Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20019
    Posts
  4. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/10/23 in all areas

  1. அமிர்தலிங்கத்தின் முதுகில் சவாரிசெய்த ஜெயார் தமிழர் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெல்வதற்கு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவேண்டும் என்று ஜெயவர்த்தன தன்னிடம் கேட்டபோது அமிர்தலிங்கம் குழம்பிப் போனார். "உங்களுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றனவே?தேர்தல் பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?" என்று அமிர்தலிங்கம் ஜெயாரைப் பார்த்துக் கேட்டர். "தேர்தல்களை முன்னோக்கிக் கொண்டுவருவது பற்றிச் சிந்திக்கிறேன். இவ்வருட இறுதியில் தேர்தலை நடத்தும் எண்ணம் எனக்கிருக்கிறது" என்று தனது திட்டத்தை விளக்கினார் ஜெயார். தனது சூழ்ச்சித் திட்டம் குறித்தும் ஜெயார் அங்கு பேசினார். தான் இலங்கையினை கடந்த 5 வருடங்களாக ஆட்சி செய்து வருவதாகவும், பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார். திறந்த பொருளாதாரக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயங்களின் ஆரம்பம், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினை துரிதப்படுத்தியமை, மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் உருவாக்கம் என்று பலவிடயங்களை அவர் சுட்டிக் காட்டினார். ஆகவே, இந்தச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு மக்களின் அனுமதி தனக்கு வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், நமட்டுச் சிரிபுடன் தொடர்ந்த ஜெயார், "நான் என்னைப் பலப்படுத்திக்கொண்டாலே, மாவட்ட அபிவிருத்திச் சபைகளையும் பலப்படுத்த முடியும்" என்றும் அவர் கூறினார். 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் என்னுடன் இதுகுறித்துப் பேசுகையில், ஜெயார் தன்னைப் பகடைக்காயாகப் பாவித்து தனது அரசியல் சித்துவிளையாட்டுக்களை மேற்கொண்டுவருவது தனக்குத் தெரியும் என்று கூறினார். இதன்போது ஜெயார் தன்னிடம் முன்வைத்த கோரிக்கை தொடர்பாகவும் அமிர்தலிங்கம் பேசினார். தேர்தலில் ஜெயவர்த்தனவுக்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் வழங்கப்படும் ஆதரவு இரகசியமாகப் பேணப்படவேண்டும் என்றும், அவ்வாறு பேணப்படாதவிடத்து சிங்கள பெளத்தர்களின் வாக்குகள் தனக்குக் கிடைக்காது சென்றுவிடும் என்றும் ஜெயார் தன்னிடம் கூறியதாக அமிர்தலிங்கம் கூறினார். ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிகள் தொடர்பான சரியான தெளிவினை அப்போது அமிர்தலிங்கம் பெற்றிருந்தார் என்று கூறமுடியும். இச்சூழ்ச்சிகள் சில குறித்து அமிர் என்னிடம் முன்னர் பேசியிருக்கிறார். அப்படியானதொரு சூழ்ச்சியை கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் ஜெயார் பாவித்திருக்கிறார். இப்பேச்சுக்களின்போது அரசியலமைப்பின் பிரகாரம் தமிழ் மொழி தொடர்பான உரிமைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று அமிர் ஒருமுறை ஜெயாரிடம் முறையிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஜெயார், "சிங்கள அமைச்சர் ஒருவரை மொழிதொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லிக் கோருவதே எனக்குப் பிரச்சினையாக இருக்கிறது. தமது அரசியல் எதிர்காலத்தை இப்படியான நடவடிக்கை பாதித்துவிடும் என்று அவர்கள் இயல்பாகவே அச்சப்படுவதால், இதனைச் செய்ய அவர்கள் விரும்புவதில்லை. நீங்கள் உங்களின் மன்னார் மாவட்ட உறுப்பினர் சூசைதாசனை எனக்குத் தருவீர்களாகவிருந்தால், அவரைக்கொண்டு தமிழ் மொழி தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை நடைமுறைப்படுத்திவிட முடியும்" என்று கூறியிருக்கிறார். ஜெயார் இங்கே வைக்க எத்தனித்த பொறியை அமிர் உடனடியாகவே