Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    33600
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38777
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    11531
    Posts
  4. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/19/22 in all areas

  1. இரை. தினையளவு இரைதேடி சிற்றெறும்புக் கூட்டம் புற்றுவிட்டு நீங்கி பொழுதெல்லாம் அலையும். குடைபோல் வலைபின்னி வலைக்குள் காத்திருக்கும் பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் எட்டுக்கால் சிலந்தியும். அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த மலர்தேடி மதுவுண்டு செல்ல மணம் முகர்ந்து அலையும் மாமரத்துத் தேனீக்கள். உடும்பொடு பாம்பும் இரைபார்த்து ஊர்ந்து வரும் பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும். வானில் உலவும் பருந்து வீட்டு முற்றம் சேர்ந்து தாயை விட்டு விலகிய குஞ்சை கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும். தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே வேங்கையை விரட்டி இரையை எடுக்கும். கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும் கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும் அவை சென்ற பாதையெல்லாம் மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும். பறவைக்கும் இரையாகும் விலங்குக்கும் இரையாகும் மனிதர்க்கும் இரையாகும் தமக்கும் தாமே இரையாகும் மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று. பசித்தாலும் பசிக்கும் ஆனாலும் புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார் குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......! யாழ் 24 அகவைக்காக, ஆக்கம் சுவி......!
  2. ஈழத்திருநாடே என் அருமைத் தாயகமே, உன் நிலைகண்டு வருந்துகிறேன் கொடிய நோய் கொடுத்த துயர் மறையும் முன்னே கொடும் பசி வாட்டுகிறதே பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயர் கூடுகிறதே. கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய ராஜ பக்சேக்களின் சுயநலமும் சொத்து சேர்ப்பும் தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும் உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும் அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு வட்டி கட்டிட மேலும் கடனும் சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும் என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள் பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும் அரைவயிறு நனைகிறதா ? பதுக்கி வைத்த சொத்துக்களையெல்லாம் உனது கூட்டுக குழுவுடன் சற்று தானம் செய்தல் ஓரளவு உயர்வாய். மனசு வருமா ? நாட்டை நடத்த தெரியாமல் வீண் வீம்பும் , ராணுவத்துக்கு செலவிடட பணமும் அளவுக்கு மிஞ்சிய ராணுவ படையும் பலமும் (?) .. உன் சொந்த மக்களை இந்நிலைக்கு கொண்டு சென்றது உன்னை தேர்வு செய்த சிங்க( ள)இனமே உன்னை வெறுக்கையில் உன் ஆடசியின் நீட்ச்சி தேவையா ? வரலாற்றில் இல்லாத வறுமையும் துயரமும் ஏன்? உன் அடக்குமுறை போரில் அடிமைபட்டுக் கிடந்த என் ஈழத்தமிழினம் எப்படியாவது வாழ்க் கற்று விட்ட்து . மண்ணை கிண்டி வலையை வீசி விறகடுப்பில் வெந்து வாழ்க்கையை ஓட்டும் ஆனால் தற்பெருமைத் தலைநகரில் கட்டிடக் கூடுகளில் சஞ்சரிக்கும் புறாக்களாக வாழும் கொலோம்போ மக்கள் தான் பாவம். கிராமத்தான் ஓரளவு வாழ்ந்து விடுவான் ஏனையவ்ர் நீண்ட கியூ வரிசையில் விரக்தியின் விளிம்பில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில் நிற்கும் மனிதனின் மனதில் உதிக்கும் ஒரு வெறுப்பு அது ராஜபக்சேக்களின்கொடுங்கோல் சுயநல ஆடசியை மன்னிக்காது. வரலாறாய் வரிப்படுத்தப்படும். நான் புலம்பெயர்ந்து ஆண்டுகள் முப்பது ஆனாலும் என் நாட்டு மக்களை எண்ணும்போது ஏற்படட துக்கம் என்னை மேலுள்ளவாறு கிறுக்க வைத்துவிட்ட்து. .
