Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33848
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    39370
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46979
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19683
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/22/21 in all areas

  1. ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். இதோ சில படங்கள் 🙂
  2. Support உடைக்கப்படும்போது அந்த பகுதி Resistance ஆகும். மறுவளமாக Resistance உடைக்கும் போது அது பின்னர் Support ஆகும். இது பொதுவாக Trending market எனும் நிலையில் ஏற்படும். இந்த நாணயத்தில் தற்போதுள்ள நிலையினை Ranging market support & resistance என கருதுகிறேன். இதற்கமைவாகவே இந்த கணிப்பீட்டை வைத்துள்ளேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  3. அனைவருக்கும் அன்பு வணக்கம். "குடியிருந்த கோயில்"
  4. 10.0 C விலை நெருங்கும் போது விற்றல் காணப்படுகிறது, அது பெரிய அளவான விற்றலாகத்தெரியவில்லை அதனால் குறிப்பாக சொல்லமுடியவில்லை, ஆனால் திட்டமிட்டு மெதுவாக தமது இருப்புகளினை விற்க முயலுகிறார்களோ தெரியவில்லை, இந்த திரியில் ஆரம்ப காலத்தில் இணைத்த டொம் வில்லியத்தின் மாஸ்டரிங் த மார்கட் வாசித்து பாருங்கள். https://www.google.com/search?q=master+the+markets&rlz=1C1ASUM_enAU944AU944&oq=master+the+markets&aqs=chrome..69i57&sourceid=chrome&ie=UTF-8
  5. TRX இல் பல தடவை 8.0 C இல் ஒரு கோட்டினை கீறினிலால் விலை கடந்த காலத்தில் பல தடவை 8.0 C தாண்டி மேல் வர முயன்று தோற்றுள்ளது (Resistance) பின்னர் அந்த கோட்டினை உடைத்து விலை அதிகரித்த பின், கீழே செல்ல முயன்று தோற்றுள்ளது (Support). தற்போதைய முக்கிய Resistance 12.0 C உள்ளது ஆனால் மூன்று தடவை 10.0 C உடைக்கமுயன்று தோற்றுள்ளது, ஆனால் ஏற்கனவே 8.5 C இல் ஒரு தடவையும் பின்னர் 8.0 C பகுதியில் (Re - Test in low volume successfully) செய்துள்ளது இதன் மூலம் 12.0 C தான் அடுத்த இலக்காக இருக்கலாம் (break out upside ). அப்படி மேலே போகாமல் விலை கீழிறங்கினால் 8.0 C மீண்டும் தொட முயற்சிக்கலாம். ஆகவே இந்த இரண்டு பகுதிகளும் முக்கியமான பகுதியாகவுள்ளது. குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது.
  6. திருத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே ......"குடி" இருக்கும் கோயில் என்று........! 😁
  7. தென்னங்குத்தியில் இருக்க விட்டுட்டு அந்த மொட்டை மிசினாலை வறுக்கு வறுக்கு எண்டு புடுங்கி எடுக்க உயிர் போய் வரும்
  8. சேம் பீலிங்......அவர் ஒருமுறை வந்தால் அயலட்டை என்று குறைந்தது 20/ 25 பொடி பொட்டைகளுக்கு வெட்டிவிட்டுத்தான் போவார்......ஒரே சொல்தான் பொலிஸ் குறொப் அடிச்சு விடுங்கோ என்று.....! 😇
  9. மன்னிக்கவும் மேலே இணைத்த இணைப்பில் விபரங்கள் அழிந்து விட்டமையால் இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன்
