Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33035
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/04/23 in all areas

  1. Screencast from 03. nov. 2023 kl. 23.05 +0100.webm சரியாகத் தான் இயங்குகின்றது
  2. உங்களுக்கு அப்பாவி பலஸ்தீன மக்கள்,குழந்தைகளில் சடலங்களின் படங்கள் கிடைக்கவில்லை போலும்...... குப்பைகளுக்குள் தேடுவது போல் தங்கள் உறவினர்களின் சடலங்களை பிணக்குவியலுக்குள் தேடுகின்றார்கள். கொடூரமான படங்களும் என்னிடம் நிறைய கைவசம் இருக்கின்றது. நன்னிச்சோழனுடைய மனித அழிவுகளின் நடுநிலமை கண்டு நான் வெட்கித்தலை குனிகின்றேன்.
  3. இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the Russian top diplomat said MOSCOW, November 2. /TASS/. The International Olympic Committee (IOC) has shown its hypocrisy, having only now, in the context of the Palestinian-Israeli conflict, remembered that athletes cannot bear collective responsibility, Russian Foreign Minister Sergey Lavrov said in the program "Moscow. Kremlin. Putin". "Not only have I seen and read this statement, we have already reacted - our ministry. This is, of course, outrageous. Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the top diplomat said in the program, a fragment of which journalist Pavel Zarubin uploaded to his Telegram channel. "It actively supports everything that meets the interests of Western countries, primarily the United States, and tries to find wordings that generally props up this policy," Lavrov added. Earlier, the International Olympic Committee warned that it would come down hard on athletes and officials who come out against Israeli representatives. The IOC said in a statement that athletes should not bear responsibility for the actions of their governments. At the same time, the IOC is "trying in every possible way to palm off the actions against Russia and Belarus as restrictions that do not violate the Olympic Charter," the top diplomat went on to say. "It's a shame. Of course, the Olympic Committee has discredited itself greatly. And I think it’s not for nothing that at the initiative of President [Vladimir Putin], we will organize a host of sporting events that will be truly international, universal and show respect for those principles enshrined in the Olympic Charter, which the IOC is grossly violating," he summed up.
  4. காலாடுது… உசிரோடதான் இருக்கிறாங்கள் போல..🤣
  5. ரஸ்ய -உக்ரேன் தொடர்பான கருத்துகளில் மேற்குலகின் நிலைப்பாட்டை (✳️கவனிக்க:- உக்ரேன் தரப்பு நிலைப்பாட்டை அல்ல) ஆதரித்தவர்களிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை நிலை புரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்களின் மீசையில் மண்படவில்லை என நிரூபிக்க முயல்கிறார்கள். அதில் ஒரு பிழையுமில்லை. ஏனென்றால் இந்த யுத்தத்தில் யதார்த்தத்தின் பக்கம் நின்றவர்கள் ஒருபோதும் இந்தனைப் போட்டியாகக் கருதவில்லை என்பது என் துணிபு.
  6. 🤣 மேற்கின் நோக்கம் நேட்டோவை விரிவாக்குவது. அது பின்லாந்து அடுத்து மிக விரைவில் சுவீடனும் உள்ளே வர - சுபம். அடுத்தது ரஸ்யாவின் மரபு வழி போரிடும் வல்லமையை அனுமானிப்பது, முடிந்தளவு குறைப்பது. 630 சொச்சம் நாளாக முக்கியும் உக்ரேனில் 20% க்கு கிட்டவே கைப்பற்ற முடிந்தது என்பதன் மூலம் இதுவும் - சுபமே. ஆனால் உக்ரேனின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அது ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் ஆளுமையில் இருந்து நிரந்தர பாதுகாப்பு. உலகின், மேற்கின், அமெரிக்காவின் கவனம் திசை திரும்பினாலும் - உக்ரேனின் கவனம் அதன் பிரச்சனையில்தான் இருக்கும் இல்லையா. ஆகவே அவர்கள் காலை ஆட்டி கொண்டுதான் இருக்க வேண்டும், இல்லாவிடில் கதை முடிந்தது என தூக்கி எரித்து விடுவார்கள். பிகு தனிப்பட்டு, கொரிய போர் போல ஒரு நிரந்தர-தற்காலிக போர் ஓய்வு உக்ரேனில் இப்போ இருக்கும் line of control வழியே வர வேண்டும் என்பதே நான் 600 நாட்கள் முன்பில் இருந்து எழுதி வருவது. அப்படி வரும் போது அது ரஸ்யாவின் பிடியில் இல்லாத உக்ரேனை ரஸ்யா இனிமேல் தொட முடியாத வகையில் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை உக்ரேனுக்கு கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும். 