Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்18Points87993Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்15Points38771Posts -
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்12Points8557Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்11Points2960Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/08/23 in all areas
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
6 points6 points
- இலங்கையில் ஆறு மாதங்கள்
4 pointsபதினெட்டு ஒரு பத்து நிமிடங்களில் எனது சித்தியையும் கூட்டிக்கொண்டு வந்துவிட சித்தி வழமையாக நான் அழைக்கும் ஓட்டோக்காரருக்கு போன் செய்ய அவரும் உடனேயே வந்துவிடுகிறார். நான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். இன்னமுமே எதுவும் தெரியவில்லை. சித்தியை அழைத்துவந்த உறவினரின் வீடு அருகிலேயே இருப்பதனால் அவர் ஸ்கூட்டியை தன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற நான் தலையாட்டுகிறேன். அவரிடம் ஸ்கூட்டியில் வேலை செய்பவர்களுக்கான உணவு இருக்கு. தயவுசெய்து அவர்களுக்கு அதைக் கொண்டு சென்று கொடுக்க முடியுமா என்று கேட்க ஓமக்கா நான் கட்டாயம் கொண்டுபோய் குடுக்கிறன் என்கிறார். உது இப்ப முக்கியமோ என்கிறா சித்தி. சரியில்லை சித்தி அவர்களுக்காகச் சமைத்தது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறேன். அதன்பின் அவர் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக்கொள்ள நான் கண்களைத் திறக்காமலேயே இவ்வளவும் கதைக்கிறேன். எங்கே கொண்டுபோறது என ஓட்டோக்காரர் கேட்க பெரியாசுபத்திரி என்கிறா. அங்க சரியான சனமாய் இருக்கும். தெல்லிப்பளைக்கே கொண்டுபோவம் என்று அவர் சொல்ல ஓட்டோ நகர்கிறது. ஓட்டோவுக்குள் இருக்க இருக்க முழங்கால் நோவெடுக்கிறது. எவ்வளவு நேரம் எடுத்தது என்று தெரியவில்லை. மருத்துவமனை வந்துவிட நீங்கள் இருங்கோ. நான் போய் அவையைக் கூட்டிக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போக, நான் கண்ணைத் திறக்கிறேன். கண் கண் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சக்கரநாற்காலியுடன் ஒருவர் வர ஓட்டோக்காரர் பக்கத்தில் வருகிறார். இறங்கி இதில இருங்கோவென்று சொல்ல நான் ஒருவாறு இறங்கி இருக்கையில் அமர, அவர் என்னைத் தள்ளிக்கொண்டு செல்ல சித்தியும் ஓட்டோக்காரரும் வருகிறார்கள். இடது முழங்காலும் வலது பாதமும் விண் விண் என்று தெறிப்பதுபோல் இருக்கு. அங்கு மூன்று மருத்துவத் தாதியரும் இரு மருத்துவர்களும் நிற்கின்றனர். அன்று பெரிதாக ஆட்களும் இல்லைப்போல. ஒரு பெரிய கோல் போன்ற பகுதியில் ஒரு இருபது கட்டில்கள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் தாயும் மற்றும் ஒரு வயதுபோன பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர். என் பெயர் விபரம் எல்லாம் பதிந்து என்ன நடந்தது என்று கேட்டு எழுதிவிட்டு இருங்கோ வைத்தியர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் உள்ள அறை ஒன்றுக்குள் எல்லோரும் சென்று கதைத்து சிரித்து ஏதோ அதுக்கே வந்ததுபோல் இருக்கின்றனர். ஒரு தாதி மருத்துவர் ஒருவரைப் பார்த்து கிரிபத்தும் இருக்கு சாப்பிடுங்கோ என்றுவிட்டு அப்பால் செல்கிறார். நான் அந்த வாங்கிலேயே இருக்கிறேன். வாங்கில் தொடர்ந்து பலகையை அடிக்காது அதிக இடைவெளி விட்டு அடித்திருக்க அதுவேறு பயங்கர நோவை ஏற்படுத்துகிறது. வைத்தியர் வந்து சும்மா வாயால் கேட்டுவிட்டு ஒரு ஏற்பூசி போட்டுவிடுங்கோ. நாளைக்குத்தான் எக்ஸ்றே எடுக்கலாம் என்கிறார். நாளை வரை எக்ஸ்ரே எடுக்காமல் இருக்க ஏலாது எனக்குச் சரியான நோவா இருக்கு என்கிறேன். இண்டைக்கு புது வருடம் எண்டதால எக்ஸ்றே எடுக்கிறவர் வரமாட்டார் என்றவுடன் நான் அப்ப வேறு மருத்துவமனைக்குப் போறன் என்கிறேன். உடனே அவர் இல்லை இல்லை நான் எதுக்கும் வேறை யாரையும் வரச் சொல்லுறன். பொறுங்கோ என்றுவிட்டுப் போக தாதி ஊசியைக் கொண்டுவந்து போடுறா. அதன்பின் மீண்டும் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று கதைத்துச் சிரிப்பதும் உண்பதுமாக இருக்க, இன்னொரு தாதி வர எத்தனை மணிக்கு எக்ஸ்றே எடுப்பார்கள் என்கிறேன். ஒண்டரைக்குத்தான் அவர் வருவார் என்றுவிட்டு அவ செல்ல நான் சித்தியை தேவையில்லாமல் ஏன் நிற்பான். போங்கோ. எக்ஸ்றே முடிந்ததும் நான் ஓட்டோவுக்குப் போன் செய்கிறேன். எனக்கு தண்ணீர் போத்தல் மட்டும் வாங்கித் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்க ஓட்டோக்காரர் சென்று வாங்கி வருகிறார். அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா. என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா. நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன். அக்கா