Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33381
    Posts
  2. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20359
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33814
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/29/23 in all areas

  1. செலென்ஸ்கிக்கும் உக்ரைனுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். அதோடு இஸ்திரேலி சியோனிஸ்ட்டுக்களுக்கும் யூதர்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்றும் தேடி பாருங்கள். ரஸ்யா உக்ரைன் விரும்பினாலும் போரினால் கோடிக்கணக்கான பணத்தை லாபம் பார்க்கும் கூட்டம் ஏன் போரை நிறுத்தவேண்டும்? இந்தியாவுக்கும் மொக்கு மோடிக்கும் கொம்பு சீவி இப்போது லாபகமாக இந்தியாவையும் போருக்கு இழுத்து செல்லும் வேலை மிக நன்றாக நடக்கிறது ஹிந்தியாவை பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத வேலை என்றாலும் சுற்றி எதிரிகளை உருவாக்கி விட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு ஆயுதங்கள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு காலை எழுந்தால் காலைக்கடன் முடிக்க கூட வசதி இல்லை. இத்தாலிக்கும் குளை அடித்து இப்போ பெரும் ஆயுத வியாபாரம் செய்து நீங்கள் துருக்கியை விட பலமாகிக்கொண்டு இருக்கிறீர்கள் அதுதான் பாதுகாப்பு என்று நம்பவைத்து ஆயுதம் விற்கிறார்கள். தைவானை கைகாட்டி பிலிப்பைன்ஸ் ஜப்பானுக்கு விற்கக்கூடிய இரும்பெல்லாம் விற்கப்படுகிறது உங்கள் வரிப்பணத்திற்கும் செலவுவைக்க பல பல பெயர்களில் நேவி கப்பல் ஓடடம் நடக்கிறது இவற்றையெல்லாம் பின்தொடர்ந்தால் ....... ஒரே ஒரு குழுதான் கடந்த 100 வருடமாக எந்த மனித நேயமுமற்று மக்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது அவர்கள் ஒரே இலக்கு பணம் அதன்மூலம் அதிகாரம். இன்று இஸ்திரேல் செய்துகொண்டு இருக்கும் அக்கிரமத்தை ரஸ்யா நினைத்திருப்பின் கிவையே தரைமடடம் ஆக்கி இருப்பார்கள் கைப்பற்றிய கீவ் அணுமின் நிலையத்தை கூட விட்டுவிட்டு பின்வாங்கினார்கள் உக்ரைனில் இருப்பவர்களும் பாதிக்கு மேல் ரஷ்யர்கள்தான் டிசம்பர் தொடக்கத்தில் செலென்ஸ்கி (25ஆம் புலிகேசி) இங்கு அமேரிக்காவுக்கு வந்தபோது 10 அதி உயர் விமான எதிர்ப்பு மிஸைல் ( பல மில்லியன் பெறுமதியான) கொடுத்து அனுப்பினார்கள் ரசியர்கள் 8 ட்ரான்களை வேண்டும் என்றே அனுப்பி 8 மிசைல்களை வேண்டும் என்றே அடிக்க வைத்து வீணடித்து விட்டார்கள் பல ஆயிரம் மில்லியன்கள் ஒரு வாரத்தில் புகையாகி போனதில் எனது வரிப்பணமும் உண்டு என்பதுதான் எனக்கு உறுத்தல் ஆன விடயம்
  2. தானே அமைத்த சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப பெளத்த மகா சங்கத்தை நாடிய ஜெயவர்த்தன‌ தில்லியில் தான் ஒத்துக்கொண்ட பரிந்துரைகளை கைகழுவி விட ஜெயார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும், ஆனால் ஜெயாரை நிர்ப்பந்தித்து அவற்றை மீள சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்க பார்த்தசாரதி மேற்கொண்ட முயற்சியும் சர்வகட்சி மாநாட்டின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்களை மாநாடு ஆரம்பிக்கு முன்னரே ஏற்படுத்தியிருந்தன. இதனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகுந்த வருத்தம் அடைந்திருந்தது. மேலும் எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள இனவாதக் கட்சியான மகஜன‌ எக்சத் பெரமுன ஆகிய‌னவவும் இதுகுறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தன. தை மாதம் 7 ஆம் திகதி கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணைப்பு "சி" குறித்து ஜெயாரிடம் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தது. பல மத்திய குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை ஜெயார் தம்மை ஏமாற்றவே முனைகிறார் என்று நம்பினர். கூட்டத்தின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிறிமா, "எனது கோரிக்கையின் பின்னரே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைத்த ஜெயார், தானே அதுபற்றி தீர்மானம் எடுத்ததாக கூறினார். தற்போது அனைத்துக் கட்சிகளும் தமது பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கவேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அவரது ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தனது பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. நாம் முன்வைக்கும் பரிந்துரைகளின்படி தமிழர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கிவிட்டு பின்னர் எதிர்க்கட்சியின் கோரிக்கையின்படியே நான் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கினேன் என்று கூறப்போகிறார். ஆகவே, முதலில் ஜனாதிபதியும் அவரது கட்சியும் தமது பரிந்துரைகளை முன்வைக்கட்டும்" என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவரான அநுர பேசுகையில், "பார்த்தசாரதியுடன் தானே செய்துகொண்ட ஒப்பந்தத்தை பின்னர் செய்யவில்லை என்று ஜெயார் கூறியிருப்பதன் மூலம், அவர் பார்த்தசாரதியை மட்டும் முட்டாளாக்க எத்தனிக்கவில்லை, முழு நாட்டையுமே முட்டாளாக்க முனைந்திருக்கிறார்" என்று கூறினார். வழமை போலவே சுதந்திரக் கட்சியை வீழ்த்த ஒரு திட்டத்தை வைத்திருந்தார் ஜெயார். பெளத்த உச்ச பீடமான மகா சங்க‌த்துடன் கூட்டமொன்றினை தை 8 ஆம் திகதி ஜெயார் நடத்தினார். நாட்டிலுள்ள உயர் பெளத்த பிக்குகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அஸ்கிரிய பீடத்தின் பலிபானே சந்தானந்த மகா நாயக்க தேரை, மதிகே பன்னசீக தேரை, தெலெல்ல தம்மானந்த தேரை, வல்பொல ராகுல தேரை, கென்பிடிகெதர ஞானவன்ச தேரை, பெல்லாவில விமலரத்ண தேரை மற்றும் மாதுலுவே சோபித தேரை ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பெளத்த பிக்குகள் என்பதுடன் இவர்கள் அனைவரும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த இனவாதிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கூட்டத்தில் பேசிய