Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    39370
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33845
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19683
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7139
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/19/21 in Posts

  1. குமரன் பத்மனாதன் எனப்படும் கே பி இன் கைது நாடகம் பற்றி அந்த நாடகம் நடந்த சில மாதங்களின் பின்னர் மெலேசியாவிலிருந்து லங்கா கார்டியன் பத்திரிக்கைக்கு அங்கிருந்து முகம்மத் எனும் செய்தியாளர் எழுதிய கட்டுரை காலம் : ஆவணி, 2021 துரோகங்களுக்கிடையிலான போட்டி புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கே பி எனப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசாங்கத்தினதும், அதன் ராணுவ உயர் மட்டங்களினதும் செல்லப்பிள்ளையாக வலம் வரத் தொடங்கியிருப்பதுடன் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக உல்லாசமான வாழ்க்கையினையும் அனுபவித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அவன் அண்மையில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்களால, இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கடுமையான சீற்றம் அடைந்திருப்பதும் தெரிகிறது. தனக்கும் இலங்கையரசுக்கும் இடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை வெளிப்படையாகக் காட்டிவருவதன் மூலம் கே பீ தமிழர்களில் பல எதிரிகளைச் சம்பாதித்து வருகிறார் என்பது தெளிவு. அவர் அண்மைக்காலங்களில் வழங்கிவரும் பல செவ்விகளில் தான் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுதபற்றி மேலெழுந்தவாரியாகச் சொல்லிவரும் அதேவேளை, தான் கொழும்பிற்கு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரின் ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டதுபற்றி வாய்திறக்கத் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறார். இந்தியாவின் சர்வதேச புலநாய்வுத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி கே பீ யின் கைது என்பது கே பீ இற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் ரகசியமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் ஒன்றின்மூலமே அரங்கேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. புலிகளின் தலைமையினால் சிறிதுகாலம் சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கான பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டு பின்னர் மீளவும் இறுதி யுத்த காலத்தில் புலிகளின் தலைமையினால் முகவராக அழைக்கப்பட்ட கே பீ, அப்போதிருந்தே இலங்கை ராணுவத்தின் உளவாளியாகவும், புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராகவும் இயங்கி வந்திருக்கிறார் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். 2001 இல் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தக் காலத்தில் புலிகளின் சர்வதேச ஆயுதமுகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த தன்னை புலிகளின் தலைமைப்பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றிற்காக பதவியிறக்கம் செய்தமையினால் அவர் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. புலிகளைப் பழிவாங்க ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற கோபத்தில் இருந்த கே பீ இற்கு எவரை அணுகுவது என்பது அப்போது பெரும் பிரச்சினையாகவே மாறியிருந்தது. 2001 இன் பின்னர் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் பொறுப்பாக காஸ்ட்ரோ எனப்படும் வீரகுலசிங்கம் மணிவண்ணன் பிரபாகரனால் நியமிக்கப்பட்டதால் கடும் சினமுற்றிருந்த கே பீ தனது நெருங்கிய சகாக்களிடம் தனக்கு இயக்கம் மீதான நம்பிக்கை முற்றாக போய்விட்டதென்றும், தலைவர் சரியான காரணங்களைத் தனக்குக் கூறாமல் தன்னை பதவியிலிருந்து அகற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும், பிரபாகரன் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று கறுவியிருக்கிறார். புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் கே பீயை இலங்கையின் ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரனவோடு தொடர்புகளை ஏற்படுத்துமளவிற்குச் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் கபில ஹெந்தவிதாரணவும் கே பீ யும் பலதடவைகள் பங்கொக்கில் சந்தித்துப் பேசியிருப்பதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே காலப்பகுதியில் புலிகளின் முன்னாள்த் தளபதியாகவிருந்து பின்னர் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சார்பாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் கே பி ரகசியப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கியிருந்ததாகவும் பாங்கொக்கின் காட்டுப்பகுதியொன்றில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றதாகவும், அப்போதிருந்தே புலிகளுக்கெதிரான தனது செயற்பாடுகள் குறித்து கே பீ கருணாவுடன் பேசிவந்ததாகவும் அவ்வதிகாரிகள் கூறுகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரியொருவரான "சாம்" என்று புனைபெயருடன் அழைக்கப்பட்ட ஒரு முஸ்லீம் அதிகாரியும், அவரது சகாவுமே கே பீ இற்கும் கபில ஹெந்தவிதாரனவிற்குமிடையையிலான தொடர்பினை தாய்லாந்தில் வெற்றிகரமாகக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. காஸ்ட்ட்ரோ தலைமையில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஆயுதக் கொள்வனவில் இறங்கி அடைந்த பல தோல்விகள், செயற்பாட்டாளர்களின் கைதுகளுக்குப் பின்னர் கே பி யை பிரபாகரன் மீண்டும் தனது சர்வதேச ஆயுத முகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமாக பதவியில் அமர்த்திய காலத்தில் கே பி இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி விட்டிருந்தார் என்றும், அரச , ராணுவ தலைமைப்பீடங்களுக்கு கே பி மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தாரென்றும் இந்திய புலநாய்வுத்துறை கூறுகிறது. தனது பழிவாங்கலுக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கே பீ இற்கு பிரபாகரன் மீண்டும் தன்னை பதவியில் அமர்த்தியது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. பிரபாகரன் கேட்டுக்கொண்டபடியே புலிகளுக்கான சில ஆயுதங்களை கொள்வனவு செய்து கப்பல்களில் ஏற்றியனுப்பிய கே பீ, தவறாமல் ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இக்கப்பல்களின் அமைவிடம், பாதைகள் தொடர்பான தகவல்களை வழங்கிவரத் தொடங்கினார். கே பீ யிடம் இருந்து தமக்குக் கிடைத்த வரப்பிரசாதமான புலிகளின் கப்பல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விமானப்படையும் கடற்படையும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் தாக்கியழித்துக்கொண்டிருந்தன. இறுதியுத்த காலத்தில் கடுமையான ஆயுதத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டிருந்த புலிகளுக்கு கே பி யின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு தாயகத்திற்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த பல ஆயுதக் கப்பல்கள் அதே கே பி யினால் அரசிற்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடலில் தாக்கியழிக்கப்பட்டமை கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும். கே பியின் ஊடாக தமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்களையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் செயல்ப்பட்ட கபில ஹெந்தவிதாரனவும் அவரது இலங்கை பாதுகாப்புத்துறையும் தமது திட்டத்தின்படி புலிகளுக்கான ஆயுத வழங்கல்கள் முற்றாக வரண்டுபோவதுகண்டு மகிழ்வுடன் காணப்பட்டதாக இந்திய உளவுத்துறை மேலும் கூறுகிறது. புலிகளுக்கான ஆயுத வழங்கல்களைத் தடுத்து நிறுத்தி, இறுதிப்போரில் முற்றாக அவர்களை அழிப்பதற்கான கே பியின் உதவிக்குப் பிரதியுபகாரமாக இலங்கைக்கு அவர் மீளவும் வந்து அரசியலில் பங்களிப்புச் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் அவருக்கு உறுதியளித்திருந்தது. கே பியினை இலங்கைக்கு கொன்டுவரும் தமது திட்டத்தினை செயற்படுத்தவே மலேசியாவில் இடம்பெற்ற கடத்தல் நாடகம் கே பி யினாலும், இலங்கை அரசாலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கே பி யின் கைதில் மலேசிய அரசாங்கம் தலையீடு செய்யவில்லை என்றும் தெரியவருகிறது. மலேசியாவில் கூலிக்கு வேலைசெய்யும் சில ஆயுததாரிகளின் உதவியுடன் கே பி கைதுசெய்யப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தில் , மலேசிய அரசும் இலங்கை அரசும் சேர்ந்தே இந்தக் கைதில் ஈடுபட்டதாக செய்தி கசியவிடப்பட்டதன் மூலம் மலேசிய அரசும் தமிழருக்கெதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக உள்ளூரில் காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கே பி இற்கும், கபில ஹெந்தவிதாரனவிற்கும் இடையில் செய்துகொள்லப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இக்கைது நாடகத்தில் கே பி எதிர்ப்பின்றி கைதாவது போன்று பாசாங்கு செய்ய, இலங்கை அரசு இக்கைதினை தனது புலநாய்வுத்துறையின் வெற்றியாகப் பறைசாற்றிக்கொண்டது. தனிப்பட்ட விமானத்தில் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட கே பி, ஊடகங்களின் பார்வையிலிருந்து விலக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக அரசாங்கத்தின் ரகசிய இடமொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். புலிகளை வீழ்த்தி முற்றாக அழிப்பதற்கு கருணா இலங்கையரசிற்குச் செய்த பங்களிப்பைக் காட்டிலும் கே பி செய்த துரோகம் அதிகமானது என்று நம்பப்படுகிறது. கே பி இற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடம்பரச் சலுகைகளும், வசதிகளும் புலிகளை வீழ்த்த முன்னின்று போராடிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்குக்கூட எக்கட்டத்திலும் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பதும், இன்று அரசுக்கெதிராகச் செயற்பட்டார் என்கிற காரணத்திற்காக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக மிகவும் சரியான தருணத்தில் தமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களே அக்கப்பல்களை அழித்து, புலிகளின் ஆயுத வழங்கல்களைத் தடுத்து, அவர்களின் முதுகெலும்பினை உடைக்க உதவின என்று உறுதியாக நம்புகிறார்கள். இதற்குப் பிரதியுபகாரமாகவே கே பி கேட்கும் அனைத்து சலுகைகளையும் அரசு அவருக்குச் செய்துகொடுத்து வருவதாகவும், அரசியலில் அவர் செயற்படுவதற்கான வெளியினை அரசே ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது. இலங்கையின் நல்லிணக்க இணக்கப்பட்டு கவுன்சிலின் அமர்வுகளுக்கு கே பீ யும், சரத் பொன்சேக்காவும் நிச்சயம் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள், ஆனால், அவர்கள் இருவரையும் ஏதோ ஒருவகையில் இந்த அமர்வுகளிலிருந்து அகற்றிவருகிறது இலங்கையரசு. ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடாத புலிகளின் அரசியல்த்துறைத் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோர் ராணுவத்தினரிடம் சரணடைந்த வேளையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், புலிகளின் போராட்டக் காலத்திலிருந்து இறுதிவரை அவர்களின் சர்வதேச ஆயுத முகவராகச் செயற்பட்டு வந்த கே பீற்கு அரசின் செல்லபிள்ளை எனும் அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டு வருவதுபற்றி பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அரசுக்குச் சார்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கே பி, தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இருந்து வரும் சிலரைத் தொடர்புகொண்டு, மீதமிருக்கும் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை முற்றாகச் சிதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. http://www.srilankaguardian.org/2010/08/kp-and-sl-government-must-tell-truth.html
  2. பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்கம் யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம். அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன். @vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன். மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள். ஆகவே, பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம். பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே:
  3. கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என. சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம் இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும். முக்கிய தகவல் இன்னுமொருதர் ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன். மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது.