எழும்புங்கோ என்று கூப்பிடுவதுபோல் கேட்க ஓட்டோக்காரர் இரு பைகளுடன் நிற்கிறார். எக்ஸ்றே எடுத்தாச்சோ என்று கேட்க இல்லை என்று தலையாட்டுகிறேன். நான் ஒருவாறு எழுந்து கட்டிலுக்கு விரிப்பை விரித்துவிட்டு மீண்டும் அமர அவர் உணவுக்கான பையைத் தந்துவிட்டு தாதிமார் நிற்குமிடம் சென்று எப்போது எக்ஸ்றே எடுப்பினம் என்று கேட்க இன்னும் ஒன்றரை மணித்தியாலம் செல்லும் என்று கூற அவர் வந்து என்னிடம் விடையத்தைச் சொல்லி அக்கா நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். எல்லாம் முடிந்ததும் போன் செய்யுங்கோ என்றுவிட்டுப் போக வளவில் வேலை செய்பவரிடம் இருந்து போன் வருகிறது. அக்கா இப்பதான் அண்ணை சாப்பாடு கொண்டுவந்து தந்ததிட்டுப் போறார். மோட்டசயிக்கிளோட விழுந்து அடிபட்டிட்டுது எண்டு சொன்னவர். இப்ப உங்களுக்கு ஓகேயோ என்கிறார். ஓம் இன்னும் எல்லாம் முடியேல்லை என்றுவிட்டு அவர்களின் வேலை பற்றிக் கேட்க, அக்கா நன்றி அக்கா உதுக்குள்ளையும் சாப்பாட்டைக் கொண்டுபோய் குடுக்கச் சொல்லியிருக்கிறியள். நாங்கள் பாண் வாங்கிச் சாப்பிட்டிருப்பம் தானே என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார். அதனால் என்ன வடிவாச் சாப்பிட்டுவிட்டு வேலையைச் செய்யுங்கோ என்கிறேன். அதன்பின் நான் எனது உணவை எடுக்கிறேன். பக்கத்தில் இருக்கும் முதியவரை சாப்பிட்டிட்டீங்களோ என்று கேட்க இல்லைப் பிள்ளை. என்ர மகள் வாறன் எண்டவள். இன்னும் காணேல்லை என்றவுடன் கொஞ்சம் தாறன் நீங்களும் சாப்பிடுங்கோ என்றபடி அவரின் பதிலை எதிர்பாராது அவரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்க எந்த மறுப்பும் கூறாது வாங்கி உண்கிறார். அதன்பின் தூங்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எப்போது என்னை அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் சக்கர நாற்காலியுடன் வந்து என்னை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுகிறார். மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு. மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை. கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன். அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர் இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும். நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா. உடனே நான் எனக்கு சிங்களம் தெரியாது அதனால் நீங்கள் என் பிரச்சனைதான் கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எனக்கும் புரியும்படி கதையுங்கள் என்று சொல்கிறேன். அவவுக்கு தமிழ் வடிவாத் தெரியாது என்கிறார் வைத்தியர். அப்ப என்னுடன் தமிழில் தானே கதைத்தவ என்கிறேன். ஓகே இப்ப உங்கள் பிச்சனை என்ன என்கிறார். நான் போன்சார்ச் பற்றிச் சொல்ல, நீங்கள் கோவிக்கவேண்டாம். இதில சார்ச் செய்ய அனுமதி இல்லை என்றவுடன் நான் வெளியே செல்ல எனக்கே செல்கிறீர்கள் என்கிறார். நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன். நடந்தது சரியான நோவெடுக்க அதில் இருந்த ஒரு இருக்கையில் யாராவது வருக்கிறார்களா என்று பார்த்தபடி இருக்க மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் என்னைக் கடந்து செல்ல தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்க, போனவர் நின்று என்ன என்கிறார். நான் விடயத்தைக் கூற பக்கத்தில ஒரு கடையும் இல்லை. ஒரு ஐந்து நிமிடம் போனால்தான் ஒரு கடை இருக்கு. பொறுங்கோ நான் என மோட்டார் சயிக்கிளைக் கொண்டுவாறன் என்றுவிட்டு எடுத்துக்கொண்டுவர நான் இரண்டாயிரம் ரூபாய்களை எடுத்துக் கொடுக்க அவர் சென்று வாங்கி வருகிறார். அவருக்கு 1000 ரூபாய்களைக் கொடுத்து தம்பி உங்கள் பெற்ரோல் காசுக்கு வைத்துக்கொள்ளுங்கோ என்று கூற வாங்கிக் கொள்கிறார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல இரண்டு வைத்தியர்கள் நிற்க என் ரிசல்ட் வந்துவிட்டதா என்கிறேன். அது நாளைக்குத்தான் வரும் என்கின்றனர். எனக்கு உடனே வெளிநாடு நினைவில் வர, எக்ஸ்றே எடுத்தது வர நாளையாகுமா என்கிறேன். இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார். நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது. போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள் கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது. அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன். அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.4 points- கோயிலை கட்டுவது எதனாலே?
