அன்றைய காலங்களில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள் சில, (கொழும்பு அல்லாத) சிங்களப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு கூடுதலாக தெரிந்திருக்கும் இவை பற்றி என நினைக்கிறன் 😃 👉 ஜில் போல (மார்பிள் ) - இதில் கூட பல ரகங்கள், விளையாடும் முறைகள் உண்டு
யாருக்காவது இந்த இந்த வார்த்தைகளை ஞாபகம் இருக்கிறதா ?
டொம்பா
ச்சிக்கா
(G)கப்பா
👉 தாராடி -
ஒரு டின்னில் கூழாங் கற்களை போட்டு, அந்த டின்னின் திறந்த முனையை நசுக்கி அடைத்து விடுவார்கள்.
அதை கிலுக்கினால் சத்தம் வரும் இதன் பெயர் தாராடி
""ஹைட் அன்ட் சீக்" விளையாடுவதை போல ஒரு விளையாட்டு. தாராடியை தூற எறிய வேண்டும், தேடுவதற்கு பொறுப்பானவர் ஓடி சென்று அதை பொறுக்கிக்கொண்டு வருவதற்கிடையில் ஏனையவர்கள் எங்கேயாவது ஒளிந்து மறைந்துகொள்வார்கள்.
தாரடியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு எல்லோரையும் தேடி கண்டு பிடிக்க வேணும். ஒருவரின் மறைவிடத்தை கண்டு பிடித்தால் ஓடிச்சென்று அந்த தாரடியை எடுத்து கிளிக்கி அவரின் பெயரை சொல்லவேண்டும்.
உதாரணம் "கோஷன்வ தேக்கா தாராடி", ரதிவ தேக்கா தாராடி " இவர்கள் அவுட். அப்படி தேடும் பொழுது மறைந்து இருந்த யாராவது ஓடி வந்து தாராடியை உதைத்தாலோ, அல்லது கையிலே எடுத்து கிலுக்கினாலோ திரும்பவும் அவரே தேடுதலை முதலில் இருந்து ஆரம்பிக்க வேணும்.
👉 ரப்பர் எட்ட - ரப்பர் கொட்டைகளை மாபிள் போல வைத்து விளையாடும் விளையாட்டு.
👉 டொனிக் மூடி - ஆரஞ் பார்லி , பாண்டா போன்ற குளிர்பான போத்தல் மூடிகளை (சோடா மூடி) தேடி சேகரித்து அவற்றை வைத்து மாபிள் போல விளையாடுவோம். அதிலும் மூடியின் உள்புறத்தில் தார் வைத்தது அழுத்தி பாரமாக ஆக்கி அதனையே "ஸ்ட்ரைக்கராக" பாவிப்போம்.
👉 டின் அடுக்கி விளையாடுவது - 👉 எல்லே - (வெளிநாட்டில் பேஸ் பால் போல ) 👉 பிள்ளையார் - விளக்கம் சொல்லவே கஷ்டமான விளையாட்டு.
இரண்டு அணிகளாக பிரிந்து, ஒரு அணி ஓட , மற்ற அணி பிடிக்க (பந்தால் அடித்து ) அவுட் ஆக்க வேண்டும். பிடிக்கும் அணியில் உள்ள அனைவரும் (டென்னிஸ் பந்தை மார்பு பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு யாரிடம் பந்து இருப்பது என்று தெரியாமல் காட்டிக்கொள்ளாமல் எதிர் அணியின் ஆட்களை பந்தால் அடித்து அவுட் ஆக்க வேண்டும்.
எதற்கு பிள்ளையார் என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை.
இதெல்லாம் நான் அனுர, கபில, பொடி மல்லி, மஹிந்த, ஆஷா, ருவைசா, விக்கி, மனோகர், சுமேத, ரம்யா இவர்களோடு விளையாடிய விளையாட்டு. 😃🙏