Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38771
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/23/21 in all areas

  1. கடவுள் வேறு, கடவுள் சிலைகள் வேறு.....வாரியார் சுவாமிகள்......! 🌹
  2. நீங்கள் சரியான அல்பமாய் இருக்கிறீங்கள் பிரியன்.....மணமகளுக்கு ஒரு 18ல் இருந்து 20 க்குள் என்று மாற்றி விண்ணப்பிக்கவும்.......! 😁 கணிதம் : 62 - 18 = 44.....! 18 - 62 = ? 😴.....!
  3. *உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?* நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!! டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! *பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!* *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...* *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.* *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..* எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*, உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?* *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?* *இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!* *மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.* எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது. *லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*. *லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.* *உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!* *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!* எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள். *கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?* யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும். *தீதும் நன்றும் பிறர்தர வாரா.*
  4. வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பார்த்திருத்தும் மனித புத்தியின் சபலம் மாறுவதில்லை என்பது தான் விசித்திரம்.. ராஜ் ராஜரத்தினத்தை தெரியாத இலங்கைத் தமிழர் இருக்க முடியாது . சிறையில் இருந்து வெளியே வர இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் நிலையில் "UNEVEN JUSTICE" என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார் . வசதி எண்டால் வாசித்துப் பாருங்கோ .. Raj Rajaratnam releases book titled ‘Uneven Justice’ | Daily FT https://www.ft.lk/front-page/Raj-Rajaratnam-releases-book-titled-Uneven-Justice/44-723285?fbclid=IwAR2UbivxVngPpA3aSaTdrBcPrcusXKchhQFOA5ILWjn5dLVsv9DEG1vUUXY#.YUpqIGxk1IZ.gmail
  5. தானாக சென்று தண்ணீரில் கரைந்த பிள்ளையார்......! 😂
  6. இந்திய வரலாற்றில் காணாத புகைப்படங்கள்.......! 😁
  7. தவணி = தாவணி குலங்களையும் = குளங்களையும்… இந்த மாதிரி எழுத்து பிழைகள சுட்டி காட்டி வருங்கால சந்ததியினருக்கு சரியான தமிழை சொல்லி குடுக்கற கடைசி தலை முறையும் நாம் தான்…
  8. பங்கு வர்த்தகம் சவால்கள் நிறைந்த ஒன்றுதான், முன்பு குறிப்பிட்டது போல யூ டுயூப் விடியோ மற்றும் புத்தகங்களில் வாசித்து விட்டு எப்படி மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் பங்கு வர்த்தகமும். ஒருவர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது நவீன தொழில் முறையில் வெற்றி பெறுவதற்கு எமது உள்ளுணர்வு தடையாகவிருக்கிறது என கூறுகிறார்கள். கற்கால மனிதனின் சுய பாதுகாப்பு பொறிமுறை அதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகிறார்கள். fxcm என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது, அதில் 90% அவர்களது வாடிக்கையாளர்கள், தமது பணத்தினை இழப்பதாக வெளியிட்டிருந்தது. அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன். அதன் பின்னர் இடம்பெற்றது இன்னும் வேடிக்கையானது, அந்த நிறுவனம் நாணயச்சந்த்தையில் CFD முறையில் வர்த்தகத்திலீடுபட்டது 90% எப்படியோ பணத்தை இழக்கப்போகிறார்கள்தானே அதனை நேரடியாக தமது வங்கியில் போட்டு விட்டார்கள் (Hedge செய்யவில்லை). 2018 தை அல்லது மாசி ஆக இருக்கலாம் ஒரு பாகிஸ்தானிய நாணய வர்த்தகரால் போலியான விற்றல் வாங்கல்களை கணனியில் உருவாக்கியதன் மூலம் ஒரு சடுதியான சரிவை குறுகிய நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது (flash crash) இதனால் பல பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கட்டுபடுத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதனால் அவரை சாதாரண நாணய வர்த்தகர்கள் ரொபின் கூட் வர்த்தகர் என கூறுகிறார்கள், இந்த நிகழ்வின் போது fxcm நிறுவனம் ஏறத்தாழ வங்குறோத்து நிலையை எட்டியது.