20% நாட்டை விட்டு கொடுப்பது கடினமாக இருந்தாலும், உக்ரேனும் செலன்ஸ்கியும் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன். அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வந்தால் உக்ரேனின் நிலமை மிக மோசமாகும். அமெரிக்க உதவி விலகினால் உக்ரேன் ஒரு மாசம் கூட தாக்குபிடிப்பது கடினம் என்பதையும் நான் என்றோ எழுதியுள்ளேன். ஆகவே அதன் முன்பாக ஒரு ஒப்பந்தத்தை போட்டு இதுவரை அடைந்த முன்னேறேத்தை செலன்ஸ்கி தக்க வைக்க முனையவேண்டும். இதற்கான ஏற்பாடுகள், விரைவில் ரஸ்யா-உக்ரேன்-அமெரிக்கா-ஈயூ சமாதான முனைவு ஒன்று முன்னெடுக்கப்படும் என நான் அறிகிறேன். Winning the war is easier than winning peace. நான் உட்பட யாரும் உக்ரேன் இப்படி 630 நாள் தாண்டி ரஸ்யாவை எதிர்த்து நிற்கும் என நம்பவில்லை. 3 நாளில் கியவ் என தொடங்கிய யுத்தம் இது. கியவின் வாசல் வரை வந்த உலகின் 2ம் பெரிய இராணுவத்தை அவமானகரமாக விரட்டி, டினிப்ரோ நதிக்கு அப்பால் விரட்டி அடித்தது ஒரு பெரு வெற்றியே. ஆனால் அதை தக்க வைக்க வேண்டும். மாபெரும் இராணுவ வல்லுனராய் இருந்து அலை, அலையாய் பெற்ற யுத்த வெற்றிகளை, இராஜதந்திர, அமைதியை வெல்லும் யுத்தத்தில் தோற்றதால் இழந்தவர்கள் நாம். எம்மை போல் அல்லாமல், தன் இயலுமை, எதிரியின் இயலுமை அறிந்து, களம் யதார்த்தம் அறிந்து சமயோசிதமாக உக்ரேனின் தலைமை நடக்கும், நடக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
  7. உண்மையையும் யதார்த்தத்தையும் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தோம்.அதற்கு பதில் கருத்து வைக்காமல் தனிமனித தாக்குதலாக உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகள் அனைத்தையும் நீட்டிச்சென்றார்கள். நான் ஜேர்மனியில் இருந்து கொண்டு ரஷ்யாவின் அரசியல் சார்பாக கருத்து வைத்ததினால் என்னை நன்றி கெட்டவன் என முடித்தே விட்டார்கள்.
  8. ரஸ்யாவுக்கு வந்தா தக்காளி சட்னி..
  9. உக்ரைன் கோமாளியரின் நிலை அந்தோ பரிதாபம் ஆகிவிட்டது. அவர் இன்று இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் குசைன் எப்படி அமெரிக்காவால்... பழிவாங்கப்பட்டாரோ.. அதே நிலை இந்த கோமாளிக்கும் வரும். இதனை எப்பவோ.. சொல்லிட்டம். இப்ப திருப்பிச் சொல்லுறம். The Israel-Gaza war is "taking away the focus" from the conflict in Ukraine, the country's President Volodymyr Zelensky has admitted. Ukraine's counter-offensive in the south has so far made little headway. This has prompted fears of war fatigue among Kyiv's Western allies, with suggestions of growing reluctance in some capitals to continue giving Ukraine advanced weapons and funds. https://www.bbc.co.uk/news/world-europe-67321777 தோக்குற குதிரையில பணம் கட்ட அமெரிக்கனும்.. மேற்குலக எஜமானர்களும்.. எப்பவும் தலையாட்டுவினமோ.. உக்ரைன் புலிக்கேசியாரே.
  10. ஹா ஹா என‌க்கு இந்த‌ ஜ‌ட‌ங்க‌ள் பிடிக்காது தாத்தா ஊர் பழ‌ங்க‌ள் அதிக‌ம் பிடிக்கும்
  11. பெருமாள் நானும் இதைத் தான் பாவிக்கிறேன். ஆனாலும் ஒரு காலத்தில் இல்லாமல் செய்துவிடுவார்கள். இல்லை என்றால் சந்தா கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
  12. இல்லை, அது மெய்தான். ஆயினும் அது அடிபாட்டில் பாவிக்கப்பட்டுள்ளதா என்பது ஐயமே. மற்றது நீங்கள் சொல்வது போன்று 1கிமீ நீளத்தெற்கெல்லாம் அடைக்காது. உது ஒரு நெகிழிப் பை போன்ற பொருளாகும். அதற்குள் எஃகால் ஆன ஒரு குச்சி போன்ற பொருளொன்று இருக்கும். அது இப்பைக்குள் இருக்கும் இரு விதமான திரவங்களை பிரித்து வைத்திருக்கும். அதை இழுத்தவுடன் (கைக்குண்டுக்கு இழுவூசியை கழட்டுவது போல்) அத்திரவங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, நுரை போன்று ஆகி, பெருக்கெடுத்து பெரிதாகி சில நொடிகளில் கட்டியாகி விடும். அது குறிவைத்து எறியப்பட்ட குகைவழியின் வாசலோ அல்லது வழியோ உடனே அடைக்கப்பட்டு விடும். அந்த வழி/வாசலின் அந்தப் பக்கம் உள்ளோர் உள்ளையே அம்பிட்டுவிடுவர். மறுபக்கம் வாசல் இருப்பின் பிழைப்பர், இல்லையேல் 72 கன்னிகளை காண வெளிக்கிட வேண்டியது தான். இது நான் கோராவில் வாசித்து அறிந்த விடையம். சுருங்கச் சொல்லின் பண்டைய காலத்த்தில் குகைவழிகளை அடைக்கும் இகுப்பங்களின் (boulder) நவீன கால வடிவம்.
