Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்15Points3061Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20018Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46791Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்5Points31986Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/17/24 in all areas
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
4 pointsகசகிஸ்தான் போய் வந்த தன்னுடைய சமீபத்திய அனுபவம் ஒன்றை ஜெயமோகன் எழுதியுள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் பயணம், வசதிகள் என்று முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு போவதால் வரும் சிக்கல்களை நன்றாக எழுதியிருக்கின்றார். எந்த எந்த நாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையும் பயனுள்ளதே. ************************ கசகிஸ்தான், சென்றதும் மீண்டதும் -- ஜெயமோகன் -- May 16, 2024 -------------------------------------------------------------------------------------------------- நண்பர் கிருஷ்ணன் தான் கசகிஸ்தான் திட்டத்தைப் போட்டது. அவர் கருதியது ஒன்றே, விசா தொல்லைகள் இல்லை. டிக்கெட் கட்டணம் கம்மி. நேராகச் சென்றிறங்கி, சுற்றிப்பார்த்து திரும்பி விடலாம். நானும் அவருடைய பயணத்திட்டங்களில் இணைந்துகொள்வதையே இப்போதெல்லாம் செய்கிறேன். தனியாக திட்டமிடுவதில்லை. மண்டை வேறு வேறு விஷயங்களில் மாட்டிக்கிடக்கிறது. நாகர்கோயிலில் இருந்து ரயிலில் பெங்களூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்று, டெல்லியில் இருந்து கசகிஸ்தான் செல்லும்படி கிருஷ்ணன் திட்டமிட்டார். அனைவரும் ஒன்றாக திரண்டு செல்வதற்கு அது உகந்தது என்பது அவர் கணக்கு. நானும் யோசிக்கவில்லை. செல்வேந்திரன் “ஏன் சார் நான் மெட்ராஸிலே இருந்து பெங்களூர் வந்து டெல்லி போகணும்?” என்றபின்னர்தான் அந்த அபத்தம் உறைத்தது. ஒன்றும் செய்வதற்கில்லை, டிக்கெட் போட்டாகிவிட்டது. பெங்களூர் ரயில்நிலையம் விமானநிலையம் போல கட்டியிருக்கிறார்கள். ஆகவே அங்கே கட்டண ஓய்வறை இருக்கும், அங்கேயே குளித்து உடைமாற்றி விமானநிலையம் செல்லலாம் என நினைத்தேன். பல ஊர்களில் அப்படிச் செய்ததுண்டு. ஆனால் அங்கே இலவச காத்திருப்பு அறைதான் இருந்தது, கழிப்பறை நாறிக்கிடந்தது. வெளியே வந்து ஓர் ஆட்டோ பிடித்து ஒரு விடுதியை கண்டுபிடிக்கலாம் என முயன்றேன். ஆயிரம் ரூபாய் கேட்டார்கள், மூன்று மணிநேரத்துக்கு. ஆட்டோ டிரைவர் “நான் கொண்டுட்டு போறேன் சார், நல்ல நல்ல ஓட்டல்லாம் இருக்கு” என அழைத்துச் சென்றார். முக்கால் மணிநேரம் அவரே சுற்றித்தேடியும் அப்பகுதியில் ஓட்டல்களே இல்லை. இருந்த இன்னொரு ஓட்டலிலும் அதே ஆயிரம் ரூபாய். ஆட்டோவுக்கு கூடுதலாக முந்நூறு ஆயிற்று. அப்போதே ‘புறப்பட்ட ராசி’ சரியில்லை என தோன்றியது. டெல்லியில் இருந்து பின்னிரவில் விமானம் ஏறி மறுநாள் காலை நான்கரை மணிக்கு கசகிஸ்தான் சென்றோம். விசா இல்லை என்பதனால் நேராக எமிக்ரேஷனில் சென்று நின்றோம். மற்றவர்கள் கடந்துவிட்டனர். என் பாஸ்போர்ட்டை அதிகாரி உற்று உற்று பார்த்தார். எழுந்து சென்றுவிட்டார். நான் நின்றுகொண்டே இருந்தேன். முக்கால் மணிநேரம். நடுவே ஒரு போலீஸ்காரர் வந்து என்னிடம் மீண்டும் ‘வரிசையில் சென்று நில், அங்கே நிற்கக்கூடாது’ என்று சைகையால் அதட்டினார். நான் “என் பாஸ்போர்ட், என் பாஸ்போர்ட்” என்று கூச்சலிட்டேன். அவருக்கு கஸாக் மொழி தவிர எந்த மொழியும் தெரியாது. அந்த அதிகாரி திரும்பி வரும் வரை வெவ்வேறு ஆட்களிடம் “என்ன பிரச்சினை” என மன்றாடினோம். எல்லாருமே சைகைதான். ஓர் உயரதிகாரி அம்மாள் வந்தார். உதிரி ஆங்கிலம் தெரிந்தவர். என் பாஸ்போர்ட்டில் பக்க எண்கள் மாறியுள்ளன என்றும், ஆகவே நான் கசகிஸ்தானுக்குள் செல்ல முடியாது என்றும் சொன்னார். நான் அந்த பாஸ்போர்ட்டுடன் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா எல்லாம் சென்றிருக்கிறேன். எல்லா விசாக்களும் அதில் உள்ளன. அது ஓர் அச்சுப்பிழை. ஆனால் அதைச் சொன்னால் அந்த அம்மையாருக்கு அதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவில்லை. திரும்ப திரும்ப “நோ ரூல். யூ காண்ட் கோ” அவ்வளவுதான். “சரி, நான் திரும்பிச் செல்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்… உங்கள் பயணம் தடைபட வேண்டாம்” என்று நான் நண்பர்களிடம் சொன்னேன். அரங்கசாமி “இல்லை சார், அதெப்படி…” என்றார். “நீங்கள் சென்றால்தான் எனக்கு தேவையென்றால் உதவமுடியும். மேலும் பெரும்பணம் செலவழித்து நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் நாம் பணத்தை இழக்கும்படிச் சொல்ல முடியாது” என்றேன். ஒருவழியாக பயணத்தைத் தொடர அரங்கசாமி சம்மதித்த பிறகுதான் மற்ற நண்பர்களின் முகமே தெளிவடைந்தது. அவர்கள் சென்றபின் என்னை ஒரு நாற்காலியில் அமரச்செய்தனர். காலை ஐந்தரை மணிக்கு அமர்ந்தேன். காலை ஒன்பது வரை அங்கேயே இருந்தேன். நாற்காலியில் இருந்து எழுந்தால் ஒரு போலீஸ்காரர் கையால் உட்கார் உட்கார் என ஆணையிட்டார். மீண்டும் அமர்ந்தேன். தாகம், பசி. ஆனால் சிறுநீர் கழிக்கக்கூட அனுமதியில்லை. விமானநிலையமே காலியாகியது. அலமாட்டி கசகிஸ்தானின் இரண்டாம் தலைநகரம். ஆனால் தூத்துக்குடி அளவுதான் இருக்கும் அந்த விமானநிலையம். எந்த அதிகாரியும் இல்லை. போலீஸ்காரர்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் ஒவ்வொருவரிடமாக ஆங்கிலத்தில் “என்ன நடக்கிறது? ஏன் என்னை அமரச்செய்திருக்கிறீர்கள்?” என மன்றாடினேன். அதே சைகை, கைகளால் அதட்டல். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஒரு போலீஸ்காரரிடம் உரக்க “சிறுநீர் கழிக்கவேண்டும்” என்றேன். பாண்டின் ஸிப்பை அவிழ்த்தால்தான் நான் சொன்னது அவருக்கு புரிந்தது. அவர் அழைத்துச்செல்ல, துப்பாக்கி முனையில் சிறுநீர் கழித்தேன். கழிப்பறையில் தண்ணீர் இல்லை, காகிதமும் இல்லை. மீண்டும் சில விமானங்கள் வந்தன. பழைய அதிகாரிகள் அனைவரும் சென்று புதியவர்கள் வந்தனர். எவருக்கும் எதுவும் தெரியவில்லை. என் செல்பேசியில் இணைய இணைப்பு இல்லை. அங்கே இலவச இணைய இணைப்புக்கு வழியில்லை. ஐரோப்பா முழுக்க ஆங்காங்கே கிடைக்கும் இலவச இணையத்தை வைத்தே சமாளித்த நினைவில் நான் ‘இண்டர்நேஷனல் ரோமிங்’ போடவுமில்லை. அங்கே வைத்து அரங்கசாமி போட்ட நெட்பேக் ஐந்து நிமிடம் கழித்து வேலை செய்யவில்லை. ஒரு வழியாக இணைய இணைப்பு வந்தது. ஆனால் ஐந்து நிமிடம் இணையம் வேலைசெய்தால் இந்திய ரூபாயில் முந்நூறு ரூபாய் காலியாகிவிடும். ஒரே ஒரு ஃபோன் பேசினால் ஆயிரம் ரூபாய் கரைந்துவிடும். ஒரே நாளில் மூவாயிரம் ரூபாய்க்கு செல்போன் பயன்படித்து சாதனை புரிந்தேன். ஆனாலும் என் பிரச்சினையை ஆங்கிலத்தில் எழுதி கூகுள் வழியாக கசாக் மொழிக்கு மொழியாக்கம் செய்து அதை அவர்களிடம் காட்டினேன். அப்போதுதான் ஒன்று தெரிந்தது, காவலர்களில் பாதிப்பேருக்கு கஸாக் மொழியும் வாசிக்க தெரியாது. போலீஸ்காரர் இன்னொருவரிடம் காட்டி படிக்கச் சொல்லி தெரிந்துகொண்டார். அங்கே பலருக்கு எந்த மொழியுமே எழுதப்படிக்கத் தெரியாது. முழுக்க முழுக்க கல்வியறிவில்லாதவர்கள்! கடைசியாக வந்த அதிகாரியிடம் என் மொழியாக்கத்தைக் காட்டினேன். அவருக்கு அப்போதுதான் தோராயமாக விஷயம் புரிந்தது. அவருடைய காபினில் என் பாஸ்போர்ட் இருந்தது, என்ன தகவல் என்று ஏதும் அவருக்கு தெரியவில்லை. அவர் உடனே என்னை ஓர் அறைக்கு கொண்டுசென்றார். விமானநிலைய ‘லாக்கப்’ அது. உடைசல்கள், சிக்கு பிடித்த மெத்தை போட்ட இரு கட்டில்கள். ஒரு நாற்காலி. சன்னல்கள் இல்லை. புழுதிவாடை. உள்ளே ஏற்கனவே இருவர் இருந்தனர். இருவருமே போலி பாஸ்போர்ட் பயணிகள். கஸகிஸ்தானின் பிரச்சினையே அதுதான். சுற்றிலுமுள்ள தாஜிஸ்தான், அசர்பைஜான், துர்க்மேனிஸ்தான் உட்பட பல்வேறு அரைப்பட்டினி நாடுகளில் இருந்து கசகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபடியே இருக்கிறார்கள். அந்த வழியாக ஐரோப்பாவுக்குள் செல்ல ஏதோ மார்க்கம் இருக்கிறது. வியட்நாம் பையன் இயல்பாக ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தான். அந்த ரேடியோ அவனை இடைவிடாமல் அதட்டுவதுபோல் இருந்தது. இன்னொரு ஆள் அவனுடைய ‘ரக்ஸாக்’கில் இருந்து ஏகப்பட்ட பொருட்களை வெளியே எடுத்து வைத்து மீண்டும் உள்ளே வைத்து மீண்டும் வெளியே எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தான். காலை பத்துமணி கடந்துவிட்டது. எனக்கு வேகவைத்த உருளைக்கிழங்கு, இரண்டு துண்டு ரொட்டி, ஒரு கோப்பை பழச்சாறு தந்தார்கள். நண்பர்கள் இந்தியாவுக்கு கூப்பிட்டுச் சொல்ல, உயர் அதிகாரம் கொண்ட என் நண்பர்கள் இந்திய தூதரகத்தை அழைத்துப்பேச, என்னிடம் தூதரக அதிகாரி பேசினார். அவர்களுக்கே மொழிச்சிக்கல். கஸாக் மொழிதான் அங்கே பேசவேண்டும், ஆனால் தூதரகத்தில் அம்மொழி தெரிந்தவர்கள் சிலர்தான். பேசிய வரையில் அவர்களுக்கு என் பாஸ்போர்ட் பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது என தெரிந்தது. அதில் அமெரிக்க விஸா இருந்ததனால் அந்த ஐயம் பெருகியிருந்தது. அவர்களின் நடைமுறை என்பது இதுதான். அந்த பாஸ்போர்ட்டை அவர்கள் பறிமுதல் செய்துவிடுவார்கள். அதிலுள்ள செய்திகளை நம் தூதரகத்துக்கு தெரிவிப்பார்கள். நம் தூதரகம் அதை இந்தியாவிற்கு அனுப்பி, சோதித்து, நான் இந்தியக் குடிமகனே என உறுதிசெய்து அதிகாரபூர்வமான கடிதம் ஒன்றை அவர்களுக்கு அளிக்கவேண்டும். என்னை அதன்பின் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைப்பார்கள். இந்தியத் தூதரகம் என்னை தனி ஆணைப்படி இந்தியாவுக்கு அனுப்பவேண்டும். அதுவரை நாலைந்துநாள் என்னை சிறையில் வைத்திருப்பார்கள். என் பாஸ்போர்ட் திரும்பக் கிடைக்காது. என் பாஸ்போர்ட்டில் பல விசாக்கள் இருந்தன. அதை நான் இழக்க முடியாது. அதிகாரி அதை அவர்களிடம் பேசினார். “அப்படியென்றால் அந்த பாஸ்போர்ட்டில் ‘டீபோர்ட்டட்’ என முத்திரை குத்தித்தான் தருவோம்” என்றனர். அப்படி முத்திரை குத்தினால் உலகில் பெரும்பாலான நாடுகளில் அதன்பின் நுழைய முடியாது. விசா எடுக்கும்போதெல்லாம் பிரச்சினை. அது முடியாது என்று தூதரக அதிகாரி அவர்களிடம் பேசினார். பிற்பகல் முழுக்க அந்தப் பேச்சுதான் போய்க்கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என எவரிடமும் கேட்க முடியாது, ஒரே ஒருவருக்கு மட்டும்தான் ஆங்கிலம் தெரியும். அவருக்கும் எந்த விஷயமும் தெரியாது. அந்த சின்னஞ்சிறு அறையில் வியட்நாம் மொழியின் அதட்டல் ஒலித்துக்கொண்டே இருந்தது. பிறகு இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றனர். இன்னொருவன் வந்து சேர்ந்தான். செய்யவேண்டியதைச் செய்தாகிவிட்டது, இனி யோசிக்கவேண்டாம் என முடிவு செய்தேன். மடிகணினியை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தேன். தமிழில் வேண்டாம், ஆங்கிலத்தில் எழுதலாமென முடிவு செய்தேன். நீண்டநாட்களாகிறது, ஆங்கிலத்தில் எழுதி. மண்டை முழுக்க தமிழ். தாய்மொழி மலையாளமே கூட தடுமாற்றம்தான். இருந்தாலும் எழுதினேன். நான்கு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி முடித்தேன். எல்லாமே அத்வைத வேதாந்தம் பற்றி. அவற்றை திரும்பத் திரும்ப செப்பனிட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவது காமிராவில் இரண்டு