Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    39366
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19683
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46979
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5636
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/23/21 in all areas

  1. பியரையும் ஓட்டத்தையும் பற்றி ஏதோ அரிய தகவல்கள் எழுதப் போவதாக எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி விட்டேன் போல இருக்கு, எனவே எதிர்பார்ப்பு பலூன் பெரிதாகிப் புஸ்ஸென்று காற்றுப் போக முதல்🤣 இதை முடித்து விடுகிறேன்: இவை என் அனுபவமும், சில தரவுகளும் இணைந்தது: பொறுப்புத் துறப்பு: பியர் - அல்கஹோல் அளவு பொதுவாகக் குறைவாக இருந்தாலும் - ஒரு மதுபானமே. அல்கஹோல் உடல்நலத்திற்குக் கேடு, தவிர்ப்பது ஐடியல், குடிக்காதோர் இதைப் பார்த்துக் குடிக்க ஆரம்பிக்காதீர்கள்! நெடுந்தூர ஓட்டம் - பியர் தொடர்பு: அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பின் வழி எடுத்த ஆய்வொன்றில், அனேக நெடுந்தூர ஓட்டப் பிரியர்கள் பியர் பிரியர்களாகவும் இருப்பதாகக் கணித்திருந்தார்கள். என்ன காரணமாக இருக்கும்? நெடுந்தூர ஓட்டம் செய்வோர் அனேகமாக தங்கள் உடல் நலத்தில் அக்கறையுடையோராக இருப்பதால், அதிக அல்கஹோல் கொண்ட ஏனைய மதுபானங்களை விட பியரை நாடுகின்றனர் என்பது ஒரு விளக்கம். இன்னொரு விளக்கம் கொஞ்சம் நரம்பியல் தொடர்பானது: நெடுந்தூர ஓட்ட ஆர்வலர்களாக இருப்போர், அவ்வாறு நெடுந்தூரம் ஓடுவதற்கு அவர்களது உடலில் உற்சாகத்தைத் தூண்டும் எண்டோர்பின்கள் (endorphins) சுரப்பு ஒவ்வொரு ஓட்டத்தின் பின்னும் அதிகரிப்பது பிரதான காரணமாக இருக்கிறது (இது தான் ஓட்டத்திற்கு அடிமையாக addiction வருவதற்கும் காரணம்!). பல்வேறு மதுபானங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், பியர் குடிக்கும் போது மட்டும் தான் மூளையில் எண்டோர்பின்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள் (இதனால் தான் எப்போதுமே ஒருவர் ஒரு பியரோடு நிறுத்துவதில்லை - பியர் குடிப்போருக்கு 1 beer = 2 beers 😎; இதன் காரணம் எங்கள் மூளை வெளிப்படுத்தும் reward signal). இதற்கு பியரில் இருக்கும் திரட்சியான, சிக்கலான சுவை (complex taste) காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் - சுவை மட்டுமன்றி அரோமா எனப்படும் வாசனை, கிளாசில் இருந்தால் அதன் வர்ணம் என்பனவும் காரணமாக இருக்கலாம்! என் அனுபவம்: பியர் எனக்கு வெகுமதி போன்றது. ஒரு வாரத்தில் போதியளவு ஓடவில்லையானால் அந்த வெள்ளிக்கிழமை பியர் கட்! அதே போல ஒரு வெள்ளிக்கிழமை இரண்டு பியர் எடுத்தால் அடுத்த நாள் ஒரு மைல் கூடுதல் ஓட்டம்! இப்படி வெகுமதி - தண்டனை (reward-punishment) என்ற சக்கரம் தான் என் அனுபவம். ஏனையோருக்கும் இப்படி இருக்கலாம்! இனி சசியரின் ஒரிஜினல் பதிவு: உடற்பயிற்சி செய்ய பியரோடு வருகின்றனர்! இதில் ஆரோக்கியப் பிரச்சினை இருக்கிறதா? இதற்கு என் அபிப்பிரயம் பக்கச் சார்பாகத் தான் இருக்கும், ஆனாலும் தரவுகளோடு தருகிறேன்: ஒரு