3 pointsஅப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்கிப் பயணிக்கும் போது சாரதி லோகேஸ் ஒரு கோயிலுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினார். “சீதை அம்மன் கோயிலை இந்திய அரசின் உதவியுடன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் புதுசாக்கி இருக்கினம். கும்பிட்டு விட்டு வாறன்” என்று சொன்னவர் கோயிலுக்குள் சென்று விட்டார். என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் கோயிலுக்குள் சென்றேன். இராமாயணத்தை சுருக்கமாக சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். குரங்குகள் ஆங்காங்கே காணக் கிடைத்தன. பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் அவைகளுக்கு உணவாக இருந்தன. கோவிலுக்கு வெளியே நதி ஓடிக் கொண்டிருந்து. நதிக்குப் பக்கத்தில் இருந்த கற்களில் ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தன. அதில் ஒன்றை தங்க நிறத்தில் வட்டமாக ஏறக்குறைய ஒரு பாதம் போல் உரு மாற்றி இருந்தார்கள். மரம் ஒன்றில் பக்தர்களின் வேண்டுதல்கள் முடிச்சுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. “இந்த மரத்தின் கீழ்தான் சீதை(அம்மன்) தங்கினவ. வேண்டுதல்களை எழுதி இந்த சீதை அம்மன் மரத்தில் கட்டினால் அது பலிக்கும்” என்னருகே வந்த லோகேஸ் பக்தியோடு சொன்னார். “நீங்கள் கட்டவில்லையா? “ என்றேன். “பொதுவா பிள்ளை வரம் வேண்டித்தான் முடிச்சுகளைக் கட்டுறவையள். எனக்கு இன்னும் கல்யாணமே நடக்க இல்லையே” லோகேஸ் சொன்னபோது, பிள்ளை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.’ “அந்த நதியிலேதான் சீதை குளித்தவ. அந்தப் பள்ளங்களைப் பாத்தீங்களே? அது அனுமாரின் காலடிகள்” “அனுமார் காலடி ஒன்றுதானே இருக்கு” “அனுமார் பறந்து வந்து அந்த இடத்தில் குதிச்சதாலை தான் அங்கே பள்ளம் வந்திட்டுது” நான் மேற்கொண்டு லோகேஸிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் கண்டி நோக்கிப் பயணம். “இந்தச் சீதை அம்மன் கோவிலை முத்திரையா சிறீலங்கா வெளியிட்டிருக்கு. இங்கை இருந்து கல் எடுத்து இராமர் கோயிலில் பதிக்க அயோத்திக்கு அனுப்பி இருக்கினம்…..” வழி நெடுக லோகேஸ் சீதை அம்மன் கோயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான். ‘சலசல என அமைதியாக நீர் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழகான இடத்தை அசோக வனமாக்கி அதை பின்னர் கோயிலாக மாற்றி பலருக்கு மூளைச் சலவை செய்து பணம் பார்க்கிறார்கள்’ இப்படி ஒரு நினைப்பு எனக்குள் வந்தது. - கவி அருணாசலம்3 points- இலங்கையில் ஆறு மாதங்கள்
3 pointsபத்தொன்பது எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் நடைபெற்றதால் நான் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை எனினும் வந்தவுடன் கூறுங்கள் சந்திக்கலாம் என்றுவிட்டு இருந்துவிட்டேன். 14 தை சகாரா போன் செய்கிறார். நாளை எங்கள் ஊரில் பட்டத்திருவிழா நடைபெற இருக்கு சுமே. வந்தீர்கள் என்றால் என் வீட்டில் தங்கிப் போகலாம் என்கிறார். நான் செல்வச்சந்நிதி கோயிலுக்கு சில தடவைகள் சென்று தொண்டைமான் ஆற்றில் குளித்துவிட்டு வந்ததுடன் சரி. வல்வெட்டித்துறை எப்படி என்றுகூடத் தெரியாது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று வருகிறேன் என்றுவிட்டு அடுத்தநாள் காலையில் ஓட்டோ பிடித்துக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவுக்கு 3000 என்று பேசி கிளம்பியாச்சு. போய் இறங்கியவுடன் இன்னொரு ஆயிரம் தரும்படிகேட்க ஏன் முதலே 3000 என்று சொல்லித்தானே வந்தது. பிறகென்ன என்றதும் தூரம் கூட என்கிறார். நீங்கள் வந்த தூரத்துக்கு 3000 சரிதானே. னீகள் கேட்பதானால் 500 ரூபாய் கூடத் தருகிறேன். அதைவிடத் தரமாட்டேன் என்கிறேன். யாவரும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு செல்ல எது சகாராவின் வீடு என்று தெரியாமல் போன் செய்ய வாசலுக்கு வந்து கையைக் காட்டுகிறார். வாசலில் ஒரு மலரின் பெயர் எழுதியிருக்க வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது வீடு. உள்ளே சென்றால் மிக விஸ்தாரமாக உயரமாக பிரமாண்டமான அறைகளுடன் அட்டாச் டாய்லெட் பாத்ரூமுடன் கூடிய வீடு என்னைப் பிரமிக்க வைக்கிறது. சினிமாக்களில் வரும் வீடுபோன்று மிக அழகாய் இருக்கிறது. என் வளவில் இப்படி ஒரு வீடு கட்டினால் எத்தனை அழகாய் இருக்கும் என எழுந்த கற்பனையை வேண்டாம் என்று முடிவெடுத்து இழுத்து மூடுகிறேன். அவரின் மருமகளாக வர இருப்பவர் தேநீர் ஊற்றிவர அவரையும் அறிமுகம் செய்துவிட்டு நாம் ஊர் கதை, உலகத்துக்கதை, யாழ்க் கதை எல்லாம் கதைக்கிறோம். கதைத்து முடியவில்லை. கொஞ்சம் வெயில் தணிய நாம் வெளிக்கிட்டு பட்டத்திருவிழாவுக்குக் கிளம்பினால் சகராவின் வீட்டுக்கு அண்மையில் இருக்கும் அவர் சிறுவயதில் படித்த பள்ளி தெரிய குதூகலத்தோடு பள்ளியைப் பற்றிக் கதைக்கிறார். போகவர அவரின் உறவினர்கள் தெரிந்தவர்கள் என நின்றுநின்று கதைத்தபடி செல்கிறோம். பட்டத் திருவிழாவுக்கு வேறு