Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1488
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46793
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/13/24 in Posts

  1. பொய் சொல்லலாம். ஆனால்... ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன். வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.." என்ற மாதிரி, உங்கடை கதை போகுது. 😂
  2. 'கொண்டாடினான் ஒடியற் கூழ்' பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளையின் (1860 – 1944) வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர். சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார். புலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும். வைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார். புலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி, “அல்லையுற்று இரத்தினபுரி அண்டி அப்பாலே நிவிற்றிக்கொல்லை அடைந்த அலுப்புக் கொண்டதற்கு கல்லடியான், வண்டாரும் மாலை அணி மற்புயற் சுப்பையனுடன் கொண்டாடினான் ஒடியற் கூழ்” ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா கட்டாயம் தேவை. ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.
  3. "காதல் வேண்டாம் போ" மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? அவள் கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு மகாவலியை வெறுத்து பார்த்துக் கொண்டு இருந்தாள். வாடைக்காற்றும் இன்று கொஞ்சம் குளிராக வீசுகின்றது. அவள் நற்றிணை 174 சிலவரிகளை முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். "வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" அவள் மனதில் அமைதி இல்லை. யாரோ ஒரு முதலாம் ஆண்டு மருத்துவ பீட மாணவி ஜெயந்தியை, பகிடிவதை செய்யும் பொழுது தன் காதலன் நண்பியாக்கி விட்டான் என்ற செய்தி அவளை துளைத்துக்கொண்டு இருந்தது. இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு, கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? மீண்டும் மகாவலியை வெறுத்து பார்த்தாள். அவள் கண்களில் இருந்தே மகாவலி ஊற்று எடுப்பது போல் இருந்தது! சட்டென்று யாரோ அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை மெல்ல வருடுவதை உணர்ந்தாள். திடுக்கிட்டு திருப்பி பார்த்தாள். அவளின் வஞ்சக காதலன் தான் அங்கு நின்றான். அவள் துள்ளி எழும்பி , அவன் கையை தட்டிவிட்டாள். தனக்கேற்றவனாக கருதிய தலைவனை இன்று கோபத்துடன் பார்த்தாள். அவளின் சங்கு கைவளையல் மெல்ல நழுவி ஆற்றில் விழுந்தன. அதை அவள் பொருட்படுத்தவில்லை. அது அவளுக்கு இனி முக்கியமும் இல்லை. ஆனால் அவளின் காதலனோ, தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுவென, ஆற்றில் குதித்து, அதை எடுத்து, அவளை பின் தொடர்ந்து சமாதானப் படுத்த பல பொய்கள் சொல்ல தொடங்கினான். அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. தன் காதலனை காண, தினம் சீவி சிங்காரித்து பொன்மகளென வரும் இவள் இன்று மகா காளியே வந்தது போல, தீ பாயும் கண்களுடன் அவனை பார்த்தாள். உன் புது காதலிக்கு இது என் பரிசு என்று சொல்லி அந்த வளையலை தட்டிவிட்டாள். அவள் கலைப்பீட மாணவி அல்லவா, அவள் மனதில் சிலப்பதிகாரத்தின் சில கானல் வரிகள் அம்பு போல் அவள் நெஞ்சை குத்திக்கொண்டு இருந்தன. ஐயனே. கடலில் தோன்றும் சங்கையும் முத்துக்களையும் பார்த்து வானத்து நிலாவும் மீன் கூட்டமும் என்று எண்ணிக்கொண்டு ஆம்பல் ஏமாந்து பூக்கும் போல் நான் ஆகிவிட்டேனே ? [விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப்புரி வளையும் முத்தும் கண்டு-ஆம்பல் பொதி அவிழ்க்கும்] அவள் தன்னையே நொந்தாள், அவன் ஏதோ சொல்லி சொல்லி சத்தியங்களும் செய்ய தொடங்கினான். அவள் அது எதையும் ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. ஐயனே, மாதரார் கண்களையும், மலர்ந்த நீல மலர்களையும் பார்த்து எது உண்மையான பூ என்று தெரியாமல் வண்டு ஊசலாடும், அப்படி என் நிலையும் வந்து விட்டதே! [மாதரார் கண்ணும், மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீலப் போதும், அறியாது-வண்டு ஊசலாடும்] 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' இவையெல்லாம் களவியலுக்கு மட்டும் தான்!. அது அவளுக்கு நன்றாக தெரியும். கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அவள், காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறி காதலன் மேல் சாய்ந்த காலம் இன்று மலையேறி விட்டது. நேராகவே கண்ணகி போல் வாதாட தொடங்கினாள்! இனி தன் சமாளிப்புக்கள், வேடங்கள் சரிவராது என உணர்ந்த அவன், அவள் செருப்பு எடுத்து, துரத்தும் முன், தானாக அவள் மேல் பொய்க்குற்ற சாட்டுக்கள் சுமத்தி நழுவி சென்றான். ஆனால் அவள் துணிந்து விட்டாள். ஏய் 'காதல் வேண்டாம் போ' டா என ஒருமையில் முதல் முதல் விறல் சுட்டிக் காட்டி அவனை திட்டியே விட்டாள்! அவனும் அங்கு நின்றால் பிரச்சனை வளரும் என்று அஞ்சி, உடனடியாகவே தன் விடுதிக்கு திரும்ப தொடங்கினான். ஆனால் அவள் மனது ஓயவில்லை. அது தன் பாட்டில் சில வரிகளை இயற்றிக்கொண்டு தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தது! "காதல் இல்லை கனிவும் இல்லை காத்தரமான ஒரு வாழ்வும் இல்லை காலம் முழுதும் அவன் ஏமாற்றி காமம் தணிக்கும் உடல் நானல்ல !" என்றாலும்: "அன்பு வேண்டி உள்ளம் போராடுகிறது அணைப்பு தேடி உடல் போராடுகிறது அயர்ந்து தூங்க கண் போராடுகிறது அலுப்பு தட்டி உயிர் போராடுகிறது !" அவள் தன் கட்டிலில், உடை கூட மாற்றாமல் அப்படியே உறங்கி விட்டாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. ஈராக்குக்கு அடிச்சு வெற்றிவாகை சூடின மாதிரி ஈரானுக்கும் சணலடி அடிச்சு வெற்றி கிரீடத்தை தனதாக்க அமெரிக்காவுக்கு என் வாழ்த்துக்கள். 😎
