாரம் நெருங்கிவரும் நாள்...

இந்த நேரத்திலயாவது,, குப்பைகள மாறி மாறி கிண்டுற ,,, கேணதனமான வேலைகளவிட்டு.......

அட்லீஸ்ட்............ ஒருவாரமாவது,, மெளனமாக இரு(க்க)ந்து ,,,அந்த ஆத்மாக்களை கெளரவபடுத்துவோம்!

கூட்டமும் மேடையும் .,,, தேவையே இல்ல... , அவர்களை கெளரவப்படுத்த,,, ஒரு மெழுகுதிரி போதும்!!

உண்மையான வார்த்தைகள் ... ஆனால் உதை நெல்லையை கேட்காமல் .. உந்த இரண்டாக பிரிக்கிறவர்களிடம் கேட்க வேண்டியதல்லோ??? ... இங்கு புலத்தில் ...

* 60 வருடகால இன அழித்தொழிப்புகளுக்கான நீதி தேடல்

* சிங்களத்தின் யுத்தக்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள்

* சிங்களத்தின் கலாச்சார அழிப்புக்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள்

* .....

... என பலவற்றுக்கான செயற்பாடுகளை செய்ய வேண்டிய நேரத்தில் ... இங்கு மாவீரர் நாள் குழப்பம் வேண்டுமா?????????? இல்லை, அதுதான் தலைமைச்செயலகம்/புனர்வாழ்வுக்கழகம்/GTV/BTF போன்றவற்றின் இறுதி இலக்கா?????????? .... உதை அங்கு கேளுங்கள் ... தயவு செய்து!!!!!

... அதற்கு மேல் மாவீரர்நாள் இரண்டில் எதற்கு போவதென்ற குழப்பத்தில் இப்ப பலர் ... அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்????

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்து இரண்டரை வருடங்களாகியும், இதுவரை புனர்வாழ்வைப் பெற்று சமூகத்தோடு இணைந்து கொள்ளாமல் தொடர்ந்தும் உறண்டிக்கொண்டிருக்கும் நெல்லையனைத் தகுந்த புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் யாராவது சேர்த்துவிடுமாறு தயை கூர்ந்து வேண்டிக்கொள்கின்றேன். :icon_mrgreen:

பரவி விட்ட புற்றுநோய். அவருக்காக அவர் எழுதியது தானே....

உண்மைதான் தமிழ் இனத்திற்கு இவர் ஒரு புற்றுநோய்.

  • தொடங்கியவர்

... அவருக்காக அவர் ...

ஆஆஆஆஆஆங் ... :icon_mrgreen:

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... வேலியில் நின்ற ஓணானை, மடிக்குள் தூக்கிப் போட்டால் ...

.... தற்போது புலத்துக்கு மீட்பவர்களாக வந்துள்ள / கொண்டுவரப்பட்ட (எவ்வாறு வந்தார்கள் / யாரால் அழைத்து வரப்பட்டார்கள் ?????.. ) இந்த தலைமைச்செயலக இறைதூதர்களுடனும், 85இற்கு பின் யாழை விட்டு ஓடிய பின் இணைந்து / இன்று தேசிய தலைமை இலக்குடன் அலையும் புணர்வாழ்வு பேரின்பம் பெற்றவர்களுடனும் இணைந்திருக்கும் ... புலத்து இறை அடியார்களை ... யுத்த நிறுத்த காலத்தில் இழுத்து வந்து தமிழ் பேருலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை .... வாங்கப்படவோ / விற்கப்படவோ முடியாததை பணத்துக்குக்காக கூறு போட்டு விற்ற புலத்து காஸ்ரோக்களையே சாரும்!!!!

... முன்பு ஒருதரம் குறிப்பிட்டதுபோல் ... யுத்த நிறுத்த காலத்தில் ..

* ஆயிரம் கொடுத்தவன், இங்கு ஆதரவாளன் பட்டம்!

* ஐயாயிரம் கொடுத்தவன், அந்த நாட்டு தலைமை பூசாரியுடன் நேரடியாக கதைக்கும் கவுரவம் கிடைக்கும்!

* பத்தாயிரம் கொடுத்தால், நாடு வரவேற்குமாம்!

* ஐம்பதுக்கு மேல் கொடுத்தால், தலைவருடன் இருந்து உணவருந்தும் கவுரவம்!!