உணர்ந்து கொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதாகக் காட்டவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆகவே, முன்னணியின் உறுப்பினர் ஒருவரை தமிழ் மொழிக்கான உரிமை தொடர்பாகச் செயற்பட வைத்து, தோற்கடித்துவிட்டால், அதற்கான பழியினை தமிழர்கள் மீதே போட்டுவிடலாம் என்று ஜெயார் எண்ணியிருந்தார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இளைஞர்களுக்கும் இடையே உருவாகிவந்த பிளவினை மேலும் ஆளமாக்கமுடியும் என்றும் ஜெயார் நம்பினார். இதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அமிர்தலிங்கம், "இதைப் பார்க்கும்போது எனது மனைவியை உங்களுக்குக் கடனாகத் தந்துதவ முடியுமா என்று நீங்கள் கேட்பதைப்போல் உள்ளது" என்று கூறினார். ஜெயார் தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை அமிர் கண்ணியமாக மறுத்துவிட்டார். ஜெயாரிடம் பேசிய அமிர், தம்மீது ராணுவமும் பொலீஸாரும் நடத்திவரும் தாக்குதல்களால் தமிழர்கள் மிகுந்த அதிருப்திகொண்டிருக்கிறார்கள். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நீங்கள் இன்றுவரை நடைமுறைப்படுத்த மறுத்துவருவது குறித்தும் அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். ஆனாலும், ஜெயாரோ விடுவதாயில்லை. தனக்கு ஆதரவளிக்க முடியாவிட்டாலும்கூட, ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போட்டியிடக் கூடாதென்று கேட்டுக்கொண்டார். இதனால், வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள் தனக்கே வக்களிப்பார்கள் என்று அமிர்தலிங்கத்திடம் கூறினார் ஜெயார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜெயாருக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இடையே நடைபெற்ற சம்பாஷணை குறித்து ஜெயாரின் சரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹவார்ட் ரிக்கிங்க்ஸ் ஆகியோர் பின்வருமாறு கூறுகிறார்கள், "1982 ஆம் ஆண்டு, ஐப்பசி மாதம் 20 ஆம் திகதியில் நடத்துவதாக நிரணயிக்கப்பட்டிருந்த தேர்தலினை, தனது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் தொடர்ச்சியாகவே ஜெயார் கருதிச் செயற்பட்டிருந்தார். இத்தேர்தல் பிரச்சாரத்தில், பலத்தை மூலதனமாகக் கொண்டே அவர் ஈடுபட்டிருந்தார். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின்பொழுது, தனது தேர்தல் நண்பர்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு ஜெயாருக்கு இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் தனக்கு ஆதரவு தரும்படி ஜெயார் கேட்டபோது, அமிர்தலிங்கம் அதனை கண்ணியமாக நிராகரித்திருந்தார். ஆனால், தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது எனும் உத்தரவாதத்தை அமிர் ஜெயாருக்கு வழங்கினார். ஜெயாரைப் பொறுத்தவரை இது திருப்திகரமான முடிவாக அமைந்தது" என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலினை குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் நடத்துவதன் காரணத்தை ஜெயார் அமிருக்குச் சொல்லவில்லை. ஜெயாரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான இளைய அமைச்சர்களான காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும், பாராளுமன்றத்தில் ஜெயாருக்கு இருந்த 5/6 பெரும்பான்மையினைத் தக்கவைக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தனர். கடந்த ஐந்து வருடங்களாக பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும், பலத்தினையும் நன்கு அனுபவித்த ஜெயார், அதனை 1983 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தல்களில் இழக்க விரும்பவில்லை. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் ஜெயார் கொண்டுவந்திருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலமான பாராளுமன்ற ஆசனப் பகிர்வு, தனக்கு அடுத்துவரும் தேர்தல்களில் அறுதிப்பெரும்பான்மையினை தராது என்பதை ஜெயார் நன்கு உணர்ந்தேயிருந்தார். ஆகவே, தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள, 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் உருவாக்கப்பட்ட பாராளுமன்றத்தை இன்னும் ஆறு வருடங்களுக்கு அவர் நீட்டிக்க விரும்பினார். இதனை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் செய்ய அவர் விரும்பினார். ஆகவேதான், சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதற்கு, தனது ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை இன்னும் 6 வருடங்களுக்கு தொடரவேண்டும் என்று அவர் நினைத்தார். பாராளுமன்றத்தில் நான்கில் ஐந்து பெரும்பான்மை அவருக்குக் கிடைத்ததையடுத்து, பாராளுமன்றம் மீதான முற்றான அதிகாரத்தைத் தனதாக்கிக் கொண்ட ஜெயார், தனது பலத்தைப் பாவித்து தனது எதிரிகளை பலவீனப்படுத்தி, முற்றாக அழித்துவிடும் கைங்கரியங்களில் இறங்கினார். 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின்படி பிரதமரே நாட்டின் அதிகாரம் பொறுத்ந்திய தலைவர் எனும் நடைமுறையினை 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்று, அரசியல் அமைப்பை மாற்றியமைத்து 1978 ஆம் ஆண்டு மாசி 4 ஆம் திகதி, ஜனாதிபதி பதவியினை நாட்டின் நிறைவேற்று அதிகாரம் மிக்க தலைவராக உயர்த்தியதுடன், நாட்டின் முதலாவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். தனக்குப் புதிதாகக் கிடைத்த அதிகாரத்தினைப் பாவித்து தனது அரசியல் எதிரியான சிறிமாவை அரசியலில் இருந்து விரட்டியடித்தார். பின்னர், மேன்முறையீட்டின்மூலம் சிறிமாவை அரசியலிலிருந்து விலத்தியது தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தனது பாராளுமன்றத்தைக் கொண்டே தோற்கடித்தார். மேலும், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கான அதிகாரங்களை அரசியலமைப்பின் திருத்தங்கள் மூலம் அதிகப்படுத்தி, நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் ஜனாதிபதி ஆணைக்குழுக்களைக் கட்டுப்படுத்தாதபடி பார்த்துக்கொண்டார்.
  2. மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திருந்தார்.மகள் ஸ்கீனிங் என்று காலில் பூட்டி இரண்டு தடி ஊன்றி சறுக்கி விளையாட வாடகைக்கு எடுத்தா. https://www.facebook.com/100051745984442/posts/pfbid0yrWfidKdNxtry1VWyEt8Ynj8RbJhqmgSVTGNDGLAu9TW2XQZ45DAdzJz8cwUt732l/ நாங்கள் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் எல்லோர் விளையாட்டுக்களையும் பார்த்து ரசித்தோம்.பலர் சறுக்கி வரும்போது பலதடவை கரணம் அடித்து விழுந்து எழும்பி திரும்பவும் சறுக்கினார்கள்.சிலரைப் பார்த்தா வேணும் என்று சறுக்கி விழுந்த மாதிரியே இருந்தது.நீண்ட நேரம் நிறக முடியவில்லை.குளிர் காற்று எப்படி மூடிக் கட்டினாலும் குளிரவே செய்தது.குழந்தைகள் வேறு பனிக்குள் விளையாடி ஆளாளுக்கு தலையெல்லாம் பனி அள்ளிக் கொட்டி நனைந்து போனார்கள்.மெதுவாக பக்கத்தில் இருந்த சிற்றுண்டிச்சாலைக்கு போய் பீச்சா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஏறத்தாள 2 மணிநேரம் சறுக்கி விளையாடி முடிந்து களைத்துப் போய்வந்தார்கள்.மீண்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சுகமாக வீடுவந்து சேர்ந்தோம். முற்றும்.
  3. போனதுதான் போனீர்கள். நீங்களும் ஒருமுறையாயினும் சறுக்கிப்பார்த்திருக்கலாம் அண்ணா
  4. அமிர் சில விடயங்களை வேண்டுமென்றே செய்ததாக நான் நம்பவில்லை. இந்திய இலங்கை அதிகாரவர்க்கத்திற்கின் அழுத்தங்களே அவரை தமிழர் விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளித்தள்ளின என்று நினைக்கிறேன். எமது விடுதலைக்காகப் போராடிய முக்கியமான ஜனநாயகப் போராளிகளில் அவரும் ஒருவர் என்றே படுகிறது.