ஊர்களில் இருந்தும் சனங்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கு. வீதிகளும் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட வீதியால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கின்றனர். கடற்கரைப் பக்கமாக செல்ல எக்கச்சக்கமான வாகனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. சாரிசாரியாக சனங்கள் போகின்றனர். கடற்கரை பார்க்க அந்த வெயிலிலும் அழகாக இருக்கிறது. இடையிடையே மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்திசந்தியாக சிறு தெய்வங்களும் கட்டடங்களும் அது பற்றிய கதைகளுமாக சகாரா சொல்லியபடி வர நானும் கேட்டபடி நடக்கிறேன். வானத்தில் தூரத்தில் பட்டங்கள் தெரிகின்றன. மனது குதூகலம் கொள்கிறது. சிறுவயதில் திருவிழாவுக்குச் சென்ற நினைவுகள் வருகின்றன. கிட்டச் செல்லச் செல்ல விலத்த முடியாத சனம். எத்தனையோ விதமான பட்டங்கள், பிரமாண்டமான பட்டங்கள், உருமாறும் பட்டங்கள் என நாலு மூலைப் பட்டம் மட்டுமே பார்த்த எனக்கு இவற்றைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் போய் நின்றால் இருப்பதற்கான இடமே இல்லை. ஒரு அரை மணிநேரம் அதில் நின்றுவிட்டு வேறு பக்கம் செல்கிறோம். அங்கும் சனக்கூட்டம் தான். இருந்தாலும் அங்கு நிற்பதும் பட்டங்களைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக நேரம் கழிகிறது. சகாரா போனை எடுத்து வீடியோ கோலில் கண்மணி அக்காவை அழைக்கிறார். அவர் வந்ததும் அவருடன் கதைக்க தானும் வந்திருக்கலாம் என்கிறார் கண்மணியக்கா. நெட்வொர்க் சரியில்லாததாலும் சன இரைச்சலினாலும் கண்மணியக்கா கதைப்பது வடிவாகக் கேட்கவில்லை. பிறகு கதைப்போம் என்று போனை வைத்துவிட்டுப் பார்க்க ஏற்றியிருந்த பெரிய பட்டங்கள் போதிய காற்று இன்மையால் இறக்கப்பட நாம் அங்கிருந்து வேறு இசை நிகழ்வுகள் நடைபெற இருந்த இடம் நோக்கிச் செக்கிறோம். வழியில் பல ஐஸ்பழ வான்கள் நிற்க சகாரா எமக்கு வாங்கித் தர அதைக் குடித்தபடி நடக்கிறோம். வீதியில் போவதும் வருவதுமாக வாகன நெரிசல்கள். நாம் நடப்பதற்கே இடம் இல்லை. மோட்டார் சயிக்கிளில் வருவோரும் போவோரும் எம்மை யாரும் இடித்துவிடாதபடி நாம் முன்னும்பின்னும் பார்த்தபடி நடக்கிறோம். எமக்குக் கிட்டவாக இரண்டு மூன்று மோட்டார் சயிக்கிள்கள் வருவதும் நிற்பதுமாக சகாரா முன்னே செல்ல நடுவே அவர் மருமகள் நான் அவர்கள் பின்னே செல்கிறேன். போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியபடி அங்காங்கே நிற்க இருந்தாற்போல் ஒருவன். பார்க்க ரவுடி போல இருக்கிறான். எனக்கும் சகாராவுக்கும் அண்மையில் இடிப்பது போல் வருகிறான். என்ன தம்பி கவனமா ஓடுங்கோ என்கிறேன் நான். என்னட்டை சேட்டை விடாதை. தலையிலயோ தட்டுறாய் என்றபடி ஏதேதோ சொல்ல எனக்கோ ஒன்றும் புரியாமல் அவன் என்னைச் சொல்கிறானா அல்லது சகாராவா என்று எண்ண அவன் சகாராவைப் பார்த்துத் திட்டுவது தெரிய தவறுதலாத் தட்டுப்பட்டிருக்கும் தம்பி என்று அவனை நான் அமைதிப்படுத்தப் பார்க்க, நான் வேணும் என்றுதான் அவனுக்கு தலையில அடிச்சனான் என்கிறா சகாரா. எனக்குப் பதட்டமாகிறது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்க அவர் தேவையிலாமல் தனக்குக் கிட்ட அவர் மோட்டார் சயிக்கிளை கொட்டுவர அதுதான் மண்டையில போட்டனான். இவை எங்கள் ஊரவையும் இல்லை.வாற இடத்தில ஒழுங்கா நடக்க வேண்டாமோ என்று சகாரா கேட்க நான் சரிதான் என்கிறேன். தண்ணியும் அடித்திருக்கிறார்கள் போல. இந்தியத் திரைப்படங்களில் சிறிய ரவுடிகள் போலவே இருக்க இன்று என்ன நடக்கப்போகுதோ, கடவுளே காப்பாற்று என்று மனதில் வேண்டிக்கொள்கிறேன். மெதுவாக எனது போனை எடுத்து அவர்களை வீடியோ எடுத்தால் கண்டுவிடுவார்கள் எனப் பயந்து சும்மா கையில்வைத்திருப்பதுபோல் அவர்களின் மோட்டார் சயிக்கிளை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறேன். அதன்பின் இரண்டு மூன்றுபேர் எமக்குகிக்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்கவேணும் என்று கூற எனக்கு எந்தப் பக்கத்தால் ஓடுவது என்று கூடத் தெரியவில்லையே என மனதில் எண்ணுகிறேன். சகாராவோ அசரவில்லை. எங்கள் ஊரில வந்து என்ன தனகல் வேண்டிக்கிடக்கு. வந்தா வந்த அலுவலைப் பாருங்கோ. எங்கடை ஊர் ஆட்களைக் கூப்பிட்டன் என்றா வீடுபோய் சேரமாட்டியள் என்கிறா. அவர்கள் ஊரவர் என்று தெரிந்தபின் சமாளித்து பின்வாங்கிச் செல்ல எனக்குப் பதட்டம் தணியவே இல்லை. அதன்பின் இந்தியாவில் இருந்து வரவளைக்கப்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குச் சென்றால் நிகழ்வு ஆரம்பிக்க இரவாகும் என்றதும் நாம் திரும்பி நடக்கிறோம். சிதம்பராக் கல்லூரி வரும் வழியில் இருக்க அதுபற்றியும் சகாரா கூறிக்கொண்டே வருகிறா. அண்ணரின் வீட்டையும் ஒருக்காப் பார்க்கவேண்டும் என்றதும் வீடு எங்கே இருக்கு வளவு மட்டும்தான் என்றபடி கூட்டிக்கொண்டு செல்கிறா. பார்த்தால் மதில்கள் எல்லாம் உடந்த நிலையில் இருக்க வளவு முழுவதும் மோட்டார் சயிக்கிளை நிறுத்தி வைத்துள்ளனர். மனதில் ஒருவித வலி எழுகிறது. இந்தப் பெரிய வீரனை