... இருந்த உண்மை நிலைமை! ... எதிரியானவன் பல மில்லியன் கணக்கில் கொட்டி வாங்கிய ஆயுதம் கொண்டு செய்ய முடியாமல் இருந்ததை, சில ஆயிரங்கள் புலத்தினூடே எறிந்து சாதித்தான்!! ... பணம் .. பணம் .. பணத்துக்காக பிணங்களை எல்லாம் அரவணைத்தவர்கள் இவர்களே! ..

... அன்று விதைத்தவைகளை, இன்று இந்த புலத்துக்காஸ்ரோக்கள் அறுவடை செய்ய்யும் காலம்????!!!!! ... இன்றைய அறுவடைக்கு பலியாவது ... இந்த காஸ்ரோக்கள் மட்டுமல்ல ... புலத்தில் மட்டுமே குற்றுயிராகவாவது வாழும் தமிழ் தேசியமும்!!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

.... 40 : 20 : 40 ...

.... உதென்ன 40:20:40?? ... ஜிஜி கேட்டது போல் ஏதாவது அதிகாரப்பகிர்வா???? .. இல்லை!!! .. கணக்கு இப்படித்தான் காட்டப் போகிறார்களாம் ... மாவீரர்நாள் வசூலை!!!!!!??????

... கடந்த வார இறுதியில் கிங்ஸ்பரி பகுதியில் உள்ள ஓர் மண்டபத்தில், மேற்கு/புற லண்டன் பகுதி மக்களை, மாவீரர்நாளை கணக்கு காட்டி செய்யப்போகிறோம் ... பல சீமா/சாட்டற் முடித்த கணக்காளர்கள் அங்கு வந்து விளங்கப்படுத்தப் போகிறார்கள் வாருங்கள் என வர்த்தகரான நண்பர் ஒருவருக்கு உத்தியோகபூர்வ அழைப்பு! ... அங்கு சென்றால் .. அதே தலைமையுடன் இறுதிவரை நின்றவர்கள் காவலிருக்க, BTF தலைவர்கள் (பின்பு உந்த BTFஐ ஆரம்பித்தவர்கள் யார்? இப்போது யார் அதனை கைப்பற்றி உள்ளார்கள் என்பதை பார்ப்போம்) விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருந்தனராம்!! ..

... இம்முறை எம் வர்த்தகர்கள்/தேசியம் என்றாலே காசை வீசி எறிபவர்கள் போன்றோரிடம் மாவீரர்நாள் செலவென்று வசூலிக்க அதியுச்ச பாதுகாப்பு உடைய இலெக்ரோனிக் ரிக்கட் அடித்திருக்கிறோம், உலகில் எம்மூலையில் இருந்தும் அதிலுள்ள நம்பரை அழுத்தி, விபரங்களை எமது இணையத்தளத்தில் பார்வையிடலாம்!! ... அடுக்கிக்கொணெடு போனார்களாம் ... மேலும் தாயகத்தில் இறுதிவரை தலைவரோடு நின்று வந்த வீரர்கள்

....(இவர்கள்: இறுதிவரை நின்றவர்கள் இங்கு வந்து விட்டார்கள்!!!! ஆனால் இவர்களோடு நின்றதாக இவர்கள் கூறும் தலைவர் எங்கே???? ஏன் விட்டு விட்டு வாந்தார்கள்?? எவ்வாறு வந்தார்கள்? ... என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்!)

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் போன்ற உணர்வுடன் செய்ய இருக்கிறார்கள்! .. (அவர்கள் வரிப்புலி ஆடை உடுத்து, ஆயுத அணிவகுப்பு செய்ய இருக்கிறார்களா? என்பது தொடர்பாக கூறவில்லையாம்!) ... என்பது போன்ற உணர்வுபூர்வமான விளக்கங்களுடன், இறுதியானதும் முக்கியமானதுமான கணக்கு காட்டும் விடயத்துக்கு வந்தவுடன், BTFகாரர் அறிவித்தாராம் 40:20:40 என்று!! ...

முதல் 40 ... வரும் வசூலில் 40% தாயகத்து மக்களுக்கு செலவிடப் போகிறார்களாம்!!!

... எவ்வாறு??? இலங்கை அரசுக்கு கொடுத்தா??? .. என்னவோ தாயக மக்களுக்கு என்கிறார்கள், பார்ப்போம்!

இனித்தான் கணக்கு ...

இரண்டாவது 20 ... வைத்திருக்கப் போகிறார்களாம், அடுத்த மாவீரர் நாள் செலவிற்காக!!!

....அப்படியாயின் அடுத்த தடவை வசூலுக்கு வர/போக மாட்டார்களா???? யார் இதனை வைத்திருக்கப் போகிறார்கள்??? ... பல கேள்விகள் ... இருந்தும் அடுத்த மாவீரர்நாள் என்கிறார்கள் ... பார்ப்போம்!

