Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    33600
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20024
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38778
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/24/21 in all areas

  1. டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங் மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்😎
  2. மிகவும் தவறான முதலிடும் முறை, வாழும் வீட்டை அறுதி வைத்து கடன் எடுத்து (equity release) முதலிடுவது. ஒரு விதத்தில் short (கடன் எடுத்து) longing (முதலிடுவது); இன்னொரு விதத்தில், 1:1 leverage; வாழும் வீட்டை அறுதி வைத்து. இதில் உழைத்தவர்களும் இருப்பார்கள். அனால், risk மிகவும் அதிகம். பெரும் மனித வளத்தையும், கணனி சக்தியையும் (computing power) போன்றவற்றை வைத்து கணித்து, எதிர்வு கூறி, முதலிடும் நிறுவனங்களின் கணிப்பே அவ்வப்போது யதார்த்தமான சந்தை போக்கிற்கு எதிர்மாறாக இருக்கும் போது , தனிநபர் ஒரு போதும் அந்த நிறுவனங்களின் odds ஐ மீற முடியாது. வாழும் வீட்டை விட ,வேறு ஏதாவது சொத்துக்களை அறுதியாக வைத்து, non-recourse loan (கடன் கட்ட முடியாத நிலை வந்தால், அந்த அறுதி வைத்த சொத்து மட்டுமே சட்ட அடிப்படையில் எடுக்கப்படலாம் கடன் தந்த நிறுவனத்தால்) இற்கு கடன் எடுப்பது மிகவும் risk குறைந்த தெரிவு. அல்லது சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலிடுவது. முதலிடுவதில், முதலாவது rule of thumb, முதலிடும் பணத்தை இழந்தால் உங்களுக்கு ஏற்படும் மனத்தாக்கத்தை விட, உங்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பாதிக்காததாக இருக்க வேண்டும்.
  3. நல்லதொரு இணைப்பு.. “Don’t try to predict the future” என்றதற்கு அவரின் உதாரணம் 👌 ஆனால் அதிகம் ஆபத்துவிரும்பிகள் அற்றவர்களுக்கு Housing marketல் முதலீடு செய்வது ஆபத்து குறைவானது. அதுவும் இப்பொழுது இங்கே(அவுஸ்ரேலியாவில்) எப்பொழுதும் இல்லாதவாறு குறைந்த வட்டி வீதம் காணப்படுவதால் வீட்டுக் கடன்களை பெருமளவில் குறைக்கலாம்.. வீட்டுகடனிலிருக்கும் மிகையான equityயை வைத்து பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. ஆனால் எப்பொழுது இந்த வட்டி வீதம் ஏறுமுகமாகும் என்பது தெரியவில்லை.. ஏனெனில் இப்பொழுதான் இந்த செய்தியையும் பார்த்தேன் “Australia's biggest bank sounds the alarm on rapid surge in house prices over fears borrowers will struggle to repay their debt” https://www.google.com.au/amp/s/www.dailymail.co.uk/news/article-10023295/amp/The-Commonwealth-Bank-CEO-Matt-Comyn-rising-Australian-house-prices-debt-levels.html குறுகிய கால வீழ்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகவும் இருந்தால் ஏமாற்றங்களையும் நட்டத்தையும் குறைக்க முடியும்.. உண்மை..
  4. திருமதி சுவியின் வெகுமதி........! பிரான்சில் இன்று அன்னையர் தினம் ......!
  5. பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்கம் யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம். அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன். @vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன். மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள். ஆகவே, பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம். பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே:
  6. 2008 இல் அமெரிக்க பொருளாதாரம் அடிபட்டதற்கு இதுவே காரணம். வங்கிகள் வீட்டுக்கதவு தட்டித்தட்டி ஈகுவல்ரி கொடுத்தார்கள். வீட்டு பெறுமதிக்கு கூடுதலாக வருமானங்களை அளவீடு செய்யாமல் வங்கிக்கு வங்கி போட்டி போட்டு அள்ளிக் கொடுக்க சொல்லிவைத்து செய்த மாதிரி எல்லோருமே முழு பணத்தையும் அமுக்கி வீட்டு மோட்கேச்சையும் கட்டாமல் விட்டுவிட்டார்கள். இதனால் சகல வங்கிகளுமே திவாலாகிப் போக இருந்ததை ஒபாமா அரசு வட்டி இல்லாமல் கொடுத்து உயிர்ப்பித்தது. அந்தநேரம் தெருவுக்கு தெரு வீடு போகுளோசராக இருந்தது.