  5. நல்லதொரு ஜாலியான தொடர்........! 👍
  6. அமிர்தலிங்கம் ஜே ஆரிற்கு ஏற்ப சாதுரியமாக நடந்துள்ளார், இதுவரை காலமும் இவர் தொடர்பாக அறியாமையினால் கொண்டிருந்த தோற்றபாட்டிலிருந்து வித்தியாசமாக உணரமுடிகிறது.
  7. சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.
  8. ஒப்பந்த மீறல்களும் ஏமாற்றுதல்களும் ஜெயவர்த்தனவுடனான 11 மாதகாலப் பேச்சுவார்த்தைகள் மூலம் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஆனால், இப்பேச்சுக்களின் மூலம் சில நிவாரணங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 1977 மற்றும் 1981 அரச வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான நிவாரணம், தமிழ்பேசும் பொலீஸ்காரர்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றுதல், வவுனியா மாவட்டத்தில் எல்லைகளை மாற்ற அரசாங்கம் எடுத்துவந்த முயற்சிகளை தற்காலிகமாகவேனும் நிறுத்திவைத்தல் ஆகிய விடயங்களை முன்னணியினரால் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அரசாங்கம் ஒத்துக்கொண்டதுபோல மாவட்ட அதிகார சபைகளுக்கான அதிகாரங்களையோ அல்லது இச்சபைகள் இயங்குவதற்கான நிதியினையோ அரசு ஒருபோதுமே கொடுக்க விரும்பவில்லை. மேலும், அரசியலமைப்பில் கூறப்பட்ட தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, நிலங்களைப் பாவித்தல் மற்றும் நிலப் பங்கீடு, சட்ட அதிகாரங்கள் என்று எவற்றையுமே அரசு நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் கூறப்பட்ட தமிழர் தொடர்பான எந்தவிடயங்களையும் நடைமுறைப்படுத்த அரசு மறுத்துவருவது தொடர்பாக அமிர்தலிங்கம் பலமுறை ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தார்.ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதங்களில் ஒன்று இவ்வாறிருந்தது, "1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி உங்களது அரசாங்கம் தமிழ் மொழிக்கு சில ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகக் கூறியிருந்தது. ஆனால், இன்றுவரை உங்கள் அரசாங்கம் அதனைச் செயற்படுத்தத் தவறியுள்ளதுடன், உங்களின் அமைச்சர்களும் செயற்படுத்த முடியாமைக்கான காரணங்களைத் தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.மிகவும் அடிப்படையான விடயங்களான தமிழில் தமிழர்களுடன் தொடர்புகொள்ளுதல் என்பதுகூட உங்களால் செயற்படுத்தமுடியாமல் இருக்கிறது". "அரசால் செய்துகொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட தமது அடிப்படை மொழி உரிமைகளைக் கூட தமிழர்கள் பெறாதவிடத்து, அவர்கள் தமது மொழிதொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை எவராலும் குறைகூறமுடியுமா?" ஆர். சம்பந்தன் இவ்வாறே, 1980 ஆம் ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டமூலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணிப் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பான அதிகாரங்களை வழங்க அரசு தயாராக இருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஜெயவர்த்தனவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்திருந்தார், "1980 ஆம் ஆண்டு அரசாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டத்தை இயற்றியிருந்தது. இச்சட்டத்தின் மூலம் காணிகளை உபயோகிக்கவும், அவற்றினைப் பங்கீடு செய்யவும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரையில் அமுல்ப்படுத்தப்படவில்லை. இன்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தச் சட்டம் வெறும் கடதாசியில் இறந்துபோய்க் கிடக்கிறது. இச்சட்டத்தில் குறிக்கப்பட்டதுபோல, காணிப் பாவனை மற்றும் பங்கீட்டில் அரசோ அல்லது அமைச்சர்களோ தலையீடு செய்யமுடியாது எனும் சரத்து தொடர்ச்சியாக மீறப்பட்டே வருகிறது. காணிவிடயம் தொடர்பாக அரச திணைக்களங்களினால் வெளியிடப்பட்டு வரும் சுற்றுநிருபங்களைப் பார்க்கும்போது