லென்ஸ்களை அணுக்கி, விலக்கி ‘போகஸ்’ செய்வது போலிருந்தது என் மனதையும் மொழியையும் இசைவடையச் செய்வது. ஆனால் அதன்பின் கட்டுரையை வாசித்தபோது பரவாயில்லை என தோன்றியது. ஆங்கிலத்துக்குரிய நடையழகு இல்லை, அது எளிதில் வரவும் வராது. ஆனால் எனக்குரிய மொழி ஒன்று இருந்தது. எந்த மொழியானாலும் ஒரு மனிதனின் மனம் தான் மொழிநடை என்பது. Style is the man. மாலை நான்கு மணிக்கு நான் டெல்லி திரும்ப ஒத்துக்கொண்டார்கள். என் பாஸ்போர்ட்டும் என்னிடம் ஒப்படைக்கப்படும் என்றார்கள். அதன்பின் அரங்கசாமி என்னிடம் அளித்திருந்த கடன் அட்டையால் டிக்கெட் போட்டேன். டிக்கெட் போட்டதும் ஒரு நிம்மதி, சரி கிளம்பவிருக்கிறோம். ஆனால் அதற்குள் தூதர அதிகாரி அழைத்தார். “பாஸ்போர்ட்டில் அமெரிக்க விஸா இருப்பதனால் யோசிக்கிறார்கள்” என்றார். விமானம் இரவு எட்டரைக்கு. ஏழரை மணி வரை எந்த தகவலும் இல்லை. ஏனென்றால் இன்னொரு அதிகாரி வந்துவிட்டார். அவருக்கு ஒன்றும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. மீண்டும் பழைய நிகழ்வுகள். எட்டு மணிக்கு என்னை ஒரு காவலருடன் விமானத்திற்கு அனுப்பினார்கள். காவலர் என்னை ஒரு கேட் முன் அமரச் செய்துவிட்டு டிவி பார்க்கலானார். நான் பார்த்தபோது என் விமானம் கிளம்பும் கேட் வேறு ஒன்று. காவலரிடம் என் கேட் வேறு என எழுதி கஸாக் மொழியில் மொழியாக்கம் செய்து காட்டினேன். அவருக்குப் படிக்க தெரியவில்லை. இன்னொருவரிடம் காட்டி படிக்கச் சொல்லி புரிய வைத்தேன். சுருக்கமாக “அங்கே உட்கார்” என்றபின் டிவியில் மூழ்கினார். நான் மெல்ல பின்னகர்ந்து அப்படியே கூட்டத்தில் கரைந்து வந்து இண்டிகோ விமானத்தில் ஏறிவிட்டேன். போலீஸ்காரர் என்னானார் என தெரியாது. விமானம் மேலேறும் வரை பதற்றம். டெல்லி விமானநிலையம் வந்தேன். அப்படியே டார்ஜிலிங் சென்று சிலநாட்கள் இருந்துவிட்டு வரலாமென அரங்கா சொன்னதனால் டிக்கெட் போட்டிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு விமானம். இங்கே வந்து பார்த்தால் என் செல்பேசியில் சார்ஜ் இல்லை. சார்ஜ் போடுவதற்கான கேபிள் அரங்காவிடம் சென்றுவிட்டது. அரங்கா என்னிடம் ஒரு பேக்கப் பேட்டரி தந்திருந்தார். அந்த பேக்கப் பேட்டரியும் காலி. என் டிக்கெட் செல்போனில் இருந்தது. மீண்டும் பதற்றம், பிறகு ஒன்றை கண்டுபிடித்தேன். என் லேப்டாப் கேபிளால் பேக்கப் பேட்டரியை சார்ஜ் போட்டு அதனுடன் செல்போனை இணைத்து ஒருவழியாக சார்ஜ் செய்தேன். கண்கள் சொக்க டார்ஜிலிங் விமானத்தை பிடித்தேன். பாக்தோரா சென்றிறங்கியபோது மீண்டுவிட்டிருந்தேன். கசகிஸ்தான் முன்னாள் ருஷ்ய நாடுகளில் எண்ணை வளம் மிக்கது. ஆகவே பணபலம் உடையது. ஆனால் ஜனநாயகம் இல்லை. 16 டிசம்பர் 1991 ல் கசகிஸ்தான் சுதந்திரம் பெற்றது சோவியத் ருஷ்யாவின் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த நுருசுல்தான் நாசர்பயயேவ் அதன் சர்வாதிகாரியானார். அவருடைய குடும்பம்தான் மொத்த நாட்டையும் ஆட்சி செய்தது. எண்ணை நிறுவனங்களின் ஆதரவுடன் அவர் 2019 வரை ஆட்சி செய்தார். தன் பெயரையே தலைநகருக்கு போட்டார். காசிம் ஜோமார்ட் டோகயேவ் (Kassym-Jomart Tokayev) இப்போதைய அதிபர். இப்போதும் அதே சர்வாதிகாரம்தான், பழைய சர்வாதிகாரி குடும்பத்தின் உள்ளடி எதிர்ப்புகளும் உண்டு. நான் டார்ஜிலிங்கில் ஸ்டெர்லிங் விடுதியில் தங்கியிருந்தேன். காஃபி கிளப்பில் ஒரு முன்னாள் வெளியுறவு அதிகாரியுடன் பேச நேர்ந்தது, அவர் ராணுவ மேஜராகவும் இருந்தவர். அவர் நான் சொன்ன கதையை கேட்டுவிட்டு வெடித்துச் சிரித்தார். “உங்களுக்கு வலுவான அரசியல் தொடர்புகள் இருந்தது அதிருஷ்டம். நல்லவேளை உங்களுடன் பெண்கள் இல்லை. உங்கள் மனைவியின் பாஸ்போர்ட் இப்படி இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நமது பெண்கள் அந்த ஊர் சிறையில் நான்கு நாட்கள் இருந்தார்களென்றால் அதன்பின் அவர்கள் உளரீதியாக மீண்டெழுவது கடினம்!” அவர் சொன்னார்; பயணச்செலவு குறைவு, விசா இல்லை, பலர் செல்கிறார்கள் என்பதெல்லாம் சுற்றுலா செல்வதற்கு ஓர் இடத்தை தேர்வுசெய்ய காரணங்கள் அல்ல. சொல்லப்போனால் இதெல்லாம் அவர்கள் நம்மை கவர்வதற்காக வைக்கும் பொறிகள் என்றே சொல்லவேண்டும். நாம் பார்க்கவேண்டியது மூன்றே விஷயங்கள்தான். ஒன்று, அந்த நாடு இந்தியாவுடன் இயல்பான நல்லுறவுடன் இருக்கிறதா என்பது. சிறிய அளவில் தூதரகப்பூசல்கள் இருந்தால்கூட தவிர்த்துவிடவேண்டும். ஏனென்றால் சிறிய அளவில் வெளியே தெரிகிறது என்றால் பெரிய அளவில் உள்ளே சிக்கல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று பொருள். இரண்டு, அந்த ஊரில் ஜனநாயகம் உள்ளதா என்பது முக்கியம். நாம் ஜனநாயகத்தை மட்டுமே பார்த்தவர்கள். ஆகவே நமக்கு ஒரு துணிச்சலும், அரசு, சட்டம், மனித உரிமை, சட்டபூர்வ உரிமை எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையும் உண்டு. நாம் எங்கும் சட்டம் பேசுவோம். ஆனால் ஜனநாயகம் இல்லாவிட்டால் எந்த அதிகாரிக்கும் உண்மையான அதிகாரம் இல்லை என்பதே பொருள். எவரும் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். ஒத்திப்போடுவார்கள், தவிர்ப்பார்கள், இன்னொருவரிடம் தள்ளிவிடுவார்கள். ஏனென்றால் எவருடைய அதிகாரமும் வரையறை செய்யப்பட்டிருக்காது. முடிவெடுத்தவர் சிக்கிக்கொண்டால் வாழ்க்கை அழிந்துவிடும். நீதிமன்றம், காவல்துறை, ராணுவம் எல்லாமே டம்மிதான். சர்வாதிகாரியின் உள்வட்டம் மட்டும்தான் முடிவு எடுக்க முடியும். மிகச்சிறிய முடிவுகளைக்கூட அவர்களே எடுக்க முடியும். ஒரு ஜனநாயக நாட்டில் ஓர் அதிகாரி சட்டப்படி தன் வேலையைச் செய்யலாம், முடிவெடுக்கலாம், தப்பாகப் போனாலும் எவரும் எதுவும் செய்யமுடியாது, நீதிமன்றம் இருக்கிறது, தொழிற்சங்கங்கள் இருக்கின்றன, ஊடகங்கள் இருக்கின்றன. பார்க்கலாம் என்னும் தைரியம் இருக்கும். சர்வாதிகார நாடுகளில் சட்டம் எல்லாம் ஒரு கண் துடைப்பே. முறையான விசாரணை எல்லாம் இருக்காது. சிறை சென்றால் சென்றதுதான். வெளியே வர எந்த காரணமும் உதவாது. அங்கே தூதரகச் செல்வாக்கு மட்டுமே நம்மை மீட்கும். அதுவும் இல்லையேல் மூக்குப்பொடி டப்பாவை கீழே போட்ட குற்றத்துக்கு மரணதண்டனைகூட கிடைக்கக்கூடும். பல இஸ்லாமியச் சர்வாதிகார நாடுகளிலுள்ள ‘மதஅவமதிப்பு’ சட்டங்கள் கொடூரமானவை. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமியர் அல்லாத ஒருவர்மேல் குற்றம் சாட்டினாலே போதும், நேரடியாகச் சிறைதான். மூன்று, குறைந்த அளவிலேனும் ஆங்கிலம் பேசத்தெரிந்த நாடுகளுக்கே பயணம் செய்யவேண்டும். இல்லையேல் சிக்கல்கள் வரும்போது திகைத்து விடுவோம். அவர் இரண்டு வாரம் முன்புதான் இதே போல மாலத்தீவில் இருந்து ஒரு குடும்பத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையே மீட்டார் என்றார். அங்கே ஒரு விடுதியில் பரிமாறுதல் தாமதமாகியது, வெள்ளைக்காரர்களை மட்டும் கவனிக்கிறார்கள் என்று குடும்பத்தலைவர் ஏதோ கத்திவிட்டார். மதநிந்தனை செய்ததாக இரு ஊழியர்கள் புகார் செய்ய மொத்தக் குடும்பத்தையும் அப்படியே தூக்கி உட்கார வைத்துவிட்டனர். எந்த தண்டனை வேண்டுமென்றாலும் கிடைக்கலாம். மீண்டும் வெளிச்சத்தையே பார்க்கமுடியாமலாகலாம். இவர் தன் முழுத்தொடர்புகளையும் பயன்படுத்தி கடுமையாக போராடி, பேரம் பேசி, பெரும் பணம் செலவிட்டு அவர்களை மீட்டார். இவர் அவர்களிடம் கேட்டார். “மாலத்தீவுதான் நம்மிடம் நல்லுறவுடன் இல்லையே. அங்கே இன்றைய அதிபரின் பிரச்சாரத்தால் கடும் மதவெறி தலைதூக்கியிருக்கிறது. ஒருவகையான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் இந்தியாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர். அங்குள்ள சாமானியர்கள் கூட இந்தியர்களை வெறுக்கின்றனர். எதை நம்பி அங்கே சென்றீர்கள்?” அவர்கள் வங்காளிகள், கல்லூரி ஆசிரியர்கள். குடும்பத்தலைவர் சொன்னார். “மாலத்தீவு அமைச்சர் சுற்றுலாப்பயணிகளை வரும்படி மன்றாடிய செய்தியை கண்டோம். எங்களுக்கு மோடியையும் பிடிக்காது. மனிதாபிமானக் கொள்கை அடிப்படையில் சென்றோம்” இவர் அதை நம்பவில்லை. சிரித்தபடி மேலும் விசாரித்தார். உண்மை வெளிவந்தது. அண்மையில் இந்தியச் சுற்றுலாப்பயணிகள் மாலத்தீவு செல்லாமாலானபோது அவர்கள் கடுமையான கட்டணத் தள்ளுபடிகள் அறிவித்திருக்கிறார்கள். செலவு குறைவாக ஆடம்பரச் சுற்றுலா என நினைத்து இவர்கள் கிளம்பியிருக்கிறார்கள். “ஒரு நாடு மிகையான சுற்றுலா தள்ளுபடிகள் அறிவிக்கிறதென்றாலே ஐயப்படவேண்டும்” என்றார். நான் பெருமூச்சு விட்டேன். https://www.jeyamohan.in/200863/4 points
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
4 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - ஐந்து -------------------------------------------------------------------- நோர்தேர்ண் மற்றும் பொதுவாக தனியார் மருத்துவமனைகள் பற்றி உறவினரான ஒரு மருத்துர் சொன்ன விடயங்கள் சற்று வித்தியாசமானவையாக இருந்தன. அரச மருத்துவமனைகளில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி அரச மருத்துவமனைகளின் தொழிற்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன என்றார். இரு நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இருக்கும் போது, நோயாளிகளின் வயது, குடும்ப நிலைமைகள், பொருளாதார நிலைமைகள் போன்றன ஒப்பிடப்பட்டு, அந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர். மற்றைய நோயாளியின் நிதி வசதிகளைப் பொறுத்து அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார், இதுவே பொதுவான நடைமுறை என்றார். முறைகேடுகள் நடந்ததாக தனியார் மருத்துமனைகள் மீது வழக்குத் தொடர முடியாதா என்று கேட்டேன். யாழில் அப்படியான ஒரு வழக்கு நடந்ததாகச் சொன்னார். வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் போதிய freezer வசதியின்மையால், இறந்த உடலை வழக்கு முடியும் வரை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடி உண்டாகியதாம். இது போன்ற காரணங்களால், வழக்குகள் என்று பொதுவாக எவரும் போவதில்லை என்றார். மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களையோ அல்லது பொறுப்பானவரையோ பார்த்துப் பேசுவதில்லை என்று சொல்கின்றார்களே என்றேன். மருத்துவர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் யாராவது பொறுப்பானவர்கள் இருந்தால், அந்த மருத்துவர்கள் பொறுப்பானவர்களுடன் நோயாளிகளின் நிலைமை பற்றி கதைப்பது வழக்கமே என்றார். ஆனாலும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் ஓரிருவரை தவிர்த்து இருக்கக் கூடும் என்றார். சில உறவினர்களோ அல்லது பொறுப்பானவர்களோ நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், எப்போதும் ஒரு விதமான வில்லங்க மனநிலையிலேயே இருந்தால், சில மருத்துவர்கள் அவர்களை சந்திப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்திருக்கலாம் என்றார். இந்த விளக்கங்களின் பின், அடுத்த நாள் சிலர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார்கள் என்றும், ஆனால் நேற்று அவசரமாக நோர்தேர்ண் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்து விட்டது என்றனர். எங்கே போனாலும் இந்த ஆஸ்பத்திரி என்னைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது என்று நினைத்தேன். அவர்களும் விடுமுறைக்காக