Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    8910
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87993
    Posts
  3. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    929
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19139
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/10/23 in all areas

  1. வணக்கம் யாழ் வாசகர்கள், உறுப்பினர்கள், பொறுப்பு சார்ந்தோர் அனைவருக்கும்! 🙏🏾🙏🏾🙏🏾 அகவை 25இல் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கு/கருத்துக்களத்திற்கு வாழ்த்துக்கள்! 💐💐💐 யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர் மதிப்புக்குரிய திரு. மோகன், பங்காளர்கள், இருபத்து ஐந்து வருட காலத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோஒன்றாக பயணித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! 👏🏾👏🏾👏🏾 “சட்ஜிபிடி” (ChatGpt) எனும் செயற்கை நுண்ணறிவை அடித்தளமாக வைத்து இயங்கும் ஒரு தொழில்நுட்ப வசதி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் பாவனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 👍🏾👍🏾👍🏾 நீங்களும் இந்த வசதியை/சேவையை பயன்படுத்தக்கூடும். உங்களைப் போலவே நானும் சட்ஜிபிடியுடன் பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடியுள்ளேன், இதன் வீச்சுக்களை புரிந்துகொள்ள முயற்சித்துள்ளேன். 🤝🏾 சட்ஜிபிடியுடனான எனது எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்கின்றேன். அதேபோலவே நீங்களும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. ✌🏾 📍📍📍 முன்பு ஒரு காலத்தில் எங்கள் ஆட்களிடம் ஒரு தகவலை அறிவது என்றால் சம்மந்தமில்லாத பத்து விசயங்கள் பற்றி அலுக்க அலுக்கபேசி, கடைசியில் சுத்திவளைச்சு அறியப்படவேண்டிய விசயத்துக்குள் செல்லவேண்டும். என்று சமூக ஊடகம் வந்ததோஅன்று தொடக்கம் காலம் தலை கீழாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தேடற்பொறியில் ஒருஆள் பெயரை எழுதி ஒரு தட்டி தட்டி விட்டால் அவர் பற்றிய எல்லா வண்டவாளமும்: நல்லது, கெட்டது, நடந்தது, நடக்கக்கூடாதது எல்லாவற்றையுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறியக்கூடியதாக உள்ளது. தமதுபதினொரு வயசு பிள்ளையின் சாமத்தியவீட்டை யூரிரியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்த காட்சிகள் தொடக்கம் முருகண்டியில் நின்று சோடா குடித்தது வரை அண்ணை கந்தசாமியின் சரித்திரம் ஒளி, ஒலியுடன் இணையத்தில் காண்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் புதிய அறிமுகமான சட்ஜிபிடி பற்றி பார்த்தால்இரண்டு விதமான ஆபத்துக்கள் தெரிகின்றன. ஒன்று:சட்ஜிபிடி ஒரு போதை போல நம்மை தனக்கு அடிமையாக்கக்கூடும். இந்த செயற்பாடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுமெதுவாக நடைபெறும். நாம் அதிக நேரத்தை செலவளிப்பதும் பலவிதமான தேவைகளுக்கு எமது சொந்த ஆற்றலை, சிந்தனையை பயன்படுத்தாது சட்ஜிபிடியிடம் தங்கி வாழவேண்டிய நிலை நடைபெறலாம்/ஏற்படுத்தப்படலாம்/ஏற்படலாம். மற்றையது: நாம் நமது அந்தரங்க விடயங்களை சட்ஜிபிடியுடன் பகிர்ந்துகொள்வது, நமது உள்ளக்கிடக்கைகளை சட்ஜிபிடிக்கு தெரிவிப்பது, நமது உள் அரங்கை சட்ஜிபிடியிடம் காண்பிப்பது தனிமனிதன் எனும் அளவில் நமக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வளவு காலமும் சோசல் மீடியா எனப்படுபவை எமது புற/வெளி தகவல்களைத்தான் பெறுகின்றன/சேகரிக்கின்றன. பிரைவசி/privacy எல்லாம் எவ்வளவு தூரம் ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் பேணுகின்றது என்பது கேள்விக்குறி. இப்போது சட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு பொறி மூலம் வெளியார்/நிறுவனங்கள் எமது அந்தரங்க உலகினை அறியக்கூடிய, எட்டிப்பார்க்கக்கூடிய வாய்ப்பு/ஆபத்துக்கள் உள்ளன. கிடைக்கின்ற எமது தகவல்களை சட்ஜிபிடி உரிமையாளர்கள்/நிறுவனத்தினர்/ஆய்வாளர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது வேறு விடயம். அது வர்த்தக நோக்கத்திற்கோ அல்லது உளவறிதலுக்கோ கூட பயன்படுத்தப்படலாம். ஆனால், எமக்குள் ஊடுறுவல் நடக்கின்றது என்பது யதார்த்தம். எனவே, சமூக ஊடகங்கள் விடயத்திலும் சரி சட்ஜிபிடி விடயத்திலும் சரி எமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், எமது நேரத்தை, ஆற்றல்களை, தனித்துவத்தை காப்பாற்றவும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾 தொடரும்..
  2. உண்மைதான் மனுஷன் கதைத்தே கெடுகிறான்.இருக்கும் கலைத்திறமைக்குரிய பணிவு இல்லை
  3. நாங்கள் கதை பேச்சு வாழ்க்கையை பார்த்தா இளையராஜா பாட்டு கேட்கின்றோம்? இளையராஜா பாடல்கள் அனைத்தும் ஆனந்தம். கேட்க இனிமையாக இருக்கும். எனக்கும் தான் கதைக்க பேச தெரியாது. அதுக்காக நான் கெட்டவனா? இல்லையேல் சமூகத்துக்கு உதவாதவனா? சொல்லுங்கள் சகோதரி மண்டையில் சரக்கு இருக்கிற மனிசனைத்தானே உசுபேத்தியிருக்கிறார்கள். இத்தனை வயதிலும் தளம்பாத இசையும் தளம்பாத எழுத்து நடையும்.....ஆள் ஒரு சுடுதண்ணி பறங்கி அது மட்டும் தான்... இப்போது இளையராஜாவை தவிர எந்த இசையமைப்பாளர்கள் மெலோடி பாட்டு உருவாக்குகின்றார்கள்?
  4. வயசு 80 ஆனாலும் இன்னும் பாட்டு வரி எழுதி, அதுக்கு இசை அமைச்சு அத பாட வேற செய்யுது'னா 🙏 இது Evergreen பீஸ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இசைய தவிர வேற ஏதும் பேசாம இருந்தா நீ இன்னைக்கும் மக்கள் மனசுல ராஜா தான்'யா 😍
  5. நல்ல யதார்த்தமான கதை. நன்றாக இருக்கிறது. இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இன்னும் என்ன தைக்கப்போகிறார்களோ. எல்லாரும் சேந்து....🙄
  6. இங்கே ஒரு வாழ்வு இருந்தது அங்கே ஒரு கதை இருந்தது அதிலும் ஒரு அறம் இருந்தது அப்போ எல்லாம் அழகு இருந்தது வீடு இருந்தது மரம் இருந்தது மரத்தில் பல பறவை இருந்தது பாடி இருந்தது கூடி இருந்தது பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது நிலவும் இருந்தது கனவும் இருந்தது நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது நதி இருந்தது கடல் இருந்தது பூ இருந்தது கனியும் இருந்தது அருகில் எங்கும் ஆலயம் இருந்தது அங்கே ஒலிக்கும் மணி