Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்16Points3057Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்11Points38756Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்10Points46785Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20018Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/15/24 in Posts
-
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
6 points
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
5 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம். எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும். சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே. அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது. இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே. திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது. மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது. தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது. (தொடரும்..........)5 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
5 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு ---------------------------------------------------------------------- கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொழும்பில் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் இருந்தால் அன்றி, வெறுமனே கொழும்பு போய், பின்னர் அங்கிருந்து ஊர் போவது நாட்களை வீணடிப்பது போலவும் தெரிந்தது. கொழும்பில், வெள்ளவத்தையில், இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அமைப்பும், நெருக்கமும் அங்கே போக வேண்டும் என்ற விருப்பத்தை இல்லாமல் ஆக்குகின்றன. இந்த தொடர் மாடிக் கட்டிடங்களை, குடிமனைகளை இப்படிக் கட்ட எப்படி அனுமதித்தார்கள் என்பது ஆச்சரியமே. வாகனம் வெளியில் தயாராக நின்றது. நீண்ட தூரப் பயணம், இரவு ஓட்டம், ஆகவே வாகன ஓட்டுனருக்கு ஒரு பேச்சுத் துணைக்கு முன்னுக்கு இருக்கலாம் என்று ஏறினேன். ஆனாலும் முன் இருக்கையில் இருக்கவே கூடாது என்று பலர் கூறிய அறிவுரையும் ஞாபகத்தில் இருந்தது. கொழும்பு - யாழ் ஓட்டத்தில் பல விபத்துகள் நடப்பதாகவும், முன் இருக்கையில் இருப்பவர்களே அதிகமான ஆபத்திற்கு ஆளாகுகின்றனர் என்று ஒரு தரவையும் சொல்லியிருந்தார்கள். ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார் ஓட்டுநர். அது வேலையும் செய்யவில்லை. அதை திருத்த வேண்டும் என்று அவரே சொன்னார். சினிமாக்களில் வரும் வாகன விபத்தில் முன் கண்ணாடியின் ஊடாக பறந்து விழுந்து உருளும் ஒரு சினிமா கதாநாயகன் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அப்படியே எழும்பி நடப்பார். ஒரு கதாநாயகன் ஆகும் சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. 'புத்தளம் வழியே தான் போவீர்கள்?' என்று சும்மா கேட்டேன். அப்படித்தானே எல்லோரும் வழமையாகப் போவார்கள். புத்தளத்தில் ஒரு கடையில் நிற்பாட்டுவார்கள். புத்தளம் எனக்கு கொஞ்சம் பழக்கமான இடமும் கூட. 90 களில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கின்றேன். புத்தளம் வழியே தாங்கள் ஓடுவதில்லை என்றார் ஓட்டுநர். புத்தளம் நகரத்தினூடு செல்லும் வீதிகள் மிக மோசமானவை என்றும், அதை விட போலீஸ்காரர்கள் பல இடங்களில் சும்மா சும்மா நிற்பட்டித் தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். எதற்காக நிற்பாட்டுகின்றனர் என்றேன். வேறு என்னத்திற்கு, எங்களிடம் ஏதாவது வாங்கத்தான் என்று அலுத்துக் கொண்டார் ஓட்டுநர். நாங்கள் நிற்பாட்டா விட்டால், போலீஸ்காரர்கள் வீதியில் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்தும் விடுவார்கள் என்றும் சொன்னார். என்றுமே தீராத கொடுக்கல்களும், வாங்கல்களும். புத்தளத்தின் பின் பக்க காட்டு பகுதியினூடு வாகனம் சென்றது. குறுகலான, பல திருப்பங்களுடன் இருந்த வீதி அது. நீண்ட நீண்ட தூரங்களிற்கு ஒரு கடையோ, வெளிச்சமோ இல்லாத பகுதிகள். அடிபட்டால் ஏனென்று கேட்பதற்கு ஆள் நடமாட்டமோ, அல்லது வேறு வாகனங்களோ இல்லை. இன்று புது வருட இரவு என்பதால், வேறு வாகனங்கள் தெருவில் இல்லை என்று ஓட்டுநர் சொன்னார். அவர்களின் நிறுவன வாகனங்கள், மொத்தம் 15, அநேகமாக இந்தப் பாதையில் போய் வருகின்றன என்றார். அப்படியே போய் கல்கமுவவில் ஏறி, அனுராதபுரம் போய், பின்னர் யாழ்ப்பாணத்திற்கான வழமையான பாதை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஊர் செல்ல ஒரு முழு வாகனத்திற்கு 40,000 ரூபாய் கட்டணம். தனித் தனி இருக்கைகளாகவும் அவர்களே விற்கின்றனர். ஒரு இருக்கை 4, 000 ரூபாய். ஆனால் ஒன்பது பேர்கள் சேர்ந்தால் மட்டுமே இவர்களின் வாகனம் அன்று போகும். ஒன்பது பேர்கள் சேரா விட்டால், சேர்ந்தவர்களை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுகின்றனர். கொழும்பு - யாழ் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய சொகுசு பஸ் நிறுவனங்கள் ஒரு இருக்கைக்கு 3,000 ரூபாய் என்று கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், பொதிகளின் எண்ணிக்கை கூடினால், அதற்கு மேலதிக கட்டணம் அறவிடுகின்றனர். ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கொழும்பிற்கு எத்தனை தடவைகள் போய் வரும் என்று கேட்டேன். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வரும் கோயில் திருவிழா மாதங்களில் பத்து அல்லது பதினைந்து தடவைகள் கூட போய் வருவோம் என்றார். இந்த நாட்களில் உழைப்பது தான் மொத்த வருமானத்தின் பெரும் பங்கு என்றார். ஒரு மாதத்தில் 15, 000 கிலோ மீட்டர்கள் மேல் ஓடுகின்றனர்! இந்த வாகனங்கள் 25 வருடங்களிற்கு மேலாக தெருக்களில் கை மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக எத்தனை ஆயிரங்கள் கிலோ மீட்டர்கள் இவை ஓடியிருக்கும். இவை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமே. அதை விட அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியம். சில வருடங்களில் முன் இதே வாகனத்தை 25 இலட்சம் ரூபாய்களுக்கு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் 12 இலட்சங்கள் செலவழித்து திருத்த வேலைகள் செய்திருக்கின்றனர் (ஆனால் சீட் பெல்ட்டை திருத்தவில்லை.....😀). இந்த வாகனத்தின் தற்போதைய பெறுமதி 68 இலட்சங்கள் என்றார். சாதாரண வாகனங்களின் பெறுமதி இப்படி அதிகரிக்கும் என்பது வெளிநாடுகளில் வாழும், வீட்டுத் தேவைக்கு வாகனங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நம்ப முடியாத ஒரு விடயம். ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம். யாராவது கடையில் நல்ல ஒரு தேநீர் போட்டுக் கொடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் முறிகண்டியில் ஒரு சின்ன வழமையான தரிப்பு. அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே. ஆனையிறவில் இராணுவ வீரர் ஒருஅர் வலுக் கட்டாயமாக வாகனத்தை நிறுத்தினார். இங்கு வேகத்தை குறைக்க வேண்டும், நீ ஏன் குறைக்கவில்லை என்று ஓட்டுநருடன் முறைத்தார். பணம் எதுவும் இருவருக்குமிடையில் கை மாற்றப்படவில்லை. அதை தாண்டியவுடன், 'இவங்களுக்கு வேற வேலை' என்று ஓட்டுநர் சொன்னார். எனக்கு அந்த இராணுவ வீரர் செய்தது சரி என்றே பட்டது. ஆனையிறவைப் பற்றி பிள்ளைகளுக்கு பெரிய கதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு இன்னொரு தடவை சந்தர்ப்பம் வரும் போது சொல்லுவோம் என்று விட்டுவிட்டேன். பளை எங்கும் புதிய தென்னம் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சரியாக காலை 6:30 மணி அளவில், ஊரில் இருக்கும் வீட்டு வாசலின் முன் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டினார். 5 1/2 மணி நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு. இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும். நாங்கள் எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் வந்து சேருவோம் என்று வீட்டில் இருந்த எவரும் அந்த நேரத்தில் எழும்பி இருக்கவில்லை. (தொடரும்..........)5 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
சனிக்கிழமை பெங்களூரில் RCB எப்படியும் CSK ஐ வெல்லும்! Run rate இலும் மேலே போகும்! சென்னையில் pitch மாறிவிட்டது. அதிகமான ஓட்டங்களை எடுக்கத் திணறுகின்றார்கள். எனவே, இறுதிப் போட்டியில் KKR க்கு வாய்ப்பு அதிகம்3 points- வாழும் போதே கொண்டாடுவோம்.