  7. விரைவில் விசாரித்து போடுகிறேன் நிழலி ......இந்த பதிவை காட்டி கேட்டால் ஆளுக்கு கெப்பர் கூடிடும்தான் என்றாலும் பரவாயில்லை......! 😁
  8. நீங்கள் இருவர் கூறுவது சரியே.. ஆனால் இந்த முறையில் இரண்டாவது வீட்டினை(Investment ppty) வேண்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களது வீட்டின் தற்போதைய பெறுமதி Aus$800,000 என்றும் மீதமுள்ள கடன் Aus$300,000 என்றால் உங்களது equity Aus$500,000. இதை வைத்து South Australiaவில் ஒரு unit வேண்டி வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? இவ்வளவும் உங்களுடைய affordability, மற்றும் வங்கிகள் உங்களது வருமான நிலை, வயது, உங்களில் தங்கியிருப்பவர்களின் வயது போன்ற பல காரணிகளை வைத்தே அனுமதிக்கும் ஆனால் உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? நான் நினைப்பது தவறாக இருந்தால் சரியாக விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்.. நன்றி.
  9. இது எனது தனிப்பட்ட கருத்து. அவுஸ்ரேலியாவில் 2011ற்கு பின் வட்டி வீதம் ஏறவில்லை என்பதையும் 2010 ஆண்டின் இறுதி காலப்பதகுதியில் வீடு ஒன்றை வாங்கிய பொழுது இருந்த மதிப்பை விட இன்று வீட்டின் பெறுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதையும் காணலாம். அத்துடன் என்னைப் பொறுத்தவரை வீட்டின் பெறுமதி சடுதியாக குறைய வாய்ப்பில்லை என்பதால் வீட்டின் மீது முதலிடுவதுதான் எப்பொழுதும் முதலாவது தெரிவாக இருக்கும். அதுவும் owner occupied ஆக வேண்டாமல் investmentஆக வேண்டுவது சில சமயங்களில் நன்மையாக இருக்கும்(இது முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம், life circumstancesஏற்ப) ஆனால் உங்களது affordabilityற்கு ஏற்ப வேண்டுவது சிறந்ததாக இருக்கும்.. அதே நேரம் இரண்டு வாரங்களிற்கு முதல் WBC Chief Economist Bill Evansன் பேட்டி ஒன்றை வாசித்த பொழுது அதில் அவர் கூறியிருந்தார் “ 2023 ஆண்டின் முதலாவது காலாண்டில் வட்டி வீதம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார்.. ஆனால் அதுவும் அதிகளவில் அதிகரிக்காது” என்கிறார்.. https://www.google.com.au/amp/s/amp.theaustralian.com.au/business/bill-evans-westpac-chief-economist-still-getting-the-big-calls-right-after-30-years/news-story/c0cc4db6a1b3e0d8300710a38cf07d9b
  10. இதில் நான் கடஞ்சாவுடன் உடன்படுகிறேன். ரிடெய்ல் இன்வெஸ்டர்ஸ் இருக்கும் தொழிலை விடுவது, வாழும் வீட்டை வைத்து ரிஸ்க் எடுப்பது மிக ஆபத்தானது என்றே நான் நம்புகிறேன். அதிக் பட்சம் அடுத்த வருட கொலிடேக்கான செலவு, புது கார் வாங்கும் செலவில் ரிஸ்க் எடுக்கலாம். Tempting ஆக்அ இருக்கும், ஆனால் only play with what you can afford to lose ஒரு மீறக்கூடாத விதி (cardinal rule) என நினைக்கிறேன்.
  11. வசி இங்கே எழுதப்படும் கருத்துகள் எல்லாம் முதலாவதாக உள்ள டிஸ்கிளைமரில் அடங்கி விடும். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள். வீட்டு விலை - டிமாண்ட், இருக்கும் வரை வீட்டு விலை சடுதியாக குறைய வாய்ப்பு இல்லை. 2008 sub prime பாடத்தின் பின் எந்த பெரிய நாட்டினதும் வங்கிகள் முன்பு போல் அதிகம் ரிஸ்க் எடுப்பதும் இல்லை. ஆகவே மந்த நிலையை அடைந்தாலும் விலை குறைப்பு சடுதியாக நடக்கும் என நம்பவில்கை. ஆனால் யூகேயில் affordability யை இலகுவாக்க 5% டிபோசிட் உடன் மோர்ட்கேஜ் கொடுப்பது, part buy, part rent இல் ஒரு பகுதியை அரசு வாங்குவது என சில வேலைகள் செய்கிறார்கள். இவை எல்லை மீறி போனால் - தாக்கம் வரலாம். பெரிய தாக்கம் - இண்டிரெஸ்ட் ரேட், பணவீக்க இரட்டைகளால் வரும் என்றே நினைக்கிறேன். நேற்று, இங்கிலாந்து வங்கி தொடர்ந்தும் 0.1% இல் அடிப்படை வட்டியை வைத்தது. ஆனால் இதுதான் கடைசி இந்த நிலையில் என நினைகிறேன். 2022 முதல் காலாண்டில் பணவீக்கம் 4% ஆகும் என்கிறார்கள். எனவே இப்போ முடியுமானவர்கள் 2/5 வருட fixed rate மோர்ட்கேஜ் எடுப்பது பலனைத்தரலாம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். மாற்று கருத்துகள் வரவேற்கப்படுகிறன. அதேபோல் பிரெக்சிற் காரணமாக வேலைக்கு ஆக்கள் இல்லா பிரச்சனை இங்கே இப்போ. சம்பளம் கூடுகிறது. அதேபோல் பெருந்தொற்றில் இருந்து மீளும் பொருளாதாரமும் பணவீக்கத்தை கூட்டும். இப்படி பணவீக்கம் கூடினால், அதே நேரம் சப்ளையை விட டிமாண்ட் அதிகமாக இருந்தால் அது வீட்டு விலையை ஆரம்பத்தில் இன்னும் கூட்டலாம்? ஆனால் கொஞ்ச நாளைக்கு பிறகு விலை flatline ஆகலாம்? யூகேயில் இப்போ டிரக் டிரைவர் இல்லாததால் உணவு, பெற்றோல் விநியோக பிரச்சனை வரும் என்கிறார்கள். அடுத்து காஸ் விலை ஏற்றம் - இப்படி சவால்களும் பல இருக்கிறன. ஆனால் 0.1% வட்டி வீதகாலம் விரைவில் முடிவுக்கு வருகிறது என்றே நினைகிறேன்.