தேரைகள் அனைவரும் தாம் இணைப்பு "சி" யினை எதிர்ப்பதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் தமிழர்களுக்கு வழங்க அரசாங்கம் முயலும் பட்சத்தில் தாம் அதனைத் தடுத்து நிறுத்திவிடப்போவதாகவும் எச்சரித்தனர். தை மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை எனும் அறிவிப்பினை சுதந்திரக் கட்சியும், மகஜன‌ எக்சத் பெரமுன கட்சியும் தை மாதம் 8 ஆம் திகதி அறிவித்தன. தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணைப்பு "சி" குறித்த விபரங்களை ஜெயார் வழங்கத் தவறியமையை தமது பங்கேற்காமைக்கான காரணமாக அவை முன்வைத்திருந்தன. யாழ்ப்பாணம் சென்ற‌ அமிர் தலைமையிலான குழுவிற்கு நேர்ந்த அவமானம் சமாதான முயற்சிகளுக்கான ஒரு படிக்கல்லாக கருதப்பட்ட சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப சிங்கள கடும்போக்குவாதிகளை ஜெயார் உசுப்பிவிட்டிருக்க, ஏற்படவிருக்கும் வன்முறைகச் சுழலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். தை மாதம் 8 ஆம் திகதி தமது ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்றனர். சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுக்கக் கூடாது எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அவர்களை யாழ்ப்பாணத்தில் வரவேற்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் சென்றபோது மாணவர்கள் அவர்களைநோக்கி கூச்சல் எழுப்பத் தொடங்கினர். அமிர்தலிங்கத்திற்கும் அவரது சகக்களுக்கும் யாழ்ப்பாணத்தில் கிடைத்த வரவேற்புப்பற்றி கொழும்பின் சிங்கள, ஆங்கில‌ ஊடகங்கள் மகிழ்வுடன் செய்தி வெளியிட்டன. அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பிற்கு அவர் பொறுத்தமானவர்தான் என்று அவை எள்ளி நகையாடின. ஆனால், யாழ்ப்பாண மக்கள் எக்காரணத்திற்காக முன்னணியின் தலைவர்களை அவ்வாறு வரவேற்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இதுகுறித்த செய்தியொன்றினை வெளியிட்ட தி ஐலண்ட் பத்திரிக்கை தை மாதம் 10 ஆம் திகதி அமிர்தலிங்கம் சர்வக்ட்சி மாநாட்டில் பங்கேற்பது போன்ற கேலிச் சித்திரத்தையும் வரைந்திருந்தது. அக்கேலிச் சித்திரத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் ஆயுதம் தரித்த போராளிகள் மாநாட்டு மண்டபத்தில் நுழைவது போன்று வரையப்பட்டிருந்தது. சென்னையில் அமிர்தலிங்கத்திடம் கோரிக்கையொன்றினை விடுத்திருந்த போராளிகள், அவரை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டிருந்தன. ஆனால் கொழும்பிலோ, சிங்களப் பத்திரிக்கைகள் போராளிகளை சர்வகட்சிக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி அழைத்துவருவதாக கேலிச் சித்திரம் வரைந்து மகிழ்ந்தன. சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமிர்தலிங்கம் விரும்பியமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர் மீது தமது அதிருப்தியைக் காண்பித்திருந்தார்கள். ஆனால், சிங்களவர்களின் பத்திரிக்கைகளோ அமிர்தலிங்கம் போராளிகளை கூட்டத்திற்கு அழைத்துவர யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக செய்தியும், கேலிச் சித்திரமும் வெளியிட்டிருந்தன. தமிழர்களின் பிரச்சினை குறித்து எவ்வகையான புரிதலினைச் சிங்களப் பத்திரிக்கைகள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். யாழ்ப்பாணத் தமிழர்கள் முன் நாயகனாகவிருந்து துரோகியாக மாறிய அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நான் அமிர்தலிங்கத்தைச் சந்தித்தேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை சார்பாக மாநாட்டு நிகழ்வை செய்தியாக்க நான் அங்கு சென்றிருந்தேன். யாழ்ப்பாணத்தில் தமக்கு நேர்ந்த அவமானம் குறித்து அவர்கள் வருத்தத்துடன் காணப்பட்டனர். "எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கான நாயகனாக நான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால், தற்போது அவர்கள் என்னை துரோகி என்று அழைக்கிறார்கள். அவர்கள் போகவிருக்கும் பாதை எனது மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் கொண்டுவரப்போகிறது. அதைத் தடுக்கவே நான் முயல்கிறேன். இந்த முயற்சியில் ஜெயவர்த்தன எனக்கு உதவுவார் என்று நான் நம்பவில்லை. என்னைப் பலவீனப்படுத்தி, போராளிகளை பலமாக்கி, பின்னர் இராணுவ ரீதியில் அவர்களை முற்றாக அழித்துவிடவே அவர் கங்கணம் கட்டியிருக்கிறார்" என்று அமிர்தலிங்கம் என்னிடம் வருத்தத்துடன் கூறினார். ஜெயவர்த்தனவின் திட்டமும் அதுதான். தனது திட்டத்தினை நிறைவேற்றிக்கொள்ளவே சர்வகட்சி மாநாட்டினை அவர் பயன்படுத்த முடிவெடுத்தார். இத்திட்டத்திற்காக சுமார் ஒருவருட காலத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. தை மாதம் 10 ஆம் திகதி முதல் மார்கழி 21 வரை சர்வகட்சி மாநாடு தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எதனையும் வழங்காது அவரால் இழுத்துச் செல்லப்பட்டது. இக்காலத்தில் தனது இராணுவத்தை அவர் பலப்படுத்தினார். தமிழர் தாயகத்தில் பாரிய அளவில் சிங்கள‌ குடியேற்றங்களை முடுக்கிவிட்டார்.
  3. இந்த யுத்தம் தொடர்பான எனது அடிப்படை புரிதலில் மாற்றமில்லை மருதர். உக்ரேன் இறையாண்மையுள்ள ஒரு நாடு. ரஸ்ஸிய நடத்துவது ஆக்கிரமிப்பு என்பதில் நான் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. எனது அக்கறையெல்லாம் இருபக்கமும் நடக்கும் அழிவுதான். அதானால்த்தான் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன். இந்த யுத்தத்தைப் பாவித்து தமது சொந்த நலன்களை அடைந்துகொள்ள விரும்பும் மேற்குலகாகட்டும், அல்லது ரஸ்ஸியாவிற்கு ஆயுதம் விற்கும் வடகொரியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளாகட்டும், இவை எதுவுமே ஆக்கிரமிக்கப்படும் உக்ரேனியர்களுக்காகவோ அல்லது கொல்லப்படும் ரஸ்ஸிய வீரர்களுக்காகவோ அனுதாபப்படவில்லை. பல வியாபாரிகளின் நலன்களுக்காகவும், ஒரு அதிகாரி வெறி பிடித்த சர்வாதிகாரிக்காகவும் அப்பாவி உக்ரேனியர்களும், ரஸ்ஸிய வீரர்களும் மாண்டு வருகிறார்கள்.