2 pointsஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல். இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.2 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம். உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது. மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள். 15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது. கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர். ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது. பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. (தொடரும்.....)2 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2 pointsஇதே கோவிலில் 60 வருடத்துக்கு முன்பு வரை இன்னார்தான் உள்ளே வரலாம் என ஒரு விதி இருந்திருக்கும். அதை இப்படித்தான் ஒரு தனிமனிதன் எதிர்த்து கதைத்திருப்பார். அதை இன்னொரு தனிமனிதர் “இது வெறும் பேச்சு” என கடந்து போயிருப்பார். ஆனால் அந்த விதி உடைக்கப்பட்டது. இந்த விதியும் உடைக்கப்படும். #எறும்பூர கல் தேயும். பெரியார் சீடர் ஏன் கோவிலுக்கு வருகிறார்? எனக்கு இவர் ஒரு நம்பிக்கையுள்ள சீர்திருத்தவாதியாகவே தெரிகிறார். இது பொது வீதியா? அல்லது கோவில்களுக்கு சொந்தமானதா? ஒரு பிக்குவை இந்த வீதியால் நடக்க வைத்து, ஊர் மைனர்களின் வீரத்தை சோதிக்க ஆசைப்படுகிறேன்🤣. 🤣 உங்களுக்கே கண்ணை கட்டினா… உங்கள் பிள்ளைகளை நினைக்க எனக்கு கண்ணீர் முட்டி கொண்டு வருகுது🤣. கொலிடே எண்டு கூட்டிப்போய் இப்படியா செய்வது🤣.2 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2 pointsஇது இன்னமும் மாறவில்லையா! ஊரில் இருக்கும்போது ஒரே ஒரு முறை திருவிழா இல்லாத, ஆளரவம் அற்ற நாள் ஒன்றில் சிவனுக்கும் அம்மனுக்கும் பொதுவான வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும்போது திடீரென்று ஒருத்தர் வந்து சேர்ட்டைக் கழட்டச் சொன்னார்! நான் கோவிலுக்குள் போகவில்லை; வீதியால்தானே போகின்றேன் என்று சொன்னபோது, மிரட்டல் பார்வையுடன் சேர்ட்டைக் கழட்டித்தான் போகவேண்டும் என்றார்! சரி ஏன் பிரச்சினை என்று சேர்ட்டைக் கழட்டிவிட்டு, சாரத்துடன் சைக்கிளை உருட்டினேன். வீட்டில் இருந்து காற்சட்டையோடு வெளியே போனால் அம்மா தூர இடம் போகின்றான் என்று கண்டுபிடித்துவிடுவார். அதனால் ஊர் உலாத்தப்போகும்போது சாரத்தை எப்பவும் காற்சட்டைக்கு மேலால் போட்டுக்கொண்டு போவதுண்டு!2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பெங்களூர் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 35,60,47 ஒட்டங்களினாலும் , 16,13.4 ஓவர்களினாலும் வெற்றி பெற்றது2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 01 ஜூன் 2024 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 29 ஜூன் 2024 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) கனடா (CAN) அயர்லாந்து (IRL) ஐக்கிய அமெரிக்கா (USA) குழு B: இங்கிலாந்து (ENG) அவுஸ்திரேலியா (AUS) நமீபியா (NAM) ஸ்கொட்லாந்து (SCOT) ஓமான் (OMA) குழு C : நியூஸிலாந்து (NZ) மேற்கிந்தியத் தீவுகள் (WI) ஆப்கானிஸ்தான் (AFG) பபுவா நியூகினி (PNG) உகண்டா (UGA) குழு D : தென்னாபிரிக்கா (SA) சிறிலங்கா (SL) பங்களாதேஷ் (BAN) நெதர்லாந்து (NED) நேபாளம் (NEP) முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 1 ஜூன் முதல் 17 ஜூன் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று: சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அவை கீழே உள்ளவாறு பிரிக்கப்படும். குழு 1: A1 B2 C1 D2 குழு 2: A2 B1 C2 D1 சுப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 19 ஜூன் முதல் 24 ஜூன் வரை நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) முதலாவது அரையிறுதிப் போட்டி 26 ஜூன் அன்று ட்ற்னிடாட் & ரொபேகோவிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 27 ஜூன் அன்று கயானாவிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 29 ஜூன் அன்று பார்படோஸில் மோதவுள்ளன. கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.1 point- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன். எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன்.1 point- "வீரனும் அறவழி போரும்"
1 point"வீரனும் அறவழி போரும்" உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல் "Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்: “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு” ["சத்ரபதி சிவாஜி"/ பாரதியார்] என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது, சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது. இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்: "O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)" மேலும் போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி, எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை, எம் மூதாதையர்கள், தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு, அனுபவித்தும் உள்ளோம். சங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள்,பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன. அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம். இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை,பாதுகாப்பு இல்லங்கள் / இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப் பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல். அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும், தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) இது காணப்படுகிறது. [Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம். இதோ அந்த பாடல்: "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- "கார்த்திகை தீபம்" [சிறுகதை ]
1 point"கார்த்திகை தீபம்" [சிறுகதை ] இன்று கார்த்திகை தீபம், 2022. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள் பாதுகாப்புக்காக இருந்தான். கொஞ்சம் சத்தம் அமைதியாகியதும், ஹெலிஹாப்டர், போர் விமானங்களின் இரைச்சல்கள் ஓய்ந்ததும், முதல் பெற்றோர்கள் வெளியே வந்து வானத்தைப் பார்த்தனர். இன்னும் குண்டுகள் வெடித்த புகைகள் வானத்தில் காற்றுடன் அங்கும் இங்குமாக அலைந்தவண்ணம் இருந்தன. அவர்கள் தமிழர் பாரம்பரிய குடும்பம் என்பதால், ஆயத்தமாக முன்பே தயார் நிலையில் இருந்த சில கார்த்திகை விளக்குகளை தம் வீட்டின் முன் கொளுத்தி வைத்தனர். அவர்களுக்கு அதில் ஒரு திருப்தி. "வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு இலையில மலர்ந்த முகையில் இலவம் கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி” பதுங்கு குழியில் இருந்து மிளிரனின் இரு மூத்த சகோதரர்களும் மெல்ல வெளியே கார்த்திகை தீபத்தின் வண்ண அழகை எட்டிப் பார்த்தனர். வானத்தில் ஊர்ந்து செல்லும் ஒளிவட்டமான சூரியன், நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. அவ்வெப்பத்தால் காய்ந்தது அழகிய காடு. அதனால் இலையற்றுப் போன இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அக்காட்சி அவ்வழியே சென்ற ஔவையாருக்கு, மங்கையர் கூட்டம் ஒன்றாகச் சேர்ந்து ஆரவாரத்தோடு ஏற்றிய அழகிய தீபங்களின் சுடர் கொடியாகப் படர்ந்து நீண்டு செல்வது போல் தோன்றியதாம். ஆனால் இவர்களுக்கு, குண்டுகள் ஷெல்களின் தாக்கத்தால், எரிந்து காய்ந்த இலையற்றுப் போன மரத்தில் பூத்த பூக்களாகவே அவை தெரிந்தன. அந்தக்கணம், மீண்டும் ஒரு ஹெலியின் பெரும் இரைச்சல், அவர்கள் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக திரும்பவும் உட்புகு முன் அந்த கோரா சத்தம், அது தான் மிளிரனுக்கு கேட்டது. அதன் பின் அவன் தனித்துவிட்டான். சொந்த இடத்திலேயே அகதியானான். அது தான் அவன் அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த, நினைவுகூர சில சிவப்பு மஞ்சள் துணிகளுடன் விடுதிக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறான். மிளிரன் தன் விடுதிக்கு கடைசியாக திரும்பும் மூலையில், அந்த மூலை வீட்டில், கார்த்திகா என்ற இளம் பெண் சிவத்த மேல் சட்டையுடனும், மஞ்சள் கீழ் சட்டையுடனும் "உண்பது நாழி உடுப்பவை இரண்டே" என்று, தன் வீட்டின் முன்றலில் கார்த்திகை தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தாள். "விளக்கொளி