  12. திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம்.......! 👍
  13. மிருகங்கள் குடுக்கும் நக்கல்கள் காமத்தில் சேர்த்தியல்ல.......! 😂
  14. தானாக சென்று தண்ணீரில் கரைந்த பிள்ளையார்......! 😂
  15. கடவுள் வேறு, கடவுள் சிலைகள் வேறு.....வாரியார் சுவாமிகள்......! 🌹
  16. கண்ணதாசன் & நாகேஷ் ......! 😂
  17. தவணி = தாவணி குலங்களையும் = குளங்களையும்… இந்த மாதிரி எழுத்து பிழைகள சுட்டி காட்டி வருங்கால சந்ததியினருக்கு சரியான தமிழை சொல்லி குடுக்கற கடைசி தலை முறையும் நாம் தான்…
  18. பங்கு வர்த்தகம் சவால்கள் நிறைந்த ஒன்றுதான், முன்பு குறிப்பிட்டது போல யூ டுயூப் விடியோ மற்றும் புத்தகங்களில் வாசித்து விட்டு எப்படி மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் பங்கு வர்த்தகமும். ஒருவர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது நவீன தொழில் முறையில் வெற்றி பெறுவதற்கு எமது உள்ளுணர்வு தடையாகவிருக்கிறது என கூறுகிறார்கள். கற்கால மனிதனின் சுய பாதுகாப்பு பொறிமுறை அதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகிறார்கள். fxcm என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது, அதில் 90% அவர்களது வாடிக்கையாளர்கள், தமது பணத்தினை இழப்பதாக வெளியிட்டிருந்தது. அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன். அதன் பின்னர் இடம்பெற்றது இன்னும் வேடிக்கையானது, அந்த நிறுவனம் நாணயச்சந்த்தையில் CFD முறையில் வர்த்தகத்திலீடுபட்டது 90% எப்படியோ பணத்தை இழக்கப்போகிறார்கள்தானே அதனை நேரடியாக தமது வங்கியில் போட்டு விட்டார்கள் (Hedge செய்யவில்லை). 2018 தை அல்லது மாசி ஆக இருக்கலாம் ஒரு பாகிஸ்தானிய நாணய வர்த்தகரால் போலியான விற்றல் வாங்கல்களை கணனியில் உருவாக்கியதன் மூலம் ஒரு சடுதியான சரிவை குறுகிய நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது (flash crash) இதனால் பல பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கட்டுபடுத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதனால் அவரை சாதாரண நாணய வர்த்தகர்கள் ரொபின் கூட் வர்த்தகர் என கூறுகிறார்கள், இந்த நிகழ்வின் போது fxcm நிறுவனம் ஏறத்தாழ வங்குறோத்து நிலையை எட்டியது.
  19. இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம் எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும். வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்
  20. நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்போம். அதாவது மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து குஞ்சு பொரித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்த்திருப்போம். அதே மாதிரியான செயலில் மீண்டும் எங்களைக் கொண்டு போகும்.
  21. மலைகள் தாலாட்டும் கடலன்னை.......! (malte island)
  22. நாமும் அந்த காலதிற்கு பயணிப்பம்..☺️
  23. உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேசுங்கள்...... ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?” அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை” வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?” “தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா” திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான். இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா? எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
  24. உக்கிரமான வெய்யிலையும் உலர்த்தி வடிகட்டி தரையில் விடும் தருக்கள்.....! 🌳

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.