Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்10Points46808Posts -
பாலபத்ர ஓணாண்டி
கருத்துக்கள உறவுகள்7Points1836Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points87997Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/03/22 in all areas
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பங்கு சந்தையில் இடப்படும் நீண்ட கால முதலீடு சராசரியாக 10% என மேலோட்டமாக கூறுவார்கள், ஆனால் நடைமுறையில் சிறிது அதிகமாக இருக்கலாம் உதாரணமாக DJIA Index இல் 2010 இல் $1000 முதலிட்டிருந்தால் 2020 இல் கிட்டத்தட்ட $3600 கடந்த 10 ஆண்டுகளில் ஈட்டியிருக்கலாம், அதாவது ஆண்டு ஒன்றிற்கு 36% . பொதுவாக பங்கு சந்தையின் Benchmark 10%, சில்லறை முதலீட்டாளர்கள், இதனை முறியடிக்க ஆபத்து நிறைந்த ஆனால் அதிக இலாபம் ஈட்டும் சிறிய நிறுவனங்களில் (Penny stock) முதலிடுவதுண்டு. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், Index, சில்லறை வர்த்தகர்களை விட குறைந்த ஆபத்துடன் அதிக் இலாபத்தை ஈட்டியிருக்கும். ஆனால் ஒரு சில சில்லறை வர்த்தகர்கள் விதி விலக்கு, ஆனால் பெரும்பாலான சில்லறை வர்த்தகள் நிலை அப்படியிருப்பதில்லை. நான் இந்த பெரும்பாலான சில்லறை வர்த்தகர்களுக்குள் அடங்குவேன். உங்களது Portfolio உடன் சந்தையில் நீங்கள் வாங்கிய பங்கு ஆதிக்கம் செலுத்தும் குறியீட்டின் (Index) பெறுபேற்றுடன் ஒப்பிட்டு பார்த்து உங்களது முதலீட்டு தாக்கத்தினை அறிந்து கொள்ளலாம். உங்கள் ஆலோசனைக்கு நன்றி, XLV எனப்படுகின்ற Index இல் 3 வது இடத்தில் பைசர் உள்ளது 1.UNH 2.JNJ முதல் இரண்டு பங்குகளும், XLV Index விலை அதிகர்த்து செல்ல பைசர் விலை மெதுவாக சரிந்து செல்கிறது, ஆனால் PE பார்க்கும் போது, பைசர், மற்ற பங்குகளை விட மலிவான பங்காக காணப்படுகிறது. UNH 16.11, JNJ 25.52, ANZ 107.57 பைசர் 16.87 அத்துடன் Profit margin மற்ற நிறுவனங்களை விட அதிகமாகவுள்ளது. சுகாதார பங்குகளும் அதன் குறியீடும் விலை அதிகரித்து செல்லும் போது பைசர் அவற்றை விட மலிவாகவும் சிறப்பாக செயற்பட்டாலும் விலை சரிவடைகிறது இது ஒரு Divergence.2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 pointsதுள்ளாத மனமும் துள்ளும் அப்சராஸ் இசையில் ஜிக்கி அவர்கள்..2 points- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
https://yarl.com/forum3/discover/ என்பதில் அழுத்தினால் நேரடியாக இறுதிக் கருத்துக்களைப் பார்க்க முடியும். உள்நுழைந்து வாசிக்கும் போது வாசித்த வாசிக்காத பதிவுகள் track செய்யப்படும். அதுவே நல்ல வழியுமாகும்1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
படித்ததில் பிடித்தது _‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’_ *_‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’_* *_‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்._* _‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்._ _பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்._ _‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’_ _ பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்._ _அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்._ *_‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’_* *_‘‘இது எதுக்கும்மா?’’_* *_‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்._* *_பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்._* _அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்._ *_‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்._* *_பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்._* _பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்._ *_‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக._* _படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன்._ *_"உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்._* _பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள்._ *_வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்._* *_‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?_* *_எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்._* *_தன் மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்._* 👍🍬🍬🍬🍬🍬👍 https://www.facebook.com/Giritharasharma/posts/73825099384294781 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்ப தொடர்ந்து சைன் இன் பண்ணி வாசியுங்கோ! இல்லாத பிரச்சினைகளுக்கு மோகன் எப்படி தீர்வு தருகின்றார் என்று பார்ப்போம்! எதுக்கும் இரண்டு ஸ்கிரீன் ஷொட் கேட்பார் (1: நோமல், 2: பிராந்து)1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பெரிய பஞ்சாயத்து சும்மா எல்லாம் கத்தி சுழட்டுற ஆளில்லை.... ஆகவே... நீங்கள், மருந்து மயக்கத்திலே கொஞ்சம் கூடுதலா அதகளம் பண்ணி இருக்கிறியள் என்று அவருக்கு தெரியும். 😬 அதாலை தான் ஒரு செல்ல குட்டு... 🤗 அவர் சொன்ன மாதிரி, தனிமடலை போட்டு, அலுவலை முடிக்கட்டும்... நம்ம சாமியார்... 😁1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- நடனங்கள்.
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் யாழ்களத்தில் அன்று தொடக்கம் நியாயத்திற்கு கட்டுப்பட்டவன். நான் யாழ்களத்தில் தேவையில்லாத/தெரியாத விடயங்களில் தலையை நுழைத்தவனும் அல்ல... இருந்தும்.... எமது தமிழினம் சார்ந்த எள்ளி நகையாடல் கருத்துக்கள் வரும் போதும்.....விடுதலை போராட்டத்தை கேவலமாக பேசியவர்கள் மீது மட்டுமே சொல்லணா ஆத்திர மிகுதியால் நான் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். மாற்றுக்கருத்து எனும் போர்வையில் எமது விடுதலை போராட்டத்தையே தவறு என விமர்ச்சித்தவர்கள் மீது மட்டுமே முரண்பட்டுள்ளேன். ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்..... எனது பொது வெளி வார்த்தை பிரயோகங்கள் தவறானதாகவே எப்போதும் உணர்ந்துளேன். அதற்கான காரணத்தை மோகனை தவிர ஏனைய மட்டுறுத்தினர்கள் உணர்வாகளாயின் நன்று. இந்த கருத்துக்களின் மூலம் எனக்கு நானே வெள்ளையடிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.