இருந்தது பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது கோவில் இருந்தது சாமி இருந்தது வருடா வருடம் திருவிழா நடந்தது அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது அதை விட அழகு எது தான் இருந்தது அறிவு இருந்தது தேடல் இருந்தது ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது காக்கவென்றொரு தெய்வம் இருந்தது மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் பூவும் ஆட கூந்தலும் ஆட கண்கள் ஆலே கவிதைகள் பேசி சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் காதல் இருந்தது கனிவும் இருந்தது பாசம் இருந்தது நேசம் இருந்தது பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது உண்மை இருந்தது நேர்மை இருந்தது நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது அறமும் இருந்தது தர்மமும் இருந்தது அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது இத்தனை வாழ்வும் எங்கே போனது எத்தனை கனவுகள் வந்து போகுதே இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா எமக்காய் இரவுகள் விடியவில்லையா எங்கே கனவுகள் தொலைந்து போனதா. பா.உதயன்✍️
  7. அதை எழுதும் போதே நீங்கள் மட்டும் தான் வருவீர்கள் என்று நினைத்தேன் ...உங்கள் பதிலுக்கு நன்றி அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட வசதி படைத்த பலர் கொழும்பில் இருந்து அகதியாக்கப்பட்டு வட பகுதிக்கு போய் திரும்பவும் கொழும்பில் வந்து வசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். பலர் உங்களை மாதிரி வெளி நாட்டுக்கு வந்து விட்டார்கள். ஆனால் இதே யாழிலேயே நீங்கள் பார்த்தீர்கள் என்டால் உங்களையும் சேர்த்து இன்னும் ஒரு சிலர் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று பார்த்தால் ஒப்பீட்டளவில் குறைவு . பெரும் பான்மையானோர் இந்த போரை காரணம் காட்டி தங்களை வளப்படுத்தி கொள்ள [அதில் தவறு இல்லை .] இடம் பேர்ந்தார்களே தவிர நாட்டுப் பற்று, புலிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் ..அவர்களை முதன்மையாய் நினைத்தால் குறைந்த பட்சம் மு.வா சண்டையின் போதாவது ஊருக்கு போயிருப்போம். ஏன் கலவரத்தில் பாதிக்கப்படட அனைவரும் போய் புலியில் சேராமல் நாட்டை விட்டு ஓடினார்கள் ?...தாங்கள் மட்டும் தப்பினால் போதும் என்று தானே!!...எல்லாருக்கும் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கனவு இருக்கிறது ...அதற்காய் உண்மையாய் போராடி மடிந்தவர்கள் சிலர் தான்
  8. படம் அருமை . வேர் என நான் இருந்தேன் நீ வீழ்ந்துவிடாதிருக்க .
  9. நல்லதொரு பாட்டு விகே ராமசாமி எந்த பாத்திரம் கொடுத்தாலும் திறமையாக செய்வார்.
  10. எத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது........! 🙏
  11. ரணிலின், உலக... மகளிர் தின கொண்டாட்டம் 😂
  12. உங்கள் பழைய வாழ்க்கை, மீட்டுத் தரப்படும். 🤣
  13. இது, என்ன கோதாரியாய்... கிடக்கு. 🤣
  14. ஸ்ரோபெரி (Strawberry) பழத்தின், வளர்ச்சிப் படிகள். 👍 😂
  15. இந்த மரத்தின் பிரமாண்டத்தை, நீங்களே... கற்பனை பண்ணிப் பாருங்கள்.
