Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23926
    Posts
  3. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5418
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88006
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/02/21 in all areas

  1. ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.
  2. நாளாந்தம் நடக்கும் பிறந்தநாள் நிகழ்வுகளில் இந்தப் பாட்டு ஒலித்துக் கொண்டிருப்பதால் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும். அன்புத்தம்பி ஓரிரு வரிகளையும் இணையுங்கள்.
  3. நீரிலும் நிலத்திலும் படு பயங்கர சக்தி கொண்ட மிருகம்.......! 😎
  4. நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮 அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣 பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽 பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.
  5. வண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண்டகையே.🙏 அன்புடன் -பசுவூர்க்கோபி-
  6. நூறாண்டு காலம் வாழ்க.......! 👍
  7. Movie | Vettaikkaran | Starring: MGR, Savithri Sung By T.M.Sondararajan | Music by K.V.Mahadevan Year: 1964
  8. முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நீ (கற்பனை என்றாலும்) அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே அருமறை தேடிடும் கருணை என் கடலே (கற்பனை என்றாலும்) நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே (கற்பனை என்றாலும்)
  9. என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேசுவை நீ பாடு (2) 1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2 என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு இயேசிடம் உனை வழங்கு 2. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2 என் காதே இயேசுவின் மொழி கேளு இயேசுவின் மொழி கேளு 3. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2 என் உயிரே இயேசுவின் பதம் நாடு இயேசுவின் பதம் நாடு அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க வாழ்க மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க (2) வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே அன்னையே வாழ்க அமலியே வாழ்க - வாழ்க வாழியவே 1. மாமரியே மாதவளே வாழ்க வாழ்க மாந்தர்களை காப்பவளே வாழ்க வாழ்க (2) மனமகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க 2. இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க மறைபோற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க (2) வான் மண்ணின் ராக்கினியே வாழ்க வாழ்க வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்க
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அழகு திருமுகம் ஆயிரம் நிலவு லாயிலாஹ இல்லல்லாஹ்
  11. 2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2006 ஆனி மாதத்தில் கருணா குழுவினரால் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயாரை மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் செயற்பாட்டாளர்கள் செவ்விகண்டனர். ஆனி மாதத்தில் தன்னிடமிருந்து கருணா குழுவினரால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட மகன் ஐப்பசியில் இறந்துவிட்டதாக கருணா குழுவினரால் அத்தாய்க்கு அறிவிக்கப்பட்டது. அயலவர்களின் கருத்துப்படி கொல்லப்பட்ட சிறுவனை தீவுச்சேனைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமது முகாமிலேயே கருணா குழு எரித்ததாகவும், தான் எவ்வளவுதான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும்கூட தனது மகனின் உடலைத் தன்னிடம் தரமறுத்துவிட்டதாகவும் அத்தாய் கூறுகிறார். இப்படிக் கொல்லப்பட்ட சிறுவனும், மேலே இன்னொரு சிறுவனால் தன்னருகில் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சிறுவனும் ஒரே ஆளாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது. மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்வதிலிருந்து நிறுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். கருணா குழுவினரால் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டு தேவையற்ற போர் ஒன்றிற்குள் பலியிடப்படலாம் என்கிற அச்சமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அரச ராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தில் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு கருணா குழுவினரால் நடத்தப்பட்டு வரும் கடத்தல்கள் கடுமையான அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. "நான் எனது 14 மற்றும் 15 வயதுப் பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்லவேண்டாம் என்று நிறுத்திவிட்டேன்" என்று ஒரு தாய் கூறினார். "எனது கணவரைக் கொன்றுவிட்டார்கள், எனது பிள்ளைகளையும் இழக்க நான் தயாரில்லை" என்று இன்னொரு தாய் கூறினார். இன்னும் சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் தாமும் பாடசாலைக்குச் சென்றுவருவதாகக் கூறுகின்றனர். மட்டக்களப்பில் சில பெற்றோருடனும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களுடனும் பேசியபோது, சில சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் சிலர் தாமாகவே கருணா குழுவுடன் இணைந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர். சர்வதேச சட்டங்களின்படி, ஆயுதக் குழுவொன்றிலோ ராணுவத்திலோ தமது விருப்பத்தின்பேரில் ஒருவர் இணைய விரும்பினால்க் கூட தகுந்த வயதினை அடையும்வரை அவரை இணைத்துக்கொள்ள முடியாதென்கிற நியதி இருக்கிறது. "எமது அயல்க் கிராமத்தில் 10 அல்லது 12 வயதுள்ள சில சிறுவர்கள் கருணா குழுவில் இணைய விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. தமது வயதினை ஒத்த சிறுவர்கள் ஆயுதங்களுடன் வலம்வருவதைப் பார்க்கும்ப்போது இச்சிறார்களுக்கு ஆயுதக் குழுவில் இணையும் ஆசை உருவாகியிருக்கிறது, அத்துடன் அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்டுவருவதாக அறிகிறேன்" என்று ஒரு தாய் கூறினார். தை மாதம் 2007 ஆம் ஆண்டில் ஐ நா செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துதல் தொடர்பான கண்டனத்தில் கருணா குழுவினரின் பலவந்த ஆட்ச்சேர்ப்புப் பற்றியும், சிறுவர் கடத்தல்களில் ராணுவத்தினரின் பங்குபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் .