  9. இந்த பிழப்புக்கு ஊர் குளத்திற்கு "சிரமதானம்" கொடுத்திருந்தா 4 சனம் வாழ்த்தி இருக்கும்..😢
  10. https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/4478643308840790 கீழடி அகழாய்வின் பலப்பல மட்பொருள்கள் கிடைக்கின்றன. கீழே படத்தில் உள்ளதும் அவ்வாறு கிடைத்த பெருமட்பாண்டம்தான். கையாளத்தக்க அளவில் உள்ள மட்பொருள்களைச் சட்டி, பானை, கலயம் எனலாம். சற்றே பெரிதாக இருப்பதனைத் தாழி எனலாம். அது இறந்தோரை இட்டு மண்ணில் புதைக்கும் கலமாக இருப்பின் ’முதுமக்கள் தாழி’ ஆகிவிடும். சேர்த்து வைக்கப் பயன்படும் பெருமட்பாண்டங்களை என்னென்று அழைப்பது ? அதற்கு ‘மொடா’ என்று ஒரு சொல் இருக்கிறது. அளவிற்பெரிய, அடுக்கத்தக்க, மட்பானையைத்தான் மொடா என்பார்கள். இது ‘மொடு’ என்ற சொல்லிலிருந்து பெறப்படுவது. ‘மொடு’ என்பதற்குப் பருமை, மிகுதி என்னும் பொருள்கள் உள்ளன. முகிழ்த்து முனைகுவிந்து பருக்கும் மலர்ப்பொருள் ‘மொட்டு’ எனப்படுவதும் இவ்வாறே. மொடாப் பானையின் வடிவமும் மொட்டு வடிவில் வாய் குவிந்திருப்பதைக் காண்க. தாழிக்கும் மொடாவுக்கும் உள்ள வேறுபாடு இது. இரண்டும் பேரளவுப் பொருள் இட்டு வைக்கும் கலன்கள் என்றாலும் தாழி வாயகன்றது. மொடா வாய்குவிந்தது. வாயகன்று இருப்பதால்தான் தாழியை ஆடு மாடுகட்குத் தண்ணீர் காட்டப் பயன்படுத்துவார்கள். ‘மொடா’ என்ற சொல்லை மக்கள் எப்போதும் பயன்படுத்தினார்கள். மொடாக்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்தது. அடுக்கிலுள்ள கீழ் மொடா அளவிற் பெரிது. அதன்மேல் வைக்கப்படும் மொடா ஒப்பீட்டில் சற்றே சிறிது. அந்த அடுக்கம் கூம்பு வடிவில் மேலேறிச் செல்லும். அதற்கு ‘அடுக்கு மொடா’ என்று பெயர். “அந்த அடுக்கு மொடாகிட்ட வெச்சிருக்கேன் பாரு” என்று சொல்வார்கள். கள்ளு வடித்துச் சேர்க்கவும் சாராயம் ஊறவைக்கவும்கூடப் பயன்படுத்தப்பட்டது மொடா. அதனால்தான் பெரிய குடிகாரர்களை ‘மொடாக்குடியன்’ என்றார்கள். ஒரு மொடா அளவிற்குக் கள்ளூற்றி வைத்திருந்தாலும் குடித்துவிடுபவர்கள். “ஒரு சட்டி சோறும் ஒரு மொடாக் கள்ளும்” நன்கு உண்டு திளைப்பவர்களின் தேவையாக இருந்தவை. “கிடா கிடாக் கறி அடுப்பில கிடக்கு, மொடா மொடாக் கள்ளு ஊத்து” என்ற திரைப்பாடலும் உண்டு. அதனால் பெரும்பானைகளைக் குறிப்பிடுவதற்கு ‘மொடா’ என்ற சொல்லைத் தவறாமல் பயன்படுத்துங்கள். அடிப்பாகம் தரைப்பொருத்தமாய் உள்ளதால் சமதரையில் ஒரு மொடா எப்படிச் சாயாமல் நிற்கும் ? தஞ்சாவூர் பொம்மையைப்போல் ஆடுமே. அப்படிச் சாயாமல் ஆடாமல் அடிப்பகுதியில் நிறுத்துதற்கு ஒரு பொருள் உண்டு. அதற்குப் ’புரிமணை’ என்று பெயர். பேச்சு வழக்கில் சிலர் ‘பிரிமணை’ என்பார்கள். வைக்கோலையோ அல்லது வேறு நார்க்கொடிகளையோ புரிபுரியாய்ச் சேர்த்து வட்டமாய்ப் பின்னுவதால் கிடப்பது புரிமணை. புரிகள் சேர்த்து மணையிடப் பயன்படுவது. ஆண்பாவம் படத்தில் தம்மிரண்டு பிள்ளைகளும் பெண்டாட்டிக்கு அடிபணிந்து வாழ்வார்கள் என்பதை உணர்ந்து வி. கே. இராமசாமி தம் தாயாரிடம் ஒன்றைச் சொல்வாரே, நினைவிருக்கிறதா ? “மருமக வந்தவுடனே அவதான் சாணி தெளிச்சு கோலம் போடுவான்னு நீ நினைக்கறியா ? அவளுக்கு இவனுகதான் எல்லா வேலையும் செய்யப் போறானுக. வேண்ணா பாரு, பொண்டாட்டிக்குச் சரியான பிரிமணையா இருக்கப் போறானுக.” புரிமணை எப்படிப் பயன்பட்டிருக்கிறது, பாருங்கள் ! - கவிஞர் மகுடேசுவரன் https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/4478643308840790

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.