Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88006
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    11531
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/11/22 in Posts

  1. புல்வெளியில் தூங்கும் நிழல்கள்! நீண்ட பயணத்தின் இடையிடையே பாலங்களைக் கடப்பதுபோல, என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி என்னைக் கடந்து செல்கின்றன. ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு, மாறிமாறி நான் பயணப்பட்டேன் . மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ் கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள். ஆளுறக்கம் கொள்கின்றன. பயங்கர சூறாவளி வீசுகிறது மரங்கள் வேருடன் குடைசாய்ந்து நிழல்களுடன் சல்லாபித்தபடி, மண்ணில் புரண்டன. என் நினைவுகள் ஒரு நிழல் வெறுமையின் பாத்திரம் தூக்கி வீசப்பட்டது. -தியா-
  2. தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது முதிர்ந்த , நீண்ட தா டியும் பரடடைத் தலையும் கையில் ஒரு ஊன்று கொள்ளும் , தோளில் ஒரு துணி மூடடையும் கொண்ட முருகேசனும் உட்கர்ந்திருந்தார் . அவரூ க்கு பழக்கமான சிலர் என்ன முருகேசா! நீ வேதமா ? சைவமா? எனக் கேட்ப்பார்கள். அவரும் அப்பா வேதம் அம்மா சைவம் அதனால் நான் முருகேசனானேன். என்பார் ... அப்போது அங்கு ஒரு வெண்ணிறக் காரில் ஒரு வயதான அம்மாள் , தன உதவி பெண்ணுடன் கும்பிட வந்திருந்தார். வாயிலின் அருகே இருந்த முருகேசனின் தட்டில் இருபது ரூபாய் ...வந்து விழுந்த்து ...ஏற்கனவே சில சில்லறைகளை வைத்திருந்தார் . அந்த இருபது ரூபாயை எடுத்து தனியே பாத்திரம் பண்ணி வைத்தார் . இரண்டு நாளாக உணவு சாப்பிட வில்லை . வெறும் தேநீர் மட்டும் அருந்தி பேசிக் களையை போக்கி இருந்தார். . மதிய வெயில் பசி மயக்கம் கண்ணைக் கட்டிடவே மெது வாக அருகில் இருந்த சாப்பாட்டுக்கு கடையை நோக்கி சென்றார் . இவர் தோற்றத்தை பார்த்த்தும் வாயிலில் நிற பையன் ... அப்பாலே போ என விரட்டினான் . தம்பி ..நான் சாப்பிட வந்திருக்கிறேன் என்றதும் ஒரு ஓரமான பலகை யைக் காட்டி அங்கு உட்க்கார்ந்து கொள் என்றான். பணியாளர் (வெயிட்டர் ) அருகே வரவே ..தம்பி எனக்கு ஒரு பார்சல் ..எவ்வ்ளவு என்றான். "மீன் சாப்பாட்டு பார்சல் ஐம்பது ரூபாய்" ..."மரக்கறி பார்சல் முப்பது ரூபாய் " என்றான். அருகே அமர்ந்திருந்த ஒரு இளைஞன் .. அவர் வைத்திருந்த இருபது ரூபாயைக் கண்டு ...தம் பி அவருக்கு ஒரு மீன் பார்சல் கொடு என்றான். பின் அந்த முதியவருடன் பேசத்தொடங்கினான். "ஐயா உங்களுக்கு என்ன ஆனது என் இந்த நிலமை ? என்று கேட்ட்க அவர் கண் கலங்கியது .. அவர் தன்னைப்பற்றி கூறத்தொடங்கினார் . தம்பி நான் கனடா நாட்டுக்கு சென்று ..மனைவி இருமகன்களுடன் வாழ்ந்து வந்தேன் . கஷ்ட பட்டு வேலை செய்தேன். இராப்பகலாய் கண் விழித்து இரண்டு வேலைகள்செய்து பிள்ளை களைப் படிக்க வைத்து ஆளாக்கி கலியாணம் கட்டி வைத்தேன். பின் நானும் மனைவியும் ..முதுமை காரணமாக தாய் நாட்டுக்கு வந்து வாழ ஆசைப்பட்டு . வீடடை விற்று மக்களுக்கு கொடுத்து விட்டு ,மீதிகாசுடன் ..சில வருடங்கள் நலமாக வாழ்த்து வந்தோம். எனக்கு ஓய்வூதியம் பணம் வந்தது ...அதில் சேமித்து ஒரு வீடடை வாங்கினேன். எமக்கு துணையாக ஒரு பையனை வளர்த்தோம். காலம் மிக வேகமாக ஓடியது என் மனைவிக்கு வ யிற்றில் புற்று நோய் வந்து அவதிப்பட்டு, வைத்ய சாலையும் வீடுமாக அலைந்தேன். வளர்ப்பு மகனையும் படிப்பித்து ஒரு வேலையில் யில் அமர்ந்ததும் ..ஒருகலியாணம் கட்டி வைத்தேன். அவனுக்கு இரு பெண் குழந்தைகள் . காலப்போக்கில் மனைவி இறந்து விடடாள் . வந்த மருமகள் மிகவும் கர்வம் பிடித்தவள் . என் முதுமை காரணமாய் .ஒரு கண் பார்வையை இழந்தேன். மற்றையது ஓரளவு பார்வை தெரிகிறது .. ..மனைவி இல்லாத அருமை புரிந்தது .. என்னை கவனிக்கவே மாடடாள் மருமகள். குளிக்க உடைமாற்ற எனக்கு உதவி தேவைப்பட்ட்து ...கை நடுங்க ஆரம்பித்து விட்ட்து ஆதர வின்றி ..கோவிலைக் காட்டி ..இந்த கோவிலே தஞ்சம் என் வாழ்கிறேன். என உணவை மெல்ல மெல்ல உண்டுகொண்டே சொல்லி முடித்தார். இளைஞனும் அவருக்கும் தனக்குமான உணவுக்கு காசைக் கட்டி விட்டு இருவரும் வெளியேறினார். அவர் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட ...அந்த இளைஞன் .சற்று பொறுங்கோ என் சொல்லி ...அருகில் இருந் காரை எடுத்து வந்து ..இதில் ஏறுங்கோ என சொல்ல தாத்தா மறுத்தார் . வற்புறுத்தி .. எற வைத்து சில மணி நேர ஓட்ட்த்தின் பின் ...ஒரு கருணை இல்லத்தின் முன்னே நின்றது ...இறங்கி இவரையும் அழைத்து கொண்டு இவரும் முன் வாயிலில் இருந்தா காரியாலயத்தில் ..எதோ ...பேசி விட்டு திரும்ப வந்து தாத்தா இனி இது தான் உங்கள் வீடு என சொல்லி அவருக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படி பணித்தான். அங்குள்ள உதவியாளர் அவருக்கு குளித்து புத்தாடை உடுத்தி முக சவரம் தலைமுடி கத்தரித்து .. அவருக்கு ஒரு தனியான அடைக்க படட அறை ஒழுங்குபடுத்தி ...ஆதரவளித்தனர் . சில மணி நேர இடைவேளையின் பின் ...அந்த இளைஞன் மீண்டும் வந்து இவரை பார்த்தன். அவரது இருப்பிடமும் வசதியும் திருப்பி அளிக்கவே. மீண்டும் மேலிடத்தில் உள்ள காரியாலயத்தில் சென்று . இன்னும் சில வசதிகள் அவருக்கு தேவைப்படுவதாகி சொல்லி ...ஏற்பாடு செய்து வீடு திரும்ப இருளாகி விட்ட்து . தன் காரை பின்னோக்கி ரெவெர்ஸ் செய்யும் போது ,முன் முகப்பு வெளிச்சத்தில் மின்னியது "அம்மா கருணை இல்லம் :" வீடு சென்று உணவு உண்டு ... மனைவி குழந்தைகளுடன் உரையாடி விட்டு ... உறங்க சென்று தாயின் படத்தை நோக்கி கும்பிட ஒரு வெண்ணிற பூ ..உதிர்ந்தது அவன் முன்னே. "மகனே ஒரு நல்ல காரியம் செய்தாய் " எனும் மலர்ந்த புன்னகையுடன் அவர் அம்மா படத்தில் புன்னகைத்தாள். ஒரு தாயின் கருவில் உருவாகி பூமில் வாழும் மனிதன் ஒரு மரத்துக்கு இணையாகிறான். ஒரு விதை மரமாகி, கிளைபரப்பி பூத்து காய்த்து கனிந்து மீண்டும் விதையாகி மண்ணில் சருகாகி வீழ்கிறான். விதைகளுக்கு தெரிவதில்லை இலைச் சருகுகள் தான் தம்மை வளர்த்த விளை நிலங்கள் என்று.
  3. எழுதுகிறேன்.. வேலைப்பளு அதிகமாகிவிட்டபடியால் உடனே தொடர முடியவில்லை, மன்னிக்கவும். 😒 விடுமுறை நாட்களில் நேரமெடுத்து செய்றேன்.
  4. இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍
  5. நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...! மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....! இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....! கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...! நல்ல ஒரு படிப்பினைக் கதை...!
  6. தியா பெண்ணல்ல ...ஆண் பிள்ளை.✍️.🤭
  7. கதை முடிஞ்சுது எண்டு நினைக்கிறன்....😷
  8. உள்ளத்தின் கதவுகள் கண்களடா ........! 😍
  9. பார்வை ஒன்றே போதுமே.......(15). வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது. அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள். எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில் ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும் அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால் படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது. சாமிநாதனும் பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும் மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும் மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது. திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல ..... ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா...... இல்லை...... ஏனாம் ..... நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ...... அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும். அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......! யாவும் கற்பனை......! யாழ் 24 அகவைக்காக அன்புடன் சுவி......!