  3. நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் போகும்போதோ வரும்போதோ சட்டை செய்யவில்லை. அவன் நடந்து வரும்போது ஒரு நளினம் இருக்கும். இவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளனாகத்தான் இருப்பான் என நான் நம்பினேன். அடுத்த வாரம் என்னை நோக்கி வந்து நமஸ்தே கிறிஷ்ணா என்றபடி ஒரு தாளை நீட்டினான். நான் வேண்டுமென்றே வணக்கம் என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் நிற்க நான் அந்தத் தாளை விரித்தேன். அது கவுன்சில் வீடற்றவர்களுக்கு வாராவாரம் கொடுக்கும் உதவித் தொகைக்கானது. ஆனால் அதைக் கொண்டு வருபவர் தன் அடையாள அட்டையைக் காட்டினால்த்தான் நாம் பயணம் கொடுக்கலாம். ஏனெனில் வேறு ஒருவரினதை எடுத்துக்கொண்டு வந்து மற்றவர்கள் பணமாக்காதிருக்க அப்படியான முறையை வைத்திருந்தனர். “உனது ஐடியைத் தருகிறாயா?” “என்னிடம் ஐடி இல்லை, ஜோன் ஒன்றுமில்லாமல் எனக்குப் பணம் தருவான்” “யார் அது ஜோன்? அப்படி யாரும் இங்கு இல்லையே” “ இந்தக் கடையின் ஓனர் தான். உனக்குத் தெரியாதா?” எனக்குக் குழப்பமும் கோபமும் ஒன்றாக வர கொஞ்சம் பொறு என்றுவிட்டு எனது முதலாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைக் கூற அவரும் வீடியோவில் அவனைப் பார்த்துவிட்டு “அவனுக்குக் கொடுங்கோ. அவன் காசை என் கடையில் தான் செலவழிக்கிறவன் என்று சொல்ல, யார் அந்த ஜோன் என்றேன். “ நான் தான். என்னை உந்த வெள்ளைச் சனங்கள் அந்தப் பெயரால்த்தான் அழைப்பார்கள்” என்று கூறி அவர் போனை வைக்க, தமிழராய் இருந்துகொண்டு உவருக்கு ஆங்கிலப் பேர் கேட்குது என மனதுள் கறுவினாலும் வெளியே சொல்லவில்லை. அதன்பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லும்போது “நன்றி. கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்றான். “நான் கிரிஷ்ணரை வணங்குவதில்லை” என்றேன். அவன் எதுவும் சொல்லாது போய்விட்டான். அடுத்த வாரம் நான் வேலைக்குச் செல்லும்போது கால்மேல் கால் போட்டபடி கடையின் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். என்ன பிறப்பு இவன். இவனுக்குக் குளிர்வதே இல்லையா என எண்ணியபடி உள்ளே வந்தேன். சிறிது நேரத்தில் நான் என் அலுவல்களைப் பார்க்க அவன் கடைக்குள் வந்து அங்கும் இங்குமாக நடக்க எனக்கு எரிச்சல் அதிகரித்தது. எதையாவது களவெடுத்துக்கொண்டு போக எண்ணுகிறானோ என எண்ணியபடி அவன் எங்கு செல்கிறான் என என் அறையின் உள்ளே இருக்கும் கமராவின் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் எதையும் எடுக்காது பொறுமையின்றி நடந்து திரிந்துவிட்டு என் பக்கமாக வந்தான். நீ அஞ்சலகத்தைத் திறந்துவிட்டாயா என்றபடி நிற்க, வா என்றபடி அவனின் தாளை வாங்கி அவனிடம் எதுவுமே கேட்காது பணத்தைக் கொடுத்தேன். மீண்டும் அவன் “கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூற “நன்றி உன்னை சிவா ஆசீர்வதிப்பார்” என்றேன். அவன் எதுவுமே கூறாமல் செல்ல என மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தது. அடுத்தடுத்த வாரங்களில் வரும்போது அவனைப் பார்த்ததும் காலை வணக்கம் சொல்ல, என்னை ஆச்சரியமாகப் பார்த்து தானும் சொன்னான். அன்று அவன் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை. ஏன் அவன் வரவில்லை என்று எண்ணியபடி ஆட்கள் வராத நேரத்தில் நான் வெளியே சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. கடையில் வேலை செய்தவர்களைக் கேட்க தமக்குத் தெரியாது என்றுவிட்டு அப்படித்தான் அவன் அடிக்கடி காணாமல் போவான் பின் வருவான் என்றனர். நானும் அதன் பின் அவனைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வாரத்தின் பின்னர் வந்தவன் இரண்டு காசோலைகளை என் முன்னே நீட்டினான். ஒவ்வொன்றும் 100 பவுண்கள் பெறுமதியானவை. அவனுக்குப் பணத்தை வழங்கிவிட்டு “எங்கே சென்றாய் உன்னைக் காணவில்லையே ஒரு வாரமாக என்றேன். தனக்கு மன அழுத்தம் கூடியதால் ஒருவாரம் வைத்தியசாலையில் இருந்தேன் என்றதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாது அவனை அனுப்பிவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் வேலைசெய்யும் கடையிலே சூடான உணவுப் பொருட்களும் உண்டு. நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தேவை எனில் குளிரான உணவுகளை சூடாக்கிக் கொடுப்பார்கள். பிரியாணி சமோசா போன்றவற்றை அவன் சூடாக்கித் தரும்படி வாங்கி உண்பான். தேனீரும் கோப்பியுமாக அவன் பணம் அங்கேயே கரையும். ஆனால் ஒருநாள் கூட மலிந்த பியரைக் கூட அவன் வாங்குவதில்லை என அங்கு வேலை செய்பவர்கள் கூறுவார்கள். அன்று ஒரு மூன்று மணியிருக்கும். பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, நான் காலையில் அவனுக்குக் கொடுத்த 20 பவுண்டஸ் தாள்களைக் கொண்டுவந்து பத்துப் பவுண்டஸ் தாள்களைத் தருகிறாயா என்றான். நானும் கொடுத்துவிட்டு எனக்கு வாடிக்கையாளர்கள் வாராதாபடியால் அறையை விட்டு வெளியே வந்து வீதியைப் புதினம் பார்க்கச் சென்றேன். அங்கே கூட்டமாக ஒரு ஏழு பள்ளி மாணவர்கள் நிற்க இவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். எனக்குப் பார்த்தவுடன் சுள் என்று கோபம் தலைக்கேறியது. கவுன்சில் அவனுக்குத் தரும் காசைச் சேமித்து வைத்துச் செலவழிக்காது இப்பிடி கொடுத்துக் கரைக்கிறானே என்று. ஏனெனில் அந்த வாரம் பணம் முடிந்தவுடன் எமது கடையில் கடன் சொல்லிவிட்டுத்தான் பொருட்களை வாங்குவான். ஆனாலும் அடுத்த நிமிடம் அவனின் செயலை எண்ணிய வியப்புத் தோன்றியது. எதுவும் இல்லாதவன். இருப்பவர்களே கொடுக்க யோசிக்கும் இந்தக் காலத்தில் தனக்கு என வைத்திருக்காமல் இவர்களுக்குக் கொடுக்கிறான் எனில் எத்தனை பெரிய மனது வேண்டும் என எண்ணியவுடனேயே எனக்குள் ஒரு கூச்சம் எழ நான் உள்ளே நகர்ந்தேன். அடுத்த வாரம் பணம் மாற்ற வருவதற்கு முன்னர் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். ... ........
  4. இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍
  5. நுண்செயலியை பற்றி.. நுண்செயலி(Micro Processor) என்பது ஒருவகை 'எலக்ட்ரானிக் சர்க்யூட்' ஆகும், இது எலக்ட்ரானிக் சாதனம் செயல்பட வேண்டிய சக்தியை செயலாக்குகிறது. இது கட்டளைகளையும், நிரல்களையும் சரியான முறையில் செயல்படுத்துகிறது. ஒரு கணினியின் மத்திய செயல்முறை அலகு (CPU) ஒரு நுண்செயலியின் எடுத்துக்காட்டு. இந்த எலக்ட்ரானிக் கூறு, ஒரு கணினியின் மதர்போர்டின் ஒரு பகுதியாகும். இது ஆயிரக்கணக்கான மற்றும் சில நேரங்களில் மில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களுடன் ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuit) என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒரு சாதனத்தில் அதன் செயல்பாட்டின் முக்கியத்துவத்துடன், சில நேரங்களில் மனிதர்களின் மூளை மற்றும் இதயத்துடன் ஒப்பிடும்போது, "சிறியது" என்பதைக் குறிக்கும் அதன் ஆங்கில அர்த்தத்திற்கு இது மைக்ரோ என்று அழைக்கப்படுகிறது. நுண்செயலிகளை அவற்றின் உள் மற்றும் வெளிப்புற வேகத்தால் வேறுபடுத்தி அறியலாம். இது வினாடிக்கு செயலாக்கப்பட்ட பிட்(Bits)களையும், நினைவக அணுகல் திறன் (Bus Speed) மற்றும் கணணி மட்டத்தில் செயலாக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் நிரல்களின் திறனையும் தீர்மானிக்கிறது. நுண்செயலிகளின் வகைகளும் உற்பத்தியாளரால் வேறுபடுகின்றன. நுண்செயலியை வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்டெல் (intel), ஏ.எம்.டி(AMD) மற்றும் குவால்காம்(Qualcomm). ஒவ்வொரு வகை நுண்செயலியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையும், உள் தரவின் நினைவக அணுகல் அகலத்தையும் கொண்டுள்ளது. இவை Mhz என்று கடிகார வேகம் போல அளவிடப்படுபவை.
  6. ஓரே ஒரு அசைவு.... ஒரே ஒரு அடி எடுத்து வைத்தாலும் மொத்தமும் தண்ணீருக்குள்.... நம்பிக்கை .. ஓடத்தின் மீதா...? யானையின் மீதா...? மனிதர்கள் மீதா... யாருக்கு யார் மீது ......?