  16. திரும்பும் வரலாறு- பாகம் 5 டன்கர்க் 1940, மே மாதம் 10 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் தரைப்படைகள் பிரான்சினுள் சடுதியாக ஆக்கிரமித்து ஊடுருவின. பிரான்ஸ் தரப்பில் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுத் தரைப்படையினர், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ் இராணுவம் (British Expeditionary Force), சில பத்தாயிரம் பெல்ஜியம், கனேடியப் படையினர் என பெரும் இராணுவ அணியை நாசிகள் டன்கர்க் எனும் வட கிழக்கு பிரான்ஸ் கடற்கரையோர நிலப் பரப்பில் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புகளற்ற கடற்கரை வெளியில் சிக்கிக் கொண்ட நான்கு இலட்சம் வரையான இப்படைகளை, நாசி விமானங்கள் இடைக்கிடை குண்டு வீசிப் பெரும் உயிர்ச்சேதமெற்படுத்தின. கடல்வழியாக இந்தப் படைகளில் ஒரு பகுதியினரையாவது மீட்டெடுக்கும் முயற்சியாக ஒபரேசன் டைனமோ மே 26 இல் ஆரம்பிக்கப் பட்டு, அடுத்த ஒரு வாரத்தினுள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ், பிரெஞ்சு, கனேடிய படையினர் டோவர் நீரிணையின் வழியாக மீட்கப் பட்டனர். கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். சமாதானப் புறாக்கள் 1940 ஜூன் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாசிகளிடம் சரணடைந்து 80% ஆன பிரான்ஸ் நிலப்பரப்பை நாசிகளிடம் ஒப்படைத்தது. இவ்வாறு பிரான்ஸ் சரணடைவதற்கு முன்னர், நாசிகள் பாரிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரான்ஸ் அரச தலைவர்களை பிரான்சிலேயே நேரடியாகச் சந்தித்து தொடர்ந்து போராடும் படி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இந்த வலியுறுத்தலின் காரணங்கள் பல. பிரான்ஸ் வீழ்ந்து விட்டால் கடல்வழியாக பிரிட்டனை நாசிகள் ஆக்கிரமிக்க அதிக காலம் எடுக்காது. அத்துடன், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நாசி விமானங்கள் பறக்க வேண்டிய தூரமும் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, பிரான்சின் பாதுகாப்பு என்பது இங்கிலாந்தின் பாதுகாப்புத் தான் என்பது தெளிவு. எனவே, இறுதியில் பிரான்ஸ் வீழ்ந்த போது, அடுத்த நாசி இலக்கு இங்கிலாந்து தான் என்பது சேர்ச்சிலுக்கு மட்டுமன்றி பிரிட்டன் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஹிற்லர் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை உடனே வழங்கவில்லை. ஏன்? ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாசிகள் தம் ஒவ்வொரு எதிரிகளையும் ஒவ்வொரு தரத்தில் வைத்திருந்தனர். யூதர்களும், றோமாக்களும் கரப்பான் பூச்சிகள், ரஷ்ய சிலாவிக் மக்கள் "கீழ் நிலை மனிதர்கள்" என வெவ்வேறு தரங்களில் பார்த்தனர் (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). ஹிற்லர், பிரித்தானியர்களை, ஜேர்மனிய ஆரியர்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நாகரீக இனமாகப் பார்த்தார். எனவே, இராணுவ ரீதியில் தாக்காமலே அவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தார். ஹிற்லர் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு இங்கிலாந்து சமாதானத்தைப் பேண வேண்டுமென வாதிட்ட எட்வேர்ட் மோஸ்லி (இவர் பிரிட்டன் பாசிச யூனியன்- British Union of Fascists