  13. இனிமேல் உக்கிரேனுக்கான அமெரிக்க உதவிகள் கேள்விக் குறியே. அமெரிக்கா உதவாவிட்டால் மற்றைய நாடுகளும் செத்த நாயில் உண்ணி கழன்றது போல கழன்று விடுவார்கள்.
  14. அண்மையில் எகிப்தின் பிரதமர் கூறி இருந்தார் - மில்லியன் கணக்கில் மக்கள் இழப்பு ஏற்பட்டாலும் காஸா அகதிகள் எமது எல்லையை கடப்பதை தடுப்போம் என. எல்லை தாண்டும் அகதிகள் பற்றி, டிரம்ப்போ, ஃபராஜோ, ஓபனோ கூட எடுக்காத கடும் போக்கு இது. இஸ்ரேலின் இனச் சுத்தீகரிப்பை ஊக்குவிக்க கூடாது என்பதை ஒரு காரானமாக கருதினாலும், அதை விட, தமது நாட்டில் 2 மில்லியன் பலஸ்தீனர்கள் வந்தால் ஏற்படும் அரசியல் குழப்பமே அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அதே போலவே இப்போ ஹிஸ்புல்லாவும், ஈரானும் கூட. நேரடியாகவே நசருல்லா இஸ்ரேலை ஒரே அடியில் (நாக் அவுட்) பண்ணும் இயலுமை தம்மிடம் இல்லை என சொல்லி களத்தில் இறங்குவதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளார். ஹமாசை பப்பாவில் ஏற்றி விட்டு - இப்போ எல்லாரும் விலகுவது போலவே படுகிறது. அடி பாவம் அப்பாவி பலஸ்தீனருக்கே. இனியாவது இந்த “இஸ்ரேலை வழித்தொழிப்போம்” பேர்வழிகளை நம்பாமல் இரு நாடு முடிவுக்கு பலஸ்தீன மக்கள் ஃபட்டா மூலம் செல்ல வேண்டும். ———— நசருல்லாவுக்கு ஒரு ஹமாஸ் ஆதரவாளரின் எதிர்வினையாம் (தரவு/ஆதாரம் என்பதாக இல்லை just anecdotal). #சப்பல் ஷாட் #ஜார்ஜ் புஷ் 🤣
  15. ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசுகளுக்கே உள்ளூர் நிகழ்ச்சி நிரல், வெளியுலக நிகழ்ச்சி நிரல் எனப் பல திசைகளில் இழுபடும் "அட்ஜஸ்ட்மென்ற் வாழ்க்கை" எனும் போது, ஒரு உருப்படியான இலக்கும் இல்லாமல் "கொல்,ஒளித்திரு, கொல்" என்றிருக்கும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எவ்வளவு தலையிடிகள் இருக்கும்😂? பலஸ்தீனர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்ற அக்கறை உண்மையிலேயே அரபுலகில் இருந்திருந்தால், 1993 இலிருந்தே கப்பலைத் திருப்பியிருக்க முடியுமே இந்த நாடுகளால்? ஏன் முடியவில்லை? சவூதி ஒரு திசை, ஜோர்தான் , எகிப்து இன்னொரு திசை என்று அவர்கள் பாடு தான் அவர்களுக்கு முக்கியம். கிளின்ரனும், ராபினும், நோர்வேயும் பலஸ்தீனருக்குச் செய்த நன்மைகளை விடக் குறைவாகத் தான் அரபு சக்திகள் செய்திருக்கின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்கா மறைமுகமாகக் கூட தங்கள் மீது பாய்ந்து விடக் கூடாதென்ற அக்கறையும் இந்தப் பயங்கரவாதக் குழுக்களுக்கு இருக்கிறது. இப்படி தீய வன்முறைச் சக்திகளை ஒடுக்கி வைக்க அமெரிக்கா, நேட்டோ, AUKUS போன்றவை தேவை தான்!