  7. நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
  8. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சக்கர சுழற்சியின்போது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒரு அழகிய கிராமத்திலே சற்று வசதி படைத்த குடும்பத்தில் ஒரு கணவனும் மனைவியும் ,அவர்களது இல் வாழ்வின் வசந்தமாக வந்துதித்தாள் கவினா ...காலம் உருண்டோட அவள் பள்ளி செல்லும் காலம் வந்தது . இனிய பள்ளிக் காலம் தன் ஓடடத்தில் அவளை பத்தாம் வகுப்புக்கு நகர்த்தியது. இவர்களின் வீட்டுக்கு உதவிக்கு வரும் வேலப்பனின் சகோதரி மாணிக்கம் குடும்பத்துக்கு அழகான ஐந்து குழந்தைகள் . வேலப்பன் தூரத்து உறவென்றாலும் கஷ்டத்தின் நிமித்தம் தன் வயல் வேலைகளோடு இவர்களுக்கும் உதவி செய்பவன். மாணிக்கம்,கணவன் கதிரேசனின் , வாத்தியார் சம்பளத்தோடு ஐந்து குழந்தைகளுக்கு அன்பான தாயக பராமரிப்பவள். இவர்களும் கவினா வோடு ஒரே பள்ளிக் கூ டத்தில் படிப்பவர்கள். கவினா ஒற்றைப் பெண் குழந்தையாதலால் இவர்களுடனே பள்ளிக்கு செல்வாள். மாணிக்கத்தின் மூத்தமகன் கிருபாகரன் இவளை விட மூன்று வயது கூடியவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். கவிதா கணக்கில் படு மக்கு . பாடம் சொல்லிக் கொடுக்க வேலப்பன் மூலம் கவினா வின் தாய் செய்தி சொல்லி அனுப்பி, அவனும் பாடம் சொல்லிக் கொடுக்க முன் வந்தான். அந்த வருடம் கவினா கணக்கு பாடத்தில் நல்ல புள்ளிகள் பெற்றாள் . ஆசிரியரின் பாராட்டும் பெற்றாள் .அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு முக்கியமான வருடம். தொடர்ந்தும் கணக்கில் முன்னேறினால் தான் உயர்தரம் விஞ்ஞானம் பிரிவில் படிக்க முடியும். தொடர்ந்தும் கிருபன் வந்து பாடம் எடுக்க ஒழுங்கு செய்தனர். அந்த சிறு பண உதவி அவனுக்கு பஸ் போக்குவரத்து போன்ற செலவுக்கு உதவியது . பத்தாம் வகுப்பு இறுதி பரீடசையும் வந்தது ...கவனமாக படிக்க வேண்டும் என இடைக்கிடை கிருபன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது தாயார் வந்து போவார்.சில சமயம் தேநீரும் சிற்றுண்டியும் பரிமாறுவாள். பரீடசை முடித்து . நல்ல பெறுபேறு கிடைத்தது . கணித்துக்கு டி.. சித்தியும் மற்றும் 4சீ 3 எஸ் .எடுத்தாள் . அவர்கள் உயர்கல்விக்கு எங்கே சேர்ப்பது என் யோசித்து கொண்டு இருந்தார்கள். கவினா வுக்கு கிருபன் வீட்டுக்கு வராதது பெரும் ஏக்கமாக எதோ ஒன்றை இழந்தவள் போல இருந்தாதாள் . வழக்கம்போல அவ்வூர் கோவில் திருவிழா காலம் வரவே ..பெற்றோருடன் சென்றவள் ,கிருபனிடம் தான் அவனை விரும்புவதாக யாருக்கும் தெரியாமல் கடிதம் ஒன்றைக் கொடுத் தாள். மறு நாள் பதிலாக அவன் உங்கள் வீட்டு நிலைமையும். எங்களுக்கும் சரிவராது . நாங்கள் நட் ப்பாகவே இருப்போம் என்றான். காலம் மெல்ல நகர்ந்து சென்றது கிருபன் கல்லூரி முடித்து ஒரு வேலை யில் சேர்ந்தான் . அதற்காக தினமும் பஸ் பயணம் செல்வதுண்டு . கவினா வும் உயர் கல்விக்காக பஸ் வண்டியில் செல்ல விரும்பி வீட்டில் கார் வசதி இருந்தாலும் சாக்கு போக்கு சொல்லி கிருபனை காண்பதற்காகவே பஸ் இல் பாடசாலைக்கு சென்று விடுவாள். ஆனாலும் கிருபன் இல்லாத வாழ்க்கையை கற்பனை பண்ண முடியவில்லை . அவன் நினைவாகவே இருப்பாள். ." என்ன பிரச்னை என்றாலும் நான் பார்த்து கொள்வேன். எனக்கு உன் பதில் என்ன? என்றாள்" .