Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    34974
    Posts
  2. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    7596
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/06/23 in all areas

  1. எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது ஒவ்வொருவருக்கும் பதில் தருகிறேன். சென்ற பெப்ரவரி இறுதியில் இலங்கைக்கு 6 நாள் பயணம் போயிருந்தேன். இங்கிருந்து அங்கு போய்க் குடியேறிய ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறுகிய பயணமானாலும் பல அனுபவங்கள் கிடைத்தன. அதீதமான கற்பனைகளுடன் சென்றால் ஏமாற்றம்தான் உண்டாகும். ஒவ்வொரு சமுதாயமும் அதன் சூழலுக்கேற்ப மாற்றங்களை அடைந்துகொண்டே இருப்பது நியதி. எமது சமுதாயம், கலாச்சாரம் எல்லாம் இப்போது இதுதான். எப்படி இதற்குள் நுளைய வேண்டும் என்பதே முதலாவது பிரச்சனை. இனொன்றும் உறுதியாக விளங்கியது. போதை மது விற்பனை, குழுக்கள், எமது அரசியல், இந்த மூன்றில் ஒன்றைக் கூட நெருங்காமல் கடந்து செல்ல வேண்டும். இதைப்பற்றிக் கொஞ்சம் எழுதி பின்னர் அழித்து விட்டேன். வீணான பிரச்சனை வேண்டாம் என்பதால் இத் திரியிலும் இவற்றைக் கடந்து செல்வோம்.
  2. சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதல் சீலன் இராணுவ புலநாய்வுத்துறையினரின் செயற்பாடுகளை ஜெயார் கடுமையாக விமர்சித்திருந்தபோதிலும், 1981 ஆம் ஆண்டிலிருந்து பிரிகேடியர் சிறில் ரணதுங்கவின் தலைமையின் கீழ் இயங்கிவந்த புலநாய்வுத்துறை திறமையாகவே செயற்பட்டு வந்தது. புலநாய்வுத்துறையினை சீரமைக்க கப்டன் முனசிங்கவை சிறில் ரணதுங்க யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்திருந்தார். கைதுசெய்யப்பட்டிருந்த மூத்த புளொட் உறுப்பினர்கள் மூலம் பெருமளவு தகவல்களை புலநாய்வுத்துறை பெற்றிருந்தது. தமக்குத் தகவல்களை வழங்கும் புளொட் உறுப்பினர்களுடன் மிகவும் சிநேகமாக சிறில் ரணதுங்க நடந்துகொண்டார். ஜெயவர்த்தன யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, மூன்று மூத்த புளொட் உறுப்பினர்களை யாழ் குருநகர் முகாமில் ராணுவம் தடுத்து வைத்திருந்தது. அவர்கள் மூவரும் அன்டன், அரங்கநாயகம், அரபாத் ஆகியோராகும். தாம் பங்கெடுத்த கொலைகள், கிளிநொச்சி மக்கள் வங்கி உட்பட வங்கிக்கொள்ளைகள் பற்றிய பல விபரங்களை இவர்கள் மூவரும் ராணுவத்திற்கு வழங்கியிருந்தனர். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தின் பூஞ்செடிகளைப் பராமரிப்பதற்கு இவர்கள் மூவரையும் சிறில் ரணதுங்க பாவித்து வந்தார். ஐப்பசி 26 ஆம் திகதி, ரணதுங்கவின் பூந்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தருணம் இவர்கள் மதின்மேல் ஏறித் தப்பிச் சென்றிருந்தார்கள். ஆனால், அன்டனும் அரங்கநாயகமும் மூன்று மணிநேரத்தில் பொலீஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டபோதும் அரபாத் தப்பிச் சென்றுவிட்டார். அன்றிரவு குருநகர் முகாமில் ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை நடத்திவிட்டுக் காலை 5:30 மணியளவில் கலைந்து செல்லும் தறுவாயில் அவர்களுக்குச் செய்தியொன்று வந்திருந்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி கூறியது. ஆகவே, அரபாத்தைக் கைதுசெய்யும் தமது எண்ணத்தை அப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு அனைவரும் சாவகச்சேரி நோக்கி விரைந்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கிடையில், சீலன் தலைமையில் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாம் வந்த மினிபஸ்ஸிலேயே தப்பிச் சென்றுவிட்டது புலிகளின் தாக்குதல் அணி. இத்தாக்குதலை விசாரித்த பொலீஸாரும் ராணுவத்தினரும் இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, வெறும் 15 நிமிடங்களிலேயே திறமையாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். கார்த்திகை 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த உத்தரதேவி ரயிலில் மீசாலையில் ஏறிக்கொண்ட அரபாத்தை பணிமுடிந்து வீடு செல்லும் ராணுவத்தினர் கைதுசெய்தனர். அன்டனும், அரங்கநாயகமும் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின்போது சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். சாவகச்சேரி பொலீஸ் நிலையம் இரு மாடிகளைக் கொண்டது. சாவகச்சேரியூடாகச் செல்லும் பிரதான வீதியான கண்டி வீதியில் இப்பொலீஸ் நிலையம் அமைந்திருந்தது. 1981 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் புளொட் அமைப்பினரால் தாக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த அனைத்து பொலீஸ் நிலையங்களுக்கும் இரவு பகலாகக் காவல் போடப்பட்டிருந்தது. ஐப்பசி 27 ஆம் திகதி இரவு இரு கொன்ஸ்டபிள்களான கருனநாதனும், கந்தையாவும் காவலுக்கு நின்றார்கள். அவர்கள் இருவரிடமும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளே இருந்தன. ரிப்பீட்டர் ரக துப்பாக்கி இத்தாக்குதலுக்கான திட்டத்தினை சீலன் மிகவும் திறமையாக வகுத்திருந்தார். இப்பொலீஸ் நிலையத்திற்கு இருமுறை சென்றிருந்த சீலன், பொலீஸ் நிலையத்தின் உள்ளமைப்பையும், கட்டிடங்களின் விபரங்களையும் அவதானித்திருந்தார். பொலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துவந்த சிவிலியன் ஒருவரின் ஊடாக ஆயுதங்களையும் தொலைத்தொடர்புக் கருவிகளையும் பாதுகாப்பாக வைக்கும் பகுதிபற்றிய விபரங்களையும் அவர் அறிந்துகொண்டார். சந்தோசமும் புலேந்திரனும் "தாக்குதலுக்கான எமது இலக்கு நோக்கி நாம் செல்லுமுன், பொலீஸ் நிலையம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். எமது தாக்குதல் அணியை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்ட நாம், ஒவ்வொரு