  16. 12. அமரிக்காவும், இஸ்ரேலும் விரிவான பிராந்திய யுத்தம் பற்றி கவலை கொள்ளவேண்டும். இது நடக்க கூடியதுதான். 13. இஸ்ரேல் லெபனான் எல்லையில் எல்லா தெரிவுகளையும் நாம் பரிசீலிப்போம். 14. நாம் அமரிக்க கப்பல்களை எதிர்கொள்ள தயாராய் உள்ளோம். அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லெபனானில் தனது தோல்வியை நினைவில் கொள்ள வேண்டும். 14. அக்8 இல் இருந்து நாம் இந்த யுத்தத்தில் ஒரு அங்கமாகி விட்டோம். 15. பிராந்தியத்தில் உள்ள எதிர்பியங்கள் மீது ஈரானுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை(அப்பனும் குதிருக்குள் இல்லை🤣).
  17. சிலேடை அணியும் சில பாடல்களும்......! 👍
  18. அந்த காலகட்டத்திலை ஐரோப்பா அமைதியாக சந்தோசமாகத்தான் இருந்தது. இதை பார்க்க ஆருக்கோ பொறுக்கேல்லை...எரிச்சல் பொறாமை பயம்.....
  19. கப்டன் துளசிராம் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து கப்டன் துளசிரா! மீண்டும் உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய… இருள் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நுளம்புச் சனியன் கை, கால் மூஞ்சி…… ஆ… ச்சீ குத்திக்குத்தி மனுசற்றை உயிரை எடுக்கும். கை அடிக்க…… பற்கள் குளிரில் கிட்டிக் கொள்ளும். வயிற்றுக்குள் குளிர் பந்தாகச் சுருட்டி உள்ளுறுப்புகள் நடுங்கும் குளிர். ஆனால்……? ஆ……ச்…… ஐயோ தும்மல் வாய்பிளந்து மூக்குளைஞ்சு…… ஆ… ச்… தும்மக்கூடாது; இல்லை நிச்சயம் அடிக்கியபடி…… பாம்பு ஒன்று நொளுநொளெண்டு வளுவளுத்தபடி முதுகாலை வழிய…… ஆட்டி விழுத்தலாம்……? உடல்கூசி…… ஐயோ அசையக்கூடாதே! அசைஞ்சா? ஆசையக்கூடாது அவ்வளவுதான்! பசியோடு தாகம்…… விழி நித்திரைக்கு யாசிக்கும். விழித்திரு…… விழித்திரு உனக்கு நிறைய விடயம் தேவை நிறையப் பொறுமை தேவை. அந்த இருளில் நிழலோடு நிழலாய்…… கருமையோடு கருமையாய் ஓ! எங்கள் துளசிராவும் அதில் பச்சையாய் – அந்தப் பெண் வேவுப்புலி கண்கள் சுழல…… காதுகள் தீட்டியபடி எதை எதைப் பார்க்கும்? எதிரியின் நகர்வு, ஆயுதம்…… எல்லாமே தேவை அவளுக்கு. அது முக்கியமானதும்கூட. மீண்டும் ஊர்ந்து…… அட எப்படி முடிந்தது இவளால் இவ்வளவு துரிதமாய்……? ஆச்சரியம் தரும் பெண் துளசிரா. ஆழ்ந்து சதா சிந்திக்கும் கண்கள். சற்றுக் கோபத்தைப் பூசிய விடுக்கான முகம். அன்பு இதயத்தில் இருந்தும் வார்த்தைகளில் கடுமை பூசி அனுப்பும் துளசி, எதையோ எழுதியபடி…… எதையோ தோழிகளுடன் பகிர்ந்தபடி…… எதையோ வாசித்த…… எதையோ அல்ல, வீரமும் தியாகமும் நிறைந்த கியூபாப் புரட்சி வீரன் ‘சேகுவேரா’ பற்றியோ அல்லது கரிபால்டி லெனின்…… இந்த வரிசையில் அமைந்த புத்தகங்களில் வரும் மனதைத் தொடும் சம்பவங்கள், வாக்கியங்கள்…… சகதோழியருடன் பகிர்ந்தபடி…… ஓ! அது எங்கள் துளசிராவால் முடியும். அது அவளேதான். “தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியின் ஒலியில் நனைந்தபடி நீ ஆசானாய் அபிநயித்தபடி…… உன் தோழியர் ஆர்வத்துடன் பழகியபடி…… “இவளது இன்பங்கள் தொலைந்தது யாரால்?” – கவிதை முழங்கும். திரும்பிப் பார்த்தால், அட…… நம்மடை