😂1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பதிலுக்கு நன்றி வசி. சுணங்கியமைக்கு மன்னிக்கவும். உங்கள் இணைபுக்களையும் பார்த்து விட்டு எழுத நினைத்தேன். பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. Remote working tech portfolio ஒன்றில் சிறியளவு முதலை போட்டு வைத்துள்ளேன். வைரஸ் பரவல் அதிகமாகி ஏர் லைன், குரூஸ் சேவைகள் முடங்கினால் - இந்த பங்குகள் உயரும் என்ற எண்ணத்தில். அதேபோல் அஸ்ராசெனக்கா, பைசர் பங்குகள் - நோய் தாக்கம் கூடினால் இவை கூடக்கூடும். ஒரு pharma portfolio விலும் போடலாம் என யோசிக்கிறேன். ஹோட்டல் பங்குகள் - யூகே ஹோட்டல்கள்தான் - ஆகவே, பிரயாண தடை வந்தாலும் உள்நாட்டு staycation மூலம் அவை மேல் எழக்கூடும். ஏலவே உள்ள கிரிப்டோ முதலீடும் (தங்கம் போல்) - லாக்டவுன் வந்தால் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். இவைதான் எனது attempts to hedge the risk. அத்தோடு அண்மைகாலத்தில் கிரிப்டோவில் கொஞ்சம் அதிகமாகவே மினகெட்டு விட்டேன் - ஆகவே இப்படி செய்தது diversification ஐ கூட்டும் எனவும் நம்புகிறேன். இதை flag பண்ணியதற்கு நன்றி. நீங்கள் சொன்ன பின் தான் நானும் அவதானித்தேன். கிரிப்டோபில் கூட என் பெரும்பாலன holdings இருப்பது XRP யில். கிரிப்டோவில் அதையும் counter trend எனலாம் என நினைக்கிறேன். இதை பலன்ஸ் பண்ண வேண்டும். Trend க்கு இசைய அப்பிள், கூகிள் என கொஞ்சம் வாங்கலாமோ? எனது இயற்கையான ஆர்வம், கல்வி பின்புலம் காரணமாக தரவுகளை ஆராய்வது, நிகழ்வுகளின் அடிப்படையில் forecast பண்ணுவது ஓரளவு ஈசியாக உள்ளது. வரைபுகளை வைத்து டெக்னிக்கலாக செய்வது மிக கடினமாக உள்ளது. முயற்சி செய்யாமல் இல்லை. உங்களுக்கும் கடஞ்சாவுக்கும் யாழுக்கு வெளியான நண்பர்களுக்கும் நன்றி. ஆனால் ஏனையோரின் கருத்தில் தங்கி இருக்கும் இந்த நிலை - எனது அப்ரோச்சின் மிக பெரும் ரிஸ்க். கணிப்பு தவறினால்? என் அணுகுமுறை 1. முற்றிலும் இழக்க கூடியதை மட்டுமே முதலிடுவது 2. பச்சையில் இருக்கும் போது மட்டுமே வெளியேறுவது 3. CFD அறவே செய்வதில்லை (கையை சுட்ட அனுபவம் உண்டு) கொஞ்ச முதலீடு, மிக கொஞ்ச லாபம்/நட்டம், அதிக டென்சன் இல்லை. ஆனால் கிரிப்டோவில் முழுவதையும் இழக்க வாய்ப்பு உண்டு. நிச்சயமாக ஒரு தொழிலாக செய்ய இந்த அணுகுமுறை உதவாது. பைசர் நீண்ட கால நோக்கில் நிச்சயம் நல்ல தேர்வு. ஆனால் இப்போதைக்கு நல்ல செய்தி எல்லாம் வந்து முடிந்து விட்டதாக தெரிகிறது (famous last words🤣). ஆலோசனையை பார்த்தால் sell 0% hold 61% buy 39%. தவிரவும் மிக பெரிய நிறுவனம் (market cap) ஆகவே மெதுவாகவே அசையும். போனவருடம் ஒரு புதிய கம்பெனியை உருவாக்கி - சில பழைய மருந்து patents ஐ அதற்கு கொடுத்தார்கள். அதேபோல் mRNA ஆராய்சி மூலம் கான்சர் மருந்து போன்றவறை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இவை பைசருக்கான நல்ல காரணங்கள். Long term hold என்றால் நிச்சயம் வாங்கியது நல்ல நகர்வே. Short term trade என்றால் சொல்ல தெரியவில்லை (டெக்னிக்கலாக நன்று என்றால் வாங்கலாம் என நினைக்கிறேன்).1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- நகைச்சுவைக் காட்சிகள்
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதத்தான் நானும் சொல்ல விரும்பிறன்..1 point- குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் முன்னேற்பாடுகள் அடுத்து, தரையிறக்கத்திற்கு முன்னர் என்வெல்லாம் நடந்தன என்பதை பற்றிப்பார்போம். இது பற்றிய தகவல்கள் யாவும் 'வேருமாகி விழுதுமாகி' என்ற மாலதி படையணியின் வரலாறு கூறும் நூலில் இருந்து எடுத்துள்ளேன். இவற்றை வாசிப்பதன் மூலம் அற்றைய தரையிறக்கத்திற்கான முன்னேற்பாடுகள் எப்படி இருந்தன என்பதை அறியமுடிவதோடு, அவர்களின் அனுபவங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதையும் நாம் அறியலாம். பக்கங்கள்: 349-353 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 10/27/2021 வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்க நடவடிக்வகைக்கான கடின பயிற்சி அது. ஏனைய படையணிகளுடன் எமது படையணியின் இரு கொம்பனிகள் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தன. மகளிர் படையணிகளின் பயிற்சி நடவடிக்கைக்குப் பொறுப்பாக சுகி நின்றார். எமது படையணிக்கான ஒன்றுகூடல் முடிந்த சில நாட்களிலேயே தரையிறக்கச் சமருக்கான பயிற்சி நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டதால், ஐமுனாவின் கொம்பனியே முதலில் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. கல்லூரியைச் சுத்தப்படுத்தும் வேலையும் இவர்களுக்கே கிடைத்து. 2000.03.01அன்று அணிகளுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. பரந்த வெளியில் புலிக்கொடி கம்பிரமாக ஏறிப்பறக்க, தொடங்கப்பட்ட பயிற்சிகள் குறுகியகாலத்திலேயே வேகமெடுத்தன. மன்னார் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தர்சாவின் கொம்பனியும் சில நாட்களின் பின்னர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சியில் இணைக்கப்பட்டது. தடையணிகள், உள்நுழைந்து தாக்கும் அணிகள் என ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளுக்கேற்றவாறு பயிற்சியினைப் பெற வர்ணா, புரட்சிகா, செய்மதி, பிருதுவி, அங்கயற்கண்ணி ஆகியோரால் எமது அணிகளுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. 2000.03.25 அன்றைய மாலைப் பொழுதில், பயிற்சியை முடித்துக்கொண்ட எமது படையணியின் இருகொம்பனிகளும் உழவு இயந்திரங்களில் ஏறி ஒரு நீரேரிக்கு அண்மையில் இறங்கினோாம். பழுப்பு நிறக் கரையையும், இடையிடையே பச்சைக்குடை விரித்ததுபோல் அடர்ந்த தாவரங்களையும்கொண்ட அந்நீரேரிதான் 'சுண்டிக்குளம் நீரேரி' என அங்கு படகு வைத்துக்கொண்டு நின்ற ஓட்டி ஒருவர் சொன்னார். அந்த அழகிய நிரேரியைச் சிறிய படகுகள்மூலம் கடந்தோம். கத்தரிநீல நிறப் பூக்களைக்கொண்ட புற்கூட்டம் சிறுசிறு தீவுகளைப்போலப் பரந்திருந்தது அந்த அழகினை இரசித்தவாறே உல்லாசப் பயணத்துக்குச் செல்கின்ற உணர்வுடன் கரையை நெருங்க, எறிகளை வீச்சிலே வீழ்ந்து கிடந்த மரங்களும், ஆழத் தோண்டப்பட்டிருந்த குழிகளும் திடீரென இறுக்கமான ஓர் உணர்வை மனதில் தோற்றுவித்தன. கரையில் உழவு இயந்திரங்கள் எமக்காகக் காத்திருந்தன மீண்டும் உழவு இயந்திரப் பயணம் தொடர, கட்டைக்காடு எம்மை வரவேற்றது. ஈச்சம் பற்றைகளும் புல்வெளிகளும், பல்வகை மரங்களுமாக இணைந்த அப்பகுதி நாலைந்து மாதங்களின் முன்புதான் சிறீலிங்காப் படைகளிடமிருந்து எம்மால் மீட்கப்பட்டிருந்தது என்பதால், படையினர் விட்டுச் சென்ற தடங்களெதுவும் மாற்றமுறாமல் அப்படியே இருந்தன. இரவில் அங்கு சென்ற நாம், மறுநாள் காலையில் ஒன்று கூட்டப்பட்டடோம். பரந்த வெளியொன்றில் அனைத்து அணிகளும் வரிசையதாய் நின்ற காட்சி ஓர் வேகத்தை ஏற்படுத்தியது. மரங்களுக்கு மேலால் உயர்ந்த சூரியனின் கதிர்கள் சூரியக் குழந்தைகளைத் தொட்டுத் தழுவ, எமது இயக்கத்தின் மேன்மைமிகு குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான உறுதியுரையை முடித்துக்கொண்டோம். தரையிறக்கத் தாக்குதலை வழிநடத்தும் தளபதிகள் அனைவரும் சண்டைபற்றி உரை நிகழ்த்தினர். தலைவர் அவர்கள் எதிர்பார்க்கின்ற வெற்றியைப் பெறவேண்டியதன் தேவை எல்லோர் மனங்களையும் மீணடும் நிரப்பியது. பின்னர், தாக்குதல் நடவடிக்கைக்கான மேலதிக பொருட்கள், உலர் உணவுகள் என்பன எங்களுக்கு வழங்கப்பட்டன. தமது பணியை இலகுபடுத்துவதற்காகத் தேவையானவற்றை முற்கூட்டியே தயார்ப்படுத்தும் பணியில் அணித்தலைவர்கள் ஈடுபட்டிருக்க, தரையிறக்கச் சமர் நடவடிக்கைக்குத் தாம் தெரிவுசெய்யப்பட்டது குறித்த மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. இதனால் கூச்சலும் கும்மாளமும் அந்த இடத்தை நிறைக்க, மதிய உணவும் வந்து சேர்ந்தது. அதற்கிடையில் கடலில் எப்படிப் பயணிக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துமுகமாக நடக்கவிருந்த