நீங்கள் நினைக்கவேண்டாமா. அவரின் வீட்டைத்தான் இராணுவம் அழித்தால் அந்த வளவை மாசுபடுத்தாது பாதுகாக்கக்கூட முடியாதவர்களாக அவ்வூர் மக்கள் வாழ்கிறார்களே என்னும் ஆதங்கம் எழுகிறது. சந்தியில் உள்ள ஆலமரத்தடியில் கட்டியிருந்த கட்டில் சிறிது நேரம் இருந்து என்னை அசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் எழுந்து அண்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவர் லண்டனில் வசித்தவர். தற்போது அங்கு வாழ்கிறார். அவருடனும் சென்று கதைத்துவிட்டு களைத்துப்போய் வீடு வருகிறோம். சகாராவின் அண்ணியார் எமக்காக தோசை, சம்பல், சாம்பார் என கொடுத்துவிட பசிக்கு அமிர்தமாக இருக்கிறது. அதன்பின் சகாராவின் சகோதரர்கள் வந்து இயல்பாகக் கதைத்துவிட்டுச் செல்ல வேறு உறவினர்களும் வருகின்றனர். மீண்டும் இரவு ஒன்பது மணிபோல் மிகப் பெரிதாக அழகாக வடிவமைக்கப்படிருந்த டோரா பொம்மை ஊர்வலமாக வந்து ஒரு கோவிலுக்கு அண்மையில் நின்று பொம்மையின் உள்ளே நின்று இருவர் ஆட்டுவிக்க பார்க்க அழகாக இருக்கிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் இளயவர்களும் சிறுவர்களும் குத்துப் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர். அதற்கு ஒரு கதை கூட சகாரா சொன்னார். எனக்கு மறந்துவிட்டது. நடந்து நடந்து கால்கள் சரியான வலி. ஒரு இரண்டு மணி நேரத்தின் பின் வந்து நான்கு பேர் படுக்கக்கூடிய கட்டிலில் நான் மட்டும் படுத்து உடனே தூங்கியும் விட்டேன். அடுத்தநாட் காலை பிந்தி எழுந்து காலை உணவை உண்டு சகாராவுக்கும் எனக்கும் அலுவல்கள் இருந்தபடியால் நான் கிளம்பிவிட்டேன். வரும்போது ஓட்டோ பிடிக்காது பெரிய மினிபஸ்சில் இடங்களைப் பார்த்தபடி யாழ்ப்பாணம் வந்து அங்கு ஒரு திரைப்படமும் பார்த்துவிட்டு ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்கிறேன். சகாராவைச் சந்தித்ததும் பட்டத்திருவிழா அனுபவங்களும் ஒரு நீங்கா நினைவாக எப்போதும் என் மனதில் இருந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நான் அவ்வூர் விடயங்கள் பலதையும் கூறாது விட்டுவிட்டேன். மன்னியுங்கள் சகாரா. அண்ணர் பிறந்து வளர்ந்த இடம் இப்படியாய் இருக்கு.3 points- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Akpnews · ஏறக்குறைய நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பெறுமதியுடன் கையாளப் பட்ட சில்லறைக் காசுகள் இவை. இன்றைய சந்ததி இவை குறித்து எதுவும் அறியாது. படிக்கும் காலங்களில் பத்துச் சதத்துக்கு ஒரு பண் வாங்கலாம். ஒரு பிளேன்டியின் விலை ஐந்து சதம். காலம் செல்லச் செல்ல எந்தப் பெறுமதியும் இல்லாது இவை மறைந்து போயின. பிற்காலத்தில் இவை கள்ளச் சாராயம் (கசிப்பு) தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு! By Ashraf shihabdeen3 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 pointsஇந்தத் தேங்காய்... தலையில் விழும் போது, என்ன சத்தம் கேட்டிருக்கும். 😂2 points- இலங்கையில் ஆறு மாதங்கள்
2 pointsஒரே வழி. அங்கு டொக்டர்களாக இருக்கும் பழைய நண்பர்களுடன் நல்ல நண்பர்களாக இருக்கவேண்டும் அல்லது குடும்ப உறவுக்குள் டொக்டர்கள் இருக்கவேண்டும். என்னுடன் படித்த ஐந்து நண்பர்கள் டொக்டர்களாக இருக்கின்றார்கள்! கைகால் முறிவுக்கு ஒருத்தர்! நரம்புப் பிரச்சினைக்கு ஒருத்தர்! இன்னொருத்தர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்! இவர்களை நம்பிப் போகலாம் என்று இருக்கின்றேன்😊2 points- தமிழனின் சிற்பக் கலை.
2 pointsமுற்றிலும் தவறான தகவல். கீழடி மக்கள் வாழ்ந்த இடம் 2700 ஆண்டுகள் பழமையானது. அக் காலத்திலேயே கோயில்கள் இருக்கவில்லை. 6000 ஆண்டுக்கு முன் எப்படி ? 😂2 points- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்போது ஐம்பது சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கும் மதிப்பு இல்லை.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointமரண அறிவித்தலுக்கு ராசியான பத்திரிகை என்ற படியால் பெயரில் மாற்றம் இராது. 😜1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஎதுக்கும்... ஆபிரிக்க நாட்டு, லங்காஸ்ரீயின் மரண அறிவித்தல் பகுதியில் இவரின் பெயரும், படமும் உள்ளதா என பார்த்து விட்டுத்தான்... ஆளுக்கு மயக்கம் வந்ததா... அல்லது தேங்காய், உரசி சென்றதா என, உறுதியாக கூற முடியும். 😂 🤣1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஇப்படிப் பயந்துகொண்டிருந்தால் ஒன்றும் நடவாது. நாம் அங்கு சென்று வாழ்ந்தாலும் முற்றுமுழுதாக வெளிநாட்டைத் துறந்துவிடவில்லையே. ஒரு இன்சூரன்சைப் போட்டுக்கொண்டு செல்லலாமா என்று பார்க்கவேண்டும். தனியார் வைத்திய நிலையங்கள் மோசமாக இல்லை. நாம் மருத்துவச் செலவுக்கும் சேர்த்தேதான் பணம் வைத்திருக்க வேண்டும் . ஆனாலும் எதற்காக எதிர்மறையாக சிந்திப்பான். உங்கள் நண்பர்களை எமக்கும் அறிமுகம் செய்து வைத்தால் பிரச்சனை தீர்ந்தது.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 point- தமிழனின் சிற்பக் கலை.