  12. 2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2006 ஆடி மாதத்திலிருந்து தனது ராணுவ நண்பர்களுடன் மக்கள் மத்தியில் பகிரங்கமாக உலாவரத் தொடங்கியது கருணா குழு.இக்குழு தனது ஆயுததாரிகளின் பிரசன்னத்தை மட்டக்களப்பு எல்லைகளைத் தாண்டி பொலொன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தைவரை விஸ்த்தரித்தது. அத்துடன் தனது அரசியல்ப் பிரிவு என்று சொல்லிக்கொண்ட தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் எனும் அமைப்பை கிழக்கின் பலவிடங்களிலும் திறக்க ஆரம்பித்தது. ஆனால், இந்த அரசியல் அலுவலகங்களிலிருந்துதான் கருணா குழு கடத்தல்களை நடத்தியிருந்தது. மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கருணா குழுவின் கடத்தல்கள் தலைவிரித்தாடத் தொடங்கிய நாட்களுக்கு சற்று முன்னரே நகரில் தனது அரசியல் அலுவலகத்தினை அது திறந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. திருகோணமலை மாவட்டத்திலும் இதேவகையான யுத்தியையே கருணா குழு கைக்கொண்டது. திருகோணமலை நகர்ப்பகுதியில் கருணாவால் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே நகர்ப்பகுதியில் இருந்து குறைந்தது 20 சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றிருக்கிறது. 2006, புரட்டாதி மாதம் 24 ஆம் திகதி செங்கலடியில் , சித்தாண்டி ராணுவ முகாமிற்கு அருகாமையில் கருணாவினால் அரசியல் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. அவ் அலுவலகம் திறக்கப்பட்டு நாளிலேயே அப்பகுதியில் 12 சிறுவர்களை கருணா குழு கடத்திச் சென்றிருந்தது. அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று பகுதியில் கருணா குழுவின் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்ட நாட்களிலேயே கடத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி, ஆவணி புரட்டாதி ஆகிய மாதங்களில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் மட்டக்களப்பு நகரில் உலாவருவதனை உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் அவதானித்துள்ளனர். மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்தபோது கருணா குழுவினரின் பலமான பிரசன்னத்தை கண்ணுற்றதாகத் தெரிவித்திரிக்கிறார்கள். கருணா குழுவின் பெயர்ப் பலகைகளும், பதாதைகளும் நகர வீதிகளிலும், தெருக்கோடிகளிலும் பரவலாகக் காணப்பட்டதாக இவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். நகரின் பெரும்பாலான ராணுவ மற்றும் பொலீஸ் சோதனைச் சாவடிகளில் ராணுவத்தினருடன் ஆயுதம் தரித்த கருணா குழு உறுப்பினர்களும் பகிரங்கமாகவே மக்களை சோதனைசெய்வது மற்றும் தடுத்துவைப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் முறையிட்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அரச ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் தறுவாயில், இப்பகுதிகளில் கருணா குழு அருகருகே அமைந்திருக்கும் சோதனைச் சாவடிகளினூடாக சிறுவர்களை ராணுவத்தினரின் அனுமதியின்றிக் கடத்திச் செல்வதென்பது இயலாத காரியம் என்று மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். புரட்டாதி மாதமளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான், மாங்கேணி, சந்திவெளி, செங்கலடி, வாழைச்சேனை, மண்முனை (வடக்கு மற்றும் தென்மேற்கு) போரதீவுபற்று, கோரளைப்பற்று ( வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு), காத்தான்குடி, ஏறாவூர் நகர்ப்பகுதி, மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பல பகுதிகளில் கருணா குழுவினரால் சிறுவர்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்த கிராமங்கள் ராணுவ பொலீஸ் முகாம்களுக்கு மிக அண்மையிலும், ஒவ்வொரு கிராமத்திற்குமிடையிலான வழிநெடுகிலும் ராணுவச் சோதனைச் சாவடிகள் தொடர்ச்சியாக இருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது. கருணா குழுவினரால் சிறுவர்களும் பதின்ம வயதினரும் வீடுகள், வேலை செய்யும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது வீதிகள் மற்றும் திருமண நிகழ்வுகள் ஆகிய பல இடங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டனர். இவற்றுக்கும் மேலாக வாகரைப் பகுதியில் அரச ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து உயிரைக் காப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அகதிகளாகக் குடியேறியிருந்த முகாம்களிலிருந்து பல சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றதாக முறைப்பாடுகள் உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களிடம் பதியப்பட்டிருந்தன. இவ்வாறு கடத்தப்பட்ட சிறார்களில் பலர் கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் போர் நடவடிக்கைகளில் கருணாவினால் ஈடுபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைத் தேடி கரபோல பகுதியில் கருணா அமைத்திருந்த முகாமிற்கு வந்திருந்த அச்சிறுவனின் தந்தை தனது மகன் மோதலில் காயமுற்றுக் கிடப்பதை கண்ணுற்றிருக்கிறார். "அவனது காதும், கால்களும் நெருப்பில் எரிந்து கறுப்பாக இருந்தன. மோதல் ஒன்றின்போது தனக்கருகில் குண்டொன்று வெடித்ததாகவும் தனது நண்பன் தனக்கருகிலேயே இறந்துவிட்டதாகவும் தான் காயப்பட்டதாகவும் அவன் என்னிடம் கூறினான்" என்று அத் தந்தை தெரிவிக்கிறார்.