வந்திருந்தவர்களே. கடலில் குளித்திருக்கின்றனர். அதில் ஒருவருக்கு காதுக்குள் கடல் நீர் போய் விட்டதாம். அது அன்றே குத்தாகி, அவசரமாக அந்த ஆஸ்பத்திரிக்கு நேரே போயிருக்கின்றனர். கடல் நீர் காதுக்குள் போய் குத்தியது என்பதை நம்ப முடியவில்லை. அங்கு வாழ்ந்த காலத்தில் அந்தக் கடலின் முழு நீரும் எங்களின் ஒரு காதுக்குள்ளால் போய், இன்னொரு காதுக்குள்ளால் வெளியே வந்திருக்கின்றது. சில காலங்களில் கடலில் விழாத நாட்களே கிடையாது. சில மைல்கள் என்று தினமும் அலையிலும் நீந்தியிருக்கின்றோம். குளித்து முடித்த பின், மெதுவாக தலையை ஒரு பக்கம் சரித்து, சில தட்டுகள் தலையில் தட்ட காது தெளிவாகி விடும். இப்ப ஆஸ்பத்திரிக்கு போகும் அளவிற்கு எங்களின் நிலைமை வந்து விட்டது. சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அங்கு இருக்கும் வரையும் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போகும் தேவை வராமல் இருந்தால், அதுவே போதும் என்றது மனது. ஒவ்வொரு ஊருக்கும் பல இணையப் பக்கங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இந்த இணையப் பக்கங்கள் பல ஊர் நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும் நேரடியாகவே ஒளிபரப்புகின்றன. ஒரு நாள் திருவிழாவில் எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தேன். முன்னால் வீடியோக்கள், கமராக்கள் என்று சிலர் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. தொழில்நுட்பத்தில் ஒரு உச்சியைத் தொட்டு இருக்கின்றார்கள். ஒரு சிறுவன், பத்து பன்னிரண்டு வயதுகள் இருக்கும், நேராக வந்து 'நீங்கள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். என்னிடம் ஃபோன் கூட கையில் இல்லை, அதையும் வீட்டை வைத்து விட்டே போயிருந்தேன். எல்லோருக்கும் பின்னால் நிற்கிறியளே, அது தான் கேட்டேன் என்றார் அந்தச் சிறுவன். பறந்து கொண்டிருக்கும் ட்ரோனில் ஒன்று என்னுடையதாக இருக்கும் என்று நினைத்து இருக்கின்றார். தன்னயும் எடுத்து, சேனலில் காட்டும் படி கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் ஒரு விளம்பரம் என்பது சரியான அவசியம் போல. சுன்னாகத்தில் ஒரு துணிக்கடை. அங்கு தான் தெரிவுகளும் அதிகம், விலையும் கொள்ளை மலிவு, கட்டாயம் போக வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் மனைவி. சுன்னாகத்தில் முற்காலத்தில் ஒரு சந்தை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கு கூட அன்று என்றும் போனதில்லை. சுதுமலையில் தலைவர் உரையாற்றியிருந்த போது, வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அந்தப் பக்கம் போயிருக்கின்றேன். சுன்னாகத்திற்கு எங்கள் ஊரிலிருந்து நேரடியாகப் போவதற்கு பஸ் சேவை ஒன்றும் இருந்ததும் இல்லை. இப்பவும் இல்லை. அது சரி, இந்த சுன்னாகம் கடை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் என்றேன். 'யூ டியூப் சேனல்' என்ற பதில் வந்தது! அந்தக் கடைக்கரார்களோ அல்லது யாரோ அவர்களின் சேனலில் இந்தக் கடையைக் காட்டி நன்றாகச் சொல்லியிருக்கின்றனர். சரி, ஒரு தடவை போய்த் தான் பார்ப்போமே என்று ஒரு வாகனத்தை அமத்திக் கொண்டு கிளம்பினோம். அந்த வாகன ஓட்டுநர் அப்படி ஒரு கடையையே கேள்விப்பட்டதில்லை. பின்னர் அவருக்கு அந்த யூ டியூப் சேனல் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை, அங்கே சுன்னாகம் டவுனுக்குள் போய், இந்தக் கடையை கண்டு பிடித்து விடலாம் என்றார் ஓட்டுநர். போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்........... (தொடரும்.............)4 points
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
3 pointsஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில் வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.3 points
-
"வன்முறைகளில் வனிதையர்"
2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதிகமாக படிச்ச படிச்சு மூளை கலங்கி போச்சு அணுக் குண்டைத்தான் போட்டு கிட்டு அழிஞ்சு போக போகுது ... என்று எப்பவோ பாட்டிலை சொல்லி வைச்சாங்கள் .2 points
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
நான் சவுக்கு சங்கருக்கு வக்காலத்து வாங்கவில்லை. மாறாக சவுக்கு சங்கர் மீது குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளின் ஜோக்கியதை பற்றி கொஞ்சம்.....🤣2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகில் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும்... எல்லாம் தெரிந்தவர்களும் பெருக பெருக... போர்களும் மனித அழிவுகளும் பெருகி விட்டன. இதைத்தான் அன்றே சொன்னார்கள் அறப்படித்தவன் கூழ் பானைக்குள் விழுவான் என 😎😎😎2 points
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை] ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்தது. ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது. எனவே, திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல்போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார். முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி "கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார். விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து "ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற்போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப்பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார். "இப்போது ... நம் காலத்தில் … இலங்கைத் தீவுநாட்டில் “என் கணவர் எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில் என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே" தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது. "வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே" என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி "காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல் – ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள். ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார். "போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார். அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார். அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது. "2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை, வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன் ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள் ” என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள். "நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அதை விட்டு நட்டஈடு அல்ல" அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது. இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது. போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது. "விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?" காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது. ‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது" என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
புதின் - ஜின்பிங் சந்திப்பு - யுக்ரேன் போர் பற்றிய நிலைப்பாடுகள் மாறுமா?
(நாசி) உக்ரேன் அழிய வேண்டும் என்பதுதான் மேற்கின் உண்மையான நோக்கமோ என்று எனக்குச் சந்தேகம். 🤨1 point
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
என் இரண்டு காதுகளிலும் ஓட்டைகள் இருக்கின்றன. ஏதாவது பிரச்சினை வருமோ?1 point
-
"வன்முறைகளில் வனிதையர்"
1 point"வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக் குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்வுகள் எமக்கு எடுத்து காட்டுவது, வன்முறைக்கு உள்ளாகும் வனிதையர்கள், அங்கு பெண் உத்தியோகத்தர் இருந்தால் தங்கள் முறைப்பாடுகளை எந்த தயக்கமும் இன்றி முழுமையாக வெளிப்படுத்தி, அதை கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்க, காவல் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்பது ஆகும். அது மட்டும் அல்ல, காவல் துறை அமைப்பில் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதைவிட, உயரடுக்கு மக்களுக்கே இன்னும் கூடுதலான கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் ஆகும். உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு எடுத்து காட்டு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஆண், பெண் இருபாலரும் சமமாக குடும்பத்தில் நடத்தப் படாமையும் இப்படியான வன்முறைக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறலாம். உதாரணமாக, எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டாலும், அங்கு கூர்ந்து கவனித்தால், இவைகளுக்கு மாறான பல உண்மைகள் தெரியவரும். சமுதாய அமைப்பிலும் அதன் தாக்கம் வெளிப்படையாகும். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " என்று அகநானூறு 12 கூறினாலும், இன்று அந்த நிலை காண்பது அரிது. தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகி விட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பின் சமயங்கள் தலை தூக்க, வஞ்சகமாக புராணங்களை மற்றும் சில கட்டுப்பாடுகளை, கோட்ப்பாடுகளை புகுத்தியது பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக முதலில் அமைந்தது எனலாம்? உதாரணமாக, விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம் [ஜலந்தர்-பிருந்தா [துளசி] கதை]. இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக இன்றைய நவீன காலத்தில் கூட, 'உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம்' என்னும் சபரிமலை பக்தர்களை இன்னும் காண்கிறோம்? இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்? வன்முறைகளில் வனிதையர்கள் அவதிப்படுவதற்கு காரணம் அவர்களே என்று கூறும் பல ஆண்களை இன்று காண்கிறோம். அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் பெண்களும் உள்ளனர். உதாரணமாக பெண்கள் ஆர்வத்தைத்துாண்டுகிற உடை உடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச் சாட்டு? நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில், தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால் குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள் விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன் ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதாலோ. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்க்கை சிறக்க உதவும் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்1 point
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
யோவ்! அப்ப எனக்கு 16 அல்லது 17 வயதுதான் இருக்கும்!😉 மேலாடை இல்லாமல் ஊரில் உலாத்துவதில் எனக்கு பிரச்சினை எதுவும் இருந்ததில்லை! 😎 மேலாடை இல்லாமல் நல்லூர் கந்தனுக்குள் போன மகிந்த ராஜபக்ஷவின் நிலையை யோசித்துப் பார்த்தேன்😜 ஆளரவம் இல்லாத நேரத்தில் சிவனும் அம்மனும்தான் பார்த்திருப்பினம்😬1 point
-
Head Injury - தலைக்காயம் - பொது மக்களுக்கான ஒரு முக்கியமான மற்றும் அவசியமான விழிப்புணர்வு.
