Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88007
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20026
    Posts
  4. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2169
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/14/22 in all areas

  1. நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
  2. சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே துர்க்கா சிரித்திருப்பாள் பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது மின்னலை போல் மேனி அவள் சிவகாமி இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள் பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்...
  3. தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது முதிர்ந்த , நீண்ட தா டியும் பரடடைத் தலையும் கையில் ஒரு ஊன்று கொள்ளும் , தோளில் ஒரு துணி மூடடையும் கொண்ட முருகேசனும் உட்கர்ந்திருந்தார் . அவரூ க்கு பழக்கமான சிலர் என்ன முருகேசா! நீ வேதமா ? சைவமா? எனக் கேட்ப்பார்கள். அவரும் அப்பா வேதம் அம்மா சைவம் அதனால் நான் முருகேசனானேன். என்பார் ... அப்போது அங்கு ஒரு வெண்ணிறக் காரில் ஒரு வயதான அம்மாள் , தன உதவி பெண்ணுடன் கும்பிட வந்திருந்தார். வாயிலின் அருகே இருந்த முருகேசனின் தட்டில் இருபது ரூபாய் ...வந்து விழுந்த்து ...ஏற்கனவே சில சில்லறைகளை வைத்திருந்தார் . அந்த இருபது ரூபாயை எடுத்து தனியே பாத்திரம் பண்ணி வைத்தார் . இரண்டு நாளாக உணவு சாப்பிட வில்லை . வெறும் தேநீர் மட்டும் அருந்தி பேசிக் களையை போக்கி இருந்தார். . மதிய வெயில் பசி மயக்கம் கண்ணைக் கட்டிடவே மெது வாக அருகில் இருந்த சாப்பாட்டுக்கு கடையை நோக்கி சென்றார் . இவர் தோற்றத்தை பார்த்த்தும் வாயிலில் நிற பையன் ... அப்பாலே போ என விரட்டினான் . தம்பி ..நான் சாப்பிட வந்திருக்கிறேன் என்றதும் ஒரு ஓரமான பலகை யைக் காட்டி அங்கு உட்க்கார்ந்து கொள் என்றான். பணியாளர் (வெயிட்டர் ) அருகே வரவே ..தம்பி எனக்கு ஒரு பார்சல் ..எவ்வ்ளவு என்றான். "மீன் சாப்பாட்டு பார்சல் ஐம்பது ரூபாய்" ..."மரக்கறி பார்சல் முப்பது ரூபாய் " என்றான். அருகே அமர்ந்திருந்த ஒரு இளைஞன் .. அவர் வைத்திருந்த இருபது ரூபாயைக் கண்டு ...தம் பி அவருக்கு ஒரு மீன் பார்சல் கொடு என்றான். பின் அந்த முதியவருடன் பேசத்தொடங்கினான். "ஐயா உங்களுக்கு என்ன ஆனது என் இந்த நிலமை ? என்று கேட்ட்க அவர் கண் கலங்கியது .. அவர் தன்னைப்பற்றி கூறத்தொடங்கினார் . தம்பி நான் கனடா நாட்டுக்கு சென்று ..மனைவி இருமகன்களுடன் வாழ்ந்து வந்தேன் . கஷ்ட பட்டு வேலை செய்தேன். இராப்பகலாய் கண் விழித்து இரண்டு வேலைகள்செய்து பிள்ளை களைப் படிக்க வைத்து ஆளாக்கி கலியாணம் கட்டி வைத்தேன். பின் நானும் மனைவியும் ..முதுமை காரணமாக தாய் நாட்டுக்கு வந்து வாழ ஆசைப்பட்டு . வீடடை விற்று மக்களுக்கு கொடுத்து விட்டு ,மீதிகாசுடன் ..