அரசாங்கம் ஒருபோதுமே இச்சபைகளுக்கு காணி அதிகாரங்களைத் தரப்போவதில்லை என்பது உறுதியாகிறது" சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்டமும் இவ்வாறே அரசால் செயற்படுத்தப்படாமல் விடப்பட்டது. பொலீஸார் மீதான மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் அதிகாரத்தினை சட்டத்தில் கூறப்பட்டதுபோல் நடைமுறைப்படுத்த அரசு விரும்பவில்லை. பொலீஸாரும் ராணுவமும் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தவே அரசால் தொடர்ந்தும் பாவிக்கப்பட்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலவிடயங்களைச் செய்யமறுத்த அரசாங்கம், தானே உருவாக்கிய ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள், முன்னணி உறுப்பினர்கள் அடங்கிய உயர் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களையும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது எட்ப்பட்ட விடயங்களையும் செய்ய மறுத்தது. அரசுக்கும் முன்னணியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் 1981/1982 ஆகிய வருடங்களில் 11 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. "நம்பிக்கைத் துரோகங்களினதும் ஏமாற்றுக்களினதும் இழி சரித்திரம்" என்கிற பெயரில் தலைப்பிட்டு கடிதம் ஒன்றினை 1983 ஆம் ஆண்டு ஆவணி 10 ஆம் திகதி, அதாவது அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தம் செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் அமிர்தலிங்கம் ஜனாதிபதிக்கு எழுதியிருந்தார். அக்கடிதத்தில் அரசாங்கம் செய்யத் தவறியிருந்த சில முக்கிய விடயங்கள் குறித்துச் சுட்டிக் காட்டியிருந்தார், அக்கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறு கூறியது, "1981 ஆம் ஆண்டு நடைபெற்றது போன்று, தமிழ் மக்களுக்கெதிராக உங்கள் அமைச்சர்களாலும், கட்சி ஆதரவாளர்களினாலும் வன்முறைகள் ஏவிவிடப்பட்ட சந்தர்ப்பங்களிலும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு எமக்கு விடுக்கப்பட்ட அனைத்து அழைப்புக்களையும் ஏற்றுக்கொண்டு நாம் பேச வந்திருக்கிறோம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் செய்யப்படும் என்று நாம் வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் நாம் தவறாது செய்தே வந்திருக்கிறோம். எமது சக்திக்கு அப்பாற்பட்ட முறையில் நடைபெறும் விடயங்கள் குறித்து நாம் பொறுப்பெடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அரசாங்கத்தை நடத்தும் அதிகாரம் எமக்குத் தரப்படவில்லை. ஆனால், கனம் ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள் உயர்மட்டக் குழுவிலும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளிலும் எட்டப்பட்ட தீர்மானங்களை அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறதா என்பதுபற்றிக் கூறமுடியுமா? நான் சில விடயங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்", "மாவட்ட அபிவிருத்திச் சபைகள் - இச்சபைகள் திறம்பட செயற்படுவதற்கு வழங்கப்படுவதாக உறுதியளித்த எந்த விடயங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை". "தமிழ்பேசும் பொலீஸாரை பெரும்பான்மையாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பதவியில் அமர்த்துவது எனும் தீர்மானம் வடக்கில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய தமிழ் மாவட்டங்களில் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வவுனியா திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நாம் அண்மையில் சந்தித்த பல அசம்பாவிதங்கள் இப்பகுதிகளில் தமிழ்ப் பொலீஸாரை நாம் நிறுத்தியிருந்தால் தவிர்த்திருக்க முடியும், ஆனால் அது நடக்கவில்லை. பொலீஸ் சேவைக்கு தமிழர்களை இணைத்துக்கொள்வதன்மூலம், இனப்பாகுபாடற்ற முறையில், குறிப்பாக