Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87997
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    15791
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  4. ஜெகதா துரை

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    9
    Points
    802
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/09/21 in all areas

  1. ரஞ்சித்.... இப்படியான துரோகங்களை, பலரும் விரைவில் மறந்து விடுவார்கள். அவற்றை நினைவில் வைத்து, எழுதும் திறமை உங்களுக்கு உண்டு. நாட்காட்டி இப்போது... 2009’ம் ஆண்டில் நிற்கிறது. இன்னும் முக்கிமான பத்து வருடங்கள் இருக்கின்றது. எல்லாவற்றையும் எழுதுங்கள். ஒரு காலத்தில்.... புத்தக வடிவில், இந்த நாட்காட்டி வெளிவர வேண்டும் என்பதே என் ஆசை.
  2. மூலங்களை, மேற்கோள் அல்லது உசாத்துணைகளுடன் குறிப்பிட்டால் , இது ஒரு வ்ரற்லாறு ஆவணமாக இருக்கும்.
  3. சின்னம்மாவின்ர வருகையை இட்டு கிருஷ்ணகிரி ரோல் கேட் ..☺️..😊
  4. https://fb.watch/3ymi534UrL/ க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀
  5. கூடுதலாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து இளையதலைமுறையை சென்றடைய வேண்டும். தமிழில் மட்டும் எழுதுவது எம்மைப் போன்றோருடனே நின்றுவிடும். மொழிபெயர்க்கும் புலமை ரஞ்சித்திடமுள்ளபடியால் சுலபமாக செய்யலாம். ரஞ்சித்துக்கு மிகவும் நன்றி.
  6. எனக்கும் பல சம்பவங்கள் மறந்துவிட்டன, அல்லது மிக மங்கலாகவே நினைவில் இப்போது இருக்கின்றன. அதனால் இணையத்தளங்களிலிருந்து தேடி மொழிபெயர்த்து இணைக்கிறேன்.
  7. “ And in the end, All I learned was how to be strong ..Alone. - Quote from quoteambition.com
  8. ஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது. வரலாற்றில் தனது சொந்த இனத்தையே தனது நலன்களுக்காகவும், இச்சைகளுக்காகவும் காட்டிக்கொடுத்து, எதிரியுடன் சேர்ந்து நின்றே தனது இனத்தைக் கருவறுத்து, சொந்த இனம் அழிவதில் இன்புற்ற பல சாபங்களைத் தமிழினம் கண்டதுடன், இப்பிறப்புக்கள் பற்றிய சரியான பதிவினையும் எமது வரலாற்றில் பதிவுசெய்தே வந்திருக்கிறது. இவ்வாறு தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் சேர்ந்து செயற்பட்ட துரோகிகளின் வரலாறு சரித்திரத்தில் நிச்சயம் பதியப்படவேண்டும் என்பதுடன், இத்துரோகங்களால் எமதினம் பட்ட அவலங்கள் தொடர்ந்து பேசப்படுவதும் அவசியமாகிறது. அந்தவகையில், கடந்த 15 அல்லது 16 வருடங்களுக்கு முன்னர் தமிழினம் இவ்வாறான மிகப்பெரிய துரோகம் ஒன்றிற்கு முகம் கொடுத்தது. தனது இச்சைகளுக்காகவும், நலனுக்காகவும் மட்டுமே தனது இனத்தையும், அவ்வினத்தின் சுந்தந்திர விடுதலைப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்து, பலவீனமாக்கி, ஈற்றில் அப்போராட்டமும் லட்சக்கணக்கான மக்களும் அழிக்கப்பட தானும் நேரடியாகக் காரணமாகவிருந்த ஒருவனது துரோகம் பற்றிய எனது புரிதலையும், நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட விடயங்களையும் இங்கே பதிய நினைக்கிறேன். துரோகிகளை வரலாற்று நாயகர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் காட்ட முனையும் முனைப்புகள் வரலாற்றில் இத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து, அவர்களது துரோகத்தினை நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவதால், இத்துரோகிகள் பற்றி நாம் தொடர்ந்து பேசுவதும், அந்தத் துரோகங்கள் பற்றித் தொடர்ந்து பதிவிடுவதும் அவசியமாகிறது. ஏனென்றால், இத்துரோகங்கள் மன்னிக்கப்படமுடியாத, மறக்கப்படமுடியாத, இனியொரு தடவை நடக்கக் கூடாத வெறுக்கப்படவேண்டிய நிகழ்வுகள் ஆகும். துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 கேணல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பேச்சாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகள் இல்லை. நாம் எமது தலைவரின் நேரடிக் கட்டளையின்கீழ்த்தான் இனிமேல் செயற்படுவோம் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகள் இனிமேல் தலைவரின் நேரடிக் கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பதாகவும், இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இனிச் செயற்படப் போவதாகவும் கூறுகிறார்.