படகேறும்பயிற்சிக்கு எல்லா அணித்தலைவர்களும் சென்றிருந்தனர். தாக்குதலின் இடையில் உண்பதற்காகக் கொடுக்கப்பட்ட கன்டோஸ் பொதிகள் சில, இப்போதே இல்லாமற் போகத்தொடங்கின. படகேறும் பயிற்சிக்குப் போனவர்களில் சிலர் கடலின் அடி ஆழத்தையும் பார்த்துவிட்டு வந்துசேர்ந்தனர். போராளிகளின் இனிய கூச்சல், கும்மாளங்களைப் பார்த்தவாறு ஆதவன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். தாக்குதல் அணிகள் புறப்படும் வேளை வந்தது. அனைத்து அணிகளையும் ஏற்றுவதற்கு உழவு இயந்திரங்கள் வந்து நின்றன. ஏற்கனவே தயாராயிருந்த நாம் எமது பொருட்கள் எல்லாம் சரியாக உள்ளதா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டோம். ஒவ்வொரு அணிகளாக ஏற்றிய உழவு இயந்திரங்கள் நீண்ட மணற்பாதையைப் புயல் வேகத்தில் தாண்டி வெற்றிலைக்லைக்கேணியில் இறக்கின. அதுவரை ஆளையாள் இறுக்கிப் பிடித்தபடி நின்ற அனைவரும் கடகடவெனக் கீழே குதித்தனர். அப்போது பனைகளின் இடைவெளியினூடே மஞ்சள் நிலா மேற்கு வானில் மெல்லிய கோலம் காட்டியது . "கடல் இரண்டொரு நாட்களாய் வழமையைவிட வித்தியாசமாய் இருக்கு. எண்டாலும் உங்களைத் தரையிறக்கிற பணி தடங்கலின்றி முடியும்" என எம்மோடு கதைக்கும்போது நம்பிக்கை தந்திருந்த கேணல் சூசையின் கட்டளைப்படி படகுகள் கரையில் நின்றன. கூடவே மனம் நிறைந்த நம்பிக்கைப் புன்னகையுடன் கடற்புலிப் போராளிகளும். குளிர்ந்த மண் காலில் பட, மனம் நெகிழ்ந்தது. கரையில் பாதுகாப்புக்கென இராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த 'உடைந்த' காப்பரண்களையும், முட்கம்பித் தடைகளையும் தாண்டி கரையை அண்மித்தோம். அப்போது தெற்கிலிருந்து வடக்காக வானூர்தி ஒன்று செல்லும் ஒளிர்வு விட்டு விட்டுத் தெரிந்தது. தீடீரென நாம் நின்ற பகுதிக்கு அண்மையாக எறிகணைகள் வீழ்நது வெடிக்க, சலசலவெனத் தெறித்தன சிதறுதுண்டுகள். இது படைத்தரப்பின் வழமையான வேலைகளில் ஒன்று எனப் புரிந்துகொண்ட நாம், உடைந்த காப்பரண்களுக்கு அண்மையில் நின்று கடலைப் பார்த்தோம். அது அலைகளின் வீச்சுக்கு அதிர்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலையெனத் திரண்ட ஒவ்வொருவரதும் மனநிலை சொல்லவொண்ணா உணர்வெழுச்சிக்கு உட்பட்டிருந்தது. உயர வீசும் அலைகளெல்லாம் கடலன்னையின் குழந்தைகள். ஓயாது வீசிக்கொண்டிருக்கும் நாங்கள் தமிழன்னையின் குழந்தைகள். ஆகவே அலையின் வலிமை எங்களுக்கும் வேண்டும். மனம் எங்கோ சிறகடிக்க முற்பட்டது. எல்லோரும் நாம் பயணம் செய்யப்போகும் கடற்தாயின் அலைக்கரங்களை இரசித்துக்கொண்டிருக்க, எம்மை ஏற்றும் படகுகள் தயாராகின. ******1 point- குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் கருவேங்கைகள் பயணம் மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி, 2000, பக்கம்: 12-13 & 15 மூல எழுத்தாளர்: கிள்ளிவளவன் தட்டச்சு & தகவற்பிழை திருத்தம்: நன்னிச் சோழன் உசாத்துணை: https://eelam.tv/watch/ஈரத-த-eeraththi-தம-ழ-ழத-த-ர-ப-படம-tamil-eelam-movies_6qsjnVEuiBeDkrb.html வழமைக்கு மாறான செயற்பாடுகள், என்றும் இல்லாத முகமாற்றங்கள், நின்று கதைப்பதற்கோ, இருப்பதற்கோ நேரமில்லாது அவசரமாய் கழிந்தது பொழுது. எல்லாம் அன்று மாற்றமானதாகவே இருந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரரும் தன்னையும் தான் கொண்டுசெல்லவேண்டிய ஆயுத தளவாடங்களையும் இறுதி நேரம் தயார்ப்படுத்துவதில் மிக மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிற்கு ஏதோ ஒரு உணர்வு திரும்பத் திரும்ப அவர்களை நிறைவுபடுத்திக்கொண்டிருந்தது. அவர்களிற்காக வந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைக்கூட கவனிக்காது தாங்கள் கொண்டுபோகும் பொருட்சளிற்கு நீர்க்காப்பு போடுவதிலும் அவற்றை சரியா என்று தேர்வாய்வதிலும் அக்கறை கொண்டிருந்தார்கள். 24-03-2000 அன்றைய பகற்பொழுது இப்படித்தான் அவர்களிற்குக் கழிந்தது. பொழுது மங்கத் தொடங்கிய வேளை அவர்கள் தங்களிற்கான பொருட்களோடு புறப்படத் தயாரானார்கள், பாரம் சற்று அதிகமனதாய் இருந்தது. ஒவ்வொருவரும் தங்களிற்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களைவிட மேலதிகமாகவும் சில வெடிபொருட்களை கொண்டு சென்றனர். எத்தனை இரவுகள் இப்படியான எதிர்பார்ப்புகளுடனும், ஆவலுடனும் அவர்கள் வேவுக்காக திரிந்திருப்பார்கள். அவர்களின் அந்த தேடல் முயற்சியிலே எத்தனை தோழர்களை அவர்கள் இழக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை நாட்கள் ஒருதுளி தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் அதற்காக அலைந்திருப்பார்கள். எல்லாம் அவர்களின் நினைவில் நிழவாடுவதாய் இருந்தது. "எங்கட கையால் 'சாஜ்' கட்டி 'ஆட்டி' உடைக்கோணும், எத்தனையோதரம் சந்தர்ப்பம் வந்து நழுவிற்றுது, இனியொருக்காவரும் அந்த சந்தர்ப்பத்தில் 'ஆட்டி'யை உடைச்சு அண்ணை நினைக்கிறதை செய்து காட்ட வேணும்.'' இப்படி ஒவ்வொருவரின் ஆழமான உணரவும், காற்று அவர்களோடு பேசுவதாய் உணர வைத்தது. அவர்கள் அத்தனை பாரங்களோடும் ஒவ்வொருவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். "நாங்கள் போறம், இந்த முறை எப்படியும் நினைச்சத செய்து முடிப்பம் இல்லாட்டி...." சிரித்தார்க்கள். எல்லோரும் ஒரே பொருளோடு சிரித்தார்கள். கைகுலுக்கினார்கள், கட்டித்தழுவினார்கள். "ஒவ்வொருவற்ற காதுக்கும் நிச்சயமா வெற்றிச் சேதிவரும்" என்று மூச்சைப் பேச்சாக்கினார்கள். அவர்களின் பார்வை வானத்தையோ அல்லது பூமியை நோக்கியபடி இறுதியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரது கால்களும் இலக்கை நோக்கி நடப்பதற்காக குறுகுறுத்தன. வெற்றிலைக்கேணிக் கடற்கரையிலிருந்து அவர்களின் பயணம் ஆரம்பமானது. சிறிய படகுகள் அலைகளில் ஓசையின்றி இருளோடு இருளாகப் புறப்பட்டன. வானவிளிம்பு, உயர்ந்த பெருத்த தென்னந்தோப்புக்களையும், அடர்ந்த மரங்களையும், வெளிகளையும் பிரித்துக் காட்டியது. வெள்ளிகளின் மங்கிய வெளிச்சம் வானத்திலும் ஓலைக் குடிசைகள் இருப்பது போலவும், அந்த குடிசைகளின் துவாரங்களினாலேயே இந்த ஒளி கசிவதாகவும் தெரிந்தது. படகு மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருத்தாலும் அவர்களின் இதயம் வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தது. திட்டம், நகர்வு, தாக்குதல் என்று ஒவ்வொன்றையும் சுரம்மாறாது நினைவுகள் அசைபோட்டன. தாழையடி படைத்தளத்திலிருந்து கடற்கரையை நோக்கி வெளிச்சங்கள் தெரிந்தது. அந்த வெளிச்சங்கள் அவனது சின்ன 'மின்சூழ்' வெளிச்சங்களில் இருந்துதான் கசிந்திருக்கும். அவன் சுற்றுக்காவலிற்காகவோ அல்லது வேறு வலுவெதிர்ப்பு ஏற்பாடு ஒன்றிற்காகவோ நகர்ந்துகொண்டிருக்கிறான் அல்லது பயத்தில் இருளை தனக்குக்கிட்டே வரவிடாது விரட்டுவதற்காக இவ்வாது செய்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிரித்தார்கள். படகுகளில் மெளனம் குடிகொண்டிருந்தது. காற்று ஈரத்தை சுமந்து வீசிக்கொண்டிருந்தது. ஓசையில்லாது படகு கரையைத் தொடும் தொலைவிற்குள் வந்துவிட்டது. படகின் இரண்டு கரைகளாலும் இரு கறுப்பு உருவங்கள் தண்ணீருக்குள் குதித்தன. அவர்கள் சுமந்து செல்லும் பொருட்களின் தோற்றம் அவற்றை