சில வருடங்கள் நலமாக வாழ்த்து வந்தோம். எனக்கு ஓய்வூதியம் பணம் வந்தது ...அதில் சேமித்து ஒரு வீடடை வாங்கினேன். எமக்கு துணையாக ஒரு பையனை வளர்த்தோம். காலம் மிக வேகமாக ஓடியது என் மனைவிக்கு வ யிற்றில் புற்று நோய் வந்து அவதிப்பட்டு, வைத்ய சாலையும் வீடுமாக அலைந்தேன். வளர்ப்பு மகனையும் படிப்பித்து ஒரு வேலையில் யில் அமர்ந்ததும் ..ஒருகலியாணம் கட்டி வைத்தேன். அவனுக்கு இரு பெண் குழந்தைகள் . காலப்போக்கில் மனைவி இறந்து விடடாள் . வந்த மருமகள் மிகவும் கர்வம் பிடித்தவள் . என் முதுமை காரணமாய் .ஒரு கண் பார்வையை இழந்தேன். மற்றையது ஓரளவு பார்வை தெரிகிறது .. ..மனைவி இல்லாத அருமை புரிந்தது .. என்னை கவனிக்கவே மாடடாள் மருமகள். குளிக்க உடைமாற்ற எனக்கு உதவி தேவைப்பட்ட்து ...கை நடுங்க ஆரம்பித்து விட்ட்து ஆதர வின்றி ..கோவிலைக் காட்டி ..இந்த கோவிலே தஞ்சம் என் வாழ்கிறேன். என உணவை மெல்ல மெல்ல உண்டுகொண்டே சொல்லி முடித்தார். இளைஞனும் அவருக்கும் தனக்குமான உணவுக்கு காசைக் கட்டி விட்டு இருவரும் வெளியேறினார். அவர் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட ...அந்த இளைஞன் .சற்று பொறுங்கோ என் சொல்லி ...அருகில் இருந் காரை எடுத்து வந்து ..இதில் ஏறுங்கோ என சொல்ல தாத்தா மறுத்தார் . வற்புறுத்தி .. எற வைத்து சில மணி நேர ஓட்ட்த்தின் பின் ...ஒரு கருணை இல்லத்தின் முன்னே நின்றது ...இறங்கி இவரையும் அழைத்து கொண்டு இவரும் முன் வாயிலில் இருந்தா காரியாலயத்தில் ..எதோ ...பேசி விட்டு திரும்ப வந்து தாத்தா இனி இது தான் உங்கள் வீடு என சொல்லி அவருக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படி பணித்தான். அங்குள்ள உதவியாளர் அவருக்கு குளித்து புத்தாடை உடுத்தி முக சவரம் தலைமுடி கத்தரித்து .. அவருக்கு ஒரு தனியான அடைக்க படட அறை ஒழுங்குபடுத்தி ...ஆதரவளித்தனர் . சில மணி நேர இடைவேளையின் பின் ...அந்த இளைஞன் மீண்டும் வந்து இவரை பார்த்தன். அவரது இருப்பிடமும் வசதியும் திருப்பி அளிக்கவே. மீண்டும் மேலிடத்தில் உள்ள காரியாலயத்தில் சென்று . இன்னும் சில வசதிகள் அவருக்கு தேவைப்படுவதாகி சொல்லி ...ஏற்பாடு செய்து வீடு திரும்ப இருளாகி விட்ட்து . தன் காரை பின்னோக்கி ரெவெர்ஸ் செய்யும் போது ,முன் முகப்பு வெளிச்சத்தில் மின்னியது "அம்மா கருணை இல்லம் :" வீடு சென்று உணவு உண்டு ... மனைவி குழந்தைகளுடன் உரையாடி விட்டு ... உறங்க சென்று தாயின் படத்தை நோக்கி கும்பிட ஒரு வெண்ணிற பூ ..உதிர்ந்தது அவன் முன்னே. "மகனே ஒரு நல்ல காரியம் செய்தாய் " எனும் மலர்ந்த புன்னகையுடன் அவர் அம்மா படத்தில் புன்னகைத்தாள். ஒரு தாயின் கருவில் உருவாகி பூமில் வாழும் மனிதன் ஒரு மரத்துக்கு இணையாகிறான். ஒரு விதை மரமாகி, கிளைபரப்பி பூத்து காய்த்து கனிந்து மீண்டும் விதையாகி மண்ணில் சருகாகி வீழ்கிறான். விதைகளுக்கு தெரிவதில்லை இலைச் சருகுகள் தான் தம்மை வளர்த்த விளை நிலங்கள் என்று.
