புட்டினும் புதுமாத்தளனும் II
காலம்: புத்தாண்டு தினம் 2027
இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம்.
மச்சான் அமுதன்,
உன் கடிதமும் நீ அனுப்பிய 50000 இலங்கை ரூபாயும் கிடைத்தது. அதை இங்கே மாற்றி 4999 யூரோவாகஎடுத்து கொண்டேன். உனது காலம் கருதிய உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேனோ? எப்போசெய்ய முடியுமோ? தெரியவில்லை மச்சான்.
எங்கட வெசாயில்ஸ் பக்கம் எல்லாம் சண்டைல அழிஞ்சு போச்சு மச்சான். இப்ப இஞ்ச பரிசுக்கு, எங்கடஆக்கள் இருக்கிற லாச்சப்பலுக்கு வந்திருக்கிறன். இஞ்ச ஒவ்வொரு ரோட்டிலும் 90% போல தமிழ் ஆக்கள்கடையள்தான். இப்ப பாதி எரிஞ்சும், ஏரியாமலும் இருக்கிறத பாக்க வயிறு எரியுது மச்சான்.
மச்சான் உண்ட கடிதத்தோட எங்கட பழைய பள்ளிக்கூட முன் வாங்கு நண்பன் படான்ஸ் எழுதினகடிதத்தையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து வச்சிருந்தாய் மச்சான். இந்த மரண அவஸ்தையிலும் அதைவாசிச்சு வாய் விட்டு சிரிச்சன் மச்சான்.
அதுவும் “படான்ஸ் இன்னும் மாறவே இல்லை” எண்ட உன்ர கொமெண்டை வாசித்து விழுந்து விழுந்து சிரிச்சன் மச்சான்.
அவன்ர கதையள் எப்பவும் படான் கதையள் தானே மச்சான். அதானே ஆளுக்கு படான்ஸ் எண்டு பெயர்வச்சனாங்கள்.
ஆனால் அவன் நல்லவன்ரா. சும்மாவே படுத்திருந்து விட்டத்தை பார்த்து விதம் விதமா வாழ்க்கை தத்துவம்பேசுவான், இப்ப ஆரோ ஒரு பின் லாடன் அவனை பிடிச்சு நல்லா உரு ஏத்தி இருப்பான் போல கிடக்கு. வாயதிறந்தா டெத் டு அமெரிக்கா எண்டு கொண்டு திரியிறான். பாவம். கெதில காரை கொண்டுபோய் வெள்ளையள்மேல ஏத்துற அளவுக்கு மாறிடுவானோ எண்டும் பயமாகிடக்கு.
சரி படான்ஸ் சொன்ன விசயங்கள் பற்றி பிறகு விளக்கிறன், அதுக்கு முதல் நீ உக்ரேன் பற்றி அரைகுறைவிளக்கத்தோட சிலதை கேட்டிருந்தாய் அதை ஒருக்காய் பாப்பம்.
மச்சான் - உக்ரேனில் பெண் படையணி இருக்கெண்டு கேட்டிருந்தாய். உண்மைதான். நான் இல்லை எண்டுசொன்னானே? ஆனால் ஆண்களை போல பெருவாரியாக பெண்கள் சண்டைக்கு போகேல்ல மச்சான். கணிசமான பெண்கள் சண்டைக்கு போக பெரும்பாலன பெண்கள், குழந்தைகள் தப்பித்தான் வந்ததுகள். கனஇடங்கள்ள உக்ரேனிய ஆம்பிளையள் சண்டை எண்டதும் போடர் வரை வந்து பிள்ளை குட்டியை விட்டுட்டுதிரும்பிபோனது உண்மை மச்சான். அதே போலதான் உக்ரேன் டிரைவர் மார் உட்பட பல உக்ரேன் புலம்பெயர்ந்தவர்கள் சண்டை பிடிக்க ஊருக்கு போனதும்.