1 pointஇந்த "6000 ஆண்டுகள் முன்பு தமிழனுக்குத் தெரிந்த கருக்கட்டல் முறை" பற்றிப் பார்க்கலாம்: MyIndiaMyGlory என்ற ஒரு இணையத்தளம். மோடி ரீமின் "கோமிய விஞ்ஞானம்" உட்பட பல ஜோக்குகளை சீரியசாக சிரிக்காமலே பிரசுரித்து வரும் ஒரு தளம். "பிரிட்டிஷ் காரன் எங்களைப் பாம்பாட்டி நாடு என்றான், இந்தா பார் எவ்வளவு முன்னேற்றமாக இருந்திருக்கிறோம்?" என்பதே இந்த கோமிய இணையத் தளத்தின் மையக் குமுறல். அதன் ஒரு பகுதி தான் இந்த பாம்பு சந்திரனை விழுங்கும் சிற்பத்தை, " விந்து முட்டை இணையும்" கருக்கட்டல் சிற்பம் என்று 4 ஆண்டுகள் முன்பே எழுதியிருக்கிறார்கள். அது இப்போது தான் முகநூல் வழியாக யாழுக்கு வந்திருக்கிறது. இன்னொரு பகிடி: அந்த தளத்தில் "தமிழனின் கண்டு பிடிப்பு" என்று கூட அவர்கள் சிலாகிக்கவில்லை, சோழர்கள் காலத்தில் ஏற்கனவே இருந்த ஆலயம் என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், தமிழுணர்வாளர்கள் மிகுதியைச் சேர்த்து, சோழர் காலத்திற்கு இன்னொரு 5000 ஆண்டுகளையும் கூட்டி விட்டார்கள். வாசித்துச், சிரித்துக் கடந்து போங்கள்! 😂1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஎனக்கு ஏற்பட்டதுதான் உங்களுக்கும் என்று இல்லை. யாழ்ப்பாணத்தில் கார்கில்ஸ் இல் மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். நான் எங்காவது செல்லும்போது டாய்லெட் டிசு கொண்டுதான் திரிந்தேன். என் எழுத்தைப் பார்த்துப் போகாது விடாமல் நீக்கள் போய் உங்கள் அனுபவங்களையும் இங்கு வந்து எழுதுங்கள். இந்தப் படம் எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு அண்ணா. நன்றி எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் அன்றுதொட்டு வறுமை. ஆனாலும் அவர்கள் கூட தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். வீண் பண விரயம் தானே என்றதற்கு காசு போனாலும் கெதியாப் பாத்துப்போடுவினை என்றார். அவருக்கு சித்தி மாதாமாதம் 3000 ரூபாய்கள் கொடுக்கிறார். உண்மைதான் அண்ணா விழுந்த விழுகைக்கு நடக்கவே முடியாமல் இருக்கப்போகிறேன் என்றுதான் எண்ணினேன். கடவுள்தான் காத்தது.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointநான் எழுதிக் களைத்துவிட்டேன். இன்னும் ஓரிரு பகுதிகளுடன் நிறுத்தப்போகிறேன். என்னையே இவர்கள் இந்த ஆடு ஆட்டுகிறார்கள் என்றால் கொஞ்சம் வாய் பேசத் தெரியாத சனங்களை என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். தமிழர் வாழும் பகுதிகளில் தமிள வைத்தியர் இல்லை என்றால் எப்படி சரியான சிகிச்சை கொடுக்கமுடியும் என்று கேட்டதற்கு உங்கள் ஆட்கள் எல்லாம் நல்ல சம்பளம் வேண்டும் என்று வெளிநாடு போனால் வேறு யாரை அனுப்பமுடியும் என்றார் ஒருவர். நன்றி அக்கா1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட உங்கள் மூளை கிரகித்துவிட்டது🤡 அகல் நியூஸ் உங்கள் பினாமித் தளம் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் முன்னர் ஒருவர் திண்ணையில் எழுதியிருந்தார். அதை அடிக்கடி மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா!1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஎன்னாது ஆட்டோவோ??????? நான் சொந்த பிளைட் வாங்கிறன்.. அத்தாரும் நானும் பலாலியிலை போய் இறங்கிறம்.... நாங்கள் ஆரெண்டு காட்டுறம்..1 point- புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
உங்கள் பிள்ளைகள் உயர்கல்வியை முடித்து வேலையில் சேரும்வரை, கடைசிப் பிள்ளைக்கு 24 வந்தபின்தான் நீங்கள் அங்கு போவது நல்லது.1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
1) நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்:- அயலகச் செய்திகளையும் முகப்பில் தெரிய வைக்கலாமே? நேற்று மணிப்பூர் பற்றி நான் அயலகச் செய்தியில் இணைத்த திரி 17 பார்வைகள் பெற்றுள்ளது. அது சம்பந்தமான செய்தி உலக நடப்பில் இணைக்கப்பட்டபோது 108 பார்வைகள் பெற்றுள்ளது. 2) இன்னுமொரு வேண்டுகோள்:- யாழின் தேடும் பகுதியில் கீழுள்ள படத்தில் வருவது போல் தோன்றுகிறது. தேடலுக்கு இடையூறு, அமைப்பு ஒழுங்கையும் கெடுப்பதால் அடுத்த மேம்படுத்தலின் போது கவனியுங்கள்.