  5. இன்றைய பனிப்பூக்கள் இதழில் வெளியான எனது கட்டுரை ======================================================= சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக, சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாகப் பண்டையத் தமிழர்கள் கருதினர் என்பதற்குச் சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது. சங்க இலக்கியங்களின் பதினென் மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் (160–161) இதற்குச் சான்று. இதற்கு நச்சினார்க்கினியரின் உரை பின்வருமாறு அமைகின்றது. “திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேஷராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே…” இதிலிருந்து மேஷ ராசியே முதல் ராசியாகப் பண்டையத் தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். மேலும்: https://www.panippookkal.com/ithazh/archives/27134?fbclid=IwAR3jA-CjymvvsySFZShxQSKTbfnSLjlJPqMD2j4mNjSdqfYf54z_7JOSVrk
  6. இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான் தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது. இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
  7. "முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?" நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது. எந்த நேரமும் நீ தடை செய்யப்பட்டு, இன்னொருவர் அந்த இடத்துக்கு மாற்றப் படலாம் ? யார் அறிவார் பராபரமே !!. நீங்க என்ன நடந்தது என்று வருந்தி கேட்டால், ம்ம் இது முகநூல் தானே, மாற்றி விட்டேன் என்பார். இனி எனக்கு செய்தி, அழைப்பு எடுக்க வேண்டாம் என்பார். அந்த காதல் அரோகரா தான் !! சிலர் எனது வாதத்தை மறுக்கலாம். அவர்களிடம் நான் கேட்பது: ஒருவரை ஒருவர் என்றுமே தொடாமல் எப்படி இருவரிடமும் காதல் நிலை கொள்ளும் அல்லது தொடரும்?? நான் இங்கு பாலியலைப் பற்றி கூற வில்லை, ஆனால், மற்றவரின் உடலை தொட்டு உணரும் உணர்வை கூறுகிறேன். "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை , நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை," சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்கு கிறது: "எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்"[514] நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள். இது முக நூலில் வருமா?????? முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே" [குறுந்தொகை-2] பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே! எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை???? முகநூல் ஊடாக நறு மணம் வராது????? சேயாறு சென்று, துனைபரி அசாவாது, உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, ''இனி வரின் எளியள்'' என்னும் தூதே. [குறுந்தொகை-269] சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு பண்டைமாற்று செய்து வர உப்பங்கழ னிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று, தாமதம் இல்லாமல், அதிக தூரமான வழியைக் கடந்து விரைந்துச் சென்று கூறும் படி தூது விடுகிறாள் . அவள் போய் சொல்லி அவன் வருவதற்குள், கடலுக்கு சென்ற தந்தையும் மீனுடன் வந்து விடுவான் , தாயும் நெல்லுடன் வந்து விடுவாள். இது தான் அந்த காலம். ஆனால் இன்று கணினி [ஆன்லைன்] மூலம் உடனடியாக செய்தி அனுப்பி , அவர்கள் வருவதற்குள் இலகுவாக களவு நெறி பின்பற்றலாம் . இதற்கு வேண்டும் என்றால் கணினி உதவலாம்? காதலில் விழுவதென்றால், ஒருவருடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரம் ஒன்றாக கழிப்பதாகும். கட்டாயம் முன் திட்ட மிட்ட , நன்கு ஆயுத்தப் படுத்திய, முக நூல் சந்திப்பு அல்ல. அங்கு நீங்கள் உங்கள் சிறந்த தோற்றத்தைக் காண்பிப்பதுடன், பேசுவதற்க்கான சரியான மனநிலையிலும் இருக்கலாம்? காதலிப்பது என்பது எல்லா நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும். அப்பதான் உண்மை காதல்! ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்பு கள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்றாலும், இவை இரண்டும் நன்றாக திட்ட மிட்ட உரையாட லுக்கும் வழி வகுக்கும். உண்மையான காதல் மகிழ்விலும் சோகத்திலும் குழப்பத்திலும் அரும்ப வேண்டும். உதாரணமாக, ஒருவர் குறுந்தகவல் [text] ஒன்றை அனுப்புகிறார் என்று வைப்போம். நீங்கள் அதற்கான பதிலை உடன் அனுப்ப வேண்டும் என்று இல்லை . ஆர அமர சிந்தித்து மற்றவரை கவரும் விதமாக செயல்படலாம். அதே போல, வெளிச்சம் மற்றும் பின்னணியை நன்றாக அமைத்து ,உன்னை நீ விரும்பிய வாறு கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி, உரையாடலாம். மேலும் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், ஒரு பேஸ்பால் தொப்பி [baseball cap] அணிந்து மறைத்து விடலாம். அப்படியே, தழும்பு, வடு இருந்தால் அதற்கு தக்கதாக உடை அணிந்து மறைத்து விடலாம். இவை நேரடியாக செய்ய முடியுமா? முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால், மற்றவர் கையில் ஒரு சில நேரம் உண்மையில் கழிக்கும் போது தான் அதன் வலிமை, உண்மை தெரியம் . அந்த சுகம் முக நூலில்,கணனியில் கிடைக்கப் போவதும் இல்லை. மேலும் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல. மெசேஜ் பண்றதெல்லாம் பெண்ணல்ல", ஆகவே: "சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. இஸ்ரேலிய ஈரான் யுத்தத்தின்மூலம், பலஸ்த்தீன மக்களின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அம்மக்களின் அவலங்கள் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். இஸ்ரேலோ, ஈரானோ இந்த யுத்தத்தில் வெல்லப்போவதில்லை. வெறும் அழிவுகள் மட்டும்தான் மிஞ்சப்போகிறது. பலஸ்த்தீன அரசினை அங்கீகரித்து, அவர்கள் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்துவதுதான் இப்பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டுவர ஒரே வழி. ஆனால், இஸ்ரேலிய அரசு இதற்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை. மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்துகொண்டே இருக்கப்போகிறது. இதன்மூலம் ஈரானைப் பலவீனப்படுத்த இவர்களால் முடியாது. ஏவப்பட்டவை ஏவுகணைகள் மட்டும்தான். அவற்றைச் சுட்டு வீழ்த்துவதுடன் இவர்களின் பணி முடிந்துவிடும்.
