Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88026
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15760
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/28/21 in Posts

  1. மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..
  2. அப்புவிட அப்புவும்,பேரனும்..! ********************* கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது .. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வளிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கி வளிபட்டு போனார்களே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ்.. வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் அப்புவிட அப்பு கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழுப்பி விட்டேன். “விடியவில்லை” ஐயோ பக்கத்தில.. அழுகுரல்கள் கேட்கிறது. அன்புடன் -பசுவூர்க்கோபி- 27.03.2021
  3. நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮 அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣 பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽 பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.
  4. யோவ்... நாதமுனி, கோமாதா... புண்ணாக்கையும், புல்லையும், குழையையும்.. தின்று விட்டு பசளை தருகின்றது. இந்த மனிசப்பயல்.... இறைச்சி, ஈரல், குடல் வறை , இரத்த வறை, மீன், திருக்கை, திமிங்கிலம் என்று... கண்ட கோதாரியையும்... சப்பித் தின்று போட்டு, வெளியிலை தள்ளுற, எருவை தோட்டத்துக்கு போட்டால்... பயிர்.. பட்டுப் போகும் ஐயா. 🤣
  5. பாட்டு பாட வா,💕 பார்த்து பேச வா ........!
  6. பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
  7. எல்லாம் அவன் செயல்....
  8. வணக்கம் வாத்தியார்........! ஆண் : போதும்பா ஆப் பண்ணிக்கலாமா இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு ஆண் : பிரதர் போதும் ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே அதையாவது சொல்லுங்க மை கருத்து வாட் இஸ் ஐ எம் சேயிங் ஆண் : காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது லவ் கிடைச்சா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க லவ் போச்சா விட்டுடுடா லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க லக்கு போச்சா தள்ளிக்கடா ஆண் : பெருமாளே ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா வழி தேடி சுத்துறேனே நானு உன் பார்வை என் மேல அட திரும்பவே திரும்பல.....! --- வாட் ஏ கருவாட் ---
  9. கையோட இரண்டு தென்னங்கன்று அந்த இடத்திலை போட்டு விடுங்கோ. கிடு, கிடு எண்டு வளர்ந்திடும். பக்கத்து வீட்டுக்காரருக்கு, போனை போட்டு சொல்லி விடுங்கோ, cctc போட்டு செட் பண்ணியாச்சு. அங்காளை, இருந்து கொக்கைத்தடி போட்டு.... தேங்காய் பிடுங்கினால், வந்து வெட்டுவன் என்று மறக்காமல் சொல்லுங்கோ. *** அது சரி, உங்கட ஏரியாவுல, பரப்பு என்ன விலை போகுது? கை மாத்திற ஐடியா இருக்குதே? சுவியர் விசாரிக்க சொல்லேல்ல, நான் தான் கேக்குறன். நல்ல பசை பார்ட்டி கை வசம் இருக்குது. யோசிச்சு சொல்லுங்கோ. 🤑
  10. அதற்கு பின் ஒரு பெரிய சூட்சுமம் உள்ளது அன்பரே......😎 உலகத்துக்கே மருந்து மாத்திரை கொடுக்கும் நாடு ஜேர்மனி
  11. நான் தேடும் உறவு உன்னில் இறைவா நான் வாழும் வாழ்வு உன் சொல்லில் தேவா (2) என் ஜீவன் உன்னில் உறவாட வேண்டும் உன் வார்த்தை என்னில் வாழ்வாக வேண்டும்.. வாழ்வாக வேண்டும்.. 1.நிறைவான வாழ்வு நான் காண வேண்டும் நிலையான உறவு நான் கொள்ள வேண்டும் (2) உன் அருளான வார்த்தை என் இருளான வாழ்வை (2) இனிதாக மாற்றிட வேண்டும் என் இதயத்தில் குடிகொள்ள வேண்டும் (2) 2.கனிவான உள்ளம் நாம் பெற வேண்டும் துணிவான செயல்கள் நான் செய்ய வேண்டும் (2) உம் இனிதான வார்த்தை என் முரடான வாழ்வை (2) இனிதாக மாற்றிட வேண்டும் என் இதயத்தில் நீ வாழ வேண்டும் (2)
  12. ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது, யாதும் ஊரே....யாவரும் கேளிர் எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்! உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது! ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!
  13. உலக முழுக்க நாறுது சிறி இந்த விடயம்😂
  14. "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" யாழ் அகவை 21 ல் . சம்பவம் : சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால் தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள். அது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா. மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன் கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும் அப்படியா நான் பார்க்கவே இல்லை.....! இது அன்று எழுதியிருந்தேன் ......இதுக்கு மேல் எழுதவும் முடிவதில்லை."வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" சிதையிலும் அழியாத நினைவுகள்........!
  15. இளசு பழசு என்றாலும் பாடல் இளசுதான்...💞
  16. சிறி அந்த இடத்தில் நல்ல தென்னம்பிள்ளை வைத்துவிட்டால் காய்த்து குலுங்கும். பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து பொறாமைப்படுவான்.
  17. சிரிப்பான தண்டனை உதைகள் .......! 🤣
  18. ஆகா அழகிய ஊர் வாசம் மனதை நிறைக்கிறதே
  19. வித்தையைக் கற்றுத் தருவது....பிரச்சனையில்லை,நிழலி! காதலை ஒரு நாளும் சுருக்கக் கூடாது! உடன் படுகின்றேன்! முன்னர் அலைமகள் என்று உறவு யாழில் இருந்தார்...உங்கட கனடாப் பக்கம் என்று தான் நினைவு! அவர் எழுதிய கருத்தொன்று அப்படியே ....மனதில் பதிந்து போய் விட்டது! யாரோ எழுதிய காதல் கதையொன்றுக்கு அவர் எழுதிய கருத்து இது தான்...! குளிர் காலம் வந்து விட்டால்....எல்லோருடைய பழைய காதலிகளும் வரிசையில....வரத் துவங்குவினம்! அந்தக் கருத்துத் தான்....இந்தக் கதையை எழுத உந்து கோலாக இருந்தது....! உங்கள் ஆலோசனைப் படி....விதி விட்ட வழியே நடக்கட்டும் என்று முடிவெடுத்து விட்டேன்! 🥰 வணக்கம்.....நிலாக்கா! உங்களுடைய கருத்தைப் பார்த்த பின்னர்.....கையைக் காலை நீட்டிக் கருத்தெழுதக் கொஞ்சம் பயமாய்க் கிடக்கு!😀 விரிக்கக் கூடிய அளவுக்கு விரிவாக எழுத முயற்சிக்கிறேன்!நன்றியும்...அன்பும்....!
  20. வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய 2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன் அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம் கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம் கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும் நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது . குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀
  21. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, மார்ச் 2004 கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பில் காணப்படுகின்றன கருணாவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பின் பலவிடங்களிலும் காணக்கூடியதாகவிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கருணாகுழுவுக்கு எதுவித உதவிகளையும் செய்யவேண்டாம் என்று கோரும் பல சுவரொட்டிக்களைக் காண முடிந்துள்ளது. பொலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததன்படி பெருமளவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடமாடி வருவதாகவும், இவர்களே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் விநியோகித்துவருவதாகவும் கூறினர். "பலவிடங்களிலும் வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் வலம்வருவது தெரிகிறது. ஆனாலும், கருணாகுழுவுக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் உடனேயே ஆரம்பிப்பார்களா என்று சொல்லத் தெரியவில்லை" என்று மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.