1 point
- சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
1 pointஆறு மாதங்கள் என்பது தான் பொதுவான நடைமுறை என்று நினைக்கின்றேன். சில வருடங்களின் முன், சிட்னியிலிருந்து இலங்கை போக இருந்த ஒரு உறவினரை பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களை விட குறைவாக இருக்கின்றது என்று பயணிக்க அனுமதிக்கவில்லை. சிங்கப்பூர் விமான நிறுவனம் என்று ஞாபகம்.1 point- சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
1 pointஇது எந்த நாட்டுக்குப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் பொதுவாக முன்னரே விசா குத்த வேண்டிய சந்தப்பங்களில் அடுத்த 6 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். சில நாடுகள், நேரடியாக தங்கள் குடிவரவுத் தளத்திலேயே கால எல்லையைத் தெரிவித்திருப்பார்கள்.1 point- "வன்முறைகளில் வனிதையர்"
1 point'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின் கதியினை நகுவன, அவர் நடை; கமலப் பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ் மதியினை நகுவன, வனிதையர் வதனம்.' [கம்ப இராமாயணம்] அவர்களின் விழிகள் விதியை பார்த்து சிரிக்கும். அந்த பெண்களின் நடை பெண் யானையின் நடையை பார்த்து சிரிக்கும்.அந்த பெண்களின் மார்புகள் தாமரை மொக்குகளை பார்த்து சிரிக்கும்.வானில் உள்ள நிலவை பழிக்கும் அவர்கள் முகம். நாட்டின் சிறப்பை, வளத்தை சொல்ல வந்த கம்பன் அந்த ஊரில் பெண்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா ? என்றும் சொல்லிவைத்தார் [வனிதை - பெண்] நன்றி1 point- கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
மிகவும் தரம் குறைந்த ஒரு ஆய்வு இது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப் பட்ட இந்த BBV152 கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டோர் 1000 பேரை ஒரு வருடம் அவதானித்து சில நோய், ஆரோக்கிய நிலைமைகளை (Adverse Effects of Special Interest, AESI) பதிவு செய்திருக்கிறார்கள். ஆய்வை நடத்தியவர்களே சுட்டிக் காட்டியிருப்பது போல, இந்த நோய் நிலைமைகள் கோவாக்சினை எடுத்துக் கொள்ளாத ஒரு குழுவில் கணிக்கப் படவில்லை. உதாரணமாக, "வயிற்றுக் கோளாறுகள் (Gastrointestinal disturbances)" , தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத (அல்லது வேறு வகைத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட) குழுவில் அதேயளவு இருந்ததா? என்று கணித்திருக்க வேண்டும். இதைச் செய்வது அவ்வளவு கடினமல்ல, ஆனால் செய்து, முடிவு "வித்தியாசமில்லை" என்று வந்தால் எப்படி பேப்பர் போடுவது என்று அஞ்சி செய்யாமல் விட்டிருப்பார்களென ஊகிக்கிறேன்😂. யாரோ தரங் குறைந்த peer reviewers , கேள்வியே கேட்காமல் பிரசுரத்தை அனுமதித்திருக்கிறார்கள். வாசிக்க விரும்புவோருக்கு கீழே இணைப்பு: https://link.springer.com/article/10.1007/s40264-024-01432-61 point- சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
1 pointநேற்று படித்தேன்! பாஸ்போர்ட்டில் எண் சும்மா மாறாது. ஆசான் கிழித்துவிட்டார் போலிருக்கு பாஸ்போர்ட்இல் பக்கத்தைக் காணோம் என்று முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்.1 point- "வன்முறைகளில் வனிதையர்"
1 pointஇந்தச் சொல்லை எங்கெடுத்தீர்கள். புதிய சொல்லாக இருக்கிறது. பாராட்டுக்கள்.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பற்றி அங்கே வேலை செய்த ஒரு வைத்தியர் சில விடயங்களை முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். வெறும் அடிப்படை சிகிச்சை ஒன்றை அளித்து நோயாளியை அப்படியே வைத்திருப்பது போன்றே அவர் சொல்வதாகத் தெரிந்தது. எல்லா வைத்தியசாலைகளும் இப்படியே என்றால், நோயாளிகள் எங்கு தான் நம்பிப் போவார்கள்? அமெரிக்கா மருத்துவம் இன்னொரு வகை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களே ஏறக்குறைய எல்லா பெரிய முடிவுகளையும் கட்டுப்படுத்துகின்றன. என்ன மருத்துவம், சிகிச்சை, எந்த மருத்துவமனை, எப்ப செய்வது என்று எல்லாமே அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆனால், ஒரெயொரு நல்ல விடயம், பெரும்பாலும் முடிவுகளை உடனேயே எடுத்து, சிகிச்சைகளை ஆரம்பித்து விடுகின்றனர். கனடாவில் நண்பன் ஒருவன் ஒரு எம்ஆர்ஐ எடுக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்பொழுது அங்கே வேறொரு சிகிச்சைக்காக அவனை ஒரு வருடம் காத்திருக்கச் சொல்லியிருக்கின்றனர். அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற கதைகளைக் கேட்டிருக்கின்றேன்.1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 pointஇந்த சங்குப்பிட்டி பாலம், இரவில் விளக்குகள் எரியும் பொழுது அழகாக இருக்கும். ஆனால் இப்பொழுது வீதியோர சோலர் மின் விளக்குகள் எரிவதில்லை. 2023 தை மாதம் வந்த பொழுது இவை ஒழுங்காத்தான்இருந்தன (ஒன்றிரண்டு பழுதடைந்தாலும் கூட) ஆனால் இம்முறை ஒன்றுமே எரியவில்லை.. அப்பொழுதுதான் தெரிய வந்தது பழுதடைந்தது, களவு எடுத்துக்கொண்டு போனது, பாராமரிப்பு இல்லை என.. சோலர்களை தனிநபர் ஒருவர்தான் வழங்கியிருந்தார் எனக் கூறினார்கள்( உண்மையா என தெரியாது) ஆனால் அங்கே இருப்பவர்களும் கொஞ்சம் அக்கறை காட்டலாம் தானே.. ஊருக்குப் போய் வரும் சந்தர்ப்பங்களில் சில நடவடிக்கைகளைப் பார்க்கையில் கவலையாகவும் ஒருவித விரகத்தியையும் ஏற்படுத்துவது உண்மை.. அதனால்தான் அப்படி எழுதினேன்.. மற்றப்படி அங்கே வாழ்பவர்களின் நடவடிக்கைகளில் அதிகம் மூக்கை நுளைப்பதில்லை1 point- முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
இது எல்லா கட்சிகளிலும் உள்ள ஒரு நிலைதான்.. யாரை விழுத்தி எப்படி உயர்வது எனத் தொடங்கி.. கட்சி மாறுவது வரை..1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 pointதங்கச்சியின் ஊர் மருதங்கேணி போல இருக்கு. இங்கு இந்த ஊர் பெயரிலேயே ஒரு கள உறவு இருக்கிறார். கல்லோ கல்லோ @Maruthankerny உங்க ஊர் படங்கள் தான் வாங்க சார். பாலத்தில் விளக்குகள் எரியவில்லை என்றால் மக்கள் என்னம்மா செய்வார்கள்?1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
புலிகள் பதுங்குது என்றால் பாச்சலுக்குத் தான்.1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 pointஆயிரத்தில் ஒரு வசனம். அதுவும் நன்றாக சொன்னீர்கள். 👈🏽 👍🏼 அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை குணங்களை மாற்றினாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointசன்ரைசர்ஸ் 3ஆவது அணியாக ப்ளே ஓவுக்கு தகுதி : நான்காவது இடத்திற்கு சென்னை, பெங்களூருக்கு இடையில் போட்டி 16 MAY, 2024 | 11:43 PM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிரமமின்றி முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையில் ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை (16) இரவு நடைபெறவிருந்த 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 66ஆவது போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதற்கு அமைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளில் 15 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாகத் தகுதிபெற்றது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தன. இதேவேளை, இந்த மூன்று அணிகளைத் தொடர்ந்து 4ஆவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் அணி எது என்பதை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி தீர்மானிக்கவுள்ளது. அப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றால் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஓவ் வாய்ப்பை பெறும். இப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒருவேளை, அப் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளைப் பெற்ற ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும். https://www.virakesari.lk/article/1837351 point- வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கிறார் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 05:33 PM (நா.தனுஜா) முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் வெள்ளிக்கிழமை (17) முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றது. அந்தவகையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு நாளைய தினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், முதன்முறையாக தெற்காசியப் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், வியாழக்கிழமை (16) நாட்டை வந்தடைந்துள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை (17) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், அங்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இன்று மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களினதும் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்பர் என அறியமுடிகிறது. இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், போரில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்குத் தடைவிதிக்கப்படல், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளடங்கலாக வட, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அக்னெஸ் கலமார்ட்டிடம் எடுத்துரைக்கவிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சனிக்கிழமை (18) நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், போரில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் மக்களுடன் இணைந்து தனது உடனிற்பை வெளிப்படுத்தவுள்ளார். https://www.virakesari.lk/article/1837091 point- மரச் சிற்பம் - ஷோபாசக்தி