எனும் அமைப்பின் தலைவர்), டியூக் ஹமில்ரன் (Duke of Hamilton) போன்ற சிலரும் பிரிட்டனில் இருந்தனர். சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். வளையாத கருங்கல்! "கருங்கல் உடையும், வளையாது!" எனும் புதுவையின் வரிகளின் பிரதிபலிப்பாக, வின்ஸ்ரன் சேர்ச்சில் நாசிகளோடு பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பேயில்லையென மறுத்து விட்டார். பிரிட்டன் பாராளுமன்றிலும் சரி, பொது மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றும் உரைகளிலும் சரி, சேர்ச்சிலின் உரைகள் இரு பகுதிகளைத் தவறாமல் கொண்டிருந்தன. ஒன்று: எந்த நிலையிலும் பிரிட்டன் சரணடையாது போராடும் என்ற உறுதி, இரண்டு: இந்தப் போராட்டம், பிரிட்டன் மக்களுக்கு ஒரு கொடிய நரகமாக இருக்கும் என்ற யதார்த்தம். இது ஒரு அற்புதமான செயல்திறன் மிக்க உளவியல் நுட்பம். எதிர் கொண்டு வரும் கடின நாட்கள் பற்றிய உண்மையை மீள மீளச் சொல்லி விட்டால், மக்கள் பூப்படுக்கையை எதிர்பார்க்காமல் இருப்பர், ஏமாற்றம் கொள்ளாமல் காரியத்தைப் பார்ப்பர். அதே வேளை நம்பிக்கையை இழப்பது மட்டும் நடக்கக் கூடாதென மனதில் ஊன்றி விடுதல் மூலம், போராட்டக் குணத்தைத் தக்க வைத்தல். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ரத்தின சுருக்கமாக சேர்ச்சில் சொன்ன ஒரு வாக்கியம்: “If you are walking through hell, keep walking!” "நரகத்தினூடு நடக்க வேண்டியிருக்கிறதா? நடந்து கொண்டேயிருங்கள்!" காத்திருந்த கழுகுகள் மறு கரையில் நாசி ஜேர்மனியில், பி.பி.சி வானொலியைத் தவறாமல் கேட்ட படி சமாதான சமிக்ஞைக்காகக் காத்திருந்த நாசிப் பிரச்சார பீரங்கி கோயபல்ஸ் பிரிட்டனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் நெருங்கி விட்டதாக தன் டயரியில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் சரணடைவை விரைவாக்கும் "லங்காபுவத்" பாணி பிரச்சார நடவடிக்கைளும் கோயபல்சால் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இன்று இணையவழியில் ரஷ்யாவின் அரச அமைப்புகள் பொய்ச்செய்திகளையும், எதிர் நாட்டில் பிரிவினையூட்டும் போலி ஆய்வுகளையும் கசிய விடுவது போல, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த மக்கள் தொடர்பாடல் ஊடகமான வானொலி மூலம் நாசிகள் பிரச்சாரம் செய்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலிருந்து ஆங்கில மூலத்தில் இந்தப் பிரச்சாரங்கள் ஒலிபரப்பாகின. ஹிற்லரின் உள்வட்டத்திலேயே பிரிட்டனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் ஒரு காரணம், யார் தலைமை நாசியான ஹிற்லரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பதில், ஹிற்லரின் கூட்டுக்களிடையே இருந்த கடும் போட்டி. ஹிற்லரின் நம்பர் 2 ஆக இருந்த ருடோல்f ஹெஸ் சமாதானம் பேச வேண்டுமென்று வலியுறுத்தினார் (பின்னர் அவரே ஒரு விமானத்திலேறி ஸ்கொற்லாந்துக்குப் பறந்து போனது இன்னொரு சுவாரசியமான கதை!). கோயபல்ஸ் உள்பிரிவினையால் பிரிட்டனையும் சேர்ச்சிலையும் பலவீனப் படுத்திய பின்னர் கடல்வழியாக ஆக்கிரமிக்க வேண்டுமென்றார். நாசி விமானப்படையின் தலைவரான கோறிங், ஒரே வாரத்தில் தன் விமானப் படையின் தாக்குதல்களால் பிரிட்டன் அடி பணியும் என்று ஹிற்லருக்கு நம்பிக்கையூட்டினார் (மூன்று நாட்களில் உக்ரைனின் கியேவ் விழும் என்று