Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2954
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/18/24 in all areas

  1. சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ணி அதை தாங்கள் எடுத்த காட்சி போல பிரசுரித்து கருத்துக்களை அள்ளி வாரி இறைத்தனர். யாழ்ப்பாணத்தவன் உலகத்திலயே சிறந்த பிறவியாக இருக்க வேணும் என்ற கருத்து பட சிலர் எழுதினர்.இன்னும் சிலர் இந்த அசம்பாவிதத்தினால் யாழ்ப்பாணத்தானின் மானம் கப்பல் ஏறிவிட்டது என முதலை கண்ணீர் விட்டனர்.. இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள். அவர்களின் ஒழுங்கமைப்பில் தவறுகள் இருக்கின்றது அதை சுட்டி காட்டுங்கள் இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல் செயல் பட உதவியாக இருக்கும்...இவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒழுங்கமைப்பாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் அதாவது பொது மனபான்மை ... தொழிலதிபர் தனது கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள் அதில என்ன தப்பு இருக்கின்றது? தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தொழிலதிபர்கள் பலர் தொழில் முதலீடு செய்ய முன் வருகின்றனர் ,ஈடுபடுகின்றனர்.அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணிலயோ, இந்தியா,அல்லது ஏனைய ஆசிய நாடுகளில் தங்கள் முதலீடுகளை இலகுவாக செய்யலாம் இருந்தும் தாயகத்தில் இருக்கும் தங்களது பற்று காரணமாக அங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர். அவர்களை ஊக்கபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தாயக மக்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் .சில யூ டியுப் நபர்கள் இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் .அவர்கள் உண்மையிலயே பாராட்ட பட வேண்டியவர்கள் தொழிலதிபர் இந்திரனின் அரவணைப்பால் தாயக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிமாக இருக்கும்..இந்த இசை நிகழ்ச்சியின் பொழுது நடை பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிப்பு பொருட்களுக்கு மட்டுமே...எனவே எந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வந்தாலும் அரவணைத்து ஊக்க படுத்த வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.. யாழ் மாநகர சபையினர்,மற்றும் பொலிசார்,அரசு போன்ற துறையினரும் இந்த அசம்பாவித் நிகழ்வுக்கு பொறுப்பாளிகள் ..இவர்களை கேள்வி கேட்க வேண்டிய மண்னின் யூ டியுப் விண்ணர்கள்,சமுக வலைத்தள ஜாம்பவாங்கள் எல்லாம் பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவாலி கூட்டங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு இவர்களை திறுத்த முடியாது .ஆனால் கட்டுப்படுத்த முடியும் அதை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசார் செய்ய வேண்டும் . மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் நடமாடுவதை பொலிசார் தடை செய்திருக்க வேணும் .மாநகர சபை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேணும் .. ஒர் அரசியல்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மக்களை விட கலகம் அடக்கும் பொலிசார் அதிகமாக நிற்பார்கள் இங்கு அப்படியான எதுவும் ஒழுங்கு செய்ய படவில்லை.. பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் இங்கு தவறு செய்து விட்டார்கள் .. ஏற்கனவே மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் பொழுது மக்களை அமைதி படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி சிங்கள மொழியில் அமைதி காக்கும் மாறு கோருகின்றார் இது இன்னும் மக்களின் மனவேதனையை தூண்டும் செயல் ...அடுத்து தமிழில் பேசிய அதிகாரி கூறியவை எதுவும் மக்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு... இளைய வயதில் பிரபல தொழிலதிபராக வந்து தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஒர் கல்வி நிறுவனத்தை தொடங்குவது என்பது உண்மையிலயே பாராட்டபட வேண்டிய ஒன்று ..கல்வி அறிவே எவராலும் அழிக்க முடியாத சொத்து...எம் மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி எழுதிய காரணத்தால் நானும் இந்திரனிடம் பணம் வாங்கி எழுதுகிறேன் பதிவுகளை போட சிலர் நினைக்கலாம் எனக்கு அவர் யார் என தெரியாது என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. எல்லோரையும் குற்றம் சாட்டி, எம் மண்ணின் மைந்தர்கள் தொழில் செய்ய விடாமல் தடுக்க பல முயற்சிகள் திரைமறைவில் நடை பெறுவது கசப்பான உண்மை... நலன் விரும்பி
  2. ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம். போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இருக்கும். ஆனால் தனது முதலீட்டை விளம்பரப்படுத்துவதற்காக சினிமாத் துறைப் பிரபல்யங்களை கொண்டு வரும்போதுதான் சர்ச்சை எழுகிறது. கடந்த இரு நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு பிரதேசம்தான் யாழ்ப்பாணம். நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது அவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு போக்கின் தேறிய விளைவு. அமெரிக்காவில் தமது சுகபோகங்களைத் துறந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து பள்ளிக்கூடங்களைக் கட்டிய மிஷன் தொண்டர்கள்; ஊரூராக பிடியரிசி சேர்த்து இந்துக் கல்லூரிகளைக் கட்டிய இந்து மறுமலர்ச்சியாளர்கள் என்ற மகத்தான முன்னுதாரணங்கள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு. இம்மாதம் ஆறாந் திகதி உடுவில் மகளிர் கல்லூரியில், அக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 200ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடக்கின. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன் திருமதி.ஹரியற் வின்சிலோ என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பெண், தனது 28ஆவது வயதில் உடுவில் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். தென்னாசியாவில் விடுதி வசதியோடு கூடிய முதலாவது பெண்கள் பள்ளி அது. யாழ்ப்பாணத்தில் ஹரியற் அம்மையார் தங்கியிருந்த காலத்தில் அவருடைய ஐந்து பிள்ளைகள் தொற்று நோய்க்கு இரையானார்கள். அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்ட அவருடைய ஆண்பிள்ளை கடல் பயணத்தில் இறந்து போனார். தொடர்ச்சியான தனிப்பட்ட இழப்புகளால் நொறுங்கிப்போன போன ஹரியற் தன்னுடைய 37ஆவது வயதில், இளவயதில் இறந்து போனார். அவரோடு சேர்ந்து பணிபுரிய வந்த அவருடைய இரண்டு சகோதரிகள் அவருக்குப் பின் இறந்து போனார்கள். தன் மூன்று சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரிவதற்கென்று அமெரிக்காவிலிருந்து வந்த மற்றொரு சகோதரி யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய பின்னர்தான் தன்னுடைய ஏனைய மூன்று சகோதரிகளும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்காக எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து சந்நியாசிகள்போல வாழ்ந்து, தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மதம் மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினார்கள். மிஷன் பள்ளிக்கூடங்களை எதிர்கொண்டு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களைக் கட்டினார். அவ்வாறு பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு அவர் பிடியரிசித் திட்டம் என்ற ஒரு சமூகப் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமங்கள் தோறும் பிடியரசி சேகரிக்கப்பட்டு, அந்த நிதியில் யாழ்.இந்துக் கல்லூரியும் உட்பட பல்வேறு சுதேச பள்ளிக்கூடங்களை இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் கட்டினர். உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் மருதனார் மடத்தில் ராமநாதனின் கல்லூரி கட்டப்பட்டது. அப்பள்ளிக்கூடத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய திருமதி லீலா ராமநாதன் ஒரு ஒஸ்ரேலியப் பெண். அவருடைய சேவையை வியந்து போற்றுபவர்கள் அவருடைய வெண்ணிறப் பாதங்களில் அந்த ஊரின் செம்பாட்டுச் சாயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள். உடுவில் மகளிர் கல்லூரியின் முதலாவது பட்டதாரி இவ்வாறு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும், உள்ளூரில் சைவசமய மறுமலர்ச்சியாளர்களும் கல்விச்சாலைகளைக் கட்டியெழுப்பிய போது அவர்கள் அதை அதிகபட்சம் தொண்டாகவே செய்தார்கள். கல்விப் பணி என்பது உன்னதமான ஒரு தொண்டாகக் கருதப்பட்டு, போற்றப்பட்ட காலகட்டம் அது. இப்படிப்பட்ட கல்விச்சாலைகளைக் கட்டும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து நோர்தென் யூனியையைப் பார்க்க வேண்டும். அந்த பல்கலைக்கழகம் கட்டப்பட்டிருக்கும் கந்தர் மடம் சந்தியில் இருந்து அரசடிச் சந்தியை நோக்கி வரும் கந்தர் மடம் வீதியில், முன்பு ஒரு சைவப் பிரகாசா வித்தியாசாலை இருந்தது. அங்கே மாணவர்களின் வரவு குறைந்தபடியால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு; பின்னர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இப்பொழுது ஏதோ ஒரு அரச கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அச்சிறிய பள்ளிக்கூடத்துக்கு ஈழப்போரில் ஒரு முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு தொடக்கத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தபொழுது சைவப்பிரகாச வித்தியாசாலை ஒரு வாக்களிப்புச் சாவடியாக இருந்தது. அத்தேர்தலைப் பகிஷ்கரித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தச் சாவடியில் காவலுக்கு நின்ற படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்பொழுது மாணவர்கள் இல்லை என்பதால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது. அது அமைந்திருக்கும் வீதி பலாலி வீதியில் வந்து ஏறும் சந்தியில் நோர்தேன் யூனி கட்டப்பட்டிருக்கிறது. கனடாவில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர் அதைக் கட்டியிருக்கிறார். தனது தாயகத்தில் அவர் முதலீடு செய்ய விரும்புகிறார். குறிப்பாக அதனைக் கல்வித் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார். தமிழ் மக்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டும். தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய துறைகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தில் தங்கியிராத அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் அந்த முதலீட்டை வரவேற்க வேண்டும். இராமநாதன் இணையர் அந்த முதலீட்டாளரின் மனைவி இந்தியாவின் சினிமாப் பிரபல்யங்களில் ஒருவரான ரம்பா. அதனால் அப்பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த முயன்ற முதலீட்டாளர் தன்னுடைய மனைவியின் துறைசார்ந்து சிந்தித்து விட்டார். தன் மனைவியின் துறை சார்ந்த பிரபல்யங்களை கொண்டு வந்து பெருமெடுப்பில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதன்மூலம் தனது பல்கலைக்கழகத்திற்குப் பொருத்தமான விளம்பரம் கிடைக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். தமிழ் வெகுசனைப் பண்பாட்டில் சினிமாவின் தாக்கம் வலியது. பெருந்தமிழ் பரப்பில், குறிப்பாக தமிழகத்தில், அரசியல் எனப்படுவது ஏதோ ஒரு விகிதமளவுக்கு சினிமாவின் நீட்சியும் அகட்சியும்தான். ஊடகமாகட்டும் பொழுதுபோக்கு ஆகட்டும், எல்லாவற்றிலும் சினிமாவின் தாக்கம் உண்டு. கேபிள் தொலைக்காட்சி எனப்படுவது சுந்தர ராமசாமி கூறுவதுபோல வீட்டுக்கு வந்த திரைப்படம்தான். அது வீட்டில் வரவேற்பறையில் எப்பொழுதும் இருப்பது. எனவே தமிழ்ப் பொது உளவியலின் மீது தமிழ்ச் சினிமாவின் செல்வாக்குப் பெரியது. தென்னிந்திய வணிக சினிமாவானது மேலோட்டமானது; தமிழ்ப் பொதுப் புத்தியைச் சுரண்டுவது அல்லது அவமதிப்பது; பெண்ணுடலைப் போகப்பொருளாகப் பார்ப்பது. தமிழில் ஜனரஞ்சகமானவற்றுள் பெரும்பாலானவை மேலோட்டமானவை; ஆழமற்றவை; அறிவுக்கு விரோதமானவை. இந்த அடிப்படையில் பார்த்தால் அறிவைக் கட்டியெழுப்பும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துக்கு ஜனரஞ்சகமான விளம்பரஉத்தி ஒன்றைத் தெரிந்தெடுத்த விடயத்தில் அந்த முதலீட்டாளர் தவறிழைத்து விட்டார். நிகழ்வில் கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர் மேடையில் பேசுகிறார். தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் புலம்பெயர்ந்து போன நாட்டில் இருந்து வந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் கூட்டம் அவருக்கு அடங்கவில்லை. அவருடைய மனைவி ரம்பா பேசுகிறார். கூட்டம் அடங்கவில்லை. போலீஸ் அதிகாரி பேசுகிறார் கூட்டம் அடங்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்த்து அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததன் விளைவு அது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகாரத்துக்குள்ள வரையறைகளை உணர்த்திய ஒரு நிகழ்வும் அது. ஆனால் அந்தக் குழப்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கு விரோதமானது அல்ல. முதலீட்டை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வியாபார உத்தியின் விளைவு அது. மேலும்,ஹரிஹரனின் இசையை பார்வையாளர்கள் அவமதித்ததாகவும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு தமிழ் முதலீட்டாளர் தமிழ் பொதுப்புத்தியை கையாள்வதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு என்பதனை உணர்த்திய ஒரு குழப்பம் அது. தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களும் தாயகத்தில் உள்ள அரசியல் சமூகமும் இணைந்து ஒன்றிணைந்த ஒரு வேலைத் திட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதை உணர்த்திய ஒரு நிகழ்வு அது. தாயகத்துக்கு முதலீடுகள் அவசியம். தாயகத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை; அல்லது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இல்லை; அல்லது முன்னேறுவது கடினம் என்று கருதும் ஒரு தொகுதி மக்கள் தாயகத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. “இந்த மண் எங்களின் சொந்த மண்”என்று பாடிய ஒரு மக்கள் கூட்டம், அந்த மண்ணை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே தாயகத்தைத் தொழிற் கவர்ச்சி மிக்கதாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகள் அவசியம். ஆனால் அந்த முதலீடுகளை எந்த நோக்கு நிலையில் இருந்து முன்னெடுப்பது என்பதுதான் இங்குள்ள சவால். “நாங்கள் தானம் செய்கின்றோம் அல்லது தொண்டு செய்கிறோம்”என்ற நிதி அதிகார மனோநிலையில் இருந்து அல்ல, மாறாக, தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது; அதற்கு வேண்டிய துறைசார் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். அதாவது தேச நிர்மானத்தின் பங்காளிகள் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்கள் தாயகத்தை நோக்கி வரவேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை எப்படி தேச நிர்மானத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்று தாயகத்தில் உள்ள அரசியல் சமூகம் சிந்திக்க வேண்டும். முதலாளிகள், அவர்கள் தமிழர்களோ, சிங்களவர்களோ,வெள்ளைக்காரர்களோ யாராக இருந்தாலும், முதலாளிகள்தான். அவர்களிடம் லாப நோக்கம் இருக்கும். முதலாளிகள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளை கொழும்புமைய நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுவார். அவர் அப்படித்தான் சிந்திப்பார். ஆனால்,முதலீடுகளை தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட வேண்டியது தாயகத்தில் உள்ள அரசியல் சமூகத்தின் பொறுப்பு, கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தல்ல; அல்லது தனிய லாப நோக்கு நிலையில் இருந்தல்ல;தேசத்தைக் கடியெப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து முதலீடு செய்யுமாறு,தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களைத் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக்க வேண்டும். பாரதி பாடியது போல “ஆலைகள் செய்வோம்;கல்விச் சாலைகள் செய்வோம்” https://www.nillanthan.com/6549/
  3. அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவார்த்தப் பித்துக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும்.. வேலை செய்யாது. என்ன அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு கொன்று குவிக்க துணை நின்று.. சுகபோகம் சந்திச்சவன்.. கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுகிறான்.. சிலது தப்பிப்பிழைச்சிருப்பதற்கு இறைவன் தான் பதில் சொல்லனும். என்ன மரணம் என்பது கர்ணனிற்கும் உண்டு.. கருணாக்களுக்கும் உண்டு. அதனால்.. கர்ணனும் கருணாவும் ஒன்றாகிட முடியாது. இரண்டு மரணங்களிக்கிடையேயும் வேறுபாடுண்டு. அடிப்படையில் இரண்டும் மரணங்கள் ஆகினும்.
  4. அண்மையில் எலியஸ் ஜெயராஜா தனது வீட்டில் இதைப்பற்றி ஒரு விளக்கவுரை கொடுக்க வட கரோலினாவில் உள்ளவர்களை அழைத்திருந்தார். அன்று நியூயோர்க் திரும்ப திட்டமிட்டிருந்ததால் போக முடியவில்லை.
  5. இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை. எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள். ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா? இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம். இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை. வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார். ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது. மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள். வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை. இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.
  6. நியூசிலாந்தில், எனது அம்மாவின் சாம்பலை அடுத்த நாளே வீட்டுக்கு கொண்டு வந்து தந்தார்கள். யேர்மனி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சாம்பலோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்று என்னிடம் கைவசம் இருக்கிறது. எழுதலாம் என்று பார்க்கிறேன். சர்வாதிகார நாட்டுப் பட்டியலிலே போட்டிருப்பார்கள்😛
  7. கொப்பி-பேஸ்ற்றில் ஆங்கிலத்தில் இருந்த சொற்களைக் காணவில்லை @யாயினி! //திடீரென ஓர் உந்துதல் ஏற்படக் கைத்தொலைபேசியை எடுத்து, கூகுளில் ‘communist countries today’ என்று தட்டிப் பார்த்தார். // முதலாளித்துவம், தாராளவாதம், ஜனநாயகம் என்பவற்றுக்கு மாற்றான புட்டினின் ரஷ்யாவை கொம்யூனிஸ்ற் நாடுகளில் ஒன்றாக கூகிள் சொல்லாமல் விட்டது கவலைக்குரியது! தோழர் ஷோபாசக்தி வழமைபோன்று சொற்களால் செதுக்கியிருக்கின்றார். ஆனாலும் யசோதா சாம்பலைக் கரைத்தது கொம்யூனிஸ கியூபாவின் கடலிலா அல்லது தனியாருக்குச் சொந்தமான வரடேரோவிலா என்பதில் குழப்பம்தான்!