  13. பிறந்தவுடன் நீந்திக் கரையேறும் நீர்யானைக் குட்டி......! 🐮
  14. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
  15. சொர்க்க வாசல்...❣️
  16. நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???
  17. காவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --
  18. இரவில் டோர்ச் லைட் டின் வெளிச்சம் கூட தயங்கி தயங்கி நகரும் கடும் இருள் நிறைந்த வளவு. இலுப்பை மரங்களின் உச்சியில் தங்கி தூங்கும் வெளவால்களின் எச்சங்களால் நிறைந்திருக்கும் சிறு காடு போன்றது இந்த வளவு. பகலில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்காக மட்டும் சிலர் வந்து போனாலும், பலர் உள் நுழையவே அஞ்சும் தோற்றத்துடன் உள்ள இந்த வளவின் மண்ஂணுக்குள் புதைக்கப்பட்ட பெண் போராளிகளின் ஆவிகள் இரா காலங்களில் நாவல்மரங்களில் மீதேறி இருந்து தமக்குள் அரட்டுவதை கேட்ககூடியதாக இருப்பதாகவும் திகில் நிறைந்ததாகவும் சப்தங்களால் நிறைந்து இருப்பதகாவும் அயல் சனங்களால் சொல்லப்படும் பெரும் வளவு இது. அதன் மூலையில் என் சிறு குடில் . கொழும்புத்துறை வீதியில், கணக்கர் சந்திக்கு அருகில் இருக்கும் இந்த வளவுக்குள் நீண்டு செல்லும் ஒழுங்கையின் முடிவில் இருக்கும் இந்த காட்டு வளவின் மூலைக்குள் இரவில் நான் மட்டும் தனியாக நடந்து என் குடிலுக்குள் வரும் போது ஒரு போதும் நான் ஆவிகளின் சத்தங்களையோ அல்லது அயல் சனங்களால் சொல்லப்படும் எந்த பேய்களையுமோ பார்த்ததில்லை. இலுப்பை மரங்களின் இலைகளை சாப்பிட்டு விட்டு மந்தமாக அதே வளவுக்குள் படுத்து கிடக்கும் சில ஆடுகளை மட்டும் எப்பவாவது சில நாட்கள் பார்த்து இருக்கின்றேன். மற்றப்படி இந்த வளவு என் வாழ்வு. என் பெயர் கோசலை. எனக்கு வயது எத்தனை என்று தெரியாது. எப்ப பிறந்தேன், எங்கு வளர்ந்தேன் என்று நினைவில்லை. மஸ்கெலியாவில் இருந்து ஆத்தையுடன் இந்த ஊருக்குள் வந்த எனக்கு கோசலை என்று பெயர் மட்டுமே சொந்தமாக இருந்தது. பின் 5 பிள்ளைகள் ஒவ்வொருவரால் பிறந்து எனக்கு என்று ஒரு குடும்பம் ஆனது. பின் அந்த ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொரு வீடுகளில் வேலைக்கு வீட்டுக்கார முதலாளிகாளால் கவரப்பட எஞ்சியது இந்த குடிலும் இரவில் சத்தம் போடும் வெளவால்களும் மட்டுமே நான் நல்ல கறுப்பு, என்னை தொட்டு நெற்றியில் வைத்தால் போதும் கருப்பு பொட்டு உன் கலரில் இருந்தே வந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு நான் கருப்பு. ஆனால் நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு வைத்து விட்டால் "அடியே உன்னை அடிக்க இந்த ஊரில் ஒரு அழகியும் இல்லையடி' என்று ஊரில் இருக்கும் பெண்கள் தம் வாயாலேயே சொல்லும் அளவுக்கு என் அழகு கூடிவிடும். இந்த அழகில் விழுந்தவர்கள் எல்லாம் ஒரு சில மணித்தியாலங்களில் தம் பசி தீர்த்த பின் சில சில்லறைகளை வீசி விட்டு விலகிச் சென்று விட மீண்டும் எனக்காக காத்திருப்பது இந்த வளவும் என் குடிலும் தான். சிவனே என்று இரவில் வந்து ஒரு தலையணையை