  4. நத்தாரில் இருந்து புதுவருடம் வரை சைட்டிஷ் பிரியர்களை நினைத்துத்தான் இணைத்தேன்.......ஏதோ நம்மாளான தொண்டு .......... 😂
  5. பார்க்கவும் வடிவாய் இருக்கு......சாப்பிடவும் நல்லாயிருக்கும்.......தண்ணியடிக்கிற வாய்க்கு அந்த மாதிரியிருக்கும்.....ஆனால் இரத்தக்குழாய்கள் அடைக்கவும் நல்ல சாமான்.....இப்பிடியான பண்டி வத்தல் வார்கள் சாப்பிட்டால் நாள் முழுக்க ஓடி ஆடி வேலை செய்து கொண்டே இருக்கணும்.😂 பதிவிற்கு நன்றி சுவியர்...👍🏼
  6. ரஞ்சித் அவர்களே தொடருழைப்புக்கு நன்றி. கணிப்புகளைச் சொல்லத் தெரிந்தவர்கள் அந்தக்கு கணிப்புக் ஏற்ப ஏன் செயற்படாது விட்டார்கள். கொழும்போடும் இந்தியாவோடும் குறுகியதன் விளைவு. மீண்டும் அதேபுள்ளியிற் தமிழ்தலைமைகள்(?) நிற்கின்றன. இமாலயச் செயலணி இலங்கையர்கள் இவற்றைப் படித்தறிய வேண்டும்.
  7. குறிசூட்டுநர் லெப். கேணல் குயிலன் (ஹெக்லர் & கோச் பி.எஸ்.ஜி. 1 குறிசூட்டுத் துமுக்கி/ Heckler & Koch PSG1 Sniper Rifle) (வரலாற்று காப்பிற்காக நான் செய்த திரைப்பிடிப்பு) 'ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் மூன்றின் போது'
  8. வணக்கம் வாத்தியார்........! அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.. தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா.. பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா.. வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா.. மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா.. வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா.. பணத்தின் மீது தான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா.. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா......! --- அண்ணன் என்னடா தம்பி என்னடா ---
  9. சில்லி & போர்க் பொரியல் ......அருமையான உணவு ......! 👍
  10. எழுதுபவர்களுக்கு சரி அண்ணை. செய்தியை இணைப்பது பற்றி கூறினேன்.
  11. ஒப்பிட தாங்கள் விரும்பவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து இறந்த மனிதனை இங்கே கொண்டுவருவதைத் தவிர்த்திருக்கலாம்.
  12. மெதுவாக இயங்குவதும் நல்லதுதான். கருத்தை எழுதும்போது கொஞ்சம் நிதானமாக சீர்தூக்கி சிந்தித்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ரொம்ப வேகமாக இயங்கி என்னதான் எழுதி கிழிக்கப்போகின்றோம்.
  13. இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து சர்வகட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைத்த பரிந்துரைகள் ‍ இணைப்பு - சி தில்லியில் கலந்தாலோசிக்கப்பட்ட பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இணைப்பு "சி" எனும் பெயரில் அனுப்பப்பட்டது. தில்லியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணைப்பு "சி" பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளான இவை, இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையினையும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. சர்வகட்சி மாநாடில் பேசப்படப்போகும் விடயங்கள் இப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றிருந்தன. 1. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒரு பிராந்திய சபையாக ஒருங்கிணைவதற்கு அந்தந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் சம்மதமும், அம்மாவட்டங்களில் நடத்தப்படும் சர்வஜன் வாக்கெடுப்பும் அவசியமாகும். 2.வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஏதாவது ஒன்று உறுப்பினர்களின் விலகினால் ஸ்தபிதம் அடையுமிடத்து, அம்மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்ட அபிவிருத்திச் சபைகளுடன் குறிப்பிட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை இணைத்துக் கொள்ளப்படலாம். 3. உத்தேச பிராந்தியம் ஒவ்வொன்றும் விரும்பினால் தமக்கான பிராந்திய சபை ஒன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும். இப்பிராந்தியத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி இப்பிராந்தியத்தின் முதலமைச்சராக நியமிப்பார். இப்பிராந்தியத்தின் அதிகார சபைக்கான அமைச்சர்களை முதலைமைச்சரே நியமிப்பார். 4. நாட்டின் இறையாண்மை, பூகோள ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட, பிராந்திய அதிகார சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத ஏனைய விடயங்கள் யாவும் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பொறுப்பில் இருக்கும். 5. பிராந்தியங்களின் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை அப்பிராந்தியங்களே உருவாக்க முடியும். பிராந்தியங்களுக்கான சட்டம் ஒழுங்கு, சமூக பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், நிலக் கொள்கை ஆகிய விடயங்கள் ஆகியவை பிராந்திய சபைகளினால் உருவாக்கப்படும். 6. மேலும், பிராந்தியங்களுக்கான வரி அறவிடல், சேவைகளுக்கான கட்டணம், பிராந்திய அபிவிருத்திக்கான கடன்களை மக்களுக்கு வழங்குதல், இக்கடன்களுக்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து ஒழுங்குசெய்தல் ஆகியவை பிராந்திய சபைகளால் மேற்கொள்ளப்படும். மத்திய அரசினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு பரிந்துரைக்கப்படும். 7. பிராந்தியங்கள் தமக்கான உயர் நீதிமன்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மேல்முறையீடு தொடர்பான விடயங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 8. ஒவ்வொரு பிராந்திய சபையும் தமக்கான அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவை அலுவலர்களை அப்பிராந்தியத்தில் இருந்து நியமிக்கும். வேறு பிராந்திய சபைகளில் வதியும் அதிகாரிகள் அலுவலர்களையும் ஒரு பிராந்திய சபை சேவைக்கு அமர்த்திக் கொள்ளலாம். பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காகவும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காகவும் பிராந்திய சபைகள் தாம் உருவாக்கும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உதவியை நாட முடியும். 9. நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கடமையில் அமர்த்தப்படும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் இப்பிராந்தியங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 10. திருகோணமலை துறைமுகத்தினை மத்திய அரசினால் அமைக்கப்படும் துறைமுக அதிகார சபை பொறுப்பில் வைத்துக்கொள்ளும். துறைமுகமும் அதுஅமைந்திருக்கும் பிரதேசமும் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு இச்சபைக்கு வழங்கப்படவிருக்கும் அதிகாரங்கள் பற்றி விரிவாக பின்னர் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும். 11. நிலப்பங்கீடு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று அமைக்கப்படுவதோடு, இதன் அடிப்படையிலேயே குடியேற்றங்களை அரசாங்கம் முன்னெடுக்கும். பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து ஏனைய குடியேற்றத் திட்டங்கள் அனைத்துக்குமான நிலப் பங்கீடு அந்தந்த பகுதிகளின் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவும், ஏற்கனவே இருக்கும் இனப்பரம்பலினை பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படும். 12. அரசியலமைப்பிற்கு அமைவாக உத்தியோகபூர்வ மொழியான சிங்களமும், தேசிய மொழியான தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்ப்படுத்தப்படும். இதேவகையான சட்டங்கள் தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றிற்கும் நடைமுறைப்படுத்தப்படும். 13. சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வதற்காகவும், இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இதற்குத் தேவையான செயலகத்தினையும், சட்ட அலுவலக வசதிகளையும் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். 14. சர்வகட்சி மாநாட்டில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரி சபையினாலும், ஏனைய கட்சிகளின் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்காக முன்வைக்கப்படும்.