  9. அமெரிக்காவின் வெற்றிக்கும் தன்னிறைவுக்குமான முக்கிய காரணம் இந்த புரிந்துணர்வு அரசியல் மட்டுமே. இந்த உதாரணம் தான் சிங்களத்துக்கும்... ஒரே கோட்டில் வந்து நிற்பர்கள்.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, ஆனி , 2010 பிள்ளையான் குழு முக்கியஸ்த்தர் ஜெயம் வீட்டில் கருணாவின் அழுத்தத்தின்பேரில் குற்றப்புலநாய்வுத்துறையினர் விசாரணை இலங்கை குற்றப்புலநாய்வுப்பிரிவினர் கடந்த செவ்வாயன்று பிள்ளையான் கொலைக்குழு முக்கியஸ்த்தரான ஜெயம் எனப்படும் நாகலிங்கம் திரவியம் என்பவரது வாழைச்சேனை வீட்டில் கடும் சோதனைகளை நடத்தியுள்ளனர். கிழக்குமாகாணசபையின் உறுப்பினரான இவர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதோடு, 2004 ஆம் ஆண்டு அப்போது புலிகளின் கிழக்குமாகாணத் தளபதியாகவிருந்த கருணாவினால் இயக்கத்தைவிட்டு வெளியேற்றப்பட்டிருந்தார். வாழைச்சேனையில் இவரது வீட்டில் நடந்த கடுமையான சோதனைகளைப்போலவே, இவரது வாகரை வீட்டிலும், உறவினர்களின் சல்லித்தீவு மற்றும் பனிச்சங்கேணி ஆகிய பகுதிகளில் இருந்த வீடுகளிலும் சோதனை நடந்திருக்கிறது. பல்வேறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஜெயம், தனது வருமானத்திற்கு மிக அதிகமான சொத்துக்களைச் சேர்த்துவைத்திருந்ததுடன் அப்பகுதியில் பெரும் பணக்காரராகவும் மிகக் குறுகிய காலத்தில் மாறியிருந்தார். ஆனால், இச்சோதனைகளின்பொழுது ஜெயத்தின் வீடுகளிலிருந்து மக்களிடம் சூறையாடப்பட்ட பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் என்று எவற்றையுமே குற்றப் புலநாய்வுத்துறையினர் கைப்பற்ற விரும்பாததோடு, வெறுமனே ஒரு எச்சரிக்கைக்காக இச்சோதனைகளை நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. வாழைச்சேனைப் பகுதியில் பெருமளவு கொள்ளைகள், கொலைகளில் ஈடுபட்டு வரும் ஜெயம், வாழைச்சேனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகரியின் முழு ஆதரவினையும் கொண்டிருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஜெயத்தின்மேல் மக்களால் கொடுக்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் அப்பொலீஸ் அதிகாரியினால் கண்டுகொள்ளப்படவில்லையென்று தெரியவருகிறத்து. வாழைச்சேனை மக்களின் புகாரின்படி வாகரையிலிருந்து செங்கலடி வரையான பகுதிகளில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும்பெயரில் இயங்கிவரும் கொலைக்குழு பகுதிவாரியாக பிரித்து கொள்ளைகளிலும் கொலைகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. வாகரைப்பகுதியில் ஜெயமும், கறுவாக்கேணியில் அஜித்தும், கண்ணகிகிராமத்தில் ஜெயந்தனும் வாழைச்சேனை பொலீஸ் நிலைய அதிகாரியின் துணையுடன் கொள்ளைகள், கொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உள்வீட்டு முரண்பாடுகளில் சிக்கியிருக்கும் பிள்ளையான் கொலைக்குழுவின் மேற்படி