இனங்களுக்கிடையிலான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டும் தருணங்களில் அவர்கள் சிறப்பாக நடந்துகொள்ளமுடியும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை". "1981 ஆம் ஆண்டு வைகாசி - ஆனி மாதங்களில் பொலீஸாரின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் ஒருசிலருக்கு மட்டுமே இதுவரையில் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கேசந்துறை, சுண்ணாகம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. யாழ் நூலக எரிப்பிற்கான நிவாரணமாக லயணல் பெர்ணாண்டோ தலைமையிலான ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட பத்து மில்லியன் ரூபாய்களில் இதுவரை ஜனாதிபதி நிதியம் இரண்டு மில்லியன் ரூபாய்களை மட்டுமே வழங்கியிருக்கிறது. சுண்ணாகம், காங்கேசந்துறை ஆகிய பகுதிகளில் தமிழர்களைக் கொன்றும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடியும் வன்முறைகளில் ஈடுபட்ட பொலீஸார் அடையாளம் காணப்பட்டபோதும், இன்றுவரை அவர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லையென்பதுடன், வன்முறைகள் நடைபெற்ற பகுதியில் அமைந்திருக்கும் மல்லாகம் நீதிமன்றுக்கும் இதுவரை அவர்கள் கொண்டுவரப்படவில்லை. மேலும், இந்த விசாரணைகளைச் சிக்கலாக்கும் நோக்கில், வழக்கினை கொழும்பிற்கு மாற்றியிருப்பதன் மூலம் பொலீஸ் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்புக் கருதி கொழும்பில் நடைபெறவிருக்கும் விசாரணைகளில் பங்குகொள்ள முடியா நிலைமையினையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது". "ஊர்காவற்படைக்கென்று தேர்வுசெய்து, பொலீஸாரினால் தகுதியானவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பல இளைஞர்கள் இதுவரையில் ஊர்காவற்படையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊர்காவற்படை எனும் பிரிவும் இதுவரையில் அமைக்கப்படவில்லை". "மட்டக்களப்பின் பன்குடா மற்றும் கல்வியங்காடு ஆகிய பகுதிகளில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை". 1981 ஆம் ஆண்டு, ஆவணியில் இடம்பெற்ற முதலாவது உயர் மட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் கனம் ஜனாதிபதியான உங்களால் வழங்கப்பட்ட அறிவுருத்தலான வவுனியா நகரச் சந்தியில் அநீதியான முறையில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலையினை அகற்றுவது குறித்த செயற்பாடு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சிங்கள அரச ஊழியர்களால் தமிழரை இம்சிக்கவென்று அமைக்கப்பட்ட ஒரு சிலையினை அகற்றுவதற்கே ஜனாதிபதியான உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், சிங்கள இனவாதத்தினால் உந்தப்பட்டு ஆட்சிநடக்கும் இந்த அரசிடமிருந்து தமிழர்கள் எவ்வாறு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்?" "அரச, பொதுச் சேவைகளில் தமிழருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. அரசால் சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டபோதிலும், இத்திட்டத்தினை அமுல்ப்படுத்தும் அமைச்சரின் செயலாளர் இச்சுற்று நிருபங்களுக்கெதிராக நடந்துவருவதுடன், தமிழர்களை அரச பணிகளில் சேர்ப்பதையும் தடுத்தும் வருகிறார். இந்த இழிசெயல் குறித்து இக்கடிதத்தில் மேலும் விலாவாரியாக பேச நான் விரும்பவில்லை". "மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்களை மூன்று பேருக்கு மட்டுப்படுத்துவது என்ற இணக்கப்பாடு இதுவரை செயற்படுத்தப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரை அபிவிருத்திச் சபைக்குள் கொண்டுவந்தமை, பின்னர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடம்பெற்ற இந்த நியமனத்தை பலர் சுட்டிக்காட்டியபோது அந்த உறுப்பினரை பதவிவிலக்கிவிட்டு மீண்டும் அவரையே இச்சபைகளுக்கு உறுப்பினராக நிறுத்தியது போன்ற பல முறைகேடுகளில் அரசு தனது கவனத்தைச் செலுத்தி