  10. உங்களுக்கு பதின்ம வயது எனக்கு, பருவ வயது கிறக்கத்தில் இருவருக்கும் பேதம் அதிகமில்லை கொழும்பான் ........! 😂 இங்கு வந்து செல்கிறீர்கள் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு.......! 🌹
  11. பார்வை ஒன்றே போதுமே..........(14). அப்போது நிர்மலாவும் தனது கைப்கையில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்து நீங்கள் குறை நினைக்கக் கூடாது உங்களுக்கு தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஒரு வெற்றுக் காசோலையை ஒப்பமிட்டுக் குடுக்க உடனே முத்து அதை மறுத்து வேண்டாம் தங்கச்சி அது உங்களிடமே இருக்கட்டும். அப்பாவே எங்களுக்கு எவ்வளவோ செய்து விட்டார். சித்ராவும் ஓம் நிர்மலா நான் அவர் மானம் காக்க ஒரு தாவணித்துண்டுதான் குடுத்தேன், நிர்மலா இடைமறித்து அண்ணா இவளின் தாவணியைக் கட்டிக்கொண்டு அப்பா எப்படி இருந்திருப்பார் என்று நினைத்துப் பார் செமையாய் இருக்குதில்ல அவனுக்கும் சிரிப்பு வருது அதை மறைத்து கொண்டு உனக்கு நேரங்காலம் தெரியாமல் எப்போதும் குறும்புதான் என்று சொல்லி அவள் தலையில் குட்டுகிறான். போ அண்ணா வலிக்குது என்று சினுங்க, சித்ராவும் தொடர்ந்து அப்பா எங்களுக்கு கல்வி மட்டுமல்ல நிரந்தர வருமானத்துக்குரிய வழிகளும் செய்து, கடைத்தெருவில் பெரிய கடை ஒன்றை வாங்கவும் ஆலோசனைகள், வங்கியில் கடன் வாங்க என்று எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்.இவை யாவும் அவர் செய்திரா விட்டால் எங்களால் முடிந்திராது. இதுவே எங்கள் ஆயுளுக்கும் போதும். இந்த அயலில் எங்கள் குடும்பத்தை ஒரு கௌரவமான நிலைக்கு உயர்த்தி விட்டுள்ளார். அதைவிட எந்நிலையிலும் தாழாத தன்னம்பிக்கையை எங்களுக்கு ஊட்டி இருக்கிறார். இதைவிட எங்களுக்கு வேறென்ன வேண்டும். ரவிதாசும் உடனே நீங்கள் இருவரும் இன்றிலிருந்து எங்களுடைய சகோதரர்கள், இது வெறும் வார்த்தையல்ல என் இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று சொல்ல, நிர்மலா இடைமறித்து வேண்டாம் சித்ரா இவனுக்கு தங்கையாய் இருந்தால் குட்டி குட்டியே உன் மூளையை கூழாக்கி விடுவான். நீ விரும்பினால் எனக்கு அண்ணியாக வாயேன் நான் அப்பாவிடமும் அம்மாவிடமும் கதைக்கிறேன் என்று சொல்ல சித்ராவின் முகம் மலர்ந்தாலும் உடனே சிறிது வாட்டமடைகிறது. ஏன் சித்ரா நான் சொல்வது உனக்குப் பிடிக்கவில்லையா அல்லது அண்ணாவைப் பிடிக்கவில்லையா வேறு யாரையாவது விரும்புகிறாயா எதுவானாலும் தைரியமாகச் சொல்லு என்கிறாள். முத்துவும் கொஞ்சம் யோசிக்க, அப்படியல்ல நிர்மலா உங்கள் குடும்பத்தில் வாழ்க்கைப் படுவதென்றால் அது எங்களுக்கு மிகப்பெரும் பாக்கியமாகத்தான் இருக்கும். ஆனால் என்று இழுக்க, ஆனால் என்ன சொல்லு நிர்மலாவும் முத்துவும் கேட்க, ரவிதாசுக்கு மனம் நிம்மதியாய் இருக்கு, அவன் இப்பொழுதுதான் வெளியூர் பயணமாக லண்டன் போகும் போதெல்லாம் அங்கு ஒரு தமிழ் யுவதியை காதலிக்க ஆரம்பித்திருந்தான். அது இன்னும் நிர்மலாவுக்கு தெரியாது. சித்ராவும் ஆனால் நீங்கள் யாரும் குறை நினைக்க வேண்டாம். சில நாளாக நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன், இவ்வளவு காலமும் இல்லாமல் எங்கள் அம்மா மனம் சலனமடைகின்றா போல் இருக்கிறது. அப்பாவிடமும் அது தெரிந்தாலும் எதுவோ தடுப்பதுபோல் அம்மாவைத் தவிர்த்து அவர் விட்டேற்றியாக செல்வதையும் பார்க்கிறேன். ஆனால் இப்போதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கும் அம்மாவின் விருப்பத்தை ஏற்கத் தயங்குவதுமாக "இருதலைக் கொள்ளி எறும்பு போல்" தவிப்பதையும் உணரமுடிகிறது. நாங்கள் அறிய எனது அம்மாவையும் சிறுவயதிலேயே அப்பாவுக்கு கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். உடனேயே அடுத்தடுத்து பிள்ளைகள் என்றும் குடிக்கும் அப்பாவோடு எப்போதும் சண்டை என்றும் ......அவ வாழ்க்கையில் எந்த ஒரு சுகமும் கண்டதில்லை. இப்ப சமீபகாலமாகத்தான் அம்மா முகத்தில் ஒரு மலர்ச்சியையும் மந்தகாசத்தையும் பார்க்கிறேன். அதுதான் நான் யோசிக்கிறேன். இது ஒன்றும் எனக்குத் தெரியாதே அக்கா என்று முத்து சொல்ல உனக்கு என்னதான் தெரியும் முன்பெல்லாம் அம்மா என்கூட அறையில்தான் படுப்பது வழக்கம்.இப்போ உள்ளே குசினிக்குள்தான் படுக்கிறா. அதன் வரிச்சு மட்டைகளினூடாக அப்பாவைப் பார்ப்பதுபோல், பழைய காதல் பாட்டுக்களை ரேடியோவில் ரசித்துக் கேட்கிறா, என்னுடைய பவுடர் கியூடெக்ஸ் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாவிக்கிறா. இதெல்லாம் நான் பார்க்காத புது அம்மாவாக இருக்கு. சொல்லும்போதே அவள் குரல் கரகரக்கிறது, கண்களில் நீர் கோர்க்கிறது. ஓம்...சித்ரா சொல்வது சரிதான், இன்று நானும் அதைப் பார்த்தேன் என்கிறான் ரவிதாஸ் . எது வேலியால் எட்டி எட்டி பார்த்தீங்களே அப்போதா. என்கிறான் முத்து. தனக்குள் மாட்டைத்தவிர மற்றதெல்லாத்தையும் பார்த்திருக்கிறார் அண்ணர். ஆமாம் அப்போது அப்பாவின் முதுகுதான் தெரிந்தது அம்மாவ நன்றாகவே பார்த்தேன் ரொமான்ஸ் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர்கள் உங்களின் பெற்றோர் என்றுதான் நினைத்தேன். நினைத்துப் பார்த்தால் அப்பாவின் வாழ்க்கையும் அப்படித்தான் போய் இருக்கிறது எந்நேரமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்........! பார்ப்போம் இனி ...........! ✍️
  12. பார்வை ஒன்றே போதுமே.......... (13). என்ன தம்பி நீங்கள் இப்படிப் பேசுறீங்கள்.நான் மாடு வாங்கத்தான் வந்தனான். தற்செயலாகத்தான் உங்களின் கைக் கடிகாரத்தைப் பார்த்தேன் அவ்வளவுதான். இல்லை அண்ணை , நீங்கள் பொய் சொல்லுறீங்கள். நீங்கள் அணிந்திருப்பது சாதாரண ஆடைகள்தான் ஆனால் உங்களின் மோட்டார் சைக்கிலே லட்சத்துக்கு மேல் இருக்கும். அதைவிட உங்களின் தோற்றமும் வீதிகளில் திரிந்து மாட்டு வியாபாரம் செய்ப்பவர் போல் இல்ல. ஒன்று நீங்கள் வசதியானவராய் இருக்க வேண்டும், அல்லது எங்காவது சைக்கிள் திருடுபவராய் இருக்க வேண்டும் என்கிறான் முத்து. இவர்கள் இப்படி வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க உள்ளே இருந்து என்ன அண்ணா பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே வந்த சித்ரா ரவிதாசைப் பார்த்ததும் திகைத்துப் போய் சார் நீங்களா, இது என்ன கோலம். எதுக்கு சார் இப்படி என்று கேட்கிறாள். உடனே முத்து அக்கா இவரை உனக்கு முன்பே தெரியுமா, உன்னைப் பார்க்கத்தான் வந்து வேலியால எட்டிப் பார்த்துக் கொண்டு நிக்கிறாரோ. ஓம் அண்ணா, இவர்தான் நான் வேலை பார்க்கும் வணிக வளாகத்தின் சொந்தக்காரர். பின்பு யோசித்து நேற்று அப்பா பரிசளித்த செயினைப் பார்த்து அதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்றவர். ஒருவேளை அதுக்காக வந்திருக்கலாம். ஆனால் ஏன் இப்படி மாறுவேடத்தில் வரவேணும் அதுதான் எனக்குப் புரியவில்லை என்று செல்கிறாள். அப்படியா என்னுடைய கடிகாரத்தையும் பார்த்து விலை எல்லாம் விசாரித்தாரே என்று சொல்லி விட்டு ரவிதாசைப் பார்த்து என்ன சார் உங்கட பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறம் என்கிறான். அப்போது ஒரு வெண்ணிற ஆடிக்கார் ஒன்று அன்னம்போல் அசைந்துவந்து அவர்கள் அருகில் நிக்கிறது. அதில் இருந்து தமையனைத் தேடி வந்த நிர்மலா இறங்கி வருகிறாள். அவளை பார்த்த சித்ராவும் அண்ணா இவர் நிர்மலா இவரின் தங்கை என்று முத்துவுக்கு அறிமுகம் செய்கிறாள். அந்நேரம் தங்கள் வீட்டின் முன்னால் கார் வந்து நிக்கும் சத்தம் கேட்டு திண்ணையில் இருந்து எழும்பிய சாமிநாதன் திரும்பி இவர்களைப் பார்க்க ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து தகப்பனைக் கண்ட நிர்மலா அண்ணா எங்கட அப்பா அண்ணா என்று சொல்லி விட்டு அப்பா அப்பா என்று கத்திக் கொண்டு உள்ளே சாமிநாதனை பார்த்து ஓடுகிறாள். பின்னாலேயே ரவிதாசும் அப்பா என்று அழுதுகொண்டு ஓட முத்துவும் சித்ராவும் ஒன்றும் புரியாமல் பின்னால் போகிறார்கள். ஓடிப்போய் தகப்பனின் காலைக் கட்டிப் பிடித்த நிர்மலா ஏனப்பா எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போனனீங்கள். உங்களை எங்கெல்லாம் தேடி அலைந்தோம் கிடைக்கவில்லையே என்று கதறுகிறாள். பின்னால் வந்த ரவிதாசும் தந்தையின் தோளில் முகம் புதைத்து அழுகின்றான். இதற்குள் மகேஸ்வரியும் சித்ராவும் முத்துவும் நிலைமையை ஓரளவு புரிந்து கொள்கிறார்கள். மகேஸ்வரி முன்னால் வந்து மெதுவாக நிர்மலாவின் தலையை வருடி தன்னுடன் அணைத்துத் தூக்குகிறாள். சாமிநாதன் கண்களில் இருந்தும் கண்ணீர் நிரம்பி கன்னங்களில் வழிந்தோடுகின்றது. அவரும் ரவிதாசை அணைத்துக் கொண்டு தேம்பி அழுகின்றார். ரவிதாசும் நீங்கள் எங்களை விட்டுட்டுப் போன சில மாதங்களிலேயே அம்மாவும் எங்களை அனாதையாக விட்டுட்டுப் போய் விட்டா அப்பா. உங்களை நாங்கள் தேடாத இடமில்லை. ஏனப்பா இப்படி என்று அழுகிறான். ஒருவாறு எல்லோரும் ஒருவரையொருவராக தேற்றிக் கொண்டபின் மகேஸ்வரி எல்லோருக்கும் தேநீர் போட உள்ளே போகிறாள்.முத்துவும் ரவிதாசும் சிநேகபூர்வமாய் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்திருந்த நிர்மலாவிடம் சித்ரா அவரை முதன் முதல் சந்தித்ததில் இருந்து எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்கிறாள்.அதை எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தேநீர் குடித்தபின் அந்த இடங்களை பார்ப்பதற்கு ரவிதாசும் நிர்மலாவும் செல்கின்றனர். அப்போது பின்னால் வந்த முத்து சித்ராவிடம் கண் ஜாடை செய்து தனது கையில் இருந்த கடிகாரத்தைக் கழட்டி ரவிதாசிடம் தர சித்ராவும் கழுத்தில் இருந்து சங்கிலியைக் கழட்டுகிறாள். உடனே அவர்களைத் தடுத்த ரவிதாசும் கொஞ்சம் பொறுங்கோ, என்ன இது இவை உங்களுக்கு அன்போடு அப்பா தந்த பரிசுகள்.அவை உங்களிடமே இருக்கட்டும்.நாங்கள் இவற்றுக்காக இங்கு வரவேயில்லை முத்து, எங்கள் அப்பாவைப் பற்றி ஏதாவது விபரம் அறியலாம் என்றுதான் வந்தோம் வந்ததுக்கு அப்பாவே கிடைத்து விட்டார். இவ்வளவு நாளும் ஒரு விரக்த்தியில் வாழ்ந்திருந்தோம் இப்போதான் உயிர் வந்ததுபோல் இருக்கிறது. நீங்கள் எங்கள் அப்பாவை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கு நாங்கள் உங்களுக்கு எவ்வளவு செய்தாலும் ஈடாகாது என்கிறான்.........! பார்ப்போம் இனி.......! ✍️
  13. கடன்சா, உண்மையான பெறுமதியில் (Equity) முதலிடுவதை தவறு என கூறவில்லை என நினைக்கிறேன். உண்மையான பெறுமதியை எவ்வாறு அறிவது? உதாரணமாக அவுஸ்ரேலிய வீட்டு விலைகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னிலிருந்து 2014 வரை அதன் வளர்ச்சி விகிதம் சராசரியாக 10 ஆண்டில் வீட்டின் விலை இரட்டிப்பாகிறது என கூறுகிறார்கள். அதாவது ஆண்டு ஒன்றிற்கு 10% வளர்ச்சி மாதிரியுள்ளது ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றிற்கு 7 % கூட்டு வட்டியே இவ்வகையான 10 வருடத்தில் வீட்டின் விலை இரட்டிப்பாவதற்கு காரணம், இது வீட்டு தேய்மானம், பண வீக்கம் உள்ளடங்கலாக (7% முன்பு கணித்தாக நினைவிலுள்ளது). உங்கள் கருத்து போல வீடு காணி முதலீடு நல்ல முதலீடுதான். ஆனால் தற்போது சிட்னியில் வீட்டின் விலை அதிகரிப்பு ஆண்டொன்றிற்கு 33% வீதம் என்றால் 7% விகிதத்திற்கும் 33% இற்குமிடையே உள்ள இடைவெளி சிந்திக்க வைக்கின்றது. https://www.abc.net.au/news/2022-01-27/sydney-median-house-price-increases-but-growth-expected-to-slow/100785706 வீட்டு விலை அதிகரிப்பானது வருமான அதிகரிப்பை விட அதிகம். இது கடனை அதிகரிகத்து ஒரு தளம்பல் நிலையை உருவாக்கும். இந்த வருமான அதிகரிப்பு குறைவாக இருப்பது பெரும்பான்மையான அடிமட்ட வருமானம் பெறுபவர்களையே அதிகம் பாதிக்கும். உதாரணமாக அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் வருமான வேறுபாட்டை பின்வருமாறு கூறுகிறார்கள். முதல் 10% மானவர்கள் நாட்டின் மொத்த வருமானத்தை தமதாக்கி கொள்கிறார்கள், அதாவது மிகுதி 90% மான மக்கள் மிகுதி 50% வருமானத்தை தமக்கிடையே ப்கிர்கிறார்கள், 10% = 50% 1% = 24% 0.1% = 12% 0.01% = 6% அது இவ்வாறு செல்லும். 2007 ஆம் ஆண்டளவில் 15000 அமெரிக்கர்களின் வருமானம் 700 பில்லியன், இது கிட்டத்தட்ட இலங்கையின் ஒரு ஆண்டிற்குரிய மொத பொருளாதார வளர்ச்சியினை விட 9 மடங்கு அதிகமாகும். வருமான வித்தியாசமிருந்தால் அதனால் என்ன பாதிப்பு? நாடு பொருளாதார வளர்ச்சி அடையும் போது அதனூடே அனைவரது வருமானமும் அதிகரிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் சில விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் அந்த அதிகரித்த வளர்ச்சி தாம் எடுத்து கொண்டால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் கடன் விகிதம் அதிகரிக்கும். இந்த வீட்டு விலை வளர்ச்சிக்கும் வருமான அதிகரிப்பும் குறைந்த பட்சமாவது இடைவெளி குறைவாக இல்லாவிட்டால் நிலமை என்னவாகும்? 1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது. சாதாரண மக்களின் மீது அவர்கள் வாங்கும் பொருதள் முதல் அவர்கள் உழைப்பு வரை வரி விதிக்கும் அரசுகள், வரி மூலம் வருமான மீள்வினியோகம் என்று சொல்கிறது, அவ்வாறிருந்தால் ஏன் இவ்வாறான பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பொருளாதர சரிவை உருவாக்க வேண்டும்? JP மோர்கனை King maker என்றே கூறுவார்கள்.