ஆயுததாரிகள், கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தினை தமக்குள் பங்குபோடுவதில் முரண்பட்டுவருவதாகவும், ஒருவர் நடத்தும் கொள்ளைபற்றி மற்றையவர் காட்டிக் கொடுத்துவருவதாகவும் தெரியவருகிறது. இவ்வாறான ஏட்டிக்குப் போட்டியான கோல்மூட்டல்களால் ஜெயத்தின் ஆதரவாளர்கள 15 பேர் இதுவரையில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதேவேளை கிழக்குமாகாண முதலமைச்சராக இருக்கும் கொலையாளி பிள்ளையான் 2005 ஆம் ஆண்டில் வெள்ளைவான்களில் வலம்வந்து பெருமளவு இளைஞர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியதுடன் இவர்களைப் பாவித்தே கொள்ளைகள், கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தது இங்கே குறிப்பிடத் தக்கது. இவ்வாறான ஒரு கடத்தல் சம்பவத்தில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் 7 பேர் கடத்தப்படு ஆண்கள் சித்திரவதையின் பின் கொல்லப்பட, பிரேமினி தனுஷ்கோடி எனும் கணக்காய்வாளர் பிள்ளையான் கொலைக்குழுவின் 7 பேர் அடங்கிய மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துண்டு துண்டுகளாக வெட்டி வீசியெறியப்பட்டது நினவிருக்கலாம். பிள்ளையான் முதலமைச்சர் ஆனதன் பின்னர், 2008 ஆம் ஆண்டு குறைந்தது 75 பேரிடம் வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாகக் கூறி தலா 40,000 ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நவம் என்றழைக்கப்படும் கந்தவனம் நவரத்திணலிங்கம் எனும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியிடம் இவ்வாறு பணத்தினைக் கொடுத்து ஏமாந்த இவர்கள் பொலீஸில் இந்த முறைப்பாட்டினை வைத்திருக்கிறார்கள். நான் அடக்கியே வாசிக்கிறன். பொல்லைக் குடுத்து அடிவாங்கக் கூடாது கண்டியளோ ?! அண்ணை, நீங்களும் தெரிஞ்சத எழுதுங்கோ, திரியும் நல்லாப் போகும்.
  11. நான் இதாலைதான் இந்த திரியிலை கருத்து எழுதவேயில்லை.எல்லாம் முடிய வைச்சு செய்வம் எண்டு யோசிச்சு இருந்தனான். நேற்றும் இது பற்றி ஒரு குமுறல் திண்ணையிலை நடந்தது பாக்கேல்லையோ? இப்பவெல்லாம் முள்ளிலை விழுந்த சேலையை வெளியிலை எடுக்கிற மாதிரி.......கவனமாய் இருக்க வேணும்.
  12. 7.7k views இவ்வளவு பேர் பார்த்து இருக்கினம் தேவையில்லாமல் கருத்தை வைத்து திரியை அணைக்க கூடாது பாருங்கோ.
  13. எழுதுங்கள் சகோ எம்மை எழுதவோ போராடவோ தூண்டுவதும் உந்த சக்தியும் எப்பொழுதும் சிங்களமும் துரோகிகளின் வஞ்சனைகளுமே...
  14. மிகவும்... பயனுள்ள பதிவு ரஞ்சித். தமிழருக்கு மறதி அதிகம் உள்ளது. அப்படியானவற்றை... உங்களது பதிவு நிச்சயம் நிவர்த்தி செய்யும். 👍
  15. நானும் கிழக்கு போய் அந்த மக்களையாவது நிம்மதியாக வைத்திருப்பார் என்று பார்த்தால் சிங்கன் சிங்களவனை விட பல படி மேவி நிக்கிறார் நன்றி தொகுத்து தந்த தகவல்களுக்கு .
  16. உங்கள் ஆவணமாக்கல் பணி தொடர வாழ்த்துக்கள்
  17. நன்றி ரஞ்சித் உங்கள் நேரத்துக்கும் உழைப்புக்கும் .