யாகிய மின்கொடி யாளை விளக்கொளி யாக விளங்கிடு நீயே." அனைத்தையும் விளக்கு கின்ற ஒளியாக விளங்கும் மின்கொடி போன்ற இறைவியை, அந்த பேரொளியாகவே நான் தெரிந்து கொண்டேன் என்று திருமூலர் அன்று கூறினார். ஆனால் இன்றோ, மிளிரன் உள்ளத்தில் சுடர்விட்டு எரியும், அனைத்தையும் அவனுக்கு மகிழ்வாக அள்ளித்தரும் விளக்கொளியாகக் அவளை ஒருகணம் அப்படியே அசையாமல் நின்று பார்த்தான். “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம்! நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி! தரளம் மிடைந்து - ஒளி தவழக் குடைந்து - இரு பவழம் பதித்த இதழ்! முகிலைப் பிடித்துச் சிறு நெளியைக் கடைந்து - இரு செவியில் திரிந்த குழல்! அமுதம் கடைந்து - சுவை அளவிற் கலந்து - மதன் நுகரப் படைத்த எழில்!” நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை பதித்த முகம். அவள் நினைவுகளை அவனில் பதித்து, அவன் மனதில் அவள் அலைகளை நிறைத்து, நளினத்தைத் தெளிக்கின்ற விழிகள். முத்துகளைக் கோத்து அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள். மேகத்தைப் பிடித்து அதைக் கடைந்து காதுகளின் இரு மருங்கிலும் அது உலவுமாறு விடப்பட்ட கூந்தல். மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மிளிரன் நுகரப் படைத்த அழகு அவள்! அவள் தான் கார்த்திகா, கார்த்திகை தீபத்தில் ஒளிர்ந்துகொண்டு இருந்தாள்! அவன் அதில் அழகாய் மிளிருபவனோ, அது தான் அவன் பெயரும் மிளிரனோ!!, இப்படித்தான் அவன் மனம் அவனைக் அந்தக்கணம் கேட்டது. அவளும் சட்டென அவனைப் பார்த்தாள். காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்பதை அவள் கண்கள் வெட்கம் அற்று அவனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தன. இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும், அவளின் பார்வையால் அவன் மனம் இன்பம் அடைந்தாலும், அவன் அதைக் வெளிப்படையாக காட்டாமல் சும்மா கொஞ்ச நேரம் அங்கே நின்றான். இந்த ‘சும்மா’வும், சித்தர்கள் சொன்ன அந்த சும்மாவும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? அவன் கொஞ்சம் குழம்பித்தான் இருந்தான். கார்த்திகை தீபத்தின் மென்மையான பிரகாசத்தைப் போல அவள் அவனுக்கு தோன்றினாள். அன்பின் சுடர் மினுமினுப்பு கொண்டு இருவரின் உள்ளங்களிலும் நடனமாடியது. கண்டதும் காதல் ……. கூடியதும் பிரிவு … என்ற இந்த காலகட்டத்தில், அவையைத் தாண்டி, மிளிரன், கார்த்திகாவின் உள்ளங்களில் தீபம் ஒன்று இந்த நன்னாளில் பற்ற வைக்கப்பட்டு விட்டது! அந்த நேரத்தில் காற்றில் தூபத்தின் வாசனை மற்றும் எண்ணற்ற எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வானம் அவர்களின் காதல் ஆரம்பத்துக்கு மெருகேற்றின. சிவப்பு, மஞ்சள் துணிகள் காற்றில் அசைந்து வாழ்த்துக்கூறின. இருவரும் தம்மை இழந்து ஒருவரை ஒருவர் நோக்கி கொஞ்சம் அசைந்தனர். அது காதலின் சம்மதத்தை சொல்லாமல் சொன்னது. அவர்களின் எண்ணங்களைப் பின்னிப் பிணைந்து, தீபத்தின் வான ஒளியின் கீழ் அவர்களை ஒன்றாக இழுத்தது. மினுமினுக்கும் தீப்பிழம்புகள் மற்றும் காற்றில் எதிரொலிக்கும் மெல்லிசைக் கோஷங்களின் பின்னணியில் அவர்களின் காதல் அங்கு மலர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களில் ஆறுதல் கண்டனர், அவர்கள் இருவரின் இதயங்கள் கொண்டாட்டங்களின் தாளத்துடன் ஒன்றிணைந்து, இணக்கமாக அதற்கு ஏற்றவாறு துடித்தன. பகல் இரவுகளாக மாறியதும், கார்த்திகை தீபத்தின் இரவு முழுவதும் எரியும் சுடர் போல, அவர்களின் பிணைப்பு மௌனத்தில் வலுவடைந்தது. கார்த்திகா, தனது பிரகாசமான புன்னகையுடனும், விளக்குகளின் தீப்பிழம்புகளைப் போல பிரகாசிக்கும் கண்களுடனும், வீட்டுக்கு வெளியே, படலைக்கு அருகில் வந்து, 'உங்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!' என்று கூறியபடி, மிளிரனுக்கு ஒரு தீப விளக்கை கொடுத்தாள். அவனது கண்கள், அதை வாங்கும் பொழுது கண்ணீரால் நனைவதைக் கண்டு திடுக்கிட்டாள். அவன் தன் சோக கதையை அவளுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டான். 'நான் கார்த்திகா, நீங்க ?' நட்சத்திரங்கள் பிரகாசித்த வானத்தின் கீழ், அவள் மெல்லிய குரலில் கேட்டாள். அவன் திரும்பி பார்த்து, 'நான் அகதி, நான் மிளிரன், புதிதாக இங்கு பதவிபெற்ற பொறியியலாளன்' என்று கூறிக்கொண்டு புறப்பட்டான். 'இல்லை இல்லை, இனி நீங்க அகதி இல்லை' என அவள் தனக்குள் கிசுகிசுத்துக் கொண்டாள். அவள் கொடுத்த கார்த்திகை தீபத்தின் புனிதச் சுடரைப் அணையாமல் விடுதிக்கு எடுத்துச் சென்ற அவன், அதை மற்ற சுடர்களுடன் ஒன்றாக தனது பெற்றோர் சகோதரர்களின் படத்தின் முன், சிவப்பு மஞ்சள் துணிகள் தோரணம் போல அசைய, ஈகைச் சுடரின் முன் தன் அகவணக்கத்தை செலுத்தினான். அன்றில் இருந்து இருவரும் சந்திப்பது, கதைப்பது, ஒன்றாக பொழுதுபோக்குவது என அவர்களின் உறவு மலர்ந்தது. இருப்பினும், காதல் பற்றிய கதையைப் போலவே, சவால்கள் வெளிப்பட்டன. மரபுகளில் வேரூன்றிய அவளது குடும்பம், அவர்களது உறவின் ஆழத்தை கேள்விக்குள்ளாக்கினர், அவர்களது இணைப்பை ஏற்கத் தயங்கினர். ஆனாலும், இருவரும் உறுதியுடன் இருந்தனர். அவர்களின் உறுதியும் அசையாத அர்ப்பணிப்பும் தீபத்தின் சகிப்புத்தன்மையை பிரதிபலித்தது, அவளின் பெற்றோரின் எதிர்ப்பினால் ஏற்பட்ட துன்பத்தின் காற்றையும் மீறி பிரகாசமாக அந்த தீபம் ஒளிரத் தொடங்கியது. என்றாலும் நாளடைவில், மிளிரனின் குடும்ப விபரங்களை அறிய அறிய அவளின் பெற்றோர்களின் எதிர்ப்பு முற்றாக நின்றுவிட்டது. இறுதியாக, மற்றொரு மங்களகரமான கார்த்திகை தீபத்தில், கார்த்திகை 2023 இல், எண்ணற்ற தீபங்களின் பிரகாசம் மற்றும் புனித நெருப்பின் நடுவில், கார்த்திகாவின் குடும்பத்தினரின் ஆசீர்வாதங்களைப் பெற்றபடி, இருவரும் கைகளை பின்னிப்பிணைத்து ஒன்றாக நின்றனர். அவர்களின் காதல், அவர்களை ஒன்றிணைத்த சுடர் போன்று, பிரகாசமாக எரிந்து, அவர்களின் முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்தது. கார்த்திகை தீபத்தின் எல்லையற்ற பிரகாசத்தின் மத்தியில், சிவப்பு மஞ்சள் உடையில் இருவரும் இணைந்தனர்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- "கார்த்திகை தீபம்" [சிறுகதை ]
1 pointசொல்லாமல் சொல்லும் கருத்து. ரொம்ப இயற்கையாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.1 point- "கார்த்திகை தீபம்" [கவிதை]
1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣 அவனுகள், இவனுகள கொண்டே மூலைல வைப்பானுவளே🤣. புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுத்தாலே நாடு கடத்துவாங்கள்🤣 🤣 🤣 ஆவலோடு காத்திருக்கிறோம். (நல்லா சஸ்பென்ஸ் வச்சி மர்ம நாவல் போலவே எழுதுறீங்க🤣).1 point- "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்"
"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி: 02 மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகம் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது. அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழு ப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது . இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்! இச் சின்னஞ் சிறிய இலங்கை தீவு சில இனக் கலவரங்களைக் கண்டு மனித வளம், பொருளாதார வளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற் கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால் தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று இன்னும் அழைக்கப்படுகிறது. இது 40 / 41 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24 தொடக்கம் ஜூலை 30, 1983 வரை அரங்கேறியது. இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். நானும் என் குடும்பமும் உட்பட கப்பலில் யாழ் சென்றோம். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது . ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . இது போலவே இந்தியாவிற்குள் 1700 கி மு, ஆடு மாடு மேய்த்து வந்த, நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த பழங்குடியினரை திட்டி , கேவலபடுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார் . மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன என Dr ராதாகுமுத முகர்ஜி Phd "இந்து நாகரீகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலைக் கிழே தருகிறோம். "இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் நசுக்கி ஒழிக்கவும்." மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 மேலும் இதில் ஒருவர் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், மாயனும் இந்த பழங்குடியினருக்கும் மற்றும் தமிழருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக அறிஞர்கள் இப்ப சான்றுகளுடன் கூறுகிறார்கள். ஆகவே இந்த இரு முதன்மை இனப்படு கொலைகளைத் தாண்டித்தான் நாம் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது மட்டும் அல்ல இக் கொலைகளை /அழிவுகளை புரிந்தோர் இருவரும் ஒரே இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி குடும்பத்திற்குள் உள்ள இந்திய - ஈரானிய மொழி குடும்பத்தில் தான் பல வட இந்தியா மொழியும் உள்ளன என்பதும் கவனிக்கதக்கது. மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான், இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கு பரசுராமர் இல்லாததால், அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர். தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குருக்ஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது. ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாக எல்லோரும் அறிய விரும்புவது : *உண்மையில் என்ன நடந்தது ? *இது ஏன் நடந்தது ? *இதற்கு யார் பொறுப்பு ? *இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ? *நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ? இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும் ,தனது திருக்குறள் 548 இல்: "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்." என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார். இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !! *"உண்மைகளை வெளிபடுத்துவது" *"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது" *"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது" அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம். அடுத்த பரம்பரைக்கும் தொடராமல் இருக்க. அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும். இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் . "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள்,ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
வெயிற்..வெயிற்..அங்கால முக்காடு போடச் சொல்லி வற்புறுத்தும் முஸ்லிம் ஆட்களை தட்டிக் கேட்காமல், எப்படி நீங்கள் இதை மட்டும் சுட்டிக் காட்டலாம்? இளகின இரும்பு என்பதாலா😎?1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣......... ஆழமான கருத்துகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள், கோசான். ஆலயப் பிரவேசம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சில கேள்விகளை முன் வைக்கின்றது. எவராவது, எப்பவாவது இது பற்றி அங்கே கதைத்திருக்கிறார்களா என்று எனக்கு ஞாபகமில்லை. போராட்ட காலத்தில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. ஆனால், பெரும்பாலும், அவர்கள் கூட இந்த விடயத்தில் பட்டும் படாமலுமே இருந்தார்கள். கேரளாவில் பல கோவில்களில் ஆண்கள் மேலாடை அணிவது இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணம் பூணூலா அல்லது இல்லையா என்று பார்ப்பதற்கு அல்ல என்றே நினைக்கின்றேன். கோணேஸ்வரர் கோவிலில் வாசலில் ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவரின் பேச்சு அவ்வளவு தெளிவாக இருக்காது. காற்சட்டையுடன் போகின்றவர்களுக்கு ஒரு வேட்டியை எடுத்து நீட்டுவார். வேட்டிகள் ஒரு குவியலாக அவர் பக்கத்தில் இருக்கும். அருகிலேயே காற்சட்டையுடன் உள்ளே போகக் கூடாது என்று ஒரு அறிவித்தலும் இருக்கும். நயிணை நாகபூசணி அம்மன் கோவிலின் உள்ளே மேல் சட்டையுடன் போகலாமா, இல்லையா என்று தெரியவில்லை. இரண்டையும் அங்கே சொன்னார்கள். சிறிது நேரம் வெளியில் நின்று விட்டு, அங்கேயும் வீதியில் இருந்த ஒரு மரத்தின் கீழ் போய் இருந்து விட்டேன். வெளியில் மிக நல்லாகவே இருந்தது நல்ல காற்றோட்டத்துடன் தலதா மாளிகையில் அவசரமாக புது உடுப்பே வாங்க வேண்டியதாகப் போய் விட்டது. விபரமாக அதை பின்னர் எழுதுகின்றேன். கோவில் வீதிகள் கோவில்களுக்கே சொந்தமானவை. ஆனாலும் இவ்வளவு கெடுபிடி தேவையில்லை என்பது என் அபிப்பிராயமும். நானும், பிள்ளைகளும் தினமும் திருவிழாவிற்கு போகவில்லை. அது சாத்தியம் இல்லை என்று முக்கியமானவர் அடுத்த நாளே புரிந்து கொண்டார்.....🤣1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
50 வயது தாண்டும்போதே சுகர் வருத்தங்கள் வாறது. விழிப்புணர்வு வரும்போது பலர் நோயாளிகள் ஆகியிருப்பர்.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣..... கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எதுவுமே மாறாவில்லை என்றே தெரிந்தது. அதே 'மிரட்டல்' பார்வை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. யாரும் மிரட்டலாம். நான் கூட யாராவது கோவில் வீதியில் மேல் சட்டை போட்டிருந்தால், 'ஆ, சட்டையை கழட்டலாம்...' என்று அந்த அகப்பட்ட மனிதரை மிரட்டலாம்........😀.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
👍... நீங்கள் சொல்வது மிகச் சரியே. அவர்களிடம் இருப்பவை மற்றும் ஒரு தொடர் பழக்கமே பல நடைமுறைகளை நிர்ணயிக்கின்றன. பெரிய கரண்டியால் சீனியை அள்ளிப் போடாமல், சிறிய ஒரு கரண்டியால் போடலாம் தானே என்று தான் அங்கேயும் சொன்னேன். அது ஒரு சிரிப்பாகவே முடிந்தது. வவுனியாவில் இருக்கும் உடன் பிறந்த தங்கையின் வீட்டில் தான் இது நடந்தது. 'போடா, எல்லாம் படித்துக் கிழித்தவர் சொல்ல வந்திட்டார்....' என்று இலகுவாக என்னை மறுத்து விட்டாள் என் தங்கை........😀. ஆச்சரியமாக அவர்களில் எவருக்கும், எனக்குத் தெரிந்த வரையில், தொடர் சுகயீனங்களோ அல்லது உடல்நலக் குறைகள் ஏதும் இருப்பதாகவோ தெரியவில்லை.1 point- ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
1 pointThe Biden administration on Tuesday began the process to move ahead with a new $1 billion weapons deal for Israel. The potential arms sale comes as the administration has paused the shipment of 2,000-pound bombs and 500-pound bombs to Israel, citing opposition to the weapons being used in the densely populated areas of Rafah — where more than 1 million people are sheltering. The move, however, signals the Biden administration will continue to make sure that Israel has the military capacity to defend itself, indicating that longer-term weapons deals are not going to be halted at this time. https://www.cnn.com/2024/05/15/us/5-things-to-know-for-may-15-trump-trial-israel-bus-crash-tariffs-canadian-wildfires/index.html1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நாட்டின் மக்களின் அன்றாட பொருளாதாரத்தையும் நாங்கள் நினைத்துக் கொள்ள வேணுமல்லவா...போற இடமெல்லாம் எங்களுக்கு சுமுகமாகத் தான் எல்லாம் இருக்கும் என்றும் என்று இல்லைத் தானே..அதே நேரம் அவர்கள் நடை முறைப்படுத்த நினைத்தாலும் சந்தர்ப்பம் சூழ் நிலை எப்படியோ தெரியாது தானே.என் மனதுக்கு தோன்றியது.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அப்ப k k r தான் top இல்லையா.......! 😂 இதில் ஆச்சரியம் இல்லை பையா கோலி தடக்கி விழுந்து பந்தெடுத்து எறிந்து மிடில் விக்கட்டை விழுத்தியதைப் பார்க்கவில்லையா.......ஏதோ செய்யத் தயாராகிறாங்கள் என்று.......! 😂 எது எப்படியென்றாலும் கொல்கத்தா முதலாவதா வந்தால் சரி........! 