துளசிரா. “பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர்……?” கேள்விகள் தொடர்வது அதுவும் எங்கட துளசிராதான். வேவு நேரத்தில், “மூதேவி மாதிரிக் கிட்டவாரான் அசையாதை” எனக்கூறி, தனியாக தான் மட்டும் முன்னால் ஊர்ந்து ஊர்ந்து…… தோழியின் காதில் கிசுகிசுப்பாய் கூறியவள் முன்பக்கம் கிடப்பாள். ஒரு நாள் சாப்பாடு சரியாக வராததால் அவர்கள் அனைவரும் சோர்ந்தபடி…… “என்ன விசரப்பா மனுசனுக்குப் பசிக்குது” சிணுங்கிய அந்தச் சிறியவளை துளசி அழைத்து பசிக்குதா? பசியை நினைக்காதையுங்கோ…… வேவுப் புலிகள் இப்படிச் சோரக்கூடாது. மனசைத் தைரியப்படுத்துங்கோ. அண்ணாவை நினையுங்கோ. எவ்வளவு கஸ்டம் துன்பம்……” தொடரும் அவளது வார்த்தைகள் பசியை மட்டுமல்ல சோர்வையும் விரட்டும் தன்மைவாய்ந்தவை. துளசி, உன்னால் எப்படி முடிந்தது? நீ வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கண்டவள் போல்…… இனி யார்? இப்படி அவர்களுடன் கதைச்சு……? கரிபால்டியையும், கீயூபாப் புரட்சியின் ஆன்மார்த்த உணர்வைத் தட்டும் சம்பவங்களையும் கோர்வையாய்க் கண்கள் மின்ன மின்னச் சொல்லும் துளசிரா நீயா……? சோர்ந்து போகும் தருணம் விழி ஏங்கி…… முகம் வானம் பார்த்து…… ஓ துளசி! நீ நினைப்பது…… “அம்மா, என்ரை குஞ்சம்மர் என்னை மன்னி, நீ சீவியத்துக்கு என்ன செய்வாய்? எனக்குத் தெரியும் உன் கஸ்டம். ஆனால்……” …… கண்கள் பனித்து பெருமூச்செறிவாய். மீண்டும் உன் நினைவு தொடரும்…… “நிமிர்ந்திரு அம்மா, உன் பிள்ளைகள் இருவர் போராட்டத்தில்…… என்னை மன்னிப்பாயா?” மானசீக உரையாடல் அது. நட்சத்திரம் இவளை அமைதியாயப் பார்த்துக் கண் வெட்டும். ஆறுதல் அளிக்கும் – இவள் கவிஞை என்பதால்…… துளசிரா எனும் தாமரைச் செல்வியை (இயற்பெயர்) கால்கொஞ்சி அரவணைத்து மகிழ்ந்திருக்க, 1974.08.17 அன்று அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்த சின்னமணி தவமணி மலைத்து நின்ற நாளாய், அவள் பிறந்தாள். செங்கதிரவன் முகம் பார்க்கும்போது சீண்டும் கடலையும், வானத்து நீலத்தைப் பார்த்தபடி நிமிர்ந்த பனைகளும், மணல்திடல் அராபியப் பிரமைதரும் அந்த வடமராட்சியின் கிழக்குப் பிரதேசமான வல்லிபுரக்குறிச்சி கிராமம் இவளை புதுப் பிரஜையாகச் சோர்த்துக்கொண்டது. சிறிது காலத்தின் பின், பசுமை படுத்திருந்து சிரிக்கும் கிளிநொச்சியின் 3ஆம் வாய்க்காலில் உன் சிறிய குடும்பம் குடியேறியது. உன்னுடன் ஓடிப்பிடித்து விளையாடி குதூகலித்திருக்க இரு தங்கை ஒரு தம்பி…… என்ன இனிமையானவை இந்த நாட்கள்! அப்பாவின் தோள்களில் தூங்கி…… அப்பாவுடன் நொடு நொடுத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு…… அம்மாவின் குங்குமமும் அவர்கள் சந்தோசம் அத்தனையும் வழித்தெடுத்தபடி, அவள் அப்பா 1989 இல் காலமானார். அப்பாவைத் தழுவி மாலை போட்டு சந்தனம் சாத்தி…… அம்மா, அவள்தான் அவ்வளவு துன்பத்தையும் தாங்கியவள். “என்னை, தன்ரை கஸ்டத்தின் விடிவெள்ளியாய் நினைத்து கனவு நிறைச்சு ஏங்கியபடி……” என கலங்கி உரைத்து மௌனித்தழும் துளசிரா. “அப்ப துளசி ஏன் இயக்கத்துக்கு நீங்கள்……?” என வினவினால் “சீ அது எனது கடமை. எனக்கு வீட்டுக் கஸ்டத்தைவிட நாடு……” தொடரும் அவளது உறுதி. “ஆனா தங்கைச்சியும் என்னைப்போலவே…… அதனால் சந்தோசம் அவள் இறுதிவரை போராட வேணும் இது என்ரை விருப்பம்…… ஏன் கடைசி விருப்பமும்கூட” எனக் கூறும் துளசிரா…… தங்கைக்கு உணர்வும் அனுபவமும் பகிரும் கடிதங்கள்…… ஓ துளசி, நீ வித்தியாசமானவள் தான். அந்த மௌனத்தில் எத்தனை அர்த்தங்கள் அம்மா! துளசிராவையும் புதுப்போராளியாக மாற்றியது அந்தக் காடு. 