  4. ஒரு காலத்தில் இந்தியன் இருந்தார்கள். பின்னர் ஸ்பானிஸ்(கூடுதல் மெக்சிக்கன்ஸ்). 1850களில் திடீரென தங்கம் கண்டுபிடிக்க உள்ள வெள்ளை இனத்தவர் குடியேறிவிட்டனர். எல்லோரும் படங்கள் படங்கள் என்றால் சுட்டுத் தான் போட வேண்டும். கடந்த வருடம் எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கு பாடப் புத்தகங்களிலேயே இவை பற்றி இருந்ததால் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அத்தோடு அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற களியாட்ட நகரமான லாஸ்வீகசும் ஒன்றாக பார்க்க கிடைத்தது. இரண்டையும் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
  5. அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா அருள்மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா
  6. அட எங்கடை பெரிசும் தொடங்கீட்டார்......ஆளை இனி கையிலை பிடிக்கேலாது. 😁 உங்கள் கார் ஓட்டத்தை தொடருங்கள்......நாங்களும் சேர்ந்து பயணிக்கின்றோம் 👍
  7. இங்கிலாந்து. 🙂 கறுப்பியின்… மஞ்சள் பை ஞாபகம் இருக்கா.
  8. உங்களுக்கு…. பல வருடங்களாக, கறுப்பியிலை ஒரு கண் இருக்கு என்பதை… கவனித்துக் கொண்டுதான் இருக்கிறம். 🤣
  9. கறுப்பியை காணவில்லை பகுதியில் தேடலாம் எண்டு யோசிச்சன். பிறகு ஏன் சோலி எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் விட்டுட்டன்.😷
  10. கறுப்பியால் யாழ் களத்துக்குள் உள் நுழைய முடியாமல் இருக்கிறது.. Forgot your password? என்று முயன்று பார்த்தாலும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை. பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை. காரணம் அறியலாமா ?
  11. இந்தியாக்காரனை ‘ஹிந்தியன்’ என்று எல்லோ அழைப்பார்கள்!😂
  12. ஆவலுடன் வாசிக்கின்றோம் .......நல்ல படங்களுடன் தொடருங்கள் பிரியமானவரே.......! 👏
  13. தொடருங்கள், ஈழப்பிரியன்…! இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!
  14. நமக்குந்தான் அறிய ஆவல் தொடருங்கள் .
  15. அய்யா மைப் வேணாம் படங்கள் பகிர முடிந்தால் நன்று.
  16. பல்க் ஆ இருக்காங்களே….
  17. ஏன்.? என்ன காரணம் . இப்போது முகம் எப்படி இருக்கிறது? காரில் வேகமாக போகலாமா ?.
  18. இந்தப் பாதையைப் பற்றி மேலும் அறிய, ஆவலாக உள்ளோம். இயலும் என்றால்… படங்களுடன், தொடருங்கள் ஈழப்பிரியன்.
  19. களத்தில் குதித்து விட்டார் ஈழப்பிரியன். 😀 தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறோம்.
  20. உக்ரைன் அரசு... பெண்களையும், குழந்தைகளையும் மட்டும் நாட்டைவிட்டு வெளியற அனுமதித்து, ஆண்களை தடுத்துவருவதால்... மனைவியின் கடவுச்சீட்டுடன், பெண்ணாக வேடமிட்டு வெளியேற முயன்ற தந்தை ஒருவர்.