வந்திருக்கிறது". "அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளால் எதுவித பயனும் இல்லையென்பதைச் சுட்டிக்காட்டவே மேற்சொன்ன, அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் இன்றுவரை நடைமுறைப்பத்தப்படாது தட்டிக் கழிக்கப்பட்டுவரும் விடயங்கள் சிலவற்றை பிரஸ்த்தாபித்திருந்தேன்". அரசியலமைப்பில் கூறப்பட்டதன்படி தமிழ மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகள் இதுவரையில் தரப்படாமை, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம் இணங்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படாமை, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை இதுவரை நடைமுறைப்படுத்தாமை என்பவை மட்டுமே இன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்நோக்கும் பிரச்சினைகள் அல்ல. மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தொடர்பாக கண்காணித்து வந்த ஜெயரட்ணம் வில்சன், "அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் மிகவும் அற்பத்தனமாக நடந்துகொள்வதுடன், பெரும்பாலான நேரங்களில் அதிகாரப் பகிர்வினை முற்றாகவே நிராகரித்தும் வருகிறார்கள்" என்று கூறுகிறார். "ஒவ்வொரு அமைச்சரும் தனது சொந்த எண்ணத்தின்படி அதிகாரங்களைப் பகிரவோ அல்லது தம்முடனேயே வைத்துக்கொள்ளவோ விரும்புகிறார்கள். அதிகாரப்பகிர்வு தொடர்பாக பொதுவான நடைமுறை ஒன்று அவர்களிடத்தில் இல்லை. இதில் வருத்தமளிக்கும் விடயம் என்னவெனில், தமது அமைச்சுகளின் கீழான விடயங்களுக்கு நிதியொதுக்கீட்டினைச் செய்ய அமைச்சர்கள் முன்வருவதில்லை" என்றும் அவர் கூறினார். தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு தமது மாவட்ட சபைகளை அபிவிருத்திச் செய்வதற்கான நிதியினை அரசு வழங்காதது குறித்து இச்சபைகளின் அதிகாரிகள் விசனப்பட்டிருந்தார்கள். தமிழர்களின் மாவட்டங்களின் மீதான தனது அதிகாரத்தைத் தன் கையிலேயே தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே மாவட்ட அபிவிருத்திச் சபை போன்ற விடயங்களின் செயற்பாட்டினை அரசு தடுத்துவருவதை அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். யாழ்ப்பாண மாவட்ட சபையின் தலைவர் நடராஜா இரு விடயங்கள் தொடர்பாக நிதியினைத் திரட்ட நினைத்திருந்தார். முதலாவது விடயம், காங்கேசந்துறையிலிருந்து தமிழ்நாட்டின் நாகபட்டிணம் வரையான படகுச் சேவையொன்றினை ஆரம்பிப்பது. இப்படகுச்சேவையின் மூலம் யாழ்ப்பாண மாவட்ட சபைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று இச்சேவை தொடர்பான முன்னோடி ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இரண்டாவது, காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு சீமேந்துப் பையிற்கும் தலா ஒரு ரூபாய்ப்படி வரி அறவிடும் யோசனை. ஆனால், இந்த இரண்டு யோசனைகளையும் அரசு உடனடியாகவே நிராகரித்து விட்டது. இதனால், இச்சபைக்கு அரசால் ஒதுக்கப்படும் மிகச்சொற்ப நிதியைக்கொண்டே தனது செயற்பாடுகளை நடத்தவேண்டியதாயிற்று. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையினை நடத்துவதற்கு அரசு தொடர்ச்சியாக போட்டுவந்த முட்டுக்கட்டைகளால் விரக்தியடைந்த தலைவர் நடராஜா, தனது அதிருப்தியை வெளிக்காட்டும் முகமாக 1983 ஆம் ஆண்டு, ஆடி மாதம் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். ஜெயவர்த்தன அவரை சந்திக்க அழைத்திருந்தபோதும், 1983 ஆம் ஆண்டின் ஜூலைப் படுகொலைகள் ஆரம்பித்து விட்டமையினால் மாவட்ட அதிகார சபைகள் என்கிற திட்டமே அரசால் முற்றாகக் கைவிடப்பட்டு விட்டது. சுமார் ஒருவருட காலத்திற்கு முன்பதாக, 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதமளவில், கனடாவிலிருந்த தனது ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சனை வரவழைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான இன்னொரு சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். மேலும், தன்னைச்சுற்றியிருக்கும் இனவன்மம் கொண்ட அமைச்சர்களால், தன்னுடைய சுயாதீனம் தடுக்கப்பட்டு வருவதாகவும் வில்சனிடம் ஜெயார் தெரிவித்திருந்தார். 