என் குடிலில் இருக்கும் மண் நிலத்தில் போட்டு விட்டு படுத்தால் அப்படி ஒரு நித்திரை வரும். நான் நித்திரை கொண்டால் எவராலுமே எழுப்ப முடியாது. ஆனாலும் இக் குடிலில் இருந்து ஐந்து நூறு அடிகள் எடுத்து வைத்தால் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து வேலைக்காரியாக இருக்கும் என் பத்து வயது மகள் அடி வாங்கி அலறும் சத்தத்தில் மட்டும் எப்படி விளிக்கின்றேனோ தெரியவில்லை. நாளைக்கு காலையில் எழும்பி வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நினைவுடன் படுத்து விடியவே எழும்புகின்றேன்.எனக்கென்று மன்றாட ஒன்றும் இல்லையென்றாலும் என் ஐந்து பிள்ளைகளும் இப்படியே அடி வாங்கி சாகாமல் என்றாவது ஒரு நாள் கலியாணம் கட்டி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நேர்த்தி வைக்கவாவது நான் ஒவ்வொரு செவ்வாயும் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு போகின்றவள். ஒரு நாளாவது அம்மன் எண்ட நேர்த்தியை காதால கேட்காமலா விடுவாள். விடியவே எழும்பிட்டன். வளவின் இன்னொரு மூலையில் இருந்து காட்டுக் கிணற்றில் வாளி போட்டு குளித்து விட்டு காலம்பற 6 மணிக்கு போய் கணக்கர் சந்தியில் நிற்கின்றேன். கொஞ்ச நேரத்தில் வான் பஸ் வரும். இந்த காலையில் சைக்கிளில் ரியுசன் கிளாசுக்கு சில பிள்ளைகள் சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கின்றனர். அதில் கொஞ்சம் வளர்ந்த பெடியங்களும் போவதால் அந்த பெடியன் எனக்கு அருகில் வரும் மட்டும் அவனை நான் கவனிக்கவில்லை. கிட்ட வருகின்றான். அவனை எங்கோ பார்த்து இருக்கின்றேன் என யோசித்து அவன் யார் என்றதை நினைவுபடுத்த முன் அவன் என்னை நெருங்கிவிட்டான். அவன் யார் என நினைவுக்கு வருகின்றது. இனி ஓட முடியாது. ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம். அம்மாளாச்சி மேல அடிச்சு சத்தியம் செய்தால் என்னை விட்டு விடுவான். அவன் விடவில்லை அருகில் வந்தவன் "நீங்கள் எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை" என்று சொல்கின்றான். பிஸ்டலை இடுப்பில் இருந்து எடுக்கின்றான். என் நெற்றியில் வைக்கின்றான். எனக்கு நல்ல வடிவாக இருக்கும் பொட்டில் துப்பாக்கி முனை அழுத்துகின்றது வெடி வைக்கின்றான் என் தலை சிதறுகின்றது பின் மண்டை வழி வெளியே வந்த மூளை சிதறி சின்னஞ்சிறு துண்டுகளாக அருகில் இருக்கும் வேலிக் கதியால் எங்கும் மஞ்சளும் வெளுப்பும் நிறைந்த நிறத்தில் போய் ஒட்டிக் கொள்கின்றது. மண்டையில் இருந்து வெளியேறிய இரத்தம் ஒரு சிறு தீவென விரைய, அதில் கிளைத்த இன்னொரு சிறு இரத்த தீவு எதையோ தேடி அலைந்தவாறு நீள்கின்றது. தன்னை கொல்ல சொன்ன அறம் ஏன் தன்னை மட்டும் ஏன் கொல்கின்றது என்று நியாயம் கேட்பதற்காக அது விரைகின்றது போல... என் இறுதி மூச்சு நிற்கும் முன்னர் என்னைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல கிடக்கு. அது எனக்காக அல்ல... நியாயம் தேடி விரைந்து கொண்டு இருக்கும் என் இரத்தத்தின் நீட்சி அமைதியடைய. -தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.