  14. அமிர்தலிங்கத்தை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கோரிய ஆயுத அமைப்புக்களும், பங்கெடுக்க அழுத்தம் கொடுத்த இந்தியாவும் தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், ஜெயார் தான் வழங்கிய வாக்கிலிருந்து பின்வாங்கிவிட்டார் என்று குற்றம் சுமத்தினார். தமது கட்சியைப் பொறுத்தவரையில் ஈழக் கோரிக்கை தொடர்பாக உறுதியாகவே இருப்பதாகக் கூறினார். ஈழத்திற்கு மாற்றான , நிகரான தீர்வொன்று முன்வைக்கப்படுமிடத்து தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தாம் தயாராக இருக்கிறோம் என்பதை ஆரம்பத்திலிருந்தே தமது கட்சி வலியுறுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பில் குறிப்பிடப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்பதனையும் தாம் எற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார். சென்னையில் போராளிகளைச் சந்திப்பதற்காகக் கூட்டம் ஒன்றினை நடதத் திட்டமிட்டார் அமிர். சர்வகட்சி மாநாட்டில் தான் பேசிய விடயங்கள் குறித்து அவர்களுடன் தான் பேச விரும்புவதாக அவர் கூறியிருந்தார். ஆனால், எந்த ஆயுத அமைப்பும் அமிரின் கோரிக்கைக்குப் பதில் வழங்கவில்லை. மூன்றாம் தரப்பினரூடாக அமிருக்குப் பதிலளித்த போராளி அமைப்புக்கள் அமிர் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை தாம் எதிர்ப்பதாக மட்டும் கூறியிருந்தார்கள். "அங்கு போய் எந்த விடயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கப் போகிறீர்கள்? தனிநாட்டினை விட்டுக் கொடுக்கிறோம் என்பதனையா?" என்று அவர்கள் கோபத்துடன் கேட்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாட்டிறகுச் செல்லக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை அவர்கள் கோரினார்கள். பார்த்தசாரதியின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ஜெயார் தை மாதம் 3 ஆம் திகதி கொழும்பு வந்திருந்த பார்த்தசாரதி அன்று மாலை ஜெயாரைச் சந்தித்தார். தில்லியில் இந்திரா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக சற்று அதிகாரம் மிக்க தொனியிலேயே பாரத்தசாரதி ஜெயாருடன் பேசினார். இந்திராவுடனான பேச்சுக்களில் ஜெயார் ஒத்துக்கொண்ட விடயங்களை அவர் பின்னர் கைவிட்டதற்கான காரணங்களாக அமெரிக்க ஜெனரலான வோல்ட்டர்ஸின் வருகை, புதிய ஆயுதக் கொள்வனவுகள், வெளிநாட்டுக் கூலிப்படையினரின் உதவிகள் ஆகியவையே அமைந்திருந்தனவா என்று பார்த்தசாரதி ஜெயாருடனான பேச்சுக்களின்போது வினவியிருந்தார். தமிழர்களின் பாதுகாப்பும், நலன்களும் பாதுகாக்கப்படும்வரை அவர்கள் தமது தனிநாட்டிற்கான கோரிக்கையினைக் கைவிடப்போவதில்லை என்று ஜெயாரிடம் தெரிவித்தார் பார்த்தசாரதி. ஒன்றிணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மகாணங்களில் தமிழர்கள் சுயாட்சி அதிகாரத்தை கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே அவர்களின் பாதுகாப்பும் நலன்களும் உறுதிப்படுத்தப்படும் என்றும், இப்பிரதேசத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம் என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார். பார்த்தசாரதியின் கடுமையான பேச்சுக்களின் பின்னர் விட்டுக் கொடுப்பினை மேற்கொள்ள முனைந்த ஜெயார், தனக்கும் பார்த்தசாரதிக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுக்களின் சாராம்சத்தை இணைப்பு "சி" எனும் தலைப்பில் வெளியிட்டார். மறுநாளான, தைமாதம் 4 ஆம் திகதி அமிர்தலிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பார்த்தசாரதி அவரை உடனடியாக கொழும்பிற்கு வருமாறு அழைத்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் மற்றும் தங்கத்துரை ஆகிய முன்னணியின் தலைவர்கள் கொழும்பை வந்தடைந்தனர். விமான நிலையத்திலிருந்து புறக்கோட்டையில் அமைந்திருந்த தப்ரொபேன் விடுதிக்கு ராணுவ அணியினரின் பாதுகாப்புடன் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதியில் இரண்டாவது மாடியில் அவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. அவர்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ அணியொன்று அங்கு நிலை நிறுத்தப்பட்டது. கொழும்பை வந்தடைந்தவுடன் அவர்கள் பார்த்தசாரதியைச் சந்தித்து உரையாடினார்கள். அங்கு பேசிய பார்த்தசாரதி முன்னணியினர் கட்டாயம் சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்தும் பங்கெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநாட்டில் தமக்குத் தேவையான அனைத்துக் கோரிக்கைகளையும் அவர்கள் எழுப்ப வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஜெயாரை இலங்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய சாபம் என்று வர்ணித்த அமிர்தலிங்கம் முன்னணியின் தலைவர்களை நான் தப்ரொபேன் விடுதியில் சென்று சந்தித்தேன். அமிர்தலிங்கம் சோபையிழந்து