  9. அட ...நான் யாரோ வெள்ளைக்காரனின் கையென்றெல்லா நினைத்திருந்தேன்! இத்தனை காலமாக இங்கு நின்று களமாடும், கொழுத்தாடும் எனக்கு, யாரோடு எதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். நீங்கள் பகிடிக்குத்தான் எழுதினீர்கள் என்பது தெரிந்தும், நான் பொதுவாக எச்சரிக்கையாகவே எழுதினேன். இங்கு நானும் நீங்களும் மாத்திரம் உரையாடுவதுமில்லை, வாசிப்பதுமில்லை. பொருத்தமானவர்கள் பொருத்தமான கருத்தை எடுத்துக்கொள்ளலாம். முன்பொருமுறை எதேச்சையாக எழுதிய கருத்துக்கு நான் தன்னை உளவு பார்ப்பதாக கள உறவொன்று குற்றஞ்சாட்டியிருந்தார். அதனாற்தான் அப்படி எழுதி, குறிப்பிட்டவர்கள் என்னோடு தொடர்பாடலை தவிர்த்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டேன். நன்றி!
  10. சீனா உட்பட ரஷ்யாவும் வட கொரியாவும் மறைமுகமாக ஈரானுக்கு கை கொடுக்கும் என நம்பலாம். பலகால ஒத்திகைகளை பார்க்கும் போது பாவம் இஸ்ரேல் என தோன்றுகின்றது. அமெரிக்க தேர்தல் திருவிழாக்காலம் என்பதால் பல சம்பவங்கள் நடைபெறும் வருடமாக இது இருக்கும். 😎
  11. "முதல் முறையாக ஈரான் தனது நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது தாக்கியிருக்கிறது. இது சரித்திரத்தில் முன்னர் இடம்பெறவில்லை. மேலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் தாக்குதலை எதிர்பார்த்திருந்தது என்பது உண்மைதான், ஆனால் இதைச் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. இஸ்ரேல் மீது ஏற்படுத்தப்போகும் அழிவுகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்ரேலின் பதிலடி அமையும். அவர்களிடம் சில தாக்குதல் திட்டங்கள் இருக்கின்றன. ஈரானின் முக்கிய இலக்குகள் மீது அவர்கள் தாக்குவார்கள். நிச்சயம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும்" என்று முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் பி பி சி இற்குக் கூறியிருக்கிறார். தனது டமஸ்க்கஸ் தூதரகம் மீதான தாக்குதலுக்காகவே இஸ்ரேல் மீது தாக்கினோம். தற்போது அந்த நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று ஐ நா விற்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி கூறியிருக்கிறார். ஆனால், இஸ்ரேல் பதில்த் தாக்குதலில் ஈடுபடுமானால், அதன்மீது மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் நடத்தும் என்றும், நீதிக்குப் புறம்பான இஸ்ரேல் எனும் நாடு மீது தான் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா இடைமறிக்கக் கூடாது, விலகி நிற்க வேண்டும் என்றும் அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது.