  21. வீட்டுக்குள் இப்படியெல்லாம் இருக்குமா.......! 👍
  22. பகுதி 2 2020 எங்களுக்குக் கோவிட் வந்து, முதலாவது ஊசி போட்ட ஒரு வாரத்தில் மீண்டும் மூட்டைப் பூச்சிக்கடி தொடங்கியாச்சு. அதுவும் ஒவ்வொருநாளும். கை, கால், முதுகு, கன்னம், பிடரி கூட மிச்சமில்லை. அதுவும் முதுகுப் பக்கம் ஊர்வதுபோல் ஆரம்பித்து கடிக்கும். நான் துடித்துப் பதைத்து எழுந்து மூட்டை எங்கு கடித்ததோ படுக்கையில் அந்த இடத்தை கைகளால் விறாண்டிவிட்டுப் படுக்க பின்னர் எதுவும் கடிக்காது. என் தாக்குதலுக்குப் பயந்து கட்டில் சட்டங்களுக்குக் கீழே பூச்சிகள் போய் ஒளிந்துகொள்வதாக நான் எண்ணிக்கொண்டேன். மீண்டும் அடுத்தநாள் அவை கடிக்க நான் எழுந்து கைகளால் கிர் கிர் என்று விறாண்ட, மனிசன் திடுக்கிட்டு எழுந்து என்ன செய்யிறாய் என்று கேட்க மூட்டை கடிக்குது. இப்பிடிக்க செய்தால் கடிக்காது என்றுவிட்டு நான் படுக்க, உனக்கு என்ன விசரே. எனக்கு ஒண்டுமே கடிக்கேல்லை. நீ நாளைக்கு என்ர கட்டில்ல படு. நான் உதில படுத்துப் பாக்கிறன் என்கிறார். கம்போடிய அனுபவத்தில நாளைக்கு நல்லாக் கடி வாங்கப் போறார் என்று மனதில் எண்ணியபடி தூங்கி எழுந்து அடுத்தநாள் அவர் படுக்கும் பக்கம் நானும் என் பக்கம் அவரும் படுக்க ஒரு மணித்தியாலம் எந்தப் பிரச்சனையுமில்லை. கொஞ்சநேரம் போக இடது பக்கமாகத் திரும்பிப் படுத்து ஒரு பத்து நிமிடம் ஆகவில்லை கன்னத்தில் சுரீர் என்று கடி. அட கடவுளே! தலையணைக்குள்ளும் வந்திட்டிதா என எண்ணியபடி “இந்தாங்கோ, இந்தத் தலையணையில் படுங்கோ” என தலையணையை எதுவும் சொல்லாமல் கொடுத்தபின்னும் மனிசனிடம் எந்த அசுமாத்தமும் இல்லாமல் நித்திரைக்கொள்ள, நானும் வேறு வழியின்றி எனக்குக் கடிச்சதில ஒண்டாவது கடிக்கும் தானே என எண்ணியபடி தூங்கிப்போகிறேன். காலையில் “எனக்கு எதுவுமே கடிக்கேல்லை. உனக்கு விசர்” என்றபடி மனிசன் போக, மனிசன்ர ரத்தம் உண்மையில நல்லதோ அல்லது என்ர தான் ருசியெண்டு குடிக்குதோ என்ற சந்தேகம் என்னுள் ஏற்பட்டுப் போக, என்ன செய்வது? வீட்டில மூட்டை இருக்கு என்றாலே எவ்வளவு கேவலம். யாரிட்டையும் போய் கேட்கவும் ஏலாமல் கூகிளில் மூட்டைப் பூச்சி பற்றிய தேடுதலைத் தொடங்கினன். மொத்தமாக 12 இக்கும் அதிகமான மூட்டைகள் இருப்பதாகவும் அதில் மூன்று விதமானவையே கட்டில்களில் வாழ்வதாகவும் ஒருவரின் இரத்தம் குடிக்காமல் 45 நாட்கள் வரைகூட அதனால் வாழ முடியும் என்றும் அதன்பின் இன்னொரு மூட்டையின் இரத்தத்தைக் குடித்தே வாழும் என்றும் ஒரு youtube வீடியோ பார்த்தபின் எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அடுத்தநாள் காலை எழுந்து என் கட்டிலில் மூட்டைப் பூச்சிகள் இருக்கு. மருந்து அடிக்க வேண்டும் என்றேன் கணவரிடம். தான் வாங்கிக் கொண்டு வாறன் என்றதும் மனம் நின்மதியடைய மனிசன் தேநீர் அருந்திய உடனேயே கடைக்குக் கலைத்தேன். மனிசன் போய் நாலு கடை ஏறி இறங்கி ஒரு ஸ்பிறே மட்டும் வாங்கிக்கொண்டு வர எனக்குக் கடுப்பானது. எதில தான் நப்பித்தனம் பாக்கிறது எண்டு இல்லையோ. ஒரு மூண்டாவது வாங்கி வந்திருக்கலாம் என்று திட்ட, முதல் இதை நான் நல்லாக் கட்டில் எங்கும் அடிச்சுவிடுறன். அதுக்குப் பிறகு சொல்லு என்று சொல்ல வாய்மூடுகிறேன். “எடுக்கிறதை எடு. இரண்டு மூன்று மணித்தியாலங்கள் அறைப்பக்கம் வரக்கூடாது” என்று மனிசன் சொல்ல ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மனிசன் தன் வேலையைக் தொடங்குகிறார். அன்று மாலை கட்டிலுக்கு புதிதாக எல்லாம் விரித்து மூட்டை செத்திருக்கும் என்ற நினைப்போடு போய் படுத்தால் ஒரு கடியும் இல்லை. மனிசனைத் தேவையில்லாமல் திட்டினது என நினைத்து முதலே இந்த ஸ்பிறேயை வாங்கி அடிச்சிருக்கலாம் என மனதுள் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை. நடுச் சாமம் இருக்கும் நல்ல தூக்கம். சுரீர் என்று ஒரு கடி. துடித்துப் பதைத்து எழுந்து கோபத்தில் படுக்கையை விறாண்ட மனிசனும் எழும்பி இந்த நேரத்தில என்ன செய்யிறாய் என்கிறார். திரும்பவும் மூட்டை கடிக்குது. நீங்கள் ஒழுங்கா மருந்தை அடிச்சியளா? அல்லது மிச்சம் வச்சிட்டியளா என்று கேட்க, “கட்டில் சட்டம் எல்லாம் வடிவா அடிச்சு முடிச்சிட்டன். ஸ்பிறே டின் குப்பை வாளிக்குள்ள கிடக்கு விடியப் போய் பார்” என்கிறார். “சட்டங்களுக்கு மட்டும் அடிச்சா மெத்தைக்குள்ள இருக்கிற பூச்சி எப்பிடிச் சாகும்? நாளைக்கு நானே கடையில வாங்கிவந்து அடிச்சு பூச்சிக்கு ஒரு வழி பண்ணுறன் என்றபடி தூங்க முயல்கிறேன். முதல் நாள் இணையத்தில் மூட்டைகள் பற்றிப் பார்த்தபோது அவை எங்கெங்கு இருக்கும், எப்படி எல்லாம் பயணம் செய்யும், எத்தனை தரம் இரத்தம் குடிக்கும் என்றெல்லாம் போட்டிருந்தது அந்த இரவில் என் நினைவில் வந்து நின்மதியைக் கெடுக்க, எங்கெல்லாம் ஸ்பிறே அடிக்க வேண்டும் என்று மனதில் எண்ணியபடி ஒருவாறு தூங்கிப் போகிறேன். அடுத்தநாள் கடைகளில் சென்று பார்த்தால் பல கடைகளில் ஸ்பிறே முடிந்துவிட்டிருந்தது. கடைசியில் ஒரு கடையில் இருந்த மூன்று ஸ்பிறேயையும் எடுத்துக்கொண்டு வீடுவந்து கட்டில், மெத்தை, தலையணை