பிரிவுக்கும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவரச் செய்துமுடித்தோம். எனக்கும் சங்கருக்கும் வழங்கப்பட்ட பணி பொலீஸார் தங்கியிருக்கும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் பொலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்துவது" என்று இத்தாக்குதலில் பங்குகொண்டவரும் எனது ஊரான அரியாலையினைச் சொந்த இடமாகவும் கொண்டவருமான சந்தோசம் என்னிடம் கூறினார். அவரது தந்தையாரான கணபதிப்பிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். சீலனும் ரகுவும் இணைந்து ஒரு அணியை உருவாக்கினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி, காவலுக்கு நிற்கும் பொலீஸார் மீது தாக்குதல் நடத்துவது, முதலாவது மாடியில் இருக்கும் தொலைத் தொடர்புக் கருவிகளை அழிப்பது பின்னர் பொலீஸாரின் உறங்கும் விடுதியில் இருக்கும் பொலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது. சந்தோசமும் சங்கரும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் பொலீஸாரின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பஷீர் காக்கவுக்கும், மாத்தையாவுக்கும் கொடுக்கப்பட்ட பணி, பொலீஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவது. புலேந்திரனுக்கும் அருணாவுக்கும் வழங்கப்பட்ட பணி, கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், காயப்பட்ட போராளிகளையும் வாகனத்திற்குக் கொண்டுவருவது. "நாங்கள் அனைவரும் நன்கு பராமரிக்கப்பட்ட இயந்திரம் ஒன்றைப்போல் ஒருங்கிணைந்து இயங்கினோம்" என்று சந்தோசம் கூறினார். 29 சிறி 7309 எனும் இலக்கத் தகடுடைய மிட்சுபிஷி ரோசா மினி பஸ்ஸை அருணாவும் புலேந்திரனும் ஒழுங்குசெய்திருந்தார்கள். ஐப்பசி 25 ஆம் திகதி கோப்பாயில் வசித்துவந்த பஸ் ஓட்டுநரான தவராஜாவைச் சந்தித்துப் பேசிய அவர்கள், ஐப்பசி 27 ஆம் திகதி தில்லையம்பலம் கோயிலிக்குச் செல்வதற்காக பஸ் ஒன்று தேவைப்படுவதாகக் கூறியதுடன், முற்பணமாக 100 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு இருபாலையில் இருக்கும் வீடொன்றிற்கு தம்மை வந்து ஏற்றும்படியும் கூறிவிட்டுச் சென்றார்கள். தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவ புலநாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தவராஜா பேசும்போது, தன்னிடம் வந்து பஸ்ஸை ஒழுங்குசெய்தவர்கள் கூறியபடி இருபாலையில் இருந்த வீடொன்றிற்கு தானும் தனது உதவியாளர்களும் சென்றபோது, அங்கிருந்த இளைஞர்கள் தம்மை இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களின் கண்களைக் கட்டிய புலிகள், அன்றிரவு கோப்பாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார். சாவகச்சேரித் தாக்குதலுக்காக எட்டுப் புலிகள் பயணமானார்கள். சீலன், மாத்தையா, அருணா, சங்கர், புலேந்திரன், ரகு, சந்தோசம் மற்றும் பஷீர் காக்கா ஆகிய எண்மருமே அவர்களாவர். அவர்களிடம் ஒரு எஸ் எம் ஜி துப்பாக்கியும், ஒரு ஜி 3 துப்பாக்கியும், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கியும், இரு சுழற்துப்பாக்கிகளும் சில கைய்யெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன. எஸ் எம் ஜி துப்பாக்கி ஜி 3 துப்பாக்கி காலை 5:30 மணியளவில் அவர்கள் பயணம் செய்த மின்பஸ் சாவகச்சேரி பொலீஸ் நிலையப் பகுதியை அடைந்தது. பொலீஸ் நிலையத்தின் முன்னால் பஸ் வந்ததும், தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. பஸ்ஸிலிருந்து குதித்த சீலனும் ரகுவும் காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள்கள் மீது தாக்குதல் நடத்தினர். கருனநந்தன் அவ்விடத்திலேயே விழுந்து உயிர்விட்டார். ஆனால், சில மீட்டர்கள் பின்னால் ஓடிச்சென்ற கந்தையா, முழங்காலில் இருந்து தனது ரிப்பீட்டர் துப்பாக்கியால் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார். ஆனால், அவரை முந்தி ஓடிச்சென்ற புலிகளின் உறுப்பினர் ஒருவர் அவர்பக்கம் திரும்பி அவரைச் சுட்டுக் கொன்றார். சீலனும், ரகுவும் பொலீஸ் நிலையத்தின் முதலாவது மாடிக்கு ஓடிச் சென்றார்கள். அங்கிருந்த தொலைத் தொடர்புக் கருவிகளை அவர்கள் அழித்தார்கள். பின்னர், மாடியில் இருந்த பொலீஸாரின் தூங்கும் அறைக்குச் சென்றார்கள். அவ்வேளை அங்கு 6 பொலீஸார் இருந்திருக்கிறார்கள். கட்டிலின் கீழே ஒளித்திருந்த பொலீஸ் சாரதி திலகரத்னமீது சீலன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தாக்குதல் ஆரம்பமானதையடுத்து மாடியிலிருந்து குதித்துத் தப்பிச்செல்ல கொன்ஸ்டபிள் ஜயதிலக்க முயன்றபோது, அவரது கால் முறிந்தது. இன்னொருவர் தனது கட்டிலின் கீழே ஒளிந்துகொண்டதால் புலிகளின் பார்வையிலிருந்து தப்பிவிட்டார். தன்னுடன் சுழற்துப்பாக்கியொன்றை வைத்திருந்த கொன்ஸ்டபிள் வீரக்கோன் கதவொன்றின் பின்னால் மறைந்து நிலையெடுத்துக்கொண்டு சீலனும் ரகுவும் மாடியில் இருந்து கீழிறங்கும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அவர்கள் இருவர் மீதும் சூடு வீழ்ந்தது. சீலனின் முழங்காலினூடாக சன்னம் பாய அவர் கீழே விழுந்தார். ரகுவின் வலது கையில் சன்னம் பட்டு எலும்பு முறிந்தது. பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொலீஸாரின் விடுதி நோக்கி ஓடிச்சென்ற சந்தோசமும், சங்கரும், ஆயுத அறையைக் காப்பற்ற பொலீஸார் வராது தடுத்தனர். ஆனால், அவர்கள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தை எத்தனிக்கவில்லை. அங்கிருந்த பொலீஸார் தாக்குதல் ஆரம்பமானதையடுத்து அங்கேயே ஒளிந்துவிட்டார்கள். ஆயுதவறையினை உடைத்த மாத்தையாவும் பஷீர் காக்காவும் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டனர். சீலன் மீதும் ரகு மீதும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்படுவதையும், அவர்கள் இருவரும் அலறுவதையும் கேட்ட