  14. உண்மையைச் சொல்லுங்கள் புத்தரே! உங்கள் பக்தர்களே உண்மையைத் திரிவுபடுத்துபவர்கள் என்று இன்று உலகமும் அறியும். உங்கள் இதயம் ஒருத்தியைக்கூடக் காதலித்தது இல்லையா?? அந்தக் காதலிக்கு உங்கள் காதல் தெரியாதிருந்தது வேறுகதை. 😋
  15. பார்வை ஒன்றே போதுமே......... (12). அன்று வக்கீல் தவராசாவின் அலுவலகத்துக்கு கையில் பைலுடன் நிர்மலா வருகிறாள். அங்கு சித்ரா போன் பேசிக் கொண்டு இருக்கிறாள். பேசி முடித்ததும் போனை மேசையில் வைத்து விட்டு நிர்மலாவிடம் நலம் விசாரித்து விட்டு என்ன விடயம் நிர்மலா, ஒரு போன் செய்திருந்தால் நானே அங்கு வந்திருப்பன் என்கிறாள். நிர்மலாவும் பரவாயில்லை சித்ரா, இந்த ஒரு கேசில் உங்களின் ஆலோசனை தேவை என்று சொல்லி பைலை எடுத்து நீட்ட அதனுள் இருந்த பேப்பர்கள் சில கீழே விழுகின்றன. அடடா என்று நிர்மலாவுடன் சித்ராவும் குனிந்து அவற்றைப் பொறுக்குகின்றாள். அப்பொழுது சித்ராவின் ப்ளவுசுக்குள் இருந்து சங்கிலி டாலருடன் நழுவி கீழே தொங்குகிறது. அதைக் கவனித்த நிர்மலாவுக்கு அது தனது தந்தையின் செயின் போல் தோன்ற என்ன சித்ரா உங்களின் செயினும் டாலரும் அழகாய் இருக்கிறது, ஆனால் ஆண்களுடையது போல் இருக்கிறது என்ன. ஆமாம் நிர்மலா இது என் அப்பா நான் பட்டம் பெற்றபோது பரிசளித்தவர். ஓ ....அப்படியா நல்லாயிருக்கு என்று சொல்கிறாள். அப்படியே தற்செயலாக மேசைமேல் இருந்த போனைப் பார்த்ததும் அதுவும் தனது தந்தையுடையது போல் இருக்கவும் அங்கு அவளால் நிக்க முடியவில்லை. நீங்கள் இவற்றைப் பாருங்கள் நான் மாலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கிளம்ப, சித்ராவும் பரவாயில்லை நிர்மலா நானே கொண்டுவந்து தருகிறேன் என்றதும் சரி என்று சொல்லி உடனே கிளம்பி அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து நேராக தமையனின் அறைக்கு சென்று நடந்ததை சொல்கிறாள். உடனே ரவிதாசும் வா போய் விசாரிப்பம் என்று வெளிக்கிட அவனை நிர்மலா தடுத்து அவள் மாலை இங்கு வருகிறாள் அப்பொழுது பக்குவமாய் விசாரிக்கலாம் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று தோன்றுகின்றது. அன்று மாலை சித்ரா பைலுடன் அங்கு வரும்போது நிர்மலாவோடு ரவிதாசும் வரவேற்பறையில் அங்கிருந்தான். இருவரும் கோப்பி குடித்துக் கொண்டிருந்தனர். சித்ராவிடம் நீங்களும் ஒரு கோப்பி குடிக்கலாமே என்று சொல்ல சித்ராவும் வேண்டாம் நன்றி என்கிறாள். அப்போது நிர்மலா தமையனிடம் அண்ணா சித்ராவின் செயினைப் பாரேன் வித்தியாசமாக அழகாக இருக்கிறது என்கிறாள். ரவிதாசும் எங்கே பாப்போம் என்று அவன் ஜாடையாய் கேட்டு அவள் மார்பை நோக்க, ம்....இருங்கள் கழட்டித் தருகிறேன் என்று சித்ராவும் செயினைக் கழட்டி அவனிடம் தருகிறாள்.அதை கையில் வாங்கி நன்றாகப் பார்த்த ரவிதாஸ் நானும் இதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அதை அவளிடம் தந்து விட்டு உங்களின் போன் நம்பரைத் தர முடியுமா எனக் கேட்கிறான். அவளும் அதுக்கென்ன என்று சொல்லி தனது போனால் அவனது நம்பரைக் கேட்டு அதுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைக்கிறாள். அப்போது அவர்கள் இருவரும் அந்தக் கைபேசியை நன்றாக உற்றுப் பார்க்கின்றனர். பின்பு பொதுவாக அவன் அவளை விசாரிப்பதுபோல் விசாரித்து அவளது இருப்பிடத்தையும் அறிந்து கொள்கிறான். அதன்பின் சித்ரா கிளம்பி செல்கிறாள். அப்போது நிர்மலா என்ன அண்ணா ஒன்றும் விசாரிக்காமல் அவளை அனுப்பி விட்டாய் என்று சொல்ல அதற்கு ரவிதாசும் இந்தப் பெண்ணைப் பார்த்தால் பொய்யானவள் போல் தெரியவில்லை, ஒருவேளை நமது அப்பா இவைகளை இவளது தந்தைக்கு விற்றிருக்கலாம். இவளின் தந்தையை சந்தித்தால் அப்பாவின் விபரம் தெரியவரும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல நிர்மலாவும் ஓம்...அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்கிறாள். நாளைக்கு நானே நேரில் சென்று இவர்களை நோட்டம் விடப்போகிறேன் என்கிறான். அடுத்தநாள் ரவிதாஸ் மிகவும் சாதாரண உடுப்பு அணிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சித்ராவினது வீட்டருகே சென்று நிறுத்தி விட்டு வேலியால் எட்டி எட்டி இவர்களது வீட்டை நோட்டம் விடுகிறான். அங்கே பட்டியில் மாடுகள் நிக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் முற்றத்தில் செல்லமாக முட்டி முட்டி விளையாடுகின்றன. அங்காலே வீட்டு விறாந்தையில் ஒருவர் இருக்கிறார்.மறுபுறம் திரும்பி அவர் இருப்பதாலும் தாடி மீசையுடன் இருப்பதாலும் அவனால் அந்த ஆளை மட்டுக்கட்ட முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து அவருக்கு தேனீர் குடுத்து விட்டு அவர் அதை அருந்தும் அழகை ரசிப்பதுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டு அருகில் நிக்கிறாள். அவன் தனக்குள் நினைக்கிறான் இவர்கள் சித்ராவின் பெற்றோராய் இருக்க வேண்டும் என்று. ரவிதாசுக்கு அந்தப் பெண்மணியின் வசீகரமான சாந்தமான முகம்தான் தெரிகிறது. இன்னும் அவரைத் தெரிய வில்லை. அதனால் அங்கும் இங்குமாக நடந்து வேலியால் எட்டி எட்டி அவர் முகத்தைப் பார்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது பேப்பர், பால் எல்லாம் வீடுகளுக்குப் போட்டு விட்டு சையிக்கிளில் வீட்டுக்கு வந்த முத்து தனது வீட்டருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ரவிதாசைக் கண்டு மறித்து அண்ணே நீங்கள் யார் வேலியால எட்டி எட்டி பார்க்கிறீங்கள். இதற்குமுன் உங்களை நான் இங்கு பார்த்ததில்லையே என்று கேட்க ரவிதாசும் அவசரத்துக்கு என்ன சொல்வதென்று யோசித்து சட்டென்று தம்பி நான் மாடு வாங்க வந்தனான். முத்தத்தில் மாடுகளைக் கண்டதும் நின்று பார்க்கிறன். வீட்டுக்காரர் விப்பினமோ தெரியேல்ல என்று சொல்கிறான். ஓ....அப்படியா இது எங்களுடைய வீடுதான். ஆனால் நாங்கள் மாடுகள் விக்கிறதில்லை என்று சொல்லிவிட்டு சைக்கிள் ஹாண்டிலில் கை வைத்து திருப்ப முயல அவன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த ரவிதாசும் உங்களின் கடிகாரம் அழகாய் இருக்கு, என்ன விலையிருக்கும் என்று இயல்பாகக் கேட்கிறான். தெரியவில்லை இது அப்பா எனக்கு பரிசாகத் தந்தது என்று சொல்லிவிட்டு, என்ன நீங்கள் மாடு வாங்க வந்ததாக சொல்லுறீங்கள். பின் கடிகாரம் பற்றி விசாரிக்கிறீங்கள், உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் என்று கொஞ்சம் கடுமையாக கேட்கிறான். முத்துவின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது........! பார்ப்போம் இனி ...................! ✍️