1 pointகதையின் நோக்கம் மரண தண்டனையின் கொடூரத்தை விபரித்து மரணதண்டனைக்கு எதிரான உணர்வை உருவாக்குவதுதான் என்று இமிழ் பற்றிய நீண்ட கட்டுரையில் ஷோபாசக்தி சொல்லியிருந்தார். ஹமிடாவின் பாரதூரமான குற்றங்களை கதையில் சொல்லாமல் விட்டது ஒரு உத்திதான். ஹமிடாவின் குற்றங்கள் என்ன என்று கேட்பவர்கள் மரணதண்டனைக்கு உள்ளுறைந்த ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்! கண்ணன்.எம் அவர்களின் மேலான கவனத்திற்கு! May 7, 2024 ஷோபாசக்தி 51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலர் ‘இமிழ்’ தொகுப்புக்கு கடந்த வாரயிறுதியில் யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் விமர்சனக் கூட்டங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. இரண்டு கூட்டங்களிலும் உரையாற்றிய விமர்சகர்கள் அனைவருமே தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு விரிவாக உரையாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. இமிழ் தொகுக்கப்பட்ட முறை குறித்து நேர்மறையான, எதிர்மறையான இரண்டு வகை விமர்சனங்களுமே முன்வைக்கப்பட்டன. இதுவரை உலகத்தில் வெளிவந்துள்ள எல்லாத் தொகுப்புகளையும் போலவே இமிழிலும் விடுபடல்கள் உள்ளன. கதைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நான் முன்பே விளக்கியிருப்பதைப் போன்று கதைகளைத் தேர்வு செய்யாமல் எழுத்தாளர்களையே தேர்வு செய்து கதைகளைக் கோரியிருந்தோம். கௌரிபாலன், கலாமோகன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் தொடக்கம், பிரமிளா பிரதீபன் போன்ற இளைய எழுத்தாளர்கள்வரைக்கும் தொகுப்புக்குள் அடக்கவே முயற்சித்துக் கதைகளைக் கோரியிருந்தபோதும், அது நிகழாமல் போனது வருத்தமே. தொகுப்பிலுள்ள கதைகளின் மீதான நேர்மறைக் கருத்துகளை மட்டுமல்லாமல், தொகுப்பிலுள்ள கதைகளின் வகைமை போதாமை, கச்சிதமின்மை, கலையமைதி இன்மை போன்ற எதிர்மறைக் கருத்துகளையும் விமர்சகர்கள் தங்கள் தங்களது பார்வையிலிருந்து முன்வைத்திருக்கிறார்கள். விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்துக்கொள்வோம். இலக்கிய விமர்சனம் இல்லாமல் இலக்கிய வளர்ச்சி கிடையாது. கதைகள் மீதான விமர்சனங்களைப் பொறுத்தவரை, இலக்கிய விமர்சகர்களின் பாதையில் நான் குறுக்கிடுவதே இல்லை. ஏனெனில் ‘என்னுடைய கதையில் சொல்ல முடியாத எதையுமே கதைக்கு வெளியே என்னால் சொல்லிவிட முடியாது’ என்ற ஜெயகாந்தனின் வாக்கே எனக்கு எப்போதும் முன்மாதிரி. இதை நான் ஏற்கனவே பலதடவைகள் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், பற்றுறுதியோடு கடைப்பிடித்தும் வருகிறேன். எனவே, விமர்சகர்களின் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து மனதில் பதிய வைத்துக்கொள்கிறேனே தவிர அவற்றுக்குப் பதிலளிப்பதில்லை. அந்த விமர்சனங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டவையின் பிரதிபலிப்பு என்னுடைய அடுத்த கதையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் நான் தவறுவதில்லை. எனினும், சென்னையில் நிகழ்ந்த விமர்சனக் கூட்டத்தில் உரையாற்றிய ஆய்வாளர் கண்ணன்.எம் (பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்) தனது விமர்சன உரையிலும், தொடர்ந்து நடந்த கலந்துரையாடலிலும் சில கேள்விகளை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான பதில்களையும் எதிர்பார்க்கிறார். அத்தோடு நிற்காமல், ‘எழுப்பப்படும் கேள்விகளுக்குப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பதிலளிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்’ என்றொரு பதைபதைக்கும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். மவுனம் என்பது சாவுக்குச் சமமல்லவா. இந்தக் குற்றச்சாட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளன் என்ற முறையில் என்னை நோக்கியும்தானே முன்வைக்கப்படுகிறது. ஆகவே, கண்ணன் அவர்களின் மேலான கவனத்திற்குச் சில குறிப்புகளை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. பத்திரிகை நேர்காணல்களிலும், காட்சி ஊடகங்களிலும், கட்டுரைகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும், என்னுடைய புத்தக வெளியீடுகளிலும் எப்போதும் நான் ஓயாமல் பதில்களைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். எனவே, கண்ணனின் ‘மவுனம்’ என்ற குற்றச்சாட்டு எனக்குப் பொருந்தாது. கண்ணன் எழுப்பிய ‘வாழ்பனுபவம்’, ‘இலக்கிய முன்மாதிரி’ போன்ற எல்லாக் கேள்விகளும் ஏற்கனவே கேட்கப்பட்டு என்னால் தமிழ், சிங்களம், மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்டவையே. அந்தப் பதில்களையெல்லாம் நீங்கள் வேறெங்கும் தேடித் திரிய வேண்டியதில்லை. அவற்றில் ஒரு பகுதியை என்னுடைய இதே வலைத்தளத்தில் தொகுத்து வைத்திருக்கிறேன். இங்கிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட என்னுடைய நேர்காணல்களிலேயே அவற்றைக் கண்டு கொள்ளலாம். அத்தோடு, சமூக வலைத்தளங்களில் இதுவரை குறைந்தபட்சம் ஆயிரம் கேள்விகளுக்காவது பதிலளித்திருப்பேன். இதற்கு மவுனம் என்றா பெயர்? அவதூறுக் கைகளின் ஆயிரம் கேள்விகளுக்கு நான் பதிலளிக்காமல் தவிர்த்திருப்பேன். ஆனால், கண்ணன் போன்ற ஒருவரின் ஒரேயொரு கேள்விக்குக் கூட நான் பதிலளிக்காமல் விட்டதில்லை. இதைக் கண்ணன் கவனத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்களின் கோட்டை மதில்களுக்குள் அமர்ந்திருந்து எப்போதாவது ஒருமுறை பொதுவெளியில் வாய் திறக்கும் கண்ணன் போன்ற ஆய்வாளர்களுக்கு, காலம் முழுவதும் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் பொதுச் சமூகத்திடம் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் குரல் ‘மவுனம்’ என்பதாகத் தெரிகிறதென்றால் இதெல்லாம் ‘எலிட்’ மனநிலைக் கோளாறு என்பதாக மட்டுமே என்னால் பொருள்கொள்ள முடியும். தன்னுடைய உரையில் என்னை நோக்கி அப்படி என்னதான் கண்ணன் புதுமையான கேள்விகளைக் கேட்டுவிட்டார்? தொகுப்பில் இடம்பெற்றுள்ள என்னுடைய ‘மரச் சிற்பம்‘ கதையில் என்னுடைய வாழ்பனுவம் எங்கேயிருக்கிறது என்ற அவருடைய கேள்வியைப் பரிசீலித்துவிடலாம். கண்ணன் தன்னுடைய உரையை ‘வாழ்பனுபவம் மட்டும்தான் இலக்கியமாக மாற முடியும்’ என்று அழுத்தமாகச் சொல்லியே ஆரம்பிக்கிறார். இலக்கியம் குறித்த இவரது இந்தப் புரிதலே அடிப்படையில் தவறானது என்று நான் கருதுகிறேன். கண்ணன் தன்னுடைய உரையில் சிறப்பான கதைக்கு உதாரணமாகச் சுட்டும் ‘சிற்பியின் நரகம்’ கதையில் புதுமைப்பித்தனின் வாழ்பனுபவமா பதிவாகியிருக்கிறது? ‘பரபாஸ்’ நாவலை எழுதிய பெர் லாகர்குவிஸ்ட் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு ஜெருசலேமில் வாழ்ந்த வாழ்பனுவத்தால் அந்த நாவலை எழுதினாரா? சமகாலத்தில் எழுதப்பட்ட மைக்கல் ஒந்தாச்சி, அனுக் அருட்பிரகாசம் ஆகியோருடைய நாவல்கள் அவர்களது சொந்த வாழ்பனுபவமா? அவ்வளவு ஏன், கண்ணன்.எம் பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த ‘வாடிவாசல்’ நாவலை எழுதிய சி.சு. செல்லப்பா எந்த ஜல்லிக்கட்டில் இறங்கி மாடு பிடித்தார்? அவர் மாடு பிடிக்கும் வீரராக அல்லாமல், வத்தலகுண்டு பார்ப்பன சங்கத்தின் தலைவராக இருந்தவர். அந்த வாழ்பனுபவமா வாடி வாசல்? வாழ்பனுபவங்களின் வழியே எழுதப்படும் புனைவுப் பிரதிகள் அதற்கான வலிமையையும் பெறுமதியையும் கொண்டுள்ளன என்பது உண்மைதான். அதேவேளையில் வாழ்பனுபவத்தை மட்டும் நம்பியே எழுதப்படும் கதைகள் இலக்கியரீதியாகத் தோல்வியுறுவதுமுண்டு. நாஸிப் பிரதிகளாக மாறுவதுண்டு. ஈழத்துச் சூழலிலேயே கூட இவ்வாறு மோசமான எழுத்துகளுண்டு. அது குறித்து நான் எழுதிய கட்டுரைகளும் என்னுடைய இதே வலைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. படித்துக்கொள்ளலாம். நேரடியான வாழ்பனுபவம் இல்லாவிட்டாலும் தேடுதல் – அறிதல் மூலம் எழுதப்படும் பிரதிகளும், முற்று முழுவதுமாகக் கற்பனையால் மட்டுமே உருவாக்கப்படும் பிரதிகளும் கூட மிகச் சிறப்பான இலக்கியப் பிரதிகளாக மிளிரக்கூடும் என்பதற்குத் தமிழிலிருந்தும் உலக இலக்கியங்களிலிருந்தும் எஸ்.பொன்னுத்துரை, மகாஸ்வேதா தேவி, ஜோர்ஜ் ஆர்வெல் என என்னால் ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும். இமிழ் தொகுப்பிலுள்ள கதைகள் எவற்றிலும் இரத்தமும் சதையுமான வாழ்பனுபமே இல்லை என்று கண்ணன் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. போர் நிலத்தில் முப்பது வருடங்களாகச் சிக்குண்டு வாழ்ந்தவர்கள் போரைப் பற்றி எழுதியிருப்பதும், முஸ்லீம் எழுத்தாளர்கள் தங்களது சமூகத்தை, பண்பாட்டு வாழ்க்கையைக் குறித்து எழுதியிருக்கும் கதைகளும், தமிழகத்தில் ஈழ அகதி வாழ்க்கை குறித்து தொ.பத்திநாதனும் செந்தூரனும் எழுதியிருப்பதும் வாழ்பனுபவம் இல்லாவிட்டால் எதுதான் இரத்தமும் சதையுமான வாழ்பனுபவம்? சி.சு. செல்லப்பா மாடு பிடிப்பதா? ஜி. நாகராஜன் அவ்வப்போது சென்றுவந்த குறத்தி முடுக்கா? இமிழ் தொகுப்பிலுள்ள ‘மரச் சிற்பம்’ கதையில் ஷோபாசக்தியின் வாழ்பனுபவம் எங்கேயிருக்கிறது என்று கேட்டால், அவர் தன்னுடைய இலங்கை வாழ்பனுவத்தை ‘கொரில்லா’ என்று எழுதத் தொடங்கி பிரான்ஸ் வாழ்பனுபவத்தை ‘ஸலாம் அலைக்’ வரை பக்கம் பக்கமாக எழுதிக் கொட்டிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது முற்றுமுழுதாகக் கற்பனையின் வழியே அவர் அந்திக் கிறிஸ்து, அரம்பை, யாழ்ப்பாணச் சாமி போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார். ‘இச்சா’ நாவலில் கற்பனையாக ஒரு நாட்டை மட்டுமல்லாமல் ‘உரோவன்’ என்ற மொழியையும் உருவாக்கியிருக்கிறார். ஓர் எழுத்தாளர் எவ்வளவு வீச்சாக மூச்சடக்கிக் கற்பனைக் கடலில் மூழ்கினாலும், மூச்சுவிட மேலே வரும்போது வெளிப்படும் மூச்சுக்காற்று வாழ்பனுபவத்தின் கீற்றாகவே இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கற்பனைகளும் தம்மளவில் வேறுபடுகின்றன. அவர்களது அக்கறைகளும் வேறுபடுகின்றன. வாழ்பனுபவம் என்பது சாக்கு மூட்டையல்ல சுமந்து செல்வதற்கு. ஒருவருக்கு வாழ்க்கையின் ஒவ்வொருநொடியும் வாழ்பனுபவங்களே. எழுத்தாளருக்கு உறக்கத்தில் வரும் கனவும் வாழ்பனுபவமே. அதை இலக்கியமாக மாற்ற அவருக்குத் தெரியும். என்னுடைய ‘மரச் சிற்பம்’ சிறுகதை மரணதண்டனையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கதை. ‘மரணதண்டனையோடு உனக்கு வாழ்பனுபவம் இருக்கிறதா?’ என்று கண்ணன் கறாராக என்னை நோக்கிக் கேள்வி கேட்காததற்கு அவரது கருணையுள்ளம் மட்டுமே காரணமாக இருக்கும் என நம்புகிறேன். எனினும், என்னுடைய பிரான்ஸ் வாழ்பனுபவம் ஏன் கதைகளாக மாறவில்லை என்று கண்ணன் கேட்கிறார். அதெல்லாம் நிறையவே எழுதியிருக்கிறேன் என்று சொல்லி என்னால் தப்பிக்க முடியாது போலிருக்கிறது. ஏனெனில், பிரெஞ்சு மொழிக்கும் மனிதர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் என்ன? பிரெஞ்சுப் பண்பாட்டின் செழுமையை நான் உள்வாங்கியிருக்கிறேனா? என்று கண்ணன் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறார். இவையும் எனக்குப் புதிய கேள்விகளல்ல. அய்ந்து வருடங்களுக்கு முன்பாக பிரெஞ்சுக் குடியுரிமை கேட்டு நான் விண்ணப்பிக்கும்போது, திரும்பத் திரும்ப இதே கேள்விகளைத்தான் (பிரெஞ்சு பண்பாடு, பிரெஞ்சு மொழி) என்னிடம் காவற்துறை அதிகாரி கேட்டார். ‘ஒரு பண்பாட்டுச் செழுமை மயிரும் என் கண்களுக்குத் தெரியவில்லை அய்யா, நான் பிரெஞ்சுச் சமூகத்தில் மனிதர்களுடன் கலந்துவிடத் தயாராகவேயுள்ளேன்… ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை’ என்று நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், பிரஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்துப் பத்து நிமிடங்கள் நான் உரையாற்றி வெற்றிகரமாகத் தேர்வை முடித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கேயும் என் கற்பனைத் திறன் என்னைக் கைவிடவில்லை. கண்ணன் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் முக்கியமான பதவியிலிருப்பவர். இதன் வழியாக அவர் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்து அறிந்திருக்கலாம். பிரெஞ்சு மனிதர்கள் குறித்து அறிந்திருக்கலாம். நானோ பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, போலிப் பாஸ்போர்ட்டில் இலக்கில்லாமல் தற்செயலாகப் பிரான்ஸை சென்றடைந்த அரசியல் அகதி. என்னை விமான நிலையத்தில் பிரெஞ்சுப் பண்பாடு அடித்து உதைத்தே வரவேற்றது. அகதியாகத் தெருவில் விட்டது. இன்றுவரை அந்நியனாக வைத்திருக்கிறது. நிற வேற்றுமை பாராட்டுகிறது. எந்த நேரத்திலும் குடியுரிமையைப் பறித்துவிட்டு திரும்பவும் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பலாம் என்ற