  18. தமிழில் பேசுவோமா ..........சாலமன் பாப்பையா அவர்களுடன்......! 👍
  19. கஷ்டப்பட்ட நேரத்தில் கை கொடுத்த டிரம் ........! 👍
  20. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 02, வைகாசி 2009 8 வயதுச் சிறுமியைக் கப்பத்திற்காகக் கடத்திக் கொன்ற கருணா மகள் தினுசிக்காவை கருணாவின் கொலைவெறிக்குப் பலிகொடுத்த தாய் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல்ப் போயிருந்த பாடசாலை மாணவி தினுசிகா சதீஸ்குமாரின் உடல் மட்டக்களப்பு நகரில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. கடத்திக் கொல்லப்பட்ட தினுசிகாவின் பெற்றோர் இதுபற்றிக்கூறுகையில் கருணாவே தமது மகளைக் கடத்திச்சென்று முப்பது லட்சம் ரூபாய்களைக் கப்பமாக வழங்கினால் மட்டுமே உங்களின் குழந்தையைப் பார்க்கமுடியும் என்று கூறியதாகவும், பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும்போதே தமது குழந்தையை அவர்கள் கொன்றுவிட்டதாகவும் கூறி அழுதிருக்கின்றனர். சதீஸ்குமார் இக்குழந்தையின் தந்த சதீஸ்குமார் சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் கருணாவினால் கடத்தப்படு கப்பப் பணத்தின் ஒருபகுதியைப் பெற்றுக்கொண்ட பிறகு கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது நினைவிலிருக்கலாம். இக்கடத்தல்களில் கருணாவுடன் முன்னாள் புளொட் உறுப்பினர் ஒருவரும் இணைந்தே ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். கொலப்பட்ட சிறுமியின் தந்தையான சதீஸ்குமார் உடற்பயிற்சி ஆசிரியராக வேலைசெய்துவந்த வேளையிலேயே கருணா குழுவால் கடத்தப்பட்டு வெலிக்கந்தைப் பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும், கப்பம் பகுதியாக அறவிடப்பட்ட பின்னரும் அவர் மிகக் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது செய்தியாக முன்னர் வந்திருந்தன. தினுசிக மட்டக்களப்பு கோட்டைமுனை வித்தியாலயத்தில் பயின்று வந்ததுடன், வழமைபோல பாடசாலையிலிருந்து வீடு திரும்போதே அவர் கருணாவினால் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்குழு ரதீஷ்குமார் முன்னாள் கொலைக்குழு புளொட் மோகனின் நெருங்கிய சகாவான கந்தசாமி ரதீஷ்குமாரே கருணாவுக்கு இப்படுகொலைகளில் உதவிவருவதாகக் கூறும் பெற்றோர்கள், இதேபோன்று பல குடும்பங்களிடமிருந்து ஆட்களைக் கடத்திவைத்து 30 லட்சம் ரூபாய்களைக் கப்பமாகக் கேட்டுவருவதாகக் கூறுகின்றனர். கப்பம் அறவிடுதலினை நியாயப்படுத்திய ரதீஷ்குமார், தனது சகாக்களை வெளிநாடு அனுப்பிவைக்க இப்பணம் தேவைப்படுவதாகக் கூறியிருக்கிறான். மேலும், இவன் முன்னால் அரச ராணுவ கொலைப்படை உறுப்பினரான லெப்டினன்ட் கேர்ணல் நிசாம் முத்தலிப்புடன் நீண்டகாலம் கொலைகளில் ஈடுபட்டு வந்தவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. ரதீஷ்குமார் மற்றும் சீலன் ஆகிய துணைராணுவக் குழுக்களின் கடத்தல் மற்றும் படுகொலை நிபுணர்கள் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களுக்கு பல கடத்தல்களில் உதவிவருவதுடன், கப்பம் அறவிடுதல், படுகொலை செய்தல் ஆகியவற்றிலும் உதவிவருகின்றனர்.