மட்டுமன்றி அங்கிருந்த கதிரை, கபேட், காபெற், கதவு கூட விடாமல் முழுவதும் அடி அடியென்று ஒன்றும் விடாமல் அடித்து கதவு யன்னல் எல்லாவற்றையும் இறுக மூடி கதவின் அடியில் காற்றே உள்ளே போகாதவாறு ஒரு துணியினால் அடைத்துவிட்டு நானும் கையோடு குளித்து ஆடை மாற்றிக்கொண்டு மனநின்மதியுடன் கீழே வருகிறேன். அன்று முழுவதும் அறைப்பக்கம் போகவே இல்லை. ஒவ்வொருநாள் மாலையும் ஒன்றிரண்டு மணிநேரம் தூங்குவது என் கடமை. என் அறைக்குப் போக முடியாது. சரி மகளின் கட்டிலில் படுப்போம் என்று போனால், எங்கள் அறையில் மூட்டை இல்லை. தயவு செய்து கொண்டுவந்துவிடாதீர்கள். எதற்கும் குறை நினைக்காமல் வரவேற்பறையிலேயே தூங்குங்கள் என்கின்றனர் பிள்ளைகள் சிரித்தபடி ஒன்றுசேர. இத்தனைக்கும் ஒரு வாரமாக அவற்றிலிருந்து மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக போர்வை, விரிப்புகள், தலையணை என ஒன்றும் விடாமல் கடும் சுடுநீரில் வோசிங்க் மெஷினில் போட்டு எடுத்தபடிதான் இருந்தேன். அன்று இரவும் வரவேற்பறையே கதியாகிட அடுத்தநாள் அறைக்குச் சென்று யன்னலை நன்கு திறந்து காற்றோட்டமாக்கியபின் மாலை புதிதாக எல்லாம் மாற்றி, வாசனைக்காக மெழுகுதிரியும் கொளுத்தி வைத்தாயிற்று. இனிமேல் எதுவுமே இல்லாமல் நின்மதியாகத் தூங்கலாம் என எண்ணியபடி கட்டையைச் சாய்த்தால் முதுகுப்பக்கம் ஏதோ ஊர்வதுபோல் ............................... என்ன இது. இவ்வளவு மருந்து அடித்தும் இன்னும் மூட்டைகள் சாகவில்லையே. என்ன பிரச்சனை என்று கட்டிலுக்குப் பக்கத்தில் உள்ள கதிரையில் எழும்பி இருந்து யோசிக்க மனிசனுக்கு மூக்கில வேர்க்க கண்ணை முழிச்சு எதையோ பாக்கிற மாதிரிப் பார்த்திட்டு, மூட்டை இப்பவும் கடிக்குது எண்டால் நீ உதில இருந்தபடி நித்திரை கொள்ளு. தயவு செய்து என்னை எழுப்பிக் கதை சொல்லிக்கொண்டிருக்காதை. என்ர நல்ல மனதுக்கு என்னை எதுவும் கடிக்கேல்லை எண்டு சொல்லிவிட்டுப் படுக்க, இரவு பதினொரு மணிக்கு நான் எழுந்து கீழே சென்று என் கணனியை இயக்குகிறேன். உண்மையில மூட்டை இருக்கா இல்லையா என்று அறிய வேறு என்ன வழி என்று தேடினால் amazon இல் Bed Bug Trap எண்டு ஒண்டு கிடக்க, இதுதான் மூட்டை உடனடியா சிக்க சிறந்த வழி என்று எண்ணி உடனேயே £15 இக்கு ஓடர் செய்ய amazon prime இனூடாக அடுத்தநாளே வந்து சேர, கட்டில் கால்களுக்கும் மெத்தைகளுக்குக் கீழும் ஒட்டிவிட்டேன். பிள்ளைகள் மதியம்தான் “என்ன மூட்டைகள் போய்விட்டதா” என்று கேட்க, எனக்கு நேற்றும் ஊர்ந்ததுபோல் இருந்தது