  12. காதல் மலர்க் கூட்டம் ஒன்று கண்காட்சிக்கு வரும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ......! 😍 (ஒல்லாந்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியில் சில படங்கள்)
  13. 'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை] தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்! நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் மற்றும் அயல், அந்த குறைபாடை நீக்கி, எந்தநேரமும் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. தனிமை என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இரவில் கூட அண்ணாவின் கடைசி மகள், கலைமதி, வயது மூன்று என்னுடனே வந்து படுப்பார். அந்த தருணத்தில் தான் ... எனக்கு அரசாங்கம் கல்வி உதவித்தொகை தந்து கப்பல் எந்திரவியலில் பயிற்சி பெற ஒரு ஆண்டுக்கு ஜப்பானுக்கு அனுப்பினார்கள். கட்டுநாயக்க கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பயணம். அண்ணா குடும்பம் மற்றும் ஒரு சில அயலவர்கள் வழியனுப்ப, ஒரே குதூகலமாக அங்கிருந்து புறப்பட்டேன். விமானத்தில் பறப்பது முதல் தரம் என்பதால், சாளரத்தின் ஊடக வெளியே பார்ப்பது , பக்கத்தில் இருந்தவருடன் கதைப்பது இப்படி பொழுது போய் விட்டது. டோக்கியோ விமான தளத்தில் வந்து இறங்கியதும் ஆளுக்கு ஒருபக்கமாக போகத் தொடங்கி விட்டார்கள். என்னை அங்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர்கள் வரவேற்று கூட்டிச்சென்றார்கள். அதன் பின்புதான் தனிமை என்றால் என்ன என்று முதல் முதலாக உணரத் தொடங்கினேன்! அவர்களின் மொழி புரியவில்லை. அதனால் கதைக்க முடியாத சூழ்நிலை. பொதுவாக பல்கலைக்கழகம் வரை தம் மொழியிலேயே படிப்பதாலும் மற்றும் பணி இடங்களிலும் அப்படியே என்பதாலும் ஆங்கிலம் அங்கு ஒருவரும் பாவிப்பதில்லை. மிக மிக சிலருக்கே ஆங்கிலம் தெரியும். என் பயிற்சி ஷிமோனோசேக்கி பல்கலைக்கழகத்தில் தரப்பட்டது. இது டோக்கியோவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். ஆகவே இங்கு பொதுவாக ஒருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. எனவே எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர், பயிற்சியின் போது மட்டும் இருப்பார். மற்றும் படி அவர் தானும் தன்பாடும். அன்று கைத்தொலை பேசிகளோ, சமூக வலைகளோ இல்லாத காலம். ஒரு இருண்ட உலகத்தில் இருப்பது போல ஒரு உணர்வு. நான் இருந்த மாணவர் விடுதியில் எல்லோரும் ஜப்பான் மாணவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் துப்பரவாக தெரியாது. அங்கு தொலைக்காட்சி இருந்தாலும் அவை முற்றிலும் ஜப்பான் மொழியிலேயே! நல்ல காலம் நான் ஒரு சிறிய வானொலி வாங்கி, அதன் மூலம் ஆங்கிலத்தில் உலக நடப்புக்கள் கேட்பேன். அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் துணை ! தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என்பதை அங்குதான் நான் முதல் முதல் உணர்ந்தேன். குடும்பம் மற்றும் நண்பர்களைவிட்டுப் பிரிந்து வெளியில் சென்றது ஒரு முட்டாள்தனம் போல் எனக்கு இருந்தது. ஆமாம், தான் செய்த கொலைக் குற்றத்துக்காக ஒருவன் பத்துக்குப் பத்தடி அறையில், அங்கு வெளிச்சமோ, வெளியிலிருந்து சத்தமோ வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும் சிறைக்கு போனது போலவே நான் உணர்ந்தேன். என்ன குற்றம் செய்தேன், எனக்கு ஏன் இந்த வேதனை ?. இப்படியான எண்ணங்கள் நித்திரைக்கு போகும் பொழுது அடிக்கடி மனதில் நிழலாக ஆடும். என் குடும்பத்தாருடன் கடித போக்குவரத்து மட்டுமே, ஒரு மாதத்திற்கு அதிகமாக ஒரு கடிதமே! ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தனிமையை உணரலாம். அருகில் யாரும் பேச்சு துணையாக இல்லாமல் இருக்கும்போது தனிமையை உணர்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. அப்படியான ஒன்றில் தான் நான் சிக்கி இருந்தேன், எப்ப ஒரு ஆண்டு முடியும் என்பதே, பயிற்சியை விட முக்கியமாக எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் தான், தற்செயலாக, அந்த பல்கலைக்கழகத்துக்கு உதவி விரிவுரையாளராக அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வந்த கணேயாசு என்ற பெண்ணை சந்தித்தேன். தனிமை என்ற சிறைவாசத்தில், இருட்டில் இருந்தவனுக்கு, வெளிச்சம் வந்தது போல் எனக்கு இருந்தது. பல்கலைக்கழக நேரம் போக மற்ற நேரங்களில் அவர் என் கூட்டாளியாக, வெளியில் சுற்றி திரிவது, பல விடயங்களை பற்றி கதைப்பது என தனிமை மறந்து மிகுதி காலம் சந்தோசமாக சென்றது. ஆனால் ஒரே ஒரு குறை மட்டுமே, இது வரை நகராது இருந்த நாட்கள், இப்ப கடுகதி வேகத்தில் போக தொடங்கி விட்டது! என்றாலும் நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் அந்த தனிமை உலகம் என்று சொல்லலாம். நல்ல பாடங்கள் கற்றுத் தருவது வாழ்க்கையாம்! அந்த வாழ்க்கைக்கு நல்ல பாடங்கள் கற்று தருவது கட்டாயம் ஒரு தனிமை தான் என்பது என் அனுபவம்! "தனித்திருந்து விழித்திருந்து தனிநிலை அனுபவித்தவனுக்கு தனித்திருப்பதும் விழித்திருப்பதும் தடையாய் என்றும் தெரியவில்லை...!