  22. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மார்ச் 2004 கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு கருணாவின் துரோகத்தனம் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் புலிகள் கருணாவின் முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாணப் போராளிகளுக்கும் பிரிவுத் தலைவர்களுக்கும் புலிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "தனது முறைகேடுகளுக்கான தண்டனைகளுக்குப் பயந்தே கருணா வன்னிக்குச் செல்லாது தேசியத் தலைமை பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் மிகவும் தவறான பிரச்சாரத்தை கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்". "கருணா எனும் துரோகிக்கெதிரான தண்டனை நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரும் தமிழ்த் தேசிய இலட்சியத்திற்கெதிரான துரோகியாகவே கருதப்படுவீர்கள். தேசியத் தலைமைக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்பாடு எடுத்து இயக்கத்தினுள் சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அதனை நினைவிலிருத்தி, தமது அறியாமையினால் இதுவரை கருணாவுக்கு ஆதரவாக இருப்பின், உடனடியாக அவரிடமிருந்து தூர விலகி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்". என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. புலிகளின் அறிக்கையின் முழு வடிவமும் இதோ. "அன்பிற்குறிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரிவுத் தலைவர்களே, போராளிகளே" "கருணாவின் முறைகேடான நடத்தைகள் எமது மண்ணிற்கும் மாவீரர்களுக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ள நீங்கள், சரியான பாதையினைத் தெரிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். தனது முறைகேடுகளை மூடிமறைப்பதற்காக கருணா பிரதேசவாதம் எனும் நஞ்சினைக் கையிலெடுத்திருப்பதோடு, அழிவினைத் தரும் யுத்தம் ஒன்றிற்குள் மொத்த தமிழினத்தையும் தள்ளியிருக்கிறார்" "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "மீனகத்தில் சில போராளிகள் முன்னிலையிலும், சில பொதுமக்கள் முன்னிலையிலும் தான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாகவும், இனிமேல் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவராக இயங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தேசியத் தலைமைக்கு தமது விசுவாசத்தினைக் காட்டும் உறுதிமொழியினை பல்லாண்டுகளாக மாவீரரகளும், போராளிகளும் எடுத்துவரும் வழிமுறையினை இனிமேல் செயற்படுத்தப்போவதில்லையென்றும் அறிவித்திருக்கிறார்". "கருணா எமது தேசியக் கொடியினை அவமதித்துள்ளதோடு, உலகெங்கும் தமிழர்களால் வணக்கப்படும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். தேசியத்தலைவரின் உருவப்படத்தினையும், உருவ பொம்மையினையும் எரிக்குமாறும் போராளிகளை வற்புறுத்தியிருக்கிறார். தனது அண்மைய செவ்விகளில் தமிழ்த் தேசியத்தை இழிவாகவும், மிகவும் அபத்தமாகவும் பேசிவருகிறார். தனது நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த எதிரிகளுடனும், ராணுவ அதிகாரிகளுடனும் மிக நெருக்கமான சிநேகத்தை அவர் இப்போது கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் பத்திரிக்கைகளைக் கொழுத்தியும் முற்றாகத் தடைசெய்தும் தனது துரோகத்தனத்தினை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களிடமிருந்து மறைக்க கருணா முயன்று வருகிறார்". "மேற்சொன்ன முறைகேடுகள் எமது இயக்கக் கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் முரணானது என்பதால் இவற்றுக்குச் சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. எமது தலைவரால் கருணாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பினை கருணா உதாசீனம் செய்திருக்கிறார். மட்டக்களப்பு - அம்பாறை மக்களை இல்லாத பிரதேசவாதச் சிந்தனையில் ஆழ்த்திவைத்திருக்கும் கருணா தனது சுகபோக வாழ்வினை அனுபவித்துவருகிறார்". " தனது முறைகேடுகளை மறைக்க கருணா தொடர்ந்தும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றுவதை எமது தேசியத் தலைமை இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. மானிடத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் நிற்கும் கருணா, தனது தவறுகளை மறைக்க உங்களைப் பகடைக் காய்களாகவும், கவசமாகவும் பாவிக்கிறார். கருணாவின் சூழ்ச்சிக்கு ஒரு போராளியேனும் பலியாகிவிடக் கூடதெனும் எமது தேசியத் தலைமையின் உண்மையான கரிசணையினைப் புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்". " தனது சூழ்ச்சிபற்றித் தெரியாத அப்பாவிப் போராளிகளையும், மக்களையும் பாவித்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் செயற்பட்டுவரும் கருணா எம்மக்களின் விடுதலைக்கெதிரான துரோகிகளோடும், எதிரிகளோடும் கைகோர்த்திருக்கிறார். எமது மாவீரர்களினதும் போராளிகளினதும் தியாகங்களும், குருதியும் கருணாவினால் இன்று கேவலப்படுத்தப்பட்டு வருகின்றது. எமது தேசத்தையும் மக்களையும் காப்பதற்காக கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றும் முடிவினை நாம் எடுத்திருக்கிறோம்". “எமது போராளிகள் கருணாவின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவரை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் துரோகத்திற்கெதிராக தேசியத்தலைமை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்போர் தேசியத்திற்கெதிரான துரோகிகளாகக் கணிக்கப்படுவர் என்பதையும் கூறிக்கொள்கிறோம். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்கிற உறுதிப்பாடுடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதும், உங்களின் பெற்றோர் இதனடிப்படையிலும்தான் உங்களை எம்மோடு இணைத்திருக்கிறார்கள் என்கிற வகையிலும் உண்மையினை அறியது கருணாவுடன் இன்று நிற்கும் போராளிகள் உடனடியாக அவரை விட்டு விலகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கருணாவை விட்டு வெளியேறும் போராளிகள் தங்களது குடும்பங்களோடு இணைவதற்கான அனுமதியினை எமது தேசியத் தலைவர் வழங்கியிருக்கிறார் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறோம். “எமது வேண்டுகோள்களுக்குப் பின்னர் எந்தவொரு போராளியோ கருணாவின் சூழ்ச்சிகளுக்கும் துரோகத்தனங்களுக்கு ஆதரவாக நிற்பதென்று முடிவெடுத்தால், அவர்களின் முடிவிற்கு அவர்களே பாத்திரவான்களாக இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். கருணாவின் துரோகத்திற்கு ஆதரவாக நின்று மரணிக்கும் எந்தவொரு போராளிக்கும் மாவீரருக்கான அந்தஸ்த்து ஒருபோதும் வழங்கப்படமாட்டட்து என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்". “தாயக விடுதலைக்காக இயக்கத்தில் இணைந்த போராளிகள் கருணா எனும் துரோகியினதும், அவரது கொலைக்குழுவினதும் நலத்திற்காக மரணிக்க வேண்டுமா என்பதை ஒருகணம் சிந்தியுங்க்கள். இன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கும் பிரிவுத்தளபதிகள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து அவரிடமிருந்து விலகும் முடிவினை உடனடியாக எடுக்கவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சரித்திரத்தில் அவர்கள் மேல் விழவிருக்கும் பழிச்சொல்லிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். “மட்டக்களப்பு - அம்பாறைப் போராளிகளின் வீரம்செறிந்த போராட்டச் சரித்திரம் கருணா எனும் இனத்துரோகியினால் களங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றாகச் செயற்படுவதன் மூலம் கெளரவத்துடனும் தன்மானத்துடனுன் தலைநிமிர்ந்து வாழ்வோம்" துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்ச் 2004 யோசேப் பரராஜசிங்கத்தை தேர்தலில் நிற்கவேண்டாம் என்று மிரட்டிய கருணா துணை ராணுவக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வேட்பாளரான யோசேப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரத்தை உடனே நிறுத்துமாறு கருணா துணை ராணுவக்குழு அச்சுருத்தல் விடுத்திருக்கிறது. தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இவ்வாயுதக்குழு மிரட்டியிருக்கிறது.
  23. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, மார்ச் 2004 கருணா குழுவின் அடாவடித்தனத்தை கண்டிக்கும் களுவாஞ்சிக்குடி மக்கள் வன்னியிலிருக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கு ஆதரவாகச் செயற்படுவோரை எச்சரித்தும், தேசியத் தலைமையிடமிருந்து தம்மை விலத்திக்கொள்ளுமாறும் கருணா குழு களுதாவளை - களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் விநியோகித்துவரும் துண்டுப் பிரசுரங்களை அப்பகுதிமக்கள் கிழித்தெறிந்துள்ளனர். கிழக்கில் இயங்கிவரும் நாசகார துரோகக் கும்பலின் அழுத்தத்திற்குப் பயந்து தாம் தேசியத் தலைமைக்கெதிரா ஒருபோதும் செயற்படப்போவதில்லை என்றும் இம்மக்கள் கூறியுள்ளனர். மக்களின் செயலினால் ஆத்திரமடைந்த கருணா குழு, சுதா என்னும் முக்கிய உறுப்பினர் தலைமையில் இப்பகுதிக்கு வந்து மக்கள்மேல் தாக்குதலில் ஈடுபட்டுச் சென்றிருக்கிறது. கருணா குழுவின் தேசியத் தலைமைக்கெதிராகச் செயற்படுமாறு கிழக்கு மக்களைக் கோரும் துண்டுப்பிரசுரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆரையம்பதி பகுதியில் பலவிடங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. கருணா குழு தொடர்ச்சியாக இப்பகுதியில் தினக்குரல் பத்திரிக்கையினைத் தடைசெய்து வைத்திருக்கிறது. கடந்த சில தினங்களாக இப்பத்திரிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் மக்கள் முன்பாக கருணா குழுவினரால் எரிக்கப்பட்டும், விநியோகஸ்த்தர்கள் துப்பாக்கி முனையில் அச்சுருத்தப்பட்டும் இருக்கும் நிலையில் இப்பத்திரிக்கை சிலவிடங்களில் விநியோகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. இதேவேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்திருக்கும் சைக்கிள் திருத்தும் நிலையம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கிறது. கருணா குழுவுக்கு வெளிப்படையான ஆதரவாளராகச் செயற்பட்ட இந்த சைக்கிள் நிலைய உரிமையாளர் பார்த்திருக்க இச்சம்பவம் நடந்திருக்கிறது.