அருணாவும் புலேந்திரனும் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் நோக்கி ஓடிச் சென்றனர். கீழே வீழ்ந்திருந்த சீலனை அருணா மினிபஸ்ஸிற்குக் கொண்டுவர, மறைந்திருந்து வீரக்கோன் மீண்டும் தாக்க, புலேந்திரனின் தோற்பட்டையில் சூடுபட்டது. காலைவேளையில் நடத்தப்பட்ட துணிகரமான இத்தாக்குதலில் மூன்று பொலீஸார் கொல்லப்பட்டனர். உடுவிலைச் சேர்ந்த கருனநாதன், மிருசுவில்லைச் சேர்ந்த கந்தையா, கேகாலையைச் சேர்ந்த திலகரத்ன ஆகியோரே அந்த மூவரும் ஆகும். மேலும் இத்தாக்குதலில் சார்ஜன்ட்கந்தையா, கொன்ஸ்டபிள் ஜயதிலக்க மற்றும் சிவில் பணியாளர் கந்தையா செல்வம் ஆகியோரும் காயப்பட்டனர். இவர்களுள் சிவில் பணியாளரான கந்தையா செல்வம் பின்னர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டார். .303 ரைபிள் 0.38 சுழற்துப்பாக்கி இத்தாக்குதலின்போது புலிகள் இரு உப இயந்திரத் துப்பாக்கிகளையும், ஒரு 0.38 சுழற்துப்பாக்கியையும், ஒன்பது 0.303 ரைபிள்களையும், 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகளையும் கைப்பற்றிச் சென்றனர். மொத்தத் தாக்குதலுமே 15 நிமிடத்தில் முடிக்கப்பட்டதோடு, புலிகள் தாம் வந்த மினி பஸ்ஸிலேயே மீசாலை நோக்கித் தப்பிச் சென்றனர். பின்னர், அந்த மினிபஸ் கைவிடப்பட்ட நிலையில் நவாலிப் பகுதியில் பொலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  3. சா.....அன்ரியின் கதையில்தான் உங்களின் ஓவியமும் கற்பனையும் சிறகடித்துப் பறக்கிறது கவி........சூப்பர் .......! 💐 வேலை செய்திட்டு பார்த்திருப்பவர்களுக்கு இன்று பானும் சம்பலும்தான்......! 😂
  4. சிலர்…. மூத்திர கடுப்பு என்பார்கள். 😁
  5. அந்த ஸ்கூட்டி பாரம் என்றபடியால்தான் கனதூரம் போய் சேதப்படாமல் கீறலுடன் நின்றுவிட்டது. நான் இப்பதான் ஏன் உவவளவு பணத்தை அதில் முடக்கினேன் என்று கவலைப்படுறன். ஆனாலும் வாங்காது இருந்திருந்தாலும் வாங்கி ஓடியிருக்கலாம் என்று மனம் அலைபாய்ந்திருக்கும். என் பயணக் கட்டுரைக்கு அழகுசேர்ப்பதே உங்கள் ஓவியங்கள் தான். மிக்கநன்றி அண்ணா. மாலை போடாமலே இத்தனை நாள் ஓடினது. குடுத்த விலைக்கு அசரவில்லை அது. உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுமை இல்லை 😀
  6. அந்த றேஞ்சில தான் தண்டவாளத்தில போய் இருக்கிறா போலும்...அவ்வைசண்முகி புறம் யூகே.😆
  7. அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆
  8. ஒம் தோழர்.. இந்த பதிவு கடும் நீர் சுளுக்கில் (சிறுநீர் மஞ்சள் நிறமாகி சொட்டு சொட்டாக எரிச்சலாக வெளியேறுவது ) அவதியுறும் போது போட்டது.😢 ஈழத்து பேச்சு வழக்கில் இந்த உடல் உபாதைக்கு பெயர் என்ன தோழர்.?
  9. பதினேழு இடையில எழுதினதை விட்டிட்டு வேறு ஒண்டுக்கு வாறன். இணுவிலில இருந்து வாங்கிய வீட்டுக்குப் போவதற்கு ஒவ்வொருதடவையும் 2000 கொடுக்கிறதாலை எதுக்கும் நீ ஒரு ஸ்கூட்டி எடுத்து ஓடன் எண்டு மனிசன் சொல்ல எனக்கும் ஆசை பிடித்துக்கொண்டுது. ஆரைப் பார்த்தாலும் ஸ்கூட்டி. மோட்டார் சயிக்கிளோ அல்லது ஸ்கூட்டி இல்லாத வீடே இல்லைஎண்டு சொல்லலாம். பக்கத்தில இருக்கிற கடைக்குப் போறதுக்கும் நடக்காமல் விசுக்கெண்டு அதிலதான் போயினம். பெண்கள் பின்னால் இரண்டு பிள்ளைகள், முன்னால் ஒரு பிள்ளையை நிக்கவச்சு லாவகமா ஓட்டிக்கொண்டு போறதைப் பார்க்க எனக்கே ஆச்சரியம். காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தால் ஸ்கூட்டிகள் தான். நான் 34 ஆண்டுகளாகக் கார் ஓடுறன். உது ஒடுறது பெரிய வேலையோ எண்டு நினைச்சு நானும் கணவரின் தம்பி மகனுமாக கடை கடையாய் ஏறி இறங்கி ஸ்கூட்டி தேடினால் எல்லாம் படு விலை. ஆறு ஏழு இலட்சங்களுக்குக் குறைய ஒன்றுகூட இல்லை. நீங்கள் நிக்கப்போறது இன்னும் நாலோ ஐந்து மாதங்கள் தானே சித்தி. பழசை வாங்கி ஓடிப்போட்டு விட்டுட்டுப் போனாலும் நட்டம் இல்லை என்று கூறி தனக்குத் தெரிந்த சிலரிடம் கூறி ஒரு ஸ்கூட்டியைக் கண்டுபிடிச்சம் கொக்குவிலில். போய் பார்த்தால் வெள்ளை நிறம். சின்னன். இருந்து பார்த்தால் கால் நிலத்தில வடிவா முட்டுது. என்ன ஒகேயா சித்தி என்றுவிட்டு நாளை இணுவிலில் உள்ள ஒரு கறாச்சின் பெயரைச் சொல்லி கொண்டுவரச் சொல்லியாச்சு. விலை மூண்டு லட்சம் என்று தொடங்கி இரண்டு லட்சம் என்று முடிவாச்சு. நானும் நாளைக்கு வாங்கினால் இரண்டு மூன்றுநாட்கள் ஓடிப் பழகி ஓடலாம் என்ற கற்பனையில் கணவரிடம் சொல்கிறேன். 2 லட்சம் என்றால் சரியான பழைய மொடல் போல இருக்கே என்ற கணவர் தமையனின் மகனுக்கு போன் செய்து விசாரிக்க, ஓம் சித்தப்பா அந்த மொடலுகள் பழுதானால் திருத்த பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்டம் என்கிறார். அப்ப அதை வாங்க வேண்டாம் என்றுவிட்டு தான் ஒரு youtube வீடியோ ஒன்றை எனக்கும் பெறாமகனுக்கும் அனுப்புகிறார். விலை ஐந்து இலட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைய. ஏன் இவ்வளவு காசுக்கு என்கிறேன் நான். நங்கள் இனி அடிக்கடி போகத்தானே போறம். உது இரண்டுபேர் போகவும் வசதிபோல இருக்கு என்று உடனே பணத்தை அனுப்பிவிட அடுத்தநாளே அதை வாங்கியாச்சு. மூன்று நாட்களுக்கு நீங்கள் ஓடலாம். அதன் பிறகு ஒரு வாரத்தில் புத்தகம் வந்துவிடும். ரோட்டக்ஸ் கட்டியபின்தான் ஓடலாம் என்றனர். இப்போதெல்லாம் பிரதான வீதிகளில் மட்டுமன்றி சிறிய உள் வீதிகளில் கூட போலீஸ் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்வது வழக்கமாகிவிட எதுக்கும் மூன்று நாளில் நீங்கள் பழகிவிடுவியள் சித்தி என்று பெறாமகன் உற்சாகப்படுத்த அவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விளையாட்டு மைதானத்துக்குப் போகிறேன். மழை பெய்த தண்ணீரும் சில இடங்களில் தேங்கி நிற்க நான்கு மாடுகளும் கட்டப்பட்டிருக்க எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது. இண்டைக்கு நீங்கள் கனக்க ஓடமாட்டியள் என்று என்னிடம் ஸ்கூபியைத் தந்தால் பயங்கரப் பாரம். ஆனாலும் ஒருவாறு நேராகப் பிடித்து மெதுவா ஒரு ஆறு சுற்றுச் சுற்றிவர பயத்தில் போதும் இன்று என்றுவிட்டு போய்விட்டோம். அடுத்தநாளும் ஒரு அரை மணித்தியாலம் இடதுபுறம் வலதுபுறம் திருப்பிப் பழகி றோட்டில ஒடுவம் சித்தி என்கிறார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எல்லாம் சிறிய வளைவுகளுடன் கூடிய ஒழுங்கைகள். எனக்கு அங்கு ஓடுவதை எண்ணவே பயமாகவும் இருக்கு. ஒரு எல் போட் போட்டு ஒடுவமோ என்றுகேட்க அவர் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்க உங்களுக்கு 8 வருட லைசென்ஸ் தந்திருக்கிறாங்கள். பிறகு போலீஸ் மறிச்சால் தேவையில்லாத பிரச்சனையாயிடும் என்றதும் தான் எனக்குப் புரிய ரோசமும் வருகிறது. மூன்று நாட்கள் முடிந்தபின்னும் புத்தகம் வரவில்லை. அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர். இரு வாரங்கள் இந்தா வருது. அந்தா வருது என்றுவிட்டு அது தொலைந்துவிட்டதாம். புதிதாக அனுப்புகிறார்கள் இன்னும் இரண்டுநாட்கள் பொறுங்கோ என்றபின் நான் போனில் குடுத்த கரைச்சலில் மூன்றுவாரமாகியும் புத்தகம் வராமல் இருக்க அதன் கொப்பியை வற்சப்பில் அனுப்பிவிட கொண்டுபோய் ரோட்டக்ஸ் எடுத்தாச்சு. முதல்முதல் றோட்டில ஓட மிகவும் மெதுவாக ஓடிக்கொண்டுபோக என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை. எல்லாத் தொடருந்துப் பாதைகளும் மீண்டும் போடும்போது மிக உயரமாகவே போட்டுள்ளதால் அதில் நின்று ஏற்றத்தில் திருப்ப பயந்து முதலே இறங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டுபோய் அந்தப்பக்க நேர் வீதியில் மீண்டும் ஏறி உரும்பராய் சந்திவரை 35 ,40 இல் ஓடி சந்திகழிய பெரிதாக வாகனங்கள் முன்புபோல் இல்லை என்பதனால் 50 வரை ஓடி முடிச்சு, கணவருக்கோ மனிசி காசு மிச்சம் பிடிக்கிறாள் என்ற மகிழ்ச்சி. இப்பிடியே ஒருமாதம் இணுவிலுக்கும் வீட்டுக்கும் போய்வர வீட்டு வேலைகளும் நடக்க அடுத்தநாள் வருடப்பிறப்பு. காணியில் தேவையற்ற மரங்கள் பல முளைத்திருந்தன. அதனால் காணியை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்க அடுத்தநாள் புதுவருடம் என்பதால் வேலையை நிறுத்துவோம் என்றவுடன் இல்லை நாங்கள் வேலைக்கு வருகிறோம். வீட்டில நிண்டு என்ன செய்யிறது என்றார்கள். காணியில் வேலை செய்பவர்களுக்கு 3000 ரூபாய்கள் நாட்கூலி என்பதனால் உணவை அவர்களே கொண்டு வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவு கொண்டுவர வேண்டாம் என்றுவிட்டு நான் கொண்டுபோவேன். அவர்கள் மகிழ்வுடன் உண்பதைப் பார்க்க ஒரு திருப்தி இருக்கும். நாளைக்கு ஒரு ஆடு அடிச்சு சமைச்சுக்கொண்டு வாங்கோ என்றார்கள் பகிடிக்கு. நானும் ஒன்றென்ன இரண்டே அடிச்சால் போச்சு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். நாளை அவர்களுக்கு ஆட்டுக்கறி காய்ச்சிக் கொடுத்தால் என்ன என்று யோசனை எழ அடுத்தநாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து மருதனார்மடம் சென்று பெற்றோல் அடித்துக்கொண்டு சந்தையில் மரக்கறிகளும் வாங்கியபின் இணுவில் சந்தைக்குச் சென்றால் மூன்று ஆடுகள் கட்டித் தூக்கி இறைச்சி வாங்க சரியான சனம். 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் 6000 ரூபாய்களுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து கழுவி வெட்ட வெறுத்துவிட்டது. ஏனெனில் லண்டனில் எல்லா இறைச்சியுமே சமைக்கும் பதத்துக்கு வெட்டித் தருவதால் இருபது ஆண்டுகளின் பின்னர் வெட்டுவது கொடுமையாக இருக்க, நல்ல காலம் லண்டனில் இருந்தே கத்தி வெட்டும் பலகை எல்லாம் கொண்டு சென்றதில் தப்பித்தேன் என்ற எண்ணம் எழுந்தது. மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன. சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. ஒரு நான்கு மீற்றர் தூரம்வரை சென்றபின் நின்றுவிட இரு கைகளிலும் சிறு காயங்கள். என்னை யாரோ இருவர் நிமிர்த்தி இருத்த உடனே என் முகத்தைத் தடவக் கையைக் கொண்டுபோகிறேன். தலைக்கவசத்தின் பிளாஸ்டிக் மூடி கையில் பட என் முகத்தில் கீறல் எதுவும் படவில்லை என்று மனதுக்கு அசுவாசமாகிறது. இருந்தாலும் கையை விட்டுத் தடவிப் பார்த்து எதுவும் ஆகவில்லை என்று நிம்மதி ஏற்பட, தங்கச்சி எழும்புங்கோ என என் கைகளைப் பிடித்து இருவர் தூக்குகின்றனர். கால் நோவெடுக்கிறதுதான் என்றாலும் தெரியாதவர்கள் முன் தண்டவாளத்தில் இருப்பது அவமானமாகப்பட, முயன்று எழும்பி அவர்கள் பிடித்தபடி வர, நல்ல காலமடா அக்காவுக்கு கால் முறியவில்லை என்று ஒருவர் சொல்வது கேட்கிறது. அருகில் இருக்கும் கடைக்கருக்கே செல்ல ஒருவர் ஒரு கதிரை கொண்டுவந்து தர அமர்கிறேன். கண்களிரண்டும் கலங்கலாகி எதுவுமே தெரியாமல் கண்களை மூடியபடி சாய, அக்கா நீங்களோ? என்று எனது உறவினர் ஒருவரின் குரல் கேட்கிறது. அவர் யார் என்று புரிந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க முடியாமல் இருக்கு. நான் வேறை யாரோ எண்டு நினைச்சுத்தான் போன்னான். பிறகும் மஞ்சள் நிற ஸ்கூட்டி என்றவுடனதான் நீங்களாய் இருக்குமோ என்று திரும்பி வந்தனான் என்கிறார். கண் திறக்க ஏலாமல் இருக்கு, தலை சுத்துது என்றதும் கடையில் தண்ணீர் போத்தல் ஒன்று வாங்கி என்னைக் குடிக்கச் செய்தபின் இப்பிடியே இருங்கோ அக்கா நான் போய் உங்கட சித்தியைக் கூட்டிவறான் என்றபடி செல்கிறார். ஸ்கூட்டி எங்கே என்றதற்கு பக்கத்திலதான் நிக்குது அக்கா. இந்தாங்கோ திறப்பு என்று என் கைக்குள் திறப்பை வைக்கிறார். என் கைப்பையின் நினைவு வர அதையும் என்னிடம் தந்துவிட்டு கடைக்காரரிடம் பார்த்துக்கொள்ளுங்கோ வாறன் என்றுவிட்டுச் செல்கிறார்.