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "சாதகப் பறவைகள்" அத்தியடி, யாழில் எங்கள் வீட்டுக்கு அருகில் இரு வயது போன தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இருவரும் மாலை நேரத்தில் படலைக்கு அருகில் வீற்றிருந்து வருவோரையும் போவோரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் இருவரும், வாயில் பற்கள் இல்லாத, பொக்கு வாய் என்பதால், பொதுவாக கஞ்சி குடிப்பதே தமது உணவாக கொண்டும் இருந்தார்கள். எனக்கு அவர்களை காணும் போதெல்லாம் 'சாதகப் பறவைகள்' ஞாபகம் தான் வரும். ஏன் என்றால் புராண, இதிகாசங்களில் இந்தப் பறவையை மழை நீரை மட்டுமே அருந்தும் என்றும் [இங்கு கஞ்சி நீர்] மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் [இங்கு மக்களை பார்த்து] என்றும் வர்ணிப்பதை பார்த்து இருக்கிறேன். அவர்கள் நலம் விசாரிப்பவர்களிடம் ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களை போதிப்பதும் மற்றும் அதேநேரம் கர்வம் கொண்டவர்களாகவும் இருந்தது, அவர்களை நான் 'சாதகப் பறவைகள்' என்று அழைப்பது சரியே என்று எனக்கு பட்டது. ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம், துதி 2-42 இல், இந்த 'சாதகப் பறவையை' நோக்கி: "ஓ, அதிர்ஷ்டம் தரும் மகிழ்ச்சியான பறவையே! பருந்து, கழுகு, வேடனின் அம்பு ஆகியவற்றில் இருந்து, உனக்கு ஒரு ஆபத்தும் நேரிடக் கூடாது." என்று போற்றுவது போல, நான் அவர்களை காணும் நேரம் எல்லாம் இந்த கொடிய கொரானாவிலும் மற்றும் நோய்களிலும் இருந்தும் இவர்களை என்றென்றும் காப்பாற்று என்று வேண்டுவது வழமை. அன்று நான், விடுதலையில் வெளியே போய், வீடு திரும்புகையில், அவர்களின் வீடு வெறிச்சோடி இருப்பதை கண்டேன். உடனடியாக அம்மாவிடம் விசாரித்ததில், இருவருக்கும் கடும் கொரோன வந்து ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை விட்டு நீங்கினார்கள் என்பதை அறிந்து, என்னை அறியாமலே 'சாதகப் பறவைகள் இனி எம் மனதில் என்றும் சகாப் பறவைகள்' என்று கண்ணீர் மல்க கத்தியே விட்டேன்! "ஓ, மங்களச் செய்தி அறிவிக்கும் பறவையே! தந்தையர் பகுதியில் [இறந்துபோன முன்னோர்கள் வாழும்] இருந்துகொண்டு, ஒலி எழுப்பு. திருடர்களும், பாவம் செய்வோரும் எங்களைத் தாக்காமல் இருக்கட்டும். பொதுச் சபையில் நாங்கள் உரத்த குரலில் (உன்னைப் போல / சாதகப் பறவை போல) பேசுவோமாக." என மேலும் துதி 2-42 கூறுவது போல, அந்த உன்னத தம்பதிகள் எம்மை என்றென்றும் காப்பாறும் தெய்வங்கள் என்ற நம்பிக்கை என்னிடம் எனோ தானாகத் தோன்றி விட்டது !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. நான் இன்று ராஜஸ்தான் தோற்குமென்று நினைத்தன் அவன் பாவி ஹெட்மயர் காப்பாத்தப் போட்டார் .....! 😂 சும்மா அவசரப்படக்கூடாது.....எல்லோரும் பசஞ்சர் வண்டியில் வருவதால் மெதுவாத்தான் வருவினம்......!
  16. விசுகு, நான் உங்களை சொன்னதாக தவறாக விளங்கி விட்டார்கள். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதற்கு எனது எழுத்தின் தெளிவின்மை காரணம் என்றால் மன்னித்தருள்க. நான் கூறியது எமது அரசியல்வாதிகளின் அரசியல் அவ்வாறு தான் உள்ளது என்பதையே.
  17. இந்த‌ முறை போட்டி கேள்விக‌ள் முன்பை விட‌ வித்தியாச‌ம் தானே அது தான் இவை ப‌ம்பின‌ம் 18ம் திக‌தி 10க்கும் மேல் ப‌ட்ட‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................அப்ப‌ கேள்விக்கான‌ ப‌தில‌ ப‌திஞ்சு புள்ளிய‌ அள்ளுவின‌ம்..........................................
  18. எல்லோருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் வாதம் பிரதிவாதம் என்றும் உண்மையைக் கண்டறிய நல்ல வழியே ! எனக்கு ஒரு ஆமை சம்பந்தமான தேவாரம் இப்ப ஞாபகம் வருகிறது. இது கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பட்டது "வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன் இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே." ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? என கேட்கிறார் . அது பொதுவாக இன்று எல்லோருக்கும் பொருந்தும். தலைக்கு மேல் போனபின்புதான் எங்கே பிழை / தவறு என்று தேடுகிறோம் . அதற்கு பல விளக்கங்களும் கொடுக்கிறோம். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றால் , என்னையும் சேர்த்து, அது நன்றே !!
  19. கொண்டாடுகின்ற அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!🙏
  20. "அயிர, அயிர வைத்தான் விடுங்கள், ஆமை - அருகா, கொட்டை இரிக்கா, நீர்யோக நகரம், எரு-சலேம் இவற்றை வாசித்த பின்னுமா இது நையாண்டி என்பது உங்களுக்கு விளங்கவில்லை? " இது முழு புளுகு என்பது புரிய யாழுக்கு புதிது , பழது தேவையில்லை ஆனால் "இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். " என தொடங்கி அந்த பொய்யை எடுத்துக் காட்டி நயாண்டி செய்யத் தவறி அதன் தொடர்ச்சிபோல மேலும் மேலும் புளுகியது தான் அங்கு ஏற்பட்ட தவறு என்று எண்ணுகிறேன் ? என்றாலும் "- உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்." இதில் ஒரு நையாண்டி தெரிகிறது வாழ்த்துக்கள் !! "ஆனால் ஒரு விடயம் நையாண்டியாக இருக்க, உங்களுக்கு அது நையாண்டி என விளங்க வேண்டும் என்பது ஒரு முன் தகமை அல்லவே." அதனால்தான் சொல்லுகிறேன் முட்டாள் கூட்டங்கள் அதை மேலும் முன்னதையின் தொடர்ச்சியாக பகிரத்தொடங்கும் என்று
  21. "எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் பொறுக்கி எடுத்து எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" மாலை: "தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு வந்தனம் கூறி வசந்தி போறாள் பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" இரவு: "சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் கந்தப்பு விராந்தையில் பாய் விரிக்கிறான் வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான் செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள் தந்தன தந்தன தாளம் போட்டு எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!