பெரிய மணிதர்களாக உருமாற்றிக் காட்டியது. தண்ணீருக்குள் இறங்கியவர்கள் சுடுகலனை மூடியிருந்த நீர்காப்பை அகற்றி சுடுவதற்கு தயாரானார்கள். எந்த நேரமும் தாக்குதல் ஆரம்பிக்கலாம், எனென்றால் அது எதிரியின் கோட்டைகள் நிறைந்த இடம். செம்பியன்பற்றுக்கும் மாமுனைக்கும் இடையிலான பகுதியில்தான் இது நிகழ்ந்து கொண்டிருந்தது. இறங்கிய இருவரும் சுடுகலனை சுடுவதற்கு ஏற்றவாறு பிடித்துக்கொண்டு சற்றுக்குனிந்து ஓசையில்லாது இரண்டு முனைகளிலும் பிரிந்து ஓடியது வானவிளிம்பில் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் நிலையெடுத்தபின், எந்தவிதமான ஊறும் தென்படவில்லையென்பதற்கு மணிக்கூட்டு வெளிச்சத்தில் சமிக்கை செய்தார்கள். அதன் பின்னே படகு கரையடைந்தது. அந்த படகிலிருந்து மற்றப் படகிற்கு சமிக்கை காட்டப்படடது. அதுவும் விரைந்துவந்து கரையைத் தொட்டது. ஒவ்வொரும் நிதானமாக எதற்கும் தயாராக படகுகளிலிருந்து குதித்தார்கள். அவர்களின் பார்வை இப்போது முன்னோக்கியதாக கூர்மையடைந்திருந்தது. படகில் ஏற்றிவந்தவர்களிற்கும், இதுவரை ஒன்றாகவே நின்று இறுதிக்கணமும் பிரியமனமின்றி தவித்துநிற்கும் தோழர்களிற்காகவும் ஒருமுறை திரும்பிப் புன்னகைத்தார்கள். அதற்குமேல் அவர்களிற்கு வேளை கிடைக்கவில்லை. நகருவதற்கான வியூகங்கள் அமைத்து முன்னேறத்தொடங்கினார்கள். கால் புதைந்து புதைந்து எழும் அந்த மணல்கடற்கரை பக்கமாகவே வளைந்து நெளிந்துபோகும் பாதை, மணல் மேடுகளின் நடுவில் வளர்ந்திருக்கும் கண்டல்காடுகள் அவற்றினூடு அவர்களின் கால்கள் முன்னேறின. அடர்ந்த கண்டல் காடு நிறைந்த ஒரு இடத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அகற்றப்படாதிருந்த அனைத்து நீர்க்காப்புகளும் அகற்றப்பட்டன. அங்கே தடயங்களாக இருந்த பொருட்களை மணலில் குழிதோண்டிப் புதைத்து விட்டு மிக கவனத்தோடு எழுந்து நடந்தார்கள். அவர்கள் போகும் திசையில் தொலைவில் தெறோச்சிகள் இயங்கிய ஓசை; அதைத் தொடர்ந்து, வானத்தையும் பூமியையும் அதிரவைக்கும் ஓசை எல்லாம் தெளிவாக கேட்டது. எல்லோருடைய மனதிலும் நம்பிக்கை; எங்களுடைய இலக்குகள் இருக்கின்றன. இனி எப்படியும் அவை அழிக்கப்பட்டுவிடும் என்று. நடந்துகொண்டிருந்தபடியே தனது தோளை வெட்டிய வெடிமருந்துப் பொதிகளைச் சீர்செய்து விட்டு "சத்தம் போடுங்கோ, இஞ்ச உங்களுக்கான சாமான்களோட நான் வாறனெண்டு உங்களுக்குத் தெரியாதுதானே?” என்று எல்லோரும் கேட்கும்படியாக கூறிவிட்டுச் சிரித்தான் தனுசன். அவனின் இயல்பே தனித்துவமானது. உச்சி பிரித்து, மேவி வாரப்பட்டிருக்கும் தலைமயிரும் கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருக்கும் அவனது கண்களும் கதைக்கும் போதும் சிரிக்கும் போதும் கண்ணை மூடிமூடித்திறக்கின்ற அசைவுகளும், உயர்ந்த உடற்கட்டான அவனுடைய உருவமும் அவனை ஒருமுறை, பார்த்தவர்க்ளின் மனதைக்கூட பற்றிக்கொள்ளும். அவனது சொற்களிலிருந்த உறுதியும் நகைச்சுவையும் எல்லோரையும் ஒருகணம் சிரிக்க வைத்தது. தனுசனது கவசமே அலட்டிக் கொள்ளாது அதிகமான செயற்பாடுகள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இயல்புதான். இலக்கிற்காக அவன் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து பயிற்சி எடுத்தது, அதற்காக நகர்வது அனைத்திலுமே அவனின் செயற்பாடுகளில் தன்னை இனங்காட்டிக்கொண்டான். எல்லாப் போராளிகளுடனும் அதிகமாக சிரித்துக்கதைத்தான். அடிக்கடி "இந்த ஆட்டிலறிகளை நிச்சயமா உடைப்பன்" என்று உறுதியாய்க்கூறி புன்னகைத்தான். இன்று, இலக்கிற்கும் அவனிற்குமான தொலைவை காலடிகள் குறைத்துக்கொண்டிருந்தன. அவன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான். அவனிற்கென கொஞ்சப் பொதிகள் கொடுத்தபோதும் அவன் மேலதிகமாகவும் புறப்படும்போது தனக்கு வழங்கிய வெடிமருந்துப் பொதிகள் போதாது என்று, "இன்னும் கொஞ்சம் தாங்கோ. நான் கொண்டுபோவன், தேவைப்படும்!" என்று வாங்கி அதையும் சேர்ந்து சுமந்து கொண்டு நடந்தான். ஒவ்வொருவரது நெஞ்சிற்குள்ளும் தலைவர் கதைத்தது, கட்டளையாளர்கள் எடுத்துரைத்தது, போராளிகள் விடை கொடுத்தது என்று, ஒவ்வொன்றும் வந்துபோனது. அணிகள் நகர்ந்து அகிலன்வெட்டைக் கரையை (சிறுநீரேரி) வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது. அகிலன் வெட்டையில் பரந்து நின்றிருந்த நீர் காற்றுவீசும் நேரம் தவிர மீதியெல்லாம் அமைதியாய் இருந்தது. தெறோச்சிகள் ஏவப்படுகின்ற ஓசை அவர்களிற்குள் ஒரு வேகமேற்படுத்தியது. மெல்லமெல்ல ஒவ்வொருவராக நடந்தார்கள். ஆழம் அதிகமான இடங்களில் சத்தியாவும், ஆந்திராவும் தாண்டு மீண்டார்கள். இரண்டு பேருமே உருவத்தில் சிறியவர்கள். அவர்களின் இந்த சிறிய தோற்றம் பலதடவைகளில் அவர்களிற்கு இலக்கு கிடைக்காது போவதற்கு காரணமாய் இருந்தது. என்றாலும், இம்முறை அவர்களிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மலர்விழி தந்தலைமையிலேயே இவ்விருவரையும் அழைத்துச் சென்றாள். தண்ணீரின் ஆழம் அதிகமான இடங்களில் நுனிக்காலில் நடத்தும், அதை விட அதிகமானால் மலர்விழியின் தோள்களில் பிடித்தபடியும் சத்தியா தன் தண்ணீர் கடப்புப் பயணத்தை தொடர்ந்தாள். ஆந்திராவும் அப்படியே. மற்ற கரும்புலி வீரர்களும் அவர்களிற்கு உதவினார்கள். தண்ணீரும் பாதங்களை பிடித்திழுக்கும் சுரிகளும் பயணத்தை சிரமமாக்கியது. யாரும் அதைக் கடினமாகப் பெரிதுபடுத்தவில்லை. எந்தவிதமான தடயமும் ஏற்படாது கரையேறியவர்கள், சற்றுத் தொலைவு நடந்து ஒரு மறைப்பான இடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள். சிலர் தங்கள் சுடுகலன்களைத் துப்புரவு செய்தார்கள். சிலர் அப்படியே அந்த புதர்கள் மண்டிக்கிடந்த இடத்திலேயே படுத்திருந்தார்கள். சிலர் தாங்கள் கொண்டுவந்த உலர் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டும் மற்றவர்களிற்கு அன்பாய் கொடுத்துக்கொண்டுமிருந்தார்கள். அது ஒரு படையவலயம் என்ற உணர்வு தெரியாது அவர்கள் இயல்பாகவே பேசினார்கள், சிரித்தார்கள். ஆளாளாய் கிண்டலடித்தார்கள். அந்த இடத்திலேயே மறுநாள் பகற்பொழுது கழிந்தது. பகற்பொழுதில் தான் அந்த இடமெல்லாம் படை நடமாட்டம் அதிகமான இடமெனத் தெரிந்தது. படையச் சப்பாத்தின் அடையாளங்கள் ஆங்காங்கே பளிச்சிட மாலைச் சூரியன் சற்று மரங்களிற்குள் மறையத் தொடங்கினான். இதுவரையும் ஒன்றாக நகர்ந்த அணி இரண்டாகப் பிரிந்து வேறுதிசையில் இன்னொரு இலக்கைத் தேடப்போகிறது. களத்தினுள்ளும் ஓர் உணர்ச்சிபொங்கும் பிரிவு. பளையில் அமைந்திருந்த சேணேவித்தளம் நோக்கிப் போகின்ற தனுசன், சுகாஜினி அடங்கிய அணியைப் பார்த்து "உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, இதைவிடக்கூடாது, ஆட்டி தகர்க்க வேணுமெண்டது கனபேற்ற எதிர்பார்ப்பு" என்றாள் மலர்விழி. கூறிவிட்டு தனது தோள்ப்பையிலிருந்த 'பழரின்' ஒன்றை எடுத்து வெட்டினாள். ஒரு தாயிற்குரிய பரிவோடும், பாசத்தோடும் ஒவோரு போராளிக்கும் கொடுத்தாள். அந்த கணங்களில் கண்கள் மெல்லக் கசிந்தன. இதே அணிகளில் இனியார் வெற்றிச் சேதியேடு திரும்புவார்கள்? அங்கு தாமதம் என்ற சொல்லுக்கு இடமில்லை. ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு துளி அரத்தமாக மதிக்கப்பட்டது. தனுசன், சுதாயினி அடங்கிய குழு பளை நோக்கியும், மலர்விழி, சத்தியா, ஆந்திரா அடங்கிய குழு தாமரைக்குளம் நோக்கியும், பிரிந்து நடந்தனர். இனி கடக்கவேண்டிய மிகப்பெரும்தடை கண்டி வீதி ஏ9 - முதன்மைச்சாலை. வீதியோரத்தில் முட்கம்பி வேலிகள். அதைக் கடந்தால் சுற்றுக்காவல் வந்துபோகும் படையினர். அதிகளவு ஒளிசிந்தி இரைந்தபடி ஓடித்திரியும் "பாரவூர்தி"கள். அத்தனை ஊறுகளையும் கடந்துவிட்டால் இலக்கு தகர்க்கப்படுவது உறுதியாகிவிடும். இந்தக்கணத்திலும் அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதியை மீண்டும் சொல்லிக்கொண்டனர். "ஓராள் மிச்சமென்டாலும் உள்ளுக்கபோய் ஆட்டியை உடைக்கோணும்". ஒவ்வொருவருமே அதன் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டிய விதத்தையும் நன்கு அறிந்து வைத்திருத்தனர். கண்டி வீதி கடப்பதற்காய் அங்குலம் அங்குலமாக் நகர்ந்து தடைக்கம்பி வெட்டி, மண்ணணை ஏறி ஒவ்வொருவராக சமிக்கை கொடுத்து கிட்ட அழைத்து, அவர்களை நிலையெடுக்கச் செய்து இப்படி ஒவ்வொன்றும் அங்கே நிதானமாக அரங்கேறிக்கொண்டிருந்தன. கண்டி வீதியால் கிடுகிடுத்தபபடி மிதிவண்டியில் சுற்றுக்காவலுக்கு படையினர் போய்வரும் நடமாட்டம் தெரிந்தது. அடுந்தடுத்து சில படையினர் மின்சூழ்களுடன் போவதும் வருவதுமாக இருந்தனர். அவர்கள் போகும் போது சிங்களப் பாடல்களையோ அல்லது வேறு எதனையோ கத்திக்கொண்டே சென்று வந்தார்கள். அவர்கள் கதைக்கும் சிங்களச் சொற்களிற்குள் கலந்துவந்து ஆங்கிலச் சொற்கள் அவர்கள் காவல்கடைமையை மாற்றுகின்றார்கனள் என்று உணரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பின் எல்லாம் மௌனம். பழைய வடிவமைப்பிலான ஒரு சகடம்(car) போன்ற ஊர்தி பளையில் இருந்து முகமாலைப் பக்கமாய் விரைந்தது. அணி வீதிக்கரையை வந்ததும் வேகமாக கடக்க முயன்றார்கள். முன்னேசென்ற ஒருவன் வேகமாகக் நடந்து கண்டிவீதியை கடந்தான். அடுத்தவன் தனது நிலையிலிருந்து எழுந்தான். கடப்பதற்காக விரைவாக நடந்தான். சாவகச்சேரிப் பக்கமிருந்து உறுமலோடு ஏதோ ஒரு ஊர்தி வந்தது. அதன் ஒளிர்மையான வெளிச்சம் அவனை முழுமையாக காட்டியது. கண்ணைப் பறிக்கும் வெளிச்சம். விரைவாய் திரும்பி வந்த இடத்திற்குச் சென்றான். பின்வந்தவர்களை மறைவெடுக்கச் சொன்னான். எல்லாம் ஒரு கணத்திற்குள் நடந்து முடிந்தது. தண்ணீருக்குள் வந்து கொண்டிருந்தவர்கள் அப்படியே அதற்குள்ளே அமிழ்ந்தார்கள். மரங்களிற்குள், பற்றைகளிற்குள், மண்திட்டுகளிற்குள் என்று அவசர அவசரமாக தங்களை மறைத்துக் கொண்டார்கள். அது படைய 'பாரவூர்தி'. அந்தவண்டி நிறைய எறிகணைகளை ஏற்றிச் செல்வது அந்த பெட்டிகள் மூலம் அறியமுடிந்தது. அதைக் கண்ட போது அவர்களிற்கு மெய்சிலிர்த்தது. எங்கோ ஓர் நடவடிக்கைக்கு படைத்துறை தன்னை தயார் செய்கின்றது என்று. மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள். சேணேவிகளின் அதிர்வு மிக கிட்டவாகவும் எத்தனை என்று அறியக்கூடியதாகவும் இருந்தது. அந்த ஊர்தியின் புகையும், அது கிளப்பிச் சென்ற காற்றும் அடங்கமுன் அணி வேகமாக கடந்தது. கண்டி வீதியைக் கடந்ததும் மனதில் நம்பிக்கை பளிச்சிட்டது. இனி எப்படியும் அந்த இலக்குகள் அழிக்கப்பட்டுவிடும் என்று தென்னந்தோப்புகள், பற்றைகாடுகள், வடலிகள் என்று ஒவ்வொரு இடத்தையும் வேகமாகக் கடந்து தளத்திலிருந்து சற்றுத் தொலைவிற்குள் தங்கிக்கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிரித்து, கதைத்து தங்களின் இறுதிநேர ஓய்வையும் உணவையும் பகிர்ந்து கொண்டார்கள். நித்திரை கொள்பவர்களை தட்டியெழுப்பி "ஏன் இப்ப அவசரப்படுறியள், இனி ஒரேயடியா தூங்கலாம் தானே" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் சுதாஜினி. வழமையான அவளது குறும்புப் பார்வை சிரிப்பு எல்லாமே அப்பொழுதும் அப்படியே இருந்தன. முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்த்துப்போயிருந்தது. இயல்பாகவே அவளிற்கு முகம் கைகாலெல்லாம் வியர்த்துப்போய்தான் இருக்கும். எப்போதும் சிரிக்காமல் கதைத்து அவளிற்கு பழக்கம் இல்லை. இன்றும் சிரித்தபடியே. அவளின் உடற்தோற்றத்திற்கு ஏற்றதுபோல அவனிற்கு 'லோ' வழங்கப்பட்டிருந்தது. அது அவளின் மடியில் அவளைப்போலவே அடுத்தகட்ட பூகம்பத்தை நினைத்தபடி மெளமாய்க் கிடந்தது. ஒவ்வொரு உணவுப் பொதிகளையுமே எடுத்து உண்டபடி தங்களிற்குள் பேசிக்கொண்டிருத்தார்கள். "எப்படி வெளிநாட்டுச் சாப்பாடு, கதிர மேசைதான் இல்லை. பத்தையெண்டாலும் சந்தோசமான சாப்பாடு" சொல்லி முடித்து மூச்சு விட்டான் தனுசன். அவர்கள் ஓய்வை முடித்த அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள். தலைகோதிவிட்டு, கசங்கிய உடுப்பை சரிசெய்து, வியர்த்து உருமாறிய முகங்களை துடைத்து ஏதோ கொண்டாட்டத்திற்குப் போவதுபோல அவர்கள் தயாரானார்கள். இலக்கை அண்மிக்க, அண்மிக்க அணிக்கு உணர்வின் வேகம் அதிகமானது. சண்டைக்கான தயார் நிலையில் அவர்கள் நகர்ந்தார்கள். கொண்டுபோன தண்ணீர்க் 'கான்'கள் அவர்களைப் பேலவே தண்ணிருக்காய் தவித்தது. ஒரு மோட்டை! அந்த பரப்பின் ஓர் மூலையில் கொஞ்சம் தண்ணீர்! அது எப்படி என்னமாதிரியென்று தெரியாது. என்றாலும் அதைக் குடித்தார்கள். பனை மரங்களோடு ஒட்டி வளர்ந்திருக்கும் சிறுபற்றைகளும், மணற்பகுதியில்முளைத்த புற்களையும் கவசமாக்கி அங்குலம் அங்குலமாய் நகர்ந்தார்கள். அவர்களின் கண்களிற்குள் அத்த தளதத்தின் பேருருவம் தெரிந்தது. மண்ணணை இடையிடையே காவலரண், முட்கம்பித்தடை என்று அதன் வலத்தை உறுதி செய்யும் ஏற்பாடுகளும், அவர்கள் முன் விரிந்துகிடந்தது. எதிரி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து எட்டு தெறோச்சிகளை இயக்குவது தெரிந்தது. அது இயக்குவதற்காகவும் வேறுபக்கம் திருப்புவதற்காகவும் அவன் கொடுக்கும் கட்டளைகள் காது மடல்களில் அறைந்தன. அந்த எறிகணைகள் பெரும் ஓசையோடு பிளம்பை கிளப்பி வெடிக்கின்றபோது அதன் பிளம்பு அவர்களில் வியர்வையை உலர்த்துவதாய் முகத்தில் சுட்டது. அவை இன்னும்சில நொடிகளிற்குள் நொருங்கப் போகிறது என்று எண்ணியபோது ஒவ்வொருவரது பற்களும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன. பளை புகையிரத நிலைய கட்டடத்தின் கூரை இல்லாத தோற்றம் முகம் இழந்த ஒருவனைப் போலிருந்தது. அந்த இருளையும் ஊடுருவி அவன் அமைத்திருந்த தடைகளிற்கு வெடிமருந்துகளைப் பொருத்திவிட்டு அணிகளுக்கு தாக்குதலை ஆரம்பிக்கும் சமிக்கையை கொடுக்கவென நினைத்தபோது திறந்த காவலரண் ஒன்றிலிருந்து படைவீரன் ஒருவன் வெளியே வந்தான். அவன் கைககளில் சுடுகலன் இல்லை. ஒளிர்மையான் மின்சூழ் ஒன்றை வைத்து எல்லா இடமும் சுற்றியடித்தான். அவனின் பருத்த உருவமும் முரட்டுத்தனமான தோற்றமும் தெளிவான வானவிளிம்பில் தெரிந்தது. முன்னே சென்றவர்களின் முகத்திற்கு நேரே அவன் ஒளிபாச்சியபோது திடுக்குற்று "கவ்த" என்றான் தடுக்கத்துடன். கரும்புலி வீரர்கள் மனதிற்குள் சிரிப்போடும் கூடிய நிதானத்தோடும் நிலையாக நின்றார்கள். மறுமுறையும் தனது ஒளியை வேறுதிசை ஒன்றில் பாச்சியும் ஓசையோடு ''கவ்த'' என்றான். நிதானம் .... சிரிப்பு. மூன்றாம்முறை முகத்திற்கு நேரே ஒளிபாச்சி அதட்டலாகக் "கவ்த" என்றதுதான் தெரியும்; அந்த படைவீரன் அதிலேயே செத்துக்கிடந்தான். அணி