காணப்பட்டார். தாம் கடும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது தமக்குக் கவலையினை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். "இந்த நாடு எத்துணை கேவலாமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். இந்த நகரத்தின் வீதிகளில்த்தானே நாம் இரவு பகலாக நடந்து திரிந்தோம்?" என்று அவர் சோகத்துடன் கூறினார். பின்னர் என்னைப் பார்த்து, "எனக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராக வந்த அநுரா எப்படி இருக்கிறார்?" என்று வினவினார். மேலும், "சர்வகட்சி மாநாட்டில் சுதந்திரக் கட்சி பங்கெடுக்குமா?" என்றும் கேட்டார். நான் இதுகுறித்து அனுராவிடம் இரு தினங்களுக்கு முன்னர் கேட்டுக்கொண்டதாக அமிரிடம் கூறினேன். என்னிடம் பதிலளித்த அநுர, "தான் எடுக்கும் முடிவினை நடைமுறைப்படுத்த துணிவற்ற ஒரு மனிதரை நான் எப்படி நம்பமுடியும்?" என்று கேட்டிருந்தார். ஜெயாரை நம்ப முடியாமைக்கான காரணங்களை அநுரா மூன்று சம்பவங்களை முன்வைத்து விளக்கியிருந்தார். முதலாவது, பார்த்தசாரதியுடனான தனது ஒப்பந்தத்தை தான் செய்யவில்லை என்று மறுதலித்தமை. இரண்டாவது, இணைப்பு இரண்டில் தானே வெளியிட்ட பரிந்துரைகளை இந்தியாவின் அழுத்தத்தினால் தான் செய்யவில்லை என்று மறுதலித்தமை. மூன்றாவது, சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னணியினரை அழைக்க அச்சப்பட்டிருந்த ஜெயார், சிறிமா துணிவாக, "அவர்களை அழையுங்கள்" என்று கூறியபின்னரே உத்தியோகபூர்வமாக முன்னணியினரை அழைக்க முன்வந்தமை. நான் கூறிய கருத்தினைக் கேட்டுக்கொண்ட அமிர் சிரிக்கத் தொடங்கினார். "ஜெயார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. அவர் பார்த்தசாரதியை எப்படி ஏமாற்றினார் என்பதைப் பார்த்தீர்கள் தானே? பார்த்தசாரதியுடனான ஒப்பந்தத்தில் கைய்யொப்பம் இடுவதை சாதுரியமாகத் தவிர்த்துக்கொண்ட ஜெயார், பின்னர் அவ்வொப்பந்தத்தில் கையொப்பமிடவில்லையென்பதால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எனக்குக் கிடையாது என்று கூறினாரே? இந்த நாட்டின் மேல் விழுந்த மிகப்பெரிய சாபம் ஜெயவர்த்தன" என்று அமிர் கூறிமுடித்தார். சிங்கள மக்களிடையே இருந்து தமிழரின் அவலங்கள் குறித்த உண்மையான பிரக்ஞை ஏற்படும்வரை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாது என்று அமிர்தலிங்கம் என்னிடம் கூறினார். மேலும் இந்த நாடு எதிர்கொள்ளும் அடுத்த சாபம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையே இருக்கும் போட்டிதான் என்றும் அவர் கூறினார். "இக்கட்சிகளுக்கிடையிலான எதிர்ப்புணர்வு இன்று ஒரு போட்டியாகவே மாறிவிட்டது. தமிழர்களின் விரக்திக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இக்கட்சிகள் இரண்டிற்கும் இடையே இருக்கும் போட்டி மனப்பான்மைதான்" என்றும் அவர் கூறினார்.
  15. போதமும் காணாத போதம் – 11 இருண்டு கொட்டும் மழையில் வீட்டின் கதவு தட்டிக் கேட்டது. சிறிய கோடாக உடைந்திருந்த ஜன்னலில் கண் புதைத்துப் பார்த்த அம்மா, ரகசியமாய் சுதாகர் என்றாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் மூர்க்கமாக ஒலித்தது. என்னை அறைக்குள் போய் இருக்குமாறு கைகாட்டினாள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது?” “நான் தான் சுதாகர் கதவைத் திறவுங்கள்”. அம்மா கதவைத் திறந்தாள். நனைந்திருந்தவரிடம் பெரிய துவாயைக் கொடுத்தாள். சேர்ட்டைக் கழற்றி உடம்பைத் துடைத்தார். அணிந்திருந்த ஜீன்சை கழற்றுவதற்கு முன்பாக பிஸ்டலை வெளியே எடுத்து தண்ணீரை துடைத்தார். ஒரு சாறமும் சேர்ட்டும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னாள். சுடச்சுட இஞ்சி போட்டு ஒரு தேத்தண்ணி கொடுத்தாள். கொஞ்சம் இளைப்பாறிய பின் “இந்த நேரம் எதுக்கடா இஞ்ச வந்தனி” என்றாள். சின்னதொரு வேலையாய் ஊரெழு வரைக்கும் போய்ட்டு வந்தனான். கொஞ்சம் பிந்தீட்டுது. மழை வேற பேயாய் அடிக்குது. அதுதான் இஞ்ச வந்தனான்.” என்றார். “வேற எதுவும் திருகுதாளம் பண்ணிட்டு பாதுகாப்புத் தேடி இஞ்ச வரேல்ல தானே” அம்மா எச்சரிக்கையோடு கேட்டாள். அவர் கண்களைத் தாழ்த்தி தேத்தண்ணியைப் பார்த்தபடி ஆவி நுகர்ந்தார். பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி தைரியத்தை வரவழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. “அண்ணி, அப்பிடி ஒண்ட செய்திட்டு உங்களிட்ட வந்தாலும், நீங்களே என்னைச் சொல்லிக்குடுத்திடுவியள் தானே” சுதாகர் கேட்டார். “பின்ன, உங்களைப் பாதுகாத்து சனங்களுக்கு என்ன பயன்” அம்மா கேட்டதும் சுதாகருக்கு ஆத்திரமும் அடக்கமுடியாத அவமானமும் தோன்றியிருக்கலாம். உடனடியாக கதவைத் திறந்து வீட்டின் வெளியே போனார். மழையின் பேரிகை விடாது ஒலித்தது. திறந்திருந்த கதவின் வழியாக சாரல் புகுந்தது. “எடேய், நீ உள்ள வாறதெண்டால் வா. இல்லாட்டி