  22. 🤣 ஐயா சிறியர், குசும்பன் ஐயா நீங்கள். கோர்த்துவிடுகிறீர்கள்? டமில் பொது வேட்பாளர் என்கிற யோசனைக்கு சம்பந்தன் No சொல்கிறார். சிறிதரன் Yes சொல்கிறார் பொதுமக்கள் 🤦🏼‍♂️தலையில் கை வைக்கின்றனர் என்கிற அர்த்தத்திலேயே பதிவிட்டிருந்தேன். தோற்கப்போகும் பொது வேட்பாளருக்கு யார் நின்றால்தான் என்ன? ஆனாலும் சிவாஜிலிங்கதார் அதற்குப் பொருத்தமானவர். 🤣
  23. ஆகா. ..... தம்பி கன்றுவின். ஆசையை பாருங்களேன்,...முடியாது முடியாவே முடியாது 🤣🤣🤣. உங்களுக்கு நான்கு பிள்ளைகளும் ஒரு மனைவியும் போதும் ஐயா,........இதற்கு மேலும் ஆசைப்படலாமா. ?? 😀
  24. குறைந்தது பத்துப் பேர் பங்குபற்றினால்தான் யாழ்களப்போட்டி நடக்கும்! இன்னும் ஒன்பது பேர் சேருவார்களா?🤔
  25. இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டு ஈரானால் வெல்ல முடியுமா? முடியாது. எனவே, நேரடி மோதலைத் தவிர்த்து தனது வளங்களைப் பாதுகாக்கவே ஈரான் முனையும். அதேவேளை பதிலடி கொடுக்கவும் வேண்டும். ஆக, ஈரானா தனது proxies மூலமாகவும் வேறு விதமாகவும் இஸ்ரேலைத் தாக்கலாம். இஸ்ரேலின் பொருளாதார மூலங்களை அழிக்கலாம். ஈரானை நேரடி யுத்தத்தில் இழுத்து விழுத்தி அழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம். அது நிறைவேறாது என நம்பலாம்.
  26. என்னும் 6 நாள் தான் இருக்கு ஒரு த‌ரும் ஆர்வ‌மாய் போட்டியில் குதிச்ச‌ மாதிரி தெரிய‌ல‌.................. பையா டேய் நீ க‌வ‌லைப் ப‌டாத‌ போட்டியில் நீ க‌ட‌சியில் வ‌ந்தாலும் முத‌ல் ஆளா க‌ள‌த்தில் குதிச்சியே அது தான் துணிவு இப்ப‌டி சொல்லி என்ர‌ ம‌ன‌சை நானே தேர்த்திக் கொள்ளும் சூழ் நிலைக்கு வ‌ந்து விட்டேன் லொல்😁.......................................
  27. என்ன ஏராளன் ரொம்ப அப்பாவியாய் நீங்கள்........ எனக்கே கொஞ்ச அறிவுதான் இருக்கு, நீங்கள் அதையும் குழப்பிப் போடுறீங்கள்..........கல்யாணத்துக்கும் பிள்ளை பிறப்புக்கும் சம்பந்தம் நாங்களாய் ஏற்படுத்திக் கொண்டதுதான்......! 😴
  28. இப்படி அடுத்தவரின் பொருளை பாவிப்பது கிடையாது,....சொந்தமாக. வைத்திருக்கக்கூடிய. சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு 🤣🤣.
  29. உங்களுக்கு இந்த துறையில் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இல்லை வயோதிபர்கள். அதிக நேரம் நின்று பிடிப்பார்கள் இளசுகள் ஆகக்கூடியது,ஐந்து நிமிடங்கள் மட்டுமே .....🤣🤣🤣. உண்மை தான்
  30. பொதுவாகவே மேற்கு நாடுகளை வெறுக்கும் நீங்கள் மேற்கு நாடுகளில் ஒன்றான ஜேர்மனியை அங்கீகரித்து ஜேர்மனியில் உள்நாட்டு சட்டங்களை அங்கீகரித்து அங்கு வாழ்வதும் உங்கள் நலன்களின் அடிப்படையிலேயே.
  31. @Kandiah57, @குமாரசாமி அண்ணை ஆட்களை இந்தப் பக்கம் காணேல்லை. சிலவேளை அவைதான்.... காதலர்களோ... 🤣
  32. மிகக்கடுமையான கண்டனங்கள். அதிலும் பிடித்த பொருளை கட்டை என்று....🤣
  33. முத்துக்குளிக்க வாரீகளா
  34. திடீரென்று “ஆமையின் ரகசியம்” என்று ஒரே விசயத்தை பலர் பரப்பி வருவது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு ஆமை சிற்பத்தின் படத்தைப் போட்டு விட்டு, “தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்……………….,” என்று கதை விடப் பட்டுள்ளது. எந்த ஆதாரமும் இங்கு கொடுக்கப் படவில்லை. ஆனால், இணைதளங்களிலும் பரப்ப ஆரம்பித்துள்ளனர். அதில் ஒன்று தான் இந்த கட்டுரை தயவு செய்து ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரங்களை காட்டுங்கள் / சமர்ப்பியுங்கள் "அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள்." இது என்ன புது புரளி, அந்த சங்க இலக்கிய கவிதையை பதிவிட முடியுமா ?? பூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சியான [தேசிய புவியியல் ஒளியலை வரிசை / நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சி / National Geographic channel] "மனித இனத்தின் பயணம்" என்ற தொடரையும் , மற்றும் சங்க இலக்கியத்தின் ஆதாரங்களையும் மற்றும் உலக வரலாற்றையும் கொஞ்சம் தயவு செய்து புரட்டுங்கள் "உண்மையை அறிதல், உண்மையை நேசித்தல், உண்மையுடன் வாழ்தல், மனிதனின் முழு கடமையாகும்" நன்றி
  35. "படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்." இவர்கள் எல்லாம் மதத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அங்கே, புத்தரை வைத்து தமிழர் காணிகளை பிடிக்கிறார்கள். இங்கே, சிவனை வைத்து புத்தருக்கு பாதை அமைக்க சும்மா கிறிஸ்தவர்களை வம்புக்கு இழுத்து புத்தரை பாதுகாக்கிறார்கள்.