என்று இழுக்கிறேன். எதுக்கும் நாங்கள் ஒரு சினிமா பார்க்கத் திட்டம் போட்டனாங்கள். இரண்டு மணி நேரப் படம். உங்கள் கட்டிலில் இருவரும் படுத்தபடி ஐப்பாட்டில் படத்தைப் பார்க்கிறோம் என்கிறாள் கடைக்குட்டி. சரி படுங்கோ என்றுவிட்டு மனதை அங்கும் இங்குமாக அலைபாயவிட்டபடி இரண்டு மணிநேரம் பொறுமை காக்கிறேன். ஒரு மகள் தனக்கு எதுவும் கடிக்கவில்லை என்கிறாள். மற்றவள் தனக்கு ஏதோ ஊர்வதுபோல் இருந்தது ஆனால் கடிக்கவில்லை என்கிறாள். எதற்கும் இன்றும் கடிக்கிறதா என்று பாருங்கள். சில நேரம் நீங்கள் விரித்துள்ள கட்டில் விரிப்புத்தான் உங்களுக்குக் கடிப்பதுபோல இருக்கோ தெரியவில்லை என்கிறாள். சரியென்று அன்று இரவு சரியான குளிர் நன்றாக போர்வையைப் போர்த்துக்கொண்டு ஒரு பக்கமாகப் படுக்கிறேன். முதுகுப் பக்கம் எந்த அசுமாத்தமும் இல்லை. ஆனால் கையின் மேற்பகுதியில் சுரீர் என்று ஒருவலி. எனக்கு எரிச்சலிலும் ஒரு சந்தோசம். கடுகடுத்த கையைப் பார்க்க அந்த இடம் சிறிது தடித்துப்போய் இருக்கு. உடனே போனை எடுத்து அதை வீடியோ எடுத்து எங்கள் குடும்பத்துக்கான வற்சப் குழுமத்தில் போடுகிறேன். அடுத்தநாள் காலை எழுந்து ஒட்டிவிட்ட டேப் எதிலாவது ஒரு மூட்டைக் குஞ்சாவது ஓட்டுப்பட்டிருக்கா என்று பார்த்தால் அதன் ஒரு கால் அடையாளம் கூட அதிலில்லை. என் ஏமாற்றத்தை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்றே எனக்குப் புரியவில்லை. அடுத்தநாள் காலை எல்லாரும் வரவேற்பறையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கின்றனர். இதை வளரவிட்டால் மூட்டை வீடு முழுதும் பரவிவிடும். எனவே உடனடியாக மூட்டை பிடிப்பவர்களை அழைக்கவேண்டும் என்கின்றனர். உடனடியாக அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுக்க,அடுத்தநாளே வருவதாகக் கூறுகின்றனர். அதற்கான கொடுப்பனவு £100. மனிசன் ஏதோ புறுபுறுத்தபடி எழுந்து போக நான் வாயே திறக்கவில்லை. அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு வருவதாக அவர்கள் எனது போனுக்கு செய்தியை அனுப்ப, காலை ஏழு மணிக்கு எழுந்து கோப்பி குடித்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறேன். சரியாக எட்டு மணிக்கு வீட்டு மணி அடிக்க விரைந்து கீழிறங்கிக் கதவைத் திறக்கிறேன். இரண்டு இளம் ஆண்கள் நிற்கின்றனர். தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டிவிட்டு உள்ளே வார முதல் அவர்களின் காலணி களுக்கு பிளாஸ்டிக் கவர் போடுகின்றனர். கோவிட்டுக்காகத்தான் அந்தப் பாதுகாப்பு