13ஆவது பயிற்சி முகாம் அது. அவள் படுத்திருந்து ‘நிலை’ எடுத்த மரம், பதுங்கித் தாக்குதலுக்காய் படுத்திருந்த அந்தப் புல்வெளி…… அவள் படுத்தபடி நிமிர்ந்து பார்த்து கற்பனையில் மிதக்கும் அந்தச் சிறு குடில்…… மரங்களின் இடையில் சிரிக்கும் அந்த நட்சத்திரம்…… எல்லாம் அவளுக்கு அடிக்கடி கியூபாப் போராட்டத்தை நினைவுபடுத்துவதாய்…… முழுப் போராளியாய் திறமையும் ஊக்கமுமாகஇ துளசி எதிரியுடன் யுத்தமாட ஆரம்பித்தாள். மாங்களம் எம்மவர் கைகளில் வீழ்ந்த பின் அதைப் பாதுகாக்கும் குழுவுடன் இவளும்…… ஆ. க. வெ. தாக்குதலில் எதிரியின் அங்குல நகர்வுக்கும் பதிலடி கொடுத்த பெண்புலி அணியில், இவளும் மிகவும் மூர்க்கமாக…… ‘மின்னல்’ – எங்கள் இதயபூமியில் தாண்டவமாடிய எதிரி நடவடிக்கையில் எதிரியைக் காலொடித்து விரட்டியவர்களில் இவளும் முன்னணியில்…… எதில் நீ உன் திறமையைக் காட்டவில்லை? ‘மின்னலில்’ காலில் காயமுற்று நீ சிறுகால ஓய்வுக்குப்பின்; வேவுப்புலியாய், அப்பப்பா இவளுக்கு எத்தனை அனுபவங்கள்…… மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து…… இருளில் இருளாக…… இலையாகி சருகாகி…… கட்டையாகி…… ஏதோ ஏதோவெல்லாம் இவர்களால் எப்படி? ஓ, இவர்கள் வேவுப்புலிகள். எத்தனை சகிப்புத்தன்மை வேண்டும் இவற்றுக்கு. துளசி, உன்னிடம் அது நிறைந்திருந்தது. உன் விழிச்சிவப்பு அது கூறும். இரவு தரும் தனிமை. அந்த மௌனம் தரும் பயங்கரம். கட்டைகள் எதிரியாகி உருவகிக்கும், பயம் தரும் உருவமாக…… திக்கென்று இதயம் அடித்துக்கொள்ளும். இதயம் சுழன்றுபோல்…… அந்த சரசரச் சத்தம். ஒருவேளை அந்த இழவுவிழுவானோ? கிட்டகிட்ட அண்மிக்கும் அந்தச் சத்தம். ‘சடார்’…… இதயம் லப்டப் லப்ட… ப்… நின்றுவிடும்போல் உதறிக்கொள்ளும். அந்த ‘அரியண்ட’ உணர்வு. இது சாதாரணமாய் ஏற்படும் அனுபவம். இதை இவளும் இவள் தோழிகளும் நிதானமுடனும் மிகுந்த சகிப்புத்தன்மையுடனும் பிரித்தறிந்து, அலுக்காமல் இருக்கும் உறுதி. துளசி, நீ இதில் ஊறியவள். குளித்து பலநாள் கூட இருக்கலாம். எத்தனை இரவுகள் நித்திரை இழந்து சிவந்துபோன கண்கள். அலுப்பற்ற தொடர் பயணம். ஊர்ந்து…… நடந்து…… கிடந்து…… மறைந்து…… அவன் ‘அசிங்கங்களின்’ மேல் படுத்தபடி கூட எடுத்த தகவல்கள். பகலில் அவற்றின் சாயல் கூட இன்றி துறுதுறுத்தபடி துளசி…… உன்னால் எப்படி இவற்றைத் தாங்க முடிந்தது? அதுவும் அறுவையும் சிரிப்புமாக…… எம் துளசியே உன்னை இழந்துவிட்டோமா நாம்? ஏக்கம் இதயத்தில் வந்தமர்ந்தது. எத்தனை தடவை துளசியும் குழுவும் அதிர்ச்சியான சம்பவங்களை அலுக்காமல் அனுபவித்து வரும்! நீண்ட நாள் எதிரியின் எல்லையுள்…… இரவில் தம்வீட்டு