  10. பிசுபிசுத்துப்போனன் கண்ணிவெடித் தாக்குதல் சதாசிவம் செல்வநாயகம் - செல்லக்கிளி சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், புரட்டாதி 19 ஆம் திகதியன்று, ஜனாதிபதி ஜெயவர்த்தன தேர்தல்ப் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். இந்தநாளே, செல்லக்கிளி தலைமையிலான புலிகளின் முதலாவது தோல்விகரமான கண்ணிவெடித் தாக்குதல் எத்தனிக்கப்பட்டது. ஜெயாரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக, தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழ மாணவர் அமைப்பு மற்றும் கொம்மியூனிஸ்ட் அமைப்புகள் ஒழுங்குசெய்த ஹர்த்தால் நிகழ்விற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் திட்டமிட்டிருந்தனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த விவசாயக் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் செல்லக்கிளி. புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த செல்லக்கிளி, பஸ்டியாம்பில்லை மீதான துணிகரமான திடீர்த் தாக்குதலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர். தம்மைக் கைதுசெய்ய வந்திருந்த பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் குழுவினரை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தியவர். பஸ்டியாம்பிள்ளை தேநீர் அருந்த எத்தனிக்கும்போது, அவரின் இயந்திரத் துப்பாக்கியைப் பறித்து அதனாலேயே அவரைச் சுட்டுக் கொன்றவர். செல்லக்கிளியின் துரித அசைவுகளுக்காகவும், சூழ்நிலையினை அவதானித்துச் செயற்படும் விவேகத்திற்காகவும் பிரபாகரன் அவரை கண்ணிவெடித் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தார். வீதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத நிலையிலிருந்த கண்ணிவெடியைப் பரிசோதித்த ராணுவ குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அது புலிகளால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தினர். அக்குண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளும் சரியான முறையில் அடைக்கப்பட்டிருக்கவில்லை. உருக்கு இரும்பிலான கோதுகளினுள் ஐந்து கிலோகிராம் வெடிபொருட்களும்,இரும்புத் துண்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஹொண்டா மின்பிறப்பாக்கியொன்றிலிருந்து இக்குண்டினை வெடிக்கவைக்க மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. பொண்ணாலை வீதியூடாக தினம் தோறும் பயணிக்கும் கடற்படையினரின் ரோந்தைக் குறிவைத்து தமது முதலாவது பரீட்சார்த்த கண்ணிவெடித் தாக்குதலை நடத்தலாம் என்று செல்லக்கிளியும் தோழர்களும் தீர்மானித்தார்கள். காரைநகர் கடற்படை முகாமினுள் குடிநீர் இருக்கவில்லை. முகாமினுள் உப்புத்தண்ணிர்ரே கிடைத்தது. ஆகவே, முகாமின் பாவனைக்காக யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த மூளாய்க் கிராமத்திலிருந்தே குடிநீர் கடற்படையினரால் எடுத்து வரப்பட்டது. ஒவ்வொருநாள் காலையும் இதற்காக முகாமிலிருந்து மூன்று தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் வெளிக்கிளம்பிச் செல்லும். புரட்டாதி 29 ஆம் திகதி, காலை 6:30 மணிக்கு வழமை போல மூன்று தண்ணீர் தாங்கி வண்டிகளுடன் கடற்படை அணியொன்று கிளம்பிச் சென்றது. இந்த அணிக்கு கடற்படை அதிகாரியான செல்வரட்ணம் பொறுப்பாக இருந்தார். முன்னால் சென்ற இரு ஜீப் வண்டிகளில் 12 கடற்படை வீரர்கள் ஏறிக்கொள்ள, கடற்படை வாகனத் தொடரணி மெதுவாக பொன்னாலை வீதியூடாக நகர்ந்துசெல்லத் தொடங்கியது. காரைநகர் பொன்னாலை வீதி புரட்டாதி மாதம் என்பது பொதுவாக யாழ்க்குடாநாட்டைப் பொறுத்தவரையில் வறட்சியான காலமாகும். வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மழைவீழ்ச்சியைக் கொண்டுவரும் காலம் புரட்டாதி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கிறது. யாழ் ஏரியினால் உருவாக்கப்பட்ட மணற்திட்டுக்கள் அவ்வீதியின் இருமரங்கிலும் தொடர்ச்சியாகக் காணப்படும். சில மணற்திட்டுக்களில் சிறிய பற்றைகளும் அவ்வபோது வளர்ந்திருக்கும். வீதியின் தென்முனையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் நான்கு அகழிகளை செல்லக்கிளியும் தோழர்களும் வெட்டினார்கள். இந்த அகழிக்குள் அவர்களால் கொண்டுவரப்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு இணைக்கப்பட்ட நீண்ட மின்கம்பிகள் மணற்மேட்டின் பற்றைகளுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருந்த மின்பிறப்பாக்கிக்கு இணைக்கப்பட்டிருந்தன. மின்கம்பிகள் வெளித்தெரியாவண்ணம் அவற்றின் மீது தாரும், மணலும் கொட்டப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. மின்பிறப்பாக்கிக்கு அருகில் ஒளிந்திருந்த செல்லக்கிளி கையில் கண்ணிவெடியினை இயக்கும் கருவியை வைத்திருந்தார். மின்பிறப்பாக்கியை இயக்குவதற்குப் பொறுப்பாக அருணாவும் அருகில் இருந்தார். வழமைபோல, அதே நேரத்திற்கு கடற்படையின் வாகனத் தொடரணி அவ்வீதியூடாக வந்தது. வாகனங்களின் வேகத்தைத் தவறாகக் கணிப்பிட்ட செல்லக்கிள், தொடரணியில் முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடியின் இயக்கு கருவியை அழுத்திவிட்டார். முதலாவது கண்ணிவெடி வெடித்துச் சிதறியபோது உள்ளிருந்த இரும்புத் துண்டுகளும், கற்களும் மணலும் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. அவ்வெடிப்பு சுமார் ஒரு மீட்டர் ஆளமான அகழியொன்றை வீதியில் ஏற்படுத்தியது. ஆனால், மீதி மூன்று கண்ணிவெடிகளும் வெடிக்கத் தவறிவிட்டன. தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தன்னுடன் இருந்த அனைவரையும் தாம் வந்திருந்த மினி பஸ் நோக்கி ஓடுமாறு கட்டளையிட்டார் செல்லக்கிளி. அருணா மின்பிறப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பாரம் மிகுதியால் அவர் சிரமப்பட்டதுடன், ஏரிக்கரை மண்ணில் அவரது கால்கள் புதைய ஆரம்பித்தன. ஆகவே, வேறு வழியின்றி, மின்பிறப்பாக்கியை அவ்விடத்திலேயே விட்டு அவர் ஓடத் தொடங்கினார். கடற்படை அணிக்கு முன்னால் 50 இலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த புலிகளை நோக்கிக் கடற்படையினர் ஒரு துப்பாக்கி வேட்டையேனும் தீர்க்க நினைக்கவில்லை. இத்தாக்குதல் குறித்த விசாரணையில் சாட்சியளித்த செல்வரட்ணம், தனது வீரர்கள் அனைவரும் தமக்கு முன்னால் நடப்பதைப் பார்த்து அதிர்சிக்குள்ளாகி விக்கித்து நின்றுவிட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் பிரபலமான மிட்சுபிஷி ரோசா மினிவான் கடற்படையினர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நடப்பதை அறியமுன்னர், புலிகள் அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். சுமார் 400 மீட்டர்கள் வரை ஏரிக்கரை மணலில் ஓடி, தமக்காகக் காத்து நின்ற ரோசா பஸ் வண்டியில் ஏறி மூளாய் நோக்கித் தப்பொஇச் சென்றது புலிகளின் அணி. முதல் நாள் இரவு கடத்தப்பட்ட அந்த பஸ்வண்டியில் மூளாயிலிருந்து பொன்னாலைப் பகுதிக்கு புலிகளின் தாக்குதல் அணி வந்திருந்தது. தாக்குதல் தோல்வியின் பின்னர், மயிரிழையிலேயே அவர்கள் தப்பிச் சென்றார்கள். கடற்படை சுதாரித்துக்கொண்டு தாக்குதலில் இறங்கியிருந்தால் புலிகளின் தாக்குதல் அணியில் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள். இத்தாக்குதல் தொடர்பாக நடந்த விசாரணைகளில் செல்வரட்ணத்தை விசாரித்த உயரதிகாரி, "நீங்கள் அன்று சுட்டிருந்தால், புலிகளின் முதுகெலும்பை முறித்திருக்கலாம்" என்று ஆத்திரத்துடன் கத்தினார். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியே கண்ணிவெடித் தாக்குதலை புலிகளின் தாக்குதல் முறைகளில் இலங்கை படைகளுக்கு கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதமாக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கும் உத்வேகத்தினைக் கொடுத்திருந்தது. பின்னாட்களில் நடைபெற்ற புலிகளின் பல வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்களையடுத்து, தெற்கின் ஊடகங்கள் உள்நாட்டுப் போரினை. "கண்ணிவெடிப் போர்" என்று அழைக்கும் நிலையும் உருவாகியிருந்தது. இராணுவத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நடமாட்டத்தை முடக்கவும் கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் மிகவும் துல்லியமாகப் பாவிக்கத் தொடங்கினர். செல்லக்கிளியைப் பொறுத்தவரையிலும் இத்தாக்குதலின் தோல்வி அரிய சந்தர்ப்பம் ஒன்றினைத் தவறவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கம் மீதும் கடுமையான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதும், தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதுமான ஒரு தாக்குதலை புலிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்க முடியாது போய்விட்டது. யாழ்ப்பாணக் கோட்டை 2019 இல் ஆனால், இத்தாக்குதல் தோல்வியினால் எல்லாமே இழந்துவிட்டதாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையில் அன்று காலைவரை தங்கியிருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு இக்கண்ணிவெடி முயற்சி பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சினமடைந்து காணப்பட்டார். இக்கண்ணிவெடித்தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு தேசிய பாதுகாப்புச் சபையினை அவர் உடனடியாகக் கூட்டியிருந்தார். இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம், வடமாகாண இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க, வடமாகாண உதவி ராணுவத் தளபதி லயனல் பலகல்ல, கப்டன் சரத் முனசிங்க, யாழ்ப்பாணத்திற்கான ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி உட்பட பல மூத்த ராணுவ பொலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இலங்கை ராணுவத்தின் பேச்சாளராகப் பின்னாட்களில் கடமையாற்றிய கேணல் சரத் முனசிங்க ஜெயவர்த்தன மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். புலிகளின் மீளெழுச்சி பற்றி தனக்குத் தெரியத் தராமைக்காக கப்டன் சரத் முனசிங்கவை அவர் கடுமையாக வைதார். முனசிங்கவைப் பார்த்து ஜெயார் பின்வருமாறு கேட்டார், "பிரபாகரன் தற்போது எங்கே?". "அவர் மதுரையில் இருக்கிறார்" என்று முனசிங்க பதிலளித்தார். கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரென்று கேட்டறிந்துகொண்ட ஜெயார், "இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறியாதுவிட்டால், எமக்குப் பெரும் பிரச்சனையாக இது மாறச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் கூறினார். ஆனால், தனக்கெதிராக நடத்தப்பட்ட ஹர்த்தாலினாலோ, அல்லது தனது வருகையினையொட்டு நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலினாலோ ஜெயார் பயந்து ஓடிவிடவில்லை. தனது திட்டத்தின்படியே யாழ்ப்பாணம் முத்தவெளியரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஜெயாருக்கு முன்னதாக காமிணி திசாநாயக்க மேடையில் பேசினார். தனது பேச்சின் நிறைவில் , "எமது தலைவர் இப்போது உங்கள் முன் உரையாற்றுவார். அவர் உங்களிடத்தில் முக்கியமான விடயம் ஒன்றுபற்றிப் பேசுவார்" என்று கூறி முடித்தார். அடுத்ததாக ஜெயவர்த்தன பேசத் தொடங்கினார். தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் பற்றித் தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாக தான் தமிழர்களின் பிரச்சினை குறித்து அறிந்துகொண்டதாக அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றை உள்ளடக்கியிருந்ததாகவும் அவர் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கானஅடிப்படைகளை தான் உருவாக்கியிருப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவிருப்பதாக அவர் கூறினார். தனது அடுத்த இலக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதே என்று கூறிய ஜெயார், அதற்கான மக்களை ஆணைக்காகவே தான் தமிழ் மக்களிடம் வந்திருப்பதாகவும் கூறினார். ஈரோஸ் அமைப்பினரால அனுப்பப்பட்ட இளைஞர் ஒருவர் கூட்டத்தில் இருந்து எழுந்து, "அப்படியானால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து எதற்காகப் பாதயாத்திரை சென்றீர்கள்?" என்று ஜெயாரைப் பார்த்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "ஆம், நான் எதிர்த்தேன். இனிமேலும் யாராவது அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்க நினைத்தாலும், நான் மீண்டும் கண்டிக்குப் பாத யாத்திரை போவேன்" என்று அகம்பாவத்துடன் அந்த இளைஞனைப் பார்த்துக் கூறினார். ஆனால், ஜெயார் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மேடையைச் சுற்றியிருந்த தூண்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சில ஈரோஸ் இளைஞர்கள் அறுத்தெறிந்தார்கள். இதனையடுத்து மேடை சரிந்துவிழ, மேடையிலிருந்த காமிணியும், ஜெயாரும் கீழே விழுந்தார்கள். ஆனால், ஜெயாருக்கு உடம்பில் காயங்கள் எதுவும் படவில்லை. ஆனால், அவரது இதயத்தில் பலமான அடியொன்று விழுந்துவிட்டது. 79 வயதான ஜெயாரின் 50 வருடகால அரசியல் வாழ்க்கையில் அன்றுபோல் என்றுமே அவர் அவமானப்பட்டதில்லை. ஆகவே, தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற அவரது வெறி இன்னும் இன்னும் அதிகமாகியது.