  8. ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். கதை நீளமானதாக இருந்தாலும், வழமை போல, அவரது எழுத்து நடை, கதையை இடைவிடாமல் வாசிக்க வைத்தது. இலங்கை, பிரான்ஸ், கியூபா என்று கதையுடன் சேர்த்து நானும் பயணித்த அனுபவம் கிடைத்தது. அழகாகச் சொல்லி முடித்தார். பிரான்ஸுக்குப் பக்கத்தில்தான் யேர்மனி இருக்கிறது. இரண்டுமே ஐரோப்பிய வலயத்துக்குள்தான் இருக்கின்றன. ஆனால் இறந்தவர்களின் சாம்பல் விடயத்தில், இரண்டு நாடுகளிலும் நடை முறையில் மாற்றங்கள் இருப்பதை, ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்த போது என்னால் அறிய முடிகிறது. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் பேழைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். அதற்கான செலவு 400 யூரோக்கள் மட்டுமே! இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல் பேழை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலே கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயல். சிலர் சுவிஸ் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை அனுப்பச் சொல்லிவிட்டு, ( அதற்குப் பணம் கொடுக்க வேண்டும்) அங்கே சென்று, தங்கள் விருப்பம் போல் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை எடுத்துச் சென்று, சம்பிரதாய முறைப்படி கடமைகள் செய்ய விரும்புவார்கள். இறந்தவரின் சாம்பலை அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்வதற்கு எந்த அனுமதியும் கிடையாது. சம்பந்தப்பட்ட அலுவலகர்களே சாம்பலை நேரடியாக குறிப்பிட்ட நாட்டுக்கு, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். அனுப்புவதற்கான கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். எந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறோமா அந்த நாட்டுச் சுங்க அலுவலகம் ஊடாகப் பெற்றுக் கொள்ள ஆவன செய்வார்கள். இறந்தவரின் சாம்பலை கியூபாவுக்கு கொண்டு செல்வதையும், அதை விமானத்தில் கையில் வைத்திருப்பதாகவும், ‘சித்திரப் பேழை’யில் சொல்லி இருப்பது எனக்குப் புதுமையாக இருந்தது. பிரான்ஸ் நாட்டு நடைமுறை அப்படி.
  9. எதை மறப்பது எதை விடுவது நெஞ்சமெல்லாம் புண் முதுகெல்லாம் நயவஞ்சகர்களின் கத்திகள் இதுக்கு மேலும் இவர்கள் மறப்பது எனும் போர்வையில் உன்னதமான புலிகளின் அமைப்பை யாழில் தரம் தாழ்த்துவதே அவர்களின் வேலை. கொஞ்சம் விட்டால் புலிகள் தான் தமிழரை அழித்தார்கள் என்று யாழில் நிறுவினாலும் நிறுவுவார்கள் . பம்பல் வேணுமென்றால் தினமும் உலகில் நடக்கும் சுவாரசியமான விடையங்கள் நிறைய இருக்கு நன்னி.
  10. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 பிப்ரவரி 2024 இந்தியாவில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் பல்வேறு நாடுகளிலும் விவசயிகள் போராட்டட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நாடுகள் அனைத்திலும் முக்கிய நகரங்களின் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். ஆனால், எதற்காக இந்த விவாயிகள் போராடி வருகின்றனர்? அதற்கான காரணம் என்ன? ஐரோப்பியா மற்றும் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் இரண்டும் ஒன்றா? பட மூலாதாரம்,ERIC LALMAND/BELGA MAP/AFP படக்குறிப்பு, பல்வேறு நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. எந்தெந்த நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது? மேற்கு போலந்தை சேர்ந்த போஸ்னான் நகரின் சாலைகள் முழுதும் 1,400-க்கும் மேற்பட்ட டிராக்டர்களோடு விவாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களது போராட்ட முறை ஒரே மாதிரியனதாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் கோரிக்கை வேறு வேறானதாக இருக்கிறது. ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகள் சில முக்கிய நகரங்களுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஹங்கேரிய விவசாயிகள் யுக்ரேனிலிருந்து ஐரோப்பாவுக்குள் வரும் விவசாய பொருட்களை தடுத்து நிறுத்துவதற்காக டிராக்டர்களோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் பாரிஸை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பட மூலாதாரம்,VILLAR LOPEZ/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு ஐரோப்பிய விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் நான்கு முக்கிய பிரச்னைகளை முன்வைக்கின்றனர். விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு. விவசாயத்தில் அதிகரித்து வரும் அரசின் தலையீடு. பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள். ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விளைபொருட்களின் விலை குறைவு. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விவசாயிகளுக்கு உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை விவசாய பொருட்களை தடுக்க வேண்டும். அதிக இறக்குமதியின் காரணமாக உள்ளூர் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதே அவர்களது வாதம். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு எதிராக ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிரீஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் வருமான வரியில் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ள முடிவை எதிர்த்து போராடி வருகின்றனர். போலந்து விவசாயிகள் மொத்தம் 256 இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அங்கு விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு முக்கியமான சாலைகளை முற்றுகையிட்டுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூற்றுப்படி, போஸ்னனில் மட்டும் 6,000 விவசாயிகள் கூடியுள்ளனர். இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரீஸை சேர்ந்த விவசாயிகள் மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் உமிழ்வு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை 50% குறைக்க முடிவு செய்தது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், 2040-க்குள் கார்பன் உமிழ்வை 90% கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஸ்பெயினில் நான்காவது நாளாக பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால், பில்பாவ் போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது முக்கிய கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஆதாரவிலை உத்திரவாதம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை முன்வைத்துள்ளனர். ஒருவகையில் ஐரோப்பாவில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையில் இருந்து இது மாறுபட்டதாக உள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். லக்கிம்பூர் கேரி வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு உடனடி கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்தாண்டு (2024) இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்தியா போல விவசாயத்தை சார்ந்த நாடுகள் இல்லையென்றாலும் கூட, அங்கு விவசாயிகளால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும். எனவே உலகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளின் அடுத்தகட்டம் என்ன? இதனால் உலக அரசியலில் தாக்கம் ஏற்படுமா? இந்த போராட்டங்களினால் இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகளின் அரசியலில் ஏற்படும் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். https://www.bbc.com/tamil/articles/cv20e2e217jo
  11. இதை தான் காலம் காலமாச் சொல்லிக் கொண்டிருக்கினம். சட்டத்தை அமுலாக்குபவனும் சட்டத்தை மதிப்பவனும் உருவாகினாலும்.. மனிதத்தை இனங்காணாத மிருகங்களாக மனித உருவில் மிருகங்கள் உலாவரத்தக்க சூழ்நிலைகள் களையப்படாமல்.. இவற்றைக் கட்டுப்படுத்துவது இலகு அல்ல. அனுமதியின்றி.. ஒரு பெண்ணை தொட்டால் கடுமையான தண்டனை என்ற மத்திய கிழக்கு நடைமுறைகள் வராமல்.. ஹிந்தியாவில்.. தெற்காசியாவில்.. பெண்களுக்கான பாலியல் பாதுகாப்பு என்பது பலவீனமாகவே இருக்கும்.
  12. யோகேஸ்வரன்: இதோ 1000 இளைஞர்களை தாருங்கள் தமிழீழம் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களின் சிங்கள எஜமான அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார். அவரின் மனைவியும் அதே. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இனப்படுகொலைகளை.. வெண் புறா.. வெண்டாமரைக்குள் மறைக்க.. உதவினார்.. செம்மணி புதைகுழிகள் கூட கண்ணில் படவில்லை.. போய் சேர்ந்தார். அமிர்தலிங்கம்: ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மக்கள் வகைதொகையின்றி இறந்து கொண்டிருக்க.. ஹிந்திய இராணுவம் ரப்பர் செல் அடித்தபடியே முன்னேறுவதாக ஹிந்திய விசுவாச அரசியலை முன்னெடுத்தார்.. போய் சேர்ந்தார். நீலன் திருச்செல்வம்: யாழ்.. மற்றும்.. வன்னியை ஆக்கரமிக்கும் சந்திரிக்காவின் வெண்புறா வேச இன அழிப்புப் போர் நீண்ட போது.. மக்கள் பட்டினி கிடந்தும் இடம்பெயர்ந்தும் செத்துக் கொண்டிந்த போது.. சந்திரிக்காவை சமாதான தேவதையாக சித்தரிக்க.. ஈயன் பொக்ஸ்.. விலகி நினறு விட்ட போதும்.. சிங்களம் கிழித்தெறிந்த போதும்.. புலிகள் நிராகரித்து நின்ற போதும்.. தன் வித்துவத்தையும் சிங்கள விசுவாசத்தையும் காட்டப் போய்.. போய் சேர்ந்தார். இப்ப.. மிஸ்டர்.. சுமந்திரன் அந்தப் பட்டியலில் வந்து குந்தி இருக்கிறார். என்ன தமிழ் மக்கள் கேடயம் இழந்த நிலையில் இருப்பதால்.. இவரால்.. சிங்கள விசுவாசத்தை தமிழர்களின் வாக்குகளை வைச்சே காட்ட முடியுது. இதில் எல்லாமே அரைகுறை.. இனவிரோத சட்டாம்பிகள் தான் கூடிய இனத்துரோகத்தைச் செய்திருக்கினம். அது காசுக்கு கட்சிக்காரனை காப்பாற்ற சாட்சிக்காரனை குற்றவாளி ஆக்கிற குணத்தின் பரினாமம் என்றால் வேறில்லை. இவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதனால் தான் சிலது துர்மரணங்களை பரிசாக்கிக் கொண்டன.
  13. உண்மை தான். ஏற்றுக்கொள்கிறேன். தங்களுக்கு கருத்து சொல்லும் உரிமை உண்டு. அதை நான் என்றும் மறுக்கவில்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தை மறுக்கும் பாணியில் நீங்கள் கேள்வி கேட்டதால், உங்களுக்கு அது சொல்லப்படவில்ல, நீங்கள் அதை ஏற்கவேண்ட அவசியம் இல்லை என்று, உங்கள் கருத்துரிமையை மதித்தே அதை தெரிவித்தேன் நண்பரே. கருத்துரிமையை அனைத்து ஆயுத்தாரிகளும் மறுத்து அவ்வாறு சுதந்திரமாக சிந்திப்பவர்களை, கருத்து தெரிவித்தவர்களை நர வேட்டையாடிய துயர வரலாறு இனி வேண்டாம் என்ற உங்களது கருத்துடன் நானும் உடன் படுகிறேன்
  14. இந்தியா, அனுராவின் வாக்குகளை குறைக்கதான் அங்கு அழைத்தார்களோ தெரியவில்லை... விமல் வீரவம்சா மற்றும் கம்பன்போல போன்றவர்களுக்கு இதனால் கொஞ்ச வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும்.. இந்திய விரோத போக்கு சிங்கள மக்களிடம் 80% உண்டு இதை உடைப்பது சரியான கடினம்... சிறிலங்காவில் ...இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய சமுகங்கள் பெளத்த சிங்களவர்கள் 80% கிறிஸ்தவ சிங்களவர்கள் 80% முஸ்லீம் மக்கள் ..100% இந்துக்கள் வட கிழக்கு 50% கிறிஸ்தவ தமிழர்கள் 50% மலையக மக்களின் ஆதரவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்....அது தான் இந்தியா அவர்களை அதிகம் நம்பியிருக்கு ....
  15. இது தமிழரது ஒருவகை மனநோய். தம்மை தாமே நேர்மையுடன் சிந்திப்பவர்கள் அறிவுஜீவிகள் என்பது. உண்மையில் தமிழர்களது வரலாற்றில் இவர்களது பங்களிப்பு என்பது தமது சுயநலம் மற்றும் சொந்த லாபங்கள் மட்டுமே.
  16. பொது தளத்தில் கருத்து பகிர்ந்தால் அதுக்கு கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு இப்படியான மனப்பான்மை தான் சில ஆயுததாரிகளிடம் முன் முதல் இருந்தது ...
  17. சித்திரப்பேழைகதைகள் ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் முகம் வேதனையால் நெளிந்து விரிய, அவர் சில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி யசோதாவிடம் முனகினார்: “யசோ… என்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை” இவையே உண்மையில் அமரேசனின் இறுதி வார்த்தைகளாக இருந்தன. யசோதா தன்னுடைய சுட்டுவிரலை மென்மையாகக் கணவரின் மெல்லிய உதடுகளின் மீது வைத்து மூடியவாறே, கணவரின் கண்களைப் பார்த்தார். அப்போது, அமரேசன் சிரமப்பட்டுத் தனது உதடுகளைப் பிரித்துப் புன்னகைத்தார். அந்த வரண்ட உதடுகள் யசோதாவின் விரலை முத்தமிட்டு மூடிக்கொண்டன. இரண்டு நாட்கள் கழித்து அமரேசன் இறந்துபோனார். மின் மயானத்தில் அமரேசனின் சிறிய உடலை எரியூட்டிய பின்பாக, ஒரு சித்திரப்பேழைக்குள் பிடி சாம்பலை வைத்து யசோதாவிடம் கொடுத்தார்கள். தீக்கோழி முட்டையின் அளவிலும் வடிவத்திலுமிருந்த அந்தச் சித்திரப்பேழை கருப்பு நிறத்திலிருந்தது. அதன் தலையிலும் அடிப்பாகத்திலும் வெள்ளிப் பூச்சால் சித்திர வேலைப்பாடுகளிருந்தன. இடைப்பட்ட பகுதியில் வெண்ணிறத்தில் பொட்டுப் பொட்டாகச் சின்னஞ்சிறிய பெகோனியாப் பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறிக்கப்பட்டிருந்தன. இப்போது யசோதா அந்தச் சித்திரப்பேழையுடன் வீட்டில் தனித்தே இருக்கிறார். இரண்டு அறைகளும் சிறிய கூடமுள்ள அந்த வீடு ஊரிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறது. அந்த ஊரும்கூட பாரிஸ் நகரத்திலிருந்து தெற்குத் திசையாக அறுபது கிலோமீற்றர்கள் தொலைவில் தனித்துத்தான் இருக்கிறது. பாரிய தொழிற்சாலைகளுக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்குமாகவே அந்த ஊர் உருவாக்கப்பட்டிருக்கிறது. சலவைத் தொழிற்சாலையில் வேலை முடிந்து பிற்பகலில் யசோதா வீட்டுக்குத் திரும்பிவிட்டால், இந்தச் சித்திரப்பேழையே அவருக்குத் துணை. அமரேசனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்த மேசையிலிருக்கும் பிடி சாம்பல் சித்திரப்பேழையை எடுத்துத் தனது மடியில் வைத்தவாறே மணிக்கணக்காக யசோதா சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். முதுகில் வலியெடுக்கும் போது, சித்திரப்பேழையை ஏந்தியவாறே எழுந்து இரண்டு நிமிடங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்துவிட்டு, மறுபடியும் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். சற்றே உடல் பெருந்திருந்த அவரது எடையால் சாய்மனை நாற்காலி தாழ்ந்து போகும். அய்ம்பத்தெட்டு வயதில் இயல்பாகவே ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் யசோதாவுக்கு இருந்தாலும், குறைந்தது இன்னும் ஆறு வருடங்களாவது அவர் சலவைத் தொழிற்சாலையில் இயந்திரங்களோடு இயந்திரமாக உழைக்கத்தான் வேண்டியிருந்தது. இந்த வீட்டை வாங்குவதற்காக வங்கியில் பெற்றிருந்த கடன்தொகையில் எஞ்சியிருக்கும் எழுபது மாதங்களுக்கான தவணைத் தொகையை இப்போது அவர் தனித்தே செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுடைய ஒரேயொரு மகள் மேதினி தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, பாரிஸ் நகரத்தில் நண்பர்களுடன் வசிக்கச் சென்றுவிட்டாள். அவள் ஏதோவொரு பிரச்சினையான இசைக் குழுவில் இருக்கிறாள் என்பது மட்டுமே யசோதாவுக்குத் தெரியும். அந்தக் குழுவில் இருக்கும் எல்லோரும் எப்போதுமே கருப்பு ஆடைகளையே அணிவார்கள். கால்களில் தடித்த பூட்ஸ்கள் போட்டிருப்பார்கள். உடலில் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் சித்திரப் பச்சை குத்துவார்கள். பச்சை குத்தியிருக்காத இடங்களில் உலோக வளையங்களை அணிந்திருப்பார்கள். மேதினியும் அப்படித்தானிருந்தாள். நடு நாக்கில் கூட அலகு குத்துவதுபோல ஓர் ஆணியைக் குத்தியிருந்தாள். அவள் எப்படி அந்த ஆணி நாக்கால் பாடுகிறாள் என்பது யசோதாவுக்குப் புரியவேயில்லை. மேதினி திடீரென ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் பெற்றோரைப் பார்க்க வருவாள். அவளிடமும் வீட்டுச் சாவி ஒன்றிருந்தது. வீட்டுக்கு வந்தால் ஒருநாளுக்கு மேல் தங்கும் வழக்கம் மேதினிக்குக் கிடையாது. இப்போது, தனிமையை எதிர்கொள்ள முடியாமல் யசோதாவின் உடல் புகைந்து, அது மேதினி மீதான எரிச்சலாக வீட்டுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது. அமரேசன் இறந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான் மேதினி மறுபடியும் ஆடிப்பாடி வீட்டுக்கு வந்தாள். அவளுடைய முதல் கேள்வி “அம்மா! எதற்காகச் சாம்பல் பேழையை வீட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள்?” என்பதாகயிருந்தது. “நானே உன்னிடம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன் மேதினி… தன்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டுமென்று உன்னுடைய அப்பா இறப்பதற்கு முன்னால் என்னிடம் சொல்லியிருக்கிறார்…” தன்னுடையை உருண்டைக் கண்களை இன்னும் பெரிதாக விரித்து, ஒல்லி உடம்பைக் குலுக்கிக்கொண்டே யசோதாவை விநோதமாகப் பார்த்த மேதினி “அம்மா… கொம்யூனிஸ நாடு என்று எதுவும் இப்போது உலகத்தில் இல்லை” என்றவள் சற்று நிறுத்தி “எப்போதுமே இருந்ததில்லை” என்றாள். மேதினி பேசிய தோரணை யசோதாவுக்கு எரிச்சலூட்டியது. மேதினி எப்போதுமே தன்னைப் பற்றிச் சிந்திக்கிறாளே தவிர பெற்றோரைக் குறித்தோ அவர்களது விருப்பங்களைக் குறித்தோ அவள் என்றுமே அக்கறைப்பட்டதில்லை. யசோதா சற்று ஆத்திரத்துடன் “இல்லாத ஒன்றை உன்னுடைய அப்பா சொல்லியிருக்க மாட்டார் மேதினி” என்றார். “அப்பா தன்னுடைய கடைசி நாட்களில் எப்படியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா அம்மா? அவர் எல்லா விஷயங்களையும் குழப்பிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது மூளை அவருக்கு முன்பே செத்துக்கொண்டிருந்தது…” “வாயை மூடு மேதினி! நீ அடுத்தமுறை வீட்டுக்கு வரும்போது இந்தச் சித்திரப்பேழை இங்கிருக்காது” என்று யசோதா சொல்லிவிட்டுச் சாய்மனை நாற்காலியிலிருந்து எழுந்து, சித்திரப்பேழையுடன் படுக்கையறைக்குள் சென்றுவிட்டார். 2 அமரேசனோடு வாழ்ந்த முப்பது வருடங்களின் ஒவ்வொரு பகலும் இரவும் ஈரச் சுண்ணாம்புச் சாந்துமீது இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரம் போன்று யசோதாவின் மனதில் பதிந்திருக்கிறது. வருத்தப்படக் கூடிய ஒரேயொரு தருணம் கூட அவற்றில் இருந்ததில்லை. அமரேசன் பொய் பேசியோ, கோபப்பட்டோ யசோதா பார்த்ததில்லை. தங்கள் இரண்டு பேருக்குமிடையில் எப்போதாவது அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று இப்போது யசோதா மீண்டும் மீண்டும் தனது மூளையைத் திருகி யோசித்துப் பார்த்தாலும், அப்படி எதுவுமே நிகழ்ந்ததில்லை என்பது அவரது மனதை ஆற்றுப்படுத்துகிறது. யசோதாவை முதன்முதலாகச் சந்தித்தபோது அமரேசன் எவ்வாறு மலர்ந்து சிரித்தாரோ, அதே புன்னகை அவர் இறந்துகிடக்கும் போதுகூட அவரது முகத்தில் இருந்ததை யசோதா பார்த்திருக்கிறார். சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த அமரேசனுக்கு அறுபத்து நான்கு வயதென்று யாராலும் சொல்லிவிட முடியாதென்றே யசோதா நினைத்துக்கொண்டார். யசோதா முதன்முதலில் அமரேசனைப் பார்த்தபோது, அமரேசன் என்ன தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்திலேயே சாகும் போதும் அமரேசன் இருந்தார். அவரது விஷயத்தில் காலம் உறைந்திருந்தது என்று கூடச் சொல்லலாம். அவர்களிடையேயான முதல் சந்திப்பு 1993-ம் வருடத்தின் கோடைகாலத்தில் நிகழ்ந்தது. அப்போது, இந்த ஊரிலுள்ள தொழிலாளர் விடுதியொன்றில் யசோதா தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் இரயிலைப் பிடித்து பாரிஸிலுள்ள தமிழ்க் கடைத்தெருவுக்குப் போய் ஒரு வாரத்திற்குத் தேவையான சமையல் பொருட்களையும் காய்கறிகளையும் வாங்கி வருவார். வீடியோக் கடையில் தவறாமல் ஏழு தமிழ்த் திரைப்பட வீடியோ கஸெட்டுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வார். ஒருநாளைக்கு ஒரு தமிழ்ப்படம். வேலை, சமையல், வீடியோப் படம், தூக்கம், எஞ்சிய வேளைகளில் கண்ணீர் இவற்றைத் தவிர அவருடைய வாழ்க்கையில் வேறெதுவுமே அப்போது இருந்ததில்லை. யாழ்ப்பாணத்திலிருக்கும் குடும்பத்தாருக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசுவதைக் கூட அவர் விரும்புவதில்லை. அவர்களோடு பேசுவது யசோதாவுக்குச் சித்திரவதையாகவும் பெரும் துக்கமாகவுமிருந்தது. தமிழ்க் கடைத்தெருவில் சினிமா விளம்பரங்களும், கோயில் விளம்பரங்களும், புலிகள் இயக்கத்தின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றையும் நின்று நிதானித்துப் படித்துச் செல்வது யசோதாவுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தமிழ்ச் சமூகத்திற்கும் அவருக்குமான தொடர்பு அவ்வளவுதான். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும் போதுதான், அமரேசனின் ‘மணமகள் தேவை’ விளம்பரத்தை யசோதா பார்த்தார். அந்த விளம்பரம் உள்ளங்கையளவு வெள்ளைக் காகிதத்தில் பேனாவால் எழுதப்பட்டுக் கடைத் தெருவிலிருந்த எல்லா விளக்குக் கம்பங்களிலும் நன்றாகப் பசை போட்டு ஒட்டப்பட்டிருந்தது. பல விளக்குக் கம்பங்களிலிருந்து அந்த விளம்பரக் காகிதத்தை யாரோ சுரண்டிக் கிழிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு விளக்குக் கம்பத்தின் மீது வெற்றிலைச் சாறு உமிழப்பட்டிருந்தது. ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்ற விளம்பரத்தைப் படித்தபோது, உண்மையிலேயே யசோதா ‘மாவோயிஸ்ட்” என்பது ‘பார்மஸிஸ்ட்’, ‘ரிசப்ஷனிஸ்ட்’ போன்றதொரு வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றே எண்ணிக்கொண்டார். மணமகன் ‘தமிழீழத்தை ஆதரிப்பவர்’ என்று தன்னை அறிவித்திருந்ததும் யசோதாவைக் கவர்ந்திருந்தது. துணிச்சலும் நேர்மையுமுள்ளவராகத்தான் இந்த மணமகன் இருக்கவேண்டும் என்று யசோதா நினைத்துக்கொண்டார். அவர் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, விளக்குக் கம்பத்தில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரத்தின் இடது மூலையை மட்டும் பிய்த்தெடுத்துத் தனது கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார். அந்தத் துண்டில்தான் தொடர்புகொள்ள வேண்டிய மணமகனின் தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டிருந்தது. யசோதா நான்கு சகோதரிகளுடன் ஒரு தம்பியுடனும் பிறந்தவர். அவர்களோடு ஆடியோடி வளர்ந்த யசோதாவை பிரான்ஸில் தனிமை எரித்து அவரது உடலைப் புகைய வைத்தது. வாரம் தவறாமல் யாழ்ப்பாணத்திலிருந்து அவரது தந்தையார் அனுப்பிவைக்கும் கடிதங்களில், யசோதாவை உடனேயே கல்யாணம் செய்யுமாறும் அல்லது இலங்கைக்கே திரும்பி வந்துவிடுமாறும் எழுதப்பட்டிருக்கும். ‘எனக்கு விரைவிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது’ என்றுதான் யசோதாவும் பதில் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால், யாரைத் திருமணம் செய்வது, எப்படிச் செய்வது என்பதெல்லாம் யசோதாவுக்குத் தெரியவில்லை. அவருக்கு உற்றார் உறவினரென்று ஒருவர்கூட பிரான்ஸில் இருக்கவில்லை. அவர் வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலையில் ஒன்றிரண்டு காதல் கோரிக்கைகள் வரத்தான் செய்தன. ஆனால், அவை காதலுக்கான கோரிக்கைகள் மட்டுமே. யசோதாவைக் கல்யாணம் செய்யக் கோரிக்கையாளர்கள் தயாரில்லை. யசோதாவுக்கோ காதலைவிடக் கல்யாணமே முக்கியமானதாகயிருந்தது. அதை வைராக்கியம் என்றே சொல்லலாம். சில வருடங்களாகவே அவரது மனிதில் பழுக்கக் காய்ச்சிய ஆணியால் அந்த வைராக்கியம் ஆழமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. யசோதா நிச்சயமாகவே ஓர் அவசரக் குடுக்கை கிடையாது. தீர ஆலோசித்துத்தான் ஒரு முடிவெடுப்பார். முக்கியமாக, தீர ஆலோசிப்பது போலப் பாவனை செய்து மண்டையைக் குழப்பிக்கொண்டு பிரச்சினைகளை ஆறப்போடும் வழக்கம் அவரிடம் கிடையாது. அய்ந்து நிமிடங்களுக்குள் அவரால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். யசோதா கடைத்தெருவிலிருந்து தன்னுடைய அறைக்குத் திரும்பியதும் அய்ந்து நிமிடங்கள் கண்களை மூடி யோசித்தார். ஆறாவது நிமிடத்தில் ‘மணமகள் தேவை’ விளம்பரத்திலிருந்த இலக்கத்திற்குத் தொலைபேசி வளையத்தைச் சுழற்றினார். மறுமுனையில் “ஹலோ” என்ற குரல் ஒலிக்கும் தருணத்திற்காக யசோதாவின் காது குவிந்திருந்தபோது “அமரேசன்” என்ற சாந்தமான குரல் கேட்டது. “வணக்கம், என்னுடைய பெயர் யசோதா இராசையா… நீங்கள் ஒட்டியிருந்த மணமகள் தேவை விளம்பரத்தைப் பார்த்தேன்…” அய்ந்து நிமிடங்கள் மட்டுமே அவர்கள் உரையாடினார்கள். யசோதா வசிக்கும் ஊரிலுள்ள கோப்பிக் கடையொன்றில் வரும் சனிக்கிழமையன்று இருவரும் சந்தித்து நேரில் பேசுவதாக முடிவானது. சந்திப்பு நடந்த அன்று அமரேசன் கருப்பு நிறத்தில் காற்சட்டையும், கருநீல நிறத்தில் முழுக்கைச் சட்டையும் அணிந்து வந்திருந்தது யசோதாவுக்கு இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. அமரேசன் அய்ந்து அடிகள் உயரமேயுள்ள குள்ளமான மனிதர். அவரது உடலும் குழந்தையின் உடல்போல சிறிதாகவேயிருந்தது. யசோதாவின் வாட்டசாட்டமான உடல்வாகுக்குச் சுலபமாக அமேரசனைத் தூக்கித் தன்னுடைய இடுப்பில் வைத்துக்கொள்ள முடியும். அமரேசனுக்கு உருண்டைக் கண்கள். தலைமுடி சரியாக வாரப்படாமல் கலைந்து கிடந்தது. அடர்த்தியான மீசை வைத்திருந்தார். அமரேசன் அண்ணாந்து யசோதாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே யசோதாவுடன் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டது யசோதாவுக்குப் பிடித்திருந்தது. கைகுலுக்கும் போது கண்களைப் பார்ப்பவர்களை யசோதா அரிதாகவே சந்தித்திருக்கிறார். அமரேசன் மிக மென்மையாகவும் சரளமாகவும் உரையாடலை ஆரம்பித்தார். அந்தச் சரளம் யசோதாவையும் தொற்றிக்கொண்டது. “யசோதா… நான் பிரான்ஸில் பத்து வருடகாலமாக இருக்கிறேன். மெக்கானிக்காக வேலை செய்கிறேன்” “நான் இங்கே வந்து இரண்டு வருடங்கள்தான்… பத்து வருட விசா இருக்கிறது” “நான் எண்பத்து மூன்றாமாண்டு கலவரத்தோடு இலங்கையிலிருந்து கிளம்பி வந்தவன்” “நான் கல்யாணம் செய்வதற்காக இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டவள்” என்றார் யசோதா. அமரேசனிடம் எதையுமே மறைத்துப் பேசக்கூடாது என அவர் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார். 3 யசோதாவுக்குப் பின்னாலும் வயதுக்கு வந்த நான்கு பெண் பிள்ளைகள் இருந்ததால், யசோதாவின் தகப்பனார் ‘மரம்’ இராசையா யசோதாவுக்குச் சீக்கிரமே மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருந்தார். அவர் மிகவும் பிடிவாத குணமுள்ள மனிதர். அதனால்தான் அவருக்கு ஊருக்குள் ‘மரம்’ என்ற பட்டம் கிடைத்திருந்தது. தகப்பனாரை எதிர்த்துப் பெண் பிள்ளைகள் பேசுவது என்ற பேச்சுக்கே அந்தக் குடும்பத்தில் இடமில்லை. சொல்லப்போனால் அவர்கள் தகப்பனாருடன் பேசுவதேயில்லை. அதுதான் அங்கே வழக்கம். இரண்டு மூன்று வருடங்களாகப் பலர் யசோதாவைப் பெண் பார்க்க வந்தும் எதுவுமே சரிவரவில்லை. இவ்வளவுக்கும் ‘மரம்’ இராசையாவிடம் காசுபணத்திற்கும் சொத்துப்பத்திற்கும் குறைவில்லை. மாப்பிள்ளைக்குப் பார்த்துப் பாராமல் சீதனம் கொடுப்பதற்கு அவர் தயாராகவேயிருந்தார். ஆனால், அதைத்தாண்டியும் யசோதாவின் தோற்றமே எல்லாவற்றுக்கும் குறுக்கே தடையாக நின்றது. காசுபணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைத்திருந்த ‘மரம்’ இராசையா கூடச் சற்றே தளர்ந்து போனார். யசோதாவைப் பெண் பார்த்தவர்களில் சிலர் ‘நோயாளிப் பெண்’ என்று யசோதாவின் காதுபடவே பேசியிருக்கிறார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு யசோதாவின் காதுகள் அவிந்துபோயிருந்தன. அப்போதெல்லாம் யசோதா அழுதுகொண்டிருந்தார். திமிங்கலத்தின் வாந்தி திரண்டு மீனாம்பல் ஆவது போன்று யசோதாவின் கண்ணீர் திரண்டு வைராக்கியமாகியது. ‘நான் கல்யாணம் பண்ணிக் குழந்தை பெற்று உங்களுக்கு முன்னே வாழ்ந்து காட்டுவேன்’ என்ற அந்த வைராக்கியத்தை நினைத்துக்கொண்டேதான் மேதினியைப் பெற்றெடுக்கும்போது யசோதா பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டார். இவ்வளவு மனத்திடமுள்ள பெண்ணைத் தாங்கள் பார்த்ததேயில்லை எனப் பிரசவம் பார்த்த தாதிகள் கூடச் சொன்னார்கள். யசோதா பருவமடைந்த பின்பாகத்தான் அவரது உடல் மாறத் தொடங்கியது. முன்தலையிலிருந்து முடிகள் உதிர்ந்து நெற்றி மேலேறியது. பின் கழுத்துத் தோலில் முதலில் விழுந்த சுருக்கம் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவிவிட்டது. அவரது சருமம் வரண்டுபோய் மீன் செதில் போல சிறிய சிறிய வெள்ளைப் புள்ளிகள் உடலில் பெருகத் தொடங்கின. இந்தக் குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்று யாழ்ப்பாணத்திலுள்ள எல்லா வைத்தியர்களும் கைவிரித்து விட்டார்கள். கொழும்புக்குப் போயும் பார்த்தார்கள். அங்கேயும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், அங்கே ஓர் ஆலோசனை கிடைத்தது. குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் காலப்போக்கில் இந்தக் குறைபாடு மறைந்துவிடும் எனச் சொன்னார்கள். இந்திரா காந்திக்கு இதேபோன்று