  21. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, சித்திரை 2009 நான்கு பொதுமக்களை திருகோணமலையில் சுட்டுக் கொன்ற கருணா குழு இலங்கை ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா துணை ராணுவக்குழு திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடத்திய கொலைச் சம்பவங்களில் மூன்று தமிழர்களும் ஒரு முஸ்லீமும் கொல்லப்பட்டைருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் நொச்சிக்குளம் சமாதானப் பேரவையின் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு, கோணேஸ்வரன் 48, நொச்சிக்குளம் சமாதானப் பேரவை தலைவர் சேகர் 60, அமீர் 32, ராசமணி 70. திருமலை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் இப்படுகொலைகள் பற்றி பொலீஸாரிடம் முறையிட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க மறுத்துவருவதாகத் தெரிகிறது. கடந்த இருவாரங்களில் மட்டும் கருணா குழுவினரால திருகோணமலை மாவட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 15 என்பது குறிப்பிடத் தக்கது. வன்னியில் நடந்துவரும் பாரிய இனவழிப்பு யுத்தத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் திருகோணமலைத் தமிழர்கள் ஈடுபடுவதைத் தடுக்கவே இவ்வாறான அச்சுருத்தல் பாணியிலான படுகொலைகளை கருணா குழு நடத்திவருவதாக திருமலை வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
  22. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, பங்குனி 2009 சிறுமி வர்ஷா படுகொலை : ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் துணை ராணுவக் குழுக்கள் திருகோணமலைச் சிறுமியான வர்ஷா ஜூட் ரெஜீ என்பவரைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலைசெய்த பாதகத்தினை ஒருவர் மீது ஒருவராக பிள்ளையான் கொலைக்குழுவும் கருணா துணைராணுவக் குழுவும் சாட்டி வருகின்றன. இம்மாதம் 11 ஆம் திகதி ஆறுவயது நிரம்பிய இச்சிறுமி வழமையாக வீடுசெல்லும் முச்சக்கரவண்டிக்காகக் காத்துநின்றபோது, அவரைக் கடத்திச் சென்ற துணைராணுவக் குழு உறுப்பினர்கள் பின்னர் உரைப்பைய்யொன்றில் கொல்லப்பட்ட அவரது உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். கருணா குழுவே இக்கொலையில் ஈடுபட்டதை தம்மால் நிரூபிக்க முடியும் என்று பிள்ளையான் கூறியதுடன், கருணா அரசாங்கத்துடன் இணைந்தபின்னரும் கூட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் தமது கட்சியின் பெயரைப் பாவித்து கடத்தல்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், கருணா துணைராணுவக் குழுவின் பேச்சாளர் இனியபாரதி இக்கொலைபற்றித் தெரிவிக்கும்போது, "வர்ஷாவினதும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான கடத்தல்கள், படுகொலைகளை பிள்ளையானே செய்துவருகிறார். இதனையே அவர் இவ்வளவுகாலமும் தொழிலாகச் செய்துவருகிறார்" என்று குற்றஞ்சாட்டியதாக கொழும்புப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறுபேரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின்பொழுது பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற ஒரு துணைப்படை உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இன்னுமொருவர் சயனைட் அருந்தி மரணித்திருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையினை விசாரித்துவரும் பொலிஸார் தமது கடமையினைச் செய்வதை இவ்விரு துணைராணுவக் குழுக்களும் இடையூறு செய்துவருவதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