சட்டக் கத்தி தலைக்கு மேல் தொங்குகிறது. எனவே பிரெஞ்சுப் பண்பாடு பற்றிய எனது பார்வையும் வாழ்பனுபவமும் பிரெஞ்சு நிறுவன ஆய்வாளர் கண்ணனின் பார்வையும் ஒன்றாக இருக்க வாய்ப்பேயில்லை. இதையெல்லாம் ஏதோ ஒரு இதுக்காக நான் இட்டுக்கட்டிச் சொல்கிறேன் என நினைத்துவிடாதீர்கள். பிரெஞ்சு மொழியில் வெளியான எனது சுயசரிதை Shoba – Itinéraire d’un réfugiéநூலில் இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக விபரித்துள்ளேன். பிரான்ஸின் முக்கிய பதிப்பகமான Le livre de poche வெளியிட்டுள்ளது. அடுத்ததாக ஆட்சிக்கு வெள்ளை இனவாதியான மரி லூபென் வந்தால் வழக்கு வரவும் எல்லா வாய்ப்புகளுமுள்ளன. அவர் ஆட்சிக்கு வருவது சாத்தியமற்ற ஒன்றல்ல. ஏற்கனவே மாகாண அளவில் ஆட்சியிலிருக்கிறார். கடந்த தேர்தலில் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமையின் வழியே 35 விழுக்காடு மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். மிகுதிப் பண்பாடு கடைந்தெடுத்த வலதுசாரி இம்மனுவல் மக்ரோனுக்கு வாக்களித்து இடதுசாரிகளை செயின் நதியில் தள்ளிச் சமாதி கட்டியது. அகதிகள், வெளிநாட்டவர்கள் மீது போடப்பட்டுக்கொண்டேயிருக்கும் புதிய சட்டங்கள், குடியேறும் வெள்ளையர்களற்ற மனிதர்கள் நாய் போல தெருக்களில் அவ்வப்போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவது, புதிய அகதிகளுக்குக் கதவடைப்பு, கடல் கடந்த மாகாணங்கள் (France d’outre-mer) என்ற பெயரால் இன்றுவரை காலனிகளை வைத்திருப்பது என்று பிரஞ்சின் பண்பாட்டுக் கதவுகள் மூடப்பட்டுக்கொண்டே வருகின்றன. அந்தக் கதவில் இறுகிய பூட்டைப் போடுவதற்கு வெள்ளை இனவாதிகள் காத்திருக்கிறார்கள். ஓர் அகதி மனிதனாக எனக்கு இது ஆபத்தான பண்பாடு. பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்காமல் அகதிகள் தனித்த தீவாக இருக்கிறோமா? அப்படியெல்லாம் இருந்து என்னதான் சாதிக்கப் போகிறோம்! எங்களுக்குப் பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்க ஆசையில்லையா என்ன? என்னைப் பொறுத்தவரை அதற்கான எல்லா முயற்சிகளும் எடுத்திருக்கிறேன். அவர்களுடன்தான் வேலை செய்கிறேன். அவர்களுடன்தான் சினிமாக்களில் நடிக்கிறேன். அவர்களுடன்தான் தேசிய நாடக அரங்கத்தில் பிரெஞ்சு மொழியில் நாடகம் நடிக்கிறேன். என்னுடைய புத்தகங்களை மொழிபெயர்ப்பில் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் முகம் சுழியாது கலந்துகொண்டு, பிரெஞ்சுப் பண்பாட்டின் வழியே புன்னகையுடன் குரல் உயர்த்தாமல் பொறுமையாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். ஆனால், இங்கே நான் அந்நியன்தான். பிரெஞ்சுச் சமூகம் தன்னுள்ளே நுழைய என்னை அனுமதிக்கவில்லை. ஓர் அகதியாக, முன்னாள் போராளியாக என்னுடைய அனுபவங்களும் ஒரு கலைஞனாக என்னுடைய திறனும் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது. பிரான்ஸில் வாழும் வெள்ளையரல்லாத எந்த எழுத்தாளரிடமும் கலைஞரிடமும் வந்து கேட்டாலும் நான் சொல்வதையே சொல்வார்கள். இதுதான் எங்களின் வாழ்பனுபவம். வெள்ளை இனவாதிகள் திரும்பவும் நாஸி காலத்திற்குத் திரும்பிச் செல்லத் தீவிரமாக முயற்சிக்கிறார்கள். இதன் வழியாகத்தான் என்னுடைய ‘மரச் சிற்பம்’ கதை உருவாகியது. இந்த வாழ்பனுபவம் போதுமானதா இல்லையா? சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன. ‘மரச் சிற்பம்’ கதை நிகழும் காலம் 1977. அப்போது நான் பிரான்ஸுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவத்தில் எனக்கு நேரடியாக அனுபவம் கிடையாது. எனக்கு மட்டுமல்ல, அந்த மரணதண்டனை இரத்தச் சடங்கு நிகழ்த்தப்பட்ட முறை குறித்து அந்தக் கொடிய சடங்கில் கலந்துகொண்ட முப்பது பேர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. பிரெஞ்சுப் பண்பாட்டை விளங்கிக்கொண்ட, விளங்கிக்கொள்ளாத யாருக்குமே தெரியாது. இந்த மரணதண்டனை நிகழ்ந்து 36 வருடங்களுக்குப் பின்புதான், எவ்வாறு கொடிய முறையில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது சடங்கை முன்நின்று நடத்திய நீதிபதியின் இரண்டு பக்கக் கடிதம் வழியாக 2013-ல் பிரெஞ்சு பொதுச் சமூகத்திற்குத் தெரிய வந்தது. நல்லவேளையாக அப்போது நான் பிரான்ஸில் இருந்தேன். அந்த இரண்டு பக்கக் கடிதம் எனக்குள் ஏற்படுத்திய உணர்வும், தற்கால பிரெஞ்சு அரசியல் செல்நெறியும்தான் எனது இருபது பக்கக் கதை உருவாகக் காரணமாக இருந்தன. ஆனால் ‘விக்கிபீடியாவில் ஒரு சொடுக்குச் சொடுக்கினால் இந்தக் கதை தெரிந்துவிடும்’ என்கிறார் ஆய்வாளர் கண்ணன். விக்கிபீடியாவில் சொடுக்கினால் எதுதான் தெரியாது? எல்லாமேதான் உள்ளன. விக்கிபீடியாவில் புத்தரைப் பற்றி ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஹேர்மன் ஹெசேயின் ‘சித்தார்த்தா’ போன்றதொரு நாவலை எழுதிவிட முடியுமா என்ன! ஆய்வுக் குறிப்புகளும், தேடுதல்களும் கூட முழுமையாக உதவப் போவதில்லை. இந்தத் தரவுகளின் மேல் கட்டி எழுப்பப்படும் கற்பனையும் உணர்ச்சிகரமான சித்திரிப்புமே புனைவுப் பிரதிக்கு மிக அடிப்படையானது. ‘மரச் சிற்பம்’ கதையில் கில்லட்டினால் தலை வெட்டப்படுபவன் ஒரு துனிஷியா நாட்டு இளைஞன். அவன் தன்னுடைய பிரெஞ்சுக் காதலியைக் கொன்றதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. அவன் குற்றவாளி என்று அழுத்தமாகவே நான் கதையில் குறிப்பிடுகிறேன். ஆனால் ‘கொலையுண்ட பெண்ணுக்குக் கதையில் ஏன் இடமில்லை?’ என்ற கேள்வியைக் கண்ணன் எழுப்பியிருக்கிறார். இந்தக் கேள்விதான் ஓர் ஆய்வாளருக்கும் ஓர் எழுத்துக் கலைஞனுக்குமுள்ள இடைவெளியின் தூரமோ என்று எனக்கு அய்யம் ஏற்படுகிறது. நான் நூற்றுக்கணக்கான மரணதண்டனைகளை என் தாய்நிலத்தில் பார்த்துவிட்டு, போரிலிருந்து தப்பித்து பிரான்சுக்கு வந்தவன். எனக்குள் மரணதண்டனை குறித்த கேள்வி எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். என்னுடைய பல கதைகளிலும் நாவல்களிலும் கட்டுரைகளிலும் இது குறித்து நான் விசாரணை செய்துகொண்டேயிருப்பவன். பிரான்ஸில் 1977-ம் வருடம் வரை கில்லட்டின் கொலைக் கலாசாரம் நீதியின் பெயரால் சட்டமாக இருந்ததை அறிய வந்தபோது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்தச் செய்தியை அறிந்ததிலிருந்து என்னுடைய பல பிரெஞ்சு நண்பர்களிடம் இது குறித்து விசாரித்தேன். எல்லோருமே அறிவுத்துறை சார்ந்த நண்பர்கள்தான். ஒரேயொருவருக்கு மட்டுமே 1970-கள் வரை கில்லட்டின் கலாசாரம் பிரான்ஸில் நடைமுறையில் இருந்தது தெரிந்திருந்தது. அவருக்கும் அதற்கு மேல் விபரங்கள் தெரியவில்லை. பிரான்ஸில் நிகழ்ந்த அந்தக் கடைசி கில்லட்டின் கொலை குறித்து பிரெஞ்சு இலக்கியங்களில் ஏதும் பதிவிருப்பதாகத் தெரியவில்லை. அநேகமாக அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்ட முதலாவது சிறுகதை என்னுடைய கதையாகத்தான் இருக்கும். இனி இந்தக் கதை பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானால்தான், பிரெஞ்சுப் பண்பாடு தன்னுடைய கடைசி மரணதண்டனையின் கொடூரச் சித்திரம் குறித்துத் தெரிந்துகொள்ளும் என்றே நினைக்கிறேன். ‘குற்றத்தை விடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்ற ஒற்றை வாக்கியத்தில்தான் என்னுடைய கதை கட்டியெழுப்பப்பட்டது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர் விக்டர் ஹியூகோவா, அல்பேர் கமுயுவா அல்லது வேறொருவரா என்பது என் ஞாபகத்திலில்லை. ஆனால், அந்த வாக்கியம் மட்டும் என் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது. ‘காந்தியாரின் கொலையைக் கண்டிக்கும் அதே வேளையில், கோட்சேக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையையும் நாம் கண்டிக்க வேண்டும்’ என்று அ.மார்க்ஸ் ஒருமுறை எழுதினார். மேற்கண்ட இந்தக் கருத்துநிலைகளில் நின்று எழுதப்பட்டதுதான் ‘மரச் சிற்பம்’. குற்றவாளியால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஏன் கதையில் இடமில்லை? ஏனெனில், இது அவரைப் பற்றிய கதையில்லை. அவரைப் பற்றி இன்னொரு கதையில் எழுதலாம். இந்தக் கதையோ ‘குற்றத்தைவிடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்பதைச் சொல்ல எழுதப்பட்ட கதை. கண்ணனைப் போல் இன்னொரு ஆய்வாளர் ‘கில்லட்டினை இயக்கிய தொழிலாளியின் மனநிலை ஏன் கதையில் பதிவாகவில்லை?’ என்றும் கேட்கலாம். அதற்கு மேலுமொரு கதை எழுதவேண்டும். ஒரே கதையில் எல்லாக் குரல்களும் பதிவாகவில்லை என்றால் அது மற்றைய குரல்களை நிராகரிப்பதாக அர்த்தமாகாது. அந்தக் குரல்களுக்கு இன்னொரு கதையில் இடமிருக்கும். அந்தப் பெண்ணைப் போல சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எத்தனையெத்தனையோ பெண்களை எனது கதைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘ஆலா’வை மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஆய்வாளர்கள் வேண்டுமானால் ஒரு சிறுகதைக்குள்ளேயே அனைத்துக் குரல்களையும் தரிசிக்க ஆசைப்படலாம். அது இலக்கிய வடிவரீதியாக எழுத்துக் கலைஞருக்குச் சாத்தியப்படாது. அவ்வாறு சாத்தியப்பட்டதொரு சிறுகதை இதுவரை உலகில் எங்கும் எழுதப்பட்டதில்லை. மரண தண்டனையின் கொடூரத்தைப் பேசும் போது, ‘குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்க்க வேண்டாமா?’ என்ற கேள்விகளை நாம் கடந்த காலங்களில் அதிகமாக எதிர்கொண்டிருக்கிறோம் அல்லவா. குறிப்பாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தக் குரல்கள் அதிகமாகக் கேட்டன. மரண தண்டனை விஷயத்தைப் பொறுத்தவரை இந்த வகைக் கேள்விகளில் உள்ளுறைந்திருப்பது மரண தண்டனை ஆதரவே. அதற்காக கண்ணன் மரண தண்டனை ஆதரவாளர் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அவரது கேள்வியின் தொனி இந்த இடத்திற்குத்தான் அவரை இழுத்து வருகிறது. ‘இந்தக் கதையை கேள்வி அனுபவத்தால் எழுதினால் ஆயிற்றா? இதில் எங்கேயிருக்கிறது ஷோபாசக்தியின் வாழ்பனுபவம்?’ என்ற கண்ணனின் கேள்விக்கு இலக்கிய உலகத்திலே ஏதாவது பொருளிருக்கிறதா எனத் தெரியவில்லை. அவர் கதைகளை அல்லாமல் சுயசரிதைகளையே இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருக்கிறரா? ஓர் உதாரணத்தால் இதற்குப் பதிலளிக்கலாம் என நினைக்கிறேன். கவிஞர் பப்லோ நெருடா இலங்கையில், சிலி நாட்டின் ‘கொன்ஸலேட்’ அலுவலகத்தில் பிரதிநிதியாக இருந்த காலத்தில், அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தார். இது நாற்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்பு, 1974-ல் பப்லோ நெருடாவின் சுயசரிதை வெளியாகும்வரை வெளியுலகத்திற்குத் தெரியாது. சுயசரிதை நூலில் கூட அரைப் பக்க அளவுக்குத்தான் இது குறித்து நெருடா எழுதியிருப்பார். அந்தப் பெண்ணின் பெயர், ஊர் விபரங்கள் எல்லாம் அந்தக் குறிப்பில் கிடையாது. இந்த அரைப் பக்கக் குறிப்பை வைத்துக்கொண்டே சிங்களத்தில் ஒரு சிறுகதை எழுதப்பட்டது. இதை வேறொரு கோணத்தில் அணுகிய இயக்குனர் அசோக ஹந்தகம ‘அல்போராடா’ என்றொரு திரைப்படத்தை எடுத்தார். இவை இரண்டுமல்லாத இன்னொரு பார்வையில் நான் கருங்குயில்என்றொரு கதையை எழுதினேன். எங்கள் மூவரிடமுமிருந்தது பப்லோ நெருடா எழுதிய வெறும் அரைப் பக்கக் குறிப்புத்தான். என்னுடைய தேடுதல் வழியாக, அந்தப் பெண் பழைய டச்சுக் கால்வாய்க்கு அருகேயிருந்த ‘பம்பலவத்த’ என்ற குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்திருக்கிறார், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர், பேராசிரியர் க. கைலாசபதி வெள்ளவத்தையில் குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டில்தான் பப்லோ நெருடா வசித்திருக்கிறார் போன்ற குறைந்தபட்சத் தகவல்களே எனக்குக் கிடைத்தன. அதற்கு மேல் கற்பனையால்தான் நான் கதையை வளர்த்துச் சென்றேன். இந்தக் கதையைப் பொறுத்தளவில் சிங்களத்தில் கதையெழுதிய திஸ்ஸ தேவேந்திராவுக்கோ திரைப்படமெடுத்த அசோக ஹந்தகமவுக்கோ எனக்கோ சுத்தமாக வாழ்பனுபவம் கிடையாதுதான். ஆனால், இவ்வாறு குறிப்புகள், வாய்வழிச் செய்திகள் வழியாக அறிந்து எழுதப்படும் கதைகளுக்கு இலக்கியத்தில் இடமில்லையா என்ன! உலக இலக்கியம் முழுவதிலுமே இவ்வகையாக எழுதப்படும் கதைகள் உள்ளன. இவ்வகையாக உருவாக்கப்படும் நாடகங்களும், திரைப்படங்களும் உள்ளன. பிரசன்ன விதானகேயின் Death on a Full Moon Day திரைப்படம் கூட இதற்குச் சிறந்த உதாரணம். ஒரு துண்டுப் பத்திரிகைச் செய்தியிலிருந்து அவர் ஆகச் சிறந்த திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். உங்களுக்குப் போரைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் இராணுவத்தில் இருந்தீர்களா? வாழ்பனுபவம் இல்லாமல் எப்படி உங்களால் படம் எடுக்க முடியும்? என்றெல்லாம் பிரசன்ன விதானகேயிடம் கோணல்தனமாகக் கேட்டால் ‘கட்ட வாப்பாங்’ என்றுதான் அவர் சொல்வார். ‘இமிழ் தொகுப்பில் எழுதியிருப்பவர்கள் எல்லோருமே பாப்புலர் நடையில் எழுதும் சுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையுமே பின்பற்றியிருக்கிறார்கள்’ என்று கண்ணன் ஒற்றை வார்த்தையில் சொல்லிச் செல்வதெல்லாம் இலக்கியத் திறனாய்வு கிடையாது. சுஜாதாவின் எழுத்துநடை பாப்புலர் நடை என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது. ஆனால், மற்றைய மூவரையும் பாப்புலர் நடையில் எழுதுபவர்கள் எனச் சொல்வதெல்லாம் வெறும் சீண்டலே தவிர திறனாய்வு கிடையாது. அதேவேளையில் ‘பாப்புலர் நடையை நான் குறைத்து மதிப்பிடவில்லை’ என்று வேறு கண்ணன் தன்னுடைய உரையில் சொல்கிறார். அந்த நடை இலக்கியத்திற்கு ஆகாது என்றும் சொல்கிறார். ஒரு குழப்பமான உரைதான் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். கண்ணனுடைய உரையைத் தொடர்ந்த கேள்வி -பதில் நிகழ்வில் ‘இலங்கைத் தமிழர்கள் சாதி குறித்துப் பேசவே மறுக்கிறார்கள்’ என்று கூடுதலாக ஒரு குற்றச்சாட்டையும் கண்ணன் வைத்திருந்தார். அதாவது, அவரது ஆய்வு நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைப் பேராளர்கள் சாதி குறித்துப் பேசவே மறுத்ததாக ஆதாரமும் சொன்னார். இது ஆய்வு நிறுவனத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் கிணற்றுத் தவளைப் பார்வை. கொஞ்சம் வெளியே வந்தும் கண்ணன் கண்திறந்து பார்க்க வேண்டும். இலங்கையிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வெளியான சிறுபத்திரிகைகளைக் கண்ணன் படித்ததில்லையா என்ன? சாதியக் கொடுமை குறித்து எழுதப்பட்ட நூல்களை, தன்வரலாறுகளைப் படித்ததில்லையா? கதைகளைப் படித்ததில்லையா? புலம்பெயர் நாடுகளில் ‘தலித் மாநாடுகள்’ நடத்தப்பட்டது அவருக்குத் தெரியுமா தெரியாதா? சாதியப் பிரச்சினைகளை முன்வைத்து ‘இருள்வெளி’, ‘சனதருமபோதினி’, ‘கறுப்பு’ போன்ற இலக்கியத் தொகுப்புகள் வந்ததை அவர் அறியமாட்டாரா? பிரான்ஸில் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ என்றொரு அமைப்பு பல வருடங்களாக இயங்கிவருவதை அவர் அறியவில்லையா? ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பிலும் முக்கிய நிகழ்வாக ‘சாதிய விடுதலை’ குறித்த அமர்வு நிகழ்வதை அறியாரா? இமிழ் வௌியிடப்பட்ட 51-வது இலக்கியச் சந்திப்பில் கூட ‘இலங்கையில் சாதியம்’ என்றொரு அமர்வு நடத்தப்பட்டதே. இதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருக்குமாறு அவரது ஆய்வுக் கண்கள் எந்த வன்மத்தால் கட்டப்பட்டிருக்கின்றன? இறுதியாக, என்னுடைய எழுத்துநடை சுஜாதாவைப் பின்பற்றிய பாப்புலர் நடை என்றொரு கண்டுபிடிப்பை கண்ணன் வெளியிட்டிருக்கிறார். கடந்த முப்பது வருடங்களாக யாருமே செய்யாத ஆய்வுக் கண்டுபிடிப்பு இது. அதாவது கண்ணனின் கூற்றுப்படி, பாப்புலர் நடையென்றால் கதையை வாசகனுக்கு விரிவாகப் புகட்டும் நடையாம். இந்த விமர்சனம் என்னைக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியது உண்மையே. நான் எப்போதுமே கதைகளை மிக விரிவான சித்திரிப்புகளோடும் தரவுகளோடும் எழுதுபவன். கண்ணனுக்கு முன்பாக, இதே கூட்டத்தில் உரையாற்றிய அழகியபெரியவன் எனது இந்த அம்சத்தை எனது எழுத்தின் சிறப்பாகக் குறிப்பிட்டார். ஆனால், இதே அம்சம் கண்ணனுக்குக் குறையாகத் தெரிகிறது. இதைப் பாப்புலர் நடை என்கிறார். இந்த முறையில் எழுதுவது உள்ளே விசயங்களைப் பொதிந்து வைக்காது என்கிறார். உள்ளே பொதிந்து வைக்க நான் என்ன கள்ளக் கடத்தலா செய்கிறேன்? என்னுடைய ஒவ்வொரு சொல்லும் உணர்வும் வாசகர்களுக்குச் சிறு சேதமுமில்லாமல் கடத்தப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆரம்ப காலங்களில் சில இருண்மையான கதைகளை எழுதியிருந்தாலும், இப்போது மிக விரிவாகவும் தெளிவாகவும் எழுதவே நான் விரும்புகிறேன். ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் தான் நூல்களை மொழிபெயர்த்திருப்பதின் அனுபவத்தின் வாயிலாகத் தன்னுடைய கருத்தைச் சொல்வதாகக் கண்ணன் குறிப்பிட்டார். அதே மொழிகளில் என்னுடைய நூல்களும் கதைகளும் வெளியாகியிருக்கும் அனுபவம் என்னுடைய எழுத்துநடை பிசகற்றது என்று எனக்குச் சொல்கிறது. பொதிந்து வைத்து எழுதாமல் விரித்து எழுதுவதால் என்னுடைய எழுத்துகளில் வாசகருக்கு இடமில்லை என்று கண்ணன் சொல்கிறார். பொடி வைத்து எழுதுவதால், பொதிந்து வைத்து எழுதுவதால், திருகி எழுதுவதால்தான் கதையில் வாசகருக்கு இடமிருக்கிறது என்று நான் நம்பவில்லை. என்னுடைய உணர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு முற்று முழுதாக வாசகரிடம் தெளிவாகக் கடத்திவிடுதாலேயே கதையில் வாசகருக்கு இடம் கிடைக்கிறது, கதை முடிந்த பின்பும் அவர் அதைத் தொடர்ந்து சென்றபடியிருக்கிறார் என்பதே எனது நம்பிக்கை. எழுத வந்த நாளிலிருந்தே ‘என்னுடைய கதைகள் அளவில் பெரிதான அரசியல் துண்டுப் பிரசுரங்களே’ எனப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்து எழுதிக்கொண்டிருப்பவன் நான். இதுவரை பேசப்படாத – சிக்கலான விடயங்களை எழுதுபவன். சமூகத்தின் கூட்டு நம்பிக்கைகளுக்கு எதிரான நிலையில் நின்று உண்மைகளைச் சொல்பவன். எனவே, என்னுடைய இந்தத் தெள்ளத் தெளிவான வெளிச்சமிடும் மொழிநடையே, எனது நோக்கத்தை எட்டுவதற்கான கூர்மையான கருவியாக எனக்குக் கைகொடுக்கிறது. இமிழ் விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதற்காக தொகுப்பின் பதிப்பாசிரியர் என்ற முறையில் கண்ணன். எம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு இங்கே நிறுத்திக்கொள்கிறேன். கண்ணன் விரும்பினால் தொடர்ந்து உரையாட நான் தயாராகவேயுள்ளேன். https://www.shobasakthi.com/shobasakthi/2024/05/07/கண்ணன்-எம்-அவர்களின்-மேல/1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointஅறியாமை கூட ஒரு அழகுதான்....... அறிவு வந்ததால் அழகியலை இழந்து விட்டோமே .......! 😂1 point- சிங்கப்பூரில் 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது - புதிய பிரதமர் யார்?
உங்களது கனவுக்கு வாழ்த்துக்கள் வெளிநாட்டவர்கள் இல்லாமல் சிங்கப்பூரார்களுக்கு உச்சா கூட போகத்தெரியாது. வெளிநாட்டவர்கள் எல்லாருமே வெளியேறினால் ஒரு 5 வருடங்களில் இலங்கையை போல் தவிலடிப்பார்கள் அல்லது மலேசியாவின் காலில் விழுவார்கள். சிங்கப்பூரார்கள் கடின உழைப்பு என்றால் என்ன வென்றே அறியாதவர்கள். அத்துடன் Blue Collar வேலைகளை செய்து பழக்கமே இல்லாதவர்கள். ஆனால் வாயால் நன்னா வடை சுடுவார்கள்1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
பரிந்துரைக்கு நன்றி. அப்படியே செய்கிறேன்.1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 pointசங்குப்பிட்டிப் பாலத்தில் அதிகாலை அழகு ஆனால் அதே பாலத்தில் ஆயிரங்கள் செலவழித்தும் மனிதர்களின் அடிப்படைக் குணம் மாறாதமையால் இருளில் இருக்கும் வீதி. முற்றம் தெரியும் முதலியார் வாசிகசாலை.. ஆர் கண்பட்டதோ தெரியவில்லை போன வருடம் போன பொழுது பற்றையாக(👇🏼) இருந்த வாசிகசாலை இன்று முற்றம் தெரிகிறது..1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
அன்ரன் அண்ணா - பின்னர் இயக்கத்தில் இருந்து விலகி, இந்தியா போய், கனடா போய், இயக்கத்தை விமர்சிப்பவராகவும் ஆகினார். அவரா இவர்?1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
கழட்டின @கிருபன் ஜிக்கே துன்புறுத்தல் எண்டா, பார்த்த சனத்துக்கு?🤣1 point- த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
வருடம் 2124, மே மாதம், 15ம் திகதி. இன்றைய தலைப்பு செய்திகள் 1. செவ்வாய் கிரகத்திற்கு உத்யோக பூர்வ விஜம் மேற்கொண்டுள்ள சீன அதிபருக்கு அமோக வரவேற்பு. 2. இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் அல்பேர்ட்டின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியது. பக்கிங்ஹம் அரண்மனை அதிர்ச்சி. 3. கியவை பிடித்தே தீருவோம். சூளுரைத்தார் ரஸ்ய அதிபர். 4. விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா ஐந்து வருடங்களால் நீடித்தது.1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
கூகிள் இப்படிச் சொல்கின்றது: Rs 1000.00 per passenger (for maximum 04 baggages only) and Rs 250.00 for additional baggage for both Arrival and Departure round the clock.1 point- சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
1 point- வினா விடை
1 point- வினா விடை
1 pointநான் அமெரிக்க பிரஜையாக இருப்பேனேயானால் டொனாட் ரம்ப் அவர்களுக்குத்தான் என் வாக்கு.😎1 point- வாழும் போதே கொண்டாடுவோம்.
1 pointதவறவிட்டு விட்டோம் என சொல்லவரவில்லை. யாராகினும் தமக்கு பிடித்தவர்களை,நண்பர்களை,கலைஞர்களை பாராட்டலாம்.. அல்லது எமக்கு கல்வி தந்த ஆசான்களின் பெருமைகளை சொல்லியும் பாராட்டலாம்.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும். முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல. ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர். அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர். சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள். மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது. 'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது. இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர். நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார். பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன். (தொடரும்........)1 point- அரசு வழங்கிய இலவச அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் மரணம்? விசாரணைக்கு உத்தரவு!
அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - ஆஷு மாரசிங்க Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 05:27 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் நிவாரணமாக வழங்கிய அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை குழப்புவதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் பொய் பிரசாரமாகும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணமாக 10கிலாே அரிசி பகிர்ந்தளித்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்ப ஆரம்பத்தில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அரசாங்கம் வழங்கிய அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் இறந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து வருகின்றனர். அரசாங்கம் வழங்கிய அரிசியை உட்கொண்டதால்தான் குறித்த கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்க எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பொது சுகாதார பரிசோதகர்களும் இதனை உறுதிப்படுத்த வில்லை. அவ்வாறான நிலையில் இப்படிப்பட்ட பாரிய குற்றச்சாட்டு தெரிவிப்பது தொடர்பில் விசாணை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்புவதற்காக யாராவது குறித்த அரிசியுடன் வேறு உணவுப்பொருட்களை கோழிகளுக்கு கொடுத்து, அவற்றை இறக்கச் செய்துள்ளதா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் பகிர்ந்தளித்த அரிசியை உட்கொண்ட கோழிகள் இவ்வாறு இறந்துள்ளதாக எந்த முறைப்பாடும கிடைக்கவில்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியில் இருக்கும் சிலரே இவ்வாறான பொய் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் என்ன குற்றச்சாட்டுக்களை தெரிவித்தாலும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரண வேலைத்திட்டங்களை நிறுத்தப்போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/1836941 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 🇺🇸🇺🇸🇺🇲🇺🇲🇺🇲 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 🇯🇲🇬🇾🇹🇹🇧🇧 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ??🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK ??🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? 🏴🏴🏴🏴🏴🏴🏴 AUS ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ENG 🏴🏴🏴🏴🏴🏴 AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 WI ??🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) WI 🇬🇾🇻🇨🇹🇹🇯🇲 NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA 🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬 முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SL ?? SA ?? BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP 🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵 சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 PAK SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 ENG NZ 🏴🏴🏴🏴🏴🏴 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 IND WI 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 AUS SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 ENG SA 🏴🏴🏴🏴🏴🏴 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 PAK NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 IND SA🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 WI AUS 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 PAK ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 NZ SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 AUS IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 WI SA 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇻🇨🇬🇾🇹🇹🇯🇲 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 ENG 🏴🏴🏴🏴🏴🏴 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) ENG 🏴🏴🏴🏴🏴🏴 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🏏 உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏🏏🏏🏏🏏 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Travis Head 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🥰............................................ @கிருபன் வணக்கம் பெரியப்பா இந்த பதிவை போட்டி பதிவில் சேர்க்கவும் ஒரு பிழை விட்டதால் பழைய பதிவை திருத்தம் செய்ய முடியாம இருக்கு அதனால் இது எனது புது பதிவு நன்றி🙏🥰....................................1 point- விமல் யோகநாதன் - இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் முதல் தமிழ் தொழில்முறை வீரர்
Published By: RAJEEBAN 16 MAY, 2024 | 04:35 PM 18 வயது விமல் யோகநாதன் சமீபத்தில் பான்ஸ்லி கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்- இதன் மூலம் இங்கிலாந்து கால்பாந்தாட்ட அணிகளில் விளையாடும் முதலாவது தமிழ் தொழில்சார் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தனது பயணம் குறித்து தமிழ் கார்டியனுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். வேல்ஸின் சிறிய கிராமத்திலிருந்து விமல் யோகநாதன் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் சென்றுள்ளார். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய நாள், கடந்த பத்துவருடங்களாக உழைத்த உழைப்பின் உச்சக்கட்டம் இது வரவிருக்கும் ஒரு நீண்டவாழ்க்கையின் ஆரம்பம் நான் இது குறித்து பெருமைப்படுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். ஹோலிவெல் லெய்சர் நிலையத்தின் உள்ளரங்கில் கால்பந்து விளையாடும் போது நான்குவயது சிறுவன், பின்னர் பிரெஸ்டேடைன் லிவர்பூல் அக்கடமிகளுக்கு விளையாடினான், தற்போது பார்ன்ஸ்லி அணிக்காக தனது முதலாவது தொழில்முறை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளான். விமல் தனது பெற்றோரிடமிருந்து கிடைத்த ஆதரவு குறித்து இவ்வாறு தெரிவித்தான். அவர்கள் அற்புதமான ஆதரவை வழங்கினார்கள், கடந்த பத்து பதினொரு வருடங்களாக அவர்கள் நாளாந்தம் என்னை பயிற்சிகளிற்காக பயிற்சிகள் இடம்பெறும் பகுதிகளிற்கு வாகனத்தில் அழைத்து சென்றார்கள் நான் விளையாடும் போதெல்லாம் சமூகமளித்தார்கள் என அவன் தெரிவித்தான். சிறுவயதில் தனது தாயார் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு எப்படி தன்னை பயிற்சிகள் இடம்பெறும் இடங்களிற்கு இழுத்துச்சென்றார் என்பதையும் நினைவு கூர்ந்தான் விமல். விமலிற்கு கால்பந்தாட்டம் மிகவும் பிடித்தமான விடயமாக காணப்பட்டது, ஆனால் அவனிற்குள் இருந்த நான்கு வயது சிறுவன் பயிற்சிகள் உடற்பயிற்சிகள் போன்றவற்றை விரும்பவில்லை. பெற்றோர் என்னை இழுத்துக்கொண்டு சென்றது நினைவிலிருக்கின்றது, ஆனால் கால்பந்தாட்டத்தில் ஈடுபடத்தொடங்கியதும் நான் அதனை நேசிக்கத் தொடங்கினேன் என அவன் தெரிவித்தான். கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பநாட்களில் விங்கெர் ஸ்டிரைக்கராக விளையாடிய விமல் தற்போது பார்ன்ஸ்லியில் மிட்பீல்ட் விளையாடுகின்றார். அவர் தனது பயிற்சிகள் தொடர்பில் பின்பற்றிய ஒழுக்க நெறி, மீள்எழுச்சிதன்மை, மனவலிமை ஆகியவை திறமையுள்ள பல வீரர்களின் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்திய விடயங்களை இவர் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவியுள்ளன. இவர் லிவர்பூலில் இருந்து விடுவிக்கப்பட்டதை இவ்வாறுநினைவுகூர்ந்தார். ஏழு வயது முதல் எனது வாழ்க்கையில் நான் அறிந்திருந்த தெரிந்திருந்த ஒரே விடயம் அதுதான் - அங்கு செல்வது பயிற்சி பெறுவதும் - அதனை இழந்ததும் அந்த நாட்கள் மிகவும் கடினமானவையாக காணப்பட்டன என அவர்தெரிவிக்கின்றார். பேர்ன்லேயில் சில காலம் விளையாடிய விமல் பின்னர் பார்ன்ஸ்யில் இணைந்து கொண்டார் அந்த கழகம் மே 2023 இல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான வரலாற்றுப்புகழ்மிக்க தொழில்சார் மேம்பாட்டு கிண்ணத்தை வெல்வதற்கு காரணமானார். தன்னுடைய மீள்எழுச்சி தன்மை எங்கிருந்து வருகின்றது என்பது குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றார். நான் கடினமாக முயற்சி செய்யவேண்டும் அவ்வளவுதான் - இருட்டின் இறுதியில்ஒளியிருக்கும் என்கின்றார் அவர். 2023 இல் லீக் கப் போட்டியில் பார்ன்ஸ்லே அணியும் டிரன்மெரே அணியும் மோதியவேளை -விமல் தனது முதல்தொழில்சார் போட்டியில் விளையாடியவேளை அந்த வெளிச்சத்தின் சில நொடிகளை அவதானிக்க முடிந்தது. அதன் பின்னர் அவர் பிரதான அணிக்காக பல தடவைகள் விளையாடியுள்ளார். விமல் மீது அணியின் பயிற்றுவிப்பாளர் நெய்ல் கொலின்ஸ் வைத்துள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது. பயிற்சியாளர்கள் சகவீரர்கள் உட்பட அனைவரும் நான் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு எனக்கு சிறந்த ஆதரவை வழங்கிவருகின்றனர், இது ஒரு சிறந்த அனுபவம், பிரதான அணியின் வீரர்கள் அனைவரும் நான் அணிக்குள் ஒன்றிணைவதற்கு உதவியாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார். பான்ஸ்லியின் இடைக்கால கால்பந்து இயக்குநரான பொபி ஹொசல் விமலை பாராட்டியுள்ளார். கழகத்தின் 18 முதல் 21 வயதினருக்கான அணியின் நட்சத்திர வீரர் என விமலை பாராட்டியுள்ள அவர் யோகநாதனின் ஆக்ரோசமான விளையாட்டு பாணியை பாராட்டியுள்ளார். அவரது சிறந்த மனோநிலையை பாராட்டியுள்ள அவர் எப்போதும் கற்றுக்கொள்வதற்கும் தன்னை வளர்த்துக்கொள்வதற்குமான விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார் tamil guardian https://www.virakesari.lk/article/1837071 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்க எல்லாரையும் அன்போடு அழைக்கிறேன் @Eppothum Thamizhan @nilmini @kalyani @வாதவூரான் @nunavilan @வாத்தியார் @பிரபா @சுவைப்பிரியன் @புலவர்1 point- ஆபத்தான தலைவலிகள் - எப்படி கண்டுபிடிப்பது??DANGEROUS HEADACHES - HOW TO IDENTIFY IT?? Dr Prabhu
1 point1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம். எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும். சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே. அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது. இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே. திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது. மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது. தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது. (தொடரும்..........)1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு ---------------------------------------------------------------------- கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொழும்பில் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் இருந்தால் அன்றி, வெறுமனே கொழும்பு போய், பின்னர் அங்கிருந்து ஊர் போவது நாட்களை வீணடிப்பது போலவும் தெரிந்தது. கொழும்பில், வெள்ளவத்தையில், இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அமைப்பும், நெருக்கமும் அங்கே போக வேண்டும் என்ற விருப்பத்தை இல்லாமல் ஆக்குகின்றன. இந்த தொடர் மாடிக் கட்டிடங்களை, குடிமனைகளை இப்படிக் கட்ட எப்படி அனுமதித்தார்கள் என்பது ஆச்சரியமே. வாகனம் வெளியில் தயாராக நின்றது. நீண்ட தூரப் பயணம், இரவு ஓட்டம், ஆகவே வாகன ஓட்டுனருக்கு ஒரு பேச்சுத் துணைக்கு முன்னுக்கு இருக்கலாம் என்று ஏறினேன். ஆனாலும் முன் இருக்கையில் இருக்கவே கூடாது என்று பலர் கூறிய அறிவுரையும் ஞாபகத்தில் இருந்தது. கொழும்பு - யாழ் ஓட்டத்தில் பல விபத்துகள் நடப்பதாகவும், முன் இருக்கையில் இருப்பவர்களே அதிகமான ஆபத்திற்கு ஆளாகுகின்றனர் என்று ஒரு தரவையும் சொல்லியிருந்தார்கள். ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார் ஓட்டுநர். அது வேலையும் செய்யவில்லை. அதை திருத்த வேண்டும் என்று அவரே சொன்னார். சினிமாக்களில் வரும் வாகன விபத்தில் முன் கண்ணாடியின் ஊடாக பறந்து விழுந்து உருளும் ஒரு சினிமா கதாநாயகன் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அப்படியே எழும்பி நடப்பார். ஒரு கதாநாயகன் ஆகும் சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. 'புத்தளம் வழியே தான் போவீர்கள்?' என்று சும்மா கேட்டேன். அப்படித்தானே எல்லோரும் வழமையாகப் போவார்கள். புத்தளத்தில் ஒரு கடையில் நிற்பாட்டுவார்கள். புத்தளம் எனக்கு கொஞ்சம் பழக்கமான இடமும் கூட. 90 களில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கின்றேன். புத்தளம் வழியே தாங்கள் ஓடுவதில்லை என்றார் ஓட்டுநர். புத்தளம் நகரத்தினூடு செல்லும் வீதிகள் மிக மோசமானவை என்றும், அதை விட போலீஸ்காரர்கள் பல இடங்களில் சும்மா சும்மா நிற்பட்டித் தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். எதற்காக நிற்பாட்டுகின்றனர் என்றேன். வேறு என்னத்திற்கு, எங்களிடம் ஏதாவது வாங்கத்தான் என்று அலுத்துக் கொண்டார் ஓட்டுநர். நாங்கள் நிற்பாட்டா விட்டால், போலீஸ்காரர்கள் வீதியில் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்தும் விடுவார்கள் என்றும் சொன்னார். என்றுமே தீராத கொடுக்கல்களும், வாங்கல்களும். புத்தளத்தின் பின் பக்க காட்டு பகுதியினூடு வாகனம் சென்றது. குறுகலான, பல திருப்பங்களுடன் இருந்த வீதி அது. நீண்ட நீண்ட தூரங்களிற்கு ஒரு கடையோ, வெளிச்சமோ இல்லாத பகுதிகள். அடிபட்டால் ஏனென்று கேட்பதற்கு ஆள் நடமாட்டமோ, அல்லது வேறு வாகனங்களோ இல்லை. இன்று புது வருட இரவு என்பதால், வேறு வாகனங்கள் தெருவில் இல்லை என்று ஓட்டுநர் சொன்னார். அவர்களின் நிறுவன வாகனங்கள், மொத்தம் 15, அநேகமாக இந்தப் பாதையில் போய் வருகின்றன என்றார். அப்படியே போய் கல்கமுவவில் ஏறி, அனுராதபுரம் போய், பின்னர் யாழ்ப்பாணத்திற்கான வழமையான பாதை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஊர் செல்ல ஒரு முழு வாகனத்திற்கு 40,000 ரூபாய் கட்டணம். தனித் தனி இருக்கைகளாகவும் அவர்களே விற்கின்றனர். ஒரு இருக்கை 4, 000 ரூபாய். ஆனால் ஒன்பது பேர்கள் சேர்ந்தால் மட்டுமே இவர்களின் வாகனம் அன்று போகும். ஒன்பது பேர்கள் சேரா விட்டால், சேர்ந்தவர்களை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுகின்றனர். கொழும்பு - யாழ் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய சொகுசு பஸ் நிறுவனங்கள் ஒரு இருக்கைக்கு 3,000 ரூபாய் என்று கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், பொதிகளின் எண்ணிக்கை கூடினால், அதற்கு மேலதிக கட்டணம் அறவிடுகின்றனர். ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கொழும்பிற்கு எத்தனை தடவைகள் போய் வரும் என்று கேட்டேன். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வரும் கோயில் திருவிழா மாதங்களில் பத்து அல்லது பதினைந்து தடவைகள் கூட போய் வருவோம் என்றார். இந்த நாட்களில் உழைப்பது தான் மொத்த வருமானத்தின் பெரும் பங்கு என்றார். ஒரு மாதத்தில் 15, 000 கிலோ மீட்டர்கள் மேல் ஓடுகின்றனர்! இந்த வாகனங்கள் 25 வருடங்களிற்கு மேலாக தெருக்களில் கை மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக எத்தனை ஆயிரங்கள் கிலோ மீட்டர்கள் இவை ஓடியிருக்கும். இவை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமே. அதை விட அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியம். சில வருடங்களில் முன் இதே வாகனத்தை 25 இலட்சம் ரூபாய்களுக்கு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் 12 இலட்சங்கள் செலவழித்து திருத்த வேலைகள் செய்திருக்கின்றனர் (ஆனால் சீட் பெல்ட்டை திருத்தவில்லை.....😀). இந்த வாகனத்தின் தற்போதைய பெறுமதி 68 இலட்சங்கள் என்றார். சாதாரண வாகனங்களின் பெறுமதி இப்படி அதிகரிக்கும் என்பது வெளிநாடுகளில் வாழும், வீட்டுத் தேவைக்கு வாகனங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நம்ப முடியாத ஒரு விடயம். ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம். யாராவது கடையில் நல்ல ஒரு தேநீர் போட்டுக் கொடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் முறிகண்டியில் ஒரு சின்ன வழமையான தரிப்பு. அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே. ஆனையிறவில் இராணுவ வீரர் ஒருஅர் வலுக் கட்டாயமாக வாகனத்தை நிறுத்தினார். இங்கு வேகத்தை குறைக்க வேண்டும், நீ ஏன் குறைக்கவில்லை என்று ஓட்டுநருடன் முறைத்தார். பணம் எதுவும் இருவருக்குமிடையில் கை மாற்றப்படவில்லை. அதை தாண்டியவுடன், 'இவங்களுக்கு வேற வேலை' என்று ஓட்டுநர் சொன்னார். எனக்கு அந்த இராணுவ வீரர் செய்தது சரி என்றே பட்டது. ஆனையிறவைப் பற்றி பிள்ளைகளுக்கு பெரிய கதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு இன்னொரு தடவை சந்தர்ப்பம் வரும் போது சொல்லுவோம் என்று விட்டுவிட்டேன். பளை எங்கும் புதிய தென்னம் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சரியாக காலை 6:30 மணி அளவில், ஊரில் இருக்கும் வீட்டு வாசலின் முன் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டினார். 5 1/2 மணி நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு. இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும். நாங்கள் எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் வந்து சேருவோம் என்று வீட்டில் இருந்த எவரும் அந்த நேரத்தில் எழும்பி இருக்கவில்லை. (தொடரும்..........)1 point - சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.