அவனும் இளைஞன் தானே ...இருவரும் காதலின் சங்கீதம் பாட ஆரம்பித்தனர். சில நாடகள் சென்றன கவினா வின் போக்கில் சில மாறுதலைக் கண்டு கண்டித்தார். தாயார் . அப்படி ஏதுமில்லை என்று சாதித்தாள் கணவனிடம் கூறிய போது பெண் பிள்ளைக்கு படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் . கலியாணத்தை கட்டி வைப்போம் என்கிறார். இதை மெதுவாக பேச்சு வாக்கில் சொன்னாள் தாயார் . அதற்கு அவள் "நான் சின்ன வயசிலே இருந்து அவனைத் தான் என் மனதில் நினைத்து இருக்கிறேன் எனவே வேறு எதற்கும் சம்மதிக்க மாடடேன்" என்றாள் . மகளின் பிடிவாதத்தை எண்ணியவாறு ...ஒரு நாள் கிருபனை தன்னை வந்து சந்திக்கும்படி வீட்டுக்கு அழைத்தார்கள் . அவனும் எதோ நடக்க போகிறது . என் எண்ணியவாறு அங்கு சென்றான். அவனைக் கண்டதும் கதிரையில் உடகாரும் என்றார். கேள்வி க்கணைகளாக தொடுத்தார் ... "உமக்கு என்ன வருமானம் இருக்கிறது? ".." என் பிள்ளையை எப்படி காப்பாற்று வீர்? .". என் பணத்தின் மீது ஆசை இருந்தால் ஏதாவது , பிச்சை போடுகிறேன் எடுத்து கொண்டு சென்று விடும் " .... உமக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள் அவர்களை எப்படி கரை சேர்ப்பீர் ? . இதெல்லாம் சரிவராது ..உமது வேலையைப்பாரும் ..உமது பெற்றோருக்கு ஒரு நல்ல நிலையை அமைத்து கொடும். என்று அதட்டியவாறே மகள் கவிதாவை அழைத்தார். அவளும் பயத்துடன் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் அவன் மறுத்து விடடான். அவ்வளவு நேரமும் பொறுமையாக , எல்லாவற்றையும் பொறுமையாக கேடடான் . எந்த வித பிரச்சினை வந்தாலும் நான் உன்னைக் கைவிடேன் என்றவள் மெளனமானாள் . நீ யாருடா? என்பதுபோல் பார்த்தாள் . நா நுனி வரை உங்கள் மகள் தான் என்னை பின்னும் முன்னும் துரத்தி காதலித்தாள் . என்னோடு பார்க்கில் வந்து சந்திப்பாள் முதலில் உங்கள் மகளை எச்சரியுங்கள் என்று சொல்ல நினைத்து மெளனமானான் . சரி நீர் போகலாம்" என்றதும் திருப்பியும் பாராமல் வீடு வந்து சேர்ந்தான். அன்று இரவே கொழும்புக்கு ..நேர்முக தேர்வு இருப்பதாக சொல்லி , செல்ல ஆயத்த மானான். விடிந்ததும் தனக்கான ஆடைகளை யும் முக்கிய பொருட்களை யம் எடுத்துக் கொண்டு முதல் ரயில் வண்டியில் பயணமானான் . தன்னுடன் ப டித்த ஒரே ஒரு நண்பனை நம்பி, ...கொழும்பை அடைந்ததும் நண்பனைத் தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு ...வந்து அவனது தந்தையின் அனுமதியுடன் ...அவர்களது தென்னந்தோப்பில் தொழிலாளி யாக சேர்ந்தான். இயந்திரத்தில் தேங்காய் மடடையை தும்பாக்கி கயிறு தயாரிப்பது ...கால் விரிப்பு ..மெத்தை போன்ற பொருட்களை தயாரிப்பது என்று, எல்லாத தொழில்களையும் கற்று தனது நேர்மையாலும் கடும் உழைப்பினாலும் நண்பனின் தந்தைக்கு அடுத்த முதலாளியாக இருந்தான். நண்பனுக்கு வெளி நாட்டு ஆசை வரவே ..