  10. https://finance.yahoo.com/chart/TRX-USD#eyJpbnRlcnZhbCI6ImRheSIsInBlcmlvZGljaXR5IjoxLCJ0aW1lVW5pdCI6bnVsbCwiY2FuZGxlV2lkdGgiOjgsImZsaXBwZWQiOmZhbHNlLCJ2b2x1bWVVbmRlcmxheSI6dHJ1ZSwiYWRqIjp0cnVlLCJjcm9zc2hhaXIiOnRydWUsImNoYXJ0VHlwZSI6ImNhbmRsZSIsImV4dGVuZGVkIjpmYWxzZSwibWFya2V0U2Vzc2lvbnMiOnt9LCJhZ2dyZWdhdGlvblR5cGUiOiJvaGxjIiwiY2hhcnRTY2FsZSI6ImxpbmVhciIsInBhbmVscyI6eyJjaGFydCI6eyJwZXJjZW50IjoxLCJkaXNwbGF5IjoiVFJYLVVTRCIsImNoYXJ0TmFtZSI6ImNoYXJ0IiwiaW5kZXgiOjAsInlBeGlzIjp7Im5hbWUiOiJjaGFydCIsInBvc2l0aW9uIjpudWxsfSwieWF4aXNMSFMiOltdLCJ5YXhpc1JIUyI6WyJjaGFydCIsIuKAjHZvbCB1bmRy4oCMIl19fSwic2V0U3BhbiI6e30sImxpbmVXaWR0aCI6Miwic3RyaXBlZEJhY2tncm91bmQiOnRydWUsImV2ZW50cyI6dHJ1ZSwiY29sb3IiOiIjMDA4MWYyIiwic3RyaXBlZEJhY2tncm91ZCI6dHJ1ZSwiZXZlbnRNYXAiOnsiY29ycG9yYXRlIjp7ImRpdnMiOnRydWUsInNwbGl0cyI6dHJ1ZX0sInNpZ0RldiI6e319LCJzeW1ib2xzIjpbeyJzeW1ib2wiOiJUUlgtVVNEIiwic3ltYm9sT2JqZWN0Ijp7InN5bWJvbCI6IlRSWC1VU0QiLCJxdW90ZVR5cGUiOiJDUllQVE9DVVJSRU5DWSIsImV4Y2hhbmdlVGltZVpvbmUiOiJFdXJvcGUvTG9uZG9uIn0sInBlcmlvZGljaXR5IjoxLCJpbnRlcnZhbCI6ImRheSIsInRpbWVVbml0IjpudWxsLCJzZXRTcGFuIjp7fX1dLCJzdHVkaWVzIjp7IuKAjHZvbCB1bmRy4oCMIjp7InR5cGUiOiJ2b2wgdW5kciIsImlucHV0cyI6eyJpZCI6IuKAjHZvbCB1bmRy4oCMIiwiZGlzcGxheSI6IuKAjHZvbCB1bmRy4oCMIn0sIm91dHB1dHMiOnsiVXAgVm9sdW1lIjoiIzAwYjA2MSIsIkRvd24gVm9sdW1lIjoiI2ZmMzMzYSJ9LCJwYW5lbCI6ImNoYXJ0IiwicGFyYW1ldGVycyI6eyJ3aWR0aEZhY3RvciI6MC40NSwiY2hhcnROYW1lIjoiY2hhcnQiLCJwYW5lbE5hbWUiOiJjaGFydCJ9fX19 இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல அத்துடன் எனக்கு இந்த வகை நாணயங்கள் பரிட்சயமுமில்லை, எனது பார்வையில் TRON USD (TRX-USD) தற்சமயம் விலை நடவடிக்கையை consolidation என்பார்கள் (Ascending wedge).பொதுவாக இந்த சமயம் எந்த வாங்கல் விற்றல் நடவடிக்கைகள் செய்யமாட்டார்கள். விலை இடைவெளி ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் போகப்போக இடைவெளி குறைந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் பின்னர் அது ஒரு ஸ்பிரிங் போல் மேல் பக்கமாகவோ அல்லது கீழ் பக்கமாகவோ உடைத்து கொண்டு வெளியேறும் அதனை Ascending wedge என்பார்கள். பொதுவாக Ascending wedge கீழ் உடைத்து கொண்டு வெளியேறும், மறுவளமாக சில சமயம் மேல்புறமாகவும் உடைத்து வெளியேறும். மேலால் உடைத்தால் (11 C) வாங்குவார்கள் கீழாக விலை சென்றால் (9.5 C) விற்பார்கள். மேலே தரப்பட்ட யாகூ வர்த்தக இணைப்பை அழுத்தி பார்க்கவும். ஆனால் இங்கு Break out trade செய்வது சாதகமல்ல, அனால் Support and resistance trade செய்வதுதான் மிகவும் பொருத்தம். விலை 8.3 C பகுதியை அண்மித்தால் அங்கு வாங்கலாம் Stop loss 7.5 C, விலை 12 C அணுகினால் அங்கு விற்கலாம் Stop loss 12.8 C. Short trade signal bearish engulfing candle, Long trade signal Bullish engulfing candle. உதாரணமாக இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன், இது எனது சனல்தான், ஆனால் பதிவுகள் போடுவதில்லை, பொதுவாக எனது நண்பர்களுக்கு மின்னசலில் அனுப்பும் பதிவை ஒளிப்பதிவாக்கி தரவேற்றினேன் அதனை யாரும் பார்பதில்லை அத்துடன் அதில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியவில்லை.