மிக வேகமாக உள்நுழைந்தது. “ஓடுங்கோ. வேகமாக முன்னேறுங்கோ” என்ற ஓசையோடு எல்லோரும் மண்ணணை ஏறி உள்நுழைந்தார்கள். காவலரணில் இருந்து சூடுகள் வந்துகொண்டே இருந்தன. “நான் 'லோ' அடிக்கிறென் முன்னேறுங்கோ" என்று சுதாஜினி கத்தியது ஓசைகளுக்குள் அடக்கமாய் கேட்டது. அடுத்து என்ன நடந்தது என்று நிதானிப்பதற்குள் வெடியோசைகள்.... சுதாஜினி நின்ற இடமே தெரியவில்லை. உறுதியாக எதிரியின் குறி அவளாகத்தான் இருந்திருக்கும். சுதாஜினியின் வெடியதிர்வைப்போலவே ஒவ்வொருவரும் வேகமாக இலக்குகளை நெருங்கினார்கள். தெறோச்சிகள், அதற்கான எறிகணைக் களஞ்சியங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. நிலவு வருவதற்கு முன்னதாக வானம் வெளுத்திருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அந்த சேணேவிகளின் உருவங்கள் கருமையாகத் தெரிந்தன. மிகவேகமான தாக்குதலில் அந்த பெரியதளமும் அத்தனை தெறோச்சிகளும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தன. ஆயுதக் களஞ்சியங்கள் ஆங்காங்கே பெரும் ஓசையுடன் வெடித்து சின்னச்சின்ன எரிமலையாய் எரிந்துகொண்டிருந்தன. நிலைமைகள் வெளியில் அறிவிக்கப்பட்டது. உதவிக்குச் செல்லவென இருந்த அணி அங்கே குறித்த நேரத்திற்குள் போய்ச்சேருமா என்பதில் சந்தேகம் எழுந்தது. கரும்புலி வீரர்களிற்கு செம்பியன்பற்று கடலில் சண்டை நடக்கும் ஓசைகளை தெளிவாகக் கேட்க முடிந்தது. உதவியணி வந்து சேராது என்ற முடிவிற்கு வந்தாலும் இயன்றளவு அத்தனை தெறோச்சிகளையும் பாதுகாத்தனர். தனுசன் எல்லா தெறோச்சிகளுக்கும் ஓடி ஓடி வெடிமருந்துப் பொதிகளை கட்டி வெடிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துகொண்டிருந்தான். வேறு வேறு முகாங்களில் இருந்து அந்த தளத்தை இலக்குவைத்து எறிகணைகளை எதிரி ஏவிக் கொண்டிருந்தான். தனுசன் தன் பணிகளை நிறைவேற்றி முடித்தபோது தெறோச்சிக்கு கட்டிய 'சார்ச்' ஒன்று தவறுதலாக வெடித்தது. அதற்குப் பின் தனுசனின் தொடர்பு இல்லை. பொழுது வெழுக்கத் தொடங்கியது. அத்தனை தெறோச்சிகளையும் தகர்த்து விட்டு பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. தெறோச்சிகளையும் ஆயுதக் களஞ்சியங்களையும் தகர்த்துவிட்டு வெற்றியோடு பின்வாங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரது மனதிற்குள்ளும் அவர்களோடு வந்து பிரிந்துசென்ற மலா்விழியின் அணியும் உறுதியாக தனது இலக்குகளை அழித்திருக்கும் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. அறிய ஆவலாயும் இருந்தது. அவர்களோடு வந்தவர்களில் இரண்டு தோழர்கள் இல்லை. ஆனால் அவர்களின் இலக்கை வெற்றிகொண்டுவிட்டார்கள். தீர்மானித்தபடியே வந்த வழியிலே கண்டி வீதியில் நிலைகொண்ட எமது அணிகளோடு கைகுலுக்கியபோது சொன்னான் ஒரு கரும்புலி வீரன் "எத்தனைபேர் எத்தனை இரவுகளாய் தேடி அலைந்த ஆட்டிலறிகள்..... அத்தனை பேற்றை கனவையும் நிறைவேற்றிப் போட்டம்" சமரிற்கு அடித்தளமிட்டுவிட்ட நிறைவு அவர்களிடம் இருந்தது. அவர்கள் அறிய அவலாய் இருந்த மற்றைய மலர்விழியின் அணி தனக்குத் தரப்பட்ட நான்கு தெறோச்சிகள் கொண்ட இயக்கச்சித்தளத்தை அழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையே சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் கரும்புலி வீரர்களில் மலர்விழியும், ஆந்திராவும், சத்தியாவும் திரும்பவில்லை. மேஜர் தனுசன் ============X============ மேஜர் சுதாஜினி ********1 point- குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் திட்டம் "ஆனையிறவின் மேனி தடவி போனது போனது பூங்காற்று! அதன் மேல் ஏறி ஓயாத அலையில் புலிகள் போயினர் அட நேற்று!" --> அலையின் வரிகள் இறுவெட்டின் 'ஆனையிறவின் மேனி தடவி' பாடலிலிருந்து குறிப்பு: இது விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலும் அவர்களின் நகர்வுப் பாதைகளையும் வைத்து என்னால் எழுதப்பெற்றதாகும். இதை வாசிப்பதன் மூலம் உங்களுக்கு குடாரப்புத் தரையிறக்கத்தின் திட்டம் பற்றிய ஒரு மேலோட்டமான கருத்துரு கிடைக்கும். சிறீலங்கா படைத்துறையால் வல்வளைக்கப்பட்டிருந்த ஆனையிறவில் இருந்த கூட்டுப் படைத்தளத்தினைக் கைப்பற்றி விடுவிப்பதற்காக குடாரப்பில் தரையிறங்கி அங்கிருந்து வெற்றிலைக்கேணி வரை வேகமான தரைத்தொடர்பினை ஏற்படுத்தும் அதே வேளை இந்திரபுரப்பகுதியில் இருந்த ஏ9 வீதியினை ஊடறுத்து, துண்டெடுத்து, ஆனையிறவிற்கான முக்கிய வழங்கல் பாதையினை துண்டித்து ஆனையிறவை விடுவிப்பதே திட்டமாகும். இப்படியான ஒரு தற்கொலைக்கு ஒப்பான அதியுச்ச திகைப்பூட்டும் திட்டத்தினை சிங்களப்படைகள் ஒருகாலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை புலிகள் நன்கறிந்திருந்தனர். ஆகையால்தான் இதனை துணிந்து தேர்ந்திருந்தனர். இதற்கமைவாக மேற்குறிப்பிட்ட படையணிகளில் இருந்து தேரப்பட்ட 1200 பேர் கொண்ட தரைப்புலி படைத்தொகுதி ஆயத்தப்படுத்தப்படுவர். இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து சுண்டிக்குளம் கடனீரேரிக்கு கொண்டுவரப்படுவர். அங்கிருந்து கட்டைப்படகுகள் மூலம் 3 கிமீ தாண்டியிருந்த, நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் சிறீலங்காப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட ஓரிடத்திற்கு ஏற்றிப்பறிக்கப்படுவர். அங்கிருந்து சிலர் நடந்தும் சிலர் உழுபொறிகள் மூலமும் 10கிமீ பயணித்து கட்டைக்காட்டினை அடைவர். அங்குவைத்து இவர்களுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளுக்கும் புலற்றப்படும். தேவையான மேலதிக பொருட்கள் - மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுகள், இனிப்புகள், அன்றைய மதிய உணவு - வழங்கப்படும். அங்கிருக்கும் புலிவீரர்களின் அணித்தலைவர்கள் முன்னரே கடற்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு படகேறும் பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இவர்கள் உழுபொறிகள் மூலம் வெற்றிலைகேணி கோவிலடி கடற்கரைக்கு ஏற்றிப்பறிக்கப்படுவர். அங்கிருந்து ஏற்கனவே அணியமாகவுள்ள தரையிறக்கப் படகுகளாக மாற்றப்பட்டிருந்த உப்பயான விதம் மற்றும் புளூசுரார் விதம் ஆகிய கட்டைப்படகுகளில் கடற்புலிகளால் ஏற்றப்பட்டு தாழையடி தானைவைப்பு மீதிருந்து வரும் தாக்குதல்களையும் கடலில் டோறாக்களின் தாக்குதல்களையும் சமாளித்தவாறு கரையோர காவலரண்களை மேவிக்கடந்து, 13 கிமீ பயணித்து, குடாரப்பு கடற்கரையில் கனவகை படைக்கலன்களுடன் தரையிறக்கப்படுவர், சாள்ஸ் சிறப்பு கடற்தாக்குதல் அணியினரால். கடல்வழி நகர்வின்போது கடற்சமர் மூண்டு படகுகளுக்கு நேர்ச்சிகள் ஏற்பட்டு மூழ்கும் சமயத்தில் படகினில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு நீச்சல் தெரியாதலால் அவர்கள் இலகுவாக நீந்திக் கரைசேர்வதற்கு ஏற்றவாறு கடற்புலிகள் படகுகளை கரையினை அண்டியவாறே ஓட்டிச்செல்லுதல் வேண்டும். தரையிறக்கமானது சூரிய உதயத்திற்கு முன்னர் நடந்தேறியிருக்க வேண்டும். இல்லையேல் பகல் பொழுதில் சிங்கள வான்படையின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்; இதனால் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முக்கியமாக கருத்திலெடுக்கப்பட்டிருந்தது. தரையிறங்குவோர் செல்லும் படகுகளில் எந்தவொரு