என்று அவர்கள் சொன்னாலும் மூட்டைக்காகத்தான் என நான் நம்புகிறேன். அவர்களுக்கு மேலே கைகாட்டிவிட்டு அவர்கள் செல்ல நான் பின்னே செல்கிறேன். எல்லாம் ஒரு பாதுகாப்பு முறைமைதான். அவர்கள் இருவரும் இரண்டு டோச் லைட் மட்டுமே வைத்திருக்கின்றனர். கட்டில் எல்லாம் சோதிக்கப் போகிறோம் என்று கூற நான் தலையாட்டிவிட்டு வாசலில் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். முதலில் இரண்டு தலையணைகளையும் எடுத்து கதிரையில் வைத்துவிட்டு காட்டில் விரிப்பை இருவரும் சேர்ந்து ஒழுங்காக மடிக்கின்றனர். பின்னர் படுக்கையை நிமிர்த்தி அலுமாரியுடன் சாய்த்து வைத்துவிட்டு லைட் அடித்து அங்குலம் அங்குலமாகப் பார்க்க எனக்கு நெஞ்சு பாதைக்குது. எவ்வளவு மூட்டைகள் இருந்து துலைச்சு என்ர மானத்தை வாங்கப் போகுதோ என்று. 2019 கம்போடியா போட்டு வந்ததிலிருந்துதான் கடிக்கத் தொடங்கினது என்று அவர்கள் கேட்காமலேயே நான் கூற, ஓ என்று தலையை நிமிர்த்திக் கூறிவிட்டு காட்டில் சட்டங்களை எல்லாம் தூக்கிவிட்டு, கால் பகுதி எல்லாம் பார்த்து முடிய இருவரும் ஒருசேர நிமிர்கின்றனர். நானும் ஒருக்கா மூட்டைகளைப் பார்க்கலாமா என்கிறேன். அவர்கள் முகங்களில் சிரிப்பு. நீ பார்க்க முடியாது என்கின்றனர். அவர்கள் எதற்கு சிரிக்க வேண்டும். “என் வீட்டில் உள்ள மூட்டைகளை ஏன் நான் பார்க்க முடியாது என்கிறேன் சிரித்தபடி ஆனால் சிறிது கோபமும் உள்ளே எழ. “உன் கட்டிலில் ஒரு மூட்டைப் பூச்சி கூட இல்லை. நானும் எதுவும் கொண்டு வரவில்லை” என்கிறான் ஒருவன் சிரித்தபடி. “உண்மையாகத்தான் சொல்கிறாயா” என்கிறேன் நம்பமுடியாமல். சத்தம் கேட்டுப் பிள்ளைகளும் எழுந்து வருகின்றனர். மூட்டை ஒன்று இருந்தாலே அது கடித்துவிட்டு வரும்போது இரத்தம் கட்டாயம் கட்டில் விரிப்பிலோ அல்லது மெத்தையிலோ அன்றி சட்டங்களில்எல்லாம் கூடப் பிரண்டிருக்கும். ஆனால் இங்கு எந்தவித அடையாளமும் இல்லை. இரண்டு மூட்டைகள் இருந்திருந்தாலே இரு ஆண்டிலுள் இராண்டாயிரமாய்ப் பெருகியிருக்கும். வீட்டில் ஒரு மூட்டைகளும் இல்லை. நாங்கள் போகிறோம். மீண்டும் எப்போதாவது மூட்டைகள் இருப்பதாக எண்ணினால் கூப்பிடு என்று சிரித்துக்கொண்டே செல்ல, கீழே எல்லாம் கேட்டபடி நின்ற மனிசன் 100 பவுண்டஸ் தண்டம் என்கிறார். சரியப்பா இனி அம்மாவுக்கு மூட்டையே கடிக்காது. அப்பிடிக் கடிச்சா வைத்தியரிட்டதான் கூட்டிக்கொண்டு போக வேணும் என்று சொல்லிச் சிரிக்க நான் செய்வதறியாது நிற்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.