பிறகு அங்க எல்லா ஆண்களுக்கும் கட்டாய சேவை அதுதான் வர முடியாது எண்டும் சொல்லி இருந்தாய். ஓம்இதையும் நான் இல்லை எண்டு சொல்லேல்ல மச்சான்.
ஆனால் தலைவரும்தான் கட்டாயம் ஒராளாவது வீட்டுக்கு வர வேண்டும் எண்டு எங்களிட்ட கேட்டவர்தானே?
நாங்கள் நிண்டனாங்களே? நாளைக்கு சாகப்போற கிழடுகளை பாஸ்-பிணை வச்சிட்டு உச்சி எல்லேஓடியந்தனாங்கள்.
அப்படி உக்ரேன் ஆம்பிளையள் அதிகம் ஓடி வந்திருந்தால் ரஸ்யாவை தடுத்து அடிச்சிருக்க முடியாதுதானேமச்சான். அததான் சொல்லுறண்டா. இனியாவது மேலோட்டமா வாசியாமல் கொஞ்சம் ஊண்டி படி சரியே.
நான் உக்ரேனியனிட்ட எதையோ வாங்கி குடிக்க சொன்னதும் உனக்கு ரோசம் வந்திட்டு போல. ஆனால் நான்சொன்னதுதான் உண்மை மச்சான். உந்த ரோசம் எல்லாம் நாங்கள் ஊரில நிண்டு சிறிலங்காவிட்ட காட்டிஇருக்க வேண்டும்.
சரி இனி படான்ஸ் சொன்னதுக்கு வாறன்.
மச்சான் எமக்கு அடிச்சது எல்லாரும் சேர்ந்துதான் மச்சான்.
நேட்டோவிண்ட சட்டிலைட் படத்த பார்த்து, ரஸ்யன் விமானத்தில, உக்ரேன் விமானிகள், இந்தியா சீனாகொடுத்த குண்டை போட்டவங்கள்.
ஆக எமக்கு அடிக்காதவன், அடிச்சவன் எண்டு இதில் நாம் யார் பக்கமும் எடுக்க முடியாது மச்சான்.
ஆனால் 2ம் உலக யுத்தத்தில் தன்னை அழித்த அமெரிக்காவையே ஆசியாவில் தனது 1ம் நண்பன் என நம்பும்நிலைக்கு கொண்டு வந்த ஜப்பான் மாரி நாங்கள் இவங்களோட டீல் பண்ணி இருக்க வேண்டும் மச்சான்.
இப்படி உலக வெடிப்புகள் வரும் போது அதை சாதுரியமாக தமக்கு சார்பா திருப்பிற இனம்தான் வெல்லும்மச்சான்.
நாங்கள் ஊரில இருந்து ஓடி வந்து கூட்டம் கூட்டமா ரஸ்யாவிலும் பெலரோசிலும் வாழவில்லைதானே மச்சான்?
கிழக்கு ஜேர்மனி போன ஆக்கள் கூட மேற்கு ஜேர்மனிக்கு ஓடி வந்ததை அவை மறக்கலாம், நான் மறக்கேல்லமச்சான்.
ஆகவே ரஸ்யா போல ஊரில் எமது இனத்தின் அழிப்பில் மேற்க்குக்கும் பங்கு இருக்கிறது எண்டாலும், ரஸ்யாவை போல அன்றி புலம் பெயர் தேசம் எங்கும் எமது இனம் தழைக்க, நாம் வாழ்க்கையை கட்டி எழுப்ப, எமது பலத்தை ஒருங்கிணைக்க, உதவியது இந்த நாடுகளும் அவற்றின் ஜனநாயக, பல்லின, சகிப்புத்தன்மைபண்பும்தான் மச்சான்.
இதற்க்கான பிரதியுபகாரம்தான் மச்சான் நான் சொன்ன விசுவாசம். ஆனால் இது நிபந்தனை அற்ற விசுவாசமாக இருக்க தேவையில்லை மச்சான். எம் இன நலன் சார்ந்து இருக்க வேண்டும்.