முற்றத்தில் திரியும் இரவுப்பிசாசுகள் போல்…… கண்கள் சுழன்று…… காதுகள் திரும்பி ஒலி சேகரிக்கும். இரவில் எதையோ தேடும்…… அது தடயமாக…… எதிரியின் நடவடிக்கையாய்…… அவனின் ஆயு…… மொத்தத்தில் எல்லாமே உனக்குத் தேவை. உன் தகவல் சேகரிப்பும் துணிவும் உன்னை சண்டைக்கான சிறந்த வழிகாட்டியாக்கியது உண்மை. அதனால்தான் உன்னை பத்தமேனிச் சண்டையில், உன் நகர்வு…… மிகவும் நுணுக்கமான உன் போர்த் தந்திரம்…… பொறுமை, கண்ணில் காயமுற்ற போதும் நீ மற்றவர்களுக்கு உதவிய உன் பண்பு, தாங்கும் தன்மை…… நீ வேவுப்புலிதான் அதுவும் பெண்புலி. கம்பிவேலி தாண்டும் இவர்கள் பாதங்களில் ஒன்றை எதிரி கண்ணிவெடி பதம் பார்க்கும். இழுத்தபடி…… அல்லது உயிரைத் தியாகம் செய்யும் அந்தப் புனித யுவதிகளாய்…… கண்ணும் மனமும் பலநாள் பார்த்திருக்கும். எதிர்பாராமல் அது நடந்தது. ‘அட விசரன் மாதிரி ‘போக்கஸ்’ அடிக்கிறான்.’ கிட்டக் கிட்ட இவர்களுக்கு அண்மையில் அவன் அட! பத்து யார் இருக்குமா? இல்லை மூன்று நாலு யார்…… அசையாமல் இறுகியபடி…… அப்பாடி! அங்காலை? ‘அசிங்கம்’ பண்ணியவன் மீண்டபோது இதயமும் மூச்சும் இயங்கும். ஒருவேளை அவன் கண்டால் சிதறும் உடல், சிவந்த தசைத் துகள்களாக்கித் கொள்ளும் தியாகம். துளசிரா நீ எத்தனை இரவை இப்படிச் சந்தித்திருப்பாய்! இவை உன்னைப் பாதிப்பதில்லை. நீ ஓர் திறமையான வேவுப்புலி; அதிலும் பெண்களில் தன்மானம் கூடியவள் நீ. இவர்கள் மாயப்பிசாசுகள் போல் திரிவது எதிரியின் கண்ணிவெடி விதைத்த வயல்களுக்குள்தான். அதில் பாதை அமைத்து மரணத்தை இருமருங்கிலும் ஒதுக்கிச் செல்லும் துணிவு மிக்கவர்கள். இவ்வளவும், இவளை பூநகரிக்கு வேவுப் பணிக்கு அமர்த்தக் காரணமாய் அமைந்தன. கால்கள் நடந்தன் கண்கள் துருவின் கைகள் ஸ்பரிசித்தன் காதுகள் கேட்டன. இருளிலும் தேடிய மறைந்து கிடந்த எதிரியின் அத்தனை விடயமும் தகவல்களாக…… அவை சண்டையாக உருவகம் பெற்று நிமிர்ந்து நின்றது துளசிபோல். “அங்கை பார் இந்த ‘போக்கஸ் லைற்’ சண்டை முடிந்து திரும்ப நாம் வரும்போது மானமிழந்து விடும்.” எத்தனை கனவடி உன் கண்களில். ஏன் திரும்பி அதை நீ பார்க்காமலே…… உனை நாம் இழந்துவிட்டோமே துளசிரா. பூநகரியில் – அந்த ஜில்லித்துப்போன பனித்த இரவு. படையணிகள் பல அணிகளாய் நகர்வதில்…… ஒரு அணிக்கு இவள் பாதைகாட்டி நகர்ந்தாள். உறுதியான உன் நகர்வும் உன் நாவு சொன்னதுபோல் சரியான வெளி. அவ்விடத்தை அடைந்தது அணி. கம்பிக்கட்டுக்கு நீ வைத்த ‘டோபிடோ’ காலைவாரியதால் ஒன்றும் பிசகி நிற்கவில்லை; மாறாய்இ மாற்றுவழி தேடியது உன் கூர்மதி. கைகளால் அத்தனை துரிதமாய், வேகமான பெண்ணாய் இயங்கிய உன் யுத்த அறிவு, அத்தனை ‘பொயின்’றும் கிளியர் பண்ணியது உனது கிரனேற்றுக்கள், பாதையமைத்து விரைந்தாய்; சுழன்றாடினாய்; களம் உன்னைப் பார்த்துத் திகைத்தது. உன் திறமையை நெடுக நெடுக உரைத்து நிமிரும் உன் தோழியர் கண் சிவந்தது எதனால் துளசி? உனை இழந்தோமே…… அதனால். உன் கண்களுக்கு தமிழீழத்தைப் பார்க்க ஆசை. ஆனால் நீ இறந்த பின் போராளிக்கு அவற்றை அளிக்கச் சொன்ன உன் நிமிர்வு, அண்ணாவை நினைவுகூர்ந்து