நான் கதவைச் சாத்தப் போறன்” அம்மா குரல் கொடுத்தாள். “இல்ல நான் வெளியேயே படுக்கிறேன், வெள்ளனவா எழும்பிப் போகிறேன்” என்றார். “அடிசக்கை, பெரிய ரோஷக்காரன்ர வீம்பு. இதில கொஞ்சம் ரோஷம் உண்மையா இருந்திருந்தால் ஆர்மிக்காரனோட சேர்ந்து பிள்ளையள சுட்டுத் தின்ன மனம் வராது” என்று சொல்லி கதவை அடித்துச் சாத்தினாள். மழையை மிஞ்சி கதவில் ஒலித்தது இடி. அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் சீவல் பாக்கு கொட்டுண்டு இருந்தது. அம்மா பூக்களை ஆய்ந்து வந்து அப்பாவின் படத்திற்கு வைத்தாள். நான் எழும்பி குளித்துமுடித்து படிக்க அமர்ந்தேன். முட்டைக் கோப்பியை அடித்து பொங்கச் செய்த அம்மாவின் முன்னேயே ஒரே மிடறில் அருந்தினேன். “இனிமேல் சுதாகர் வீட்டுக்கு வந்தால் அவனை அண்டக்கூடாது பெடியா” சொன்னாள் அம்மா. “ஓம் அம்மா, ஆளைப்பார்க்கவே பயமாய் இருக்கிறது. தாடியும் தலைமுடியும். கண்ணெல்லாம் பாழிருட்டு. விடிவற்ற முகம்” “இவங்களுக்கு எங்க விடியும். மாறி மாறி ஆக்களை காட்டிக் குடுக்கிறதும். கடத்திக் கொண்டே சுடுகிறதும் வேலையா வைச்சிருக்கிறாங்கள். உலகம் அழியிறதுக்கு முதல் இவங்களும் – இவங்களின்ர இயக்கமும் அழியவேணும்.” “எங்கட இயக்கம் இவங்களை அழிக்காதோ” “முந்தியொருகாலம் அதெல்லாம் செய்தவங்கள். இப்ப கொஞ்சம் யோசிக்கிறாங்கள் காட்டு யானை மாதிரி ஒருநாள் வெளிக்கிட்டால் எல்லாரையும் முறிச்சு எறிவாங்கள்” என்றாள் அம்மா. பல வருடங்களுக்குப் பிறகு அதிசயமாக காந்தி மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அமைதிக்காலமென்றாலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் வருவதற்கு இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. காந்தி மாமா வீட்டிற்கு வந்ததையடுத்து மீனும், கணவாயும் சமைத்தோம். “எப்பிடி மேலிடம் உனக்கு பெம்மிஷன் தந்தது. ஆச்சரியமாய் இருக்கு” கேட்டாள் அம்மா. “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் எண்டு சொல்றது இதைத்தான். பன்னிரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கிறன். இண்டைக்குத் தான் அனுமதி கிடைச்சது” என்றார். “நல்ல விஷயம். நாளைக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலுக்கு போவம். அங்க உனக்காக வைச்சவொரு நேர்த்தி செய்ய வேண்டியிருக்கு” என்றாள் அம்மா. “எனக்காக என்ன நேர்த்தி வைச்சனியக்கா?” “உன்ர அலகில ஐஞ்சடிக்கு வேல் குத்தி காவடி எடுக்கிறனென்டு ஒரு சின்ன நேத்தி” சொன்ன அம்மா கொடுப்புக்குள் சிரித்தாள். மாமா அதெல்லாம் ஒன்று பெரிய பிரச்சனை இல்லையென கண்ணைக் காட்டினார். காந்தி மாமாவின் இடது தோள்பட்டையில் விழுப்புண் தழும்பு மெழுகேறிக் கிடந்தது. எப்போதாவது அதனைத் தடவிக் கொள்கிறார். போராளி தனது விழுப்புண்ணின் தழும்பை தடவிப் பார்ப்பது எதனால்? அவர்களுக்கு ஏதோவொரு தியானத்தை அது வழங்குகிறதா? நினைவுகளை அது கொதிக்கச் செய்கிறதா? லட்சியத்தின் தீ வளர்க்க அந்த வருடல் அவசியமோ என்றெல்லாம் கேள்விகள் தோன்றின. கோயில் செல்ல ஆயத்தமாகி காந்தி மாமாவும் நானும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தோம். அம்மா கதவைச் சாத்திவிட்டு “சரி வெளிக்கிடுவம்” என்றாள். வீதிக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம். கோவில் வரை செல்லும் பேருந்து வருவதற்கு தாமதம் ஆனது. ஓட்டோ பிடிச்சால் போய்ட்டு வந்திடலாமென்றார் மாமா. அதுக்கு குடுக்கிற காசில பத்து நாள் வீட்டுச் சீவியம் போக்கிடலாம் சும்மா இரு காந்தியென்றாள் அம்மா. பேருந்து முடக்கத்தை தாண்டி வருவதைக் கண்டதும் “அம்மன் எங்களைக் கைவிடாது. வாகனம் வந்திட்டு பாத்தியோ” என்று ஆனந்தித்தாள். காந்தி மாமா வேட்டி உடுத்தியிருந்தார். அகலக் கரை அவருக்கு பிடித்தமானது என்று அம்மா சுன்னாகத்தில் வாங்கிவந்தது. எடுப்பாக ஒரு தங்கச் சங்கிலி. அணிய மாட்டேனென்று எவ்வளவு சொல்லியும் அம்மா வேண்டிக் கேட்டதால் அணிந்தார். நெற்றி நிறைந்த திருநீற்று பட்டை. “மாமா, வடிவான ஆள்தான் நீங்கள், இந்தியாவுக்கு போனால் விஜய்க்கு சகோதரனாய் நடிக்கலாம்” “சிறுவா, உனக்கு இண்டைக்கு மாட்டு இறைச்சியில கொத்துரொட்டி வாங்கித்தரலாமெண்டு நினைச்சனான். அதை கட் பண்ணிட்டன்” “மாமா, இப்ப நான் சொன்னதில என்ன பிழை.” “நீ சொன்னது எல்லாமும் பிழை தான் சிறுவா” என்று எனது காதைத் திருகினார். நான் செல்லமாக பாவனையழுகையை எழுப்பினேன். அம்மா எங்களிருவரையும் பார்த்து புன்னகைத்தாள். கோவிலை வந்தடைந்து மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அடுத்த மாதத்தில் ஒருநாளில் அபிஷேகத்திற்கு அம்மா திகதி கேட்டு வந்தாள். வன்னியில நீங்கள் எந்த இடமென்று ஐயர் மாமாவிடம் கேட்டார். உடனடியாக ஜெயபுரம் என்றார் மாமா. என்ன வேலை செய்கிறீர்கள் அடுத்த கேள்வி வந்ததும் தேங்காய் யாபாரம் என்று சொன்ன