இரெண்டு தரப்பும் எமக்கு கெடுதல் செய்தாலும் ஒரு தரப்பு கெடுதல் மட்டுமே செய்ய மறுதரப்புஇரெண்டையும் கலந்து செய்துள்ளது மச்சான்.
தவிரவும் உனக்கு ஒண்டு வடிவா விளங்க வேணும் மச்சான். இந்த உலகில் தார்மீகமான வெளியுறவு கொள்கை(ethical foreign policy) எண்டு ஒண்டு இல்லை மச்சான்.
மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ, ஈரானோ, ஏன் சின்னம் சிறு கிரிபாட்டி தீவோ, எல்லா நாடும்தன்னலமான வெளிநாட்டு கொள்கையைதான் (self interest based foreign policy) கைக்கொள்ளுது மச்சான்.
இதில் நல்லவன் கெட்டவன் யாருமில்லை மச்சான். மேற்க்கு மீது வைக்கும் எல்லா குற்றத்தையும், ரஸ்யா மீதும்வைக்கலாம். ரஸ்யா மீதுவைக்க்கும் எல்லா குற்றத்தையும் மேற்க்கு மீதும் வைக்கலாம்.
ஆகவே சும்மா விழலுக்கு நியாயம் பிளக்காமல் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும், ஒட்டு மொத்த உலக தமிழ்இனத்திற்கும் நீண்ட, மத்திய, குறுகிய கால அடிப்படையில் யார் பக்கம் நிற்பதால் இலாபம் என மட்டும்தான்மச்சான் நாங்கள் பார்க்க வேண்டும், பார்க்க முடியும்.
இலங்கை புலம் பெயர் அழுத்தத்துக்கு பயப்படுகிறது எண்டால் அது ரஸ்யாவில இருக்கிற தமிழ் ஆக்களாலயோமச்சான்? இல்லைத்தானே?
இப்ப இந்த உலக யுத்தத்தில ரஸ்யா வெண்டால் - நாங்கள் இனி மொஸ்கோ, விளாடிவொஸ்டொக், சென்பீட்டர்ஸ்பேக் எண்டு போய் (போகவிட்டால்) பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சு, அங்க பரவி, பெற்றோல்செட் வாங்கி, அங்க லோக்கல் எம்பிமார் எங்கட குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அளவுக்கு வளந்து வர எத்தனைபத்தாண்டுகள் பிடிக்கும் மச்சான்? அதுகுள்ள இலங்கையில பிக்குமார் எங்களுக்கு சுண்ணாம்பு தடவிமுடிச்செல்லே இருப்பாங்கள்.
2009 க்கு பிறகு புலம் பெயர் தமிழர் இந்த இனத்தின் பெரிய பலம் எண்டால் - அந்த பலம் தங்கி இருப்பதுஉலகில் நேட்டோ/ மேற்கு மேலாண்மை செய்யும் வரைக்கும்தான் மச்சான்.
இதை விளங்கி கொண்டால் நாம் எந்த பக்கம் நிண்டிருக்க வேண்டும் என்பதை கண்ணை மூடி கொண்டுசொல்லி இருக்கலாம்.
அடுத்து மனிதாபிமானம் பற்றி. மச்சான் உண்மையை சொல்லுறன். ஒரு ஏதிலி தமிழனா நான் செய்ய கூடியதுஇன்னொரு ஏதிலிக்கு அனுதாபப்படுவது மட்டும்தான் மச்சான்.
அது உக்ரேனிய ஏதிலியா இருந்தாலும், டொன்பாசில் இருக்கு ரஸ்ய வம்சாவழி ஏதிலியா இருந்தாலும், ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய, கறுப்பின ஏதிலியா இருந்தாலும் அத்தனை பேருக்கும்இரக்கப்படுவதில், தப்பு ஒண்டும் இல்லைத்தானே மச்சான்.
ஏதோ எங்களில ரஸ்ய, உக்ரேனிய ரத்தம் ஓடுமாப்போல சில தமிழ் ஆக்கள் ஏன் குத்தி முறியினமோ தெரியாதுமச்சான்.