  16. பார்வை ஒன்றே போதுமே..........! (11). இம்முறை வயலில் நல்ல விளைச்சல். விதைநெல்லை கழித்துப் பார்த்தாலும் அதில் எப்படியும் நாலு லட்சத்துக்குமேல் கிடைக்கும். இனி இவர்கள் உழைத்து கொண்டுவந்து குடுத்த காசு சேமிப்பு மற்றும் வீடு காணி ஈடுவைத்தாலும் அதில் எப்படியும் எழெட்டு லட்சங்கள் வரும்.கணக்கு பார்த்ததில் சராசரியாக பதினோரு லட்சங்கள் வரும். இன்னும் நாலு லட்சம் மற்றும் எழுத்து கூலிகள் எல்லாம் இருக்கின்றன. முத்து சொல்கிறான் கண்ணப்பர் இவ்வளவு குறைவாக தாறன் என்ற போதிலும் ஒரு கொஞ்சப் பணத்தால் எல்லாம் கைநழுவிப் போயிடும் போல இருக்கே என்று கவலைப் படுகிறான். தம்பியின் மனக்கஷ்டத்தைப் பார்த்த சித்ரா நானும் இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். என்னை ஒரு பெரிய வணிக வளாக்கத்துக்கு ஆலோசகராக வக்கீல் நியமித்திருக்கிறார். ஆயினும் இப்பொழுது நான் உங்களுக்கு உதவ முடியாமல் இருக்கிறது வேதனை தருகிறது. மகேஸ்வரியும் பரவாயில்லை சித்ரா நீ யோசிக்காதை என்கிறாள் . பரவாயில்லை முத்து. ஒரு காரியம் கைகூட வேண்டுமென்றால் லேசில் கிடைக்காது. அதற்காக முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. "முயற்சி மெய் வருந்தக் கூலி தரும்" நாளைக்கு காலையில் நீ வங்கிக்கு சென்று உன் சான்றிதல்களைக் காட்டி கடன் கேட்டுப் பார் என்று சொல்ல அதுவும் சரி என்ற முடிவுடன் எல்லோரும் படுக்கப் போகின்றார்கள். மகேஸ்வரியும் சாமிநாதனின் கட்டிலுக்கு வேறு நல்ல துணிகளையும் போர்வையையும் மாற்றிவிட்டு லேசாக அவரை உரசிக் கொண்டு சென்று கதவருகில் நின்று சிநேகமான ஒரு பார்வை பார்த்துக்கொண்டே குசினிக்குள் பாய் விரித்து படுக்கப்போகிறாள். அப்போது சித்ரா அம்மா இங்கே வந்து என்கூட படும்மா என்று அழைக்க போடி உங்கே ஒரே நுளம்பு குத்துது. ஓ..... உங்கே நுளம்பு இல்லையா என்று கேட்க, ஓம் பிள்ளை இங்கு அடுப்பு வெக்கைக்கு நுளம்பு வாறதில்லை.வேணுமெண்டால் நீயும் இங்கு வந்து படு. இல்லையம்மா நான் கட்டிலில் படுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் தூங்கிப் போனாள். மகேஸ்வரிக்கு தூக்கம் வரவில்லை. இப்போதெல்லாம் தான் சாமிநாதன் மீது நிறைய அக்கறையும் உரிமையும் எடுத்துக் கொள்வதுபோல் அவளுக்கு தோன்றுகிறது. அந்நேரம் வெளியே படுத்திருக்கும் சாமிநாதனும் இவர்களின் சம்பாசனையைக் கேட்கிறார். தனது மனைவியின் இது போன்ற தவறுகளால்தான் தான் வீட்டை விட்டு வெளியேறி வந்தது. அதனால் எதுவாயினும் சபலத்துக்கு இடங்கொடுப்பதில்லை என்னும் வைராக்கியத்துடன் எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்கிறார். அடுத்தநாள் காலை முத்து தனது சான்றிதழ்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு வங்கிக்கு செல்கிறான். அங்கு மேலதிகாரியை சந்திப்பதற்கு நேர அனுமதி கேட்கிறான். அவர் கணணியைப் பார்த்து விட்டு இன்று மாலை 15:00 மணிக்கு ஒரு இடம் இருக்கு சரியா என்று கேட்க சரி என்றுவிட்டு வெளியே வருகிறான். பின் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்துக்கொண்டு திரிந்து விட்டு மத்தியானம் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு மூன்று மணிக்கு வங்கிக்கு வருகிறான். அங்கே அவரின் அறையில் அவரிடம் தான் தனியாக தொழில் தொடங்குவதற்கு கடன் தந்து உதவ முடியுமா என்று கேட்டு தனது சான்றிதல்களைக் கொடுக்கிறான். அவரும் அவனது சான்றிதழ்களைப் பார்த்துக் கொண்டே எவ்வளவு வேணும் என்று கேட்கிறார். அதற்கு அவனும் ஒரு ஐந்து லட்சம் வேணும் என்று சொல்கிறான். அதைக் கேட்டுக் கொண்டே ஆறுதலாக நிமிர்ந்தவர் இப்ப வெறும் சான்றிதழுக்கு எல்லாம் கடன் குடுக்க வாங்கி அனுமதிக்காது தம்பி. அப்ப நாங்கள் சுயமாய் தொழில் செய்ய கடன் பெற முடியாதா ஐயா என்று கேட்க அவரும் இப்ப வங்கி விவசாயத்திற்கும் கால்நடை வளர்ப்புக்கும்தான் கடன் தருகுது. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ நாங்கள் வந்து பார்த்து அதற்குரிய பெறுமதியை கடனாகத் தருகிறோம் என்று சொல்ல அவனும் கேட்டுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான். அவன் வந்து சொன்னதைக் கேட்டதும் சாமிநாதன் கொஞ்சம் யோசித்து விட்டு வா கண்ணப்பரிடம் போகலாம் என்று அவனையும் கூட்டிக் கொண்டு போய் அவரைச் சந்தித்து அவரிடம், ஐயா நீங்கள் நகரத்துக்கு போவதாய் இருந்தால் உங்களின் இந்த மாடுகளை என்ன செய்யப் போறீங்கள் என்று கேட்கிறார். அவரும் நான் அவற்றை வித்துக் கொண்டு இருக்கிறேன் தம்பி. முன்பு பத்து மாடும் கன்றுகளும் இருந்தன. அதில் இதுவரை நாலும் சில கன்றுகளும் வித்துப் போட்டன். எல்லாம் நல்ல நாட்டு மாடுகள். உழவுக்கு வண்டிலுக்கு என்று தனித்தனியாக இருக்கு. இன்னும் ஆறு மாடுகளும் கன்றுகளும் இருக்கு என்று சொல்கிறார். சாமிநாதனும் விஷயத்தை சொல்லி வங்கியில் கடன் வாங்க மாடுகள் தந்து உதவ வேண்டும்.நீங்கள் பார்த்து சொல்லுங்கோ பணம் தருகிறோம் என்று சொல்கிறார். பின் அவர் சம்மதத்துடன் அங்கிருந்து மாடுகளையும் கன்றுகளையும் இருவருமாக ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். வரும்போது முத்து கேட்கிறான் உங்களுக்கு எப்படி ஐயா தெரியும் அவரிடம் மாடுகள் இருக்குதெண்டு. அதுவா நாங்கள் அங்கு இருக்கும்போது பல மாடுகள் குரல் கொடுக்கும் சத்தங்களைக் கேட்டேன். சில சின்னக் கன்றுகள் வளவுகளில் துள்ளித் திரிவதையும் கண்டேன்....அத்துடன் இவர் குடிபெயரும்போது இவைகளை என்ன செய்வார் என்றும் யோசித்தேன் அவ்வளவுதான். ஒன்றும் இல்லை ஐயா உங்களின் அனுபவத்துக்கு முன்னாள் நானெல்லாம் வெறும் பூஜ்யம்தான் என்கிறான். ஓட்டிக் கொண்டுவந்த மாடுகளை வீட்டுக்கு முன் வெறுமையாய் கிடந்த நிலத்தில் ஒரு தடுப்புகள் போட்டு பட்டியாக அடைத்து விட்டார்கள். அடுத்து வந்த சில நாட்களில் வங்கி அதிகாரிகள் வந்து பார்த்து லோன் பாஸ் பண்ணி மகேஸ்வரியிடம் ஐந்து லட்சம் கடனாக கொடுக்கிறார்கள்..................! பார்ப்போம் இனி ........! ✍️
  17. பார்வை ஒன்றே போதுமே...........( 10 ). முத்துவும் சாமிநாதனும் அந்தக் கடை முதலாளி குடுத்த பாதணிகளை சிறப்பாகத் திருத்தி பொலீஸ் போட்டு எடுத்துக்கொண்டு தங்களது வீட்டுக்கு போகும் வழியில் கடை முதலாளி கண்ணப்பரின் வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு முற்றத்து வாங்கில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்த கண்ணப்பர் இவர்களைக் கண்டதும் வாங்கோ வாங்கோ என்ன இண்டைக்கே செய்து கொண்டு வந்து விட்டீர்கள் என்று முகமன் கூறி வரவேற்கிறார். முத்துவும் பாதணிகளின் பையை அங்கிருந்த திண்ணையில் வைத்துவிட்டு நிமிர அவர் மனைவி அங்கு வந்து முத்துவை நலம் விசாரித்துக் கொண்டே நன்றாக செய்திருக்கிறாய் முத்து என்று பாராட்டுகிறாள். பின்பு நீங்கள் கதைத்துக் கொண்டு இருங்கோ உங்களுக்கும் தேத்தண்ணி போட்டு எடுத்துக் கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். கண்ணப்பரும் என்ன முத்து நீயும் அக்காவும் படித்து பட்டங்களும் பெற்று விட்டீர்கள் என்று அறிந்தேன்.இப்ப என்ன செய்கிறாய். ஓம் ஐயா நான் வியாபாரம் சம்பந்தமான படிப்பும், அக்கா வக்கீல் படிப்பும் படித்திருக்கிறோம்.இந்த வருடம்தான் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இனி யாரோடாவது கூட்டாக சேர்ந்து செய்வதா அல்லது சொந்தமாக செய்வதா என்று யோசிக்கிறேன்.அப்படியா நல்லது, இதையெல்லாம் பார்க்க உனது அப்பா இல்லை என்பது வேதனையாக இருக்கு. அன்று நடந்த அந்தச் சண்டையில் அவர் மட்டும் என்னைக் காப்பாற்றவில்லை என்றால் இன்றைக்கு நான் உயிரோடு இல்லை என்று சொல்லி சிறிது நேரம் மௌனத்தில் மூழ்கிறார். அப்போது சாமிநாதன் அவரைப் பார்த்து ஐயா நான் ஒன்று கேட்கலாமா என்று வினாவ அவரும் ம்....என்று தலையை மட்டும் அசைக்கிறார். நீங்கள் உங்கள் கடையை விக்கப் போறதாய் கேள்விப்பட்டேன் அதுதான் என்று இழுக்க ....கண்ணப்பரும் ஓம் ....வியாபாரமும் முந்தியைப்போல இல்லை. எங்களுக்கும் வயசாயிட்டுது. மகளும் தன்னோடு வந்து இருக்கச்சொல்லி ஒரே ஆக்கினை. அவளுக்கும் இனி கலியாணம் காட்சி என்று இருக்குது. அதுதான் நகரத்துக்கு போய் அவளோடு இருப்பம் என்று யோசிக்கிறம் என்கிறார். சாமிநாதனும் நீங்கள் உங்களின் விலையை சொன்னால் ஆரும் விசாரித்தால் நாங்கள் சொல்லலாம் என்கிறார்.நான் ஒரு இருபது லட்சம் விலை வைத்திருக்கிறேன். கடை மேல் மாடி எல்லாம் போன வருடம்தான் கட்டியது. உங்களுக்கு தெரியும்தானே....ஏன் நீங்கள் யாராவது எடுக்கப் போறீங்களோ என்று கேட்கிறார். தற்சமயம் எங்களிடம் அவ்வளவு பணமில்லை.வாங்கிறதெண்டாலும் தோட்டம் வீடு எல்லாம் ஈடு வைத்துதான் வாங்க வேண்டும். இவர்களும் இன்னும் சிறுபிள்ளைகளாகத்தான் இருக்கினம். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது வழி காட்டி விட்டால் உங்கள் நண்பரின் குடும்பமும் தலைநிமிர்ந்து விடும் என்று பார்க்கிறேன். கண்ணப்பர் முத்துவைப் பார்த்து, முத்து நீ என்ன சொல்கிறாய் என்று கேட்க, முத்துவும் நீங்கள் எல்லாம் பெரியவர்கள். மேலும் நீங்கள் நிர்கதியாய் நின்ற எங்களுக்கு செய்த உதவியை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.அம்மா அப்பப்ப இதைக் கதைக்கும்போது இப்பவும் கண்கலங்கி விடுவா. அக்காவும் படிப்பு முடிச்சு இப்ப பிரக்டீஸ் செய்கிறா என்று சொல்கிறார். சரி கொடுக்கல் வாங்கல் என்று வரும்போது நாளைக்கு இதால ஒரு பிரச்சினையும் வரக்கூடாது. உறவோ நட்போ எதையும் "அறப்பேசி உறக் கொள்ள வேண்டும்" நான் நேராகவே விசயத்துக்கு வாறன் நீங்கள் என்ற படியால் ஒரு பதினைந்து லட்சம் தந்தால் போதுமென்கிறார்.சாமிநாதனும் ஒரு மாதம் தவணை கேட்க அவரும் சரி என்று ஒப்புக் கொள்கிறார். பின் அவர்கள் இருவரும் தேநீரைக் குடித்து விட்டு வீட்டிக்குப் போகிறார்கள். அப்போது கதவருகில் நின்று இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணப்பரின் மனைவி வெளியே வந்து அவரருகில் கதிரையில் இருந்து கொண்டு, என்னங்க நான் ஒண்டு சொல்லவா என்று கேட்கிறாள். ம்...சொல்லு என்று அவர் சொல்லவும், வந்து உந்தப்பிள்ளை முத்துவும் எங்கட மகள் எல்லாரும் சின்னனில இருந்து ஒன்றாய் விளையாடித்திருந்த பிள்ளைகள். பொடியனும் நல்ல ஒழுக்கமாய் இருக்கிறான். எங்கட மகளுக்கு இவரைக் கேட்டு மகேஸ்வரியிடம் கதைப்பமே. நான் அதை யோசிக்காமல் இருப்பனே....ஆனால் அந்தப்பக்கத்தில சில பிரச்சினைகள் இருக்கு. என்னதான் நண்பனின் குடும்பம் என்றாலும் இப்ப முன்பின் தெரியாத ஒரு ஆளோட மகேஸ்வரி ஒரே வீட்டிலேயே வாழுறா. அதோட முத்துவுக்கு தமக்கை இருக்கிறாள். அவளின் திருமணத்துக்கு பிறகுதான் இவருக்கு வழி பிறக்கும். எதுக்கும் சிறிது காலம் போகட்டும் பிறகு பார்க்கலாம். நானும் அந்த ஆளைப் பற்றி விசாரித்துப் பார்க்கிறேன் என்று சொல்ல அவளும் அதுவும் சரிதான் என்று சொல்லிவிட்டு தேத்தண்ணி குடித்த போணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். சாமிநாதனும் முத்துவும் வீட்டுக்கு வரும்போது வாசலிலேயே மகேஸ்வரி இவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.இப்பொழுதெல்லாம் அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறாள். கை கால்களில் மருதாணி மலர்ந்திருக்கிறது அவளது மனம்போல. அவர்களும் வீட்டுக்கு வந்ததும் முத்து அவளிடம் அன்று நடந்ததெல்லாவற்றையும் சொல்கிறான்.சித்ரா எல்லோருக்கும் பனங் கற்கண்டுடன் தேனீர் கொண்டுவந்து தருகிறாள். அதைத் தொடர்ந்து எல்லோருமாய் ஆலோசிக்கின்றார்கள்............! பார்ப்போம் இனி..........! ✍️
  18. பார்வை ஒன்றே போதுமே......! (9). அங்கே அவர்களது தாயார் யாரையோ கோபமாகப் பேசுவதும் இருவர் வாக்குவாதப் படுவதும் சத்தமாகக் கேட்கிறது. வெளிவராந்தாவில் வேலைக்காரம்மாவும் வாட்ச்மேனும் பதற்றமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள்.என்ன என்று ரவிதாஸ் அவர்களிடம் விசாரிக்க நிர்மலா விரைந்து உள்ளே போகிறாள். அந்த வேலைக்காரம்மாவும் அவனிடம் சின்னையா கொஞ்ச நாட்களாக அம்மாவின் கார் ட்ரைவர் சுந்தரத்தின் போக்கு சரியில்லை. அம்மாவிடம் அத்துமீறி நடந்து கொள்கிறான். அம்மாவும் ஏனோ அவனுக்கு பயந்து அவன் சொற்படி நடக்கிறா மேலும் அவன் கேட்க்கும்போதெல்லாம் பணமும் குடுக்குறா. அவன் குடித்து விட்டு வந்து தகராறு பண்ணினாலும் கண்டும் காணாதமாதிரி இருக்கிறா என்கிறாள். ரவிதாசும் ஓம்....நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் அவற்ர போக்கு சரியில்லாமல்தான் இருக்கு. சரி என்ன என்று பார்க்க படியேறி தாயாரின் அறைக்குப் போகிறான். அங்கு ரேகாவோடு சுந்தரம் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தான். இடையில் நிர்மலா அவனிடமிருந்து தாயாரைப் பிடித்து இழுக்கிறாள். அங்கு வந்த ரவிதாஸ் உடனே சுந்தரத்தின் வயிற்றில் எட்டி உதைக்க அவன் கட்டிலடியில் போய் விழுகிறான். அவனிடமிருந்து விடுபட்ட ரேகா மகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். எல்லாம் என்னால்தான்.நான் குடி போதையில் செய்த தவறுகளினால்தான் என் புருசனும் எங்களை அனாதரவாய் விட்டிட்டு போயிட்டார். இன்று இந்த நாய்கூட என்மேல் கை வைக்கத் துணியுமளவுக்கு வந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கோ பிள்ளைகள். முதலில் இவனை வெளியே அடித்துத் துரத்துங்கோ என்று சொல்லும்போது கட்டிலின் கீழே இருந்து எழுந்த சுந்தரத்தின் கையில் கைத்துப்பாக்கி இருந்தது.அது அன்று சாமிநாதன் கோபத்தில் எறிந்து விட்டு போன கைத் துப்பாக்கி. இண்டைக்கு உங்கள் மூவரையும் கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்திக் கொண்டு ரவிதாசை நோக்கி சுடும்போது மகனைக் காப்பாற்ற குறுக்கே பாய்ந்த ரேகாவின் மார்பில் குண்டு பட்டு அவள் கீழே சரிகிறாள். நிர்மலா தாயைத் தாங்கிப் பிடிக்க சுதாகரித்துக் கொண்ட ரவிதாஸ் பாய்ந்து சுந்தரத்தை மடக்குகிறான். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த வாட்ச்மேனும் ரவிதாஸுடன் சேர்ந்து சுந்தரத்தை அமுக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பறித்து விடுகிறார்கள். இருவருமாக அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போலீசுக்கு போன்செய்ய சற்று நேரத்தில் போலீசும் அம்புலன்ஸ் வண்டிகளும் வந்து விடுகின்றன. அதற்கிடையில் அன்று நடந்ததை ரேகா பிள்ளைகளிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். நான் இனி இருக்கமாட்டேன் பிள்ளைகள். நீங்கள் கவனமாய் இருங்கோ. என்றாவது அப்பாவை சந்தித்தால் தன்னை மன்னித்து விடும்படி சொல்லுங்கோ என்று சொல்கிறாள். டொக்டர் வந்து அவளுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றும்போது ரேகாவின் உயிர் பிரிகிறது. போலீஸ் சுந்தரத்தையும் துப்பாக்கியுடன் விலங்கிட்டு அழைத்து செல்கிறது. இவை நடந்து இரண்டு மூண்டு வருடங்களாகி விட்டன. நிர்மலா முழுநேரமாக கம்பெனியைக் கவனித்துக் கொள்கிறாள். ரவிதாசும் கம்பெனி வேலைகளாக அடிக்கடி அயல்நாடுகளுக்கு செல்கிறான். அவன் குடுத்த புகாரின் பேரில் போலீஸ் சாமிநாதனை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறது..............................................! பார்ப்போம் இனி ..................! ✍️
  19. பகுதி 2 2020 எங்களுக்குக் கோவிட் வந்து, முதலாவது ஊசி போட்ட ஒரு வாரத்தில் மீண்டும் மூட்டைப் பூச்சிக்கடி தொடங்கியாச்சு. அதுவும் ஒவ்வொருநாளும். கை, கால், முதுகு, கன்னம், பிடரி கூட மிச்சமில்லை. அதுவும் முதுகுப் பக்கம் ஊர்வதுபோல் ஆரம்பித்து கடிக்கும். நான் துடித்துப் பதைத்து எழுந்து மூட்டை எங்கு கடித்ததோ படுக்கையில் அந்த இடத்தை கைகளால் விறாண்டிவிட்டுப் படுக்க பின்னர் எதுவும் கடிக்காது. என் தாக்குதலுக்குப் பயந்து கட்டில் சட்டங்களுக்குக் கீழே பூச்சிகள் போய் ஒளிந்துகொள்வதாக நான் எண்ணிக்கொண்டேன். மீண்டும் அடுத்தநாள் அவை கடிக்க நான் எழுந்து கைகளால் கிர் கிர் என்று விறாண்ட, மனிசன் திடுக்கிட்டு எழுந்து என்ன செய்யிறாய் என்று கேட்க மூட்டை கடிக்குது. இப்பிடிக்க செய்தால் கடிக்காது என்றுவிட்டு நான் படுக்க, உனக்கு என்ன விசரே. எனக்கு ஒண்டுமே கடிக்கேல்லை. நீ நாளைக்கு என்ர கட்டில்ல படு. நான் உதில படுத்துப் பாக்கிறன் என்கிறார். கம்போடிய அனுபவத்தில நாளைக்கு நல்லாக் கடி வாங்கப் போறார் என்று மனதில் எண்ணியபடி தூங்கி எழுந்து அடுத்தநாள் அவர் படுக்கும் பக்கம் நானும் என் பக்கம் அவரும் படுக்க ஒரு மணித்தியாலம் எந்தப் பிரச்சனையுமில்லை. கொஞ்சநேரம் போக