பியரில் அடிப்படையில் இருப்பவை: கார்ப்-carb (இது தான் கலோரி) , புரதம், அல்கஹோல், விற்றமின்கள், antioxidants எனப்படும் உடலுக்கு நன்மை தரும் பொருட்கள் (இந்த நன்மை தரும் பொருட்களும், விற்றமின்களும் ஏனைய மதுபானங்களில் இருப்பதில்லை என்பதைக் கவனிக்க! - சிவப்பு வைனில் மட்டும் இந்த antioxidants சிறிதளவு உண்டு). கலோரியின் அளவையும், அல்கஹோலின் அளவையும் குறைவாகக் கொண்ட பியர் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது எனலாம். லைற் பியர் வகைக்குள் அடங்கும் லாகர், வியன்னா லாகர், பில்ஸ்னர் ஆகியவை அனேகமாக 5% இலும் குறைந்த அல்கஹோல், கலோரி 100 முதல் 150 இருக்கும் (ஒரு 12 அவுன்ஸ் போத்தலில்) -ஒப்பீட்டிற்குப் பார்த்தால் ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் 110 கலோரிகள் இருக்கின்றன. இதுவும் உங்கள் உணவுக்கட்டுப் பாட்டுடன் ஒத்து வரவில்லையென்றால், விசேடமாக டயற்றில் இருப்போருக்கென இப்போது சில 90 கலோரி பியர்களும் இருக்கின்றன.சில கம்பனிகள் ஒரு படி மேலே போய் நெடுந்தூர ஓட்டப் பிரியர்களுக்கென கனியுப்புகள் (electrolytes) நிறைந்த பியர்களையும் உற்பத்தி செய்கின்றனர். எனவே, இவற்றை கடின உடல் உழைப்பின் பின்னர் எடுத்துக் கொள்வது பாரிய ஆரோக்கியக் குறைவைத் தராது! பியர் வகைகளில் அதிகம் பேர் விரும்புவது (நான் உட்பட) IPA (India Pale Ale) எனப்படும் கசப்பு அதிகமான பியர். ஆனால், இந்த பியரில் கலோரியின் அளவு 200 வரை இருக்கும், அல்கஹோல் அனேகமாக 6% முதல் 8 % வரை இருக்கும்! எனவே IPA டயற்றோடு அவ்வளவு ஒத்து வராது - ஆனால் IPA பியர் வகையின் சுவையை வேறெந்த பியரும் வெல்ல முடியாது! இன்னும் மேலே போனால், Double IPA, Triple IPA, Belgian Tripel எனப்படும் வகைகள் இன்னும் அதிக கலோரி, அல்கஹோல் கொண்டவை. இது சுவைக்காக அல்லாமல் வெறிக்காக குடிக்கும் வெறிக்குட்டிகள் குடிப்பது!😜 Stout வகையைச் சேர்ந்த கின்னஸ் போன்றவை, அதிக அல்கஹோல் இல்லா விட்டாலும், 300 கலோரிகள் வரை ஒரு 12 அவுன்ஸ் போத்தலில் கொண்டவை - எனவே இவ்வகையை எடுப்பதானால் உடல் எடை கூடுவதைப் பற்றிய கவலையை விட்டு விட வேண்டும்!
  2. நான் இதை முதலில் சொல்லி இருக்க வேண்டும். இங்கே பலர் investment மற்றும் trading இல் குழப்பம் இருப்பது போல தெரிகிறது. இரண்டுமே, இருக்கும் பணத்தை பெருகுவது தான் இறுதி குறிக்கோள். ஆனால், முறைமை வேறுபடுகிறது. Trading என்பது பணம் உழைப்பது - உங்களது நேரம், சிந்தனை உழைப்பு (உடலால் மட்டும் தான் உழைக்க முடியும் என்பது அல்ல), நிதி அபாயங்களை ஏதிர் கொண்டு போன்றவற்றையும், பணத்தையும் முதலீடு செய்து உழைப்பது. அனால், investment என்பது பொதுவாக passive ஆக பணம் பெருகுவது. இங்கே பலர், பணம் உழைப்பதை investment என்று எடுத்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது. இது என்னை பொறுத்தவரையில் தவறான போக்கு.
  3. நீதி தவறாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுராதபுரத்தை ஆட்சி செய்து வயோதிப வயதிலும் துட்டகைமுனுவுடன் வீரத்துடன் போராடி வீரமரணமடைந்த தமிழ் மாமன்னன் எல்லாளனின் நினைவுத் தூபி!