  11. சுமையா மகளீர் அரபுக் கல்லூரி 19/08/2005 முனைச்சேனை, கிண்ணியா புல்மோட்டை முஸ்லிம்கள் போர்க்காலத்திலை தமிழருக்கு ஆதரவான ஆக்கள் என்டு கேள்விப்பட்டிருக்கிறன். போருக்குப் பின்னர் எப்படியென்று தெரியவில்லை.
  12. எத்தனையாவது இடத்தில் வருவது என்பதை விட இந்த மாதிரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, எங்களது ஆரோக்கியத்தின் மீதான அக்கறை ஆர்வம் போன்றவைதான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று நிழலி அண்ணா.. இங்கே எழுதிய கருத்துக்கள் பார்க்கும் பொழுதுதான் விளங்கியது இந்த பதிவு எத்தனை பேரை ஊக்குவித்திருக்கிறது என்று.. எனக்கு ஓட்டப்பயிற்சியில் நாட்டமில்லை..ஆனால் இங்கே வந்த பொழுதில் நீச்சல் வகுப்பில் சேர்ந்து நீந்தக்கற்றுக்கொண்டேன்.. மிகவும் பிடித்த ஒன்று…COVIDனிலால் இடைநிறுத்தவேண்டியதாயிற்று.cycling 🚴‍♀️ செய்வதுண்டு(அவ்வப்பொழுது).. அதே நேரம் வாரத்தில் 3 நாட்கள் Zumba classes உள்ளது..இதற்கு மேல் முடியாது என்பதால் இதுதான் எனது உடற்பயிற்சி..
  13. இளமை எனும் பூங்காற்று கிற்றார் வாசிப்பவர் சதா மாஸ்ரர் இசைஞானி இளையராஜாவின் குழுவில் கிற்றார் வாசிப்பவர்.