இடது பக்கமாகத் திரும்பிப் படுத்து ஒரு பத்து நிமிடம் ஆகவில்லை கன்னத்தில் சுரீர் என்று கடி. அட கடவுளே! தலையணைக்குள்ளும் வந்திட்டிதா என எண்ணியபடி “இந்தாங்கோ, இந்தத் தலையணையில் படுங்கோ” என தலையணையை எதுவும் சொல்லாமல் கொடுத்தபின்னும் மனிசனிடம் எந்த அசுமாத்தமும் இல்லாமல் நித்திரைக்கொள்ள, நானும் வேறு வழியின்றி எனக்குக் கடிச்சதில ஒண்டாவது கடிக்கும் தானே என எண்ணியபடி தூங்கிப்போகிறேன். காலையில் “எனக்கு எதுவுமே கடிக்கேல்லை. உனக்கு விசர்” என்றபடி மனிசன் போக, மனிசன்ர ரத்தம் உண்மையில நல்லதோ அல்லது என்ர தான் ருசியெண்டு குடிக்குதோ என்ற சந்தேகம் என்னுள் ஏற்பட்டுப் போக, என்ன செய்வது? வீட்டில மூட்டை இருக்கு என்றாலே எவ்வளவு கேவலம். யாரிட்டையும் போய் கேட்கவும் ஏலாமல் கூகிளில் மூட்டைப் பூச்சி பற்றிய தேடுதலைத் தொடங்கினன். மொத்தமாக 12 இக்கும் அதிகமான மூட்டைகள் இருப்பதாகவும் அதில் மூன்று விதமானவையே கட்டில்களில் வாழ்வதாகவும் ஒருவரின் இரத்தம் குடிக்காமல் 45 நாட்கள் வரைகூட அதனால் வாழ முடியும் என்றும் அதன்பின் இன்னொரு மூட்டையின் இரத்தத்தைக் குடித்தே வாழும் என்றும் ஒரு youtube வீடியோ பார்த்தபின் எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அடுத்தநாள் காலை எழுந்து என் கட்டிலில் மூட்டைப் பூச்சிகள் இருக்கு. மருந்து அடிக்க வேண்டும் என்றேன் கணவரிடம். தான் வாங்கிக் கொண்டு வாறன் என்றதும் மனம் நின்மதியடைய மனிசன் தேநீர் அருந்திய உடனேயே கடைக்குக் கலைத்தேன். மனிசன் போய் நாலு கடை ஏறி இறங்கி ஒரு ஸ்பிறே மட்டும் வாங்கிக்கொண்டு வர எனக்குக் கடுப்பானது. எதில தான் நப்பித்தனம் பாக்கிறது எண்டு இல்லையோ. ஒரு மூண்டாவது வாங்கி வந்திருக்கலாம் என்று திட்ட, முதல் இதை நான் நல்லாக் கட்டில் எங்கும் அடிச்சுவிடுறன். அதுக்குப் பிறகு சொல்லு என்று சொல்ல வாய்மூடுகிறேன். “எடுக்கிறதை எடு. இரண்டு மூன்று மணித்தியாலங்கள் அறைப்பக்கம் வரக்கூடாது” என்று மனிசன் சொல்ல ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மனிசன் தன் வேலையைக் தொடங்குகிறார். அன்று மாலை கட்டிலுக்கு புதிதாக எல்லாம் விரித்து மூட்டை செத்திருக்கும் என்ற நினைப்போடு போய் படுத்தால் ஒரு கடியும் இல்லை. மனிசனைத் தேவையில்லாமல் திட்டினது என நினைத்து முதலே இந்த ஸ்பிறேயை வாங்கி அடிச்சிருக்கலாம் என மனதுள் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை. நடுச் சாமம் இருக்கும் நல்ல தூக்கம். சுரீர் என்று ஒரு கடி. துடித்துப் பதைத்து எழுந்து கோபத்தில் படுக்கையை விறாண்ட மனிசனும் எழும்பி இந்த நேரத்தில என்ன செய்யிறாய் என்கிறார். திரும்பவும் மூட்டை கடிக்குது. நீங்கள் ஒழுங்கா மருந்தை அடிச்சியளா? அல்லது மிச்சம் வச்சிட்டியளா என்று கேட்க, “கட்டில் சட்டம் எல்லாம் வடிவா அடிச்சு முடிச்சிட்டன். ஸ்பிறே டின் குப்பை வாளிக்குள்ள கிடக்கு விடியப் போய் பார்” என்கிறார். “சட்டங்களுக்கு மட்டும் அடிச்சா மெத்தைக்குள்ள இருக்கிற பூச்சி எப்பிடிச் சாகும்? நாளைக்கு நானே கடையில வாங்கிவந்து அடிச்சு பூச்சிக்கு ஒரு வழி பண்ணுறன் என்றபடி தூங்க முயல்கிறேன். முதல் நாள் இணையத்தில் மூட்டைகள் பற்றிப் பார்த்தபோது அவை எங்கெங்கு இருக்கும், எப்படி எல்லாம் பயணம் செய்யும், எத்தனை தரம் இரத்தம் குடிக்கும் என்றெல்லாம் போட்டிருந்தது அந்த இரவில் என் நினைவில் வந்து நின்மதியைக் கெடுக்க, எங்கெல்லாம் ஸ்பிறே அடிக்க வேண்டும் என்று மனதில் எண்ணியபடி ஒருவாறு தூங்கிப் போகிறேன். அடுத்தநாள் கடைகளில் சென்று பார்த்தால் பல கடைகளில் ஸ்பிறே முடிந்துவிட்டிருந்தது. கடைசியில் ஒரு கடையில் இருந்த மூன்று ஸ்பிறேயையும் எடுத்துக்கொண்டு வீடுவந்து கட்டில், மெத்தை, தலையணை மட்டுமன்றி அங்கிருந்த கதிரை, கபேட், காபெற், கதவு கூட விடாமல் முழுவதும் அடி அடியென்று ஒன்றும் விடாமல் அடித்து கதவு யன்னல் எல்லாவற்றையும் இறுக மூடி கதவின் அடியில் காற்றே உள்ளே போகாதவாறு ஒரு துணியினால் அடைத்துவிட்டு நானும் கையோடு குளித்து ஆடை மாற்றிக்கொண்டு மனநின்மதியுடன் கீழே வருகிறேன். அன்று முழுவதும் அறைப்பக்கம் போகவே இல்லை. ஒவ்வொருநாள் மாலையும் ஒன்றிரண்டு மணிநேரம் தூங்குவது என் கடமை. என் அறைக்குப் போக முடியாது. சரி மகளின் கட்டிலில் படுப்போம் என்று போனால், எங்கள் அறையில் மூட்டை இல்லை. தயவு செய்து கொண்டுவந்துவிடாதீர்கள். எதற்கும் குறை நினைக்காமல் வரவேற்பறையிலேயே தூங்குங்கள் என்கின்றனர் பிள்ளைகள் சிரித்தபடி ஒன்றுசேர. இத்தனைக்கும் ஒரு வாரமாக அவற்றிலிருந்து மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக போர்வை, விரிப்புகள், தலையணை என ஒன்றும் விடாமல் கடும் சுடுநீரில் வோசிங்க் மெஷினில் போட்டு எடுத்தபடிதான் இருந்தேன். அன்று இரவும் வரவேற்பறையே கதியாகிட அடுத்தநாள் அறைக்குச் சென்று யன்னலை நன்கு திறந்து காற்றோட்டமாக்கியபின் மாலை புதிதாக எல்லாம் மாற்றி, வாசனைக்காக மெழுகுதிரியும் கொளுத்தி வைத்தாயிற்று. இனிமேல் எதுவுமே இல்லாமல் நின்மதியாகத் தூங்கலாம் என எண்ணியபடி கட்டையைச் சாய்த்தால் முதுகுப்பக்கம் ஏதோ ஊர்வதுபோல் ............................... என்ன இது. இவ்வளவு மருந்து அடித்தும் இன்னும் மூட்டைகள் சாகவில்லையே. என்ன பிரச்சனை என்று கட்டிலுக்குப் பக்கத்தில் உள்ள கதிரையில் எழும்பி இருந்து யோசிக்க மனிசனுக்கு மூக்கில வேர்க்க கண்ணை முழிச்சு எதையோ பாக்கிற மாதிரிப் பார்த்திட்டு, மூட்டை இப்பவும் கடிக்குது எண்டால் நீ உதில இருந்தபடி நித்திரை கொள்ளு. தயவு செய்து என்னை எழுப்பிக் கதை சொல்லிக்கொண்டிருக்காதை. என்ர நல்ல மனதுக்கு என்னை எதுவும் கடிக்கேல்லை எண்டு சொல்லிவிட்டுப் படுக்க, இரவு பதினொரு மணிக்கு நான் எழுந்து கீழே சென்று என் கணனியை இயக்குகிறேன். உண்மையில மூட்டை இருக்கா இல்லையா என்று அறிய வேறு என்ன வழி என்று தேடினால் amazon இல் Bed Bug Trap எண்டு ஒண்டு கிடக்க, இதுதான் மூட்டை உடனடியா சிக்க சிறந்த வழி என்று எண்ணி உடனேயே £15 இக்கு ஓடர் செய்ய amazon prime இனூடாக அடுத்தநாளே வந்து சேர, கட்டில் கால்களுக்கும் மெத்தைகளுக்குக் கீழும் ஒட்டிவிட்டேன். பிள்ளைகள் மதியம்தான் “என்ன மூட்டைகள் போய்விட்டதா” என்று கேட்க, எனக்கு நேற்றும் ஊர்ந்ததுபோல் இருந்தது என்று இழுக்கிறேன். எதுக்கும் நாங்கள் ஒரு சினிமா பார்க்கத் திட்டம் போட்டனாங்கள். இரண்டு மணி நேரப் படம். உங்கள் கட்டிலில் இருவரும் படுத்தபடி ஐப்பாட்டில் படத்தைப் பார்க்கிறோம் என்கிறாள் கடைக்குட்டி. சரி படுங்கோ என்றுவிட்டு மனதை அங்கும் இங்குமாக அலைபாயவிட்டபடி இரண்டு மணிநேரம் பொறுமை காக்கிறேன். ஒரு மகள் தனக்கு எதுவும் கடிக்கவில்லை என்கிறாள். மற்றவள் தனக்கு ஏதோ ஊர்வதுபோல் இருந்தது ஆனால் கடிக்கவில்லை என்கிறாள். எதற்கும் இன்றும் கடிக்கிறதா என்று பாருங்கள். சில நேரம் நீங்கள் விரித்துள்ள கட்டில் விரிப்புத்தான் உங்களுக்குக் கடிப்பதுபோல இருக்கோ தெரியவில்லை என்கிறாள். சரியென்று அன்று இரவு சரியான குளிர் நன்றாக போர்வையைப் போர்த்துக்கொண்டு ஒரு பக்கமாகப் படுக்கிறேன். முதுகுப் பக்கம் எந்த அசுமாத்தமும் இல்லை. ஆனால் கையின் மேற்பகுதியில் சுரீர் என்று ஒருவலி. எனக்கு எரிச்சலிலும் ஒரு சந்தோசம். கடுகடுத்த கையைப் பார்க்க அந்த இடம் சிறிது தடித்துப்போய் இருக்கு. உடனே போனை எடுத்து அதை வீடியோ எடுத்து எங்கள் குடும்பத்துக்கான வற்சப் குழுமத்தில் போடுகிறேன். அடுத்தநாள் காலை எழுந்து ஒட்டிவிட்ட டேப் எதிலாவது ஒரு மூட்டைக் குஞ்சாவது ஓட்டுப்பட்டிருக்கா என்று பார்த்தால் அதன் ஒரு கால் அடையாளம் கூட அதிலில்லை. என் ஏமாற்றத்தை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்றே