👍1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointடெல்லியின் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி ரசிகர்கள் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தியதால், “நானும் போகக்கூடாது, நீயும் முன்னேற முடியாது” என்ற ரீதியில் முடிவு இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு அணிகளின் முடிவு ராஜஸ்தான் அணிக்கு சாதகமாகி ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 64-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 209 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் டெல்லிக்கு பயன் உண்டா? லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தி 14 புள்ளிகளுடன் முடித்தாலும், அதன் நிகர ரன்ரேட் ஆர்சிபி அணியைவிட மோசமாகச் சரிந்துள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணியை ஆர்சிபி வென்றால் நல்ல ரன்ரேட் பெறும்போது டெல்லி தானாகவே ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். ஆதலால், கணித ரீதியாக வெளியேறிவிட்டது, ஆனால், அதிகாரபூர்வமாக வெளியேற்றப்படவில்லை. சன்ரைசர்ஸ் தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களிலும் சேர்த்து 194 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய வேண்டும். இதெல்லாம் நடந்தால் சன்ரைசர்ஸ் நிக ரன்ரேட்டைவிட டெல்லி அணி நிகர ரன்ரேட் உயர்ந்து, ப்ளே ஆப் செல்லலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெள அணியின் நிலைமை என்ன? அதேபோல லக்னெள அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருக்கிறது. 7-வது இடத்தில் இருக்கும் லக்னெள அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று, நிக ரன்ரேட் ரேட் மைனஸ் 0.787 எனச் சரிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை லக்னெள அணி கடைசி லீக்கில் வென்றாலும் அந்த அணிக்கு எந்த விதத்திலும் உதவாது. 14 புள்ளிகளுடன் லக்னெள முடித்தாலும், நிகர ரன்ரேட் மோசமாக இருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் வெளியேறும். ராஜஸ்தானுக்கு ‘ஆடாமலேயே கிடைத்த’ பிளேஆப் வாய்ப்பு லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆர்சிபி அணியும் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றாலும் 14 புள்ளிகளுக்கு மேல் பெற வாய்ப்பில்லை. சிஎஸ்கே தற்போது 14 புள்ளிகளோடு இருப்பதால், கடைசி லீக்கில் ஆர்சிபியை வென்றால் 16 புள்ளிகள் பெறும், தோல்வி அடைந்தால் 14 புள்ளிகளோடு முடிக்கும். ஆதலால், 16 புள்ளிகள் பெறுவதற்கு வாய்ப்புள்ள அணிகளில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் மட்டுமே உள்ளன. ஏற்கெனவே கொல்கத்தா அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிட்டநிலையில் 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணியும் ப்ளே ஆஃப் சுற்றை நேற்றைய டெல்லியின் வெற்றியால் உறுதி செய்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 2-ஆவது இடத்துக்கு இடத்துக்கு கடும் போட்டி சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிகளும், சிஎஸ்கே வெற்றியையும் பொருத்து, ராஜஸ்தான் அணியின் இடம் உறுதியாகும். ஆனால், ராஜஸ்தான் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாது. ஆதலால், அடுத்துவரும் இரு ஆட்டங்களையும் ராஜஸ்தான் அணி “மிகுந்த ரிலாக்ஸாக டென்ஷன்” இன்றி விளையாடலாம். ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி கடைசி லீக் ஆட்டங்களிலும் வென்றால் 18 புள்ளிகள் பெறும், ராஜஸ்தான் அணியும் கடைசி இரு லீக் ஆட்டங்களில் வென்றால் 20 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடிக்கும், ஒரு ஆட்டத்தில் வென்றால், சன்ரைசர்ஸ் அணியோடு 2-வது இடத்துக்கு மல்லுகட்டும். எந்த அணியின் நிகர ரன்ரேட் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 2வது இடத்தையும், அடுத்த அணி 3வது இடத்தைப் பிடிக்கும். சிஎஸ்கேவுக்கு வாழ்வா-சாவா போட்டி சிஎஸ்கே அணி 16 புள்ளிகள் பெற்றால் 4-ஆவது இடத்தை சிக்கலின்றி உறுதி செய்யும். ஒருவேளை ஆர்சிபியிடம் தோல்வி அடைந்தாலும், பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்காமல் அதன் ரன்ரேட்டை பாதிக்காமல் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல வழிவகுத்துவிடும். தற்போது டெல்லி அணி லக்னௌவை வீழ்த்தியிருப்பதன் மூலம், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் நன்மை செய்திருக்கிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக ஆர்சிபி ரசிகர்கள் டெல்லியின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், பிளேஆப்பின் மீதமிருக்கும் இரு இடங்ளுக்கு அதிக வாய்ப்பு கொண்ட பட்டியலில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுடன் ஆர்சிபியும் இப்போது சேர்ந்து கொண்டது. கடைசி போட்டியில் வெல்லும்பட்சத்தில் ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்புக் கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது எப்படி? டெல்லி அணி 2024 ஐபிஎல் சீசனை முடிக்கும்போது ஆறுதலான வெற்றியோடு முடித்துள்ளது. தொடக்கத்திலிருந்தே சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையாமல், நடுவரிசை பேட்டர்கள் அமையாமல் பல தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், அனைத்தும் ஒன்றுகூடி வரும்போது, வாய்ப்புகள் போதுமான அளவில் டெல்லி அணிக்கு இல்லை. டெல்லியில் மீண்டும் ஒருமுறை 200 ரன்களுக்கு மேல் டெல்லி கேபிடல்ஸ் அணி குவித்தது. முதல் 4 பேட்டர்களின் அருமையான பங்களிப்பால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டியது. அதிரடிபேட்டர் மெக்ருக் டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் அபிஷேக் போரெல் (58) டிரிஸ்டென் ஸ்டெப்ஸ்(57) ஆகியோரின் அரைசதம் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. பந்துவீச்சில் இம்பாக்ட் ப்ளேயராக வந்த இசாந்த் சர்மா தொடக்கத்திலேயே லக்னெள அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டம் காணவைத்து பாதி தோற்க வைத்தார். 4 ஓவர்கள் வீசிய இசாந்த் சர்மா 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய லக்னெள அணியை நிகோலஸ் பூரன்(61), அர்ஷத் கான்(58நாட்அவுட்) இருவரும் மீட்டு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏமாற்றிய பிரேசர்ஸ் மெக்ரூக் டெல்லி அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்ருக் 2வது முறையாக நேற்றைய ஆட்டத்தில் அர்ஷத் கான் ஓவரில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப், அபிஷேக் போரெல் இருவரும் பவர்ப்ளேயில் ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர். குறிப்பாக மோசின் கான் ஓவரில் அபிஷேக் 3 பவுண்டரிகளையும், அர்ஷத் கான் ஓவரில் சிக்ஸரும் விளாசினார். யுத்விர் சிங் ஓவரை குறிவைத்த ஹோப் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்களை எட்டியது. நவீன் உல் ஹக் முதல் ஓவரை வெளுத்த ஹோப், போரெல் 17 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் 16 பந்துகளில் 43 ரன்களை அதிரடியாகச் சேர்த்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுழற்பந்துவீச்சாளர்களால் திணறிய டெல்லி ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் லக்னெள அணியின் பிஸ்னோய், க்ருணல் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் டெல்லி அணியின் ரன்ரேட்டை உயரவிடாமல் இறுக்கிப்பிடித்தனர். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக்-ஹோப் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிஸ்னோய் உடைத்து, ஹோப்பை 38 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். நவீன் உல்ஹக் மெதுவான பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று அபிஷேக் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 7-ஆவது ஓவரிலிருந்து 12 ஓவர்கள் வரை 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பவர்ப்ளேயில் 73 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 5 ஓவர்களில் டெல்லி ரன் சேர்ப்பு குறைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் அதிரடி கேப்டன் ரிஷப் பந்த் கேமியோ ஆடி 33 ரன்களில் நவீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 15 ஓவர்கள்வரை டெல்லி அணி 200 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் வந்தபின் ரன்ரேட் எகிறத் தொடங்கியது. அர்ஷத் வீசிய 16-ஆவது ஓவரில் ஸ்டெப்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரையும்,நவீன் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி ஸ்டெப்ஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 72 ரன்கள் சேர்த்து 200 ரன்களைக் கடந்தது. டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள்சேர்த்ததுதான் டெல்லி அணி 208 ரன்களை எட்ட காரணமாக அமைந்தது. அதிர்ச்சி அளித்த இசாந்த் 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இசாந்த் சர்மாவின் பந்துவீச்சில் லக்னெளவின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். முதல் 3 ஓவர்களில் குயின்டன் டீ காக்(12), கேஎல் ராகுல்(5), தீபக் ஹூடா(0) ஆகியோர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஸ்டாய்னிஸ் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது. ஆனால், நிகோலஸ் பூரன் களத்துக்கு வந்தது முதல் சிக்ஸர் பவுண்டரி என வெளுத்ததால், பவர்ப்ளேயில் லக்ளென 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. ஆயுஷ் பதோனி 6 ரன்களில் ஸ்டெப்ஸ் வெளியேற்றினார். இதனால் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெளவை மீட்ட பூரன், அர்ஷத் கான் ஆனால், நிகோலஸ் பூரனின் அற்புதமான ஆட்டம் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. அக்ஸர் படேலின் ஓவரில் பூரன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 20 ரன்கள் விளாசினார். குல்தீப் யாதவ் ஓவரையும் விட்டுவைக்காத பூரன் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டு 20 பந்துகளில் பூரன் அரைசதம் அடித்தார். முகேஷ் குமார் ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து பூரன் 27 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து லக்னெள மோசமானநிலைக்கு சென்றது. ஆனால் “அன்கேப்டு” வீரர் அர்ஷத் கான் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தில் சூடு பிடித்தது. டெல்லி பந்துவீச்சை பறக்கவிட்ட அர்ஷத் கான் 5 சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு லக்னெள அணி வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியது. அர்ஷத் கான் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷத் கான் இருந்தவரை லக்னெள வெற்றி பெற்றுவிடும் என எண்ணப்பட்டது. ஆனால், முகேஷ் குமார், ரசிக் சலாம் இருவரும் டெத் ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசியதால், 19 ரன்களில் டெல்லி வென்றது. அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். https://www.bbc.com/tamil/articles/c98z8g8xv51o1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா அரை இறுதிப்போட்டிக்கு தெரிவானால் , இந்தியாவின் போட்டி கயானாவில் (72 வது கேள்வி) நடைபெறும் என ICC அறிவித்துக்கிறது. India will play the second semi-final of the men's T20 World Cup on June 27 in Providence, Guyana, if they qualify for the knockouts stage. The ICC's playing conditions for the tournament, accessed by ESPNcricinfo, confirms this. India have likely been allotted the Guyana semi-final because of the match timings. The first semi-final in Tarouba, Trinidad, is a night game, set to be played from 8.30pm local time on June 26 - which in India is 6am on June 27. The Guyana semi-final, however, will start at 10.30am local time, which is a far more TV-friendly 8pm in India. கிருபன் கேட்ட கேள்விகள் அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்)1 point- த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
யாழில் சிலர்எழுதும் கருத்துக்களை அவர்கள் வாசிக்கினம் போல. 😀1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பெங்களூர் அணி முதலில் ஆடினால் , சென்னையை குறைந்து 18 ஓட்டங்களினால் வெற்றி பெறவேண்டும்( மழை காரணாமாக 20 ஒவருக்கும் குறைவாக போட்டி நடக்ககூடாது). சென்னை முதலில் ஆடினால், பெங்களூர் அணி 18.1 ஓவனுக்குள் வெற்றி பெறவேண்டும் ( மழை காரணாமாக 20 ஓவருக்கு குறைவாக போட்டி நடக்கக்கூடாது) ஆனால் பெங்களூர் அணியின் இங்கிலாந்து வீரர் Will Jacks விளையாடமாட்டார்.1 point- லெப்டினன்ட் சங்கர்
1 pointஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…., உன் வீரச்சாவும் அதன் பின்பான தமிழர் வரலாறும்! vijasanNovember 27, 2015ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு, eelamaravar Post navigation Previous Next http://www.eelamview.com/wp-content/uploads/2015/11/praba-heros-day-2.jpg ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர். அப்போது ஓரிரு வாரங்களுக்கு முன்னர்தான் சீலன் புலேந்திரனின் காயங்களுக்கு மருந்து (பெத்தடீன், சொசியின்) வாங்க பணத்துக்காக எத்தனையோ வீடுகள் ஏறி, இறங்கி ஏமாறி ஏமாற்றப்பட்டு ஒரு வழியாக 3200ரூபா பிடித்து சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை கொடுத்து வண்டியேற்றி, அண்ணையிட்டை தமிழ்நாட்டுக்கு அனுப்பி காலை மாலை இரவு வெள்ளாப்புறம் என்று பேதமின்றி விழித்தபடி திரிந்து கொஞ்சம் ஓய்வாக உணரும்பொழுதில் சங்கருக்கு காயம்… உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் ஆனால் சீலன், புலேந்திரனின் காயங்கள் போலில்லாமல் இது கொஞ்சம் வித்தியாசம். சீலன், புலேந்திரனுக்கு ரிபீட்டர் வெடி.பல சிறிய சன்னங்கள் புகுந்த காயம். சங்கருக்கு தானியங்கி துப்பாக்கி காயம். படுக்கையில் இரத்தம் இழந்து சோர்ந்து கிடந்தாலும் அரைகுறை நினைவுகளில் கதைத்தபடி இருந்த சங்கர் அந்த நேரத்திலும் இயக்கத்தின் ஆயுதம் பற்றியும் இனி செய்ய வேண்டியதுகள் பற்றியும் ஏதேதோ கதைத்தபடி. சீலன் காயப்பட்ட பிறகு அமைப்பின் தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக சங்கரை தலைவர் தெரிவு செய்திருந்ததால் சங்கரின் பொறுப்புகள் அதிகம்.அந்த நேரத்தில் தாக்குதற்பிரிவு பொறுப்பு என்பது தலைவருக்கு அடுத்தபடியாக அமைப்பின் தளபதி போன்ற ஒரு பொறுப்பு. தலைவர் சில போராளிகள் பற்றி அதிகம் யோசிக்காமல் நித்திரை கொள்ள கூடியதாக இருந்தது என்றால் அது சங்கர், சீலன், புலேந்திரன், பண்டிதர் போன்றவர்களையே சொல்லலாம். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் சுயமாக முடிவெடுத்து எந்த நிலைமையையும் சமாளிக்ககூடியவர்கள் என்று தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தது இவர்கள்மீது. காயத்துடன் அணுங்கியபடி இருந்த சங்கரை பார்த்தபோது ஈரச் சாக்கு ஒன்றால் இதயத்தை அழுத்தி மூடியதுபோல ஒரு இனம்புரியாத கவலை மனசை நோகச்செய்தது. அடுத்த ஓட்டத்துக்கு தயரானோம். சீலன், புலேந்திரன் காயமடைந்தபோது சங்கர் ஓடித்திரிந்தது போல இம்முறை லாலா ரஞ்சன் அந்த இடத்துக்கு வந்தான். சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை இம்முறையும் அழைப்பது சாத்தியம் இல்லை. ஆனாலும் முதலுதவியும் வலியில் இருந்து நிவாரணம் பெறும் சிகிச்சையும் மிக அவசரமாக சங்கருக்கு தேவைப்பட்டது. அதே பெத்தடீன்,சொசியின் ஊசிகள்,காயம் தொற்று ஏற்படாமல் மருந்துகள். இம்முறையும் பணத்துக்கு தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக கையை காலை பிடித்து ஏற்பாடாச்சு. அடுத்து சங்கரை மதுரைக்கு கொண்டு போகவேணும். தலைவர் அங்கு ஒரு வழக்கின் பிணையில் நின்றிருந்த நேரம். மதுரைகாவல் நிலையத்தில் கையெழுத்து, மாலை 6 மணிக்கு பிறகு குறித்த முகவரியில் நின்றாக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன். இருபத்திஏழு நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 27 1982) சீலன் புலேந்திரன் காயமடைந்தபோது, சரஸ்வதி பூசையில் மூன்று பேருக்கு காயம் என்று மதுரைக்கு தந்தி ஒன்றை தபால்நிலையத்தில் இருந்து அனுப்ப வந்த சங்கரின் காயம்பற்றி இம்முறை அனுப்ப வேண்டிய நிலை. மதுரையில் பொன்னம்மான்,கிட்டு போன்றவர்கள் தலைவருக்கு அருகிலேயே இருக்கிறார்கள். சங்கரை அனுப்பினால் எப்படியும் நல்ல சிகிச்சை கிடைத்துவிடும் என்பதில் நம்பிக்கை இருந்தது.சங்கரின் காயம் ஒன்றும் உயிர் உறுப்புகளை சேதமடைய வைத்திருக்கவில்லை என்பது ஒரு ஆறதலாக இருந்தது. எப்படி கடல்தாண்டி அனுப்புவது. பின்பொருநாள் பெரும்கடல்படையை,பெரும் பெரும் ஆற்றலான கடல்சார் வீரர்களை கொண்டு வளர்ந்த எங்கள் அமைப்பிடம் அப்போது கடல் தாண்ட எதுவுமே இல்லை. வெளி இணைப்பு இயந்திரம், படகு, படகு செலுத்துபவர் என்று ஏராளம்.இவை எல்லாம் ஏற்பாடு செய்தாலும்கூட படகு கடல் தாண்டி கோடிக்கரைக்கு போக பெற்றோல் வேண்டும்.பணத்துக்கு எங்கே போவது… பண்டிதர் தான் படகு எரிபொருளுக்கு பணத்துக்கு அலைந்து பிடிப்பேன் என்றான். ஒரு படகுசெலுத்துபவரை ஏற்பாடு செய்யும்படி லாலாவுக்கும் எனக்கும் சொன்னான். நிறைய இடங்களில் ஏமாற்றம்.ஏதாவது சாக்கு போக்குகள்தான்.ஒரு படகுசெலுத்துபரை இறுதியாக அணுகி கெஞ்சி மண்டாடி நிலைமை சொல்லி சம்மதிக்க வைத்தோம். அவரை யாழ் சென்ரல் கல்லூரி மைதானத்தடிக்கு மாலை 3மணிக்கு வரச்சொல்லி லாலா நானும் காத்திருந்தோம்.