வாக்குறுதி கொடுத்த ரஷ்ய இராணுவத் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). இறுதியில், கோறிங்கின் இந்த வான்வழித் தாக்குதல் தான் பிரிட்டனை அடிபணிய வைக்கும் வழியென ஹிற்லர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தார். கழுகின் நாள்! பிரான்சின் வடக்குக் கரையோரத் தளங்களிலிருந்து கிளம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட, பல வகை நாசி விமானங்களை உள்ளடக்கிய விமான அணி இங்கிலாந்தை நோக்கி முதலில் தாக்குதல் செய்ய ஆரம்பித்தது 1940, ஆகஸ்ட் 13. இந்த முதல் நாளை கோறிங் "கழுகின் நாள்- Eagle Day (Adlertag)" என்று பெயரிட்டு தயார் செய்து கொண்டிருந்த போது, பேர்லினில், பிரிட்டன் தோற்ற வெற்றிப் பேரணியைக் கொண்டாடும் அலங்கார வேலைகளை இன்னொரு நாசிக் குழு செய்ய ஆரம்பித்திருந்தது. அவ்வளவுக்கு, தனது விமானத் தாக்குதலால், சில நாட்களில் பிரிட்டன் சுருண்டு விடும் என்று நம்பினார் கோறிங். ஆனால், முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. பிரிட்டனின் மீதான மோசமான வானிலையும், றோயல் விமானப் படையின் எதிர்த்தாக்குதலும் சேர்ந்து, இலக்குகளை அடையாளம் காணாமலே குண்டுகளை வீசி விட்டுத் திரும்ப வேண்டிய நிலை நாசி விமானங்களுக்கு ஏற்பட்டது. ஆனால், நான்கு நாட்களில் றோயல் விமானப் படையை அழித்து விடுவோம் என்று உறுதியெடுத்த கோறிங், தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை, எனவே படை படையாக நாசி விமானங்களை இங்கிலாந்தின் வான்பரப்பினுள் அனுப்பும் அணுகுமுறை தொடர்ந்தது. அடுத்த சில நாட்களில், இந்தப் பகல் நேர நாசி விமானத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, இரவில் பேர்லின் மீதும் றோயல் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குமளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தன. இரவு நேரம், நிலாக் காலம்! நாசி விமானப் படை ஒரு புதிய நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது. பகலில், றோயல் விமானப் படையின் விமானங்கள் நாசி விமானங்களை வானில் எதிர் கொண்டு தாக்குவதைத் தவிர்க்க, இரவுகளில் பிரிட்டன் மீதான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். றோயல் விமானப் படையின் சண்டை விமானங்களில் ரேடார் வசதிகள் இருக்கவில்லை. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளாலும் இரவில் குறி பார்த்துச் சுட இயலாது. ஆனால், நாசி விமானங்கள் இரவிலும் தரையில் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்க இயலும், இதற்கு ரேடார் அவசியமில்லை. எனவே, நிலா வெளிச்சம் நிரம்பிய இரவுகள், பிரிட்டன் நகரங்களுக்கு நரக நாட்களாக மாறின. இரவு நேர நாசி விமானத் தாக்குதல்களால் எரிந்து சிதைந்த இலண்டன் பொதுக் கட்டிடங்கள். பட உதவி: நன்றியுடன் அமெரிக்க ஆவணக்காப்பகம். நிலா வெளிச்சமில்லா நாட்களில் கூட நாசிகள் துல்லியமாக கட்டடங்களையும், இலக்குகளையும் தாக்குவதற்கு ஒரு வானலைத் (Radio beacon) தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள் ஓடுபாதைகளில் துல்லியமாகத் தரையிறங்குவதற்கெனப் பயன்பாட்டிலிருந்த லொறென்ஸ் (Lorenz) தொழில்னுட்பத்தை செம்மைப் படுத்தி சில நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் இலக்குகளை அடையாளம் காண நாசிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள். அனேக உயிர், உடைமைச் சேதங்கள் பிரிட்டனில் இந்த இரவு நேரத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன. ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், இலண்டன் நகரை நாசிகள் தொடாமல் விட்டிருந்தது, சேர்ச்சில் மனம்மாறி நாசிகளுடன் சமாதானம் பேச வருவார் என்ற நம்பிக்கையினால். அந்த நம்பிக்கை இப்போது சேர்ச்சிலின் வானொலி உரைகளால் தகர்ந்து விடவே, 1940 செப்ரெம்பர் 7 இல் முதன் முறையாக இலண்டன் நகரமும் நாசிகளின் இரவு நேரத் தாக்குதலுக்குள்ளானது. ஒரு இரவில், மத்திய இங்கிலாந்திலிருக்கும் கொவென்ட்றி நகரத்தின் மீதான தாக்குதலில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 1940, செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல், 1941 மே 11 வரையிலான எட்டு மாத காலம், செறிவான நாசி விமானத் தாக்குதல்களை இலண்டன் உட்பட்ட நகரங்கள் எதிர் கொண்டதில், மொத்தம் 44, 652 மக்கள் பலியானார்கள். இவர்களுள் 29,000 பேர் இலண்டனில் பலியானார்கள். பிரித்தானியாவில், நாசி விமானத் தாக்குதல்களால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,626. ஏமாற்றம், திசை மாற்றம்! 1940 டிசம்பரில், ஹிற்லர் பிரிட்டனின் வீழ்ச்சிக்காக இனிக் காத்திருக்கப் போவதில்லையெனத் தீர்மானித்து, தனது தளபதிகளுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்: "கேஸ் பார்பரோசா (Case Barbarossa)" எனும் சங்கேதப் பெயர் கொண்ட அந்த ஆணை, சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறும் திட்டங்களை வரையுமாறு கட்டளையிட்டது. இந்தத் திட்டம், ஒப்பரேசன் பாபரோசாவாக 1940 ஜூன் மாதம் ஆரம்பித்தமை தான், பிரிட்டன் மீதான நாசி விமானப் படையின் தாக்குதல்கள் ஒரு ஆளியைச் சொடுக்கியது போல நின்று போகக் காரணம். இதை பாகம் 7 இல் விரிவாகப் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னாகப் பார்க்க வேண்டியது: நாசிகளின் கொடிய விமானத் தாக்குதல்களால் பிரிட்டன் துவண்டு விடாமல் காத்தது சேர்ச்சில் மட்டுமா? இந்தத் துவழாத பிரிட்டனின் தூண்களாக இருந்த இரு தரப்பினர் பற்றி அடுத்த பாகத்தில் பேசலாம்! - தொடரும்
  17. இல்லை அண்ணா. நண்பியும் தங்கச்சியும் நடக்க வரமாட்டார்கள். நானும் நாயும் தான் நடை.
  18. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(4). பிறிதொருநாள் சுமதி வெளியில் இருந்து தனது வீட்டுக்குள் வரும் போது அங்கு அவள் கணவன் சுரேந்தருடன் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் கதைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.அவளும் அவர்கள் தனது கணவனின் நண்பர்கள் என நினைத்துக் கொண்டு அவர்களுக்கு bonjour (வணக்கம்) சொல்கிறாள்.திரும்பி அவள் உள்ளே போக எத்தனிக்கையில் சுரேந்தர் அவளை அழைத்து இவர் எனது வேலையிடத்து சக நண்பர்.எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இந்தப் பெண் மிருதுளா இவரது மருமகள் என்று சொல்ல அவர்களும் சுமதிக்கு bonjour சொல்கின்றனர். தொடர்ந்து இவாவும் இங்கு தையல் வகுப்புகளுக்கு போயிருக்கிறா. மற்றும் புடவைக் கடைகளில் விற்பனைப் பகுதியில் வேலைசெய்த அனுபவமும் இருக்கு என்று சொல்ல சுமதியும் மிருதுளாவைப் பார்க்கிறாள். அவள் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறாள். வயதும் ஓரு இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். சரளமாக பிரெஞ்சும் கதைக்கிறாள்.......