  4. கடன்சா முக்கிய வலயங்கள் பற்றிய இன்னுமொரு உதாரணம் எதிர் வரும் வாரம் GBPUSD trading plan Tested என குறிப்பிட்டு ஒரு நீல வலயமும் அதன் மேலேUn - tested ஒரு நீல வலயமும் அதற்கிடையில் மன்சல் நிற கிடையான கோடும் உள்ளது. இதில் Tested நீல வலயத்தில் விலை த்டுத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஏற்கனவே கடல் நீல நிறத்தில் உள்ள Trend line உடைக்கப்பட்டுவிட்டது, ஆனால் தற்போது முக்கிய வலயத்தில் விலை கீழிறங்குவது மட்டுபடுத்தப்பட்டுள்ளது, அதனால் அடுத்து விலை அந்த மன்சல் கோட்டிலும் அதற்கு மேலுள்ள நீல வலயமும் முக்கியமான Levels ஆக உள்ளது, இந்த நிலையில் விலை எவ்வாறு செயற்படுகிறது என்பதை பொறுத்து வாங்குவதா அல்லது விற்பதா என்று தீர்மானிக்கலாம். சில வேளை அதற்கு முன்பாகவே தற்போதுள்ள முக்கிய வலயத்திலிருந்து விலை கீழிறங்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையின் போக்கினை இலக்கங்கள் கொண்டு குறிக்கப்பட்டுள்ளது, இதில் விலை இலக்கம் 2 இனை தாண்டி மேலே போனால் தற்போதைய இறங்குமுக சந்தை நிலவரம் மாறி விடும். இங்கு தற்போது Tested நீல வலயம் தான் முக்கிய வலயமாகவுள்ளது, பொதுவாக விலை இந்த இடத்திலிருந்து கீழிறங்கினால் விற்பார்கள் Stop loss இலக்கம் 1 மேல். இலக்கம் 4 விட விலை கீழிறங்கினால் மிகவும் கீழே உள்ள நீல வலயம் எதிர்பார்க்கப்படும் அடுத்த இலக்காகும் மேலும் இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல, வலயம் தொடர்பான விளக்கம் மட்டுமே.
  5. 1999 ஆம் ஆண்டு பத்தாம் மாதத்திற்கு முன்பாக எல்லைப்படை வீரர்கள தமது முதலாவது சீருடையான கறுப்பு நிற சீருடை அணிந்து அணிநடையில் ஈடுபடுகின்றனர் 'பெண்கள்' 'ஆண்கள்'
  6. வேலைக்கு போகின்றவர்கள் சுலபமாக செய்துகொண்டு செல்லக்கூடிய அருமையான மத்திய உணவு......உங்களுக்கு அருகில் உண்பவர்கள் பறித்துத் தின்றால் கொம்பனி பொறுப்பேற்காது ......! 😂
  7. எனக்கும் லாவுளு எண்டால் உசிரு…!
  8. நன்றி வசி. நிச்சயமாக இல்லை. திரி தொடங்கும் போது எழுதிய டிஸ்கிளைமர் ஒவ்வொரு பதிவுக்கும் பொருந்தும்.
  9. சுவைத்தவுடன் பிடிப்பதற்கு அதென்ன காதலியா......இது லாவுடு சுவைக்க சுவைக்கத்தான் பிடிக்கும்......! 😁
  10. https://finance.yahoo.com/chart/TRX-USD#eyJpbnRlcnZhbCI6ImRheSIsInBlcmlvZGljaXR5IjoxLCJ0aW1lVW5pdCI6bnVsbCwiY2FuZGxlV2lkdGgiOjgsImZsaXBwZWQiOmZhbHNlLCJ2b2x1bWVVbmRlcmxheSI6dHJ1ZSwiYWRqIjp0cnVlLCJjcm9zc2hhaXIiOnRydWUsImNoYXJ0VHlwZSI6ImNhbmRsZSIsImV4dGVuZGVkIjpmYWxzZSwibWFya2V0U2Vzc2lvbnMiOnt9LCJhZ2dyZWdhdGlvblR5cGUiOiJvaGxjIiwiY2hhcnRTY2FsZSI6ImxpbmVhciIsInBhbmVscyI6eyJjaGFydCI6eyJwZXJjZW50IjoxLCJkaXNwbGF5IjoiVFJYLVVTRCIsImNoYXJ0TmFtZSI6ImNoYXJ0IiwiaW5kZXgiOjAsInlBeGlzIjp7Im5hbWUiOiJjaGFydCIsInBvc2l0aW9uIjpudWxsfSwieWF4aXNMSFMiOltdLCJ5YXhpc1JIUyI6WyJjaGFydCIsIuKAjHZvbCB1bmRy4oCMIl19fSwic2V0U3BhbiI6e30sImxpbmVXaWR0aCI6Miwic3RyaXBlZEJhY2tncm91bmQiOnRydWUsImV2ZW50cyI6dHJ1ZSwiY29sb3IiOiIjMDA4MWYyIiwic3RyaXBlZEJhY2tncm91ZCI6dHJ1ZSwiZXZlbnRNYXAiOnsiY29ycG9yYXRlIjp7ImRpdnMiOnRydWUsInNwbGl0cyI6dHJ1ZX0sInNpZ0RldiI6e319LCJzeW1ib2xzIjpbeyJzeW1ib2wiOiJUUlgtVVNEIiwic3ltYm9sT2JqZWN0Ijp7InN5bWJvbCI6IlRSWC1VU0QiLCJxdW90ZVR5cGUiOiJDUllQVE9DVVJSRU5DWSIsImV4Y2hhbmdlVGltZVpvbmUiOiJFdXJvcGUvTG9uZG9uIn0sInBlcmlvZGljaXR5IjoxLCJpbnRlcnZhbCI6ImRheSIsInRpbWVVbml0IjpudWxsLCJzZXRTcGFuIjp7fX1dLCJzdHVkaWVzIjp7IuKAjHZvbCB1bmRy4oCMIjp7InR5cGUiOiJ2b2wgdW5kciIsImlucHV0cyI6eyJpZCI6IuKAjHZvbCB1bmRy4oCMIiwiZGlzcGxheSI6IuKAjHZvbCB1bmRy4oCMIn0sIm91dHB1dHMiOnsiVXAgVm9sdW1lIjoiIzAwYjA2MSIsIkRvd24gVm9sdW1lIjoiI2ZmMzMzYSJ9LCJwYW5lbCI6ImNoYXJ0IiwicGFyYW1ldGVycyI6eyJ3aWR0aEZhY3RvciI6MC40NSwiY2hhcnROYW1lIjoiY2hhcnQiLCJwYW5lbE5hbWUiOiJjaGFydCJ9fX19 இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல அத்துடன் எனக்கு இந்த வகை நாணயங்கள் பரிட்சயமுமில்லை, எனது பார்வையில் TRON USD (TRX-USD) தற்சமயம் விலை நடவடிக்கையை consolidation என்பார்கள் (Ascending wedge).