1995 ஆம் ஆண்டு பங்குனி 15 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதும் ஜெயரட்ணம் வில்சன், ஜெயார் தன்னுடம் பேசிய விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். "இனவன்மம் கொண்ட அமைச்சர்களால் நான் சூழப்பட்டிருக்கிறேன். இந்த நச்சு வட்டத்திலிருந்து நான் வெளியே பாய்ந்துவர உங்களின் நண்பர்களான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் நீங்கள் பேசுவீர்களாகவிருந்தால், என்னால் சில விடயங்களைச் செய்யமுடியும்" என்று ஜெயார் கூறியதாக வில்சன் எழுதுகிறார். ஜெயாரின் வேண்டுகோளின்படியே வில்சன் அமிர்தலிங்கத்துடன் பேசினார். பின்னர் தொடர்ந்த கூட்டத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்துப் பேசிய ஜெயார், "அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை நீங்கள் எனக்குப் பெற்றுத்தரவேண்டும். ஆனால், இதனை நீங்கள் வெளியே பகிரங்கமாகப் பேசக் கூடாது. அப்படித் தெரிந்தால், பெளத்த சிங்களவர்களின் வாக்குகள் எனக்குக் கிடைக்காது போய்விடும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன், என்ன நீங்கள் நம்பலாம்" என்று கூறவும், அமிர்தலிங்கமும் ஜெயார் வைத்த பொறியில் முற்றாக அகப்பட்டுப் போனார்.
  9. ஒரு வித்தியாசமான அனுபவம் போலத் தான் உள்ளது...! நாங்களும் உங்களுடன் சேர்ந்து சறுக்கியது போல உங்கள் எழுத்து நடை..! மிக்க நன்றி, ஈழப்பிரியன்..!
  10. ஒருவருடைய அனுபவங்கள் இன்னொருவருக்கு பாடமாய் அமையும். அனுபவ பகிர்வுக்கு நன்றி . எல்லாம் சுபமே முடித்தையிட்டு மகிழ்ச்சி . அதிகாலை ரெஸ்டாரண்ட் காரியிடம் கையூட்டு கொடுத்து உறவுகளுக்கு உணவு வாங்கினீர்கள் பாருங்கோ அங்கே தான் அப்பா தாத்தா எனும் கம்பீரம்.
  11. யாழ் கள இளசுகளுக்கு ஏற்றமாதிரி நல்ல கிழுகிழுப்பாகக் கதையை நகர்த்தி நன்றாக நிறைவு செய்திருக்கிறீர்கள் அண்ணா.
  12. மூன்று லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச் செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும் என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும் யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன். உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என் போன் துலையாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது. மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில் அவங்களுக்கும் தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ? :அது என் கணனி :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? :அது அவர்கள் பிரச்சனை :இத்தனை பாரமாக இருக்கிறதே :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ? :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.
  13. உண்மையில் யாழ்களம் தமிழ் படைப்பாளிகளுக்கு பெரியதொரு தளம். அதை சீராக பயன்படுத்த தெரியாமல் பலர் விலகியே நிற்கின்றனர். முகநூல் டிவிட்டர் போன்ற ஊடகங்கள் அன்றாடத்திற்கு உதவுமே தவிர படைப்புக்களுக்கு அல்ல.
  14. சா... என்ன ஒரு எழுத்து சுவி அண்ணா....👌 முதல் பகுதியை பார்த்தது நீளமாக இருக்கு, இது நமக்கு சரி வராதென்று நினைத்த படியே வாசிக்க ஆரம்பித்து, 12 பகுதிகளையும் ஒரே மூச்சில் வசித்தது விட்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு படம் பார்த்தது போன்ற உணர்வைத் தந்து விட்டீர்கள். இயல்பிலேயே பழிவாங்கும் (revenge) மனஇயல்போ என்னமோ இறுதி முடிவு பிடிக்கவில்லை. இறுதியில் பாவப்பட்டது தாயம்மா தான் 😒
  15. இப்ப தான் கிணற்றடியில் நிக்கிறன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.