அவர்களும் இவர்களின் கடையில் வேலை கேட்டுத்தான் வந்திருந்தார்கள். மிருதுளாவுடன் கதைத்த சிறிது நேரத்திலேயே அவள் கடையை நிர்வகிக்கக் கூடிய ஆளுமையான பெண் என்று சுமதி புரிந்து கொள்கிறாள். சுமதி ஆண்களைப் பார்த்து நீங்கள் சற்று நேரம் கதைத்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு, மிருதுளாவைக் கூட்டிக் கொண்டு தான் தைக்கும் மிசின் உள்ள அறைக்குப் போகிறாள்.அங்கு அவள் ஒரு ப்ளவுஸ் துணியையும் அதை கத்தரித்து தைக்க வேண்டிய அளவுகளையும் குடுத்து இதை இப்போது உன்னால் வெட்டித் தைக்க முடியுமா என்று கேட்க, மிருதுளாவும் ஓம்....டிசைனை சொல்லுங்கள் என்று எதுவித பதட்டமுமின்றி சொல்கிறாள். உடனே சுமதி அவளிடம் இது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியுடையது,ஒரு நாற்பது வயதிருக்கும். அளவுகளைப் பார்த்தாலே உனக்குப் புரியும். அவவுக்கு கொஞ்சம் பெரிய மார்புகள். நார்மலா சிறிது கீழிறங்கி இருக்கும். அதனால் ப்ளவுசில் அவை எடுப்பாக இருப்பதுபோல் "கப்" வைத்து தைக்க வேண்டும். அவவுக்கு இடுப்பிலும் சிறிது சதை போட்டிருக்கு, அதற்கேற்றாற் போல் கீழ்ப்பட்டி 5 செ.மீ அகலமாயும் இருக்கட்டும். மற்றது பின்பக்கம் பிரா லேஸ் மட்டத்துக்கு ஓப்பனாக இருக்கட்டும். கழுத்தடியில் குஞ்சம் வைத்து ஒரு நாடா தைத்து விடு. கவனம் இது அவ நாளைக்கு ஒரு திருமணத்துக்கு போடுவதற்காக கொண்டு வந்து தந்தவ. நல்ல ரிச் லூக்கா இருக்க வேண்டும். --- நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தடித்த துணியில் உள்ளே லைனிங் வைத்து "கப்" எடுப்பாக இருக்கும்படி தைக்க வேண்டும். முக்கியமான இடங்களில் "ஷி துரூ" வாகவும் இருக்க வேண்டும். ..... ஓம் அப்படித்தான், லைனிங் துண்டும் மேசையில் இருக்கு, நீங்கள் வேலை செய்யுங்கோ, நான் போய் முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கிளம்பும் பொழுது மிருதுளாவும் அந்த சில்க் துணிக்கேற்றவாறு மிசின் ஊசி மற்றும் பொபின் இலக்கங்களை சரிசெய்கிறாள். அதை பார்த்த சுமதியும் திருப்தியுடன் ம்......இவளிடம் கொஞ்சம் விசயம் இருக்கு என்று நினைத்துக் கொண்டு கதவைச்சாத்தி விட்டு போகிறாள்......! சற்று நேரத்தின் பின் சுமதி தன்னை சிறிது அலங்கரித்துக் கொண்டு ட்ரேயில் நான்கு கோப்பியும் சீனிக்கட்டிகளும் சிறிய கரண்டிகளுடனும் வந்து ஆண்களிடம் இரண்டைக் குடுத்து விட்டு அறைக்குள் சென்று மிருதுளாவுக்கும் கோப்பியை வைக்கும் போது அவளும் அந்த ப்ளவுசை தைத்து முடித்து அங்கிருந்த பொம்மைக்கு அதை அணிவித்து பினிஷிங் வேலையை செய்து கொண்டிருந்தாள். சுமதிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. தான் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு சிறப்பாக வேலை செய்திருந்தாள். மேலும் தன கற்பனையையும் செலுத்தி தேவையான இடங்களில் பொன் நிற லேஸ்சும் சின்ன முத்துக்களும் தைத்திருந்தாள். பின் இருவரும் கோப்பியை அருந்திவிட்டு கதைத்துக் கொண்டு ஹாலுக்கு வருகின்றார்கள்.......! இன்னும் தைப்பார்கள்.........! 🦺
  19. திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.