குறைபாடு ஏற்பட்டபோது, நேரு புத்திசாலித்தனமாக மகளை சுவிற்ஸர்லாந்துக்கு அனுப்பி வைத்தார் என்றொரு தகவலைக் கூட ஒரு மருத்துவர் சொன்னார். இதற்குப் பின்பாகத்தான் யசோதாவின் தகப்பனார் வெளிநாட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். அவ்வாறாகத் தேடிய முதலாவது சம்பந்தமே கைகூடிவிட்டது. மாப்பிள்ளையின் பெயர் சந்திரன். பிரான்ஸில் ஒரு நிறுவனத்தில் மனேஜராக வேலை பார்க்கிறானாம். வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதால், சம்பந்தி வீட்டார் கொஞ்சம் அதிகமாகவே சீதனப் பணம் கேட்டார்கள். யசோதாவின் தகப்பனார் அதற்கும் சம்மதித்தார். தன்னுடைய மகளின் சருமப் பிரச்சினை குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள் என்று சம்பந்தி வீட்டாரிடம் விளக்கிச் சொல்லும்போது, ஆதாரத்திற்கு இந்திரா காந்தியின் கதையையும் சேர்த்தே சொன்னார். ‘மகளின் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பிவிட்டீர்கள்தானே’ என்று ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சம்பந்தியிடம் கேட்டார். யசோதாவின் உடல் தோற்றத்தைக் குறித்துச் சம்பந்தி வீட்டார் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாப்பிள்ளையின் சாதகக் குறிப்போடு யசோதாவின் சாதகக் குறிப்பு கச்சிதமாகப் பொருந்திப் போனதே அவர்களுக்குப் பெரும் திருப்தியளிப்பதாகச் சொன்னார்கள். நாடு இருக்கும் நிலையில் மாப்பிள்ளை இலங்கைக்கு வருவது சாத்தியமில்லை என்பதால், யசோதாவைப் பயண முகவர் மூலமாக பிரான்ஸுக்கு அனுப்பும் செலவையும் ‘மரம்’ இராசையாவே ஏற்றுக்கொண்டார். கடுமையாகப் பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் இத்தாலியிலிருந்து இரயிலில் எல்லையைக் கடந்து யசோதா பிரான்ஸுக்குள் நுழைந்தார். பாரிஸ் இரயில் நிலையத்தில் காத்திருந்த சந்திரன் கம்பளி ஆடைகளால் மூடப்பட்டுக் குளிரில் நடுங்கியவாறு இரயிலில் இருந்து இறங்கிய யசோதாவைப் பார்த்ததும் முகத்தில் ஒரு வரண்ட புன்னகையை மட்டுமே காட்டினான். மாப்பிள்ளை கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர் என்றுதான் மாப்பிள்ளையின் தகப்பனார் சொல்லியிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே சந்திரனின் தோற்றம் யசோதாவைக் கவர்ந்துவிட்டது. மிக நாகரிகமாக அவன் உடையணிந்திருந்தான். அவனுடைய நெற்றியில் இடைவிடாது நெளிந்துகொண்டிருந்த யோசனை ரேகைகள் அவனை அறிவாளி போலக் காண்பித்தன. யசோதாவைக் காரில் ஏற்றிக்கொண்டு சந்திரன் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து வீடு வந்து சேரும்வரை இருவரும் மிகச் சில சம்பிரதாய வார்த்தைகளையே பேசிக்கொண்டார்கள்: “நீங்கள் எங்கே படித்தீர்கள்?” என்று சந்திரன் கேட்டான். “ஹொலி ஃபமிலி கொன்வென்ட்” “இங்கே உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருக்கிறார்களா?” எனச் சந்திரன் முகத்தைத் திருப்பாமலேயே கேட்டான். யசோதாவின் குடும்ப விபரங்களையெல்லாம் சம்பந்தி வீட்டாருக்கு ‘மரம்’ இராசையா தெளிவாகவே சொல்லியிருந்தார். சம்பந்தி வீட்டார் தங்களது மகனுக்கு அவற்றைச் சரிவரத் தெரிவிக்கவில்லைப் போலிருக்கிறது என்று யசோதா நினைத்துக்கொண்டார். “எனக்கு ஒரேயொரு தம்பி இருந்தான். அவன் இயக்கத்தில் இருந்தவன். கோட்டைச் சண்டையில் வீரச்சாவு” என்று யசோதா சொன்னபோது ‘அய்யோ’ என்றொரு மெல்லிய சத்தத்தை மட்டுமே எழுப்பிவிட்டுச் சந்திரன் முகத்தைப் பத்துத் தடவைகள் குறுக்குமறுக்காக வேகமாக அசைத்துக்கொண்டான். சந்திரன் பேசும் வார்த்தைகளை விட அவனது முகம் கோணல்மாணலாகிச் சொல்லும் செய்திகளே அதிகமாகயிருந்ததை யசோதா கவனித்தார். அவனால் முகத்தை ஒரு விநாடி கூட ஒழுங்காக வைத்திருக்க முடியவில்லை. சந்திரன் தன்னைத் தொட்டுப் பேசுவான் என யசோதா எதிர்பார்த்திருந்தார். அவன் தொடும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பல நாட்களாக மனதிற்குள் ஒத்திகையும் செய்திருந்தார். ஆனால், சந்திரன் வீதியிலிருந்த தனது பார்வையை யசோதாவின் பக்கம் திருப்பவேயில்லை. சந்திரனின் வீட்டுக்குள் நுழைந்ததும் யசோதா கம்பளி மேலங்கிகளைக் களைந்தபோது, யசோதாவின் கைகளையும் கழுத்தையும் நெற்றியையும் பாதங்களையும் சந்திரன் உற்றுப்பார்த்தான். “நீங்கள் கை கால் முகத்தைக் கழுவிக்கொண்டு வாருங்கள். அதற்குள் நான் என்னுடைய அப்பாவுக்குத் தொலைபேசி செய்து நீங்கள் வந்து சேர்ந்த செய்தியைத் தெரிவித்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே சந்திரன் குளியலறைக் கதவைத் திறந்துவிட்டான். குளியலறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டு, அந்தப் புதினமான குளியலறையை எப்படி உபயோகிப்பது, தண்ணீர் குழாயின் குழிழை எந்தப் பக்கம் திருப்புவது என்றெல்லாம் யசோதா யோசித்துகொண்டிருந்தபோது, சந்திரன் குரலை அடக்கிப் பேசும் மெல்லிய சத்தத்தை அவர் கவனித்தார். ஒரு கட்டத்தில் திடீரென சந்திரன் குரலை உயர்த்திக் கத்தினான்: “நீங்கள் கொழுத்த சீதனம் வாங்குவதற்காக ஒரு கொழுத்த எருமைமாட்டையா என்னிடம் அனுப்பி வைப்பீர்கள். இத்தனை வருடங்களாகக் குளிருக்குள் கிடந்து இரவு பகலாக நான் உழைத்து அனுப்பிய பணம் உங்களுக்குப் போதாதா? உடனேயே சீதனப் பணத்தை இந்தப் பெண்ணின் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுங்கள். அதுவரை என்னைத் தொலைபேசியில் அழைக்காதீர்கள். இவளைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கிறது. இவளுடைய தோல் பாம்புத் தோல் போலிருக்கிறது. அந்தச் செத்த தோலிலிருந்து ஒரு கெட்ட நாற்றம் வருவதை காரில் வரும்போதே நான் கவனித்தேன். இப்போது அந்தத் துர்நாற்றம் என்னுடைய வீடு முழுவதும் பரவியிருக்கிறது. இவளுடன் ஒரு விநாடி கூட என்னால் இருக்க முடியாது.” யசோதா தன்னுடைய உதடுகளைக் குவித்து உள்ளங்கையில் ஊதி, உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். அவருடைய உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. சட்டெனக் குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து கூடத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். அவருக்கு மயக்கம் வருவது போலிருந்தது. “போகலாம்” என்றவாறு சந்திரன் யசோதாவின் பயணப்பையைத் தூக்கிக்கொண்டான். யசோதாவின் இருதயம் மரத்துப் போயிருந்தது. மூளை மட்டும் அவ்வப்போது விழித்துப் பார்த்தது. இவன் தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போகிறான் என்று அவரது மூளை சொன்னபோது, அவர் சட்டென நாற்காலியிலிருந்து எழுந்து தரையில் உட்கார்ந்துகொண்டார். இலங்கைக்குத் திரும்பிப் போவதைப் பற்றி நினைக்கும்போதே யசோதாவின் கண்கள் மங்கலடைந்து மேலே செருகிக்கொண்டன. கல்யாணம் செய்வதற்காகத் தூரதேசம் சென்ற பெண் சில நாட்கள் கழித்துத் தனியாகத் திரும்பி வந்தால், அந்த அவமானத்தைக் குடும்பம் எப்படி எதிர்கொள்ளும்? அயலவரின் முகத்தில் எப்படி யசோதாவால் விழிக்க முடியும்? அவருக்கு இனி எப்போதுமே கல்யாணம் நடக்காது. “போகலாம்” என்று சந்திரன் மறுபடியும் சொன்னான். மெதுவாகத் தலையை நிமிர்த்திய யசோதா சந்திரனைப் பார்த்து “எங்கே?” என்று கேட்டார். “நீங்கள் தங்கப் போகும் இடத்திற்கு” என்று சந்திரன் மெல்லிய குரலில் சொன்னான். சற்று நேரம் கழித்து, அகதிகளுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனமொன்றின் வாசலில் யசோதாவை இறக்கிவிட்டுச் சந்திரன் புறப்பட்டான். அப்போதும் அவன் வரட்சியாகப் புன்னகைத்தது போல யசோதாவுக்குத் தெரிந்தது. எனவே யசோதாவும் உதடுகளைப் பிரித்துப் பற்களைக் காட்டினார். அதுவொரு வைராக்கியப் புன்னகை போலிருந்தது. 4 “அந்தக் கொழும்பு மருத்துவர் சொன்னது உண்மையில்லை. குளிர்ப் பிரதேசத்திற்கு வந்தும் என்னுடைய உடல்நிலையில் மாற்றமில்லை” என்று யசோதா சொன்னபோது, அமரேசன் தனது வலது கையை நீட்டி யசோதாவின் இடது கையைப் பற்றினார். சரியாக ஆறு வாரங்கள் கழித்து அவர்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். யசோதா வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலை மிகப் பெரியது. மருத்துவமனைகள், ஆய்வுகூடங்கள், நட்சத்திரத் தங்குவிடுதிகள் போன்றவற்றுக்கான துணிகளை இங்கே வெளுத்து அனுப்பிவைப்பார்கள். சலவை செய்யும் பிரிவில் யசோதாவுக்கு வேலை. நூறு பேர்களுக்கு மேல் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலையில் இயந்திரப் பராமரிப்பாளராக அமரேசனுக்கும் ஒரு வேலை கிடைத்துவிட்டது. தொழிற்சாலைக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறினார்கள். அமரேசனின் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களே வீட்டின் பாதி இடத்தை அடைத்துக்கொண்டன. அந்த வீட்டில்தான் மேதினியை யசோதா கருத்தரித்தார். ஒரு சனிக்கிழமையன்று, பாரிஸ் நகரத்திற்குச் சென்றிருந்த அமரேசன் திரும்பி வரும்போது, முகத்தில் இரத்தக் காயங்களுடன் வந்தார். அவரது இடது கண் வீங்கிப் பொங்கியிருக்க, கீழுதடு கிழிந்திருந்து. “என்ன நடந்தது?” எனப் பதறிப் போய் யசோதா கேட்டபோது “அரைப் பாஸிஸ்டுகள் என்னைத் தாக்கிவிட்டார்கள்” என்று அமரேசன் முணுமுணுத்தார். அவர் மிகவும் பயந்து போயிருந்தார். அவரது உடல் நடுக்கம் நிற்பதாகயில்லை. இரவு முழுவதும் தூக்கத்திலேயே ஆங்கிலத்தில் புலம்பிக்கொண்டிருந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாரிஸ் நகரத்திற்குப் போவதென்றாலே அமரேசன் அஞ்சி நடுங்கினார். எப்போதாவது செல்ல நேரிட்டாலும் யசோதாவுடனேயே போவார். யசோதாவின் உடல் மறைவில் நிழல்போல யசோதாவைப் பின்தொடர்வார். யசோதாவோடு ஒரு கோப்பிக் கடையில் உட்கார்ந்து கோப்பி குடிக்கும்போதும் மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தவாறேயிருப்பார். 5 படுக்கையறைக்குள் சித்திரப்பேழையுடன் உட்கார்ந்திருந்த யசோதாவுக்கு வீட்டுக் கதவு அறைந்து மூடப்படும் சத்தம் கேட்டது. ‘என்னிடமுள்ள வைராக்கியக் குணத்தில் பாதியாவது மகளிடம் இல்லாமல் போய்விடுமா’ என நினைத்துக்கொண்டே கூடத்திற்கு வந்தவர் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, மேதினி தெருவில் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. யசோதா மீண்டும் சித்திரப்பேழையுடன் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். திடீரென ஓர் உந்துதல் ஏற்படக் கைத்தொலைபேசியை எடுத்து, கூகுளில் என்று தட்டிப் பார்த்தார். சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் என்று கூகுள் பதிலளித்தது. ‘மேதினி வாயைத் திறந்தாலே பொய்’ என்று முணுமுணுத்தவாறே, அந்த நான்கு நாடுகளின் பெயர்களையும் கண் வெட்டாமல் யசோதா பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு, அவர் உலக வரைபடத்தை ஆராய்ந்தார். எல்லா நாடுகளுமே பிரான்ஸிலிருந்து மிகத் தொலைவில் இருந்தன. லாவோஸில் கடல் இல்லை. மற்றைய மூன்று நாடுகளின் பெயர்களையும் யசோதா மனதில் பதிய வைத்துக்கொண்டார். இவற்றில் ஏதாவதொரு நாட்டின் கடலில் அமரேசனின் சாம்பலைக் கரைக்க வேண்டும். ஆனால், அவ்வளவு தூரத்திலுள்ள முன்பின் தெரியாத நாடொன்றுக்கு எப்படித் தனியாகப் போவது என்று யசோதா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, மேதினியிடம் உதவி கேட்பதில்லை என்ற வைராக்கியம் அவரது மனதில் உருவாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் வைராக்கியம் கொள்ளும் இந்தக் குணம் நல்லதா கெட்டதா என்பது யசோதாவுக்குத் தெரியாது. ஆனால், கசங்கிப் போன மனதோடு தத்தளிப்பதைவிட, வைராக்கியத்தோடு வாழ்வதுதான் அவருக்கு இயல்பாகியிருந்தது. தன்னுடைய அப்பாவோடு மேதினி நீளநீளமாகப் பல விஷயங்களைப் பற்றியும் உரையாடுகையில் யசோதா அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். அந்த உரையாடல்களில் ‘வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தற்செயல்களே’ என்று அடிக்கடி மேதினி சொல்வாள். அவ்வாறானதொரு தற்செயல் விரைவிலேயே யசோதாவுக்கும் நிகழ்ந்தது. அன்றைக்கு யசோதா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வரும்போது, வழியிலுள்ள சிறிய பலசரக்குக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையைத் தனியொருவராக நடத்திவரும் வெள்ளைக்காரப் பெண்மணியான கரோலினுக்கு அறுபது வயதிருக்கும். யசோதாவுக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட முப்பது வருடப் பழக்கம். கரோலினுக்குப் பூனைகளோடுதான் சிநேகம் அதிகம். அவரது கடையில் எப்போதும் குறைந்தது பத்துப் பூனைகளாவது தூங்கிக்கொண்டிருக்கும். கரோலின் அணியும் ஆடைகளிலும் பூனைப் படம் இருக்கும். அவர் அணியும் தொப்பியில் பூனைப்படம் பொறிக்கப்பட்டிருக்கும். அன்றைக்குக் கடையின் கதவில் பூனை வடிவத்தில் கத்திரிக்கப்பட்டிருந்த ஒரு துண்டு வெள்ளைக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தத் துண்டில் ‘வரும் முதலாம் தேதியிலிருந்து பத்து நாட்களுக்குக் கடை மூடப்பட்டிருக்கும்’ என எழுதப்பட்டிருந்தது. தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டவாறே “கரோலின் ஏன் கடையை மூடுகிறாய்?” என்று யசோதா கேட்டார். “எனக்கும் ஓய்வும் மகிழ்ச்சியும் வேண்டாமா யசோ… பத்து நாட்கள் விடுமுறையில் போகிறேன். இந்தப் பூனைகளைக் கொண்டுபோய் எனது சகோதரியின் வீட்டில் விட்டுவிட்டு கியூபாவுக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியதுதான்.” “எங்கே கியூபாவுக்கா?” என்று படபடப்புடன் கேட்டார் யசோதா. ‘ஆம்’ என்று தலையசைத்த கரோலின் நின்ற நிலையிலேயே இடுப்பை நெளித்து ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டார். யசோதா அய்ந்து நிமிடங்கள் கடைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தார். ஆறாவது நிமிடத்தில் கரோலினிடம் “நானும் உன்னுடன் வரட்டுமா கரோலின்?” என்று கேட்டார். இடுங்கியிருந்த தனது நீலக் கண்களை விரித்து யசோதாவை ஆச்சரியத்துடன் பார்த்த கரோலின் “அருமையடி பெண்ணே அருமை! என்னுடன் எலின் டீச்சரும் வரயிருக்கிறார். நீ இதுவரை அங்கே போனதில்லை இல்லையா… எங்களுடன் வா! நாங்கள் உனக்கு அற்புதங்களைக் காட்டித் தருகிறோம்” என்று துள்ளிக் குதிக்காத குறையாகச் சொன்னார். எலின் டீச்சரையும் யசோதாவுக்குத் தெரியும். எலினுக்கும் யசோதாவின் வயதுதான் இருக்கும். ‘கோட் டிவார்’ நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கருப்புப் பெண்மணி. மேதினி சிறுமியாக இருந்தபோது வீட்டுக்கே வந்து மேதினிக்குப் பிரெஞ்சு மொழி கற்பித்தவர். யசோதா சமைக்கும் குத்தரிசிச் சோற்றுக்கும் மீன் குழம்புக்கும் எலின் டீச்சர் பெரும் ரசிகை. “நீங்கள் கியூபாவில் கடற்கரைக்குப் போவீர்களா கரோலின்?” என்று யசோதா கேட்டபோது, “கியூபாவின் நான்கு பக்கமும் கடல்” எனக் கரோலின் மிகையான உற்சாகத்துடன் கைகளை அகல விரித்தார். யசோதா வீட்டுக்குத் திரும்பியதும், கரோலின் கொடுத்திருந்த பயண முகவரின் இலக்கத்திற்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். விமானச் சீட்டு, ஏழு பகலும் ஆறு இரவும் கடற்கரை நட்சத்திர விடுதிக்கான கட்டணம், மூன்று வேளை உணவு உட்பட ஆயிரத்து இருநூறு ஈரோக்கள் கட்டணம் என்று பயண முகவர் சொன்னார். கட்டணத்தைப் பத்து மாதத் தவணைகளில் செலுத்துவது என ஏற்பாடானது. யசோதா மேசையிலிருந்த சித்திரப்பேழையை எடுத்து இரண்டு கைகளிலும் ஏந்தித் தனது கண்களுக்கு நேராக வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு சித்திரப்பேழையை அதற்கான அட்டைப்பெட்டியில் வைத்து மூடினார். வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. “Bonjour அம்மா” எனச் சொல்லிக்கொண்டே மேதினி உள்ளே நுழைந்தாள். 