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointபதினேழு இடையில எழுதினதை விட்டிட்டு வேறு ஒண்டுக்கு வாறன். இணுவிலில இருந்து வாங்கிய வீட்டுக்குப் போவதற்கு ஒவ்வொருதடவையும் 2000 கொடுக்கிறதாலை எதுக்கும் நீ ஒரு ஸ்கூட்டி எடுத்து ஓடன் எண்டு மனிசன் சொல்ல எனக்கும் ஆசை பிடித்துக்கொண்டுது. ஆரைப் பார்த்தாலும் ஸ்கூட்டி. மோட்டார் சயிக்கிளோ அல்லது ஸ்கூட்டி இல்லாத வீடே இல்லைஎண்டு சொல்லலாம். பக்கத்தில இருக்கிற கடைக்குப் போறதுக்கும் நடக்காமல் விசுக்கெண்டு அதிலதான் போயினம். பெண்கள் பின்னால் இரண்டு பிள்ளைகள், முன்னால் ஒரு பிள்ளையை நிக்கவச்சு லாவகமா ஓட்டிக்கொண்டு போறதைப் பார்க்க எனக்கே ஆச்சரியம். காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தால் ஸ்கூட்டிகள் தான். நான் 34 ஆண்டுகளாகக் கார் ஓடுறன். உது ஒடுறது பெரிய வேலையோ எண்டு நினைச்சு நானும் கணவரின் தம்பி மகனுமாக கடை கடையாய் ஏறி இறங்கி ஸ்கூட்டி தேடினால் எல்லாம் படு விலை. ஆறு ஏழு இலட்சங்களுக்குக் குறைய ஒன்றுகூட இல்லை. நீங்கள் நிக்கப்போறது இன்னும் நாலோ ஐந்து மாதங்கள் தானே சித்தி. பழசை வாங்கி ஓடிப்போட்டு விட்டுட்டுப் போனாலும் நட்டம் இல்லை என்று கூறி தனக்குத் தெரிந்த சிலரிடம் கூறி ஒரு ஸ்கூட்டியைக் கண்டுபிடிச்சம் கொக்குவிலில். போய் பார்த்தால் வெள்ளை நிறம். சின்னன். இருந்து பார்த்தால் கால் நிலத்தில வடிவா முட்டுது. என்ன ஒகேயா சித்தி என்றுவிட்டு நாளை இணுவிலில் உள்ள ஒரு கறாச்சின் பெயரைச் சொல்லி கொண்டுவரச் சொல்லியாச்சு. விலை மூண்டு லட்சம் என்று தொடங்கி இரண்டு லட்சம் என்று முடிவாச்சு. நானும் நாளைக்கு வாங்கினால் இரண்டு மூன்றுநாட்கள் ஓடிப் பழகி ஓடலாம் என்ற கற்பனையில் கணவரிடம் சொல்கிறேன். 2 லட்சம் என்றால் சரியான பழைய மொடல் போல இருக்கே என்ற கணவர் தமையனின் மகனுக்கு போன் செய்து விசாரிக்க, ஓம் சித்தப்பா அந்த மொடலுகள் பழுதானால் திருத்த பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்டம் என்கிறார். அப்ப அதை வாங்க வேண்டாம் என்றுவிட்டு தான் ஒரு youtube வீடியோ ஒன்றை எனக்கும் பெறாமகனுக்கும் அனுப்புகிறார். விலை ஐந்து இலட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைய. ஏன் இவ்வளவு காசுக்கு என்கிறேன் நான். நங்கள் இனி அடிக்கடி போகத்தானே போறம். உது இரண்டுபேர் போகவும் வசதிபோல இருக்கு என்று உடனே பணத்தை அனுப்பிவிட அடுத்தநாளே அதை வாங்கியாச்சு. மூன்று நாட்களுக்கு நீங்கள் ஓடலாம். அதன் பிறகு ஒரு வாரத்தில் புத்தகம் வந்துவிடும். ரோட்டக்ஸ் கட்டியபின்தான் ஓடலாம் என்றனர். இப்போதெல்லாம் பிரதான வீதிகளில் மட்டுமன்றி சிறிய உள் வீதிகளில் கூட போலீஸ் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்வது வழக்கமாகிவிட எதுக்கும் மூன்று நாளில் நீங்கள் பழகிவிடுவியள் சித்தி என்று பெறாமகன் உற்சாகப்படுத்த அவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விளையாட்டு மைதானத்துக்குப் போகிறேன். மழை பெய்த தண்ணீரும் சில இடங்களில் தேங்கி நிற்க நான்கு மாடுகளும் கட்டப்பட்டிருக்க எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது. இண்டைக்கு நீங்கள் கனக்க ஓடமாட்டியள் என்று என்னிடம் ஸ்கூபியைத் தந்தால் பயங்கரப் பாரம். ஆனாலும் ஒருவாறு நேராகப் பிடித்து மெதுவா ஒரு ஆறு சுற்றுச் சுற்றிவர பயத்தில் போதும் இன்று என்றுவிட்டு போய்விட்டோம். அடுத்தநாளும் ஒரு அரை மணித்தியாலம் இடதுபுறம் வலதுபுறம் திருப்பிப் பழகி றோட்டில ஒடுவம் சித்தி என்கிறார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எல்லாம் சிறிய வளைவுகளுடன் கூடிய ஒழுங்கைகள். எனக்கு அங்கு ஓடுவதை எண்ணவே பயமாகவும் இருக்கு. ஒரு எல் போட் போட்டு ஒடுவமோ என்றுகேட்க அவர் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்க உங்களுக்கு 8 வருட லைசென்ஸ் தந்திருக்கிறாங்கள். பிறகு போலீஸ் மறிச்சால் தேவையில்லாத பிரச்சனையாயிடும் என்றதும் தான் எனக்குப் புரிய ரோசமும் வருகிறது. மூன்று நாட்கள் முடிந்தபின்னும் புத்தகம் வரவில்லை. அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர். இரு வாரங்கள் இந்தா வருது. அந்தா வருது என்றுவிட்டு அது தொலைந்துவிட்டதாம். புதிதாக அனுப்புகிறார்கள் இன்னும் இரண்டுநாட்கள் பொறுங்கோ என்றபின் நான் போனில் குடுத்த கரைச்சலில் மூன்றுவாரமாகியும் புத்தகம் வராமல் இருக்க அதன் கொப்பியை வற்சப்பில் அனுப்பிவிட கொண்டுபோய் ரோட்டக்ஸ் எடுத்தாச்சு. முதல்முதல் றோட்டில ஓட மிகவும் மெதுவாக ஓடிக்கொண்டுபோக