  4. Commonwealth bankம் Westpacம் owner occupiedற்கான வீட்டுகடனின் நிலையான வீதத்தை 0.1% அதிகரித்துள்ளார்கள்.. அதே நேரம் அவர்களின் பங்குகளின் பெறுமதியும் குறைந்துள்ளது.. இந்த மாதம் முடிவதற்கிடையில் வங்கிகள் தமது நிதியாண்டு அறிக்கையை வெளியிடும்.. அப்பொழுது பங்குகளின் நிலவரத்தில் மாற்றம் வருமா தெரியவில்லை.. https://www.google.com.au/amp/s/amp.9news.com.au/article/d9484124-5ac4-4103-a2b1-87b4d65e807b
  5. கறி மசாலா தூள் செய்வது எப்படி.......இப்படித்தான்......! 😁
  6. இந்தப் பெரிய வீட்டில் ஒரு ஆள் தடடந்தனிய இருக்க ஏலாது தானே .😃
  7. Google - தமிழ்சிறி ,உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. ஒரு மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.
  8. வெளியல இருந்து நம்மை உடைச்சா ஒம்லெற்.. உள்ளே இருந்து நாம உடைச்சு வெளிய வந்தா கட்லெற்..
  9. https://www.smh.com.au/business/banking-and-finance/apra-unveils-loan-curbs-for-new-customers-as-housing-risks-grow-20211006-p58xlt.html https://www.corelogic.com.au/news/impact-macro-prudential-policies-housing-market APRA புதிய விதிமுறைமகளுக்கமைய assessment rate 2.5% இலிருந்து 3.0% அதிகரிக்கவுள்ளது, அதாவது அவுஸ்ரேலியாவில் முன்னர் வீட்டுக்கடன் பெறுபவர்கள உதாரணமாக 3.25% வட்டிவீதத்தில் கடன் பெறுபவர்களின் கடன் பெறும் தகுதி (3.25% + 2.5 ) 5.75% கணிக்கப்படும், புதிய நடைமுறையில் 6.25% கணிக்கப்படும். பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு விலை குறைவு ஏற்படலாம்.
  10. வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பார்த்திருத்தும் மனித புத்தியின் சபலம் மாறுவதில்லை என்பது தான் விசித்திரம்.. ராஜ் ராஜரத்தினத்தை தெரியாத இலங்கைத் தமிழர் இருக்க முடியாது . சிறையில் இருந்து வெளியே வர இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் நிலையில் "UNEVEN JUSTICE" என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார் . வசதி எண்டால் வாசித்துப் பாருங்கோ .. Raj Rajaratnam releases book titled ‘Uneven Justice’ | Daily FT https://www.ft.lk/front-page/Raj-Rajaratnam-releases-book-titled-Uneven-Justice/44-723285?fbclid=IwAR2UbivxVngPpA3aSaTdrBcPrcusXKchhQFOA5ILWjn5dLVsv9DEG1vUUXY#.YUpqIGxk1IZ.gmail
  11. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாளை வறுமையில் வாடும் முதியோர் இல்லமொன்றை தெரிவு செய்து இன்றைய சாப்பாட்டுக்கு ஒழுங்கு பண்ணியிருந்தேன்.காலை 9 மணியளவில் இந்தப் படங்கள் அனுப்பியிருந்தனர்.படங்கள் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.படங்களைப் பார்த்ததும் 5-10 நிமிடம் மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. இந்த விபரங்கள் படங்களை இங்கு இணைப்பதற்கு காரணம் இதைப் பார்க்கும் யாராவது ஒருத்தராவது ஏதோ ஒரு தினத்தை அவர்களுடன் கொண்டாடலாம் என்பதே. நன்றி. http://letushelpnow.org/yogar_swami_elders_home

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.