6 பாரிஸிலிருந்து புறப்படயிருந்த அந்த விமானம் வடக்கு அத்திலாந்து சமுத்திரத்திற்கு மேலாகப் பறந்து, சாத்தானின் முக்கோணம் எனப்படும் பெர்முடா முக்கோணத்தையும் கடந்து பத்து மணிநேரத்தில் கியூபாவின் ‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் தரையிறங்கும். விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே யசோதாவும், கரோலினும், எலினும் விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். சற்று நேரம் கழித்து, மேதினி அரக்கப்பரக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தாள். அவளது தோளில் ஒரு சிறிய பயணப்பை மாட்டப்பட்டிருந்தது. மேதினி தாயாரைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவ்வாறே கரோலினையும் எலினையும் முத்தமிட்டாள். பின்பு, தோளிலிருந்து பயணப்பையைக் கழற்றி எடுத்துத் தாயாரிடம் கொடுத்துவிட்டு, அதை கியூபாவுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். “இந்தப் பைக்குள் என்னயிருக்கிறது மேதினி?” “சிறுவர்களுக்கான சில ஆடைகள், பேனாக்கள், வண்ணப் பென்ஸில்கள் உள்ளன. அங்கேயுள்ள குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுங்கள் அம்மா” என்று சொல்லிவிட்டு உடனேயே மேதினி கிளம்பிவிட்டாள். கொஞ்ச நேரம் காத்திருந்து தாயாரை வழியனுப்பி வைக்க அவளுக்குப் பொறுமையில்லை. விமானத்தில் மூவருக்குமே அருகருகே இருக்கைகள். கரோலின் தன்னுடைய ஜன்னலோர இருக்கையை யசோதாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தார். யசோதா ஓர் அட்டைப்பெட்டியை இரண்டு கைகளாலும் பற்றிப் பிடித்து மடியில் பத்திரமாக வைத்திருப்பதைக் கவனித்த கரோலின் ‘அது என்ன?’ என்று யசோதாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தத்தளித்துக்கொண்டிருப்பது போல யசோதாவுக்குத் தோன்றியது. அவர் கரோலினிடம் “இது எனது கணவரின் சாம்பல். இதைக் கடலில் கரைப்பதற்காகத்தான் நான் கியூபாவுக்கு வருகிறேன்” என்றார். புன்னகைத்த கரோலின் “நானும் எலினும் எங்களது சாம்பலைக் கரைப்பதற்காகவே வருகிறோம்” என்றார். 7 ‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது மாலை ஆறு மணியாகிவிட்டது. வெப்பத்தைத் தணிக்கும் ஆடைகளும், ஓலைத் தொப்பிகளும், இரப்பர் செருப்புகளும் அணிந்திருந்த உல்லாசப் பயணிகளால் அந்தச் சிறிய விமான நிலையம் நிரம்பி வழிந்தது. பயண முகவர் ஏற்பாடு செய்திருந்த சொகுசுப் பேருந்து விமான நிலையத்தின் வாசலில் தயாராகக் காத்திருந்தது. அதனுள்ளே ஏறிக்கொண்ட கரோலினும் எலினும் அருகருகாக உட்கார்ந்துகொள்ள, யசோதா இங்கேயும் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் அழகிய கைத்தடி வைத்திருந்த பிரெஞ்சுக் கிழவர் ஒருவர் உட்கார்ந்துகொண்டார். விமான நிலையத்தின் முற்றத்தில் சே குவேராவின் சிலை கம்பீரமாக நின்றிருந்தது. அங்கிருந்து இரண்டு மணிநேரப் பயணத் தூரத்திலிருந்த ‘வரடேரோ’ தீவிலுள்ள நட்சத்திர விடுதியிலேயே இவர்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. பேருந்து சென்ற பாதையில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள். பாதையோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பலகை வீடுகள் தென்பட்டன. வழி முழுவதும் சிவப்புப் பதாதைகள் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பதாகைகளில் நட்சத்திரங்களின் கீழே சே குவேராவும், பிடல் கஸ்ட்ரோவும், ராவுல் கஸ்ட்ரோவும் நடந்துகொண்டிருந்தார்கள். தூரத்தே மலைகளும் சமவெளிகளும் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தன. பாலத்தைக் கடந்து வரடேரோ தீவுக்குள் பேருந்து நுழைந்தபோது, அந்த இடம் வழியில் பார்த்த காட்சிகளிலிருந்து வேறுபட்டிருந்தது. தெருவெங்கும் பல வண்ண மின்குழிழ் சரங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. உயரமான நட்சத்திர விடுதிகள் வரிசையாக இருந்தன. தெருவெங்குமிருந்த மதுச்சாலைகளில் அமர்ந்து உல்லாசப் பயணிகள் குடித்துக்கொண்டிருந்தார்கள். யசோதா பேருந்திலிருந்து இறங்கியபோது, நான்கு புறங்களிலுமிருந்த நடன விடுதிகளிலிருந்து மிதந்து வந்த ஸ்பானியத் துள்ளல் பாடல்கள் அவரது செவிகளை அதிரப் பண்ணின. நட்சத்திர விடுதியில் யசோதாவுக்கு ஒதுக்கப்பட்ட அறை இரண்டாவது மாடியில் கடலைப் பார்த்தவாறிருந்தது. அறையின் பல்கனிக்கு வந்து யசோதா கடலைப் பார்த்தார். மெக்ஸிக்கோ குடாவின் தணிந்த அலைகள் விடுதியை மெல்லத் தழுவுவது போல நளினமாக வந்து திரும்பிச் சென்றன. அப்போது அறையின் அழைப்பு மணி ஒலித்தது. யசோதா அறைக்குள் சென்று கைப்பையைத் துழாவி மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். வாசற் கதவிலிருந்த கண்ணாடித் துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தார். கரோலினும் எலினும் தங்களை அலங்கரித்துக்கொண்டும், மினுங்கும் ஆடைகளை அணிந்துகொண்டும் வெளியே நின்றிருந்தார்கள். 8 காலையில் அய்ந்து மணிக்கே யசோதாவுக்கு விழிப்புத் தட்டிவிட்டது. குளித்துவிட்டு வந்தவர் சேலை கட்டிக்கொள்ளத் தொடங்கினார். அவர் கடைசியாகச் சேலை கட்டியது அவர்களுடைய பதிவுத் திருமணத்தின் போதுதான். கியூபா வருவதென்று முடிவானவுடனேயே இந்தச் சேலையைப் பாரிஸ் தமிழ்க் கடைத்தெருவுக்குச் சென்று யசோதா புதிதாக வாங்கியிருந்தார். கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் கரையுள்ள அந்தச் சேலையைக் கட்டி முடித்ததும், அட்டைப்பெட்டியிலிருந்து சித்திரப்பேழையை வெளியே எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அய்ந்து நிமிடங்கள் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். ஆறாவது நிமிடத்தில் அறையிலிருந்து வெளியே வந்து வெற்றுப் பாதங்களுடன் கடலை நோக்கி நடக்கத் தொடங்கினார். கடற்கரையில் சீருடையணிந்திருந்த விடுதிக் காவலாளிகள் இருவர் மட்டுமே நின்றிருந்தார்கள். மற்றப்படிக்குக் கடலும் கரையும் வெறுமையாகயிருந்தன. அந்தக் கடல் சலனமின்றிக் கிடந்தது. யசோதா கடல் நீருக்குள் இறங்கி அவரது முழங்கால்கள் வரையான ஆழம்வரை சென்றார். சித்திரப்பேழையின் மூடியைத் திறந்து பேழையைக் கீழே சரித்தார். வெளிர் நீலக் கண்ணாடி போன்றிருந்த நீரில் அமரேசனின் சாம்பல் பூவாகப் பரவிச் சென்றது. யசோதா சட்டெனக் கண்களை மூடிக்கொண்டார். வெற்றுச் சித்திரப்பேழையை இறுக மூடிவிட்டு அதையும் கடல் நீரில் விட்டார். பின்பு, கரைக்கு வந்து கடலுக்கு முதுகு காட்டி மணலில் உட்கார்ந்துகொண்டு அந்த நட்சத்திர விடுதியைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் கடற்கரையில் சந்திக்கலாம் என்று நேற்றிரவே கரோலினும் எலினும் அவரிடம் சொல்லியிருந்தார்கள். அந்த விடுதி கடற்காகத்தின் வடிவத்தில் கட்டப்பட்டிருந்தது. மையக் கட்டடத்திற்கு இருபுறங்களிலும் பெருஞ்சிறகுகள் போன்று வரிசையாக மூன்றடுக்குகளில் ஆடம்பர அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கச் சிறகின் நுனியில் யசோதாவின் அறை இருந்தது. அவரது அறைக்கு எதிரேயே கரோலின், எலின் இருவரின் அறைகளுமிருந்தன. கடற்கரையில் இரண்டு மதுச்சாலைக் குடில்கள் இருந்தன. ஒரு சாய்ப்புச் சாமான் கடையுமிருந்தது. அவற்றுக்கு நடுவே நீலப் பாம்பு போல ஒரு நீச்சல்குளம் வளைந்து சென்றது. விடுதிச் சிறகுகளுக்குள் உறங்கிக் கிடந்தவர்கள் நீச்சலுடைகளுடன் கடலை நோக்கி வரத் தொடங்கினார்கள். கிழக்குப் பக்கச் சிறகிலிருந்து வெளிவந்த ஒரு கூட்டம் இளம் பெண்கள் இடுப்பில் மட்டுமே கச்சையணிந்து திறந்த முலைகளுடன் யசோதாவை நோக்கி ஓடிவந்தார்கள். யசோதா மெதுவாகக் கடலை நோக்கித் திரும்பிக்கொண்டார். கடலுக்குள் இப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். இந்த மக்கள் எப்படி, எப்போது கடலுக்குள் தோன்றினார்கள் என்று யசோதாவுக்குத் தெரியவில்லை. அந்த மக்களில் முதியவர்களிலிருந்து குழந்தைகளை வரை இருந்தார்கள். அவர்கள் கருப்பு, மஞ்சள், வெள்ளை என எல்லா நிறங்களிலுமிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் கரையேறவில்லை. கடலுக்குள் நின்றுகொண்டேயிருந்தார்கள். உல்லாசப் பயணிகள் கடலுக்குள் இறங்கியபோது அவர்களை நோக்கிக் கூட்டமாகச் சென்றார்கள். அப்போது, இடுப்பில் நிர்வாணக் குழந்தையைச் சுமந்திருந்த ஒரு கருப்புப் பெண் கடலுக்குள் நின்று யசோதாவை நோக்கிக் கையசைத்தார். யசோதாவும் அந்தப் பெண்ணை நோக்கிக் கையசைத்தார். அந்தப் பெண் கடலுக்குள் வருமாறு யசோதாவை நோக்கித் திரும்பத் திரும்பச் சைகை காட்டிப் புன்னகைத்தார். யசோதா எழுந்து நடந்து கடலின் விளிம்புக்குச் சென்றார். அந்தக் கருப்புப் பெண் ஆங்கிலத்தில் “எங்களது நாட்டுக்கு வந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு அம்மா. நீங்கள் அணிந்திருக்கும் உடை மிக அழகாகவுள்ளது. எனது குழந்தைக்கு ஒரு சட்டை வாங்கத் தயவு செய்து பணம் கொடுங்கள். இவளிடம் ஒரு சட்டை கூடக் கிடையாது” என்றார். அந்தப் பெண்ணைக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். மேதினி கொடுத்து அனுப்பிய பயணப்பை அங்கே இருக்கிறது. யசோதா அந்தப் பயணப்பையை எடுத்துக்கொண்டு வந்து கரையில் வைத்துவிட்டு, கடலுக்குள் நின்றிருந்த அந்தக் கருப்புப் பெண்ணிடம் கரைக்கு வந்து பையை எடுக்குமாறு சைகை செய்தார். அந்தப் பெண்ணோ பையை எடுத்துக்கொண்டு கடலுக்குள் வருமாறு பதில் சைகை செய்தார். யசோதா பையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் கால் நனைத்தபோது, அந்தப் பெண் விரைந்து வந்து பையைப் பெற்றுக்கொண்டு “அம்மா… நாங்கள் கரைக்கு வரக் கூடாது” என்றார். “ஏன் வரக் கூடாது?” என்று யசோதா ஆச்சரியத்துடன் கேட்டார். “அது சட்ட விரோதம். அங்கே பாருங்கள்! அந்தக் காவலாளிகள் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களது கால் நகம் கரையில் பட்டால் கூட அவர்கள் எங்களைத் துரத்தியடிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பையைத் தலையில் வைத்து ஒருகையால் பிடித்துக்கொண்டே மறுகையில் குழந்தையுடன் கடலுக்குள் சென்றார். உண்மையிலேயே யசோதாவுக்கு எதுவும் புரியவில்லை. கரோலினையும் எலினையும் கடற்கரையில் காணவும் முடியவில்லை. எனவே, யசோதா விடுதியறைக்குச் சென்று மறுபடியும் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டார். விடுதியின் உணவகப் பகுதிக்குச் சென்று காலையுணவைச் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கடற்கரையில் போய் உட்கார்ந்துகொண்டார். வெயில் ஏற ஏறக் கரையிலும் கடலிலும் மக்கள் தீர்த்தத் திருவிழா போலத் திரண்டிருந்தார்கள். அந்த மக்கள் கூட்டத்திடையே கலந்திருக்க யசோதாவுக்குப் பிடித்திருந்தது. அப்போது, கரோலினும் எலினும் யசோதாவை நோக்கிக் கைகளை அசைத்தவாறே மணலில் நடந்து வந்தார்கள். இருவருமே நீச்சலுடையில் இருந்தார்கள். அவர்களுடன் இரண்டு இளைஞர்களும் வந்தார்கள். அவர்களும் நீச்சலுடையில் இருந்தார்கள். ஒருவன் கருப்பு நிறத்தவன். மற்றவன் வெளிர் மஞ்சள் நிறத்தவன். அந்த இளைஞர்கள் சாய்ப்புச் சாமான் கடையை நோக்கிச் செல்ல, கரோலினும் எலினும் மணலில் யசோதாவுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள். “இரவு நன்றாகத் தூங்கினாயா யசோ?” என்று எலின் விசாரித்தார். ‘ஆம்’ என்பதுபோலத் தலையசைத்துவிட்டு “இன்னும் உங்கள் இருவருக்கும் தூக்கம் கலையவில்லைப் போலிருக்கிறதே…எப்போது அறைகளுக்குத் திரும்பினீர்கள்?” என்று யசோதா கேட்டார். “நாங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. இந்த அருமையான இளைஞர்களை வைத்துக்கொண்டு தூங்கவா முடியும்? தூங்குவதற்கா நாங்கள் இத்தனை தூரம் வந்திருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு கரோலின் தோளிலிருந்த நீளமான துவாயை எடுத்து மணலில் விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். எலினும் துண்டை விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். அப்போது அந்த இளைஞர்கள் இவர்களை நோக்கி ஆளுக்கொரு தைலக் குப்பியுடன் வந்தார்கள். கருப்பு நிறத்தவன் குதிரை ஏறுவது போன்று கால்களை விரித்து கரோலினின் முதுகில் ஏறிப் பட்டும்படாமலும் உட்கார்ந்துகொண்டான். மற்றவன் எலினின் முதுகில் ஏறி வாகாக உட்கார்ந்துகொண்டான். அவர்கள் அந்தப் பெண்களின் முதுகுகளில் தைலத்தைத் தேய்த்து உருவிவிடத் தொடங்கினார்கள். எலினின் முதுகில் இருந்தவன் யசோதாவைப் பார்த்தவாறே ஸ்பானிய மொழியில் எலினிடம் ஏதோ சொன்னான். எலின் சிரமப்பட்டுக் கழுத்தைத் திருப்பி யசோதாவைப் பார்த்து “உனது தோழிக்கும் ஒரு காதலன் தேவையா என்று இவன் கேட்கிறான்” என்றார். யசோதா உண்மையிலேயே பதறித்தான் போய்விட்டார். எலின் தனது கையை நீட்டி யசோதாவின் கையைப் பற்றிக்கொண்டார். “யசோ! இவர்களை நாங்கள் நேற்றிரவு நடன விடுதியில் கண்டுபிடித்தோம். இவர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல, இனிமையான குணமும் கொண்டவர்கள். அது இந்தத் தேசத்து ஆண்களுக்கென்றே கடவுள் வழங்கிய கொடை. ஒவ்வொருவரும் கடற்குதிரை போன்றிருக்கிறார்கள்.” “இவர்கள் கியூபர்களா? இவர்கள் இங்கே வருவது சட்ட விரோதம் என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாரே?” “ஆம்… இது கொஞ்சம் குழப்பமான விஷயம்தான். இந்தக் கடற்கரை இங்கே நட்சத்திர விடுதிகளை நடத்துபவர்களுக்கு உரிமையானது. கியூபர்களை இங்கே அனுமதிப்பதில்லை. ஆனால், விடுதியில் தங்கியிருக்கும் ஓர் உல்லாசப் பயணி கியூபா நாட்டவர் ஒருவரைத் தனது பொறுப்பில் இங்கே அழைத்துவரத் தடையில்லை…” யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். நடப்பதெல்லாம் புதிதாகவும் கனவு போலவும் அவருக்கிருந்தது. அடுத்த இரண்டு நாட்களும் சாப்பிடுவதற்கு மட்டுமே அவர் அறையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குப் பதற்றம் தணிவதாகயில்லை. பிரான்ஸுக்குத் திரும்பிச் செல்லும் நாளுக்காக அவர் ஏங்கினார் என்றும் சொல்ல முடியாது. அங்கிருக்கும் தனது வீடு இருபத்துநான்கு மணிநேரமும் நிசப்தமாகவே இருப்பதை நினைக்கும்போதே, அவரது உடல் புகையத் தொடங்கிவிடுகிறது. 