மாமாவைப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகாலம் தேங்காய் யாபாரம் செய்யும் சிவத்தான் மாமாவை விடவும் உடல் மொழியைக் கொண்டு வந்திருந்தார். “மாமா, உங்கள நான் விஜய்க்கு அண்ணாவாக நடிக்கலாமெண்டு சொன்னது பிழைதான். நீங்கள் சிவாஜிக்கு அண்ணா” “என்ன தேங்காய் யாபாரியை வைச்சு சொல்லுறியோ” “ம். அப்பிடியே சிவத்தான் மாமா மாதிரியெல்லெ நிண்டனியள்” “பின்ன, இப்ப என்ர படையணி, இயக்கப்பெயர், தகட்டிலக்கம், ராங்க் எல்லாத்தையும் சொல்லவே முடியும்” “அதுவும் சரிதான். ஆனால் ஐயர் உங்களை இயக்கமெண்டு கண்டுபிடிச்சிட்டார்” “அதனால அற்புதமும் இல்லை. ஊழும் இல்லை. நான் அவரிட்ட அதை மறைக்கேல்ல. ஆனால் சொல்லவுமில்லை. அவ்வளவு தான்” நாங்கள் வீட்டினை அடைந்தோம். நாளைக்கு நல்லூர் கோவிலுக்கு போகலாமென நானும் மாமாவும் முடிவு செய்திருந்தோம். அம்மா கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் இருண்டிருந்தது. மின்விளக்குகள் ஒளிர்ந்தன. புட்டும் பழைய மீன்குழம்பும் ருசி குழைத்துண்டோம். மாமாவின் கைக்குழையல். உருசையூறும் கணம். அம்மா சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தாள். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா உடைந்த ஜன்னல் வழியாக கண்களை ஒத்திப் பார்த்தாள். சுதாகரும் அவனது கூட்டாளி தாடி ஜெகனும். சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் தகவல் சொன்னாள். மாமாவை மறைந்திருக்குமாறு சொன்னேன். அவர் அடுப்படிக்குள்ளிருந்த புகைக்கூட்டிற்குள் பதுங்கினார். அங்கே அதற்கான நிரந்தர ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். கதவைத் திறந்ததும் சுதாகர் உள்ளே வந்தார். அப்பாவின் புகைப்படம் முன்னே காய்ந்திருந்த பூக்களை விரல்களால் ஒவ்வொன்றாக தவர்த்திப் பார்த்துவிட்டு “அண்ணி, அண்டைக்கு நீங்கள் அப்பிடி கதைச்சிருக்க கூடாது. ஒரே கவலையாய் போயிற்றுது” என்றார். “பின்ன, நீங்கள் செய்யிற அநியாயத்த பார்த்துக் கொண்டு நாங்கள் ஐஸ்பழமே குடிக்கிறது. உங்களுக்கு கொலையெண்டால் கொப்புலுக்கி நாவல் பழம் தின்னுற மாதிரியெல்லே” “இஞ்ச எல்லாருக்கும் அப்பிடித்தான். முதலில ஆர் கொப்பு உலுக்கிறது எண்டு தான் போட்டி. மிச்சப்படி எல்லாரும் அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடினம்” “சுதாகர், உன்னை முந்தியொருக்கால் அவங்கள் சுட வெளிக்கிடேக்க மடிப்பிச்சை கேட்டு தப்ப வைச்சனான். இப்ப அப்பிடியெல்லாம் கருணை காட்ட மாட்டங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு வெளிக்கிடு.” “அண்ணி, நீங்கள் வெருட்டுறத பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுது. நாங்களும் போராளிகள் தான். இந்த நாட்டோட விடுதலைக்காக போராடத்தான் ஆயுதமேந்தினாங்கள். சுட்டால் சுடட்டும். அதுக்காக இவையளுக்கு பயந்து ஒடேலுமோ” “நீங்களும் போராளியள் எண்டு சொல்ல வெக்கமாய் இல்லையோடா, இல்ல கேக்கிறன். அரசாங்கம் தருகிற மாஜரின சனங்களின்ர பிணங்களில பூசி தின்னுறதெல்லாம் விடுதலைப் போராட்டம் இல்ல. விளங்குதா” “நாங்கள் எந்த இயக்கத்துக்கும் பயப்பிடேல்ல. உண்மையா போராட விரும்பினாங்கள். ஆனால் இண்டைக்கு நானும் தாடி ஜெகனும் எங்கட அமைப்பில இருந்து விலகலாமெண்டு முடிவெடுத்திட்டம். ஆனால் எங்கள ரைகேர்ஸ் மன்னிக்க மாட்டாங்கள். அவங்களிட்ட நாங்கள் சரணடையவும் மாட்டம். எங்கட வாழ்க்கையும் நாங்களுமெண்டு இருப்பம்” என்றார். “இயக்கம் மன்னிக்காது எண்டு என்னால உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் உடன விலகிடுங்கோ. அதை எப்பிடியாச்சும் இஞ்ச உள்ள அரசியல்துறை செயலகங்களுக்கு தெரியப்படுத்துங்கோ” என்றாள் “இல்ல, அதுக்கான நேரமில்லை. நாங்கள் விலகப் போற தகவல் எங்கட அமைப்புக்குள்ள தெரிஞ்சு போச்சு. எங்கட லீடர் தோழருக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” என்றார் சுதாகர். “தெரிஞ்சால் என்ன செய்வாங்கள். நீ அந்த பேப்பர்காரனை சுட்டுக்கொண்டது, எம்.பியை சுட்டுக்கொண்டது, மானவர் பேரவை பெடியனைச் சுட்டுக்கொண்டது மாதிரி உன்னையும் சுடுவாங்கள் அதுதானே. “விதை விதைத்தவன் வினை அறுப்பான்” எண்ட பழமொழி எல்லாத்துக்கும் பொருந்தும். சுதாகர் நான் சொல்றத கேள். இப்பவே ஏதேனும் ஒரு அரசியல்துறை பேஸ்ல போய் சரணடையுங்கோ. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு” வீட்டின் முகப்பு வாசலில் வெள்ளை வேன் வந்து நின்றது. சுதாகர் அதைப் பார்த்து “அண்ணி, எங்கடை ஆக்கள் தேடி வந்திட்டாங்கள். என்னை காப்பாத்துங்கோ” என்று பயந்தடித்து அழுதார். தாடி ஜெகனுக்கு கால்கள் நடுங்கி கண்ணீரோடு மூத்திரமும் கழன்றது. அம்மா கதவை இறுகச் சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் கண்களைப் பதித்து வெளியே எத்தனை பேரெனப் பார்த்தாள். இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவனுடைய வலது தோள்பட்டையில் ஏகே -47 ரக துவக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டத் தொடங்கினார்கள். அம்மா கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். வெளியே நின்றவன் பெரிதாக “ ரைகேர்சுக்கு வாலாட்டுற வே* கதவைத் திறவடி. உன்ர சாமானில வெடி வைக்கிறன்” என்று கூச்சல் போட்டான். “காந்தி இஞ்ச ஒருக்கால் வா” அம்மா மெதுவாக குரல் கொடுத்தாள். புகைக்கூண்டுக்குள் பதுங்கியிருந்த புலி கதவருகே வந்தது. “படத்தட்டுக்குப் பின்னால ஒரு உப்பு பையிருக்கு அதுக்கு கீழே உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வா” என்றாள். மாமாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன். பளபளக்கும் உலோகம். மாமா பிஸ்டலை ஏந்தி நின்றதும் இன்னும் வடிவு கூடியிருந்தார். சுதாகரும் தாடி ஜெகனும் விழிபிதுங்கி கீழே அமர்ந்திருந்தார்கள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது” என்று கேட்டபடியே பதிலுக்கு நேரமளிக்காமல் கதவைத் திறந்தாள். மாமாவின் கையிலிருந்த உலோகத்திலிருந்து சத்தமற்று வெளிச்சம் மட்டுமே பாய்ந்தது. வாசலிலேயே ரத்தம் கொப்பளிக்க கிடந்த இரண்டு பிணங்களையும் அள்ளி ஏற்றிக் கொண்டு அதே வெள்ளை வேன் புறப்பட்டது. சுதாகரும் தாடி ஜெகனும் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். காந்தி மாமா வாகனத்தை இயக்கினார். அம்மா ஓடிச்சென்று “காந்தி இவர்களை நீ எதுவும் செய்யக்கூடாது. அரசியல் துறையினரிடம் ஒப்படைத்து விடு” என்றாள். சரியென்று தலையசைத்தபடி மாமா புறப்பட்டார். அடுத்தநாள் காலையில் நான்கு பிணங்களைச் சுமந்த வெள்ளை வேன் ஒன்று வீதியின் நடுவே நின்றது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றி நின்று பார்த்த சனங்கள் சுதாகரைப் பார்த்ததும் “ஓ…இவையளே பெடியள் கொஞ்சம் பிந்தினாலும், சரியாய் செய்து போடுவாங்கள்” என்றனர். வீட்டிற்கு வந்திருந்த மாமாவிடம் நீ அவர்களைச் சுட்டிருக்க கூடாது என்று கோபமாக கத்தினாள். இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொன்றார்கள் என்றார் மாமா. இரவு சாப்பிடும் போது கேட்டேன். “மாமா, அவர்களை நீங்கள் சுடேல்லையோ?” “சிறுவா, மாமாவோட பேர் என்ன” “காந்தி” “மாமா, பொய் சொல்லுவேனா” “இல்லை. ஆனால் சுடுவியள் தானே” மாமா உறுதியாக ஓமென்று தலையசைத்தார். “காந்தி நீயே சுட்டனி” கேட்ட அம்மாவைப் பார்த்து, உறுதியாக இல்லையென்று தலையசைத்தார். சூரியனாய் தகிக்கும் ஒருபெரும் கனவின் நெடும்பயணத்தில் அஞ்சாமல் துஞ்சாமல் நிமிர்வின் குரலாக எதிரொலிக்கும் ஒவ்வொரு கணத்திலும் வரலாற்றின் கடைவாயில் துரோகக் குருதி வழிந்தது. கொப்பளித்தடங்கிய எரிமலையின் நாளங்களில் தீயின் உறைதல் திவலையாய்த் தேங்கின. பலிபீடத்தின் விளிம்பில் பதுங்கியமர்ந்த புலியின் கண்களில் “எவ்வளவு வலிமையானது தியாகம்” என்ற திருப்தி. கண்களைத் திறந்தபடி பாயில் படுத்திருந்த மாமாவுக்கு திருநீற்றை பூசிய அம்மா, “வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு” என்ற பதிகவரிகளை பாடிக்கொண்டே அருகில் அமர்ந்தாள். உறக்கத்தின் கிளைகள் மாமாவை அடர்ந்து மூடின. இதுவரை வஞ்சித்த இரவின் ஜன்னல் வழியாக காற்றுப் புகுந்தது. கருணையின் வளைவற்ற பாதையைப் போல நீட்டி நிமிர்ந்து ஆழ்ந்துறங்கிய மாமாவின் கைவிரல்களை முத்தமிட்டேன். எண்ணிறைந்த ஒளித்துளியுள் நினைவின் குளிராக எப்போதும் உள்ளது அன்றிரவு. https://akaramuthalvan.com/?p=1445
  16. இல்லை.உக்ரேன் போரை நடத்தி செல்வது வேறு நாடுகள். உக்ரேன் மட்டும் போரை நடத்துவதானால் அது என்றோ முடிந்திருக்கும். இலங்கையில் சிங்களம் மட்டும் போரை நடத்தவில்லை....அது போல் இதுவும்.... காசி ஆனந்தனின் நறுக்குகளை இன்னுமா காவிக்கொண்டு திரிகின்றீர்கள்? 🤣
  17. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் யாழுக்கு அது ஒரு வகையில் வருமானம் தரும். குடும்பத்தார் களுக்கு நன்றிகள்.
  18. இல்லை திண்ணை நல்லம். புதியவர்களை கவரும். ஏதேனும் அவசரமெனில் உடனேயே தெரிவிக்கலாம்.இவ்வாறாக சில நன்மைகள் உண்டு
  19. தகவலுக்கு நன்றி நிழலி. ஆழ்ந்த இரங்கல்கள்.
  20. ஈழப்பிரியனவர்களே நன்றி. எனக்கும் இதே கேள்வியெழுந்தது. நீங்கள் கேட்டுள்ளீர்கள். நன்றி ஆழ்ந்த இரங்கல்கள்.
  21. https://yarl.com/forum3/index.php?app=core&module=system&controller=redirect&do=advertisement&ad=38&key=4c25862ab07bc99c89ead3d4e6fbe9b0e3a273666f67aa0f022f92d8aea48096 முகப்பில் கணேஸ் என்பவருக்கு துயர் பதிவில் போட்டிருக்கிறீர்கள். யார் இவர்? ஆழ்ந்த அனுதாபங்கள்.
  22. மன்னார் களமுனையில் தமிழீழக் குறிசூட்டுநர் (SVD) ஒருவர் காவல் கடமையில் ஈடுபட்டிருக்கும் காட்சி இவர் தமிழீழத் தேசியத் தலைவருக்கு அகவை 53 வாழ்த்துத் தெரிவிக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.