எனக்குப் புரியவில்லை. அடுத்தநாள் காலை எல்லாரும் வரவேற்பறையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கின்றனர். இதை வளரவிட்டால் மூட்டை வீடு முழுதும் பரவிவிடும். எனவே உடனடியாக மூட்டை பிடிப்பவர்களை அழைக்கவேண்டும் என்கின்றனர். உடனடியாக அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுக்க,அடுத்தநாளே வருவதாகக் கூறுகின்றனர். அதற்கான கொடுப்பனவு £100. மனிசன் ஏதோ புறுபுறுத்தபடி எழுந்து போக நான் வாயே திறக்கவில்லை. அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு வருவதாக அவர்கள் எனது போனுக்கு செய்தியை அனுப்ப, காலை ஏழு மணிக்கு எழுந்து கோப்பி குடித்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறேன். சரியாக எட்டு மணிக்கு வீட்டு மணி அடிக்க விரைந்து கீழிறங்கிக் கதவைத் திறக்கிறேன். இரண்டு இளம் ஆண்கள் நிற்கின்றனர். தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டிவிட்டு உள்ளே வார முதல் அவர்களின் காலணி களுக்கு பிளாஸ்டிக் கவர் போடுகின்றனர். கோவிட்டுக்காகத்தான் அந்தப் பாதுகாப்பு என்று அவர்கள் சொன்னாலும் மூட்டைக்காகத்தான் என நான் நம்புகிறேன். அவர்களுக்கு மேலே கைகாட்டிவிட்டு அவர்கள் செல்ல நான் பின்னே செல்கிறேன். எல்லாம் ஒரு பாதுகாப்பு முறைமைதான். அவர்கள் இருவரும் இரண்டு டோச் லைட் மட்டுமே வைத்திருக்கின்றனர். கட்டில் எல்லாம் சோதிக்கப் போகிறோம் என்று கூற நான் தலையாட்டிவிட்டு வாசலில் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். முதலில் இரண்டு தலையணைகளையும் எடுத்து கதிரையில் வைத்துவிட்டு காட்டில் விரிப்பை இருவரும் சேர்ந்து ஒழுங்காக மடிக்கின்றனர். பின்னர் படுக்கையை நிமிர்த்தி அலுமாரியுடன் சாய்த்து வைத்துவிட்டு லைட் அடித்து அங்குலம் அங்குலமாகப் பார்க்க எனக்கு நெஞ்சு பாதைக்குது. எவ்வளவு மூட்டைகள் இருந்து துலைச்சு என்ர மானத்தை வாங்கப் போகுதோ என்று. 2019 கம்போடியா போட்டு வந்ததிலிருந்துதான் கடிக்கத் தொடங்கினது என்று அவர்கள் கேட்காமலேயே நான் கூற, ஓ என்று தலையை நிமிர்த்திக் கூறிவிட்டு காட்டில் சட்டங்களை எல்லாம் தூக்கிவிட்டு, கால் பகுதி எல்லாம் பார்த்து முடிய இருவரும் ஒருசேர நிமிர்கின்றனர். நானும் ஒருக்கா மூட்டைகளைப் பார்க்கலாமா என்கிறேன். அவர்கள் முகங்களில் சிரிப்பு. நீ பார்க்க முடியாது என்கின்றனர். அவர்கள் எதற்கு சிரிக்க வேண்டும். “என் வீட்டில் உள்ள மூட்டைகளை ஏன் நான் பார்க்க முடியாது என்கிறேன் சிரித்தபடி ஆனால் சிறிது கோபமும் உள்ளே எழ. “உன் கட்டிலில் ஒரு மூட்டைப் பூச்சி கூட இல்லை. நானும் எதுவும் கொண்டு வரவில்லை” என்கிறான் ஒருவன் சிரித்தபடி. “உண்மையாகத்தான் சொல்கிறாயா” என்கிறேன் நம்பமுடியாமல். சத்தம் கேட்டுப் பிள்ளைகளும் எழுந்து வருகின்றனர். மூட்டை ஒன்று இருந்தாலே அது கடித்துவிட்டு வரும்போது இரத்தம் கட்டாயம் கட்டில் விரிப்பிலோ அல்லது மெத்தையிலோ அன்றி சட்டங்களில்எல்லாம் கூடப் பிரண்டிருக்கும். ஆனால் இங்கு எந்தவித அடையாளமும் இல்லை. இரண்டு மூட்டைகள் இருந்திருந்தாலே இரு ஆண்டிலுள் இராண்டாயிரமாய்ப் பெருகியிருக்கும். வீட்டில் ஒரு மூட்டைகளும் இல்லை. நாங்கள் போகிறோம். மீண்டும் எப்போதாவது மூட்டைகள் இருப்பதாக எண்ணினால் கூப்பிடு என்று சிரித்துக்கொண்டே செல்ல, கீழே எல்லாம் கேட்டபடி நின்ற மனிசன் 100 பவுண்டஸ் தண்டம் என்கிறார். சரியப்பா இனி அம்மாவுக்கு மூட்டையே கடிக்காது. அப்பிடிக் கடிச்சா வைத்தியரிட்டதான் கூட்டிக்கொண்டு போக வேணும் என்று சொல்லிச் சிரிக்க நான் செய்வதறியாது நிற்கிறேன்.
  20. பார்வை ஒன்றே போதுமே........(2). ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொண்டு பறப்பதும் ஒன்றோடொன்று சண்டை பிடிப்பதும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றது. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் எவ்வளவு காலமாச்சுது இப்படியெல்லாம் ரசிச்சு என மனம் எண்ணிக் கொண்டது. தூரத்தில் ஒரு மேட்டில் ஒராள் நிற்பதைக் கண்டு அங்கு செல்கிறார். அது ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்று தெரிகின்றது. அந்தப் பெண்ணும் இவரைக் கண்டு விடுகிறாள். இவரது கோலத்தைப் பார்த்ததும் அங்கிருந்து செல்வதற்கு எத்தனிக்கிறாள். உடனே சாமிநாதனும் ஆம் அதுதான் அவரது பெயர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்து அம்மா போகாதேங்கோ , கொஞ்சம் நில்லுங்கோ என்றதும் அவள் சற்று நின்று, ம்....என்ன என்பதுபோல் பார்க்கிறாள். அப்பொழுது ஒரு குமர்ப் பிள்ளையொன்று வயலுக்குள் இருந்து ஆளளவு உயர்ந்திருந்த நெற்கதிர்களை விலத்திக் கொண்டு யாரம்மா இவர் என்னவாம் என்று கேட்டவாறே வரப்பில் ஏறி வருகின்றாள். அவள், கையில் ஈர்க்கில் கோர்த்தபடி அஞ்சாறு மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. தெரியவில்லையம்மா, அதுதான் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்கிறாள். சாமிநாதனும் பயப்பிடாதையுங்கோ, கணக்க யோசிக்க வேண்டாம். நான் பக்கத்து ஊர்தான், அதோ அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ என்னுடைய உடுப்புகளை எடுத்துக் கொண்டு போட்டினம். சுருக்கமாக தன் கதையை சொல்லிவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களோ, நான் கட்டுறதுக்கு ஏதாவது ஒரு துண்டு தரமுடியுமோ என்று கேட்கிறார். ஆனாலும் அவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய்த் தானிருக்கு. அவரின் நிலையைப் பார்க்க பாவமாயும் இருக்கு. அப்போது அந்தப் பிள்ளை சித்ராவும் சிறிதும் யோசிக்காமல் இந்தாங்கோ ஐயா இப்ப இந்தத் துண்டைக் கட்டுங்கோ என்று தனது தாவணியை எடுத்துக் குடுத்துவிட்டு, அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க அந்தச் சுட்டிப்பெண்ணும் என்ன ஐயா ஒரு தாவணிக்கு சங்கிலி தாறீங்கள் இது ரோல்ட்கோல்டோ என்று பகிடி விட உடனே தாய் மகேஸ்வரி சும்மா இருடி உனக்கு வாய் ரெம்ப நீளம் என்று அவளை அதட்டி விட்டு பரவாயில்லை, அது உங்களிடமே இருக்கட்டும் என்கிறாள். இப்பொழுது அவரைப்பற்றிய எண்ணம் மாறி நல்ல எண்ணமாக வருகிறது. பின் அவரைப் பார்த்து உங்களை பார்த்தால் பசியோடு இருப்பதுபோல் தெரிகிறது, வீட்டுக்கு வாங்கோ சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல மூவரும் கதைத்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களின் பேச்சில் இருந்து மகேஸ்வரியின் கணவன் மாணிக்கம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அங்குள்ள சிறிய நகரத்தின் கடை வீதியில் பாதையோரத்தில் சின்ன இடத்தில் இருந்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவர்களுக்கு முத்து, சித்ரா என்று இரண்டு பிள்ளைகள். உழைப்பதில் தான் குடிப்பதுபோக கொஞ்சம் வீட்டுக்கும் கொடுப்பார்.ஊரில் நிறையக் கடன் வாங்கி வைத்திருந்தார். கடன் குடுத்தவர்கள் மாணிக்கத்தைக் கண்டால் வேறு பக்கமாக ஓடிவிடுவார்கள்....இவர் ஒன்றும் சண்டியனில்லை எங்கே மீண்டும் கடன் கேட்டு விடுவார் என்று.... கொசுவுக்கு பயந்து நாங்கள் வலைக்குள் படுப்பதுபோல்தான் இதுவும். கடந்த வருடம் இவரது நண்பரும் இன்னொருவரும் தவறணையில் சண்டை பிடித்த பொழுது மாணிக்கம் இடையிலே புகுந்து விலக்குப் பிடிக்கப் போய் எதிர்பாராமல் வயித்தில கத்தியால் குத்து வாங்கி இறந்து விட்டார். மாணிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒழிச்ச கடங்காரர் எல்லாம் இப்ப குளிர் விட்டுப்போய் வீட்டுக்கு வந்து கண்டபடி பேசி சண்டை பிடித்து விட்டு போவார்கள்.......! பார்ப்போம் இனி......! ✍️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.