9 மூன்றாவது நாள் மாலையில் யசோதாவுக்கு உடலெல்லாம் தகித்து வியர்த்து வடிந்தது. அந்த விசாலமான விடுதியறைக்குள்கூட மூச்சு முட்டுவதைப் போன்று உணர்ந்தார். தான் சாகப் போகிறேனோ என்றுகூட ஒரு கணம் அவர் சந்தேகப்பட்டார். மெல்ல அறையிலிருந்து வெளியேறி அவர் கடலை நோக்கி நடந்து சென்றபோது, கடலுக்குள் யாருமில்லை. மேற்கே பரிதி கடலுக்குள் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தது. கடற்கரையில் சில உல்லாசப் பயணிகள் கூச்சலும் கும்மாளமுமாகப் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து விலகி, கடற்கரையோரமாக மேற்குத் திசையில் யசோதா நடந்து போனார். சற்றுத் தூரத்தில் மிகக் குட்டையாக ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. அதன் தலை முழுவதும் மஞ்சளாகப் பூத்திருந்தது. யசோதா கடலைப் பார்த்தவாறே அந்த மரத்தின் கீழே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கால்களை நீட்டிக்கொண்டார். அப்போதுதான் தன்னுடைய கணுக்கால்களில் புதிதாக ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை யசோதா கவனித்தார். கணுக்கால்களில் காலுறைகள் போன்று வெள்ளை படர்ந்திருந்தது. அவர் தனது கால்களைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தார். கடலுக்குள் ஓர் இளைஞன் நின்றிருந்து “ஹாய் லேடி பொஸ்” என்று பற்கள் தெரியச் சிரித்தான். அந்த இளைஞனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். இடுப்பில் அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தான். ஒல்லியான ஆனால், நேர்த்தியான உடல்வாகு. ஆறடிக்கு மேல் உயரமாகயிருந்தான். ப்ரவுண் நிறச் சருமம். அடர்த்தியான சுருட்டைமுடி. முகம் சுத்தமாக மழிக்கப்பட்டிருந்தது. யசோதாவும் அவனைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தார். இப்போது அந்த இளைஞன் உற்சாகமாக ஓரடி முன்னே எடுத்து வைத்தவாறே “லேடி பொஸ்… நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் சிரித்த வாயாகக் கேட்டான். “பிரான்ஸ்” என்று சற்றுச் சத்தமாகவே யசோதா சொன்னார். உடனேயே அவன் பிரெஞ்சு மொழியில் யசோதாவிடம் பேசினான். “தனியாகவா வந்திருக்கிறீர்கள் லேடி பொஸ்?” யசோதா கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தார். அந்த இளைஞன் இன்னொரு அடி எடுத்து முன்னே வைத்துவிட்டு “இந்தக் கடற்கரையில் புழங்கினால் எல்லா மொழிகளையும் கற்றுவிடலாம். நான் ஏழெட்டு மொழிகள் பேசுவேன் லேடி பொஸ்” என்றான். “நான் லேடி பொஸ் அல்ல. என்னுடைய பெயர் யசோதா அமரேசன்.” “இது அருமையான பெயர் லேடி பொஸ். ஆனால், சற்று நீளமாகயிருக்கிறது. எனக்கு உச்சரிக்கக் கஷ்டம். என்னுடைய பெயர் எட்மண்டோ. கடலுக்குள்ளால் நீண்ட தூரம் வந்திருக்கிறேன். என்னைக் கரைக்கு அழைத்தீர்கள் என்றால் உங்கள் அருகே வந்து பேசுவேன். கடல் குளிர ஆரம்பித்துவிட்டது…” இப்போது அவன் கடலின் விளிம்புக்கே வந்துவிட்டான். அவனது அடுத்த காலடியைக் கரையில்தான் வைக்க வேண்டும். யசோதா அவசர அவசரமாக எழுந்து விடுதியறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். “லேடி பொஸ்… நடன விடுதிக்குப் போக வேண்டுமென்றால் என்னோடு வாருங்கள். இந்தத் தீவின் மிகச் சிறந்த நடன விடுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நான் தனியாகச் சென்றால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். உங்களோடு வந்தால் இன்றிரவு நானும் சல்ஸா நடனம் ஆடுவேன்” அந்தக் குரலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே யசோதா அறைக்குத் திரும்பிவிட்டார். அன்று இரவுணவு சாப்பிடக் கூட அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. மறுநாளும் உணவை அறைக்கே வரவழைத்துச் சாப்பிட்டார். மாலை வேளையாகி இருள் கவிந்துகொண்டிந்தபோது, அவரது மனிதில் திடீரென ஓர் எண்ணம் தோன்ற பல்கனிக்குச் சென்று கடலைப் பார்த்தார். குட்டைத் தென்னை மரம் மங்கலாகத் தெரிந்தது. சற்றுத் தொலைவில் ஓர் உயரமான உருவம் கடலுக்குள் நடந்து போய் மறைந்தது. அடுத்த நாள் காலையில் யசோதா வெள்ளை நிறக் கவுனை அணிந்துகொண்டார். வெள்ளைநிற மணிமாலையொன்றைக் கழுத்தில் போட்டுக்கொண்டார். காலணிகளும் வெண்நிறத்திலேயே இருந்தன. காலை உணவுக்காக அவர் விடுதியின் உணவகத்திற்குச் சென்றபோது, அங்கே கரோலினையும் அவரது கருப்புக் காதலனையும் கண்டார். அவர்கள் ஒரு வாய் சாப்பிடுவதாகவும் மறுவாய் முத்தமிடுவதாகவும் காலையிலேயே மயக்கத்திலிருந்தார்கள். யசோதா அவர்களது மயக்கத்தைக் கலைப்பது போல அருகில் சென்று காலை வணக்கம் சொன்னார். போதை கலையாத கண்களால் யசோதாவைப் பார்த்த கரோலின் தங்களுடன் அமர்ந்து உணவருந்துமாறு யசோதாவைக் கேட்டுக்கொண்டார். “நாளைக்கு அதிகாலையிலேயே நாங்கள் விமான நிலையத்திற்குக் கிளம்ப வேண்டியிருக்கும் யசோ… எல்லா இடமும் சுற்றிப் பார்த்தாயா? எப்படியிருக்கிறது கியூபா? இது எல்லாமே சொர்க்கம் அல்லவா…” “நான் எங்கேயும் வெளியே போகவில்லை” என்று யசோதா கொஞ்சம் வெட்கத்துடனேயே சொன்னார். “இங்கே வரடேரோவில் உல்லாசப் பயணிகள் மட்டுமே மொய்த்திருக்கிறார்கள். யசோ… நீ கொஞ்சம் வெளியே சென்று மக்களைப் பார்க்க வேண்டாமா? சாந்தா மார்த்தாவுக்குப் போ. இங்கிருந்து பக்கம்தான். அங்கே நீ உண்மையான கியூபாவைப் பார்க்க முடியும்.” ‘வரடேரோ’ ஒட்டகச் சிவிங்கியின் கழுத்துப் போன்ற ஒடுக்கமான தீவு. அந்தத் தீவு உல்லாசப் பயணிகளுக்காக நேர்ந்துவிடப்பட்டிருந்தது. அந்தத் தீவையும் கியூபா பெருநிலத்தையும் ஒரு பாலம் இணைக்கிறது. அந்தப் பாலத்தைக் கடந்ததும் சாந்தா மார்த்தா நகரம் வந்துவிடும். விடுதியில் சொல்லி யசோதா ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்துகொண்டார். இதுவரை கியூபாவில் செப்புச் சல்லியைக் கூட யசோதா செலவு செய்திருக்கவில்லை. கொஞ்ச ஈரோக்களை விடுதியில் கொடுத்து பெஸோக்களாக மாற்றிக்கொண்டார். சாலையில் வாகனங்களேயில்லை. வாடகைக் கார் சாலையில் வேகமாக வழுக்கிச் சென்றது. பாலத்தைக் கடந்ததும் காட்சிகள் தலைகீழாக மாறிவிட்டன. சாலைகள் குண்டுங் குழியுமாக வளைந்து நெளிந்து சென்றன. அந்தச் சாலைகளில் நோஞ்சான் குதிரைகள் வண்டிகளை இழுத்துச் சென்றன. இருபத்தைந்து நிமிடப் பயணத்திற்குப் பின்பு வாடகைக் கார் ‘சாந்தா மார்த்தா’ நகரத்திற்குள் நுழைந்தது. நகர மையத்திலிருந்த சதுக்கத்தில் சே குவேரா சிலை கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அங்கேயே யசோதா இறங்கிக்கொண்டார். மதியம் பன்னிரண்டு மணிக்கு அதே இடத்திற்கு வந்து தன்னை ஏற்றிக்கொள்ளுமாறு சாரதியிடம் சொல்லிவிட்டு, யசோதா தெருவோரமாக நடந்து சென்றார். அதுவொரு சிறிய நகரம்தான். ஆனால், ஏதோ போரால் பாதிக்கப்பட்ட நகரம் போன்று உடைந்து கிடந்தது. நகரமே புழுதிக் காடாகக் காட்சியளித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சிறிய கடைகளுக்கு முன்பு மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றுகொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்ட குறுக்குத் தெருவொன்றுக்குள் புகுந்து யசோதா வேடிக்கை பார்த்தவாறே நடந்தார். அந்தத் தெருவில் குடியிருப்புகள் நெருக்கமாகயிருந்தன. வந்த வழியை மனதில் ஞாபகம் வைத்துக்கொண்டே அடுத்த குறுக்குத் தெருவுக்குள் யசோதா நுழைந்தபோது, எதிரே அந்த உயரமான இளைஞன் எட்மண்டோ வந்துகொண்டிருந்தான். அவன் யசோதாவைக் கண்டதும் கண்களை அகல விரித்துத் தனது வலது கையை உதறிக்கொண்டான். பின்பு “லேடி பொஸ்” என்று கூவியபடியே யசோதாவை நோக்கி ஓடிவந்தான். இடுப்பில் அதே அரைக் காற்சட்டைதான் இருந்தது. ஆனால், இன்று அவன் அழகானதொரு தொப்பி அணிந்து தொப்பியின் நாடாக்களைத் தாடையின் கீழே பூப்போன்று முடிந்திருந்தான். “லேடி பொஸ்…நீங்கள் சம்மனசு போலத் திடீரென என் முன்னே காட்சியளிக்கிறீர்கள். என்னுடைய வீடு இங்கேதான் இருக்கிறது. தயவு செய்து வீட்டுக்கு வந்து ஒரு கோப்பை தேநீர் பருகி எங்களை மகிழ்வியுங்கள்” என்று எட்மண்டோ சொல்லிவிட்டு யசோதாவின் கையைப் பிடித்துக்கொண்டு தெருவில் நடந்தான். யசோதா தன்னுடைய கையை அவனிடமிருந்து விடுவிக்க முயற்சிக்கவில்லை. உண்மையில் அந்த அழைப்பு அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. அழுக்குப் படிந்துகிடந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றின் முன்னால் எட்மண்டோ நின்று “லேடி பொஸ்… இங்கேதான் முதலாவது மாடியில் எனது வீடிருக்கிறது. மாடிப்படிகளில் வெளிச்சம் கிடையாது. என்னுடைய கையை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்றவாறே யசோதாவின் கையை மேலும் அழுத்தமாகப் பற்றினான். யசோதா தட்டுத் தடுமாறித்தான் படியேறிச் சென்றார். ஒவ்வொரு படியிலும் இருளுக்குள் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சிறிய அறை மட்டுமே எட்மண்டோவின் வீடாக இருந்தது. உண்மையில் அதுவொரு இருள் பொந்துதான். அந்தப் பகல் பொழுதிலும் அறை இருண்டு கிடந்தது. அறையின் நடுவே தொங்கிகொண்டிருந்த மங்கலான சிறிய மின்குமிழின் கீழே சாய்மனை நாற்காலியில் ஒரு பெண்மணி படுத்துக்கிடந்து பைபிள் படித்துக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த யசோதாவை ஒரு விநாடி பார்த்துவிட்டு அவர் மறுபடியும் பைபிளில் மூழ்கிப் போனார். அறையின் மூலையிலிருந்த அடுப்பில் எட்மண்டோ கருப்புத் தேநீர் தயாரித்து யசோதாவுக்குக் கொடுத்தான். யசோதா தேநீரைக் குடித்தவாறே அந்தப் பெண்மணியையே பார்த்துக்கொண்டிருந்தார். தேநீரைக் குடித்து முடித்ததும் யசோதா புறப்படத் தயாரானபோது, அந்தப் பெண்மணி ஸ்பானிய மொழியில் ஏதோ சொன்னார். “லேடி பொஸ்… உங்களது கழுத்திலிருக்கும் மணிமாலை அழகாக இருக்கிறதாம். அதைத் தனக்குக் கொடுக்க முடியுமா என்று அம்மா கேட்கிறார்” என்று எட்மண்டோ தயங்கத்துடன் யசோதாவிடம் சொன்னான். யசோதா கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றியவாறே எட்மண்டோவின் அம்மாவின் அருகில் சென்று அதை அவருக்கு அணிவித்தார். சே குவேரா சிலையை நோக்கி இருவரும் நடந்துகொண்டிருந்தபோது “லேடி பொஸ்… நேற்று மாலை நீங்கள் கடற்கரைக்கு வரவில்லையே” என்று யசோதாவின் காதருகே எட்மண்டோ கிசுகிசுத்தான். யசோதா எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார். சே குவேரா சிலையருகே வாடகைக் கார் காத்திருந்தது. அன்று மாலையில் விடுதியறையின் பல்கனியில் நின்று யசோதா கடலைப் பார்த்தபோது, பரிதி கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது. அவர் அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார். இருள் முற்றாகக் கவிந்து கடல் அவரது கண் பார்வையிலிருந்து மறைந்தபோது, குளியலறைக்குச் சென்று குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு நெடுநேரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். குளித்து முடித்துவிட்டுத் தொட்டியிலிருந்து அவர் கீழே இறங்கியபோது, எதிரேயிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் முழு நிர்வாணமாக அவரது உடல் தெரிந்தது. கண்ணாடியில் தோன்றிய அந்தப் பிம்பத்திலிருந்து புகை கசிந்தது. முற்றாக நரைத்திருந்த தலைமுடி மின்விளக்குகளின் வெளிச்சத்தில் வெள்ளியாக மின்னியது. அவரது தலை சிறிதாகவும் கழுத்து நீளமாகவுமிருந்தது. கழுத்துக்குக் கீழே உடல் அகன்று சென்று வயிற்றுப் பகுதி உப்பியிருந்தது. முழங்கால்களுக்குக் கீழே கால்கள் குச்சிகளாக ஒடுங்கிச் சென்றன. கணுக்காலில் படந்திருந்த வெள்ளைத் திட்டுகள் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. உடலில் இருந்த வெண்ணிறப் புள்ளிகள் அவரது கருமையான சருமத்தில் பெகோனியாப் பூக்கள் போலத் தெரிந்தன. தீக்கோழி முட்டை வடிவச் சித்திரப்பேழையைப் போலவே தன்னுடைய உடல் ஆகிவிட்டது என யசோதாவுக்குத் தோன்றியது. 10 ஜோசே மார்த்தி விமான நிலையத்திலிருந்து பாரிஸுக்குக் கிளம்பவிருந்த விமானத்தில், கரோலின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அடுத்ததாக எலின் அமர்ந்திருந்தார். அவரது முகம் வாடியிருந்தது. எலினுக்கு அடுத்ததாக யசோதா உட்கார்ந்திருந்தார். விமானம் மேலேறிப் பறந்தபோது, திடீரென கரோலின் விசும்பி அழத் தொடங்கினார். எலினின் கண்களிலும் நீர் துளிர்த்தது. யசோதா தனது கையை எலினின் தோள்மீது வைத்தார். எலின் சற்றே சாய்ந்து யசோதாவின் காதுக்குள் அரைகுறையாக முணுமுணுத்தார்: “ஒரு வாரக் காதலோ, ஒரு நாள் காதலோ பிரிந்து செல்லும்போது இந்தப் பாழாய் போன கண்ணீர் வந்துவிடுகிறது யசோ…” யசோதா தன்னுடைய முகத்தை அண்ணாந்து விமானத்தின் கூரையைப் பார்த்தார். அழக் கூடாது என்ற வைராக்கியம் நேற்றிரவே அவரது மனதில் உண்டாகிவிட்டது. (‘காலம்‘ இதழ் – ஜனவரி 2024) https://www.shobasakthi.com/shobasakthi/
  18. புலம்பெயர் தமிழர்களின் உதவியின்றியே இலங்கையைக் கட்டியெழுப்ப தன்னால் முடியும் என்று இலங்கை அரசு செயற்படுகிறது. இந்தச் செய்தி புலபெயர்ஸ் களுக்கு கசப்பானதாக இருக்கும். 😏
  19. இப்போது தேவை அந்நிய நேரடி முதலீடுகள். எனவே சீனாவோ, இந்தியாவோ பிரச்சினையில்லை. எல்லா வழிகளையும் இலங்கை திறந்து விடடே இருக்கிறது. இனி இலங்கை சிங்கப்பூர்தான்.
  20. அதில் தவறில்லையே . போனால்தானே அங்கே என்ன நடைபெறுகிறது என்று அறிய முடியும். போய் வாருங்கள். என்ன விடயம் என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்”
  21. அடுத்த பயிலரங்கிட்கு நானும் போகலாம் என்றிருக்கிறேன். 😜
  22. மகிழ்ச்சியை தேடி ஊர் உலகமெல்லாம் ஓடக்கூடாது........அது நமக்கு அருகிலேயே கிடைக்கும் ......நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும் .......! 😂
  23. இல்லை அவர்களின் தின இறங்குதல் ஏறுதல் லிஸ்ர்ரில் கொழும்பு சிகிரியா சென்னை தான் உள்ளது . இதற்க்கு இன்னும் விளக்கமாக கருத்து எழுதலாம் பின்னால் வருபவர்களின் கருத்துக்களை பார்த்து விட்டு அதன் பின் பார்ப்பம் 😆
  24. அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான். நல்ல விடயம் மட்டும் அல்ல அடுத்த கட்டத்துக்கு தயாராகிறார்.?