சந்திக்க நேரமும் இடமும் சொல்லி காத்திருப்பது அந்த நேரத்தில் மிகமிக ஆபத்தான வேலை. அப்போது சிங்களபடையில் பிரிகேடியர் (பின்னர் மேஜர் ஜெனரல்)பொறுப்பில் இருந்த சரத்முனசிங்க தலைமையில் ஒரு பெரும் புலனாய்வு பிரிவு தாயகம் எங்கும் தன் வலையை அகல விரித்திருந்த நேரமது. படகோட்டி வரும்வழியில் பிடிபட்டால் எப்படியும் கூட்டிக்கொண்டுவருவார் என்ற ஆயத்தத்துடனேயே காத்திருக்க பழகி விட்டிருந்தோம்.மைதானத்தின் ஒரு முனையில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் லாலா மறுமுனையில் நான். மாலை 6மணிவரை படகோட்டி வரவில்லை.எல்லாம் ஏற்பாடாகியும் படகை செலுத்த ஒருவர் தேவை என்று அலைந்து இன்னுமொருவரை ஏற்பாடு செய்து நவம்பர் 24 சங்கரை அனுப்பும்போது அவனின் காயமும் அவனின் அணுங்கலும் நோவும் அதிகமாகி விட்டிருந்தன. சங்கருடன் சென்ற போராளி சங்கரை கோடிக்கரையில் இறக்கி அங்கு ஒரு வீட்டில் படுக்கவைத்துவிட்டு பேரூந்துபிடித்து மதுரைக்கு போய் விடயத்தை சொல்லி அழைத்து வரும்போது நவம்பர் 25 மாலை ஆகிவிட்டிருந்தது. மதுரைக்கு சங்கரை கொண்டுபோகும்போதே ஓரளவுக்கு நிலைமை கடினமாக இருந்தது.காயத்தை மூடி தைத்தபோது அதற்குள் ஏற்பட்ட தொற்று அவனின் உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது. மதுரையின் ஒரு சின்னஞ்சிறிய தனியார் மருத்துவஅறைக்குள் சங்கரின் இறுதி கணங்கள் ஆரம்பமாகின. மிக கடினமான இறுக்கமான கணங்கள் அவையாக இருந்தது என்று பின்பொருநாள் நாடுதிரும்பிய கிட்டு சொல்லியிருந்தான். காப்பாற்ற ஏதேனும் வழி தேடி தலைவர் ஏங்கிய பொழுதுகள் அவை.நோவும் அணுங்கலும் உடல் முழுதும் தொற்றிவிட்ட காயதொற்றும் சங்கரை வாட்டிய போதும் அவன் தாயகவிடுதலை, அமைப்பின் அடுத்த கட்டம்,தலைவரின் பங்கு, தலைவர்மீதான விசுவாசம் மரியாதை என்று ஏதேதோ கதைத்தபடியே இருந்தானாம். அவனுடன் இறுதிகாலங்களில் வெடிகுண்டு, வெடிமருந்துகலவை என்று எப்போதும் ஒரு விஞ்ஞான சோதனை நடாத்தி கொண்டிருந்த அப்பையா அண்ணையும் அவனருகில். அவன் நேசித்த பெருந்தலைவன், அவன் கூடப்பழகி உயிராக இருந்த தோழர்கள் என்று எல்லோரும் சுற்றி இருக்க அவனின் இறுதிமூச்சுகள் வெளிவரத்தொடங்கின. நிலைமையினை உணர்ந்த தலைவர் கிட்டுவை அழைத்து சங்கரை கிட்டுவின் மடியில் தலைவைக்க விட்டு அந்த அறையில் சங்கரையே உற்றுப்பார்த்தபடி. ஒருபொழுதில் 17வயது இளைஞனாக கப்டன் பண்டிதரால்(பண்டிதர்,சங்கர்,பழனி(குமரப்பாவுடன் வீரச்சாவடைந்தவர்) ஐடியா வாசு எல்லோரும் ஒரு வகுப்பு சிதம்பராவில்) தன்னிடம் அழைத்துவரப்பட்ட போராளி இப்போது தன் 21வயதில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டு தாயககனவுடன் சாவுக்குள் நுழைகின்றானே என்ற துயர் அவருக்கு. இரவும் பகலும் பிரியாவிடை சொல்லிடும் ஒரு பொழுதில் நவம்பர் 27ல் சங்கர்,சுரேஸ் என்ற பெயர்களால் அமைப்புக்குள் அழைக்கப்பட்ட எங்கள் உயிர்த்தோழன் வீரச்சாவை தழுவி கொள்கின்றான். ஓங்கி அழவும் முடியாது.பாடைகட்டி ஊர்வலமாக கொண்டு எரியூட்டவும் முடியாது. மதுரை அடங்கிய ஒரு பின்னிரவு பொழுதில் இரவு 11மணிக்கு பின்னர் ஒரு பத்துக்கும் உட்பட்டவர்கள் (இயக்கஉறுப்பினர்கள், இயக்க ஆதரவாளர்கள்) சங்கரை கொண்டுசென்று மயானம் ஒன்றில் கிடத்தி சங்கருக்கு அவனின் பிரியமான தோழமை அப்பையா கையால் தீயிட நெருப்புக்குள் மறைந்துபோனான். சங்கரின் வீரச்சாவுச்சேதி தாயகத்தின் போராளிகளுக்கு மறுநாளே அறிவிக்கப்பட்டது. ஆனால் எவரும் இதனை பற்றி மூச்சுவிடக்கூடாது என்றும் அறிவிக்கும் சாதக நிலைமை ஒன்று ஏற்படும்போது தலைமை அறிக்கும் என்பதும் அந்த செய்தியுடனே இணைந்து. அடுத்த கட்டமாக சங்கரின் புகைப்படம் எதுவுமே அமைப்பிடம் இல்லை. அவன் மரணப்படுக்கையில் கிடந்த நேரத்தில் எடுத்த படம் ஒன்றுதான் அமைப்பிடம் இருந்தது. சங்கரின் மைத்தனரான தாடி என்பரிடம் கம்பர்மலையில் சங்கரின் சில பாஸ்போர்ட் அளவு படங்கள் இருக்கின்றன என்பதை முன்னமே சங்கர் சொல்லி இருந்தான். சங்கரின் மைத்துனனான தாடி என்பவரிடம் கம்பர்மலைக்கு சென்று நானும் பண்டிதரும் இன்னுமொரு ஆதரவாளரும் சென்று சங்கரை பயிற்சிக்காக லெபனான் அனுப்புவதற்கு அவனுக்கு பாஸ்போர்ட் எடுக்கவேணும் அவனின் பாஸ்போர்ட் புகைப்படம் அவனின் வீட்டில் இருக்கு அதனை எடுத்து தரும்படி கேட்டோம். ஏன் சங்கரையே கூட்டிக்கொண்டு போய் புகைப்பட ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம்தானே என்று சங்கரின் மைத்துனன் தாடி திரும்ப எங்களை கேட்டபோது எதுவுமே சொல்ல வரவில்லை. ஆனாலும் சுதாகரித்து பதில் சொல்லி அவனிடம் சங்கரின் புகைப்பபடங்களை வாங்கி கொண்டுவந்து அவன் தலைமறைந்ததும் சைக்கிளை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு சங்கரின் புகைப்படத்தை பார்த்து பண்டிதர் கேவிகேவி அழுததது வாழ்வின் இறுதி கணம்வரைக்கும் மறைந்துபோகாது. எப்டியானவன் சங்கர்,எல்லா வேலைகளையும் மிக இலகுவாக,மிகமிக வேகமாக பழகி செய்ய கூடியவன். பண்ணையில் புளியங்குளத்தில் நெல்லு சூடு அடிப்பது என்றாலும் அதனையும அழகாக ஆறதலாக நிதானமாக சிதறாமல் செய்வான் சங்கர்.ஒரு உடுப்பு போடுவது என்றாலும் அவனின் கவனம் அதில் இருக்கும். எல்லாவற்றிலும் மேலாக எந்தவொரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாத அந்த பொழுதுகளில் குண்டுகள், செய்வதும் அதனை பொருத்துவதும் சங்கருக்கு கைவந்த கலை. சங்கரும் அப்பையா அண்ணையும் இணைந்து செய்த பார்சல் வெடிகுண்டுகள் இருபது அந்தநேரம் சிங்களதேசத்தை அலறி அடித்து நித்திரை குலைய வைத்தது.(அது புங்கங்குளத்தில் புகையிரத தபால்பெட்டிக்குள் வெடித்தாலும்கூட) சங்கர் எப்போதும் அமைப்பை மக்கள்மத்தியில் பரவலாக கொண்டு போகவேணும் என்ற பெரும் முயற்சியில் திரிந்தபடியே இருப்பான். இதற்காகவே நிறைய படிப்பான். உண்மை மனிதனின் கதை,அதிகாலையின் அமைதியில் போன்ற போர்க்கால இலக்கியங்களை மட்டும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு வரலாற்று பின்ணணியுடன் பார்க்கும் ஒரு பார்வையை தரும் அரசியல் புத்தகங்களையும் அவன் விரும்பி படிப்பான். எல்லாவற்றிலும் பார்க்க அவன் ஓய்வற்ற ஒரு உழைப்பாளன். ஓய்வு என்பதே அவன் களைத்து தூங்கும்பொழுது மட்டுமே. விடிந்தால் அவனின் நாள் எத்தனை சந்திப்புகள், முன்னெடுப்புகள், முயற்சிகள், வேலைகள் என்று ஓடும். அவனது சைக்கிளும் அவனுக்கு ஈடுகொடுத்து உழைக்கும். அவன் வீரச்சாவடைவதற்கு சரியாக ஒருமாதம் முன்பு அக்டோபர் 27ம்திகதி சாகவச்சேரி சிறீலங்கா சாவல்நிலைய தகர்ப்பு தாக்குதலில் ஒரு பகுதிக்கு சங்கரையே சீலன் தாக்குதற்பொறுப்பாக நியமித்திருந்தான். அப்போது அமைப்பிடம் இருந்த ஆயுதங்களில் ஆகக்கூடிய வலுவுள்ளதான கெக்ளர் அன்ட் கொச் ஜி3 சங்கரிடமே அந்த தாக்குதலில். சிங்களபேரினவாதம் தமிழர் தாயகத்தை அடிமைப்படுத்தி ஆளுவதன் ஒரு அடையாளமாக விளங்குவது சிங்களதலைநகருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பெருந்தெரு ஏ9 ஆகும். அந்த பெருவீதியில் ஒரு தமிழ் இளைஞன் தானியங்கி துப்பாக்கியுடன் நின்றிருந்த முதல் பொழுதின் பெருமை சங்கருக்கு உரியது. அது சிங்களதேசத்து இனிவரப்போகும் காலத்தில் இவனைப்போல ஆயிரம் ஆயிரம் தமிழ் மனிதர்கள் ஆயுதங்களுடன் எழுந்துவருவர் என்ற செய்தியை அப்போது சொல்லாமல் சொல்லிற்று. சங்கர் என்ற அந்த வீரனின் சாவு உடனடியாக இயக்கத்தை ஒரு உலுப்பு உலுப்பி விட்டிருந்தாலும்கூட தலைவரும், ஏனைய போராளிகளும் சங்கரின் மரணத்தின் மூலம் முன்னர் இருந்ததைவிட பல்மடங்கு அதிகமான உறுதியும் வேகமும் கொண்டனர். காயம் ஆறி தாயகம் திரும்பி சீலன், புலேந்திரனிலும் இதனை காணக்கூடியதாக இருந்தது. அதனை போலவே சங்கரை அவனின் இறுதி கணத்தில் தன் மடிமீது வைத்திருந்த கிட்டுவுக்குள் சங்கர் வீரச்சாவு மலையளவு உறுதியையும், பொறுப்பையும் கொடுத்திருந்ததை பின்பொருநாள் அவன் பொலிகை கடற்கரையில் 1983ஆரம்பத்தில் வந்து இறங்கியபோது உணரமுடிந்தது. சங்கரின் போராட்ட வாழ்வு தமிழீழ விடுதலை வரலாற்றை பல படிகள் பல பரிமாணங்கள் உயர்த்தி செல்ல வைத்தது போலவே அவனின் முதற்சாவு இனி எந்த கணத்திலும் தளரோம். எந்த நிலையிலும் தாயகஇலட்சியத்தை கைவிடோம் என்ற ஓர்மத்தை போராளிகளுள் இறக்கிவிட்டு சென்றது. அவன் மரணித்து ஒரு வருடத்துக்கு பின்னர் தாயகசுவர்கள் எங்கும் சங்கரின் வீரமரண செய்தியை எழுதி சங்கரின் வீட்டுக்கு சென்று அவன் எரிந்து எஞ்சிய சாம்பல் அடங்கிய செம்பையும், அவனின் மரணப்படுக்கை புகைப்படத்தையும் கொடுத்து திரும்பும்போது அவனுடன் உலாவிய அந்த தெருக்கள், சைக்கிளில் அவனுடன் திரிந்த ஒழுங்கைகள் எல்லாம் அவனது முகமாக தெரிந்தது.