  24. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மார்ச் 2004 மட்டக்களப்பு மாகாணத்தைச் சாராத பிற மாவட்ட மாணவர்களின் பாதுகாப்புப் பிரச்சினை மத்தியிலும் திறக்கப்படும் கிழக்குப் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் இரண்டாம் தவணைப் பாடங்கள் ஆரம்பமாகவிருப்பதால் மாணவர்கள் அனைவரையும் உடனடியாக தமது தங்குமிடங்களுக்கும், வாளாகங்களுக்கும் மீளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பல்கலைக் கழகத்தினுள் புகுந்த கருணா குழுவினரால் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயிர் அச்சம் காரணமாக தமது வீடுகளுக்குத் திரும்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள எதனையும் செய்யாது நிர்வாகம் இந்த திடீர் முடிவினை எடுத்திருக்கிறது. தமது உயிருக்கான உத்தரவாதத்தினை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும்வரை தாம் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்குத் திரும்புவதுபற்றி நினைக்கமுடியாது என்று அம்மாணவர்கள் கூறியிருக்கின்றனர். அதேபோல கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து கருணா குழுவால் விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய தமிழ் மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை தம்மால் கடமைகளுக்குத் திரும்பமுடியாதென்று கூறியிருக்கின்றனர். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராத மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களின் பாதுகாப்புப் பற்றிக் கரிசணை காட்ட விரும்பாத கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தனது செயற்பாடுகளைத் தொடர்வதிலும், பரீட்சைகளை நடத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
  25. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, மார்ச் 2004 வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் - யோசேப் பரராஜசிங்கம். "நான் எனது தேர்தல் பிரச்சாரங்களை புலிகளின் கட்டளைகளுக்கு இணங்கவே நடத்துவேன். ஒருங்கிணைந்த வடக்குக் கிழக்கு தாயகத்தின் அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தேசத்தை உருவாக்கும்வகையில் எனது அரசியல் செயற்பாடு தொடரும். எனது குறிக்கோள்களிலிருந்து விலகி நடக்குமாறு என்னை நிர்ப்பந்தித்தால் நான் இத்தேர்தலில் இருந்து விலக்கிக்கொள்வேன்" என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கம் கனேடிய தமிழ் வானொலிக்கு செவ்வியளித்தார். . "கடந்த சில தினங்களாக கிழக்கில் தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. நான் எனது நிலையினைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறேன். கருணாவின் பிளவின் பின்னர் இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அரசுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். என்மீது திணிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு நான் பதில் வழங்கி வருகிறேன். தந்தை செல்வாவின் வழியில் கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்யும் நான் ஒருபோதும் அந்த வழியினை விட்டு விலகி அரசுக்குச் சார்பான நிலையினை எடுக்கமாட்டேன் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் எனது அசைக்கமுடியாத நிலைப்பாட்டினை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் கூறியிருக்கிறேன். என்னால் பிரதேசவாதம் பேசமுடியாதென்பதை என்மீது அழுத்தம் செலுத்துபவர்களுக்கு உறுதிபடக் கூறிவிட்டேன். புலிகளால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கடமை இருக்கிறது, அதனை நான் நிறைவேற்றப் போராடுவேன்". "எங்களை கொக்கட்டிச்சோலைக்கு வரச்சொல்லி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியினை மட்டுமே இனிமேல் பேசவேண்டும், தமிழரின் தாயகம், உரிமைகள் பற்றிப் பேசக்கூடாதென்று நிர்ப்பந்தம் தெரிவித்தார்கள். என்னுடன் வந்த பலர் அதனைப் பயத்துடன் ஏற்றுக்கொண்டபோதும், என்னால் அவர்கள் சொல்வதை ஏற்றுகோள்ளமுடியாதென்று அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் கூறிவிட்டேன். நான் தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் என்றும், இணைந்த வடக்குக் கிழக்கே தமிழரின் தாயகம் என்பதை எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்". "என்னுடன் இருந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் அவர்கள் சொல்வதற்கு இணங்கியிருக்கலாம். ஆனால், அது அவர்களதும் விருப்பமாக இருந்ததா என்பதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை". "திருகோணமலை தேர்தல் கூட்டத்திற்கு கட்சியின் உப தலைவர் என்கிற வகையில் கலந்துகொள்ளச் சென்றபோது என்னைத் தடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன". "கிழக்கில் எனது நிலைப்பாட்டினை முன்வைத்து நான் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்வேன். அவர்கள் என்னைத் தடுக்கும்வரை இது தொடரும்". "கிழக்கின் மக்களும் அரச அதிகாரிகளும் இணைந்த வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திற்கே ஆதரவாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. அவர்கள் பலருடன் பேசியதிலிருந்து நான் இதனைப் புரிந்துகொண்டேன்". "நான் யாருக்கும் எதிராக அரசியல் செய்யவில்லை, எவரையும் தாக்கிப் பேசவில்லை. தமிழ்த்தேசியம் மீதான எனது விருப்பினால் எனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறேன். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசியதனால் இலங்கை ராணுவத்தாலும், உளவுப்பிரிவினராலும் பலமுறை அச்சுருத்தப்பட்டேன்". என்றும் அவர் கூறினார்.
  26. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 17, மார்ச் 2004 அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் தினக்குரல் பத்திரிக்கைக்குத் தடைவிதித்த கருணா குழு அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினக்குரல் நாளிதழை விநியோகிப்பதற்கு முற்றான தடையினை கருணா குழு விதித்திருக்கிறது. மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த இப்பத்திரிகைக் அலுவலகத்திற்குச் சென்ற கருணா குழு ஆயுத தாரிகள், அங்கிருந்த மேலாளரை அச்சுருத்தியதோடு, இனிமேல் பத்திரிக்கை விநியோகிக்கப்பட்டால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.. அத்துடன், இப்பரிக்கையினை கிழக்கில் விநியோகிக்க உதவிவரும் நிறுவனங்களுக்கும் இக்குழுவினால் கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டன. சில தினங்களுக்கு முன்னால் மட்டக்களப்பின் பல இடங்களிலும் கருணா குழுவினரால் கைய்யகப்படுத்தப்பட்ட தினக்குரல் மற்றும் வீரகேசரி நாளிதழ்கள் மக்கள் முன் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன என்பது நினைவுகூறத் தக்கது.
  27. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 16, மார்ச் 2004 பாராளுமன்ற பதவியினை நோக்கிச் செல்லும் கருணா துணை ராணுவக்குழு கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் புதிதாகத் தெரிவாகும் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்று கருணாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கருணாவின் நெருங்கிய சகாவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவிக்கும்போது, கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகும் ஒரு உறுப்பினருக்கு அமைச்சர்பதவியொன்றைத் தர புதிய அரசு விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கருணா குழு பாராளுமன்றப் பதவிகளை இலக்குவைத்து சந்திரிக்கா குமாரதுங்கவுடனும், மக்கள் விடுதலை முன்னணியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருக்கிறது. " தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்துத் தேர்தல் மேடைகளில் பேசக்கூடாதென்னும் எமது நிபந்தனையினை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.மட்டக்களப்பின் அபிவிருத்திபற்றி மட்டுமே கவனமெடுக்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டார்கள். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கருணா குழுவுக்கும் கிழக்கு மாகாணத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து புதிய அரசாங்கத்தில் பதவிவகிக்க கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்கான சட்ட வேலைப்பாடுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கருணா எம்மிடம் தெரிவித்தார்". "மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோள் என்று இக்கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு உறுப்பினர் தெரிவித்தார்". கொழும்பிலிருந்து வெளியாகும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவான பத்திரிக்கை ஒன்று தனது ஆசிரியர்த் தலையங்கத்தில், " சரணடைந்த எமது போலீஸாரில் 600 பேரைக் கொன்று அரந்தலாவையில் எமது துறவிகளைக் கொலைசெய்து. பள்ளிவாசல்களில் தொழுகையிலீடுபட்ட முஸ்லீம்களை நூற்றுக்கணக்கில் வெட்டிக் கொன்று, சிறுவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்த ஒரு கொலைகாரனான கருணாவுடன் அரசியல் பேரம்பேசலில் சுதந்திரக் கட்சியோ, மக்கள் விடுதலை முன்னணியோ ஈடுபடுவது சரியானதா?" என்று கேள்வி கேட்டிருந்தது. ,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.