  36. நினைத்தேன்….என்னடா நிழலியும் Sir ஆகி விட்டாரோ என. விளக்கத்துக்கு நன்றி🙏 பிழையாக விளங்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்.
  37. வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ் இனவாத பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் . குறட்டை எத்தனை டெசிபலில் வந்தது என்பதை வைத்தே முடிவு சொல்லலாம் .
  38. 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெறும் ச‌த‌ வீத‌த்தை ச‌ரியா க‌ணித்தீர்க‌ளா இல்லை தானே, ஆன‌ ப‌டியால் யாழில் தொட‌ர்ந்து வாயால் வ‌டை சுட‌ உங்க‌ளுக்கு யாழில் முழு சுத‌ந்திர‌ம் உண்டு 24மணித்தியாலம் தொட‌ந்து வ‌டை சுட்டால் வ‌டை சூடாக‌ இருக்கும் சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் சுடும் வ‌டை சுவையா கூட‌ இருக்க‌லாம்.........................................................
  39. @goshan_che நீங்கள் எனக்கு அட்லிஸ் தாங்ஸ் ஆவது பண்ணியிருக்கணும்....🤣 அது சரி ஒரு முக்கியமான ஆள் ஏன் இன்னும் உங்களுக்கு லைக்/லொள் பண்ணேல்லை எண்டதிலை எனக்கு ஏதோ சம்திங் றோங் எண்டமாதிரி தெரியுது 😄
  40. அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் திரிஷாவின்ர வயித்திலை பிள்ளையாக பிறக்க வேணும் என தனக்குள் புறுபுறுதபடி தவறணைய விட்டு நகர்ந்தார் ...... "பழஞ்சோறு பரமானந்தம்"
  41. நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம் என்று புரிந்து கொண்டு தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது. சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.
  42. ஹ்ம்ம்…. கள்ளக் காதலனுக்கு கட்டையிலை போற வயசு 63. 😂🤣 இந்தக் காதலனை நம்பி… 39 வயசு புருசனை கொன்று போட்டு இருக்குது விசர் மனிசி.
  43. பத்திரிகைச் செய்தி 1 தமிழர் பாசறைப் பத்திரிகை 10.04.4354 திங்கட்கிழமை. தமிழ் பெருங்குடிகளின் தொன்மை, அவர்களின் வரலாற்றை அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கு நாடுகள் எப்படியெல்லாம் மறைத்து வருகின்றனர். உலகை ஆண்ட தமிழர்கள் இன்று நாடு நாடற்ற இனமாக மாற்றப்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் இந்த மேற்குலக நாடுகளே. அவர்கள் இந்திய சிறிலங்கா நாடுகளின் மூலம் தமிழரை அழித்ததோடு அவர்கள் தொன்மைகளை மறைக்கும் கைங்கரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மேற்கு நாடுகளை மட்டுமல்ல இந்த உலகையே செல்வ செழிப்பாக்கியவர்கள் தமிழர்களே என்ற உண்மையை தமிழர் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உடாசா கோபாலு கண்டறிந்துள்ளார். இற்றைக்கு 23 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கோஷான் சே என்ற எமது தமிழ் பெரும்பாட்டனின் குறிப்புகளை ஆதாரங்களை மீட்டெடுத்த உடாசா கோபாலு அதை நூலாக உருவாக்க, அதை மக்கள் தூய்மைவாதக் கட்சியின் தலைமைச் செயற்பாட்டாளர் சேரமான் மக்கள் முன் வெளியிட்டு பலத்த கைதட்டல்கள் விசிலடிகள் மத்தியில் உரையாற்றினார். எமது பெரும்பாட்டன் கோஷானின் குறிப்புகளை இணையங்களில் இருந்து அழித்து விட அமெரிக்க ஏகாதிபத்திய சிஐஏ முயன்று வருவதாகவும், அதற்காகவே மைக்ரோசொவ்ற் நிறுவனத்துக்கு பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளதான தகவல்களை, “தமிழ் நீ குழாய்ச் சங்கம்” என்ற செய்தி இணையம் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டி உரையாற்றிய அவர், கோஷானின் குறிப்புகளைப் பாதுகாக்க அதனை PDF ஆக பிரதியெடுத்து தமது வரவேற்பறையில் தொங்க விட்டு, தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு அதை செய்யாமல் விட்டால் நீ தமிழனே அல்ல என்று நரம்பு புடைக்க கூறினார். அத்துடன் 45 நூற்றாண்டுகளுக்கு முன்பு புறாக்களில் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்ட தமிழன் தகவல்களை அனுப்ப புதிய முறைகளைப் பற்றி ஆராய்ந்தான். அந்த வகையில் தகவல்களை அனுப்ப புதிய முறையை கண்டு பிடித்த ஒரு தமிழ் பெருமகுடிமகன் அதை சோதனை செய்வதற்காக தனது தந்தைக்கு “என்னப்பா” என்று கேட்டு தகவலை அனுப்ப, அவரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம் அந்த தொழில்நுட்பத்தை திருடி, என்னப்பா என்ற அழகு தமிழ் வார்ததையை திருடி WhatsApp என்று தனதாக்கி கொண்ட வரலாற்றையும் “ஏமாற்றப்பட்ட தமிழா” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்ட நீ குழாய் சங்க தலைவர் சேட்டை செம்மொழியான் தெரிவித்தார். உடாசா கோபாலு கண்டறிந்த, எமது பெரும்பாட்டன் கோசான் சே யின் கலவெட்டுகளை ஒத்த குறிப்புக களை மறைக்க அமெரிக்க சிஐஏ யுடன் சேர்ந்து சதி செய்த பேராசிரியர் அறிவுமதியின் முயற்சி தமிழர் வீரப்படையின் துரிதமான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது. பத்திரிகை 2 அறிவுச்சுடர் பத்திரிகை 14.04.4354 வெள்ளிக்கிழமை “தமிழர் பாசறை” பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 10.04.4354 ல் வெளியிட்ட தகவல்களை சரிபார்தத தமிழ் அறிவுப் பல்கலைகழக பேராசியர் அறிவுமதி 21 ம் நூற்றண்டில் வாழ்ந்த கோஷான் சே யாழ் இணையம் என்ற இணைய இதழில் நகைச்சுவையாக “சிரிப்போம் சிறப்போம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தகவல்களே அவை என்று, தனது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்தார். அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுமதி இலுமினாட்டி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதை போளிசீலன் தனது நீ குழாய் விடியோவில் கூறியதைத் தொடர்ந்து அந்த பேராசியர் வீட்டுக்கு முன்னால் திரண்ட தமிழர் வீரப்படை என்ற அமைப்பினர் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு அவரைத்தாக்கி தமது இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். அவர ஒரு வந்தேறி என்பதையும் வட்சப் தகவல்களை ஆதாரம் காட்டி அவர்களின் தலைவர் தெரிவித்தார். வீரத்தமிழர் அமைப்பின் இந்த வீரச்செயலை பல முகநூல்ப் போராளிகள் பாராட்டி லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளதுடன் தூய்மைவாதக் கட்சியில் உள்ளீர் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பத்திரிகைச்செய்தி 3 பிபிசி 16.04.4354 ஞாயிற்றுக்கிழமை பேராசியர் அறிவுமதி தாக்கப்பட்டது தொடர்பாவும் கோஷன் சே என்ற 21 ம் நூற்றாண்டு அறிஞர் தொடர்பாகவும் ஆய்வுச் செய்திகளை வெளியிட்ட அறிவுச்சுடர் பத்திரிகை செய்தி ஆசிரியர் தாகப்பட்டு பத்திரிகை பிரதிகள் தெருவில் எரிக்கப்பட்டதாக காவல்துறையினிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது இதை செய்தவர்கள் உணர்சிவசப்பட்ட தமிழ் காவலர்கள் என்று முகநூல் போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக விபரங்களை அறிய தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துடன் தொடர்பு பிபிசி தொடர்பு கொண்ட போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை இன்பெக்டர் வந்த போது அவர்களிடம் வாக்குமூலம் அளித்த கட்சித் தலைவர் இதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து திரும்பினர் என காவல்துறை ஆணையாளர் பிபிசிக்கு தெரிவித்தார். (பல ஆண்டு யாழ் இணைய வாசிப்பின் Inspiration காரணமாக எழுந்த கற்பனை)
  44. உடைந்த ரெக்கோர்ட்டை போல இதையே எத்தனை தரம்தான் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள்? அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா? இரு கைகள் தட்டாமல் ஓசை எழாது. அமெரிக்காவுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையான உறவு கசந்ததில் - அமெரிக்காவை போலவே ஈழத்தமிழருக்கும் சமபங்கு உண்டு. அமெரிக்கா இப்போ ஜேவிபி யை அணுகும் முறையை பார்த்தீர்களா? இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது. இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன். ஆனால் நாம் எம்மை அவர்களின் பங்காளிகள் என நிலை நிறுத்த தவறினோம். இதில் பாரிய தாக்கம் செலுத்தியது, சில ஈழத் தலைமகளின் செயலற்ற தனமும், சுயநலமும். அவர்களை அடுத்து வந்தவர்கள் திறமையானவர்களாயும், சுயநலமற்றவர்களாயும், தியாக எண்ணத்துடனும் இருந்தனர். ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது. இந்த மனநிலையே மேற்கு, கிழக்கு, நாலு திக்கிலும் அத்தனை பெரிய நாடுகளும் எம்மை சேர்ந்தழித்தமைக்கு வழி கோலியது. இதே அணுகுறையை, அதைவிட மிகவும் பலவீனமான நிலையில் இப்போ நீங்கள் முன்வைக்கிறீர்கள். இதை எழுதி அம்மஞ்சல்லிக்கு பயனில்லை என தெரியும். கேட்டதால் எழுதுகிறேன்.
  45. ஓமோம் முதலில் லண்டனில் இருந்து ஊர் போகும்போது அண்ணை அஜித் குமார் ரேஞ்சில் இருந்தவர் ஆக்கும் 😃 பகிடிக்குத்தான் @goshan_che வாளிக்குள் இருப்பதுவா ?
  46. இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது, அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை. தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில், இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா அமெரிக்கா என மருவி விட்டது. இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர். இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை எழுப்பினர். அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க். இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே. எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது. அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் - முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார். இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். - உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.