  25. வானுக்குத் தந்தை எவனோ ......! 😍
  26. தமிழின அழிப்பில் இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேவையின் பங்களிப்பு புது தில்லியும், கொழும்பின் இராணுவ ஆய்வாளர்களும் ஜெயாரின் மூன்றுவழித் திட்டத்திற்கு இந்திரா காந்தி கடுமையான முறையில் பதிலளிப்பதாகவே கருதின. குறிப்பாக ஜெயார் முன்வைத்த இராணுவத் தீர்வில் பாவிக்கப்பட்ட ஆள்ப்பலம், வெளிநாட்டு இராணுவ வல்லுனர்களின் ஆதரவு என்பன இந்திராவைக் கோபப்பட வைத்திருந்தன. தமிழர்களுக்கெதிரான போரில் இஸ்ரேலிய உளவு அமைப்புக்களான மொசார்ட், ஷின்பெட், இங்கிலாந்தின் முன்னாள் விசேட வான் மற்றும் தரை படையணியினரினால் நடத்தப்படும் தனியார் இராணுவக் கூலிப்படையான கீனி - மீனி மற்றும் அவர்களால் கொழும்பில் கொண்டுவந்து இறக்கப்பட்ட சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க கெரில்லா யுத்தங்களின்போது கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசேட படையணி வீரர்களின் ஈடுபடுத்தலும், பாக்கிஸ்த்தான் , சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களும் இலங்கையரசை இராணுவத் தீர்வு நோக்கிச் செல்ல உந்தியிருந்தன. லலித் அதுலத் முதலியும், ரவி ஜயவர்த்தனவும் ஒருவரையொருவர் வெளிப்படையாகவே தூற்றி வந்தபோதிலும் தமிழர் தாயகத்திலிருந்து அவர்களை அச்சுருத்தி வெளியேற்றி, தமிழ்க் கிராமங்களின் எல்லைகளில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் முன்வைத்த திட்டத்தை முழுதாக ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வந்தனர். எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமா, இஸ்ரேலின் திட்டங்களை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்தார். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்கள் முன்னெடுத்துவரும் இதே திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளதால், இலங்கையிலும் அதே நிலைதான் ஏற்படும் என்று அவர் அரசை எச்சரித்தார். நடந்ததும் அதுதான். தம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் அஞ்சவில்லை. மாறாக அதற்கெதிரான அவர்களின் எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தமிழர்கள் ஒன்றிணையத் தொடங்கினார்கள். தமிழ் மக்களால் முன்னர் ஆதரவளிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழரின் ஒற்றுமையின் முன்னால் அடிபட்டுப் போயிற்று. இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன் இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேர்விசஸ் அமைப்பை தமிழின அழிப்பில் ஈடுபட வைத்தது லலித் அதுலத் முதலியே. லண்டனில் இருந்து வெளிவரும் டெயிலி நியுஸ் பத்திரிக்கை இக்கூலிப்படை இலங்கையில் செய்துவரும் நடவடிக்கைகளை 1987 பங்குனியில் செய்தியாக வெளியிட, 1987 ஆம் ஆண்டு வைகாசி 19 ஆம் திகதி வெளியான‌ அமெரிக்காவின் வோஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் பல ஆதாரங்களுடன் இக்கூலிப்படையினரின் செயற்பாடுகள் குறித்த இரகசிய விபரங்களை வெளியிட்டது. ஆனால், இந்த விபரங்கள் எல்லாமே 1984 ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது. லண்டன் டெயிலி நியுஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் பல டசின்கணக்கான கீனி மீனி கூலிப்படையினர் இலங்கையில் போரில் பங்கெடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு வருட வருமானமாக 33,000 (1984 இல்) அமெரிக்க டொலர்கள் இலங்கையரசால் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது. வோஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதிய ரிச்சேர்ட் எல்ரிச், குறைந்தது 35 கீனி மீனி கூலிப்படையினர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பு : பி. பி. சி செய்திச்சேவை 2020 ஆம் ஆண்டு, கார்த்திகை 30 ஆம் திகதி வெளியிட்ட ஆய்வறிக்கையில், "இலங்கையின் விசேட அதிரடிப்படை வீரர்களுக்கு கீனி மீனி கூலிப்படையினர் 1980 களில் பயிற்சியளித்து வந்ததாகவும், இலங்கையின் விமானப்படையினருக்கான விசேட பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும்" கூறியிருந்தது. கட்டுக்குருந்தை - விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாம் தமிழ் கெரில்லாக்களைக் கொல்வதற்கான பயிற்சிகளை இலங்கை விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாமான கட்டுக்குருந்தையில் இங்கிலாந்துக் கூலிப்படை வழங்கி வந்ததாக எல்ரிச் கூறுகிறார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் கீனி மீனி கூலிப்படையினரின் பங்கு குறித்து எல்ரிச் முன்னாள் இங்கிலாந்து விசேட படைகளின் கேணல் தர அதிகாரியும் பின்னாட்களில் கூலிப்படையின் அதிகாரியாகவும் செயற்பட்ட கென் வைட், இங்கிலாந்து உயர்ஸ்த்தானிகராலய பேச்சாளர் ஜக் ஜோன்ஸ், கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோரிடம் வினவியிருந்தார். கென் வைட் பேசுகையில், "நாம் இலங்கை அரசாங்கத்தின் ஊழியர்கள். ஆகவே, எம்மைப்பற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும், இங்கிலாந்தின் உயர்ஸ்த்தானிகரும் கூறும் விடயங்களைச் செவிமடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைத்தவிர நான் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" என்று கூறினார். இலங்கை கொலைப்படையுடன் கீனி மீனி கூலிகளில் ஒருவன் இங்கிலாந்து தூதரகப் பேச்சாளர் ஜக் ஜோன்ஸ் மிககவனமாகத் தேர்ந்தெடுத்த வசனங்களைக் கொண்டு பதிலளித்தார், "கீனி மீனி சேவைகளின் இலங்கையின் பிரசன்னம் என்பதை அந்த தனியார் அமைப்பிற்கும் இலங்கை அரசுக்குமிடையிலான தனிப்பட்ட விடயமாகவே இங்கிலாந்து அரசு கருதுகிறது. இங்கிலாந்தின் படை வீரர்கள் இலங்கையில் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால், கீனி மீனி அமைப்பில் இன்று இலங்கையில் செயற்படும் வீரர்கள் முன்னர் இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று நான் அறிவேன். அவர்கள் இலங்கையில் செயற்படுவதை ஆதரிக்கவோ அல்லது தடுக்கவோ இங்கிலாந்து அரசால் முடியாது. என்னைப்பொறுத்தவரை ஒரு சட்டபூர்வமான தனியார் கம்பெனி சட்டபூர்வமான இலங்கை அரசாங்கத்துடன் வியாபார ஒப்பந்தம் ஒன்றில் இணைந்திருக்கிறது. இந்த வியாபார ஒப்பந்தத்தின்படி கீனி மீனி யின் வீரர்கள் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும், நேரடியான இராணுவ நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை என்பதையும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்" என்றும் கூறினார். ஜோன்ஸ் மேலும் கூறுகையில், "இங்கிலாந்தின் உள்த்துறை அமைச்சரான டேவிட் வடிங்க்டன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது கூறிய விடயத்தைக் கவனியுங்கள், இலங்கையின் கீனி மீனியின் பிரசன்னம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும் என்றும், அவர்களின் பயிற்சியினால் இலங்கை இராணுவத்தின் போரிடும் திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் அல்லவா?" என்றும் கூறினார். இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன் எல்ரிச்சுடன் பேசிய மேற்குநாட்டு இராஜதந்திரி ஒருவர் கீனி மீனி சேவை, இலங்கையின் உள்நாட்டுப் போரில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளால் இங்கிலாந்து அரசாங்கம் அவமானப்பட்டிருப்பதாகக் கூறினார். "கீனி மீனி சேவையின் பங்களிப்பு என்பது உள்நாட்டுப் போரில் இங்கிலாந்தின் பங்களிப்பு என்றே பலராலும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சரியானது என்று கூறினாலும், கீனி மீனி சேவை உள்நாட்டுப் போரில் நேரடியாக ஈடுபட்டிருப்பதன் மூலம், இங்கிலாந்தும் இராணுவத் தீர்வையே விரும்புகிறது போலத் தெரிகிறது. கீனி மீனி சேவையின் உதவிகள் ஊடாக தமிழ் கெரில்லாக்கள் கொல்லப்பட்டு வருவதானது இங்கிலாந்து அரசும் அரசியல் ரீதியிலான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது" என்றும் கூறினார். கீனி மீனி கூலிப்படையில் இலங்கையில் பணியாற்றிய கொமாண்டோ சமி டொரத்தி என்பவன் லண்டன் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், "அங்கு பல அட்டூழியங்கள் நடந்திருக்கலாம், ஆனால் நாம் அங்கு செல்லாதிருந்தால் இவை நடந்திருக்காது என்றும் கூற முடியாது. ஒழுக்கயீனமே அட்டூழியங்கள் நடைபெறக் காரணமாகி விடுகின்றன. போரிற்குப் பயந்த, தகுந்த பயிற்சி வழங்கப்படாத படைவீரர்களே அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், நான் வழங்கும் பயிற்சிகள் அவர்கள் அட்டூழியங்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. நாம் அவர்களுக்கு வழங்கும் பயிற்சிகள் மூலம் சுயகட்டுப்பாடு அவர்களுக்கு ஏற்படுவதோடு பல உயிர்களும் காக்கப்படுகின்றன என்பதே உண்மை" என்று கூறினான். தொடர்ந்து எழுதும் எல்ரிச், "கீனி மீனி சேவையினால் பயிற்றப்பட்டு வரும் இலங்கை பொலீஸாரின் விசேட அதிரடிப்படையினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு கொலைப்படையாகவே செயற்பட்டு வருவதாகவும், கடுமையான சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டுவருவதன் மூலம் அப்பிரதேசத்தை கடுமையான அச்சத்தில் ஆள்த்தி வைத்திருப்பதாகவும் தமிழர்கள் குற்றஞ்சுமத்துகிறார்கள்" என்றும் எழுதுகிறார். கென் வைட் அவருடன் பேசும்போது, "நாம் அவர்களுக்கு வழங்கிவரும் பயிற்சிகளின்மூலம் அட்டூழியங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். ஆனால், கொழும்பில் தங்கியிருக்கும் பல மேற்குநாட்டு இராஜதந்திரிகளோ கீனி மீனியின் பயிற்சிகளின் பின்னரே கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் காண்பித்திருந்தார்கள். எல்ரிச்சுக்குப் பேட்டியளித்த லலித் அதுலத் முதலி, "இலங்கை அரசாங்கம் அரசியல்த் தீர்வில் நம்பிக்கை கொள்ளவில்லை. வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியின் மூலம் இராணுவத் தீர்வு சாத்தியப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார். கீனி மீனி கூலிப்படையினரால் செலுத்தப்பட்ட இலங்கை வான்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தியொன்று " நாம் அவர்களை எமது விசேட அதிரடிப்படை வீரர்களைப் பயிற்றுவிக்கவும், துணை இராணுவக் குழுக்களை அமைக்கவுமே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இப்பயிற்சிகளின் ஊடாக எமது வீரர்கள் பல நுணுக்கங்களைக் கற்றிருக்கிறார்கள். பல பகுதிகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவர்களால் முடிந்திருக்கிறது. இலங்கையின் அரச படைகள் படுகொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தமிழ்மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் கீனி மீனி சேவையினரின் பயிற்சியினால் 42 வீதம் குறைந்திருக்கிறது. கீனி மீனி சேவையின் வீரர்களை நாம் நேரடியான சண்டைகளில் பயன்படுத்தி வருகிறோம் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும்" என்றும் கூறினார். தனது ஆய்வுகளின் சாரம்சமாக எல்ரிச் பின்வருமாறு கூறுகிறார், "கீனி மீனி சேவைகளின் வீரர்கள் பயிற்சி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள் என்று அரசு கூறினாலும் கூட, பயிற்சிக்கும் நேரடியான சண்டைக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு சிலவேளைகளில் அழிக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக வான் தாக்குதல்களில் கீனி மீனீ சேவையின் வீரர்கள் நேரடியாகவே பங்கெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, 35 கீனி மீனி சேவைகளின் வீரர்கள் அமெரிக்கத் தயாரிப்புக்களான பெல் 212 மற்றும் பெல் 412 ஆகிய உலங்குவானூர்திகளில் இலங்கை வான்படை வீரர்களுக்குச் சண்டைப்பயிற்சி அளித்து வருகிறார்கள். சாட்சியங்களின்படி, போராளிகள் மீதான வான் தாக்குதல்களுக்குச் செல்லும் வேளைகளில் இலங்கையைச் சேர்ந்த விமானி ஒருவர் பிரதான விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருக்க, கீனி மீனியின் வீரர் உதவி விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருந்த்து தாக்குதலில் ஈடுபடுகிறார். வெளியில் இருந்து பார்ப்போருக்கு இலங்கை விமானியே உலங்குவானூர்தியைச் செலுத்துவதால், கீனி மீனியின் பங்களிப்பு மறைக்கப்பட்டு விடுகிறது. ஆனால், உலங்கு வானூர்தி மீது போராளிகள் தரையிலிருந்து தாக்கும்போது நிலைமை மாறி விடுகிறது. போராளிகளின் தாக்குதல்களிலிருந்து விமானத்தைத் தப்புவிக்க, இலாவகமாக ஓட்டிச் செல்ல கீனி மீனியின் விமானி பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொள்ள இலங்கை விமானியோ இயந்திரத் துப்பாக்கியை இயக்கச் சென்றுவிடுகிறார். அமெரிக்காவால் வழங்கப்பட்டு கீனி மீனி கூலிப்படையினரால் இயக்கப்பட்ட பெல் 412 உலங்கு வானூர்தி பெருமளவு கூலிப்படையினரும் ஆயுதங்களும் இலங்கை அரசால் தருவிக்கப்பட்டபோது இந்திரா காந்தி எரிச்சலடைந்தார். இதுகுறித்து நரசிம்ம ராவோ லோக் சபையில் அறிக்கையொன்றினை வெளியிட்டார். இந்தியாவைக் கடந்து, வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரின் உதவிகள் பெறப்பட்டிருப்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவ ரீதியில் தீர்வு காண முயன்றால் அழிவுகரமான விளைவுகளே ஏற்படும் என்றும் இலங்கை அரசாங்கத்தை அவர் எச்சரித்தார். இதனால் கொதிப்படைந்த ஜெயார், இந்தியாவுக்கெதிரான கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பெரியண்ணை பாத்திரத்தை இந்தியா வகிக்க எத்தனிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பிராந்திய வல்லரசு எனும் இந்தியாவின் எண்ணம் வெறும் கனவுதான் என்றும் எள்ளி நகையாடினார். இந்தியாவை அவமானப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள், அதற்கு எதிர்மறையான விளைவுகளையே அவருக்குக் கொடுத்தன. அதுமட்டுமல்லாமல், இலங்கையின் நிலையினையும் இன்னும் மோசமாக்கி விட்டிருந்தது. பெருமளவு போராளிகளும் அவர்களுக்கான ஆயுதங்களும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியாவால் நகர்த்தப்பட்டன. தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கொடுத்த பணத்தினால் வாங்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களும் புலிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு போராளி அமைப்புக்களை ரோ கோரத் தொடங்கியது. தம்மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக பொலீஸாரும் இராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் ஆவணி, புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. இதனையடுத்து தமிழ் மக்கள், போராளி அமைப்புக்களுக்கு முற்றான ஆதரவினை வழங்கத் தலைப்பாட்டார்கள். இலங்கை அரசுக்கெதிரான புரட்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அவர்கள் முன்னர் வழங்கிவந்த ஆதரவு முற்றாக போராளிகளுக்கு கைமாறியிருந்தது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விசுவாசத்தினை இலங்கை அரசாங்கம் இழந்தது. இலங்கையரசு என்பது சிங்கள அரசுதான் என்கிற நிலைக்குக் அது கீழிறக்கப்பட்டது. தொடர்ந்துவந்த மூன்று மாதங்களில் புலிகளின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், தமிழர்களுக்கான தனிநாட்டினை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். மேலதிக வாசிப்பிற்கு : கீனி மீனிக் கூலிப்படையின் இலங்கைச் செயற்பாடுகள் குறித்த ஆவணம் ஒன்று https://www.puradsimedia.com/wp-content/uploads/2019/02/britains_dirty_war.pdf
  27. கொழும்பில் வெடித்த குண்டுகள் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 22 ஆம் திகதி கொழும்பில் முதலாவது குண்டு வெடித்தது. இந்நாட்களில் இந்திரா காந்தி உயிருடன் இருந்தார் என்பதுடன் ஜெயாரின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளினால் கடும் அதிருப்தியிலும் இருந்தார். வடக்குக் கிழக்கில் ஆயுதப்போராட்டம் புலிகளால் உக்கிரப்படுத்தப்படுகையில் ஈரோஸ் கொழும்பிற்கு குண்டுவெடிப்பு செயற்பாடுகளை நகர்த்தியிருந்தது. பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வினை விட்டு இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டு செயற்பட்டு வந்த ஜெயாரை அச்சுருத்தி மீளவும் பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் உத்தியாகவே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இலங்கையில் இந்தியாவின் நலன்களை முற்றாக முடக்கிவிட ஜெயவர்த்தனவுக்கு இராணுவ உதவிகள் என்கிற பெயரில் இந்தியாவுக்கெதிரான சீனா, பாக்கிஸ்த்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முயன்றுவருவதாக இந்திரா அஞ்சினார். இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதுதான் என்று இந்தியா கருதியது. (குறிப்பு : சமாதானப் பேச்சுக்கள் மூலம் மட்டுமே தமிழருக்குத் தீர்வொன்றினை வழங்க இந்தியா விரும்பியதே ஒழிய, பிரபாகரன் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தமிழர்களுக்கு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை இன்றுவரை இந்தியா முற்றாக எதிர்த்தே வருகிறது. அதேவேளை புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்களை முற்றாக ஒடுக்கிவிட ஜெயார் முயல்வதையும் இந்தியா வரவேற்கவில்லை . இதன் ஒரு பகுதியாகவே இலங்கையுடன் இந்தியா 2005 இல் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தமும் பார்க்கப்படல் வேண்டும்). புறக்கோட்டை புகையிரத‌ நிலையம் அன்று கொழும்பு முழுவதும் மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. முதலாவது குண்டுவெடிப்பு காலை 5:30 மணிக்கு கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்த்தப்பட்டது. பொலீஸ் நிலையத்திற்கு மிக அண்மையாகக் குண்டை வெடிக்கவைக்கும் நோக்கில் ஊர்காவற்றுரையைச் சேர்ந்த இளம் பொறியியலாளரான பரிபூரணம் அதனைக் காவிவந்த வேளை எதிர்பாராத விதமாக அது வெடிக்க அவரும் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கொழும்பின் 9 வேறு இடங்களில் முதல் நான்கு மணிநேரத்திற்குள் குண்டுகள் வெடித்ததனால் மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அண்மையாக வெடித்த குண்டினால் பல பொதுமக்கள் காயப்பட்டனர். ஏனைய குண்டுகள் அரச வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள், மத்திய பேரூந்து நிலையம், உள்ளூர் அலுவல்கள் அமைச்சுக் கட்டிடம் மற்றும் இதர பகுதிகளில் வெடித்தன. குப்பைகூழங்களைக் கொட்டிவைக்கும் கொள்கலன்களிலேயே இக்குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. பெலியகொடை பகுதியில் வீடொன்றில் இன்னொரு குண்டு எதிர்பாராத விதமாக வெடித்தபோது இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அரசுக்கு இக்குண்டுவெடிப்புகள் கடுமையான அழுத்தத்தினை ஏற்படுத்தின. லலித் அதுலத் முதலி கொதித்துப்போனார். விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய அவர் 10 மணியளவில் ஆற்றிய உரையில் நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் மீது இன்னொரு படுகொலையினை சிங்களவர்கள் நடத்தவேண்டும் என்பதற்காகவே இக்குண்டுவெடிப்புக்களை பயங்கரவாதிகள் நடத்திவருவதாக‌ அவர் கூறினார். ஆகவே, பயங்கரவாதிகளின் சதிக்குள் சிக்கிவிட வேண்டாம் என்று சிங்களவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இக்குண்டுவெடிப்புக்கள் இரண்டு முக்கிய செய்திகளை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் கூறியிருந்தன. முதலாவது செய்தி, நாட்டின் தலைநகரான கொழும்பிற்கும், சிங்கள மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளுக்கும் குண்டுகளைக் கொண்டுவந்து வெடிக்கவைக்கும் வல்லமையினைப் போராளிகள் பெற்றுள்ளார்கள் என்பது. இரண்டாவது, கொழும்பு அரசாங்கம் இராணுவத் தீர்வில் அதீத கவனம் செலுத்தினால், போரினை மேலும் விரிவாக்குவதற்கு இந்தியா ஒருபோது பின்னிற்காது என்பது.
  28. யார் குற்றினாலும் அரிசியானால் சரிதான்.
  29. நீங்கள் இங்கிருந்து கொண்டு இதை சொன்னால் ஏற்று கொள்ளலாம். இன்னும் ஆயுத கனவுடன், ஆயுத தீர்வுடன் இருக்கிறீர்கள் போல இருக்குது. அதெல்லாம்கடந்து போய் வெகு காலமாகி விட்டுது. இருக்கவே இருக்குது மாவடட சபை, கிராம சபை தீர்வுகள்.