  11. தாக்குதலில் இறங்கிய புலிகள் நெல்லியடித் தாக்குதல் சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய ராணுவத்தை ஒத்த படையொன்று தனக்கும் அமையவேண்டும் என்ற பிரபாகரனின் விருப்பம் இயல்பானதே. ஏனென்றால், அவர் தனக்கு விசுவாசமான போராளிகளை தன்னுடன் சேர்த்து வைத்திருந்தார். சுமார் 25 போராளிகள் நன்கு பயிற்றப்பட்ட நிலையில் தமது அச்சுவேலி முகாமில் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள். ஜெயவர்த்தனவின் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் கடற்படைக்கும் அவர்களின் பாணியிலேயே பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மாத்தையாவின் தலைமையில் தயாராகிய புலிகளின் தாக்குதல் அணி, மூன்றுவகையான கெரில்லாப் போர்த் தந்திரங்களைப் பரீட்சித்துப் பார்த்திருந்தது. பதுங்கியிருந்து தாக்குவது, கண்ணிவெடிகளை வெடிக்கவைத்துத் தாக்குவது மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்குவது ஆகியவையே அவர்கள் பரீட்சித்துப் பார்த்தவை. இதற்கான பயிற்சிகளை அவர்கள் ஆடி 2 ஆம் திகதி முதல் ஐப்பசி 27 வரையான காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தனர். இதற்கு முன்னர், சீலன் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 ஆம் திகதி ராணுவத்தினர் மீது நடத்தியிருந்த தாக்குதலைத் தவிர, புலிகள் பெரும்பாலும் பொலீஸ் பரிசோதகர்கள், உளவாளிகள், பொலீஸாரோடு சேர்ந்து இயங்குபவர்கள் மீதே தமது தாக்குதல்களை நடத்தி வந்திருந்தார்கள். ஆனால், புலிகளின் தற்போதைய அணி புதிய தாக்குதல் உத்திகளைப் பரீட்சித்துப் பார்த்ததுடன், குறுகிய நேரத்தில் எதிரிக்கு அதிக இழப்பினை ஏற்படுத்தும் தாக்குதல் முறைகளையும் பரீட்சித்திருந்தார்கள். மறைந்திருந்தும் தாக்குதலுக்கு பொறுப்பாக ஷங்கர் நியமிக்கப்பட்டார். கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு செல்லக்கிளி பொறுப்பாக நியமிக்கப்பட்டதோடு, சீலன் ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஷங்கர், செல்லக்கிளி, சீலன் ஆகிய போராளிகள் பிரபாகரனால் புத்திசாதூரியம் கொண்டவர்களாகவும், துணிந்தவர்களகவும், செயற்திறன் மிக்கவர்களாகவும் கணிக்கப்பட்டிருந்தனர். செல்வச்சந்திரன் சத்தியநாதன் - ஷங்கர் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு அண்மையில் இருக்கும் கம்பர்மலையில் ஆசிரியிரகாப் பணியாற்றிவந்த செல்வச்சந்திரன் அவர்களின் புத்திரனே ஷங்கர் என்று அழைகப்பட்ட சத்தியநாதன் ஆகும். சுரேஷ் என்றும் அழைகப்பட்ட ஷங்கருக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். கம்பர்மலை பொதுநூலகத்திற்கு அருகிலிருந்த பண்டிதரின் வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தூரத்தில் ஷங்கரின் வீடு அமைந்திருந்தது. பண்டிதரோடு ஒன்றாகப் படித்துவந்த ஷங்கர், தனது 20 ஆம் வயதில் புலிகளோடு தன்னை இணைத்துக்கொண்டார். ஷங்கர்,1961 ஆம் ஆண்டு ஆனி 19 ஆம் திகதி பிறந்தார். 1981 ஆம் ஆண்டு சென்னையில் வாழ்ந்துவந்த ஷங்கரை பொலீஸார் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பிரபாகரன் 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பிவைத்தார். புலிகள் இயக்கத்தின் நற்பெயரையும், சரித்திரத்தினை உமா மகேஸ்வரன் உரிமைகோறுவதை தடுத்து நிறுத்துவதற்கு, புலிகள் பாரியதொரு தாக்குதலில் ஈடுபடவேண்டும் என்று பிரபாகரன் விரும்பிமார். ஆனைக்கோட்டை பொலீஸ்நிலையம் மீதான தாக்குதல், கிளிநொச்சி வங்கிக் கொள்ளை ஆகிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் புளொட் அமைப்புப் பற்றியும் தமிழ் மக்கள் பேசத் தொடங்கியிருந்தனர். 1981 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீதான தாக்குதலையடுத்து சீலனின் பெயர் பிரபலமாகி வந்ததையடுத்து, ஷங்கருக்கும் வாய்ப்பொன்று அளிக்கப்பட்டது. அதன்படி அவர் மறைந்திருந்து தாக்கும் திட்டத்தை வகுத்தார். வல்வெட்டித்துறைப் பகுதியைச் சுற்றி இரவு ரோந்தில் ஈடுபடும் பொலீஸ் அணிமீது தாக்குவதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள். சுமார் ஒருவாரகாலமாக இந்த இரவுநேரப் பொலீஸ் ரோந்து அணியின் நடமாட்டங்களை அவதானித்து வந்த ஷங்கரும் அவரது தோழர்களும், நெல்லியடிச் அந்திக்கு அண்மையாக அமைந்திருந்த ஆளரவமற்ற பகுதியில் தமது தாக்குதலை நடத்துவதென்று முடிவெடுத்தார்கள். அன்றிரவு ஷங்கரும், அவரது தோழர்களும் வீதியின் இருமருங்கிலும் மறைந்துகொண்டு பொலீஸ் ரோந்து அணிக்காகக் காத்திருந்தனர். சுமார் 7:30 மணியளவில் தொலைவில் தெரிந்த பொலீஸ் வாகனத்தின் விளக்குவெளிச்சத்தைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. தனது தோழர்களை நிலையெடுத்து ஆயத்தமாகுமாறு ஷங்கர் பணித்தார். பொலீஸாரின் ஜீப் வண்டி அவர்கள் மறைந்திருந்த பகுதிக்கு அண்மையாக வந்தபோது, ஷங்கர் வாகனத்தை ஓட்டிவந்த கொன்ஸ்டபிள் ஆரியரத்ன மீது துப்பாக்கியால் சுட்டார். அவரின் தலையைத் துளைத்துக்கொண்டு சன்னம் பாய, வாகனத்தின் தடுப்புக்களை பலமாக அழுத்திக்கொண்டே