பொதுவாக இந்த சமயம் எந்த வாங்கல் விற்றல் நடவடிக்கைகள் செய்யமாட்டார்கள். விலை இடைவெளி ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் போகப்போக இடைவெளி குறைந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் பின்னர் அது ஒரு ஸ்பிரிங் போல் மேல் பக்கமாகவோ அல்லது கீழ் பக்கமாகவோ உடைத்து கொண்டு வெளியேறும் அதனை Ascending wedge என்பார்கள். பொதுவாக Ascending wedge கீழ் உடைத்து கொண்டு வெளியேறும், மறுவளமாக சில சமயம் மேல்புறமாகவும் உடைத்து வெளியேறும். மேலால் உடைத்தால் (11 C) வாங்குவார்கள் கீழாக விலை சென்றால் (9.5 C) விற்பார்கள். மேலே தரப்பட்ட யாகூ வர்த்தக இணைப்பை அழுத்தி பார்க்கவும். ஆனால் இங்கு Break out trade செய்வது சாதகமல்ல, அனால் Support and resistance trade செய்வதுதான் மிகவும் பொருத்தம். விலை 8.3 C பகுதியை அண்மித்தால் அங்கு வாங்கலாம் Stop loss 7.5 C, விலை 12 C அணுகினால் அங்கு விற்கலாம் Stop loss 12.8 C. Short trade signal bearish engulfing candle, Long trade signal Bullish engulfing candle. உதாரணமாக இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன், இது எனது சனல்தான், ஆனால் பதிவுகள் போடுவதில்லை, பொதுவாக எனது நண்பர்களுக்கு மின்னசலில் அனுப்பும் பதிவை ஒளிப்பதிவாக்கி தரவேற்றினேன் அதனை யாரும் பார்பதில்லை அத்துடன் அதில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியவில்லை.
  11. இந்த கருவியை பார்த்ததும் சிறுவயதில் வீட்டில் வந்து முடிவெட்டிவிடும் அப்புவைத் தான் ஞாபகம் வருது. எனக்கு சலூனில் போய் முடிவெட்டத் தான் விருப்பம். அப்பு வந்தால் அழுது கொண்டு போய் இருக்க அவர் அழாதையணை என்று சமாதனம் சொல்லி முடிவெட்டி விடுவார். அவரின் இந்த கையால் அழுத்தி செயற்படுத்தும் கருவி முடியை பிடித்து இழுக்கும், அப்ப கொஞ்சம் வலிக்கும்.
  12. கால்குலேட்டரையும் மிஞ்சி கணக்குப்போடும் சிறுவன்......! 🌹
  13. ஊரகத் தொண்டர் படை | LTTE Rural Volunteer Force தலைநகர் திருகோணமலையில் எடுக்கப்பட்டது 'தரைப்புலிகளோடு சமருக்கு அணியமாகும் ஊ.தொ.ப'
  14. ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் . “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே? குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே, அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார். சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார். கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் " என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார். உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள். சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “ என வினவினார். "அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன். நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான். முதியவராகிய சிவபெருமான் சொன்னார். " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்." "நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை "" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் "".... மனதாரநம்புங்கள்உங்களின்நம்பிக்கைவெற்றிக்குவெகுஅருகில் உங்களைஅழைத்துச்சென்றுவிடும்
  15. கிராமியப்படை என்று எண்ணுகிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.