  23. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மாசி 2009 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக மட்டக்களப்பில் போட்டியிட துணை ராணுவக் குழுத் தலைவர் கருணா முடிவு மட்டக்களப்பில் அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்தித்துப் பேசிய கருணா தனக்கும் தனது சகாக்கள் 6 பேருக்கும் இத்தேர்தலில் வெல்வதற்கான உதவிகளையும் ஆதரவினையும் அவர்கள் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் நீக்கப்பட்டு, கருணாவுக்கு ஆதரவானவர்கள் அவ்விடங்களுக்கு அமர்த்தப்பட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பை அவர் நடத்தியிருக்கிறார். கிழக்குப் பல்கலை கழகத்தின் உயர் அதிகாரிகள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகிய பதவிகளை வகித்து வந்த வடமாகணத்தைச் சேர்ந்த பலர் தமது பதவிகளை உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டும் என்று மிரட்டப்பட்டு, அப்பதவிகளுக்கு கருணாவுக்கு ஆதரவானவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவான அதிகாரிகளும் இலக்குவைக்கப்பட்டு, பதவிகளில் இருந்து அகற்றப்பட்டு வருகிறார்கள் என்று செய்திகள் வந்திருக்கின்றன. இவ்வாறான பல அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்ற கருணா குழு ஆயுதமுனையில் அவர்களை மிரட்டி ராஜினாமாச் செய்ய வைத்ததை பாதிக்கப்பட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் குழுவுக்குச் சார்பான அதிகாரிகளும் கருணா குழுவால் இலக்குவைக்கப்பட்டு தூக்கப்பட்டு வருவதுடன், வாகரைப் பகுதியில் பாடசாலை அதிபர்களைச் சந்தித்த கருணா, "உங்களின் தலைகள் உடம்பில் இருக்கவேண்டும் என்றால் யோசித்து முடிவெடுங்கள், இல்லையேல் தலை இருக்காது" என்று பகிரங்கமாக ஒரு கூட்டத்தில் மிரட்டியதாக அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். அவ்வாறே கிழக்கு பல்கலைக் கழக பதிவாளரும் துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்டு ராஜினாமாச் செய்யவைக்கப்பட்டிருக்கிறார்.
  24. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, கார்த்திகை 2008 முன்னாள் விடுதலைப் புலிகள் இருவரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைராணுவக் குழு அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு முன்னாள் விடுதலைப் புலிகளை கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றிருக்கிறது. கொல்லப்பட்டவர்களுடன் நின்றிருந்த இன்னொருவரை அக்குழு கடத்திச் சென்றிருக்கிறது. கொலைச் சம்பவத்தினையடுத்து அப்பகுதிக்கு வந்த பொலீஸ் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரின் மனைவியை விசாரணைக்கென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட முன்னால் போராளிகளின் விபரங்கள், பாலகிருஷ்ணன் விஜயராஜ் அல்லது அர்ஜுன், 30, ஒரு பிள்ளையின் தந்தை, 2 ஆம் குறிச்சி கண்ணகிபுரத்தில் வசித்து வந்தவர். ர. அன்புமணி, 22, ஆலையடிவேம்பைச் சேர்ந்தவர். விஜயராஜாவின் மனைவி விசித்திராவே பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டவராவார். கருணா துணைராணுவக் குழுவால் கடத்திச் செல்லப்பட்ட மூன்றாவது நபர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. கொல்லப்பட்ட இரு போராளிகளின் உடல்களையும் கருணா துணைப்படை அவ்விடத்தில் இருந்து இழுத்துச் சென்றதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். சம்பவ இடத்திலிருந்து பொலீஸார் டி 56 ரக துப்பாக்கியொன்றையும் கண்டெடுத்திருக்கிறார்கள்.
  25. குரங்குச் சேட்டை......! 😂
  26. காவல் துறை கைதான தருணம்...
  27. கோழியின் வயதை... எப்படி கண்டு பிடிப்பீர்கள்?
  28. முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே.....! 😂
  29. துரோகத்தின் நாள் 2 : 4 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 மட்டக்களப்பு புலிகள் தமது நிலையினை மீள உறுதிப்படுத்துகிறார்கள். "நாம் எமது இலச்சியத்தினை நோக்கிப் பயணிப்போம். எமது தேசியத் தலைவரின் கட்டளையின் கீழும், எமது எமது தளபதி கருணாவின் வழிநடத்துதலின் கீழும் இனிச் செயற்படுவோம்" என்று கருணாவின் மூத்த தளபதிகளில் ஒருவர் கிழக்கு மாகாண புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் உள்ளூர் இதழான தமிழ் அலையில் பேசுகிறார். "நாம் புலிகள் இயக்கத்திலிருந்து பிர்ந்துபோகும் முடிவினை இதுவரை எடுக்கவில்லை. ஆனால், நாம் பிரிந்து இயங்கினால் வரும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கிருக்கும் அச்சத்தையும், அமைதியின்மையினையும் நாம் அறிவோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.