  14. பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் ஒவ்வொரு கணங்களும் பல நாட்களுக்கு அசை போடக் கூடியவை. வீதியோரங்களில் பெயர்ப் பலகையுடன் நிற்கும் உறவுகள், ஒருபோதும் கண்டிராத போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் மக்கள், வீதியோரங்களில் பிஞ்சுக் கைகளை நீட்டி தொட்டுக் கொண்டு ஓடுங்களேன் என்று ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவர்கள், ஆங்காங்கு உற்சாகப்படுத்தும் இசைக் குழுவினர், நடனக் குழுவினர்... எல்லாமே ஒரு இன்ப அனுபவம். மறக்க முடியாத இன்னொரு அனுபவம். 3மணி 34 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டியது கடைசி 7 கிமீற்றரில் இதுவரை எதுவுமே சாப்பிடாததால் பசி காரணமாக ஓட முடியாமல் போனது. கடைசியாக இருந்த தண்ணீர்ப் பந்தலில் சாப்பாடுகள் இருந்தும் அவற்றை விழுங்க முடியாமையால் சீனிக் கட்டி இரண்டை வாய்க்குள் போட்டபடி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னால் பார்வையாளராக நின்றிருந்த பெண் ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்து 'ஓடுங்கள், நீங்கள் கடுமையான பயிற்சி எடுத்தது ஓடி முடிப்பதற்காக. இன்னும் கொஞ்சத் தூரமே உள்ள நிலையில் நிற்பதற்காக அல்ல, ஓடுங்கள்' என்று உரக்கக் கத்தினார். பின்னால் திரும்பிப் பார்க்கச் சக்தியற்று கையை மேலே தூக்கி நன்றி சொல்லிவிட்டு புது உற்சாகத்துடன் மெதுவாக ஓடத் தொடங்கினேன். அவர் யார் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையோடு அவருக்கு நன்றி சொல்லியிருக்கலாம் என்று கவலைப்படுகிறேன். ஓட்ட முடிவில் வரவேற்க மனைவியும் மகளும் வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட வலிகளையும் தாண்டிய இன்ப உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நன்றி பிரபா. இத்தனையாவதாக வந்தது என்பது உதிரியான மகிழ்ச்சியே தவிர இங்கு போட்டி மனப்பான்மை கிடையாது. எனக்கு முன் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். 🙂 திரியின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் எனக்கு நானே போட்டியாளன்.
  15. கால்குலேட்டரையும் மிஞ்சி கணக்குப்போடும் சிறுவன்......! 🌹
  16. வாழ்வில் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணங்கள்.....! 🌹
  17. இந்தப் பழத்தை சிங்களத்தில் “லாவுளு” என்று சொல்வார்கள் என நினைக்கின்றேன். அதன் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பழம். இங்கு விற்கப் படுவதில்லை.
  18. இப்போது EV (Electric vehicles)ஸ்ரொக் எல்லாமே சிப் இல்லாமல் விழுந்து போயுள்ளது. சிப் நிலவரம் சரியாகும் போது நிச்சயம் பல மடங்கு கூட வாய்ப்புள்ளது. இது நீண்ட காலம். அதைவிட பெனி ஸ்ரொக்கில் கொஞ்சம் நல்லதாக தெரிவு செய்து ஒவ்வொன்றிலும் ஆயிரம் என்று 5-6 ஐ வாங்கி விடலாம். சகல ஸ்ரொக்கையும் ஆரம்பத்தைப் பார்த்தால் எல்லாமே பெனிஸ்ரொக் தான் . வந்தா மலை போனா மயிர்.
  19. இல்லை, ஆனால் CFD வர்த்தகம் செய்த ,செய்கின்ற அனுபவம் உண்டு. இது option விட பல மடங்கு leverage உண்டு. 1:500 என்ற விகிதத்தில், உதாரணமாக உங்கள் வைப்பு $500 ஆக இருந்தால், $25000 வரை வியாபாரம் செய்யலாம் உங்கள் இழப்பு $500 தாண்டினால் நீங்கள் நட்டத்தினை ஈடு செய்ய ( Margin call) பணம் முதலிட வேண்டும் (Actual margin), தவறினால் கணக்கினை மூடி விடுவார்கள். இந்த காணொளியில் இவ்வகை வர்த்தகமே செய்கிறார்கள். இப்போது leverage 1:500 என்பதை 1:30 ஆக அரசு(ASIC) மாற்றி விட்டது. முன்பு சிறிய நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்த போது option காலாவதியாகும் விபரங்களை வைத்து வர்த்தகம் செய்ததுண்டு (Anchoring Bias). https://www.investopedia.com/terms/a/arbitrage.asp பொதுவாக leverage கூடும்போது ஆபத்தும் அதிகரிக்கும்.
  20. தமிழ் ஸ்ரீ நீங்கள் சொல்வது போல் ,நானும் இதனை சிங்கள பகுதியில் பலதடவை கண்டேன் , தெகிவளை உயிரியல் பூங்கா ,சென்ற பொது இந்த மரம் இருப்பதையும் கவனிச்சேன் ,இந்த பழத்தின் சுவை எனக்கு பிடிக்கலை..
  21. until

    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.