என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை. எல்லாத் தொடருந்துப் பாதைகளும் மீண்டும் போடும்போது மிக உயரமாகவே போட்டுள்ளதால் அதில் நின்று ஏற்றத்தில் திருப்ப பயந்து முதலே இறங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டுபோய் அந்தப்பக்க நேர் வீதியில் மீண்டும் ஏறி உரும்பராய் சந்திவரை 35 ,40 இல் ஓடி சந்திகழிய பெரிதாக வாகனங்கள் முன்புபோல் இல்லை என்பதனால் 50 வரை ஓடி முடிச்சு, கணவருக்கோ மனிசி காசு மிச்சம் பிடிக்கிறாள் என்ற மகிழ்ச்சி. இப்பிடியே ஒருமாதம் இணுவிலுக்கும் வீட்டுக்கும் போய்வர வீட்டு வேலைகளும் நடக்க அடுத்தநாள் வருடப்பிறப்பு. காணியில் தேவையற்ற மரங்கள் பல முளைத்திருந்தன. அதனால் காணியை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்க அடுத்தநாள் புதுவருடம் என்பதால் வேலையை நிறுத்துவோம் என்றவுடன் இல்லை நாங்கள் வேலைக்கு வருகிறோம். வீட்டில நிண்டு என்ன செய்யிறது என்றார்கள். காணியில் வேலை செய்பவர்களுக்கு 3000 ரூபாய்கள் நாட்கூலி என்பதனால் உணவை அவர்களே கொண்டு வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவு கொண்டுவர வேண்டாம் என்றுவிட்டு நான் கொண்டுபோவேன். அவர்கள் மகிழ்வுடன் உண்பதைப் பார்க்க ஒரு திருப்தி இருக்கும். நாளைக்கு ஒரு ஆடு அடிச்சு சமைச்சுக்கொண்டு வாங்கோ என்றார்கள் பகிடிக்கு. நானும் ஒன்றென்ன இரண்டே அடிச்சால் போச்சு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். நாளை அவர்களுக்கு ஆட்டுக்கறி காய்ச்சிக் கொடுத்தால் என்ன என்று யோசனை எழ அடுத்தநாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து மருதனார்மடம் சென்று பெற்றோல் அடித்துக்கொண்டு சந்தையில் மரக்கறிகளும் வாங்கியபின் இணுவில் சந்தைக்குச் சென்றால் மூன்று ஆடுகள் கட்டித் தூக்கி இறைச்சி வாங்க சரியான சனம். 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் 6000 ரூபாய்களுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து கழுவி வெட்ட வெறுத்துவிட்டது. ஏனெனில் லண்டனில் எல்லா இறைச்சியுமே சமைக்கும் பதத்துக்கு வெட்டித் தருவதால் இருபது ஆண்டுகளின் பின்னர் வெட்டுவது கொடுமையாக இருக்க, நல்ல காலம் லண்டனில் இருந்தே கத்தி வெட்டும் பலகை எல்லாம் கொண்டு சென்றதில் தப்பித்தேன் என்ற எண்ணம் எழுந்தது. மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன. சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. ஒரு நான்கு மீற்றர் தூரம்வரை சென்றபின் நின்றுவிட இரு கைகளிலும் சிறு காயங்கள். என்னை யாரோ இருவர் நிமிர்த்தி இருத்த உடனே என் முகத்தைத் தடவக் கையைக் கொண்டுபோகிறேன். தலைக்கவசத்தின் பிளாஸ்டிக் மூடி கையில் பட என் முகத்தில் கீறல் எதுவும் படவில்லை என்று மனதுக்கு அசுவாசமாகிறது. இருந்தாலும் கையை விட்டுத் தடவிப் பார்த்து எதுவும் ஆகவில்லை என்று நிம்மதி ஏற்பட, தங்கச்சி எழும்புங்கோ என என் கைகளைப் பிடித்து இருவர் தூக்குகின்றனர். கால் நோவெடுக்கிறதுதான் என்றாலும் தெரியாதவர்கள் முன் தண்டவாளத்தில் இருப்பது அவமானமாகப்பட, முயன்று எழும்பி அவர்கள் பிடித்தபடி வர, நல்ல காலமடா அக்காவுக்கு கால் முறியவில்லை என்று ஒருவர் சொல்வது கேட்கிறது. அருகில் இருக்கும் கடைக்கருக்கே செல்ல ஒருவர் ஒரு கதிரை கொண்டுவந்து தர அமர்கிறேன். கண்களிரண்டும் கலங்கலாகி எதுவுமே தெரியாமல் கண்களை மூடியபடி சாய, அக்கா நீங்களோ? என்று எனது உறவினர் ஒருவரின் குரல் கேட்கிறது. அவர் யார் என்று புரிந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க முடியாமல் இருக்கு. நான் வேறை யாரோ எண்டு நினைச்சுத்தான் போன்னான். பிறகும் மஞ்சள் நிற ஸ்கூட்டி என்றவுடனதான் நீங்களாய் இருக்குமோ என்று திரும்பி வந்தனான் என்கிறார். கண் திறக்க ஏலாமல் இருக்கு, தலை சுத்துது என்றதும் கடையில் தண்ணீர் போத்தல் ஒன்று வாங்கி என்னைக் குடிக்கச் செய்தபின் இப்பிடியே இருங்கோ அக்கா நான் போய் உங்கட சித்தியைக் கூட்டிவறான் என்றபடி செல்கிறார். ஸ்கூட்டி எங்கே என்றதற்கு பக்கத்திலதான் நிக்குது அக்கா. இந்தாங்கோ திறப்பு என்று என் கைக்குள் திறப்பை வைக்கிறார். என் கைப்பையின் நினைவு வர அதையும் என்னிடம் தந்துவிட்டு கடைக்காரரிடம் பார்த்துக்கொள்ளுங்கோ வாறன் என்றுவிட்டுச் செல்கிறார்.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இலங்கையில் ஆறு மாதங்கள்