மூன்றாவது 40 ... இந்த மாவீரர் நாளை இம்முறை பல அமைப்புகள் ஒற்றுமையாக செய்யப்போகிறார்களாம்!!! ... கணக்கு காட்டுவதும்/அனைவரையும் அரவணைப்புதும்/ஒற்றுமையும் தானாம் தாரக மந்திரம் ..இவைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் பல செலவுகள் இருக்குதாம்! அவைகளை ஈடுகட்ட வேண்டுமாம்!!!

... இதில் உள்ள அமைப்புகள் யுத்த நிறுத்தம் முறிந்து யுத்தம் ஆரம்பித்த பின் பலதை சொல்லி பலவற்றுக்களுக்கு வசூல்களை புலமெங்கும் செய்தார்கள்! அவைகளுக்காக வசூலித்தவைகள் எல்லாம் எங்கு சென்று விட்டன? தாயக மக்களுக்கு பகிந்தளித்து விட்டனரா? இல்லை கணக்கு காட்டினார்களா???

... கணக்கு விகிதாசாரங்கள் சொல்லிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த டபுள் முடித்த கணக்காளர்கள் தலையாட்டிக் கொண்டிருக்க ... கேள்விகள் கேட்பவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பக்கங்களில் தாயகத்தில் இறுவரை தலைமையுடன் நின்று வந்த வீரர்களாம்! வாயை திறக்காமல், கூட்டம் முடிபடைந்து வெளியில் வந்தாராம்!

... கூறிக்கொண்டிருந்த நண்பரின் தொலைபேசி அழுதது ... எடுத்தால் அவரது கணக்காளர் ... என்ன அண்ணா, இந்த வருடம் கூட காட்ட வெளிக்கிடுகிறீர்கள்? .. தம்பி, ஆக குறைத்தால் தேவையில்லாமல் பாய பார்ப்பாகள், நான் பார்க்கிறேன் ... தொடர்ந்தது அவர்களின் உரையாடல் ... உலகத்தை ஆண்ட பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் வருமானவரிகாரர்களுக்கு ஆப்பம் வாயினுள் திணிக்க இப்படி பல கணக்காளர்கள்! ... நாம் எம்மட்டில்???

Edited by Nellaiyan

நெல்லை... உங்களை பார்க்க பாவமாக இருக்குது..நானும் உங்களைமாதிரித்தான், நப்பாசையுடன் நோண்டிப்பாக்கிறது.

என்னதான் புடுங்கினாலும்.. அங்கு எடுக்க ஒண்டுமில்லை..

  • தொடங்கியவர்

.. நேற்றைய தினம் லண்டனில் இருந்து இயங்கும் IBC வானொலியில் ... மாவீரர்தினம் 2011 ... பலர் ஒரே கருத்தை கூறினார்கள் ... மாவீரர்தினம் ஒன்றாகத்தான் நடக்க வேண்டும் என்று!! ... அதில் ஒரு நேயர் இந்த இரு கும்பல்களையும் பற்றி குறிப்பிடுகையில் ..

... ஒரு கும்பல் மகா கள்ளவர்கள், மற்றைய கும்பல் (புதுக்கும்பல்) துரோகக்கும்பல்! ... என்று விழித்தார்.

உண்மைதான்!

... முன்னையோரில் முன்னிற்பவர்களில் பலர் மகா திருடர்கள், கீழுள்ளதுகள் பாவங்கள், ஏதோ த.தே என்று தம்மை அர்ப்பணிக்கிறார்கள்!

... இரண்டாவது புதுக்கும்பலில் முன்னிற்பவர்களில் பலர் மர்ம மனிதர்கள் மட்டுமல்ல இவர்களும் யமனை பச்சடி போட்ட திருடர்கள்!!! பலர் அதில் முன்னிலையில், அதுவும் யுத்த நிறுத்த காலங்களில், முன்னையோரால் இழுத்து உள்வாங்கப்பட்டவர்கள், நேற்றுவரை முன்னையோருடன் சேர்ந்து சுருட்டியவர்கள் ... இன்று தாம் தூயவர்களாம்? கணக்கு காட்டப்போகிறார்களாம்?

... கேட்கிறவங்கள் கேணையர்கள் என்றால் ....!

  • கருத்துக்கள உறவுகள்

எருமை மாடும்.........ஏரோபிளேன் ஒட்டுமாம்..............மாமோய்...............

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை அண்ணை.. ஃபோன் பண்ணினது நீங்கள்தானே..! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.