அரசியலுக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் எங்கே துன்பப்பட்டாலும் அதை வெளிகொணரும், அனுதாபப்படும்குறைந்த பட்ச மனிததன்மை கூட எம்மில் சிலருக்கு இல்லை மச்சான். அதை விசிலடிச்சு ஸ்கோர் கேட்டுகொண்டாடியது எல்லாம் வேற லெவல் மச்சான்.
வடிவா கவனிச்சு பார் மச்சான், இப்படி கொண்டாடிய தமிழர்கள் பலர் அநேகம் இலங்கை ஆமி கொக்கு சுடுறதுவக்கோட திரிஞ்ச 85 காலத்துக்கு முதல் ஊரை விட்டு கிளம்பின ஆக்கள்தான்.
அவையள பொறுத்த மட்டில் இது Sony PS 5 இல் அவையளின் பேரப்பிள்ளையள் விளையாடும் Mortal Kombat போல இன்னொரு கேம்.
பதுங்கு குழிக்குள் படுத்திருந்த, மிக் வீசிய குண்டில் உயிரோடு மணலுக்குள் புதைந்து போன நண்பனைவெறும் கையால் கிளறி எடுக்க முனைந்த, நவாலி தேவாலய, செஞ்சோலை சதைகளை கைகளால் கூட்டிஅள்ளிய எந்த தமிழனுக்கும் அதே கொடுமை இன்னொருவனுக்கு நடக்கும் போது ரசித்து விசிலடிக்க மனம்வராது மச்சான். அது ரஸ்யனோ, உக்ரேனியனோ.
கடசியா இவன் படான்ஸ் சொன்ன வெள்ளைகாரனுக்கு சூ (சப்பாத்து) துடைக்கிற விசயம் பற்றி.
மச்சான் ஊரில சொந்த துவக்கை துடைச்சு ஆம்பிளையா, வீரமா, கெத்தா வாழ விருப்பம் இல்லாமல்வெள்ளைகாரன்ர சூ துடைச்சாவது உயிரோட வாழ்ந்தால் போதும் எண்டு ஓடி வந்த ஆள்கள்தானே உடான்சும், படான்சும்? இப்ப திடீரெண்டு அது கசக்குதோ?
நாங்கள் படிக்க, உழைக்க, கார் வாங்க, வீடு வாங்க, பிள்ளை பெற, நோய் வாய்பட்டால் மருந்து தர, இலவசமாக உலகில் முதலாவாதாக வக்சீன் தர, வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஊரில் போய் கும்மிஅடிக்க - இதெல்லாம் செய்யயுறதுக்காக வெள்ளைகாரனின் சூ துடைக்கும் போது எமக்கு உறைக்கவேஇல்லை மச்சான்.
ஆனால் சண்டை எண்டோனதான் மச்சான் நாங்கள் இதுவரை துடைத்து கொண்டிருந்தது வெள்ளைகாரன் சூஎன்று நியாபகம் வருகுது எங்களுக்கு.
அப்ப கூட இன்னொரு வெள்ளைகாரனுக்கு சூ துடைப்பதில்தான் எமக்கு ஆர்வம் மச்சான்.
இதுதான் மச்சான் எங்கட புலம் பெயர் தமிழ் இனம்.
தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவைக்கு ஒரு நியாயம். வாய்க்கு வசதியா புரட்டி புரட்டி கதமட்டும் நல்லா வரும்.
இப்ப சொல்லு உக்ரேனியனியனிடம் இளனி வாங்கி குடியுங்கோ எண்டு நான் சொன்னது சரிதானே மச்சான்.
சரி மச்சான். நாளை மறுநாள் பிரான்ஸ் அகதியளை ஏத்தி கொண்டு ஒரு கப்பல் மார்சேயில் இருந்துசோமாலியா போகுதாம். பாப்பம் இடம் கிடைத்தால் சோமாலியாவில் இருந்து கடிதம் போடுறன்.
நட்புடன்,
அன்பு நண்பன் உடான்ஸ்