தந்தை படிக்க லண்டனுக்கு அனுப்பி விடடார் . நண்பனின் குடும்பத்தில் அவனும் ஒருவனாக வாழ்ந்தான். நண்பனின் தங்கை திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தார் . அக்காலத்தில் அவனுக்கு கீழே நாற்பது பேர் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகாரியானான். முதலாளிக்கு அடுத்த படியாக அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது, வேலையைப்பிரித்து கொடுப்பது போன்ற ஒரு சின்ன முதலாளியாக வலம் வந்தான். அவனது நேர்மை ஓயாத உழைப்பு நாணயம் வேலையாட்களிடம் பண்பாக வேலை வாங்குவது, என்பவை அவருக்கு அவனிடம் மிகவும் பிடித்த குணங்கள் . அவர்க ளின் பொருட்களை தொகையாக வாங்கி விற்கும் வாடிக்கையாளர்களை இவனுக்கும் நண்பராக் கினான். ஒரு நாள் நண்பனின் அப்பாவிடம் நாங்களே ஒரு உற்பத்தி பொருட்களை விற்கும் ஒரு கடையை ஆரம்பித்தால் என்ன என அறிவுரை கேடடான் . அதற்கும் அவர் எனக்கும் வயதாகிறது . ஒரே ஒரு மகனும் லண்ட னில் படிக்குபோது நட் ப்பான பிள்ளையைக் கட்டி விடடான் . ஒரு தொகைப்பணம் தருகிறேன் நீரே அதை முதலீட்டு உம்மிடம் காசு உள்ள போது திருப்பி தாரும் என்று சொன்னார். கிருபனின் நாணயம், விடாமுயற்சி தொழில் பற்று, நுட்பம் .வேலையாட்கள் இடம் பழகும் விதம் என்பன அவனை மேலுயர்த்தியது. இரண்டு பெரிய ஸ்டோர் களுக்கு அதிபதியானான். வெளிநாடடவர் சுற்றுலாவில் வரும் போது இவனின் பொருட்களை விரும்பி வாங்கவும் , தென்னையின் ஒவ்வொரு பகுதியும் செதுக்க பட்டு வடிவமைத்து விற்பனை .பொருளாயின. தனது தாய் தந்தையின் வீடடை ஒரு அழகான வீடாக்கினான். ..தங்கைகளுக்கு திருமணம் என எல்லாக் கடமையும் முடித்து ..சற்று தன்னை எண்ணி பார்த்தான் . வயதும் 35 ஐ தாண்டி ண்டி விட்ட்து. கவினா குடும்பத்தின் பணத்திமிர்த்தனம் கண் முன்னே வந்தது . தான் பாவிக்கும் வாகனத்தை விட அழகான இன்னொரு காரை வாங்கி கொண்டு , தன் கிராமத்து நோக்கி பயணமானான் . மீண்டும் கொழும்புக்கு தன் தாய் தந்தையை தன்னோடு தலைநகருக்கு கூட்டி வர நினைத்து சென்றான். நீண்ட பயணத்தில் கவினா அவர்களது வீட்டில் தனக்கு நடத்த அவமரியாதையை எண்ணினான். உனது நிலையை உயர்த்தியப்பின், உன் கடமைகள் முடிந்த பின் , பெண் தருகிறோம் என்றாவது ஒரு நம்பிக்கையை தரவில்லை . எவ்வ ளவு இழிவாக பேசி னர்கள். காலம் உருண்டோடியது . கவினா வும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானதாக கேள்விபட்டுருந்தான். கணவன் ஒரு புடவைக்கடை,உரிமையாளராக இருந்தான். மார்கழி மாதத்து இளம் மழைத்துளிகள் ஆரம்பித்த ஒரு நாளில் வந்திறங்கினான் ஊருக்கு . தாய் தந்தையரை அழைத்து கொண்டு ஒரு வாரத்தில் தான் புதிதாக வாங்கிய வீட்டுக்கு கூ ட்டிச் சென்று குடிபுக நினைத்து அழைத்து வர எல்லா ஏ ற்பாடுகளுடனும் வந்து இருந்தான். பயண களைப்பில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவனை ,தயார் தேநீருடன் உறக்கம் கலைத்தாள். அவர் தமது ஊர் கோவிலில் அவனுக்காக நேர்த்தி வை த்தாகவும் அதை அவனைக் கொண்டு செலுத்துவதாக வேண்டி இருந்த்தாவும் கூறி கோவிலுக்கு சென்றார்கள் . அருகே கிராமத்து சிறுவர்கள் புதிதாக ஒரு கார் நிற்பதை பார்க்க வென்று கூடடமாய் வந்தார்கள். மதிய வேளை க்கு அண்மித்த நேரம் சூரியன் தன் கொடும் கதிர்களால் அனல் வீசிக் கொண்ட பொழுதில் அவ்வழியே தாயுடன் கவினா இரண்டவது குழந்தைக்கு தடுப்பூசி போடச் சென்று வந்து கொண்டிருந்தாள். தூரத்தே , இவனைக் கண்டதும் மலைத்து