அவர் சாய்ந்து உயிர்விட்டார். கடுமையாக அதிர்ந்துகொண்டு ஓய்விற்கு வந்தது பொலீஸாரின் ஜீப் வண்டி. வாகனத்திலிருந்த ஏனைய பொலீஸார் சுதாரிக்கு முன், மீண்டும் அவர்களை நோக்கிச் சுட்டார் ஷங்கர். வாகனத்திலிருந்த கொன்ஸ்டபிள் குணபாலா கொல்லப்பட, மீதமிருந்தவர்களில் அருந்தவராஜா, மல்லவராச்சி ஆகிய பொலீஸ் கொன்ஸ்டபிள்களை ஷங்கரின் தோழர்கள் சுட்டுக் கொன்றனர். சாரதிக்கு அருகில் அமர்ந்துந்த பொலீஸ் பரிசோதகர் திருச்சிற்றம்பலம், மற்றும் கொன்ஸ்டபிள்கள் சிவராஜா , ஆனந்த ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். பொலீஸாரிடமிருந்த துரிதகதியில் ஆயுதங்களை களைந்த புலிகள், வீதியால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றினை மறித்து, சாரதியையும் பயணியையும் இறக்கிவிட்டு, அதில் ஏறித் தப்பிச் சென்றனர். வழமைபோல, இத்தாக்குதலுக்குப் பழிவாங்க பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியது இலங்கைப் பொலீஸ் படை. நெல்லியடி, அல்வாய், வதிரி, கரவெட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளையும், கடைகளையும், வாகனங்களையும் எரித்த பொலீஸார், அப்பகுதியிலிருந்து சந்தேகத்தின் பேரில் 20 இளைஞர்களையும் இழுத்துச் சென்றனர். பொலீஸார் மீது நெல்லியடியில் புலிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மறுநாளே அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் அறிக்கையொன்றினை வெளியிட்டனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியின் தலைவர்களால் விடுக்கப்பட்ட கண்டனத்தை அமைச்சர் சிறில் மத்தியூ வரவேற்றிருந்தார். தாம் ஒருபோதும் வன்முறையினை ஆதரிக்கப்போவதில்லை என்று தமிழர் ஐக்கிய முன்னணி கூற, "பயங்கரவாதிகளின் வன்முறைகளை கண்டித்தமைக்கு நன்றி" என்றி சிறில் மத்தியூ அவர்களைப் பாராட்டினார். சிறில் மத்தியூவின் இந்த பாராட்டுதல்கள் வழமையானதாகத் தெரிந்தாலும், போராளிகளுக்கும் முன்னணியினருக்கும் இடையே உருவாகி வந்த பிளவினை ஆளமாக்கும் ஜெயாரின் கைங்கரியமே இதன்பின்னாலும் இருந்தது என்றால் அது மிகையில்லை.
  12. 🙏KALIYUGAVARADHAN🙏 · Rejoindre Raji Raji · · நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர். தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை... பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன். வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார். நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்ஸ் எனக்கு பறிமாறினார்கள். மிகவும் சுவையான உணவு நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர். அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார். எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையலறைக்கு அறிவுறுத்தினார். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள் அது தான் #வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே. அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்... கவலை கொள்ளாதீர்கள்... கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை தலைமை சமையல்காரர் கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும். நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது.......! 😂
  13. நாம் ஏன் அங்கு போய் வாழ ஆசைப்படுகிறோம் எனில் எங்கள் எல்லோரினதும் சைல்ட் ஹூட் மெமரி அங்கேயே தங்கி உள்ளது, நாம் மீண்டும் அந்த பருவத்திற்கு சென்று வர ஆசை படுகிறோம்.ஆனால் தாயகம் அதேமாதிரி எங்களின் காலத்துடன் நின்று விட்டதா எனில் இல்லை . தாயகம் எங்களால் விரும்பப்படாத பல மாற்றங்களை உள்வாங்கி அவற்றினூடே எங்களை வரவேற்கிறது. அப்பா அம்மா அல்லது எங்களின் சகோதர சகோதரிகள் போன்ற உறவுகள் இருக்கும் வரையிலும் எங்களால் அங்கு போய் தங்கி இருக்க இயலுமானதாக இருக்க கூடும் . அவர்களின் பின்னான கால பகுதியில் தனிமை எங்களை அலைகளிக்க கூடும். பாதுகாப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் கிராம பகுதிகளில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் முதன்மையானதாக இருக்க கூடும்
  14. கடற்புலி மாவீரர்கள் லெப். கேணல் மாறன் எ குன்றத்தேவன் லெப் கேணல் முல்லைமகள் படிமப்புரவு: https://veeravengaikal.com/
  15. வணக்கம், ஆரோக்கியமான உரையாடல்களுக்காகவும் யாழ் கள உறவுகளுக்கிடையேயான இலகுவான மற்றும் சுமூகமான கருத்தாடல்களுக்கான மேடையாகவும் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை, பல முறை விதி மீறல்களை பற்றி குறிப்பிட்டும் அவற்றை அலட்சியம் செய்து யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் எதிராகவும், களத்தில் நீக்கப்படுகின்ற விதி மீறல்களுக்குரிய கருத்துகளை வைப்பதற்கான தளமாகவும்,குழுவாதத்தை தூண்டுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையால் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது. நன்றி நிர்வாகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.