  30. சரியா சொன்னீர்கள் குழப்ப வேண்டாம்... தென் ஆபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வந்த இனவழிப்பு சம்பந்தமான வழக்கை பார்த்து இஸ்ரேல் பயப்படவில்லை தொடர்ந்து இனவழிப்பை செய்து கொண்டு தான் இருக்கின்றது இஸ்ரேல் தனது திட்டம் நிறைவடைந்த பின்பு இந்த தாக்குதலை நிறுத்தலாம்... இன்னும்20 வருடங்களின் பின்பு பலஸ்தீனருக்கு எதிராக இனவழிப்பு நடைபெற்றது என இஸ்ரெலே சொல்லி மன்னிப்பு கேட் கலாம் ....இதனால் பாதிக்க பட்ட மக்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை...... கட்டு கட்டாக கடுதாசிகளில் முறைப்பாடுகளை சேகரித்து வைக்கும் ஐ.நா.சபை வைலில் ஆயிரத்தில் ஒர் முறைப்பாடாக இதுவும் சேர்த்து கொள்வார்கள்.... ஆர்மேனியாவில் இனப்படு கொலை நடந்த விடயம் கடுதாசியில் உண்டு என்ன பிர ஜோசனம்...
  31. ஆண்கள் இனி தமிழ்நாட்டு சொப்பிங்க் கடைகளில் குந்திகொண்டிருக்காமல் அம்மணிகளை சொப்பிங் அனுப்பி விட்டு யாழில் கள்ளு குடிச்சு கொண்டிருக்கலாம் ...அமமணிகள் சொப்பிங் முடிச்சு மாலையில் திரும்பி வந்து ஆண்களை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்...
  32. என்னே! நீலனுக்கு இத்தனை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளா...
  33. 1 point
    இப்பதிவில் கருத்துப் பகிர்ந்து, உணர்வுகளை இங்கு வெளிக்காட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது இனத்தில் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறோம். ஆனால், அவர்களது இறப்பில் வராத துயர‌ம் ஒரு வேற்றினத்தவன் இறக்கும்போது வருவது எப்படிச் சாத்தியம் என்று பலர் இதனைக் கருதலாம் என்கிற தயக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. உண்மையென்னவென்றால், எனது இனம் அழிக்கப்பட்ட வலி எனக்கு எப்போதும் அப்படியே இருக்கும். அது மறையாது. அதற்கான வடிகால்கள் தேடித்தான் இன்றுவரை இனம் சார்ந்தும், போராட்டம் சார்ந்தும் எதையாவது எழுதவேண்டும் என்று மனம் விரும்புகிறது. நாம் நடந்து வந்த பாதைகளில் எம்மைப் பாதித்த ஒரு சில வேற்றினத்தவர்களையும் நாம் சந்தித்திருப்போம். அவர்களில் ஒருவன் தான் இவனும். அவன் குறித்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த தப்பபிப்பிராயமும் இதனை எழுத என்னைத் தூண்டியிருக்கலாம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் !
  34. ஒவ்வொரு நாட்டுக்கும் சட்ட திட்டங்கள் வேறு பட்டதாக இருக்கும் தானே..அந்த வகையில் அந்தக் குடும்பங்களின் விருப்பப்படி செய்கிறார்கள்..கடந்த முன்று மாதங்களுக்கு முன் எனது தந்தையாரின் அஸ்த்தியை 29ம் நாள் கரைப்பதற்கு ஒரு நாள் முன்பதாக எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்து விட்டு தான் கொண்டு போய் கடலில் கரைத்தார்கள்.என்னோடு இருந்த காரணம் ஒன்று மற்றையது நான் கடற்கரைக்கு எல்லாம் போக இயலாத காரணம் இன்னொன்று. எனது தந்தையார் நீண்ட நெடுதுயர்ந்த மனிதர். அஸ்த்தியாக பார்க்கும் போது ஒரு சிறிய பிஸ்கட்பெட்டியாக பைக்கற் செய்து தந்திருந்தார்கள்.எப்போதும் அந்த நினைவுகளை மறக்க இயலாது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எனது அண்ணா ஒருவர் இறந்திருந்தார்.அவரது அஸ்த்தியை அண்ணாவின் துணைவியார் காசிக்கு போகும் போது தானே எடுத்து சென்றார்.அதற்கு ஏற்ப விபரங்கள் எல்லாம் ஒட்டப்பட்டு இறுதிக்கிரியைகளை செய்த மண்டபகாரர்கள் குடுப்பார்கள்.
  35. அவர் தயாரித்த தீர்வுப் பொதி பற்றி அறியலாமா?
  36. வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 26 இனை சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். யாழ் களத்தில் முதலில் பதிந்த பின்னர் முகப்புத்தகத்தில் விரும்பினால் பிரசுரிக்க வேண்டுகின்றோம். சுய ஆக்கங்கள் பகுதிக்கு ஏதாவது பதிவுகளை மாற்ற விரும்பினால் இந்தத் திரியிலேயே அறியத்தாருங்கள். நன்றி.
  37. பட மூலாதாரம்,RMJ BANDARA படக்குறிப்பு, மனிதக் குழந்தைகளைப் போலவே, குட்டி யானைகளும் ஆர்வத்தால் வாயில் பொருட்களை வைத்து கடிக்க முயல்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், சுனேத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 38 நிமிடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு ருசியான மிகவும் இனிப்பான ஒரு பொருளை கடிப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், அதைக் கடித்த பின், உங்களின் கீழ் தாடை வெடித்து, அதிக வலி ஏற்படுகிறது. நீங்கள் வேதனையுடன் விலகிச் செல்லலாம். ஆனால், காயங்கள் ஆறாமல், அவை தொற்றுநோயாகும். பின், சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ முடியாமல், நீங்கள் பட்டினியால் வாடலாம். துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் குட்டி யானைகளின் மரணத்திற்கு இந்த அவுட்டுக்காயே அதிக காரணம். 'ஹக்கா பட்டாஸ்' அல்லது தாடை பட்டாசுகள் என்றும் அழைக்கப்படும் இந்த வகை அவுட்டுக்காய், காட்டுப்பன்றிகளை உடனடியாக வேட்டையாடுவதற்காக வேட்டையாடுபவர்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். சில விவசாயிகள் பயிர்களை அழிக்கும் பன்றிகள் உள்ளிட்டவற்றை கொல்லவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், யானைகள் பொதுவாக இந்த கொடிய காயால் பலியாகின்றன. இவை கடித்தால், வெடிக்கும். இந்தக் காய் மிகவும் வேதனையான மரணத்திற்கு வழிவகுக்கிறது. யானைகள் காட்டுப்பன்றிகளை விட பெரியதாக இருப்பதால், அவை வெடித்தபின் வாயில் காயங்களுடன் வலியுடன், பட்டினியால் இறக்கும் வரை பல நாட்கள் நடக்கின்றன, நிபுணர்களின் கூற்றுப்படி, இளம் யானைகள் இந்த வகை அவுட்டுக்காயால் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 2023 ஆம் ஆண்டில், வீட்டில் தயாரிக்கப்பட்ட கருவியால் கொல்லப்பட்ட யானையின் வயது 10 மாதம். பட மூலாதாரம்,RMJ BANDARA படக்குறிப்பு, அவுட்டுக்காயால் காயமடையும் யானைகள் விரைவில் உயிரிழக்கின்றன. "மனிதக் குழந்தைகளைப் போலவே, ஆர்வத்தின் காரணமாக, குட்டி யானைகள் எதைக் கண்டாலும் கடிக்கின்றன. வாயில் பொருட்களை வைக்கும்போது அவை தொடுதல் மற்றும் சுவை உணர்வுகளை ஆராய்கின்றன," என்றார் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் அகலங்கா பினிடியா. இவர் இலங்கை வனவிலங்கு கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர். "மருத்துவ அறிக்கைகள் மற்றும் தரவுகளைப் பார்க்கும்போது, குட்டி யானை முதல் பெரிய யானை வரை தாடை குண்டுகளால் கொல்லப்பட்டதைக் காணலாம். இருப்பினும், பாதிக்கப்பட்ட யானைகளில் பெரும்பாலானவை இரண்டு முதல் பத்து வயதுடைய இளம் யானைகள்," என அவர் பிபிசியிடம் கூறினார். இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இதுவரை இல்லாத அளவில் யானைகளின் இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், 470க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருந்தன. அவுட்டுக்காயை எப்படித் தயாரிக்கிறார்கள்? சமன் குமார (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வட இலங்கையில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் தாடை வெடிகுண்டுகளை தயாரிக்கும் பலரில் ஒருவர். எளிதாகத் தயாரிக்கக் கூடியவை என்பதால், தன்னைப் போன்ற வேட்டைக்காரர்கள் அந்த பொருளை நாடுவதாக அவர் பிபிசியிடம் கூறினார். "நாங்கள் உள்ளூர் கடைகளில் இருந்து பட்டாசுகளை வாங்குகிறோம். பின்னர் நாங்கள் அவற்றில் இருந்து வெடி மருந்தை எடுத்து, அவற்றை சரளை மற்றும் உலோக குப்பைகளுடன் கலக்கிறோம்," என்றார் அவர். "நாங்கள் அவற்றை உருண்டைகளாக வடிவமைத்து பிளாஸ்டிக் பைகளில் கட்டி, பின்னர் காட்டுப்பன்றிகளை ஈர்ப்பதற்காக சர்க்கரை பனை பழங்கள், பூசணிக்காய்கள் அல்லது அழுகிய மீன்களைக் கொண்டு மூடுகிறோம்,"என்றார். பட மூலாதாரம்,MADAWA KULASOORIYA படக்குறிப்பு, தாடை வெடிகுண்டுகள், காட்டுப்பன்றிகளை புஷ்மீட்டிற்காக உடனடியாக கொல்ல வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் வீட்டில் வெடிக்கும் சாதனங்கள். யானைகள் மீன்களை உண்ணாவிட்டாலும், சில பழங்கள் போன்ற தூண்டிலில் அவை சிக்கிக்கொள்வதாக குமார கூறினார். ஆனால், குட்டி யானைகளுக்கு தீங்கு விளைவிப்பது தனது நோக்கமல்ல என்றும் குமார விளக்கினார். "குழந்தைகள் எல்லாம் ஒன்றுதான். குட்டி காட்டுப்பன்றிகளாக இருந்தாலும் சரி, யானைக் குட்டிகளாக இருந்தாலும் சரி, அவை வாயில் பொருட்களை வைக்கும். அது அவர்களின் இயல்பு. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது," என்றார் அவர். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், வேட்டையாடுபவர்கள் வேட்டையாடுவதை நிறுத்துவதில்லை என்றார் குமார. "அவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க எளிதான வழிகளை மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள். தாடை வெடிகுண்டுகளைத் தயாரிக்கத் தெரிந்தால், நீங்கள் துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஒரு சில பட்டாசுகள் மற்றும் ஜல்லிகள் போதும்," என்றார் அவர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் அதிக விலை காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வனவிலங்கு மாமிசம் சாப்பிட வருகிறார்கள். இது தாடை குண்டுகளின் பயன்பாடு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் குமார நம்புகிறார். அவுட்டுக்காயால் பலியாகும் யானைக்குட்டிகள் இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த தசாப்தத்தில் தாடை குண்டுகளால் யானைகள் இறந்தது தான் அதிகம். 2013 முதல் அக்டோபர் 2023 வரை, இந்த அவுட்டுக்காய் அல்லது தாடை குண்டுகளால், 587 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இது துப்பாக்கிச்சூட்டில் இறந்த யானைகளின் இறப்பை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், 575 யானைகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளன. தாடை குண்டுகளால் காயமடைந்த யானைகளில் 99% யானைகளுக்கு சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது என்று வனவிலங்கு கால்நடை மருத்துவர் பினிடியா கூறுகிறார். "யானை வாயில் வைத்து கடித்தால், சில நேரங்களில் ஒரு துண்டு அல்லது முழு நாக்கும் உடைந்து விடும். அது தவிர, தாடை, பற்கள் மற்றும் மென்மையான பகுதிகளும் சிதைந்துவிடும்," என்றார் அவர். "தாடை உடைந்தால், யானைகளால் சாப்பிட முடியாது. மேலும், வாயின் தசைகள் சேதமடைந்தால், தாடை வேலை செய்யாது. நீங்கள் மெல்ல முடியாது. வாய் எப்போதும் திறந்திருக்கும். நாக்கு உடைந்தால், உணவு அல்லது தண்ணீரை உள்ளே தள்ள முடியாது." "துன்பத்தின் காலம் என்பது காயத்தின் அளவு, விலங்கின் வயது மற்றும் அதன் சகிப்புத்தன்மையைப் பொறுத்தது. சில விலங்குகள் இரண்டு வாரங்கள் வரை அவதிப்படுகின்றன," என்றார் அவர். மனிதன் - யானை மோதல் இலங்கையில் உள்ள யானை, இந்தத் தீவை பூர்வீகமாகக் கொண்டது. ஆசிய யானைகளில் இந்த துணை இனம் மிகப்பெரியது. இலங்கையில் கடைசியாக, 2011 ஆம் ஆண்டு காட்டு யானைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, இலங்கையில், 5,879 யானைகள் உள்ளதாக தெரியவந்தது. பட மூலாதாரம்,AKALANKA PINIDIYA படக்குறிப்பு, இலங்கையில், 2023 ஆம் ஆண்டில் மட்டும், 470 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த யானைகள், இலங்கை மக்களின் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர். இந்த யானைகள், அந்த நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். ஆனால், காடுகளை அழிப்பதாலும், நாட்டில் நடந்த வரும் வளர்ச்சித் திட்டங்களாலும், மனிதன்-யானை மோதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. "இலங்கையில் ஒரு யானை பேரழிவு நடக்கிறது," என்று இலங்கையில் விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பான ரேர்(RARE) நிறுவனர் பாஞ்சாலி பனாபிட்டிய கூறினார். "இலங்கையில் யானைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒரு மனிதர் இறந்து கொண்டே இருக்கிறான். இரவில் யானைகளால் வீடுகள் உடைக்கப்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் எப்போதும் தூங்குவதில்லை," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "வன விலங்கு சுற்றுலா மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டுவதில் யானை முதன்மையான பங்களிப்பாகும். இருப்பினும், மனிதன்-யானை மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் இதை புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இந்த சமூகங்களுக்கு சரியான வருமானம் இல்லை," என்றார் அவர். இலங்கையில் தாடை குண்டுகள் சட்டவிரோதமானது என்றாலும், அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்தவோ அல்லது உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன் வருவதில்லை என்றார் பனாபிட்டிய. ஆனால், இதனை வனவிலங்கு அதிகாரிகள் மறுக்கின்றனர். தாடை வெடிகுண்டுகளின் பயன்பாட்டைக் குறைக்க கிராமப்புறங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். "யானையைக் கொல்வது இலங்கைச் சட்டத்தின்படி குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்" என்று இலங்கை வனத்துறை அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்தார். "தற்போது, தாடை வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பல வழக்குகள் விசாரணையில் உள்ளன, மேலும் நீதிமன்றம் ஏற்கனவே பலரை தண்டித்துள்ளது," என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,RMJ BANDARA படக்குறிப்பு, தாடை வெடிகுண்டுகளால் காமடைந்த யானைகளில் 99% யானைகளுக்கு சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது. தாடை வெடிகுண்டுகளை தயாரிப்பதில் அல்லது அவற்றைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடுவதில் ஈடுபடும் நபர்கள் குறித்து புகார் அளிக்க ஹாட்லைன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சரத்சந்திர கூறினார். "யானைகள் நம் நாட்டின் சொத்து. இவை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கின்றன. அதேபோல், விவசாயிகளும் முக்கியமான சொத்து. அவர்கள் எங்களுக்கு உணவு கொடுக்கிறார்கள். எனவே, விவசாயி மற்றும் யானை, இரண்டையும் பாதுகாப்பது அவசியம்," என்றார் அவர். காட்டுப்பன்றிகளை தாக்கும் தாடைக்குண்டுகளால் பல யானைகள் கொல்லப்பட்டாலும், தற்போது யானைகளை குறிவைத்து குறிப்பாக விவசாய நிலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளை தாக்கும் சம்பவங்கள் நடப்பதாக கால்நடை மருத்துவர் பினிடியா தெரிவித்தார். ஆனால் யானைகள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இந்த கொடிய சாதனங்களால் ஏற்படும் மரணம் இயற்கை அல்லது மனிதனால் ஏற்படும் பிற மரணங்களை விட மிகவும் வேதனையானது, என்று அவர் கூறினார். "நோக்கம் என்னவாக இருந்தாலும், இந்த அவுட்டுக்காயால், யானை பசி, தாகம் மற்றும் தாங்க முடியாத துன்பம் உள்ளிட்ட பெரும் வலியை அனுபவிக்கிறது." என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/c72g56d7wn1o
  38. கொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா ? என்று கேட்டால் இல்லை என்பீர்கள். கொலை செய்யப்படுவதும், கொலை செய்வதும் உங்கள் பிள்ளைகள் இல்லையல்லவ? அதனால் இப்படித்தான் கூறுவீர்கள். எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் உங்களைப் போன்றவர்கள் நாகரீகம் அடைவதும் இல்லை, திருந்தப்போவதும் இல்லை. உங்களைப் போன்றவர்கள்தான் எங்கள் இனத்தின் நச்சு வேர்கள். சிறிது சிறிதாக முழு மரத்தையும் அழித்துவிடுவீர்கள். 😏
  39. நீலன் திருச்செல்வம் உலக்கில் உள்ள பெரும்பாலான் உயர் ராஜதந்திரிகளால் அறியப்பட்ட அவர்களால் மதிக்கப்பட்ட ஒருவர். அவரை கொன்றதன் மூலம் அந்த கொலையாளிகள் எதையும் சாதிக்கவில்லை. போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு காரணமான பலவற்றில் நீலனின் கொலையும் ஒன்று. ஐநா பொது செயலாளர் பதவிக்குத் தகுதியான ஒருவர் நீலன்.
  40. இதை ஏன் நம்பக் கஷ்டப் படுகிறீர்கள்😅? புலிகள் விரும்பிய தீர்வல்லாமல் ஒரு தீர்வுப் பொதியை சந்திரிக்காவுடன் சேர்ந்து நீலன் தயாரிக்க முயன்றார். அவருக்கு மேற்கின் ராஜதந்திர மட்டங்களிலும் மரியாதை இருந்தது (அவர் ஒரு அரசியலமைப்பு நிபுணர் என்பதால்). இது புலிகளைக் கோபப் படுத்தா விட்டால் வேறெது கோபப் படுத்தியிருக்கும் என்கிறீர்கள்? அமிர் இப்படி தானே கோபமூட்டினார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.