நின்றாள். அவன் இவளைக் கண்டதும் வந்து நலம் விசாரித்தான். தாயார் முன்னையை பொலிவிழந்து வயதானவராய் தோன்றினார். கொடிய வெய்யிலாக இருக்கிறது. வீடு வரை கொண்டுவந்துவிட கேட்டும் மறுத்து விடடாள். அவள் கண்கள் நீர்கோர்த்து கொண்டது. இன்னும் கொஞ்சக் காலம் இவனுக்காக காத்திருக்கலாமோ ..? என எண்ணியவாறு நடக்க தொடங்கனாள் . கடந்த காலம் அவளுக்கு திரைப் படம் பார்ப்பதுபோல் மனதில் தோன்றியது . கவினாவின் பெற்றோர்களின் வசதி வாய்ப்பு காரணமாக , வந்த தற்பெருமை , அவன் கேடட ஏளனபேச்சு அதனால் வந்த மன வைராக்கியம் தன்னை இவ்வ்ளவு தூரம் உயர வைத்திருக்கிறதே என் எண்ணிக் கொண்டே வீடு நோக்கி விரைந்தனர். அவ்னது பெற்றோர்களும் மகனின் வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் தமது மகனின் கனவு இல்லத்தை நோக்கி பயணமானார்கள். மனித வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கும். சந்தர்ப்பங்கள் தான் ஒருவனை திசை திரும்புகின்றன. அந்த திசைகள் பல சமயங்களில் உயர்ச்சியையும் ஒரு சில சமயங்களில் வீழ்ச்சியையும் தருவதுண்டு. மனதில் உளி என விழும் வார்த்தைகள் தான் இலட்சியம் எனும் சிலையை செதுக்கும் கற்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பிருந்தால் என்றும் எதையும் சாதிக்கலாம்
  9. 🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹
  10. இயற்கையுணவே! எமக்கு வலிமை! ************************ கோர்லிக்ஸ்,வீவா, நெஸ்ரோமோல்ட் மைலோ.. இனும் பல.. இத்தியாதி,இத்தியாதி ஆரோக்கிய வாழ்வுக்கு அனைத்துச் சத்தும் நிறைந்ததென்று விளம்பரங்கள் செய்து விற்று பணமள்ளும் வெளிநாட்டு கம்பனிகளே! இதுகளை.. வந்தகொரோனாவுக்கு வாங்கிக்குடியென்று எந்த (சுகாதார) அமைப்பும் இதுவரையும் சொன்னதுண்டா! இஞ்சி,மஞ்சல் மிளகு,சீரகம் உள்ளி,கராம்பென்று இயற்கை உணவுகளே-எம் உடலைக்காக்குமென.. சித்தர்கள் சொன்னதுதான் இன்றும் சிறப்பென்று அறிந்தபின்னும். இதுபோன்ற.. போலிகளை புறம் தள்ளி நல் வாழ்வுதனை-நாம் அமைப்போம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  11. எல்லோரும் உக்ரேனில் உக்கிரமாய் நிப்பதால் கொஞ்சம் தாமதமாய்த்தான் இதற்கு வருவார்கள்......நியாயமாய் ஏதாவது சந்தேகம் கேட்கவேணுமென்றால் நான்தான் கேட்கவேண்டும். எனக்கே நல்லா விளங்கீட்டுது......! 😂
  12. நன்றி சுவி அண்ணா, உதயகுமார், கிருபன், புங்கையூரான், பாஞ், ராசவன்னியன், உடையார், பெருமாள், தமிழ்சிறி, யாயினி, நுணாவிலான், நிலாமதி அக்கா, சசி வர்ணம், நந்தன், ஏராளன், ஜெகா துரை, ஈழபிரியன். 🙂
  13. சுவி இதை வாசிக்கும் போது ஏனோ 10 வயது சிறுமி பசியால் எடுத்து சாப்பிட்டு அடி,உதை,வெட்டு வாங்கியது தான் நினைவுக்கு வருகிறது.
  14. விலங்குகளும் பறவைகளும் தம் தம் இனத்தை தாக்கி உண்பதில்லை . ஆனால் மனிதனோ ..பேராசையால் ஒருவரை ஒருவர் அழிக்க தயங்க்குவதில்லை.
  15. முதலில் என்னிடமுள்ள டெல்(Dell Optiplex 860) கணணியை பிரித்து அதன் உட்பாகங்களை படம் எடுத்து இணைக்கிறேன்..((இதுவும் 14 வருட பழமையான கணணிதான்). (அடுத்து வரும் திரிகளில் நானே உதிரி பாகங்களை வாங்கி பொருத்திய கணணியை விளக்குகிறேன்.) கணணியின் முன்பக்க, பின்பக்க தோற்றங்கள்.