பளபளக்கும் அந்தக் கண்கள், வீட்டின் வறுமையில் வாடிச்சிவந்த அந்தக் கண்கள், அறிவினில் ஜொலித்திருக்கும் உன் கண்கள். துளசி, நீ நிறையதான் கனவு சுமந்து நடந்தாய் பூநகரிக்கு. நினைவு இழந்து உயிரிழந்த உன் உடல்…… அதே நிமிர்வுடன் தான் துளசி இருந்தது. ‘போக்கஸ் லைற்’ இல்லை. உன் நினைவு போல் பூநகரி வீழ்ந்தது. எத்தனை உறுதியுடன் கூறிநின்றாய் துளசி! இறுதிக் கணத்திலும் உன் இனிய இதயம் அந்தப் பாடலை ஏன் கேட்டது? காற்றே நீயும்தானே பார்த்தாய் அவள் அழுததை. ஏன்…… ஏன் அழுதாள்? சாவுக்கு நீயே தேதி குறித்தாயா? அல்லது சாவு உனக்குத் தேதி குறித்ததா? “தாயக மண்ணின் காற்றே நீயும் மூசம்மா, நான் சாகும் நேரம் கடலே நீயும் மூசம்மா” பாடிய தோழி இங்கு குலுங்கிக் குலுங்கி அழுதாள் துளசி. இந்தப் பாடல்வரியில் நீ இனி அடிக்கடி வந்துவந்து போவாய். சாகும்போது சாதனைதான் படைத்தாய். உனக்கு அன்று ஓய்வும்கூட. நீ இழந்துபோன அத்தனை நித்திரையையும் வெறியுடன் அனுபவிப்பவள் போல் எத்தனை அழகாய்த் தூங்கினாய் துளசி! இப்போதெல்லாம்…… “தித் தெய்தாம் தித் தெய்தாம்” என்ற ஜதியில் நீ தெரிவாய். வேவு நேரத்தில், அந்த மௌனித்த இருளில் காற்றோடு உன் குரல், “ஏய் கவனம் அசையாதை……” என்பதுபோல கிசுகிசுத்து நிற்கும். சிவந்துபோன உன் தோழியர் கண்களில், உனைக் காண்போம் அதை உன் கண்களாய்…… மௌனித்த தோழியில் நீயாக…… ஓ…… அந்த அன்னையின் விசும்பலில் தெறிக்கும் உன் பிரிவுத் துயர்…… அந்த போராளித் தங்கையை இறுகவைத்திருக்கும் உன் இழப்பு…… உன் சின்னத் தம்பி தங்கையின் விழிநீர்த்தரையில் உன் முகமாய்…… உன் அன்னைக்காய், உன் சகோதரர்க்காய் உன் மௌனித்தழும் உன் தோழியர்க்காய்…… நிமிர்வதற்காய்…… காற்றிலே நுழைந்து கவிஞையாய், நடிகையாய், நடன ஆசிரியையாய், சுழன்ற டும் வேவுப் புலியாய், “தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியில் வந்து போகமாட்டாயா எமக்காய் ஓர் தடவை? அந்த இருளை ஸ்பரிசித்து, நீயாக நினைத்தது மனம். உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய நிறைய விடயங்கள் துளசி மீண்டும் நீ வா ஒரு தடவை எமக்காய்……! நினைவுப்பகிர்வு: சீத்தா. நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 1994). https://thesakkatru.com/capatin-thulasiram/
  20. பயங்கரரவாதிகளுடனான யுத்தத்தில் பொது மக்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இறைமையுள்ள நாடுகளுடனான யுத்தத்திலேயே மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படும்போது பயங்கர வாதிகளுடனானன யுத்தத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. அதட்கும் அந்த பயங்கரவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்ரவேல் யுத்த குற்றம் புரிந்ததென்றால் ஐக்கிய நாடுகள்சபை அதனை பார்த்து கொள்ள வேண்டும்.
  21. அம்புலன்ஸை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி 03 NOV, 2023 | 08:58 PM காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது. https://www.virakesari.lk/article/168462

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.