தாயகம் முழுதும். அவன் இறுதியாக படித்துக்கொண்டிருந்த ” ஒரு உண்மை மனிதனின் கதை ” என்ற ருஸ்ய போர்க்கால பெரும் இலக்கியமொன்றின் நாயகன் அலக்ஸெய் போல கால்களை இழந்து காடுகளுள் ஊர்ந்து மனோதைரியத்துடன், சாப்பாடு இன்றி பனியை கரைத்து குடித்து முகாம்திரும்பி தன் கால்களை இழந்தபின்பும் செயற்கைகால் பொருத்தி போர்விமானம் ஏறியது போலவே காயத்துடன், நினைவு மங்க மங்க இரத்தம் வழிய ஓடிவந்து அமைப்பின் ஆயுதத்தை ஒப்படைத்து வீழ்ந்த சங்கர் இனிவரும் எந்த காலத்திலும் தமிழர் நினைவெங்கும் நிறைந்திருப்பான். அவனையும் அவனுடைய பாதையில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் தமிழர்களின் இனிவரும் எந்தவொரு சமூக அரசியல் மாற்றத்தினதும் மூல இயங்குசக்திகளாக வழிகாட்டுவர். ச.ச.முத்து https://eelamaravar.wordpress.com/2015/11/27/heros-day-8/1 point- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இங்கே ஒரு சிலருக்கு முஸ்லீம் நாடுகளில் பன்றி இறைச்சி ஏன் தடை என்பற்கு வியாக்கியானங்கள் வருவதில்லை. காய்ஞ்ச இரும்பை கண்டால் கொல்லன் (டாஸ் டாஸ்) ----- தூக்கி தூக்கி அடிப்பானாம் 😂1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் நேற்று உந்த றோட்டாலை உப்பிடியே நடந்து போகேக்க....உவர் கஞ்சல் காத்திகேசு எதிர்ப்பட வந்தார். என்னப்பா...எப்பிடியப்பா....குடும்ப நிலவரங்கள் விசாரிச்சு அளவளாவிய பிறகு....ஊர்ப்புதினம் பற்றி பெரியாய் கதைச்சம்....அப்ப காத்திகேசு சொன்னார்... உனக்கு தெரியுமோ உவர் சவுக்கு சங்கரை போலிஸ் புடிச்சு உள்ளுக்கை வைச்சு கைய முறிச்சு போட்டாங்களாம்......இப்ப கையிலை புக்கை கட்டிக்கொண்டு உள்ளுக்கை இருக்கிறாராம் எண்டார்.... அப்ப நான் சொன்னன்...... சவுக்கு சங்கர் கேட்பார் இல்லாத நாதியற்றவர். இதே மாதிரி சீமானுக்கும் கையை முறிச்சு ஜெயில்ல போடுவினம் எண்டால் நடக்கிற கதையே வேறை, நாடே கொதிக்கும் எண்டு சொல்லி வாயை மூடுறதுக்கிடையிலை.....கஞ்சல் காத்திகேசு எஸ்கேப் 😎1 point- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை மீறமுடியாது, அப்படி மீறினால் சட்ட ரீதியான சிக்கலில் இலங்கை மாட்டிக்கொண்டு அபராத தொகை கட்டவேண்டிய நிலை உருவாகும் ஆனால் ஐ எம் எப் இனை வெளியேற்றலாம். அப்படி வெளியேற்றுவது இலங்கைக்கு புதிய கடன் பெறுவதில் மேலும் சிக்கலை உருவாக்கும் எனவே ஐ எம் எப் இனை வெளியேற்றுவது என கூறுவது மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுவதாக இருக்கலாம். இலங்கை விரும்பினாலும் இனி ஐ எம் எப் இனை தவிர்க்கமுடியாது என்பதே நிதர்சனம், ஐ எம் எப் வெளியேற்றம் என்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம் இலங்கை அரசியலில்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
சென்னைக்கு தான் அதிக வாய்ப்பு வங்களூர் வென்றாலும் பெரிய வெற்றி பெறனும் அது நடக்காது தொடர்ந்து வங்களூர் 5மைச் வென்றது ஆச்சரியமாய் இருக்கு தலைவவரே😁..................................1 point- முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்! டெம்பிரரியாகத் தன்னும் யோக்கியர்களாக மாறிவிட்டார்களே!😂1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
🤦♂️ எத்தேனும் சீரியலில் வந்த சீனை ரிகிரியேட் பண்ணி இருப்பா🤣1 point- முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
அவரை பத்து கிலோ மீட்டர் ஊர்வலமாக நடத்திக் கொண்டு, அதை காணொளி எடுத்து எல்லாருக்கும் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.1 point- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஜேவிபி ஐ.எம்.எப் இனை முற்றாகத் தவிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம், தாம் பதவிக்கு வந்தால், ஐ,எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை / கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை மீண்டு புதிதாக ஆரம்பிப்போம் என்பது மாத்திரமே. ஒரு வேளை, பதவிக்கு வந்தால், தாம் ஒரு போதும், அவர்களை எதிர்க்கவில்லை என்று மக்களுக்கு சொல்லலாம்.1 point- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஆகவே அல்லது எனவே யாருக்கு தமிழர்கள் வாக்கைப் போடலாம்? இங்கே கருத்து தெரிவித்த பலர் பொதுவேட்பாளர் கூடாது என்கிறார்களே தவிர யாரை ஆதரிக்கலாம் என்பதில் தீக்கோழி மாதிரி இருக்கிறார்கள். துணிந்து ஏதாவதொரு முடிவை எடுக்கலாமே?1 point- பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
1 pointஇவர் அன்றில் இருந்து இன்று வரைக்கும் மாறாமல் அப்படியே இருக்கின்றார். கடும் புலி எதிர்ப்பு / கடும் தமிழ் தேசிய எதிர்ப்பு என்பவை மட்டுமே இவரது கொள்கைகள். ஒரு காலத்தில் சந்திரிகா அம்மையாரின் சேலை நுனியில் தொங்கிக் கொண்டு புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார். இன்று அனுரவின் ஷேர்ட்டில் தொங்குகின்றார். காற்று எந்தப்பக்கம் பலமாக அடிக்கப் போகுதோ என்று தானே கணித்து, அதில் தொங்கிக் கொண்டு தமிழ் தேசியத்தை எதிர்த்து சீவியம் நடத்தும் ஒரு சீவன் இவர்.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
😀... சிலர் அப்படியும் நினைக்கின்றார்கள். ஒரு வீட்டில் கறி அள்ளும் பெரிய கரண்டியையே சீனியை எடுத்து போடுவதற்கும் பயன்படுத்தினர். 'வெள்ளை' நிறமான உணவுப் பொருட்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு எவ்வளவு கெடுதல்களை விளைவிக்கும் என்று நாங்கள் வாசித்த, பார்த்த ஆயிரக்கணக்கான கட்டுரைகள் அங்கே இன்னும் போய்ச் சேரவில்லை..............1 point- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
முதலில் இந்தக் கைக்கூலியான சிவசேனை மாட்டை ஒழிப்பவற்கே எனது வாக்கு.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
காத்திருப்போர் எத்தனை பேரோ, என்னிடம் தோற்பதற்கு 🤣.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? AUS ?? NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? WI ?? AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA ?? SL ?? BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing பின்வரும் வர்ணப் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய குழுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளை காட்டும். உ+ம்: #A1 - ? (2 புள்ளிகள்) A1 <- Choose A1 or enter your preferred Team #A2 - ? (1 புள்ளிகள்) A2 <- Choose A2 or enter your preferred Team ஒருவர் கூகிள் ஷீற்றில் பதில்களை தட்டச்சும் செய்யும் வேளை இன்னொருவரும் தட்டச்சு செய்தால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, கூகிள் ஷீற்றை பிரதிசெய்து உங்கள் கணக்கில் பதில்களைத் தெரிவு செய்து பின்னர் யாழில் பதியுங்கள்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 அதிகபட்ச புள்ளிகள் 208 முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். அணிகள்: ஆப்கானிஸ்தான் (AFG) அவுஸ்திரேலியா (AUS) பங்களாதேஷ் (BAN) கனடா (CAN) இங்கிலாந்து (ENG) இந்தியா (IND) அயர்லாந்து (IRL) நமீபியா (NAM) நேபாளம் (NEP) நெதர்லாந்து (NED) நியூஸிலாந்து (NZ) ஓமான் (OMA) பாகிஸ்தான் (PAK) பபுவா நியூகினி (PNG) ஸ்கொட்லாந்து (SCOT) தென்னாபிரிக்கா (SA) சிறிலங்கா (SL) உகண்டா (UGA) ஐக்கிய அமெரிக்கா (USA) மேற்கிந்தியத் தீவுகள் (WI) முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 29 ஜூன் அன்று இறுதிப் போட்டியில் பார்படோஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காதல் மலர்க் கூட்டம் ஒன்று கண்காட்சிக்கு வரும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ......! 😍 (ஒல்லாந்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியில் சில படங்கள்)1 point- தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
பனைமரத்த வெட்டினால் கோபம் வராது கண்டியளோ! ஏனெண்டால் அது ஒரு கற்பகதரு.தமிழனை மாதிரி வெட்ட வெட்ட தளைக்கும் கொள்கை கொண்டது.ஊரிலை பனங்கொட்டையை எங்கையெண்டாலும் தாட்டு பாருங்கோ தன்னிச்சையாய் வளரும்.தண்ணியும் ஊற்றி வளர்க்க தேவையில்லை. பராமரிக்கவும் தேவையில்லை. மரம் வளர்ந்தா பிறகு அதின்ர பலனை அனுபவிக்க மட்டும் அதுக்கு கிட்ட போனால் போதும். மற்ற மரங்கள் அப்பிடியில்லை. கண்ணும் கருத்துமாய் வளர்க்கணும்.1 point - படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
Important Information
By using this site, you agree to our Terms of Use.