  16. பார்வை ஒன்றே போதுமே........(3). வீட்டுக்கு வந்ததும் மகேஸ்வரி விரைவாக சோறும் ஆக்கி மீன்குழம்பும் ஒரு கீரையும் வைக்கிறாள்.....சித்ரா ஓடிப்போய் பெட்டிக்குள் இருந்து தகப்பனின் ஒரு சாரமும் டீ - சேர்ட்டும் எடுத்து வந்து சாமிநாதனிடம் தர அவரும் அதை வாங்கி உடுத்திக் கொள்கிறார்.....பின் அவர் திண்ணையில் இருந்து பார்க்க, மழைக்கு வீட்டின் கூரையில் இருந்து ஒழுகிய இடங்களில் வாளி , சட்டி என்று வைத்திருந்தார்கள். திண்ணைக்கும் குசினிக்கும் இடையில் இருக்கும் பனைமட்டை வரிச்சின் இடைவெளியில் மகேஸ்வரி குந்தியிருந்து கால்களை அகட்டி வைத்து அம்மியில் அரைப்பது தெரிகிறது.அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பி வெளியே எழுந்து வருகிறார்.இவ்வளவு ஏழ்மையிலும் அவர்களது விருந்தோம்பல் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்போது அவர்களது மகன் முத்து ஒரு சைக்கிளில் வந்து அதை திண்ணையில் சாத்தி விட்டு சாமிநாதனைப் பார்த்தபடி வீட்டுக்குள் போகிறான்....அங்கு அவனுக்கு சித்ரா நடந்ததை சொல்லி முடிக்கவும் மகேஸ்வரி குரல் கொடுக்கவும் சரியாக இருக்கின்றது. தம்பி கத்தியை எடுத்து கொண்டுபோய் வாழையிலை ரெண்டு வெட்டிக்கொண்டு வா. திண்ணையில பாயைப்போடு பிள்ளை சாப்பாடு முடிஞ்சுது அவரைக் கூப்புடு. எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின்பு வெளியே இருந்து வெறியில் வந்த ஒருவர் இவர்களிடம் பணம் கேட்டு சண்டை பிடித்து விட்டு கண்டபடி தூசண வார்த்தைகளால் பேசிக்கொண்டு போகிறார். விருந்தாளிக்கு முன்பாக கடங்காரன் வந்து கத்திவிட்டுப் போனது அவர்கள் மூவருக்கும் ஒருமாதிரி கூச்சமாக இருந்தது. ஆனாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பையன் முத்துதான் இப்பொழுது தகப்பன் பார்த்துவந்த வேலையை செய்துகொண்டு வருகின்றான். தமக்கை சித்ரா படிப்பதற்காகவும் குடும்பச் செலவுகளுக்காகவும் தனது படிப்பை நிறுத்தி வைத்து விட்டு சம்பாதித்து கொண்டுவந்து தாயிடம் குடுக்கிறான். ஆனாலும் தான் இப்பொழுது அவர்களுக்கு எப்படி உதவ முடியும். இன்று தான் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் இவர்களைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது. தான் கொடுத்த சங்கிலியைக்கூட அவர்கள் வாங்கவில்லை. ம்...என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார். பின் மாலையாகி நேரத்துக்கே இருட்டத் தொடங்கி விட்டது. அதனால் அவர்களிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு அவர் கிளம்பி விட்டார். அடுத்தநாள் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சாமிநாதனின் தலையில் யாரோ தண்ணி ஊற்றுவதை உணர்ந்து பதறியடித்துக் கொண்டு எழுந்தவர் திகைப்புடன் நிமிர்ந்து பார்க்க கடை திறப்பதற்காக வந்து சிப்பந்தி சோமு கடை விறாந்தையில் யாரோ பிச்சைக்காரன் படுத்திருப்பதைக் கண்டு எரிச்சலுடன் அவர்மீது வாளித்தண்ணியை கொட்டி விட்டான். அவருக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு பேசாமல் எழுந்து வெளியேவர, அப்போது எதிர்ப் பக்கத்து கடையில் இருந்து ஒரு பையன் வீதியைக் கடந்து ஓடிவந்து சோமுவை கடிந்து விட்டு ஐயா நீங்களா, அட நீங்கள் இரவு வீட்டில் தங்கி விட்டு காலையில் கிளம்பியிருக்கலாமே என்று சொன்னான். அப்போது சோமு என்ன முத்து இவரை உனக்கு முன்பே தெரியுமா என்று வினாவ ஓம் சோமு தெரிந்தவர்தான் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார்......! பார்ப்போம் இனி.........! ✍️
  17. பழைய பாடல்கள் என்றால் இந்த மண்ணில் இப்போது உயிரோடு இல்லாத அந்தக்கால பாடகர்கள் மட்டுமா நினைவுக்கு வரும்? இரு வர்ணப்பாடல்கள் எனும்போதும் இப்போதும் நம்மிடையே உள்ள எஸ்பிபியும் நெஞ்சை அள்ளுவார். எப்படி நான்கு சினிமா தலைமுறைக்கும் இனிக்க இனிக்க பாட முடிகிறது இவரால் மட்டும்? : சம்சாரம் என்பதுமட்டும் வீணையல்ல எஸ்பிபியும்தான்: அன்புமேகமே.. எஸ்பிபி பாடினால் தேன் சிந்துமே வானம்.. பூமி அதை தன் செவிகளில் ஏந்தும்.. எனக்கு பிடிக்காத ஜெயலலிதாவின்.. எனக்கு பிடித்த நடனம்..&.ஸ்ரைல்../எஸ்பிபியின் பாடலில் இருப்பதால் இரண்டையும் ரசிக்கலாம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.