எதிர்தாக்குதல் செய்யும் வசதிகளும் இல்லாமையால் இவர்களுக்கு சேமமாக கடற்புலிகளின் 7 சண்டைப்படகுகளும் செல்லும். கடற்புலிகளுக்கு எவ்வளவுதான் இழப்புகள், உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் தரையிறக்கப்படுவோருக்கு சிறு கீறலும் இல்லாமல் இறக்கப்பட வேண்டும். அதுவே தேசியத் தலைவரின் ஆணையாகவும் இருந்தது. இவற்றிற்கிடையில் மற்றுமொரு அதிரடித் தாக்குதலும் நடந்தேறும். பளைப்பகுதியில் சிங்களப் படைகள் அமைத்திருந்த சேணேவித்தளமான 'ஆட்டிவத்த' (தமிழில்: சேணேவிவத்தை) மீது 11 பேர்(5 ஆண்கள் 6 பெண்கள்) கொண்ட கரும்புலி அணி மூன்று குழுக்களாகப் பிரிந்து மின்னல்வேகத் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டும். இதற்காக அவர்கள் முன்னொரு நாளில் கடல்வழியாக உப்பயானங்கள் மூலம் உட்கொண்டுசெல்லப்பட்டு பின்னர் தரைவழியாக ஊடுருவி நகர்ந்து பதுங்கியிருப்பர். கைப்பற்றிய பின்னர் தெறோச்சிகளை பின்னகர்த்த புலிகளின் தாக்குதலணியொன்று உதவிக்கு அனுப்பப்படும். அது வர ஏலாமல் போக்கும் சமயத்தில் அங்கிருக்கும் தெறோச்சிகளை வெடிபொதிகள் மற்றும் கான் சார்ச்சுகள் கொண்டு அழிப்பதன் மூலமும் தளத்தினுள் இருந்த எறிகணைகளை வெடிவைத்து தகர்ப்பதன் மூலமும் சேணேவித்தளத்தினை பல மணிநேரத்திற்கு மீளப் பயன்படுத்த முடியாத நிலைக்கு செயலிழக்கச் செய்வர். இதனால் தரையிறங்கப் போகும் அணிகளுக்கு உடனடி சேணேவித் தாக்குதல் ஏதும் நிகழாமல் அவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவர். பின்னர் கரும்புலி அணியினர் பாதுகாப்பாக தளந்திரும்புவர். பேரணி தரையிறக்கப்படுவதற்கு முன்னர், தலையணியாகிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓரணியானது 7 படகுகளில் முன்சென்று தரையிறங்கி, வேகமான மெள்ளத்தில் சதுப்பு நிலத்தைப் பூகோள அமைவிடமாகக் கொண்ட கடனீரேரி வழியாக அவ்ளவு தொலைவையும் இரவின் துணையுடன் நடந்து கடந்து, இத்தாவில் பகுதியில் சச்சரவில்லாமல் கமுக்கமாக நிலைகொள்ள வேண்டும். நிலைகொள்வோர் ஈரணியாகி, தென்மராட்சியில் புதுக்காட்டுச் சந்திக்கும் பளைக்கும் நடுவே இருந்த பகுதியில், தொண்டைமானாறு நீரேரிக் கரைப்பக்கம் 2கிமீ அகலத்தையும், யாழ் நெடுஞ்சாலைப் பக்கம் 800மீ அகலத்தையும், மொத்தமாக 4கிமீ நீளத்தையும் கொண்டு தொண்டைமானாறு நீரேரிக்கு முதுகையும் கிளாலி கடலிற்கு முகத்தையும் காட்டியபடி 'நாக்கு' வடிவில் இத்தாவில்-இந்திரபுரத்தில் இருந்த ஏ9 வீதியில் நிலையெடுக்க வேண்டும். நிலையெடுப்போரில் ஓரணி பளையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் மற்றைய அணி முகமாலையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களமைத்து நிலைகொள்ள வேண்டும். இந்த கமுக்கமான தொடக்க நகர்வின் வெற்றியில்தான் ஏனைய நகர்வுகள் தங்கியிருந்தன. தலையணி நிலைகொள்ளும்போது பேரரையர் பால்ராச்சும் ஏனையோரும் தரையிறக்கப்-படுவர்;பட்டிருப்பர். தரையிறங்கியோரில் கேணல் பால்ராஜ் தலைமையிலான 4 கொம்பனி(Company) முழுதாக வெயில் வருவதற்குள் 2 கிமீ தரைவழியாகவும், பின்னர் 2 கிமீ விரக்களி ஆற்றினூடாகவும் (இத்தாவில் இந்திரபுரம் நோக்கி புலிவீரர்கள் வீறுநடை போடத் தொடங்கிய இடத்தின் ஆட்கூற்று = 9.647583067959973, 80.35144293793446. இந்த மாமுனை பாலமிருக்கும் இடத்திற்குள்ளால் தான்) பேந்து கண்டல் பற்றைகள், சதுப்பு நிலங்களைக் கடந்து இத்தாவில் அடைந்து அங்ஙுள்ள அணியோடு கைகோர்க்க வேண்டும். இவர்களுக்கு முன்னரே தரையிறங்கும் மேஜர் மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலிகள் அணியானது இயக்கச்சி, கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் உள்ள சேணேவித் தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இன்னபிற பணிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஏனையோர் இறங்கியவுடன் அருகில் இருக்கும் மாமுனையில் உள்ள தானைவைப்பினை அழிக்க வேண்டும். பின்னர் அங்கு ஒரு கட்டளைப்பீடம் அமைக்க வேண்டும். சம நேரத்தில் நாகர்கோவில் படைத்தளத்தை பார்த்தவாறு நாகர்கோவில் தெற்கின் வடதிசையில் ஓரணியும், முகமாலை-கிளாலியினை பார்த்தவாறு மற்றொரு ஓரணியும், இத்தாவில் பெட்டிக்குச் செல்லும் எஞ்சிய வழி மூடிடாதபடி பளையை பார்த்தவாறு பிறிதொரு அணியும் உள்தடுப்பு அரண்கள் அமைத்து நிலைகொள்ள வேண்டும். ஏனைய அணிகள் செம்பியன்பற்றினைக் கைப்பற்றி தாழையடியினை வசமாக்கிடும் பணியில் ஈடுபட வேண்டும். அதேநேரம் ஊடறுக்கப்பட்ட கண்டி வீதிக்குச் செல்வோர் சிங்களம் ஏற்படுத்தும் மாற்று வழங்கல் பதையான கறுக்காய்தீவு - புலோப்பளை உள்ளடங்கிய ஒடுங்கிய கிளாலி-கச்சாய்-சாவகச்சேரி வீதி மீதும் எறிகணைத் தாக்குதல் செய்ய வேண்டும். தாழையடி என்பது மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும். ஏனெனில் இவ்வாறு தரையிறக்கப்பட்டோரை மீள எடுப்பது ஏலாத காரியமாகும். அதனால் அவர்கள் தரைவழியாகவே வந்து சேரவேண்டும் என்பதும் மிக முக்கியமாக இருந்தது. அதற்கு தடையாக இருந்த தாழையடி தளத்தினைக் கைப்பற்றி வன்னியோடான தரைவழிப்பதை திறத்தலே ஒரே தீர்வாகும். தரையிறக்கப்படுவோருக்கு தரைவழி வழங்கல் ஏதுமற்ற நிலையில் முழு வழங்கலும் கடல் வழியாகவே நடைபெபெறும். கடல் வழங்கல்கள் பாரிய கடற்சமர்களுக்கும் வான் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்துதான் வந்து சேர வேண்டும். ஆனாலும் தடங்கலின்றி நடைபெறவேண்டும். தொடர் கடல்வழி வழங்கல் சீராக இருக்கப்போவதில்லை என்பதால் தரையிறங்கியோர் தரைவழி வழங்கல் பாதை ஒன்றினை இயன்றளவு கெதியாக ஏற்படுத்த வேண்டும். தரைவழி பாதையினை திறப்பதற்காக கேணல் தீபன் தலைமையிலான மற்றொரு படைத்தொகுதியில் சூட்டி தரைத்தாக்குதல் அணி, சுகன்யா தரைத்தாக்குதல் அணி, ஜெயந்தன் படையணியின் ஒரு பிரிவு, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி உட்பட்ட இம்ரான்-பாண்டியன் படையணியின் சில பிரிவுகள், சிறப்புப்படை ஆகியவற்றுடன் ராதா விமான எதிர்ப்பு அணியும் உதவிக்கு புலனாய்வுத்துறை தாக்குதலணியும் இணைந்து கட்டைக்காட்டில் இருந்து முன்னேறி உடுத்துறை, ஆழியவளை ஆகியவற்றைக் கடந்து தெற்குப் பகுதியில் இருந்து தாழையடியை இரவு நேரத்தில் தாக்கி நெருக்க வேண்டும். இவர்களுக்கு உதவியாக கடலில் இருந்து கரையோரக் காவலரண்கள் மீது கடற்புலிகள் தாக்கவேண்டும். சமநேரத்தில் வடகில் இருந்து தரையிறங்கிய அணிகள் தாழையடியினை தாக்கி நெருக்க வேண்டும். அதே சமயம் சிறப்புப்படையினர் பல குழுக்களாக படைத்தளத்தினுள் ஊடுருவி முக்கிய தாக்குதல்கள் நிகழ்த்த தாழையடி தமிழர் வசமாகும். பேந்து, மருதங்கேணிச் சந்தியில் இருக்கும் சிங்களப் படைத்தளத்தினையும் வீழ்த்திட வேண்டும். அதன் பின்னரே குடாரப்பில் தரையிறங்கியோருக்கான தொல்லையில்லா தரைவழிப் பாதை உடுத்துறை வழியாக திறக்கும். அதன் பின்னர் வடமராட்சி கிழக்கில் சமராடிய போராளிகள் ஏனைய சமர்க்களங்கள் நோக்கி நகர வேண்டும். இதுவே தரையிறக்கத்தோடான தாக்குதல் திட்டம் ஆகும். இவ்வாறாக 2ம் உலகப்போரில் நோர்மண்டியில் நேசநாட்டுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கமானது எவ்வாறு போரின் போக்கில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி ஒரு முழு படைத்துறை வெற்றியினை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்ததோ அதுபோலவே இதுவும் இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர். அவர்கள் நம்பினது போலவே படைவலுச் சமநிலை மாறி மாபெரும் வெற்றியினை ஈட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது உலகின் பெரும் வல்லரசுகளின் பார்வையையும் தமிழர் பக்கம் திருப்பியது என்பது மறுக்கவியலா உண்மைகளாகும். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் ------------------------------------------------------------------ வத்திராயன் பொக்ஸ் - வத்திராயனில் உள்ள ஒரு சமரணியின் தலைமையகத்தையும் முள்ளியானில் உள்ள படைத்தொகுதி தலைமையகத்தையும் உள்ளடக்கிய தானைவைப்பிற்கு சிறீலங்கா படைத்துறை அதிகாரிகள் 'வத்திராயன் பொக்சு' என்று பெயரிட்டனர். முள்ளியான் மற்றும் வண்ணான்குளம் கரையோரச் சிற்றூர்களுக்கு இடையில் நீண்டு செல்லும் இச் செவ்வகப் பரப்பானது 3 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் கொண்டது ஆகும். ******1 point- குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் பொழிப்பு மூலம்: சமராய்வுப் பிரிவு, தமிழீழம் (ஆண்டு அறியில்லை) முதன்முதலில் எழுத்துருவில் வெளியிடப்பட்டது: 2000 ஆம் ஆண்டு. தமிழ்செய்திக்கதிர்.blogspot.com தனித்தமிழில்: 26/10/2021 கரு: குடாரப்புத் தரையிறக்கத்தின் பொழிப்பு பார்வை மற்றும் ஆனையிறவுச்சமரின் மேலோட்டப் பார்வை. ஆனையிறவு கூட்டுப் படைத்தளத் தாக்குதல் சிறீலங்கா படைத்துறையினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான சிறீலங்கா படைத்துறையினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாழையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்கு தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர். ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய படைத்துறைத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது. அறைகூவல்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கரந்தடிப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகவலுவான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வழங்கல் பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம். தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படைத்தொகுதி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி அனைத்து வழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் வலுவோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் தகரிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மிக இடரான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகுத்தொகுதி ஆழக்கடல் சென்று இரண்டு மணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடுஞ்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறா அதிவேக சுற்றுக்காவல் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் சமராடின. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த சேணேவித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு தெறோச்சிகளை செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைக் கட்டளையாளர்களாக சோதியா படையணிக் கட்டளையாளர் துர்க்கா, மாலதி படையணிக் கட்டளையாளர் விதுசா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளையாளர் (பின்னர் பிறிதொரு நேரத்தில் வீரச்சாவடைந்த) லெப். கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர். புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வழங்கலைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான சமர் கட்டளையாளர்கள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான். வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்பு வரை அரச படையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வழங்கல் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வழங்கலை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாழையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வழங்கலை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாழையடி உட்பட்ட மிகவலுவான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள். அதுவரை சரியான வழங்கலை, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவூர்திகள், சேணேவிகள், படையணிகள் என்று அனைத்தையும் பயன்படுத்தினான். மிகமிக முரட்டாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல ஊர்திகள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான சேணேவிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவூர்திகள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர். தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய தெறோச்சிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத கெதியில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர். முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடியோசையாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான். சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து படைத்துறை மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர். =================================================== கரு: கரும்புலிகளால் பளையில் 11 தெறோச்சிகள் அழிக்கப்பட்டமை. 26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் கமுக்கமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய சேணேவித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை சேணேவித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள். குறிப்பிட்ட சேணேவித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. சேணேவித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தொலைவில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. சேணேவித்தளத்தை காத்து நின்ற நூற்றுக்கணக்கான தரைப்படையினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டமெடுத்துவிட்டனர். சேணேவித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து. சேணேவிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு தெறோச்சிகள் இருந்தன. ஓடிய எதிரி வலுவைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி தெறோச்சிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு தெறோச்சிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். தெறோச்சிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அச்சேணேவித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் கமுக்கமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். பளை சேணேவித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அமையம் தேவைப்பட்டது. ******1 point - பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.